Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய - இலங்கை மீனவர்களின் பேச்சு தோல்வி! - 11 மணிநேரம் நடந்த பேச்சுக்களில் இழுபறி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்திய - இலங்கை மீனவர்களின் பேச்சு தோல்வி! - 11 மணிநேரம் நடந்த பேச்சுக்களில் இழுபறி. 
[Tuesday, 2014-05-13 09:04:26]
 
இலங்கை - இந்திய மீனவர்களுக்கு இடையே கொழும்பில் நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்டப் பேச்சு எந்த இணக்கப்பாடுகளும் இன்றி தோல்வியில் முடிந்துள்ளது. நேற்றுக்காலை 9.30 மணிக்குத் தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தையில் இருதரப்பு கோரிக்கைகள் தொடர்பாக முரண்பாடுகள் ஏற்பட்டதால், பேச்சுவார்த்தை சுமார் 11 மணிநேரம் நீடித்தது. இலங்கைக் கடற்பரப்பில் ஆண்டுக்கு 120 நாட்களுக்கு இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் இந்திய பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பிரதிநிதிகள் இணங்க மறுத்து விட்டனர்.
 
அதேபோல இந்திய மீனவர்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்ட 'கடலின் தரையை துளாவி மீன்களை அள்ளிச்செல்லும்' (பொட்டம் ட்ரோலிங்) முறை போன்ற மீன்பிடிமுறைகளை இந்திய மீனவர்கள் கைவிடவேண்டும் என்று இலங்கை மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.ஆனால், தமது பாரம்பரிய மீன்பிடி முறைகளையும் மீன்பிடிப் பிரதேசங்களையும் மாற்றிக்கொள்ள காலஅவகாசம் வேண்டும் என்று இந்திய மீனவர்கள் வலியுறுத்தியதாக தமிழ்நாடு கடலோர விசைப்படகு நல சங்கங்களின் ஆலோசகர் என் தேவதாஸ் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
 
ஆனால், சென்னையில் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தைகளின்போது எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை மீறி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோத முறைகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதனால், இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்புக்குள் தொழிலில் ஈடுபட அனுமதிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று இலங்கை மீனவர் பிரதிநிதிகள் விடாப்பிடியாக இருந்தனர்.
 
முப்பது ஆண்டுகால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களின் கடல் வளங்களை இந்திய மீனவர்கள் சிதைத்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகின்றன.ஆனால், பாரம்பரியமாக இருதரப்பு மீனவர்களும் தொழில்செய்துவந்த கடல் பிரப்பில் தமது தொழில் உரிமையை இலங்கை மறுக்கக்கூடாது என்று தமிழக மீனவர்கள் வாதிடுகின்றனர்.
 
இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை முன்னேற்றம் இன்றி முடிந்துவிட்ட நிலையில், மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் எங்கு, எப்போது நடக்கும் என்று இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று இலங்கை மீன்பிடித்துறை அமைச்சின் ஆலோசனை சபை உறுப்பினர்களில் ஒருவரான எஸ்.பி. அந்தோனிமுத்து தெரிவித்தார்.http://seithy.com/breifNews.php?newsID=109228&category=TamilNews&language=tamil
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையுடன் பேச்சுவார்த்தை எப்போது, எந்தச் சூழ்நிலையிலும்... வெற்றியளித்ததில்லை.
இவர்கள் காலத்தையும்... நேரத்தையும் கடத்தி, தம்மை பலப்படுத்திக் கொள்ளவே.... பேச்சுவார்த்தை என்ற ஆயுதத்தை கையில் எடுப்பார்கள்.
அடி உதவுதது மாதிரி... தமது பலத்தால், மட்டுமே இலங்கையை... கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.
இது... இந்தியாவுக்கு புரியாது என்றில்லை. இந்தியாவால்.... முடியாது. :)

ராமேஸ்வரம் : கொழும்பில் நடந்த, தமிழக, இலங்கை மீனவர்களின் 2ம் கட்ட பேச்சு வார்த்தை, தீர்வு காணாமல் தோல்வியில் முடிந்ததால், மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பாக்ஜலசந்தி, வங்க கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள், குறிப்பாக ராமேஸ்வரம், பாம்பன், ஜெகதாப்பட்டிணம், கோட்டைபட்டிணம், நாகை, கடலூர் மற்றும் புதுச்சேரி விசைப்படகு மீனவர்கள், மீன்வளம் நிறைந்த இலங்கை எல்லையில் மீன்பிடிக்கும் போது, இலங்கை கடற்படையினர் தாக்கி, சிறையில் அடைத்தனர்.

 

இதே போல், எல்லை தாண்டும் இலங்கை மீனவர்களை, இந்திய கடற்படை கைது செய்தது. இப்பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண, சென்னையில் ஜன. 27 தேதி, தமிழக, இலங்கை மீனவர்கள் முதல் கட்ட பேச்சு வார்த்தையில், சுமூகமான முடிவு ஏற்படவில்லை. இதனையடுத்து, இலங்கை கொழும்பில் மே. 12 தேதி, நடந்த 2ம் கட்ட பேச்சு வார்த்தையில், தமிழக மீனவர் பிரதிநிதிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் 26 பேர் பங்கேற்றனர்.

 

பேச்சு வார்த்தை தோல்வி: கொழும்பில் கூட்டம் துவங்கியவுடன், "ஆண்டிற்கு 77 நாள்கள் மட்டும் மீன்பிடிக்க, அதுவும் இலங்கை கரையில் இருந்து நீங்கள்(இலங்கை மீனவர்கள்) நிர்ணயிக்கும் சில கி.மீ., தூரம்வரை, நாங்கள் மீன்பிடிக்க வரமாட்டோம்' என, தமிழக மீனவர்கள் தெரிவித்தனர். இதற்கு,"முதல் கட்ட பேச்சு வார்த்தையில், எல்லை தாண்டி மீன்பிடிக்கவோ, தடை செய்த இரட்டைமடியை பயன்படுத்த கூடாது என முடிவெடுத்தும், அதனை நீங்கள்(தமிழக மீனவர்கள்) மீறியுள்ளீர்கள்', மேலும், "இனிமேல் இழுவை வலையை (படகில் இருந்து கடலில் இழுப்பட்டு வரும் வலை) பயன்படுத்தி, எல்லை தாண்டி இலங்கை எல்லைக்குள் மீன்பிடிக்க வரகூடாது' என, இலங்கை மீனவர்கள் கண்டிஷன் போட்டனர். அதிர்ச்சி அடைந்த தமிழக மீனவர்கள்,"தமிழகத்தில் அனைத்து படகும் இழுவை வலையில் மீன்பிடிப்பதால், இதனை மாற்றி அமைக்க 3 ஆண்டு காலம் அவகாசம் கொடுங்கள்' என, கெஞ்சினர். இதற்கு இலங்கை மீனவர்கள் மறுத்ததால், கூட்டத்தில் சில நிமிடம் "காரசார வாக்குவாதம்' ஏற்பட்டது. இதனால், 2ம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், ஏமாற்றம் அடைந்த மீனவர்கள், இரவு கொழும்பில் இருந்து விமானத்தில் புறப்பட்டனர்.

 

மீனவர்கள் அதிருப்தி: 2 கட்டமாக நடந்த கூட்டத்திலும், இழுவை மடி, எல்லை தாண்டி வரகூடாது என, இலங்கை மீனவர்களின் கரார்ர்.., பேச்சால், தமிழகத்தில் மீனவர்கள் அதிருப்தியில் உள்ளனர். மத்தியில் அமையும் புதிய அரசு, இப்பிரச்சனைக்கு தீர்வு காண உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=974745

Edited by Athavan CH

உண்மையில் சிறி லண்கன்சிடம் ஏமாறிவிட்டார்களா?

அநியாயத்திற்கும் அப்பாவியா இருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.