Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடர்கிறது வி.எ.எழுகை பகுதி 17
 

 எழுதியவர் திரு. முருகபூபதி அவர்கள்.

தவமண்ணர் தோய்ந்துவிட்டு வந்து, ' சீலன் என்ன குடிக்கிறீர்? கஃபேயா ? ரீயா? நான் எனக்கு கஃபே தயாரிக்கப்போகிறேன்.' என்றார்
சுவிஸில் கோப்பி பானத்தை  கஃபே என்றுதான் அழைக்கிறார்கள். அண்ணை எனக்கும் கஃபே தாருங்கள். மெத்த வேண்டாம். சின்ன கப்பில் போதும்' என்றான் சீலன்.
' எத்தனை கிண்ணத்தில் இட்டாலும் அவை அத்தனையின் சுவை ஒன்றாகும்' என்று கண்ணதாசன் படியிருக்கிறார் தெரியுமா? என்று கண்ணைச்சிமிட்டிக்கொண்டு சொன்னார் தவமண்ணன்.
' அண்ணை உங்கட கண் சிமிட்டலுக்கும் அர்த்தம் இருக்கண்ணை. கவிஞர்ட பாடலுக்கும் அர்த்தம் இருக்கண்ணை' என்று சொல்லிச்சிரித்தான் சீலன்.
தவமண்ணன் சீலனின் முகத்தை உற்றுக்கவனித்தார். அவனது முகத்தில் மாற்றம் தோன்றியிருப்பதை அவதானித்தார்.
' சீலன் உம்மட முகம் இன்றைக்கு கொஞ்சம் பிரகாசமாக இருக்குது தம்பி. பத்மகலா இன்றைக்கு தொடர்புகொண்டாவா? காதலிகள் பேசினால் உவப்பாகவும் இருக்கும் உபத்திரவமாகவும் இருக்கும்'.
' அண்ணை உங்கட முன் அனுபவம் பேசுகிறதா? என்னில் ஏதும் மாற்றம் உங்கட கண்ணுக்குத்தெரிந்தால் அதற்குக்காரணம் இன்றைக்கு நான் சந்தித்த ஒரு பேராசிரியரும் அவர் எனனக்குச்சொன்ன கதையும்தான்' என்றான் சீலன்.
தவமண்ணன் இரண்டு கப்பில் கோப்பி தயாரித்துக்கொண்டு வந்து சீலனிடம் ஒன்றைக்கொடுத்துவிட்டு அவன் முன்னால் அமர்ந்தார்.
சீலன் பேராசிரியர் குமாரவேலையும் அவர் குறிப்பிட்ட விஞ்ஞானி ரிச்சட்டையும் பற்றி தவமண்ணனிடம் விபரித்தான். ஆவி பொங்கும் கோப்பியை இருவரும் ரசித்து ருசித்தனர்.
அதில் இனிமைகலந்த கசப்பு. வாழ்க்கையின் தத்துவத்தை இந்த சாதாரண கோப்பியும் உணர்த்துவதாக சீலனின் மனதிற்கு பட்டது.
' அண்ணை இந்தக்கோப்பியை பற்றி என்ன நினைக்கிறீங்கள்?' சீலன் கேட்டான்.
' என்ன... கோப்பி... அவ்வளவுதான். இதில் நினைப்பதற்கு என்ன இருக்கிறது?'
' ஆம். சாதாரணமான கோப்பிதான். அதற்குப்பின்னால் மிக நீண்ட கதை இருக்கிறது என்பதை நாங்கள் மறந்துபோறம் அண்ணை.'
' சீலன் நீர் என்ன சொல்லுறீர்? எனக்குப்புரியவில்லை?'
' அண்ணை... கோப்பி தயாரிக்க கேத்தலில் தண்ணீரை சுடவைத்தீர்கள். தண்ணீருக்காக பைப்பைத்திறந்தீர்கள். மின்சாரம், தண்ணீர், கோப்பி, சீனி, பால், கப், கரண்டி....இப்படி எத்தனையோ இணைந்துதானே இப்பொழுது நாங்கள் இரண்டுபேரும் இந்த சுவையான கோப்பியை பருகிக்கொண்டிருக்கிறோம். சில நிமிடங்களில் கோப்பியை அருந்திவிட்டு அடுத்த வேலையை கவனிப்போம். ஆனால் இந்த பால்கோப்பியின் பின்னால் இருந்த மனித உழைப்பை விஞ்ஞான கண்டுபிடிப்பைப்பற்றி துளியளவேணும் யோசித்திருக்கிறோhமா?'
தவமண்ணன் சீலனின் முகத்தை உற்றுப்பார்த்தார். சில கணங்கள் அவர் ஏதும் பேசவில்லை.
' என்ன அண்ணன்? ஏதாவது சொல்லுங்களேன்?'
' இன்றைக்கு நீர் யாரையோ சந்திச்சிருக்கிறீர்....அல்லது ஏதோ ஒரு புத்தகம் படிச்சிருக்கிறீர்... என்பது மாத்திரம்தான் எனக்குப் புரியுது. நான் அன்றைக்குப்பார்த்த சீலன் இன்றைக்கு இல்லை. ஏதோ ஒரு ரஸவாதம் உம்மிடம் நிகழ்ந்திருக்கு. அதற்கான ரிஷி மூலம்...நதி மூலம் என்ன தம்பி.? '
' எங்கேயண்ண படிக்க நேரம்? நான் வரும்பொழுது புத்தகங்கள் கொண்டுவரவில்லை. வந்த இடத்திலும் புத்தகங்கள் கிடைக்கவில்லை. ஆனால் இன்றைக்கு விமான நிலையத்தில் ஓரு மனிதரை வழியனுப்பியபொழுது அவர் எனது மனதில் விதைத்துவிட்ட சிந்தனைதான் உங்களிடம் இந்தக்கோப்பியின் புதிர் பற்றி பேசவைத்தது.'
தவமண்ணன் - காலியாகவிருந்த இருவரும் அருந்திய கோப்பி கப்புகளை எடுத்துச்சென்று கழுவிவைத்துவிட்டு திரும்பிவந்தார்.
' நீர் கோப்பி பற்றி சொன்ன பிறகுதான் எனக்குள்ளும் பல யோசனைகள் பிறக்குது தம்பி. பல விடயங்களுக்குள்ளதான் நாங்கள் எங்களை தேடிப்பார்க்கிறோம். அது சரி... நீர் சந்தித்தவர்.... ஆள் சுவிஸ்காரனோ?'
' இல்லை...இல்லை.... அவர் எங்கட ஊர் பேராசிரியர. உப்சலா பல்கலைக்கழகத்துக்கு வந்துவிட்டு திரும்புகையில் எதிர்பாராமல் சந்தித்தவர். பெயர் குமாரவேல்.' என்றான் சீலன்.
' எங்கேயோ கேள்விப்பட்ட பெயராகத்தான் இருக்கிறது. சரி சொல்லும் அவர் அப்படி என்னதான் உமக்குச்சொல்லிவிட்டார்?' - தவமண்ணன் தோளில் கிடந்த டவலை குளியலறையில் விரித்து வைத்துவிட்டு திரும்பினார்.
சீலனும் எழுந்து நடந்தவாறே குமாரவேல் குறிப்பிட்ட விஞ்ஞானி ரிச்சர்ட் பற்றியும் அவரின் மரணம் பற்றியும் விபரித்தான்.
அமைதியாகக்கேட்டுக்கொண்டிருந்துவிட்டு தவமண்ணன் நீண்ட பெருமூச்சை விட்டார்.
' தம்பி.... அந்த குமாரவேலர் தன்னை அந்த விஞ்ஞானி ரிச்சரட்;டிடம் தேடியிருக்கிறார். நீர் உம்மை அந்த குமாரவேலரிடம் தேடியிருக்கிறீர். இப்பொழுது நான் உம்மிடத்தில் என்னைத்தேடிக்கொண்டிருக்கிறன். இது மரதன் ஓட்;டம் தம்பி. நிற்காது. தேடல்தான் வாழ்க்கை. சில நாட்களாகத்தான் நான் அந்த வேலைக்குப்போய்வந்துகொண்டிருக்கிறன். அங்கே நீண்ட காலமாக வேலை செய்யிற எங்கட யாழ்ப்பாணத்து ஆட்கள் சிலருடன் நட்பாகியிருக்கிறன்.  அவர்களின் கதைகளையும் கேட்டிருக்கிறன். அவையள் இங்கே நிரந்தர வதிவிட அனுமதியும் நிரந்தர வேலையும் ஓடித்திரிவதற்கு கார்களும் வாங்கியிருப்பவை. அவர்களும் கனவுகளோடதான் காலத்தை கடத்துகினம். சிலருக்கு சுவிஸ் வாழ்க்கை பிடிக்கவில்லை. அவர்கள் அவுஸ்திரேலியாவுக்குப்போயிருக்கலாம். லண்டனுக்குப்போயிருக்கலாம். என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். அங்கே தங்கட பிள்ளைகள் ஆங்கிலம் படித்திருக்கலாமாம். கெதியா வீடு வாங்கியிருக்கலாமாம்? இன்னும் சிலருடைய கனவுகள் வேறு மாதிரி... முடிந்தவரையில் உழைத்து சேமித்துக்கொண்டு ஊருக்குத்திரும்பிவிடவேணுமாம். தொடர்ந்து இங்கே இருந்தால் ஊரில் இருக்கும் சொந்த பந்தங்கள் அவரை எடுத்துவிடு...இவரை எடுத்துவிடு... என்ற ஓயாத தொலைபேசி நச்சரிப்பாம். இதில பாரும்... ஒருவர் சொன்ன கதை வெகு சுவாரஸ்யம். அவர்ட பெயர் குணரத்தினம். அவரின்ட அண்ணர் அவுஸ்திரேலியாவில் எண்பத்தி மூன்று அடியோடு குடும்பத்துடன் போனவராம். இக்கரைக்கு அக்கரை பச்சை என்றுதானாம் தன்னோடு ரெலிபோண்ல புலம்பிக்கொண்டிருக்கிறாராம். ஒரு நாள் சொன்னாராம். வெளிநாட்டுக்கு வந்த பலர் ஏதேதோ பத்திரிகைகளில் எழுதிப்போட்டு புலம்பெயர்ந்தோர் இலக்கியம் படைப்பதாக பேசுகினமாம். தான் சிலதை படிச்சும் பார்த்தவராம். அது எல்லாம்  புலம்பல் இலக்கியமாம். அதனால் உந்த எழுத்தாளர்களுக்குப்பின்னால அலையிறதை விட்டுப்போட்டு முடிஞ்சவரைக்கும் உழைச்சுக்கொண்டு ஊருக்குத்திரும்புற வழியைப்பார் எண்டும் சொன்னவராம் அந்த அவுஸ்திரேலியா அண்ணர்.... எப்படி இருக்குது சீலன்...?' தவமண்ணன் சொல்லிவிட்டு உரத்துச்சிரித்தார்.
' அண்ணை நீங்கள் சொல்லும் குணரத்தினமும் எழுத்தாளரா?' எனக்கேட்டான் சீலன்.
' இருக்கவேண்டும். சாப்பாட்டு நேரத்தில் அந்தப்பெடியனின் கையில் ஏதாவது ஒரு புத்தகம் இருப்பதையும் பார்த்திருக்கிறன். நானும் அங்கே வேலைக்குச்சேர்ந்து சில நாட்கள்தானே? ஏன் கேட்டீர்?'
' இங்கே வந்ததுமுதல் கடந்த கால யோசனைகளில்தான் மூழ்கியிருக்கிறன். பலரையும் சந்தித்து பழகவேண்டும். ர்ழஅந ளுiஉம பொல்லாத நோய். அதிலிருந்து விடுபடவேண்டும். அதற்கு புதிய தொடர்புகள் தேவை அண்ணை.'
' புதிய தொடர்புகள் சிக்கலையும் தரும் தம்பி. வெளிநாட்டில் அவதானம் தேவை. முதலில் வேலையொன்றைத்தேடிக்கொள்ளும். ஏதும் கோர்ஸ் படியும். ஊரில் உம்மட அம்மா பட்ட கடனை அடையும். அதற்கு முன்பு அவசரப்பட்டு நண்பர்களைத்தேடிக்கொள்ளவேண்டாம். எந்தப்புற்றில் எந்தப்பாம்பு இருக்கும் என்று தெரியாது? கவனம்.' என்றார் தவமண்ணன்.
' சரி அண்ணன். இருட்டுப்படுது... நானும் இறங்கிறன். உங்கட இடத்தில் எனக்கு ஏதும் வேலை இருந்தால் சொல்லுங்கோ... அப்ப நான் வாரன் அண்ணன்' சீலன் தவமண்ணன் கைபற்றி குலுக்கிவிட்டு அங்கிருந்து விடைபெற்றான்.
அன்று பேராசிரியர் குமாரவேலை சந்தித்தபொழுது ஒரு உலகத்தையும் பின்னர் தவமண்ணரை சந்தித்தபொழுது வேறு ஒரு உலகத்தையும்  அவர் வேலை செய்யும் இடத்தில் பணியிலிருக்கும் குணரத்தினம் ஊடாக அவுஸ்திரேலியாவிலிருக்கும் அவனது அண்ணனின் உலகத்தையும் சீலன் கற்பனை செய்து பார்த்தான்.
புகலிட நாடுகளில் எல்லாவற்றையும் எல்லா சௌகரியங்களையும் சுகங்களையும் தேடிவிட்டு மகிழ்ச்சியை தொலைத்துக்கொண்டிருப்பவர்களின் பட்டியலில் தானும் இணைந்துவிடுவேனோ என்ற பயம் சீலனை வருத்தியது.
குளிர்காற்று அவனைத்தழுவிச்சென்றது. வீதிகளில் மின்விளக்குகள் பிரகாசத்தை சிந்திக்கொண்டிருந்தன. கார்கள் மற்றும் வாகனங்கள் எதிரும் புதிருமாக ஓடிக்கொண்டிருந்தன.
என்றாவது ஒரு நாள் கார் செலுத்தப்பழகி சொந்தமாக கார் ஒன்றும் வாங்கவேண்டும். அப்பொழுது பத்மகலா அருகிலிருந்து தனது கேசங்களை வருடிவிடவேண்டும். மெக்டொனால்ட்ஸ் ட்றைவிங்துருவில் காரிலிருந்து இறங்காமலேயே அவளுக்கு உருளைக்கிழங்கு சிப்ஸூம் பேகரும் ஐஸ்கிறீமும் வாங்கிக்கொடுக்கவேண்டும். அவள் அவற்றை சுவைத்து தனக்கும் ஊட்ட வேண்டும். ஒரு ஐஸ்கிறீமை மாறி மாறி இருவரும் சுவைக்கவேண்டும்.
சீலன் கற்பனைச்சிறகை கட்டிக்கொண்டு பறந்தான். அதனால் ஒரு பஸ்தரிப்பையும் கடந்து வந்துகொண்டிருந்த பஸ்ஸையும் தவறவிட்டு சற்று தொலைவிற்கு வந்து அடுத்த பஸ்ஸிற்காக காத்து நின்றான்.
ஒரு பஸ் போனால் மற்றுமொரு பஸ். காத்திருப்பதில் சுகமும் சோகமும் இணைந்திருப்பதை அந்தக்கணம் உணர்ந்தான்.
(தொடரும் 18)


விழுதல் என்பது எழுகையே ...............

பகுதி 18 எழுதியவர்:  திரு. விக்கி நவரட்ணம் - சுவீஸ்


எழுத்தாளர் அறிமுகம்
சுவிஸ்சிலிருந்து விக்கி நவரட்ணம்

யாழ் வண்ணாhபண்ணை பிறப்பி;டமாகும்.

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை வாழ்வோடு இணைந்த இடமாகும்.

வண்ணார்பண்ணை  செட்டித்தெரு மெதடிஸ்த மிசன் பாடசாலையில் ஆரம்ப கல்வி. பயின்று,
யாழ் மத்திய கல்லூரியில் உயர் கல்வி பயின்றவர்.

கொழும்பில் தனியார் தறையிலும், பின்னர், யாழ் மாநரகசபையிலும் பதவி வகித்தவர்.

யாழ் மண்ணிலேயே சிறந்த மேடைப் பேச்சாளனாக அறிமுகப் படுத்தப்பட்டவர்.

கல்வி பயின்ற காலத்தில் இயல்பாகவே கவிதை, கதைகள் எழுதுவதில் நாட்டமிருந்தாலும், புலம்பெயர் மண் புடம் போட வைத்தது.

இவரின் இலக்கியப் பணிகள் செயற்திறன் பெற்றபோது இவரின் கவிதைகளுக்கு பிரான்ஸ் ஏ.பி.சி. வானொலி தளம் அமைத்துக் கொடுத்தது.

2002ம் ஆண்டு சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் ஏ. பி. .சி. வானொலி நடாத்திய 'தேன் மதுர மாலை' கலை விழாவில் இவருடைய முதல் வெளியீடான 'ஆகாய கங்கை' என்ற கவிதை தொகுப்பு வெளியிடப்பட்டது.

2003ம் ஆண்டு Nஐர்மனி 'கம்' மானிலத்தில் 'ஆகாய கங்கை' கவிதைத் தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

இலக்கியப் பணியில் இவரின் எண்ணங்கள் ராட்ஸச உணர்வுகளாக எழுந்து துள்ளிய துள்ளல்கள் கதைகளாக பிறப்பெடுத்தபோது உலகளாவிய ரீதியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. 1994ம் ஆண்டு சுவிஸ் தமிழர் கலாச்சார ஒன்றியம் நடாத்திய சிறு கதைப் போட்டியில் முதலாம் பரிசைப் பெற்றார்.

1995ம் ஆண்டும், 1997ம் ஆண்டும்  இவர்கள் நடாத்திய கவிதைப் போட்டியில் இரண்டாவது பரிசைப் பெற்றார்.

'காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக் கலைஞர்கள்' என்ற ஓர் ஆவணத் தொகுப்பு 2005ம் ஆண்டு பிரான்சில் வெளிடப்பட்டது. அந்த ஆவணத் தொகுப்பில் திரு. விக்கி நவரட்ணம் அவர்களையும் இணைத்துக் கொள்ளப்பட்டது காலம் தாங்கும் வரலாற்றுச் சிறப்பாகும.;

இவருடைய இலக்கியப் பணியை பாராட்டு முகமாக பிரான்ஸ் நாட்டின் 'ஏவ்றி கலாமன்றத்தின்' ப

இவர் ஓர் சிறந்த நாடகக் கலைஞர் என்பது பலருக்கு தெரியாத உண்மை. தானே நடித்து இயக்கிய பண்டாரவன்னியன் நாடகம் இவரின் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று கூறலாம்.

இவரின் இயற் பெயர் விக்கினேஸ்வரமூர்த்தியாக இருந்தாலும் தன் தந்தைமேல் உள்ள பாசத்தால் நவரட்ணம் என்ற தந்தையின் பெயரையும் இணைத்து இலக்கிய உலகில் விக்கி நவரட்ணம் என்ற பெயருடன் வலம் வருகின்றார். இவருடைய இலக்கியப்பணி மேன்மேலும் தொடரவும், நல்ல புகழோடு வாழவும், வாழ்த்;துவோம்

தகல் அறிமுகம் வி.எ.எ குழமம்
திரு.இக.கிருட்ணமூர்த்தி
திரு.ஏலையா முருகதாசன்

கதை தொடர்கிறது பகுதி 18

என் கண்களில் ஒளியானவளே
என் இதயத்தின் துடிப்பானவளே
என் உயிருக்குள் உயிராக
ஒளிந்து கொண்ட என் கலாவே

காத்திருக்கிறேன் எனக்காக என்று இறுதியாக பத்மகலா சொன்ன வார்த்தை பஸ்சிற்காக காத்திருக்கும் அந்த வேளையிலும் சீலனின் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.

அந்நேரத்தில் சீலன் நின்ற பஸ் தரிப்பை தாண்டிச் சென்ற ஓர் காரொன்று சற்றுத் தூரம் சென்றதும்,  நின்று பின் பக்கமாக சீலன் நிற்கும் இடத்தை நோக்கி வந்து அவனருகே நின்றது. காருக்குள் இருந்தவர் காரின் கண்ணாடியைத் திறந்து ¨எங்கே போகிறீர் என்று ஆங்கிலத்தில் கேட்டார்.¨

¨¨நான் போகுமிடத்தை அவரிடம் கூறினேன்.¨

முன் கதவை எட்டி திறந்தவர் தன்னருகே முன்னிருக்கையில் அமரும்படி கண்களால் சைகை செய்தார். அறுபது வயதிற்குள் மதிக்கத் தக்க அவருடைய பெருந்தன்மைக்கு தலைசாய்த்து காருக்குள் ஏறி அமர்ந்தேன். மெல்லியதாக தமிழ்ப்பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. எனவே அவர் தமிழர் என்பதால் அவரைப் பார்த்து ¨அங்கிள் நீங்கள் சூரிச்சிலா இருக்கிறீங்கள்?¨

¨இல்லை தம்பி நான் nஐனிவாவில் இருக்கிறேன். இங்கே ஹஹகன்ரொன் அர்ரோவில்ஹஹ வசிக்கின்ற எனது சகோதரியின் வீட்டிற்கு ஒரு கிழமை விடுமுறையில் எனது மனைவி, பிள்ளைகளுடன் வந்து தங்கி நிற்கிறேன்.¨

அவருடைய பேச்சு, தோரணை எல்லாமே நல்ல குணவியல்புகளுடன் வசதியாக வாழ்பவராகத் தெரிந்தது. அவர் என்னைப்பற்றி விசாரித்தபோது! சிறிதும் தயக்கமில்லாமல், தற்போது நான் வாழும் வாழ்கையைப் பற்றியும், எனது கடந்த கால வாழ்கையைப்பற்றியும் விபரமாக கூறி முடியும் நேரம் நான் தங்கியிருந்த முகாமின் வாசலுக்கு வந்து விட்டதால் வாகனத்தை நிற்பாட்டினார்.

நன்றியைக் கூறி இறங்குவதற்கு எத்தனித்தபோது ஓர் சிறிய தாளில் தற்போது தான் தங்கியிருக்கும் சகோதரியின் விலாசத்தை எழுதித் தந்தவர், ¨சீலன் நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை முழுநேரமும் தங்கச்சி வீட்டில் இருப்பேன். முடிந்தால் என்னை நாளைக்கு வந்து சந்தியும் எனக் கூறி விலாசத்தைத் தந்தவர், ¨றெயினில் வரக்கூடிய வசயிருக்கா?¨ எனக் கேட்டவர் ஐம்பது சுவிஸ் பிராங்கை எடுத்து என்னிடம் தர முற்பட்டார்.

¨இல்லை அங்கிள் நீங்கள் காட்டும் இவ்வளவு அன்பே போதும், நாளைக்கு காலை பத்து மணிக்கு உங்களிடம் வருவேன்¨ என்று கூறிக்கொண்டே நன்றியுடன் அந்தக் கனிவான முகத்தை பார்த்தபடியே விடைபெற்றேன்.

எதிர்பாராத ஒரு நல்ல உள்ளத்தை சந்தித்த சந்தோசத்தில் என்னால் அவருடைய பெயரை தெரிந்து கொள்ள முடியவில்லையே என்ற கவலையுடன் அவர் தந்த விலாசத்தை பார்த்தபோது, விலாசத்தின் கீழே டேவிட் என்று எழுதியிருந்ததை கவனித்தேன்.

கிறிஸ்தவராக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் முகாமில் எனது அறைக்குச் சென்று காலையில் நேரத்திற்கு எழும்ப வேண்டும் என்ற எண்ணத்துடன் படுக்கையில் விழுந்தேன்.

அப்போது நேரம் அதிகாலை நாலு மணிதான். பொதுவாகவே மனிதன் ஆழ்ந்து தூங்கும் நேரம். அந்த மாதிரி தூக்கத்திற்கு சீலன் விடைகொடுத்து பல மாதங்களாகின்றன. நேற்றைய இரவு சந்தித்த டேவிட் அங்கிளின் பரிவுக்குள் மூழ்கிக்கிடந்த சீலனுக்கு அவனுடைய கைக்கடிகாரம் ஆறமணி என்பதை அறிவித்தது.

நினைவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்தவன் இரு கைகளையும் மேலே உயர்த்தி சோம்பலை முறித்துவிட்டு பல் தேய்த்து முகம் கழுவி, தேனிரை தயாரித்து பருகியதும், டேவிட் அங்கிளிடம் போவதற்கு தயாரானான்.

இப்போது தனக்கு தெரிந்த டொச் மொழியின் உதவியுடன் விசாரித்து போகமுடியும் என்ற நம்பிக்கையில் சூரிச் தொடருந்து நிலையத்தில் ¨அர்ரோ¨விற்கான தொடருந்தில் ஏறி ¨அர்ரோ¨ தொடருந்து நிலையத்தை அடைந்தான். முன்பக்கமாக வீதிக்கு வந்தவன், டேவிட் அங்கிள் நேற்று இரவு கூறியது போல் நேராக சென்று மூன்றாவது சந்தியில் இடப்பக்கமாகத் திரும்பி சிறிது தூரம் சென்றதும், விலாசத்திற்குரிய வீட்டின் முன்னால் நின்றான்.

சுற்றிவர நிலப்பரப்புள்ள வீடாக இருந்தது. வெளிக்கதவைத் திறந்து உள்ளே போவதற்கு எத்தனித்தபோது! அவனுக்காக காத்திருந்தவர் போல் கதவைத் திறந்து ¨உள்ளே வாரும் தம்பி¨ என்ற குரல் வந்த பக்கம் திரும்பி பார்த்தபோது, ¨கார் கராஐpல்¨ இருந்து வெளியே வந்த டேவிட் சீலனை வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.

இருக்கையில் அமரும்படி கூறியவர், தனது மனைவி, பிள்ளைகள், சகோதரி, சகோதரியின் கணவர், அவர்களின் பிள்ளைகளோடு அனைவரையும் அறிமுகம் செய்தபோது அனைவரும் சிரித்தமுகத்தோடு கைகொடுத்து என்னை வரவேற்றார்கள்.
 
முன் ஹோலில் மாதாவின் சிலையை வண்ண விளக்குகளால் அழகுபடுத்தி வைத்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் உள்ளே சென்றபின், என்னைப்பார்த்து ¨சீலன் கூல்ரிங்ஸ்¨ அல்லது? ¨கபே¨ குடிப்பீரா என்றபோது இல்லை அங்கிள் ¨கூல்ரிங்சே¨ போதும் என்றவாறு இருக்கையில் அமர்ந்தேன்.

அதற்குள் மகள், தகப்பனுக்கும் சேர்த்து ஆளுக்கோhர் அழகான கண்ணாடி தம்ளர்களில் பழச்சாறை எடுத்து வரவே ஒன்றை எடுத்து என்னிடம் தந்துவிட்டு அடுத்ததை தானும் எடுத்து பருகியபடி, ¨தம்பி சீலன் இன்றைக்கு மத்தியானம் எங்களுடன் தான் லஞ்ச் எடுக்கவேணும்.¨

அப்படி அவர் கேட்டதை என்னால் மறுக்க முடியாமல் தலையசைத்துவிட்டு மௌனமாக இருந்தேன்.

¨என்ன தம்பி ஒன்றுமே கதைக்காமல் இருக்கிறீர், கவலைகள் மனசுக்குள் இருந்தால் அதைக் கொஞ்சம் தூக்கிப் போடும். உம்மைப் போல் தான் நானும் ¨தரப்படுத்த¨லால் பாதிக்கப்பட்டு எழுபத்து நான்காம் ஆண்டே பிரான்ஸ்சிற்கு வந்து ஆறுமாதம் தங்கியிருந்த பின் nஐனிவாவிற்கு வந்து சேர்ந்தேன்.¨

அன்றைய காலகட்டத்தில் இங்கு தமிழர் குறைவு. அப்போதெல்லாம் இப்போ இருப்பது போல் முகாம் ஒன்றுமில்லை. ஹோட்டல்  அறையும், செலவுக்கு பணமும், nஐனிவாவிற்குள் மட்டுமே சென்றுவர பஸ்சிற்கு மாத ரிக்கற்றும் தருவார்கள்.

அப்போ வேலையில்லாமல் கஸ்ரப்பட்டது மட்டுமல்ல, உதவி செய்வதற்கு எவருமே இல்லாது தவித்து திரிஞ்சனான். அந்த நேரத்தில் தான் எதிர்பாராத விதமாக ¨ஹஸ்லர்¨ என்ற பிரான்ஸ்காரரை சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் nஐனிவாவில் றெஸ்ரோறன்ற் ஒன்றின்  உரிமையாளர் என்பதால் எனது பரிதாப நிலையை கேட்டறிந்து தன்னுடைய றெஸ்ரோறன்ரில் வேலை தந்தது மட்டுமல்ல, எனக்கு பிரஞ்ச் மொழியை கற்பதற்கு ஒழுங்குகளும், தங்குவதற்கு தனியாக அறை வசதிகளும் செய்து தந்தார்.

ஏழு வருசம் கஸ்ரப்பட்டு வேலை செய்தபடி கிடைத்த மிகுதி நேரத்தில் பாசையைப் படித்தேன். அதன் பின் ஹஸ்லர் தனது றெஸ்ரோறன்ரை விற்றுவிட்டு பிரான்ஸ்சிற்கு செல்வதற்கு முடிவெடுத்தார். அந்த நேரத்திலும் அவர்தான் எனக்கு ¨ரவல் ஏஐன்சிக்கு¨ படிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார். ¨ஹஸ்லர்¨ என்னை விட்டு பிரியும் நேரத்தில் எனக்கு டிப்ளோமும் கிடைத்ததால் சிறிய இடத்தில் ¨லின்ரா ரவல் ஏஐன்சி¨ என்ற பெயரோடு ஸ்தாபனத்தை ஆரம்பித்தேன். மனைவியுட்பட  மூன்று nஐனிவாவில் வசிக்கும் சுவிஸ் நபர்களும் பணிபுரிகிறார்கள். எனது பிள்ளைகள் இருவரும் தற்போது nஐனிவா பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால்! என்னை இவ்வளவு  உயரத்திற்கு முன்னேற்றிய ஹஸ்லர் இப்போது உயிரோடு இல்லை.

டேவிட் அங்கிள் அதைச் சொன்னபோது அவரது கண்கள் நெகிழ்ந்து போயிருந்தன. இதயத்தின் ஆழத்திலிருந்து அதைச் சொல்கிறார் என்பதை அவரது குரல் காட்டித் தந்தது.

சிறிது நேரத்தில் என்னைப் பார்த்து புன்னகைத்தவர், ¨நேற்று இரவு என்னோடு காரில் வரும்போது கூறிய சோகம் நிரம்பிய கதை எனக்கு மிகுந்த கவலையைத் தந்தது மட்டுமல்ல, இன்று நீர் இருக்கும் நிலையில் அன்று நான் இருந்தனான்  என்பதால் எனது கதையை கூறவேண்டியதாகி விட்டது.¨

¨சரி உம்முடைய விசயத்திற்கு வருவம். நீர் அடுத்ததாக என்ன செய்யப்போகிறீர்? நீரோ இருப்பது சுவிஸ்சிலை, பத்மகலா இருப்பதோ கனடாவிலை, உம்முடைய உத்தேசம் தான் என்ன?¨

¨அங்கிள் எனக்கு இப்போ தான் ¨அக்சப்ற்¨ பண்ணியிருக்கிறாங்கள் என்று நேற்று வரும்போது சொன்னனான் தானே! எங்கையென்றாலும் முதலில் ஒரு வேலையை தேடி எனக்கிருக்கின்ற கடன் பிரச்சினையை தீர்க்கவேண்டும், பத்மகலா எப்படியும் படிச்சு முடிக்க இரண்டு வருசமெண்டாலும் வேணும், முதலிலை என்ரை கடன் முடியட்டும் அதன் பிறகு யோசிப்பம்.¨

¨அப்ப முரளி என்ற உம்முடைய ¨வில்லங்க¨மானவருக்கு  கனடாவில் பெண் பார்பதாகவும், பத்மகலாவைத்தான்  செய்ய முரளியின் மாமாவின் குடும்பத்தினர் முயற்சிக்கிறார்கள் என்று சொன்னீரல்லவா?¨

¨அங்கிள், அப்படி ஏதாவதென்றால் அதை பத்மகலாதான் தீர்மானிக்கவேண்டும்.  எனக்காக காத்திருப்பேன் என்று சொன்னவள் அவள், எனக்காக காத்திருப்பாள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.¨

¨சந்தோசம் தம்பி உமது நம்பிக்கையை நான் பாராட்டுறன், அது மட்டுமல்ல நான் இப்ப சொல்லப் போவதைக்கேட்டு அதிர்ச்சியடையாதையும். நீர் இங்கு வருவதற்கு முன்பே உமக்கு சூரிச்சில் ஒரு வேலையை ஒழுங்கு பண்ணியிருக்கிறன்.¨

சந்தோசம் மிகுந்த ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தேன்.

ஓர் சிறிய புன்முறுவலுடன் என்னுடைய சித்தப்பாவின் மகன் டானியல் ¨சூரிச் Nஐhசப் ஸ்ரார்சா¨வுக்கு சிறிது தூரத்திலுள்ள ¨மக்டொனால்சில்¨ வேலையாக இருக்கிறார். வேலைக்கு ஆட்கள் எடுப்பது, சம்பளப் பட்டியல் தயாரிப்பது, வேலை செய்பவர்களுடைய நேர அட்டவணை தயாரிப்பது போன்ற அலுவலக விடயங்களுக்கு பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கிறார்.

இன்று காலையில் கதைத்தபோது தற்போது தாங்கள் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாகவும், முடிந்தால் நாளை காலை உம்மை கூட்டிக்கொண்டு வரும்படியும், வரும்போது உமது போட்டோவும், வதிவிடவுரிமை பத்திரத்தையும் கொண்டுவரும்படி கூறினார்.

அவர் அப்படி கூறியதும் சந்தோசம் தாங்க முடியாமல் அந்தக் கனிவு முகத்தை இன்னொரு முறை தரிசனம் செய்தபடி, ஹோலின் மூலையில் இருந்த மதாவை மனசுக்குள் வேண்டிக் கொண்டேன்.

¨அப்பா சாப்பாடு ரெடி தம்பியையும் கூட்டிக்கொண்டு வாங்கோ¨ என்று மனைவி குசுனிக்குள் இருந்து குரல் கொடுத்தார், ¨சீலன் எழும்பும் சாப்பிடுவோம்¨ என்று கூறி என்னை டைனிங் ஹோலுக்கு அழைத்துச் சென்றார்.

அனைவரும் ஒன்றாக இருக்கக் கூடிய பெரிய மேசையில் அமர்ந்தோம்.

அன்றைய தினத்தை சந்தோசமாக்கிய ஆண்டவனுக்கு பிரார்த்தனை செய்தபோது! எனக்குமாக சேர்த்து பிரார்த்தனை செய்து முடிந்ததும் சாப்பிடும்படி கூறினார்கள். நீண்ட நாட்களுக்குப் பின் அன்பான பரிமாறலுடன் என் வாழ்கையை திசை திருப்பப்போகின்ற டேவிட் அங்கிளின் குடும்பத்தினருடன் இணைந்து சாப்பிட்டது மனசுக்கு பெரு மகிழ்ச்சியாக இருந்தது.

டைனிங் ஹோலை விட்டு ஹோலுக்கு வந்து இருக்கையில் அமர்ந்தேன்.

சிறிது நேரத்தில் புன்னகையோடு வந்த டேவிட் அங்கிள், ¨சீலன் உமக்கு வேறை வேலையொன்றும் இல்லைத்தானே?¨

¨இல்லை அங்கிள் ஏன்? கேக்கிறீங்கள்!¨

¨இல்லை! என்னுடைய பிள்ளைகள், தங்கச்சி எல்லோரும் ¨குறுஸ்லிங்கன்¨ என்ற இடத்திலுள்ள டொல்பின் மீன்களின் கண்காட்சியை பார்க்கப் விரும்புகிறார்கள். அந்த இடம் சூரிச்சிலிருந்து சிறிது தூரத்தில் அமைந்த ¨ஹொணிலாண்ட்¨ என்ற பொழுதுபோக்குவதற்கான இடம். உம்மையும் கூட்டிக்கொண்டு போகலாம் என்று விரும்புறோம். எங்களோடு வரவிருப்பமா? திரும்பி வரும்போது றெஸ்ரோறன்ரில் இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு வரும் வழியில் உம்மை முகாமில் இறக்கி விடுகிறோம்.¨

அவர்களுடைய விருப்பத்தை என்னால் தட்ட முடியவில்லை.


தொடரும் 19



 

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விழுதல் என்பது எழுகையே ...............

 பகுதி  19 எழுதியவர்: சுவிஸ்சிலிருந்து விக்கி நவரட்ணம்




தொடர்கிறது 19

¨ஹொணிலாண்ட்¨ சென்ற சிறிது நேரத்தில் டேவிட் அங்கிளுடைய மனைவி, ரொசி அன்ரி, பிள்ளைகள் லின்ரா, யஸ்மின், சகோதரி மெற்றில்டா அன்ரி, கணவர் அன்ரன், பிள்ளைகள் றொபின், nஐரால்ட் அனைவரும் என்னுடன் பழகிய விதத்தால்  தங்களுடைய குடும்பத்தில் ஒருவனாக்கி விட்டார்கள்.

இருந்தாலும் ஒரேயொரு கவலை என் மனதை வாட்டியது. அன்ரன் அங்கிள் ஒற்றை கையில் ஊன்று தடியுடன் நடப்பதற்கு சிறிது கஸ்ரப்பட்டப்படியே நடந்தார். போகும்போது டேவிட் அங்கிளிடம் அதைப்பற்றி கேட்போம் என்ற எண்ணத்துடன் பொழுது போவதே தெரியாமல் அவர்களோடு சந்தோசமாக கழித்தேன்.

அங்கிருந்து புறப்பட்டு றெஸ்ரோறன்ரில் இரவு உணவை உண்டபின் காரில் வரும்போது அன்ரன் அங்கிளைப்பற்றி டேவிட் அங்கிளிடம் கேட்டேன்.

அன்ரன் ஒரு ¨ஸ்ரீல் பக்ரறி¨யில் மெசினிஸ்ராக வேலை செய்கிறார். ஒன்பது மாதத்திற்கு முதல் மெசின் பழுதடைந்து ¨ஸ்ரீல் பார்¨ ஒன்று உடைந்து இடுப்பில் பலமாக அடித்ததால் இடுப்பில் தசை நசிந்து விட்டது என்று டாக்ரர்கள் சொல்கிறார்கள். மாதத்தில் நான்கு முறை தெரப்பிக்கு போய்வருவார். அவரால் தொடர்ந்து அதிகநேரம் நடக்க முடியாது, அதிகநேரம் நின்றும் வேலை செய்ய முடியாது. அவருடைய இ;ன்சூரன்ஸ் தான் எல்லாமே செய்கிறார்கள்.

வருகிற பாடசாலை விடுமுறையில் மெற்றில்டா அவரைக் கூட்டிக்கொண்டு தமிழ்நாட்டிற்கு போய் இரண்டு மாதம் கோவையில், அல்லது கேரளாவில் ஆயுர்வேத வைத்தியம் செய்து பாப்பம் என்று தீர்மானிச்சிருக்கிறார்.

¨அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன்¨ இருக்கும் இந்த நவீன மருத்துவ காலத்திலும் அவருடைய தசை நசிவுக்கு சரியான மருத்துவம் செய்ய முடியவில்லை, ஆயுர்வேதத்தையாவது செய்து பார்ப்பம் என்ற மெற்றில்டாவின் நம்பிக்கை அது!

அதுவும் ஓரளவில் சாத்தியப்படலாம். அந்தக் காலத்தில் 23 மி. மீற்றர் கருப்பையையும், அந்தக் கருப்பையில் ஐந்தாம் மாதம் காது, மூக்கு, உதடும், ஏழாம் மாதம் தலைமுடி வளரும் என ஒவ்வொரு நாளும் கருப்பையின் வளர்ச்சியை கணக்கிட்டு வைத்தவர்கள் சித்தர்கள்.

1700ம் ஆண்டில் கால்நடையாகவும், குதிரையிலும் உலகின் பல பாகங்களுக்கு சென்று ஏராளமான தாவரங்களை பதிவு செய்த சுவீடன் நாட்டு நவீன தாவரவியல் தந்தை ¨கார்ல் லின்னேயஸ்¨ என்பவருக்கு வரலாற்றில் தந்திருக்கும் மரியாதை, எங்கள் தமிழ் சித்தர்களுக்கில்லையே! அன்று அவர்கள் எழுதி வைத்த ஏடுகளில் அனேகமானவையை ஐரோப்பிய நாடுகள் கவர்ந்து வந்து இன்றும் Nஐர்மனியில் அதை பாதுகாப்பாக பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை சில வருடங்ளுக்கு முன் பத்திரிகையில் படித்த ஞாபகம்.

இறைவனின் அருளிருந்தால் மெற்றில்டாவின் விருப்பம் நிறைவேறும் என்று கூறி முடிக்கையில் எனது முகாமிற்கு முன்னால் கார் நின்றது.

¨நாளை காலை எட்டு மணிக்கு வருவேன் தயாராயிரும் சீலன்¨ என்று கூறி விடைபெற்றபோது! எல்லோருமே அன்போடு கைகளை அசைத்து விடைபெற்றார்கள்.

அவர்கள் என் கண்களில் இருந்து மறைந்ததும் முகாமிற்குள்ளே போவதற்கு திரும்பியபோது உள்ளே நின்ற விறுமாண்டி என்னைப் பார்த்து உனக்கு இவ்வளவு பெரிய குடும்ப உறவா? இரண்டு காரில் வந்த அனைவரும் இங்கு எங்கே? இருக்கிறாhர்கள் என்று ஆச்சரியமாகக் கேட்டான்.

எதிர்பாராமல் கிடைத்த அன்புள்ளங்களை உறவில்லையென சொல்லமனமின்றி ஆமென்று தலையாட்டிவிட்டு எனதறைக்குள் சென்றேன்.

எனக்குள் சந்தோசம் துள்ளி விளையாடியது. விழுதல் என்பது எழுதலுக்காகத் தான் என்பதை ஆண்டவன் டேவிட் அங்கிள் ரூபத்தில் உதவி புரிகிறார் என்ற எண்ணத்தோடு படுக்கையில் விழுந்தேன்.

எட்டு மணிக்கு என்னை அழைத்துச் செல்வதற்கு டேவிட் அங்கிள் வருவார் என்பதால் நித்திரைக்கு விடைகொடுத்து குளித்துவிட்டு முகாம் வாசலில் அவருக்காக காத்து நின்றேன்.

சரியாக எட்டு மணிக்கு வந்த டேவிட் அங்கிள்; சூரிச் மக்டொனால்;;சிற்கு அழைத்துச் சென்று டானியலிடம் என்னை அறிமுகம் செய்தவர், சற்றுத் தூரத்திலுள்ள றெஸ்ரோறன்ரில் இருப்பதாகவும் அங்கே வரும்படியும் கூறிவிட்டு சென்றார்.

டானியல் மக்டொனால்;சிற்;கு மேலே உள்ள அலுவலக அறைக்கு அழைத்துச் சென்று என்னிடம் டொச் மொழியில் விபரங்களை கேட்டுத் தெரிந்து, விண்ப்பப்படிவத்தை நிரப்பி, என்னிடம் போட்டோவை பெற்றுக்கொண்டதும் விண்ணப்பப்படிவத்தில் கையெழுத்திடும்படி கூறினார்.

கையெழுத்திட்டதும் தற்போது உமக்கு எண்பது வீதம்தான் வேலைக்கு பதிந்திருக்கு, மூன்று நாட்களுக்கு தினமும் இரண்டு மணித்தியாலம் வேலை பழக்குவார்கள். மூன்று மாதம் முடிந்ததும் நூறு வீதமாக்குவோம். அதன் பின்னர் சந்தர்ப்பம் கிடைக்கும்போது உமக்கு உதவி மனேஐருக்கான வேலை உயர்வு தர முயற்ச்;சிப்போம். வேலை செய்து கொண்டு மொழியை படிக்க முயற்ச்சித்தால் இங்கு உமக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

ஆறு மாதங்களின் பின்னர் உமக்கு பதின் மூன்றாவது மாதச்சம்பளம் ஐம்பது வீதம் கிடைக்கும். ஒரு வருடத்தின் பின்னர் பதின்மூன்றாது மாதச்சம்பளம் நூறு வீதமாகும். ஆறு மாதத்தின் பின்னர் உமது முயற்ச்சியைப் பார்த்து உரிமையாளரிடம் பேசி மொழியை படிக்கும் செலவை நாமே பொறுப்பேற்போம் என்ற விபரங்களையும் கூறினார்.

பின்னர் என்னை கீழே அழைத்து வந்து றெஸ்ரோறன்; மனேஐருக்கும், அங்குவேலை செய்பவர்களுக்கும் அறிமுகப்படுத்தியபின், சாப்பாட்டறை, உடைமாற்றும் அறையென எல்லாவற்றையும் காட்டியதும், நான் அணியவேண்டிய உடைகள் இரண்டு Nஐhடியை தந்து மறுநாள் காலை பத்து மணிக்கு வரும்படி கூறியவர் எனது கரத்துடன் கரமிணைத்து விடைபெற்றார்.

விடைபெற்று வெளியே வந்தபின் டேவிட் அங்கிள் காத்திருந்த றெஸ்ரோறன்;றுக்குள் சென்றபோது! மேiஐயில் இருந்தபடியே அருகே இருந்த இருக்கையில் அமரும்படி எனக்கு ஐhடை காட்டி இருவருக்கும் ¨கபே ஓடர்¨பண்ணிவிட்டு நடந்தவற்றை விபரமாக கேட்டு தெரிந்து கொண்டவர், என்னைப் பார்த்து, ¨சீலன் இன்றைக்குதான் உம்முடைய முகத்தில் சந்தோசத்தை காணுறன்.¨

¨அங்கிள் உங்களை சந்திக்கிறதுக்கு முதல் எனக்கு வேலை கிடைக்கவேணும், எனது கடன் பிரச்சினைகளை தீர்க்கவேணும், என்றாவது ஒருநாள் பத்மகலாவோடு மக்டொனால்;சில் இருந்து சாப்பிடவேணுமென்று மனக்கனவு கண்டனான்.¨

¨எனக்கு மக்டொனால்சிலேயே வேலை கிடைச்சிருப்பதை என்பதை நினைச்சு பார்க்கவே முடியவில்லை. உங்களை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.¨

¨என்னவோ தெரியவில்லை சீலன், முதல் நாள் என்னுடைய காரில் வரும்போது நீர் கவலையோடு சொன்ன உமது கடன் பிரச்சினை, உமது பல்கலைக்கழக படிப்பை தொடரமுடியாதது மட்டுமல்ல, உமது காதலி பத்மகலாவைப் பற்றி சொன்னதும் என் மனதிற்கு மனவேதனை ஏற்பட்டதால் உமக்கு உதவி செய்ய என் மனம் எண்ணியது.¨

சீலன்! கவலை இல்லாத மனிதர்களே இவ்வுலகில் இல்லை. ஆனால், அதை எதிர்கொள்வதில் தான் ஒவ்வொருவரின் வெற்றி, தோல்வி, துயரம், நிம்மதி எல்லாமே இருக்கிறது. அதைத்தாமே எதிர்த்து முன்னின்று போராடுபவர்கள் ஒரு சிலர் தான்.

எதி;ர்காற்றில் மிதிக்கும் மிதிவண்டி போலவே மனிதனின் வாழ்கை ஒரு போராட்டமாகும். இனிமேல் உம்முடைய முயற்ச்சியில் தான் எல்லாமே தங்கியிருக்கு. முகாமில் இருந்து ஒவ்வொருநாளும் சூரிச் வந்து போவதென்றால் கொஞ்சம் கஸ்ரமாகத் தான் இருக்கும்.

உமக்கு வேலை கிடைத்த பின்னர் முகாமில் தங்கியிருக்க முடியாது என்பதால், தற்காலிகமாக தவராசாவுடன் தங்கியிருந்து கொண்டு வசதியாக ஒரு சின்ன அறை எடுத்தபின்னர் எல்லாம் நன்மையாக அமையும்.

இனிமேல் தான் சீலன் நீர் தனியே எடுத்து வைக்கும் காலடி ஒவ்வொன்றும் கவனத்துடன் எடுத்து வைக்க வேண்டும். மனிதர்களுள் பொல்லாக் குணமுடைய மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்களை இனம் கண்டு உமது பாதையில் நீர் பயணிக்கவேணும். முப்பது வருடங்களுக்கு மேல் ஐரோப்பாவில் தமிழர் இங்குள்ள சூழலுக்கேற்றவாறு வாழப்பழகிக் கொண்டார்கள். வெள்ளைக்காரன் கை குலுக்கும் போது சாதி பார்ப்பதில்லை. இங்குள்ள தமிழர்கள் வெள்ளைக்காரரோடு பழகியும், பணிபுரிந்து கொண்டும் இன்னும் சாதிக்கு கொள்ளி வைக்கிறார்களில்லை. இங்கு வளரும் தலைமுறையினருக்கும் எண்ணை ஊற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.

அடுத்தது உமது வருமானம், உமக்கு கையில் பணம் வைத்து செலவு செய்து பழக்கமில்லை. இனி கிடைக்கப்போகும் சம்பளம் மிகப்பெரிய தொகையாக உமக்கு தோன்றக்கூடும.; கண்டதையும் வாங்கி கணக்கின்றி செலவு செய்யாமல், அளவோடு செலவு செய்து கொள்;ளும். உம்முடைய உணவு, உறைவிடம், தேவையான உடைபோக மிகுதியை சேமித்து உமது கடனைத் தீர்க்கப் பாரும்.

துணிவும், தன்நம்பிக்கையுமே உமது வாழ்கைக்கு வழிகாட்டியாக இருக்கும். பொறுமை, அடக்கம் உம்மிடம் உண்டு. இதையே தொடர்ந்து நீர் கடைப்பிடித்தால் அறிவியல் என்னும் வானத்தை ஆளும்; சுகம் உமக்கு கிடைக்கும். உண்மை, நேர்மை உமது உள்ளத்தில் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும்

இவை தான் சீலன் உமக்கு என்னால் கூறக்கூடிய புத்திமதிகள் என்றவர், மேசையில் கபேக்குரிய பணத்தை வைத்துவிட்டு என்னை அழைத்துக்கொண்டு வெளியேறி, காரில் ஏற்றிக்கொண்டு முகாம் நோக்கி புறப்பட்டார்.

நேற்றுடன் எனது விடுமுறை முடிவுற்றது. உமக்காகத்தான் இன்று நின்றேன். பின்னேரம் எனது குடும்பத்துடன் nஐனிவாவுக்கு போயிடுவன். திரும்ப எனக்கு சூரிச் வர சந்தர்ப்பம் கிடைச்சால் உம்மிடம் வருவேன். அப்போது உம்மை நல்ல நிலையில் பார்க்கவேணும் என்று என்று கூறியவாறு வந்தவர் முகாம் வாசலில் காரை நிறுத்தினார்.

காருக்குள் இருந்தவாறு கைகுலுக்கி சிறிய ¨என்பலப்¨ ஒன்றை  எனது சேட்டுப் பையில் திணித்து, இது எனது சிறிய அன்பளிப்பு என்றவர், காரை இயங்க வைத்து என்னிடமிருந்து விடைபெறும்போது!

¨அங்கிள்! அன்ரி, மெற்றில்டா அன்ரி எல்லோரையும் கேட்டதாகச் சொல்லுங்கோ.¨

¨கட்டாயம் சொல்லுவேன்¨ என்றபடி காரை நகர்த்தினார்.
    
இருளில் மூழ்கியி;ருந்த எனக்கு பரிவு, பாசத்துடன் ஒளியேற்றியவர் என்னை விட்டு பிரிவதை பார்த்துக் கொண்டு நின்ற என் கண்களில் நீர் பெருக்கெடுத்தது.

அவர்; என்னிடம் தந்த 'என்பலப்பை' பிரித்துப் பார்த்தபோது, அதற்குள் ஆயிரம் சுவிஸ் பிராங்குகளும், சிறிய கடிதமும், அத்துடன் 'விசிற்றிங் காட்டும்' இருந்தது.

கடிதத்தை பிரித்தபோது, சீலன் இந்தப் பணத்தை கையில் தந்திருந்தால் நீர் ஏற்றிருக்கமாட்டீர். தந்ததன் காரணம் நீர் முகாமை விட்டு வெளியேறினால் உமக்கு தொலைபேசி வசதியிருக்காது. இந்தப் பணத்தில் சிறிய கைத்தொலைபேசியை வாங்கவும். மிகுதியை சம்பளம் கிடைக்கும்வரை உமது வேலைக்கு சென்றுவருவதற்கான செலவுக்கு வைத்திரும்.

தொலைபேசி வேண்டியதும் பத்மகலாவுடன் உடனடியாக தொடர்பு கொண்டு, உமக்கு வேலை கிடைத்ததைப் பற்றி தெரிவியும். முடிந்தால் என்னுடைய தொலைபேசி  இலக்கத்திற்கு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்பு கொண்டு உமது சுகத்தை தெரிவிக்கவும்.
                                                         அன்புடன்
                                                       டேவிட் அங்கிள்

கடிதத்தை மடித்து வைத்துவிட்டு அவருடைய பெருந்தன்மையை நினைத்து மிக மிக சந்தோசத்துடன், எனக்கு வேலை கிடைத்ததை தவமண்ணைக்கு சொல்ல வேண்டுமென்ற ஆவலுடன் முகாமுக்குள் சென்றேன்.

தொடரும் 20




 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
 
உலக எழுத்தாளர்கள் ஒன்றினைந்த 20வது வெற்றி வாரம்.
 
03.10.2014 இல் 20வது வாரத்தை வெற்றிகரமாக கடந்துவந்து கொண்டிருக்கும்  ''விழுதல் என்பது எழுகையே'' பெருந்தொடரை இதுவரை 12 எழுத்தாளர்கள் எழுதி உள்ளார்கள் இவர்களைப்  பற்றிய பாராட்டுக்களமும், நன்றியறிதலையும் எமது கதைக்குடும்ப ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் ,கவிஞர் திரு.ஏலையா முருகதாசன் அவர்களின் முன்னெடுப்பில்  எமது விழுதல் என்பது எழுகையே முகப்புத்தகம் ஊடாக நாளுக்கு ஒருவராக 12 நாட்கள் எழுத்தாளர்களைப்பற்றிய விபரம் வெளியிட்டிருந்தோம். தொடர்ந்து இன்னும் பல பிரபல எழுத்தாளர்கள் பல நாடுகளில் இருந்து  விழுதல் என்பது எழுகையே தொடரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள் பற்றிய விபரங்கள் வெளிவர இருக்கிறது என்பதை உங்களுக்கு அறியத்தருவதில் மிக மகிழ்ச்சியடைகின்றோம். அது மட்டுமன்றி இக்கதையை தொடர்ந்து வாசித்து அதற்கான ஏற்றமிகு கருத்துக்களையும் எழுத்தாளர்களுக்குப் பாராட்டினையும் இதுவரை வழங்கிக் கொண்டிருக்கும் எமது அன்பு  வாசகர்களுக்கும். எமது முயற்சியை பாராட்டி வளம்படுத்திவரும் உலகத் தமிழ் எழுத்தாளர்கள் ,கல்விமான்கள் அனைவருக்கும் எமது 20 வது வாரத்தில் பெரு நன்றிகளைத் தெரிவிக்கின்றோம். தொடரும் எமது பயணத்தில் தொடர்ந்து பயணம் செய்யுங்கள் எதுவரை என்பதை எமது கதையின் உலகத் தமிழ் எழுத்தாளர்களே முடிவு செய்யட்டும் 
அன்புடன்
வி.எ.எ. கதைக் குழுமம் சார்பாக 
வெளியீட்டு இணைப்பாளர்  
பண்ணாகம் திரு.இக.கிருட்ணமூர்த்தி
 

 


 எழுதியவர் பசுந்திரா சசி.  –

எழுத்தாளர் பற்றிய அறிமுகத்துடன் தொடர் 20 தொடர்கிறது

இயற்பெயர் :- ப. சசிகரன்
புனைபெயர் :- பசுந்திரா சசி
நெடுந்தீவை சேர்ந்தவர் இவர் . வவு ஃசெட்டிகுளம் ம. வி இ கிளி ஃகோணாவில் அ த க பாடசாலை இ யாழ்ஃ அளவெட்டி அருணோதயக்கல்லூரி மற்றும் யாழ் ஃ வண்ணை வைதீஸ்வரகல்லூரி ஆகியவற்றில் பயின்றவர்  .  தற்போது பிரித்தானிய  நாட்டில் வசிக்கிறார் .
கடந்த ஆண்டு 'கட்டடக்காடு ' என்னும் சமூக நாவலுடன் இலக்கிய துறையில் பிரவேசித்த இவர் வீரகேசரியில் 'மடு ' என்னும் தொடர்கதையை எழுதி வருகிறார் . இவரது 15 க்கு  மேற்பட்ட  சிறுகதைகள் தாயாகத்திலும் புலத்திலும் பிரசுரமாகியுள்ளது  .

- வாசிப்பு வேண்டும் ; என்னும் அதே வேளை 'நயம்பட உரை 'என்னும் ஒளவையின்  கூற்குக்கமைவாக 'வாசிக்கும்படியாக எழுத படவும் வேண்டும்' என ' - மானிடநேயத்தை வலியுறுத்தி   எழுதிக்கொண்டிருக்கும் ஒரு பரதேச வாசி - என்று  தன்னை விழிக்கிறார் - பசுந்திரா சசி –



----------
பகுதி 20 கதை தொடர்கிறது.

 

டேவிட் சீலனுக்குமக்டொனல்ஸ்ஸில் வேலை எடுத்து தருவதாகச் சொன்னது அவனுக்கு மன ஆறுதலைக் கொடுத்தது.
தான் வேலலைக்குப் போகப்போகிற மக்டொனால்ஸ் இருக்கும் இடத்தை டேவிட் மூலம் அறிந்து கொண்ட சீலன் அந்த இடத்திற்குப் பொழுது போவதற்கு போவதென முடிவெடுத்து அங்கு போனான்.
மக்டொனால்ஸ் அமைந்திருந்த இடம் அவனுக்கு பிடித்திருந்தது. விரைவுப்பாதைக்குப் போகும் கிளைப் பாதையில் அந்த மக்டொனால்ஸ் அமைந்திருந்தது.
அழகாக கட்டப்பட்டிருந்து அந்த உணவகத்தைச் சுற்றி கண்ணாடியாலான வேலியும் உள்ளே பூச்சாடிகளில் பூச்செடிகள் வைக்கப்பட்டிருந்தன.
விற்பனைப் பகுதிக்குச் சென்ற சீலன் ஓரு கோப்பியை வாங்கிக் கொண்டு வந்து நாற்காலியில் அமர்ந்து மெதுவாக கோப்பியை குடித்தவாறு கண்ணாடி வேலிக்கூடாக விரைவுப் பாதைக்கு போகும் கார்களை பார்த்துக் கொண்டேயிருந்தான்
அப்பொழுது அவனைக் கடந்து ஒரு தமிழர் தோளில் ஒரு பையைப் போட்டவாறு விற்பனைப் பகுதியை நோக்கிப் போகும் போதே அங்கு வேலை செய்து கொண்டிருந்த பெண் 'கலோ மகேந்தி விடுமுறை முடிந்துவிட்டதா' என ஜேர்மன் மொழியில் கேட்டதை சீலன் புரிந்து கொள்கிறான்
மகேந்தி என்ற அவர் மக்டொனால்ஸ்ஸில் வேலை செய்பவர் என்பதும் அவர் விடுமுறை முடித்து மீண்டும் இன்று வேலைக்கு வருகிறார் என்பதை சீலன் விளங்கிக் கொள்கிறான்
மக்டொனால்சிக்குள் போன மகேந்தி வேலைக்கான உடையைப் போட்டுக் கொண்டு கையில் ஒரு கோப்பிக் கோபபையுடன் வெளியே வந்ததும் கோப்பி குடித்துக் கொண்டு சீலன் இருப்பதைக் கண்டதும் அவனை நோக்கி வந்து அவன் முன்னால் இருந்த நாற்காலியில் உட்காருகிறான்.
ஒருவருக்கொருவர் வணக்கம் சொன்னதன் பின்னர் மகேந்தி சீலனைப் பற்றி முதலில் விசாரிக்கிறார். சீலன் தான் சுவிஸ்சுக்கு வந்து கிட்டத்தட்ட ஆறு மாதமாகிறது எனச் சொல்ல மகேந்தி தான் வந்து ஐந்து வருடங்களாகிறது என்கிறான்.
சுவிஸ்சுக்கு எப்படி வந்தனீங்கள் என சீலனைக் கேட்க, தான் கொழும்பிலிருந்து ஆஸ்திரியா வந்து அங்கிருந்து சூரிச்சுக்கு வந்ததைச் சொல்லிவிட்டு மகேந்தியிடம் 'நீங்கள் எப்படி வந்தனீங்கள்' என்று கேட்கிறான்.
தன்னுடைய பெயர் மகேந்திரன் தன்னை எல்லோரும் மகேந்தி என்றுதான் கூபபிடுவார்கள் எனச் சொன்ன மகேந்தி கைக்கடினாரத்தைப் பார்க்கிறான். வேலைக்கு இன்னும் முப்புது நிமிடங்களிருக்கவே தான் எப்படி வந்தேன் என்பதைச் சொல்லத் தொடங்குகிறான்.
மகேந்தி நகைச்சுவை உணர்வு உள்ளவன்  என்பதை அவன்  தனது அகதிப் பயணத்தைச் சொல்லத் தொடங்கும் போதே சீலன் புரிந்து கொள்கிறான். மகேந்தி கொழும்பிலிருந்து தாய் லாந்து வந்து தாய்லாந்திலிருந்து தனது கதையைச் சொல்லத் தொடங்குகிறான்.
ஐரோப்பிய நாடொன்றுக்கு தனி ஆளாக போவதைவிட கணவன் மனைவியாக போவதே சுலபமானது என ஏஜன்சி தாய்லாந்தில் வாழும் ஒரு பெண்ணை ஒழுங்கு செய்ய அவளுடன் மகேந்தி தாய்லாந்து விமான நிலையத்தில் வந்து நிற்கிறான்.
'நீ அது... தானே ? இண்டைக்கு என்னோட வாறியா எண்டு கே;கிறாங்க. கறுமம் கறுமம் நிக்கிறது தான் நிக்கிறான் கொஞ்சம் நெருங்கி நிக்கிறானா..? தெருப்பொறுக்கியள் வலிய வந்து இப்பிடி எல்லாம் பேச விட்டிட்டு கண்டும் காணாம நிக்கிறான்.  கட்டிய கணவனையே அருகில் கட்டினவன் மாதிரி ஒட்டி நில்லுங்கோ எண்டு கேக்க வேண்டிய நிலை எனக்கு. இது என்ன மனுசப்பிறப்பா இல்லை வேற ஏதுமா ? ' என குறும்போடு குறுகுறுத்தாள்  மகேந்திரனின் மனைவி கனிதா. அவளின் முணு முணுப்பு உதடுகளுக்கு வெளியே உறுண்டு சென்று மகேந்திரனின் காதுகளிலும் விழுந்தது .
மகேந்திரன்  இவ்வளவும் கேட்டும் சும்மா இருப்பானா 'கலோ நீர் ஒன்றும் தாலி கட்டின பொண்டாட்டி இல்லை தப்பான முறையில் ஒட்டிக்கொண்டவள் அதையே சாட்டாக வைத்து - பிளாக் மெயில்பண்ணி சொந்த புருசனாக மாற்ற  கனவு காணாதையும் என்னை விட உமக்கு ஐந்து வயது அதிகம் என்பதையும் உங்கிட்ட அப்பா கட்டாயப்படுத்தினதால தான் இந்த விளiயாட்டுக்கே நான் சம்மதிச்சனான் எண்டதையும் மறந்து போடாதையும்'  என்றான் மலை விழுங்கி போல விறைத்தபடி மண் விழுங்கிய குழந்தை போல மூக்கை சுழித்து அருவருத்தபடி மநே;திரன்.
'எல்லாம் என் தலை எழுத்து என்பதாய் சுடிதாரை சீர் செய்து கொண்டு நெற்றியில் வளிந்த குறுமுடியை ஒதுக்கினாள் கனிதா .
இருந்தாலும் சற்று முன் நடந்தவற்றை நினைக்க மகேந்திரனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
'பொடாய்... பொடாய் ....'  என்று கனிதா தாய்லாந்து பாசையில் நாயை எதிர்க்கும் பூனை போல ஒரு தாய்லாந்து காரனை பார்த்து சீறி வார்த்தைகளை விட்டெறிந்ததை தான் ஏதுமறியாது அருகில்  அணிலேற விட்ட நாய் போல மேலேறும் விமானங்களை பார்த்து ஏங்கி நின்றதும். அவள் கடுப்பு தாங்க முடியாமல்  'மகேந்திரன் அவங்க என்ன கேக்கிறாங்க எண்டு தெரியுமா..? என கேட்க. அவன்  'அவங்க தாய்லாந்து பாசையிலயா பேசினாங்க ? ' என பதில் சொல்ல  பேசின மொழி என்ன என்றே தெரியாதவனுக்கு என்ன பேசினாங்க என்றா தெரியப்போகிறது, என அவள் முணுமுணுத்ததை எல்லாம் மீட்டிப்பார்த்து சிரித்தான்.  இதனால் மகேந்திரன் ஒன்றும் சேமணப்பயல் இல்லை. கூர்ந்த சிந்தனையாளன்.
தாய்லாந்தில் யாரோ ஒருத்தியை மனைவியாக நடிக்க வைத்த காலத்தை எண்ணியபடியே கலங்கி நின்றான் மகேந்திரன்.
மாமா சாதி குறைஞ்ச இடத்தில கலியாணம் செய்தது எண்டு தமையனின்  செத்த வீட்டுக்கும் பக்கத்தில இருந்தும் போகாத மனிசி இந்த அம்மா மனிசி. கேட்டால் ' அந்த காலத்தில யாழ்ப்பாணத்தில இருந்து  வன்னிக்கு குடி தண்ணியோட விதான வேலைக்கு போய் வந்த கந்தவனத்தாரின் அடித்தோன்றலாம் தான் '; எண்டு அடிக்கடி சொல்லும் அம்மாவை சாந்தப்படுத்தி இவை எல்லாவற்றையும் சாத்தியப்படுத்த வேண்டும். அம்மாவும் பாவம் என்னை பெற்றதை தவிர இந்த பிறப்பில எந்த சுகத்தையும் கண்டதில்லை  மனிசியின்ர கழுத்தில காதில கிடந்ததையும் வித்துப்போட்டு வந்து அரை வழியில ஆற்றையோ கால்ல விழுந்துகொண்டு  நிக்கிறன் நான். தங்கச்சிக்கு வேற வயதாகுது இந்த ஏஜென்சிகள் ஏத்திறன் ஏத்திறன் எண்டு நாளைத்தான் ஏத்திறாங்கள் ஆளை ஏத்தக்காணம், எனச்  சினந்தான்.
திரைகடல் ஓடி திரவியம் தேடு என்பார்கள் நாமோ திரவியம் கொடுத்து திரைகடல் ஓடிக்கொண்டு இருக்கிறோம்.  எல்லாவற்றுக்கும் அந்த ஒன்றேதான்  காரணம்.
கனிதா முனிதான் என்பது போல அவனையே முறைத்துக்கொண்டு அருகில் நின்றாள். அவளுக்கு இந்த எயர்போட்டால இவனை பிடிபடாம கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற படபடப்பு. இப்படி ஒரு இக்கட்டான நிலைக்கு ஆளானதில் அவளுக்கும் விருப்பம் இருக்காது தான்.
அவ்வளவுக்கு அவள் ஒன்றும் பணமோ அழகோ அறிவோ இல்லாதவள் இல்லை .
அவளின் தாய் தாய்லாந்து பெண்மணி . தந்தைதான் தாய்லாந்தக்கு பிழகை;க வந்த இந்தியத்தமிழர்.  இப்படி பஞ்சத்திற்கும் தாய்லாந்து வர்ணத்திற்கும் பிறந்த பஞ்சவர்ண கிளி அவள். பார்ப்பதற்கு மொட்டு விரியாத காளான் போல வெள்ளையும் மென்மையுமாய் இருப்பாள். தலை முடி மட்டும் சோளன் பொத்தி தும்பு போல செம்பட்டை நிறத்தில் ஏதோ அடித்து வைத்திருந்தாள்.
பாவம் எங்கும் போக முடியாமல் இடைவழியில் முழித்துக்கொண்டு திரும்பி ஊருக்கு போனாலும் உயிர்பயம்  என்று இருந்த மகேந்திரனுக்கு உதவி செய்ய, ஓம் என்று வாக்கு கொடுத்து பணமும் வேண்டி விட்ட அப்பாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு,  மனைவி வேசம் போட்டு ஐரோப்பா கொண்டு போய் விட ஒப்புக்கொண்டதன் விளைவே இன்று கட்டிய மனைவியாய் இல்லாமல்  கடவுச்சீட்டில் படம் ஒட்டியதால் மனைவியாக வர வேண்டி வந்து  கண்றாவியாக நிக்கிறாள்.  

முன் பின் செத்திருந்தா தானே சுடலை தெரியும் என்பது போல இவன் முன் பின் கட்டி இருந்;தால் தானே கணவன் மாதிரி நடக்கத்தெரியும் என கதை விட முடியாது கட்டினது கட்டாதமாதிரியும் கட்டாதது கட்டினா என்ன செய்ய வேணும் என்றும் பயிற்சி எடுக்கிற காலமிது.  கனிதாவும் கட்டாதவள் தான் ஆனால் நாகரீக உலகில் வாழ்வதால் ஏதோ கொஞ்சம் தொரிந்து வைத்திருக்கிறாள்.
'மகேந்திரன்  நெருங்கி என்னோட கிட்ட நில்லும் பாப்பம்' என்றாள் மண்டக் கட்டெறும்பின் கொடுக்கு போல கண்ணை அகல விரித்தபடி   . அவன் ' டீசண்டான கணவன் மனைவிகளும் பயணம் போவ துண்டு' என்றான்.
முட்டினால் தான் முடிச்சது இல்லை என்றால் முடிச்சவித்தது என்று அர்த்தம் இல்லை என்ற தொனியில். கனிதாவின்  கோவம்; கண்ணில் மின்னி உதட்டில் வெடித்தது. ' இங்கு யாரும் யாருக்கும் உறவு முறை நிரூபிக்க வேண்டியதில்லை உண்மையான உறவு முறையாய் இருந்தால்  இப்படி கள்ளமாக கடவுச்சீட்டில மட்டும் உறவு வைத்துக் கொண்டு இருப்பவர்கள். ஊழியர்களை நம்ப வைக்க அதை இதை செய்து தான் ஆக வேண்டும்.  அப்பா சொல்லும் போது மட்டும் ஓம் ஓம் எண்டு ஓணான் மாதிரி தலையை ஆட்டினீர்  இங்க வந்து குதர்க்கம் பேசுறீர். வெளிநாடு போக வேணும் எண்டால் நான் சொல்லுறபடி  என்னோட ஒட்டிக்கொண்டு வாரும். இல்ல நான்  தாய்லாந்து  ஜெயில்ல இரும்பு சங்கிலி கிலோ கணக்கில தூக்கத்தான் போறன் எண்டு  ஆசைப்பட்டா அதுக்குப்பிறகு உம்மிட விருப்பம். செய்யிறது எல்லாம் பிழையான வேலை அதுக்குள்ள கதை மட்டும் வெள்ள வேட்டிக்காறன் மாதிரி என்று' எரி வெள்ளியாய் எரிந்து தள்ளி விட்டு முடிவில் சிறு புன்னகையும் உதிர்த்தாள். கனிதா. கனி என்ற பேரோட கச்சல் காயாய்  இருக்கிறாள் என்று எண்ணியபடி சற்று நெருக்கமாகவே நின்றான் மகேந்திரன்.  
என்ன நினைத்தாளோ தெரியாது திடீரென வெடி அரசன் போல திமிர்ந்து வேண்டா வெறுப்பாக  விலகி நின்றாள். மகேந்திரன் புரியாமல் விழித்தான்.
மகேந்தி தனது அனுபவத்தைச் சொல்லச் சொல்ல சீலன் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தான். மகேந்தி தனது அகதிப் பயணத்தை நகைச்சுவையுடன் விபரித்த போது சீலன் பலமுறை வாய்விட்டுச் சிரித்தான்.
மகேந்தி தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தான்.
அவனின் முழியே எல்லாவற்றையும் காட்டி கொடுத்து விடும் போல இருந்தது. 'மகேந்தி கோம்ப திருடினவன் மாதிரி முழிக்காம சுவிங்கத்தை எடுத்து வாயில போடும் நாலாவது கவுண்டரில ஒரு நாதாரி என்னையே பாத்துக்கொண்டு இருக்கு நானும் அதை கண்டு கொண்டதாக காட்டிக்கொடுத்திட்டன். அவர் என்னை பார்த்து நெளியிறத பார்த்தா எங்கட பருப்பை அவருட்ட அவிக்கலாம் போல கிடக்கு பார்ட்டி கொஞ்சம் பசலை (பொண்ணு ) வியாதிக்காறன் போல தெரியிறான்.  அனேகமா தன்னிட்ட தான் நான் வருவன் எண்டு நினைக்கிறான். பாஸ் போட்டை என்னிட்ட தா நான் உன்னை ஒதுக்கிற மாதிரி நடிப்பன்' . என்று மகேந்தியின் காதில் தரையை பார்த்து தாவணியை ஒதுக்கியபடி ஓதினாள்.
அவர்களின் முன்னும் பின்னும் உண்மையான கணவன் மனைவி மற்றும் உல்லாச பயண காரர்கள் வரிசையில் நின்றார்கள். தாய்லாந்து விமான நிலையம் மாதுளம்பழச் சுளை போல அழகாகவும் ஈரமாகவும் இருந்தது. ஆனால் மகேந்திக்க வேர்த்து கொட்டாத குறைதான். இது எதையும் ரசிக்கும் மனநிலையில் அவன் இல்லை. இதற்காக இன்னமொரு முறைதான்  வந்து போக வேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.  
ஏதோ மூக்கை பொத்திக்கொண்டு பேசுவது போல ஒரு பெண்  ஒலிபெருக்கியில் பேசினாள். கனிதா நெஞ்சில் கையை வைத்து பெருமூச்சு விட்டபடி தலையை முகட்டை நோக்கி உயர்த்தினாள். மகேந்திக்கும் ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டது என்று மட்டும் தோன்றியது. ஆனால் என்ன என்று புரியவில்லை .

அவள் நெற்றியில் கையை வைத்தபடியே படியே ' எங்கிட விமானம் வேற இடத்தில நிக்குதாம் ஏதோ இயந்திர கோளாறாம் குறித்த நேரத்திற்கு வெளிக்கிடாதாம் எண்டு சொல்லுறாங்கள். சரியான நேரத்திற்கு போகாட்டி மொஸ்கோவில இருந்து உக்கிரையின் போற  ஏற்பாடுகள் எல்லாம் பிழசை;சுப்போகும் . இப்ப என்ன செய்யிறது எண்டு தெரியேல்ல இரு வாறன் அப்பாவுக்கு போன்பண்ணி கேப்பம் என்று அவ்விடத்தை விட்டுப் போனாள். சற்று நேரத்திலேயே திரும்பி வந்தாள். முகத்தில் சலிப்பு தெரிந்தது.
'அப்பா திரும்பி வரட்டாம் பிறகு யோசிப்பம் எண்டு சொல்லுறார் ரிக்கற் காசும் திரும்பி எடுக்க முடியாது அவ்வளவுதான் 'என்றாள். எப்படியாவது போய் சேர வேண்டும் என்று மகேந்தியும் இப்படி இப்படியான பாதையில் இப்படி இப்படியான வேளையில்தான் போக வேண்டும் என்பதாய் அவன் முகவர்களும் செயற்பட்டார்கள். இதனால் அவன் அவர்கள் சொல்லும் மகுடிக்கு ஆடவேண்டியவனாய்  கனிதா பின்னால் குனிந்தபடி நடந்தான்.  
'இனி தாய்லாந்தில் இருக்க முடியாது விசா முடிந்து விட்டது அருகில் இருக்கும் கம்போடியாவுக்கோ வியட்னாமுக்கோ போய் விட்டு மீண்டும் வரலாம் அல்லது அங்கிருந்து முயற்சிக்கலாம் '.என அப்பா சொன்னதாக கனிதா மகேந்திக்கு சொன்னாள்.
அங்கு இருந்த மேலும் சில பயணிகளையும்  மகேந்தியையும் அன்று இரவே பெரு நதி ஒன்றை கடந்து வேறு ஒரு நாட்டிற்குள் கொண்டு வந்து சேர்த்;தார்கள். அது எந்த நாடு என்று தெரியவில்லை தெரிந்தும் செய்வதற்கு ஒன்றும் இல்லை . பயணம் முடியும் இடத்தில் படுத்தெழும்ப வேண்டியதை தவிர வேறு எதுவும் அவர்கள் கையில் இல்லை .ஆங்காங்கே பல இலங்கையர்கள் பல முகவர்களால் ஓட்டம் தடைப்பட்டு விட்ட காரணத்தால் தொழுவத்தில் கட்டிய குதிரைகள் போல கட்டி வைத்து  சாப்பாடு போட்டுக்கொண்டு இருந்தார்கள். கலியாணத்திற்கு வந்த சிலர் இடையில் தாலிகட்டிக்கொண்டார்கள். கட்டிய தாலியையும் சிலர் கழற்றினார்கள். இது பாதாள உலகம் பாவ புண்ணியம் எல்லாம் அகலம்  என்பது போல அநாகரிகம் நடந்தேறியது.  
பூமியில் இருக்கிறோம் என்று மட்டும் தெரியும் எந்த நாடு என்று தெரியாமலே இரண்டு நாட்கள் கழிந்தன. கூட்டிக்கொண்டு வந்தவர்கள் மூச்சு பேச்சு காட்டாமல் இருங்கோ வெளிய திரிய வேண்டாம் எல்லா சாமான்களும் இருக்கு சமைத்து சாப்பிடுங்கோ என கூறிவிட்டு போய்விட்டார்கள். பார்ப்பதற்கு இந்த நாட்டு மக்களும் தாய்லாந்தக்காரரின் தங்கையின் பிள்ளைகள் போலவே இருந்தார்கள். ஆண் பெண் இருவரும் இரு வேறு முறையிலேயே வணக்கம் சொன்னார்கள். அதாவது தாய்லாந்து கலாச்சாரத்தில் ஆண்கள் 'சபாடிகாப்' என்றும் பெண்கள் 'ச..பா..டி..கா.......' என்று அரை மைலுக்கு இழுத்தும் வணக்கம் சொல்வார்கள். இது வியட்னாம் இல்லை என்று மட்டும் தெரிந்தது. தாய் எழுத்து போலவே எழுத்து  இருந்தது. வியட்னாம் எழுத்து ஆங்கில வடிவ எழுத்து என யாரோ எப்போதோ சொன்னது நினைவில் வந்தது . மூன்றாவது நாள்தான் பிரஞ்சு கொலனியாக இருந்த லாவோஸ் என்னும் புகையிரதம் இல்லாத ஆனால் இலங்கையை விட மூன்று மடங்கு பெரிய நாடு என தெரிய வந்தது. தலைநகரம் வியன்ரியன். இங்குதான் தாங்கள் இருக்கிறார்கள் என்றும் கண்டு கொண்டார்கள். குட்டி நாடுகாண் பணயம் முடிவுக்கு வந்தது.
பிலாக்கொட்டை குருவியை தவிர எல்லா எல்லாவற்றையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டும் பசி தாளாத நாடு.  பாம்புப் பயம் இல்லை தின்றே அழித்து விட்டார்கள். இப்போது  நாய்க்கறிக்கு நல்ல மவுசு . ய}னை மட்டுமே புண்ணியம் செய்த பிறவி அதுவும் எத்தனை நாளுக்க என்பது சந்தேகமே.
அரிசியை நீத்துப்பெட்டியில் வைத்து அவிச்சு அதை கவிச்சு என்று அழைத்து  மூங்கில் குருத்து அவிச்ச தண்ணீரில்  நனைச்சு நனைச்சு சாப்பிட்டார்கள். மழை இல்லாத காஞ்ச பிரதேசத்தில் தான் பஞ்சம் வரும் என்று நினைத்தவனுக்கு இங்கே வந்ததும் தான்  வறுமைக்கு காரணம் அறிவைப் பயன்படுத்தாத நிலைதான்  என்று புரிந்தது.
சிலு சிலு என ஆண்டு முழுக்க மழை. சுடு வெய்யிலோ சுவிஸ் குளிரோ இல்லாத இடைநிலை வெப்பம் இதனாலேயே அவர்கள் தேசிப்பழம் போல மஞ்சள்  நிறத்தில் தகதக என்று இருந்தார்கள் .   ஆனாலும் என்ன  முயற்சி இல்லாமையால் வறுமை. பாடு படுபவர்க்கே இந்த பாரிடம் சொந்தமையா என்ற பாட்டுதான் நினைவில் வந்தது.
இன்னுமோர் சுவாரசியம்  இயற்கை பிறப்பு சம நிலையில் சிறு கோளாறு பெண்கள் பெற்ற பிள்ளைகள் பெரும்பாலும் பெண்களாகவே இருந்தார்கள். இதனால் ஆண்களுக்கு அல்ல பெண்களுக்கே அதிக மவுசு மஜோறிட்டி யாரோ அவர்கள் தான் எல்லாம் என்பதற்கு இன்னுமோர் உதாரணம். பெண்களே அதிக தொழில் துறையில் அதிதியாக இருந்தார்கள். பொருளாதாரம் அவர்களாலேயே வளர்ந்து வந்ததால் ஆண்களிலும் பெண்களே அதிகம் விரும்பப்பட்டார்கள்.
ஒரு ஆண் ஒன்றேகால் பெண்ணக்கு இணையாக இருந்தமையால் ( இது கணித கணக்கு எனக்கு தெரிந்தது தமிழ் கதைதான்) அவனில் நம்பிக்கை குன்றி விட்டிருந்தது கட்டாக் காலியாக உணரப்பட்டான். இதனால்  அவன் பொறுப்பின்றிய சோம்போறியாகினான்.

முயற்சி குன்ற முடிவு பஞ்சம் என்றாகியது. விசித்திரமான அனுபவம் ஆனால் பயங்கரமான அனுபவங்களை கடந்து வந்தமையால் மகேந்திக்கு இது எருமை மாட்டில் பெய்த மழை போல இருந்தது.  இங்கு எத்தனை நாட்களோ என மனம் விட்டுப்போனது. மூத்த பத்திரிகையாளர் கோமல்  'திரும்பிவராட்டி கூட பறவாய் இல்லை என்று நினைச்சா எங்கேயும் பயமின்றி போகலாம்' என்று சொன்னது போல .
சொந்த நாட்டுக்கு போகாம எங்க போனாலும் பரவாய் இல்லை என்று தோன்றியதால் பொறுமையாக இருந்தான்.  ஆனாலும் யார் கண்டார் எந்த பாதையும் இறுதியில் சொந்த நாட்டிலும் போய் முடிவடையலாம் என்று நினைக்கும் போதுதான் வேதனை நெஞ்சை வாட்டியது.
வலியே மனிதன் எவ்வளவு தனிமையானவன் என உணர்த்தியது  தாயின் நிணலை பிரிந்த இந்த நாட்களில் பழுத்து விழுந்த இலை போல பச்சையமான பாச வார்த்தைகளுக்கு  ஏங்கினான்.
பசிக்கும் போதும், பார்க்காமல் நிமிர்ந்து தலையில் இடிக்கும் போதும் ஏன் நித்திரை இன்றி முழிக்கும் போதும் தாய் நினைவு வந்து வாட்டியது. அன்னையின் சுற்று வட்டம் போல் அழகான சுகம் எங்கும் இல்லை என்பதை முதல் முதலாய் உணர்ந்தான்.
எது எங்கே இருக்கிறது என்று தெரியாமல் இருட்டில்  தேடி திரிவது போல மனம் சலித்தது. சமாதானமாக வாழ உகந்த புத்த மத நாடான லாவோசில் இருந்து மீண்டும் பயணம் என்று கூறப்பட்டது ஆனால் எங்கு எப்போது என்று மட்டும் தெரியாது. பயணம் என்றதும் பயமும் வந்து ஒட்டிக்கொண்டது விமானம் மட்டுமல்ல  விமான நிலையமும் அந்தரத்தில் பறப்பது போல உணர்ந்தான்.
வீடு வரா விட்டாலும் அதற்குள் இருந்து  வெளியே வந்தால் போதும் என இருந்தது.  அழகாக ஆனந்தமாக இருக்க வேண்டிய பறப்பு அனுபவம் முச்சந்தியில் முனிக்கு கழித்த  இனிப்பு பணியாரம் போல கிட்ட போகவே பயமாக இருந்தது. என்ன ஆச்சரியம் மீண்டும்  அதே கனிதாவோடு கணவன் வேசம் போட்டு கழுத்தில் மாலை போடாத குறையாய் அறுக்கக்கொண்டு போன ஆடு போல தாய்லாந்து விமான நிலையத்தினுள் தள்ளி விட்டார்கள்.
அவனது படத்தை அவனாலே நம்ப முடியவில்லை கோட்டு சேட்டு ரை சப்பாத்து எண்டு  காவல் கொட்டில் வெருளியின் நினைவு தான ஞாபகம்; வந்தது. இதை இங்குள்ளவர்கள் வேற நம்ப வேண்டும் என்று தேசிக்காய் குத்தின வேம்படி வைரவர் வரை பூசைகள் வேற செய்து முடிக்கப்பட்டு இருந்தது.
இவனின் எள்ளலை கண்ட ஏஜென்சி அடிக்கடி 'தம்பிக்கு கஸ்டம் தெரியேல்ல' என்று கடிந்து கொண்டு இருந்தார். கனிதா இம்முறை முன்பை விட ஆடைக்குறைப்பு செய்திருந்தாள். எல்லாம் இராஜ தந்திரம் நல்ல பொண்ணுதான் நாதாரித்தனமான மூளை. போடிங் காட் பார்த்து விடுகிற நேரம் வந்தது. ஏற்கனவே பணம் உள்ளே பாய்ந்து விட்டது என  அலுவலர் சுடுதண்ணி குடிச்ச நாய் மாதிரி அங்கும் இங்கும் ஓடி திரியும் போதே தெரிந்தது. அப்பிரிவில் வேலை செய்த பதினாறு பேருக்கும் பணம் பட்டுவாடா  செய்திருந்ததால் குந்தி இருந்து குடும்பம் நடத்தினாலும் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் எனத் தோன்றியது.  
'இம்முறை எல்லாம் இறங்கும்' என்று ஏஜென்சியும் சொல்லி விட்டார். அவரை முக்காவாசிப்பேர் அரைவாசிக்கடவுளாக நம்பினார்கள்.  தோட்டக்காரனோட தோடங்கா ஆய வந்த கள்ளனுக்கு என்ன பயம். பணியாளரை மட்டுமா விலை கொடுத்து வாங்கினார். பாதி கடவுள் பயணிகளையும்  விலை கொடுத்து வாங்கி விட்டாரோ என்பது போல பதினேழு  கறுத்த தலை சோடிகளுடனும் தனியே தலையை சொறிந்தபடியும்  ரியூப் லைற் வெளிச்சத்திற்கு வந்த பூச்சி  மாதிரி எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியாமல் வந்து கூடி விட்டார்கள். சும்மா சொல்லக்கூடாது பார்க்க பெருமையாய் தான் இருக்கு  ஆனால் பாவி ஏஜென்சி பேராசையில கன பேரை ஒண்டா போட்டு எல்லாத்தையும் கெடுக்க போறானே என சுயநலமாக மனம் பதைத்தது.

 

தொடரும் 21


 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகுதி 21

 

எழுதியவர் பசுந்திரா சசி.  

 

சும்மா பார்க்கவே எல்லோரும் களவுக்கு போய் கண்முளிச்ச ஆக்கள் போல தினுசு தினுசா தங்களுக்கும் பயணத்திற்கும் தொடர்பு இல்லாதது  போல பாவனை செய்து கொண்டு நிற்;பதே இவர்கள் எல்லோரும் ஒரு பட்டி என்று காட்டிக்கொடுத்தது. .
பொறுப்பதிகாரி பரம ரகசிய அசைவுகளை சைகை மூலம் பதிவு செய்ய அதை வார்த்தைகளாய் கனிதா படித்தாள். கனிதா மட்டுமே தான் சைகை உணர் கொம்பு அன்ரனா அங்கே  அவள் அதை உள்வாங்கி எதிர்வினை ஆற்றினாள்.
என்ன ஆச்சரியம். அட வைச்ச முட்டை எல்லாம் பொரிச்சுட்டது போல  பதினேழு பேரும் விமானத்தில் ஏறி விட்டார்கள். இப்போது குஞ்சு எல்லாம் ஆகாயத்தில,  கோழி மிதிச்சு குஞ்சு சாகாம இருந்தா போதும் என்று இருந்தது. ஆனாலும்  விமானத்தில் இருந்தால் மேல் லோகம் கிட்ட என்பது அப்போது எவருக்கும் தெரிந்திருக்க வில்லை .
திட்டமிடட்ட படி எந்த அசம்பாவிதமும் இன்றி விமானம் உக்கிரையின் வந்து சேர்ந்து விட்டது.  
'அப்பிள் பழமும் அவிச்ச இறச்சி உருண்டையும் காலை உணவாக தங்கி இருந்த விடுதியில் பரிமாறினார்கள். அந்த ஊர் போலவே உணவும் விசித்திரமாக இருந்தது. போகும் பக்கத்தால் வருவதும் திறக்கும் பக்கத்தால் மூடுவதும் என எல்லாம் தலை கீழாக நடைமுறையில் இருந்தது.
எல்லாம் பழக்கம் தான் காரணம் என்றும் மனிதனால் உருவாக்கப்பட்டதே எல்லாம் என்றும் எண்ண எண்ண கடவுளும் கரைய முற்பட்டார். சம உடைமைப் பொருளாதாரம் கொண்ட றஸ்ய நாட்டின் சாயல் எல்லாவற்றிலும் தெரிந்தது.
ஏனோ மகேந்தி வர வர குறுகி கறுத்துக்கொண்டு வந்தான். ஊரில் இவன் நல்ல சிவலை இங்கும்  அவன் அவ்வாறுதான் இருந்தான் ஆனால் இங்குள்ளவர்கள் இவனை விட வெள்ளையாகி இவனை கறுப்பனாக்கி விட்டார்கள். உயரமும் அவ்வாறுதான். அழகான பெண்களே  கண்ணில் தட்டுப்பட்டு போனார்கள். குளிர் பார்க்க அழகாகவும் பட்டால் ஊசிபோல குத்துவதாகவும் இருந்தது.  ஆனால் இவர்கள் தான் நாகரீக கோமாளிகள் போன்ற  விமான பயணிகள் ஆச்சே குளிராவது குத்திறதாவது.
இரண்டு நாள் கழித்து விடுதிக்கு ஒருவர் வந்து உயிரை  உறைய வைக்கும் செய்தியை சொல்லிவிட்டுப்  போனார்.

'இனி நடை தான், போடர் கடக்க வேண்டும'; என்றார். அட இவ்வளவு லச்சத்தை கொடுத்து நடந்தா போக வேண்டும் இதை எல்லாம் அம்மாவிடம் சொல்லி பேச்சு வேண்டி கொடுக்க ஏலாது.  அழுது சாதித்த காலம் எல்லாம் அம்மா மடியுடன் போய் விட்டது.
நடப்பதற்கான நாள் வந்தது.  சந்திர மண்டலத்திற்கு போகிறவர்கள் போல எல்லோருக்கும் கனமான உடுப்புகள் கொடுக்கப்பட்டது. குளிருக்கு விறைக்காதாம். உண்மைதான் வேர்த்துக் கொட்டியது.
கம்பு குச்சி  பாவைபிள்ளைக்கு கடுதாசி சட்டை போட்டது மாதிரி கூட வந்த சில பெண் புரசுகளுக்கும் உடை போட்டு முடி வெட்டப்பட்டது. ஒரு பெண் கல்யாணப் பெண். புருசனிடம் போன சீதையே இப்படி கஸ்டப்பட்டு இராமனை அடைந்திருக்க  மாட்டாள். அவ்வளவு கடினமான பயணம். இவை தெரிந்திருந்தும் மனைவியை துன்புறுத்துவதும் துரோகம் செய்வதும் ஆங்காங்கே நடக்கத்தான் செய்கிறது.
விழுதல் என்பது எழுகையே என்பதற்கிணங்க  எல்லோரும் தயாராகினார்கள். கனிதா இனிதே விடை பெற்றுப்  போனாள் . ஆனால் மகேந்தி உட்பட பலர் நினைவில் நிலவாய் நின்றாள். நடை பயணம் இரவு  ஆரம்பமாகியது. பதினேழு  பேரில் ஒன்பது பேர் வேறு எற்பாடு செய்து இருப்பதாக கூறி விடுதியிலேயே தங்கி விட்டார்கள்.
மீதி எட்டுப்  பேரில் இருவர் பாக்கிஸ்தானியர்கள். இரு பெண்கள் மகேந்தி மற்றும் சிலோவாக்கியாவில் பல காலம் பயணத்திற்காக காத்திருந்த ரூபன், புருசோத் மற்றும் ஆனந்தன் ஆகிய இளைஞர்களுடன் ஒரு வழிகாட்டி கூட வந்தார்.வரும் போது இந்த பயண விபரம்  தெரிந்த சிலோவாக்கியாவில் இருந்து உதவிக்காக வந்த வயதான வெள்ளைக்கார ஐயா ஒருவர் ' கடுமையான பனி  கவனமாப் போங்கோ ' என்று எச்சரிக்கை செய்து அனுப்பினார்.
கடுமையான  இரவாகையால் கண்கள் வெளிச்சத்தையே அதிகம் தேடியது குளிரை மறந்து விட்டிருந்தது. உடுப்பு வேற கூட்டுப்புழு போல இருந்ததால் குளிர் தெரியவில்லை. பாதைகள் ஒன்றும் அங்கே இல்லை இவர்கள் போவதே பாதையாகியது.
சர்வாதிகாரி கிட்லர் சொன்னதுதான் ஞாபகம் வந்தது. 'பாதை இல்லை என்று நிற்;காதே நீ நடந்தால் அதுவே பாதையாகும்' எப்படி அவரின் பாதை அழிவுக்கு இட்டுச் சென்றதோ அவ்வாறே இங்கும் ஆபத்து இருக்குமோ என ஏக்கம் தொற்றிக்கொண்டது.
நடடா ராசா நட என்று நடந்து ஒரு ஆற்றினை அண்டிய பகுதியை வந்து சேர்ந்தோம். குளிர்  குடிச்சுட்டு வந்த அப்பாவை கூட்டிவந்த அங்கிள் போல உரிமையோடு சுவாசம் வளியே உட்சென்று கொண்டு இருந்தது.  அந்த வயதானவர் சொல்லி விட்டிருந்தார்.'குளிருது எண்டு ஒருபோதும் குந்தி இருக்காதேங்கோ அது தான் ஆபத்தானது. எதையாவது செய்;து கொண்டே இருக்க வேண்டும் அப்போதுதான். உடல் வெப்பமாக இருக்கும.;' என்று .
வெள்ளைகாரன் இவ்வளவு வளர்ந்ததற்கு காரணமும் இந்த குளிர் போலவே  பட்டது  எப்போதும் எதையாவது செய்து கொண்டே இருந்தான். நாமோ நல்லா மூக்கு முட்ட இறுக்கி போட்டு குந்தி குந்தி எழும்பினதால தான் இங்கு இருந்து வந்து  எங்கள் நாடுகளை பிடித்து ஆட்சி செய்திருக்கிறார்கள்.
பனிப்பொழிவு பலமாக இருந்தது மணலில் நடந்தது போல கால்கள் நோவெடுக்க ஆரம்பித்தது ஆண்களுக்கே இந்த நிலை என்றால் பாவம் பெண் பிள்ளைகளை சொல்லத்  தேவை இல்லை. விழுந்து எழும்பி நடந்து வந்தார்கள். காதுமடல் மூக்கு துவாரங்கள் இருக்கா இல்லை இடையிலே அறுந்து விழுந்து விட்டதா என்றெண்ணும்படி விறைத்து விட்டிருந்தது.
ஊரில் களைத்தால் தண்ணி விடாய்க்கும் இங்கும்  களைத்தது ஆனால் தண்ணி மட்டும் விடாய்க்கவில்லை. உணவும் தேவை இன்றியே இருந்தது தேவை எல்லாம் சிறு சூரிய ஒளி வெப்பம். விரல்கள் கண் முளிக்காத எலிக்குஞ்சு போல சிவந்து சுருங்கி நடுங்கியபடி இருந்தது. விடிந்து விட்டிருந்தது ஆனாலும்  வெய்யிலை காணவில்லை. குளிர் காற்று வீச ஆரம்பித்தது சற்று நேரத்தின பின்  துருவிய தேங்காயத்; துருவல் போல பனி கொட்ட ஆரம்பித்தது.
ஆற்றைக்  கடக்க வேண்டும் ஆனால் இப்போது இல்லை மறு கரையில் வேறு ஒரு பகுதியினர் வரும் வரை ஒளித்துக்  காத்திருக்க வேண்டும.; நெருப்பு மூட்டலாம் என்றால் எங்கே மூட்டுவது. சாமி ஆடும் சாத்திரியார் மாதிரி வாயிலையோ கையிலயோ தான் தீ மூட்ட வேண்டும். தரை என்று ஒன்று கண்ணுக்ககெட்டிய தூரம் வரை இல்லை. பனியே மூடி கொட்டி இருந்தது.
ஒரு இரவும் ஒரு பகலும் கழிந்தது யாரையும் காண வில்லை. உணவு முடியும் தறுவாயில் இருந்தது. மல சலத்திற்காக உடைகளை வேறு கழற்றவேண்டி வந்ததால் குளிர் உட்சென்று இருந்தது.  குளிப்பு முழுக்கு மட்டுமல்ல கை கழுவவும் நீரில்லை. பனிக்கட்டியில் நீர் மட்டுமல்ல குளிரும் கலந்திருந்தது கையை கை உறையில் இருந்தது எடுக்கவே கொல்லக் கொண்டு போவது போல இருந்தது. கை விரல் அசைக்க முடிந்ததே தவிர தண்ணிப்போத்தல் மூடியை தானும் திறக்க முடியவில்லை.
குளிர் மெல்ல மெல்ல அனைவரினதும் உடலை சந்திரகிரகணம் போல கவ்விக்கொண்டு வந்தது. கால்கள் விறைத்து வீங்க ஆரம்பித்தது விரல்களை ஆட்ட முடியாமல்  விறைத்தது.
மூன்றாம் நாளும் பனியில் கிடந்ததால் அவிச்ச வத்தாளங்கிழங்கு போல உடுப்பு உரஞ்சியே உடலின் தோல் உரிய ஆரம்பித்தது.  கூட்டிவந்தவர் மிகவும் இளைத்து விட்டார் அவருக்கும் உடம்பு என்று ஒன்று இருக்கல்லவா, கூட வந்த பெண் பிள்ளைகள் இனி எம்மால் தாங்க முடியாது திரும்பி போவோம் என்று  அடம் பிடித்தார்கள். இதுதான் தாயம் என்று  வழிகாட்டியும் பிள்ளைகளுக்கு வழி தெரியாது என்று அவரும் அவர்களுடன்  திரும்பி போய் விட்டார்.   
இறுதியில் இரு பாக்கிஸ்தானியர்களுடன் மகேந்தி ரூபன் புருசோத் அனந்தன் ஆகியோரே மிச்சம் . எவ்வளவு பணத்தை கட்டி இவ்வளவு கடினத்தின் மத்தியில் இது வரை வந்து விட்டோம் இன்னும் கொஞ்சம் பல்லை கடித்து இருந்து விட்டால் எல்லாம் சரி வந்தவிடும் என நாங்கள் திரும்பி வரவில்லை என்று நின்று விட்டோம். வழிகாட்டியாய் வந்தவர் போகுமுன் ' ஒன்றுக்கும் யோசிக்காதேங்கோ இண்டைக்கு விடிய கட்டாயம் அவை வருவினம்  இப்படி பனிக்குள்ள நாங்கள் கிடக்கிறம் எண்டு  அவைக்கு நல்லா தெரியும்  உங்களை ஆற்றைக்  கடக்க வைச்சு கொண்டு போய் பஸ்சில ஏத்தி விடுவினம்,உடுப்புகளை மட்டும் கழற்றிப்போடாதேங்கோ' என்று சொல்லிவிட்டுப் போனார்
எங்காவது நெருப்பு மூட்டுவோம் என்று தேடினால் இறுதியில் ஒரு ஆற்றோர பாறை ஒன்றில் ஒதுக்கியிருந்த  சருகுகளை எடுத்து குவித்து பச்சை குழைகளையும் முறிச்சு சேர்த்து ஆயத்தம் செய்தான் மகேந்தி.
இரவு படுக்கையும் இல்லை இன்று இரவும் இங்கே தான் களைப்பு குளிர் நித்திரை என வாழ்ககை போதும் என்று ஆகிவிட்டது.  நேரம் மதியமாகிக்கொண்டு இருந்தது. பனி கொட்டுவது கொஞ்சம் விட்டிருந்தது. ஆனால் அருகில் நின்ற பற்றை  மரம் என எல்லாவற்றையும் மூடி பனி படிந்திருந்தது.
தண்ணி விடாய்த்தால் பனியை அள்ளி வாயில் போட வேண்டியதுதான் ஆனால் குளிரையும் தாங்கிக்கொள்ள வேண்டும் சுள்ளிகளை சேர்த்து வைத்த விட்டு லையிற்றரை தேடினான். சறுட்டு போல முதுகுப் பையில் தட்டுப்பட்டது. லையிற்றரை எடுத்து அவனால்; அதனை பற்ற வைக்க முடியவில்லை விரல்கள் பிஞ்சுவிடும்போல இருந்தது. மற்றவர்கள் நனைந்த கோழி போல ஒட்டி நடுங்கிக்கொண்டு இருந்தார்கள். அவர்களை ஏதும் கேட்காமல் தானே   விரலை ஊதி இரு கையையும் உரசி உணர்ச்சி வர வைத்தான். கை விறைத்து விட்டது கையுறையால் வெளியே எடுத்தால் விரல் மேலும் நோ எடுத்தது அவனுக்கு.
முடியாமல்  அருகில் இருந்தவர்களிடம் கொடுத்து கொழுத்தச் சொன்னான். அவர்களும் முயன்று பார்த்தார்கள். முடியவில்லை இறுதியில் பாக்கிஸ்தானியன்  பற்ற வைத்தான். ஒரு மாதிரி நெருப்பு புகைந்து எரிய ஆரம்பித்தது. மெல்லச் சூடு வெளிவர ஆரம்பித்ததும் கை உறை கால் சப்பாத்துக்களை கழற்றி விட்டு புகையில் கை காலைகளை  சூடு காட்டினார்கள்.
ஓரளவு கை கால் விரல்கள் உயிர் பெற பிரளயம் ஒன்ற வந்து தலையில் விழுந்தது. நெருப்பு சூட்டில் மரத்தில் மேலே படிந்திருந்த பனி உருகி உருகி கீழ் கிளைiயில் படிய கீழ் கிளை பாரம்' தாங்க முடியமல் முறிந்து பனிகட்டியோடு அவர்கள் மேல் விழுந்தது.
மகேந்தியின் கால் மரத்தினுள் அகப்பட்டது. மற்றவர்களை பனி மூடிவிட்டிருந்தது . நெருப்பு உயிரை விட்டு விட்டது. கொண்டு வந்த உடுப்புகள் பைகள் எல்லாம் பனியால் மூடி மரக்கிளையின் கீழ் கிடந்தது. பதறிக்கொண்டு எழுந்து உதறினோம். சிறு உராய்வும்  தோலை கிழித்து இரத்தம் கசிந்தது. ஒருவாறு உடுப்புகளையும் வெளியே எடுத்து விட்டோம்.பொழுது படத்தொடங்கியது.  எல்லோர் முகங்களிலும் ஒரு வித பீதி குடி கொண்டது.
வயதானவர் சொல்லியிருந்தார்'வெட்டையிலதான் நெருப்பு மூட்ட வேணும் என்று. சிறு தவறும் இப்டி உயிருக்கு உலை வைக்கும் அளவு மோசமான விளைவை தரும்' என்று. அதனை  முதல் முதலாய் உணர்ந்தான் மகேந்தி.
ஒட்டிக்  காட்டிய ஆறு என்று ஒன்று இருந்தது ஆனால் அங்கே தண்ணி ஒன்றும் ஓடவில்லை இதனால் இலகுவில் கடந்து விடலாம் என்று நினைககக்;ககூடாது. அங்கு தான் ஆபத்து காத்திருந்துது ஆறு எது கரை எது என்று தெரியாமல் பனி மூடி நிறைந்திருந்தது இதனால் அதன் அருகில் போகவும் பயமாக இருந்தது எவ்வளவு ஆழமோ தெரியாது உள்ளே உறை நிலை சீதோசணத்தில் நீர் ஓடிக்கொண்டு இருக்கும். பனிக்கட்டி உடைந்து கால் உள்ளே போனால் அவரே தான் வெளியே வர வேண்டும் உதவிக்கு யாரும் அருகில் போனால் போறவரும்  சேர்ந்தே உள்ள போக வேண்டி வரும்.
பனி பட்டால் தட்டி துடைத்து விடலாம் குளிர் நீரில் நனைந்தால் விறைத்து ஆளே முடிந்து விடும். கம்பளி உடுப்புகள் குளிருக்கு நல்லது என்றாலும் அவற்றில் ஈரம் பட்டாலோ இலகுவில் காயாது. இவர்கள் ஆளுக்கு மூன்று சோடி உடுப்பு வீதம் போட்டிருக்கிறார்கள். ஈரமானால் இன்னுமொருவரை சுமக்கும் சுமை ஏறிவிடும். மனம் மரணத்தை நோக்கி பயணிப்பதாக கண்கள் நடுங்கின.
பொழுது பட்டு வானம் குளிரால் மூடி இருந்தது . பையில் இருக்கும் சிறு அளவு உணவை எடுத்து சாப்பிடநினைக்கும் போதும்  குளிர் பயமாக இருந்தது. சொண்டுகள் வெடித்து விட்டிருந்தது தொட்டுப்பார்க்கும் போது யாரோ ஒருவரின் சொண்டு போல தொடு உணர்வின்றி மரத்து இருந்தது நெஞ்சுக்கூடு இதயத்தை இறுக்கிக்கொண்டு வருவது போல தோன்றியது. திரும்பிபோகவும் பாதை தெரியாது எங்கள் கண்களில் ஏக்கமும் மரணபீதியும் தொற்றிக்கொண்டது.

இதற்குள் புருசோத் ' மச்சான் இனி பிடிபட்டா கொடுக்க பேரும் இல்லை என்றான் ' அவன் இதற்கு முன் மூன்று முறை பிடிபட்டு விடுவிக்கப்பட்டவன். இரண்டு முறை  அண்ணா தம்பி போன்றவர்களின் பெயரை கொடுத்து தப்பி விட்டான் மூன்றாம்முறை பேர் இல்லாமல்  அக்காவின் பெயர் பிறந்த திகதியை கொடுத்து புரட்சி செய்தவன் . இனி பிடிபட்டால் என்ன செய்வது என்ற யோசனை அவனுக்கு இதில் சுவாரசியம் என்ன என்றால் மூன்று முறையும் ஒரே சிறையில் தான் இப்படி பெயரை மாற்றி கொடுத்தான். பெயர் கேட்ட அதிகாரி அழுவாரைபோல் பொருமி வெடித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது முறைத்து முறைத்து பார்த்து அவனின் மொழியில் திட்டியிருக்கிறான்
எப்போது அவர்கள் வருவார்கள் எப்போது மறு கரைக்கு போகலாம் என்பதை விட எப்போது வெப்பத்தை அணுகலாம் என்றே மனம் ஏங்கியது . பார்ப்பதற்கு இறந்த தாயை தேடும் இறக்கை முளைக்காத குருவி குஞ்சுகள் போல காத்திருந்தோம். நன்றாக இருட்டி விட்டது பூமி மேகக்கூட்டம் போல வெள்ளையாகவும் மேகம் இருட்டாகவும் இருந்தது.  தொலைவில் சிறு வெளிச்சம் மின்னி மின்னி மறைந்தது. எல்லை பாதுகாப்பு படையினர் இரவு வேளைகளில் ரோந்து வருவார்கள் கவனமாக இருக்க வேண்டும் பிடிபட்டால் பாம்பும் ஏணியும் விளையாட்டில் பாம்பின் வாயில் அகப்பட்டது போல மீண்டும் இலங்கைக்கே அனுப்பி விடுவார்கள் என்ற பயம் பற்றிப் பிடித்துக் கொண்டது.
அந்த வெளிச்சம் அண்மித்துக்கொண்டிருந்தது. பாக்கிஸ்தான் நாட்டுகாரர்கள் இருவரும் சற்று உரமாக இருந்தார்கள். மகேந்தியுடன் ஒட்டிக்கொண்டு இருந்த ஆனந்தன்  குளிர் தாங்க முடியாமல் நடுங்கியபடி அனுங்கிக்கொண்டு இருந்தான் அவனை  சத்தம் வெளிய வராமல் சற்றுநேரம் இருக்குமாறு கண்ணீரால் கெஞ்சினான் மகேந்தி.
அது அவனின் காதில் விழுந்ததா என்றும் தெரியவில்லை.அனுங்கலில் எந்த மாற்றமும் இல்லை. இப்போது அந்த வெளிச்சத்தை காணவில்லை அணைத்த விட்டு வருகிறார்களா இல்லை திரும்பி போய்விட்டார்களா என்று ஊகிக்க முடியாமல் இருந்தது. முறிந்த மர கொப்பின் பின் ஐவரும் பதுங்கிக் கொண்டார்கள்
நேரம் கடந்துகொண்டு இருந்தது எவ்வளவு நேரம் தான் பனியில் தலையை புதைத்து  கிடப்பது என்று மெல்ல தலையை உயர்த்தி பார்த்த விட்டு எழுந்து அமர்ந்தார்கள். தொலைவில்  பேசுவது கேட்டது. மீண்டும் ஒருமிக்க தரையில் படுத்துக் கொண்டார்கள்.
அப்பேச்சு நெருங்கி வந்துகொண்டிருந்தது. மநே;தி அனுங்கிய ஆனந்தனை இறுக அணைத்தபடி அவன் வாயை பொத்தி நெஞ்சை தடவி விட்டு அனுக்கத்தை குறைக்க முயன்றேன். எந்த பலனும் இல்லை அவன் சுயநினைவு இழந்தவன் போலவே அனுங்கினான். பேச்சு மிக அருகில் கேட்டது. எல்லாம் சரி இனி நாடுதான் என நினைத்து கண்களை மூடிக்கொணடோம். எங்கள் காதுகளை எங்களாலேயே நம்ப முடியவில்லை பேச்சு  தமிழில் கேட்டது. குதித்தெழுந்து 'அண்ணா.. அண்ணாh நாங்க இங்க இருக்கிறோம்' என்று கத்தினான்.
'ஓம் ஓம்  நான் ஒரு கயிற எறியிறன் அதை இறுக்கி பிடிச்சுக்கொண்டு ஆத்தில இறங்குங்கோ என்று கூறி கயிற்றை எறிந்தார் ஒருவர் எல்லோரும் கயிற்றை பிடித்தக்கொண்டு மெல்ல ஆற்றில் இறங்கினார்கள்
திடீரென ஆற்று பனிபடை உடைந்தது. மறுகரையில் நின்றவர்கள் கொற கொற என இழுத்து இக்கரைக்கு இழுத்து போட்டு விட்டு 'விடிய வேற ஆக்கள் வந்து பஸ்சில ஏத்தி விடுவினம்'  என்று மட்டும் மொட்டையாக சொல்லிவிட்டு சென்று விட்டார்கள்.
நனைந்து நடுங்கிக்கொண்டு இருந்தோம். பற்கள் கடுகடுத்தது. ஏறக்குறைய எல்லோரும் அனுங்க ஆரம்பித்தார்கள். இருவரைதவிர முன்னர் அனுங்கிய ஆனந்தன் இப்போது அமைதியாக இருந்தான்.
புருசோத் இன்னும் ஆற்றை கடக்கவில்லை அல்லது இந்த ஜென்மத்தையே கடந்திருக்க வேண்டும் கயிற்றை இறுக்கி பிடிக்காமல் இடையில் விட்டு விட்டான் ஆற்றில் பனி உடைந்து  உள்ளே விழுந்து விட்டான்  பனி பாறை மீண்டும் மிதந்து ஆற்றை மூடிக்கொண்டது அவன் உள்ளே அடங்கிப்போனான்.
இதை நாங்கள் அறியமுன் இழுத்தவர்கள் தெரிந்து கொண்டதால் தான் நிற்காமல் உடனே இடத்தை காலி செய்து விட்டார்கள்.  பொழுது விடிந்ததும் தான் இவர்களுக்கு தெரியவந்தது. ஆனாலும் அனுக்கமின்றி கிடந்த ஆனந்தனும்  இறந்த புருசோத்துடன் இணைந்தமை இனி தான் இவர்களுக்கு தெரியவரப்போகிறது.
 
சொன்னது போல் சிலர் வந்து விட்டார்கள் . இறந்த இருவரையும் நினைத்து ஒருவனின் உடலின் முன் சுற்றி அழுதகொண்டிருந்தவர்களை அழைத்துக்கொண்டு சென்றார்கள். இறந்தவனின் உடல் அங்கேயே தோண்டி புதைக்கப்பட்டது.
மகேந்தி கதையைச் சொல்லி முடித்ததும் நீண்ட பெருமூச்சு விட்டான்,சில விநாடிகள் மௌனமானான்.
மகேந்தி என்ற மக்டொனால் மகேந்திரன் தான் அனுபவித்த துன்பத்தையும் தன்னோடு வந்த இருவர் இறந்து போனதையும் சொன்ன போது என்னை அறியாமலே என் கண்கள் குளமாகின.
மகேந்திரன் சொல்லி முடித்த அகதிப்பயணக் கதையைக் கேட்ட போது அகதிப் பயணத்தில் நான் அனுபவித்த தன்பம் மிக மிகச் சாதரணமாகத் தோன்றியது.
மகேந்திரனும் கண்களைத் துடைத்துக் கொண்டான். தனது கண் முன்னால் பனிக்கட்டி உடைந்து ஆற்றில் சமாதியாகிய புருசோத்தமனையும் தனது அருகிலேயே உயிர்பிரிந்த ஆனந்தனையும்  அவனால் மறக்க முடியவில்லை.
„எனக்கு திருமணமாகி ஒரு பெண்குழந்தையிருக்கின்றது,சந்தோசமாகவிருக்கிறேன்.ஆனால் அவர்கள் இருவரையும் என்னால் மறக்க முடியவில்லையென்றான்'.
இதுவரையும் தனது அகதிப் பயணத்தை நகைச்சுவையுடனும் உவமான உவமயத்துடனும் வட்டார வழக்குத் தமிழிலும் சொல்லிக் கொண்டிருந்த மகேந்திரனின் முகத்தில் பழைய நகைச்சுவை கலந்து சிரிப்பு இல்லை.
முகம் இறுகிப் போயிருந்தது. அவனின் மனநிலையை முகம் காட்டியதால். சுவிற்சலாந்துக்கு பிறகு எப்படி வந்தனீங்கள் என்பதை அவனிடம் கேட்க மனம் வரவில்லை.
அவன் வேலையை ஆரம்பிக்கும் நேரம் வந்துவிட்டதால் என்னிடம் விடைபெற்றுச் சென்றுவிட்டான். நானும் மக்டொனால்ஸைவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தேன்.

(தொடரும்) 22
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விழுதல் என்பது எழுகையே  பகுதி 22
எழுதியவர் சிறீரஞ்சனி கனடா

எழுத்தாளர் சிறீரஞ்சனி அவர்களின் அறிமுகம்
தெல்லிப்பழையைச் சேர்ந்த ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா தற்போது கனடாவில் வாழ்கிறார். இவரது முதலாவது சிறுகதைஇ 'மனக்கோலம்'இ   ஏப்ரல் 1984 ல் ஈழநாடு பத்திரிகையில் பிரசுரமானது.
ஈழநாடுஇ தினக்குரல்இ மல்லிகைஇ ஞானம்இ நான்இ ஜீவநதிஇ உதயன்இ வைகறைஇ தூறல்இ காலம்இ காலச்சுவடுஇ யுகமாயினிஇவல்லினம்இ பதிவுகள்இ மகாஜனன் ஆண்டுமலர்கள்இ திண்ணைஇ  வுயஅயடையரவாழசள.உழஅஇ  பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரிக் கைநூல்இ தாய்வீடுஇ முகங்கள் (புலம் பெயர் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு) போன்றவற்றில் இவரது சிறுகதைகள்இ கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன.  
தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு நினைவாகஇ  
தமிழ் படிப்போம்இ பகுதி 1 ரூ பகுதி 2  எனும் இரு நூல்களை  2009லும்
நான் நிழலானால் – சிறுகதைத் தொகுப்பை (யுகமாயினி சித்தன் கலைக்கூட வெளியீடு)- 2010 லும் இவர் வெளியிட்டுள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழக பட்டதாரியான ஸ்ரீரஞ்சனி தற்போது அங்கீகாரம் பெற்ற ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் ரொறன்ரோ கல்விச்சபையின் ஒரு தமிழ் ஆசிரியராகவும் தொழில் புரிகின்றார்.



விழுதல் என்பது எழுகையே  பகுதி 22
எழுதியவர் சிறீரஞ்சனி கனடா

தொடர்கிறது...

மக்டொனால்ஸ் வேலை இப்ப சீலனுக்கு நன்றாகப் பழகிப் போய்விட்டது. ஆரம்பத்தில் இருந்த பதட்டமோ, குறித்த நேரத்தில் குறிப்பிட்டளவு வேலையைச் செய்ய வேண்டுமே என்ற ரென்சனோ அவனுக்கு இப்ப இல்லை. மனதை வேறு எங்காவது வைத்துக் கொண்டு ஓடர் எடுத்தாலும் கூட எந்தப் பிழையுமில்லாமல் எல்லாவற்றையும் செய்யும் அளவுக்கு அவனுக்கு வேலை இலேசாகி விட்டது.

'சரி, நாளைக்குச் சந்திப்பம்.' என டொச்சில் மனேஜருக்குச் சொல்லிப்போட்டு சீலன் திரும்பிய போது அவன் முன்னே சிரித்த முகத்துடன் நின்றாள், பானு.

'ஓ, பானு! நான் உங்களைச் சந்திப்பன் எண்டு எதிர்ப்பார்க்கவேயில்லை. என்ன நீங்க இண்டைக்கு வெள்ளனத் தொடங்கிறியளா? '  
பானுவைச் சந்தித்த மகிழ்ச்சி சீலனின் முகத்தில் பளிச்சிட்டது

'இல்லை, சீலன். இவற்ரை இன்சூரன்ஸ் விசயமாக் கதைக்க லோயரிட்டைப் போக வேண்டியிருந்தது. அப்படியே அங்கையிருந்து நேரை இங்கை வாறன்.'  

'ஓ, அப்ப வேலைக்கு இன்னும் ஒரு மணித்தியாலம் இருக்கு, சாப்பிட்டிருக்க மாட்டியள் , வாங்கோவன் பக்கத்திலை இருக்கிற  பீசாக் கடைக்குப் போவம் .... என்ரை ரீற்'  
 
'ஏன் சீலன், வீண் காசுச் செலவு? அதோடை நான் சாப்பாடு கொண்டு வந்தனான்.'

'சரி, அதை பிரிஷ்லை வைச்சியள் எண்டால் நாளைக்குச் சாப்பிடலாம். இப்ப என்னோடை சாப்பிடலாம் வாங்கோ. நெடுகக் காசு காசு எண்டு யோசித்தம் எண்டால் ஒண்டையும் நாங்கள் அனுபவிக்கேலாது.' என உரிமையுடன் அவளை அழைத்தான்.

சீலனுக்கு பானுவில் ஒரு தனி மரியாதையும் பிடிப்பும் உண்டு.

பக்ரறியிலை வேலை செய்யும்போது ஓடிக்கொண்டிருந்த மெசினுக்குள் கை சிக்கியதால், ஆறு மாதத்துக்கு முன்பாக, தனது வலது கையின் இரண்டு விரல்களை இழந்து போனான் அவளின் கணவன். காலம் அவனின் உடல் காயத்தை ஒருவாறாகத் தேற்றி விட்டிருந்தாலும் கூட அவனின் மனக் காயம் நாள் ஆக ஆக இன்னும் கூடிக்  கொண்டுபோற மாதிரித்தானிருக்கிறது.  விபத்தின் விளைவுகளால் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டு அதற்கான கவுன்சலிங்கும் மருந்துகளுமாக வாழ்கின்றான், அவன். அந்தச் சுமை பானுவையும் வெகுவாகத் தாக்குகிறது என்பதைச் சீலன் நன்கறிவான்.
 
வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது. ஊரில் இருந்த பிரச்சினைகளாலை பாதிக்கப்பட்டவர்களுக்கு, அங்கே கவுன்சிலிங் செய்து ஆறுதல் கொடுத்த பானு, இப்ப இங்கே, தான் படித்ததை தனக்குப் பாவிக்க முடியாமல் திண்டாடுவது கொடுமையிலும் பெரிய கொடுமைதான்.

இரண்டு சின்னப் பிள்ளைகள், மனநோயுள்ள கணவன், மிகத்துரிதமாகத் தொழிற்பட வேண்டிய மக்டொனால்ஸ் வேலை, கணவனின் இன்சூரன்ஸ் பிரச்சினை, அத்தனைக்கும் மேலாக அவன் அவளுக்குக் கொடுக்கும் மனக் கஷ்டங்கள் என அவள் படும் பாட்டை பார்க்கும் போது தன்னுடைய பிரச்சினை பெரிய பிரச்சினை இல்லை எனக் கூட பல சமயங்களில் சீலனுக்குத் தோன்றுவதுண்டு.

பானுவைப் பார்க்கும் எவரும், அவளுக்கு இத்தனை பிரச்சினை இருக்கின்றது எனச் சொன்னால் கூட நம்ப மாட்டார்கள்.  அந்தளவுக்கு அந்த முகத்தில் ஒரு அமைதியும் சிரிப்பும் எந்த நேரமும் குடிகொண்டிருக்கும்.

அவள் தான் அவனுக்கு மக்டொனால்ஸ்சில் வேலை பழக்கினாள். அப்படி ஆரம்பித்த அறிமுகம்தான் இப்ப இப்படி நல்லதொரு நட்பாக அவர்களிடையே மலர்ந்துள்ளது.

ஊரிலே பெண்களுடன் கதைப்பது என்பது, ஏதோ சந்திர மண்டலுத்துக்குப் போவது மாதிரி அத்தனை சவால், பரபரப்பு நிறைந்ததாக இருக்கும். அதனால் தான் போலும் அங்கே கண்டவுடனே காதல் வாறதாக்கும் என நினைத்த போது சீலனுக்குச் சிரிப்பு வந்தது. ஆனால், இங்கே, எந்தப் பேதமும் இன்றி ஆணும் பெண்ணும் மிக நல்ல நண்பர்களாக இருக்க முடிகிறது. ஆம், அவனும் அவளும் ஆளுக்கு ஆள் தங்களது பிரச்சினைகளைச் சொல்லி ஆறுதல் அடையக்கூடிய அளவுக்கு நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.

ஆனால் இப்ப வேலை நேரங்கள் மாற்றப்பட்டாதால் ஒரு மாதமாக அவளை அவன் காணவில்லை.

'என்ன மௌனம் சீலன், எல்லாம் ஓகேயா?', பீசாக் கடையை நோக்கி நடந்தபோது அவர்களுக்குள் இருந்த அந்த மௌனத்தைப் பானுதான் உடைத்தாள்.

'வாழ்க்கையின் வினோதங்களை நினைச்சுப் பாத்தன் பானு, இந்தப் புகலிட வாழ்வில்தான் எத்தனை வித்தியாசமான அனுபவங்கள் எங்களுக்கு.... போதாதற்கு பெயரே கேள்விப்பட்டிராத பாசைகளைக்கூட எவ்வளவு கஷ்டப்பட்டுப் படிக்கிறம். எங்கடை நாட்டிலை இருந்தது ஆக இரண்டே இரண்டு மொழிகள் தான். இருந்தும் மற்ற மொழியிலை இரண்டு சொல்லுக்கூட சொல்ல எங்களில் பலருக்குத் தெரியாது.  நாங்கள் இரண்டு மொழிக்காரரும் ஒருத்தரின்ரை மொழியை ஒருத்தர் படிச்சிருந்தால், இனப் பிரச்சினை இப்படி உச்சத்துக்குப் போய் இவ்வளவு அழிவு நிகழாமல் இருந்திருக்குமோ என்றெல்லாம் இப்ப என்ரை மனம் தத்துவ விசாரணை செய்கிறது, பானு' என்றான்.

'ஒன்றும் படிக்கக்கூட வேண்டாம். ஒருத்தரை ஒருவர் விளங்கி, ஆளுக்கு ஆள் மதிப்புக் கொடுத்து நடந்தால் போதாதே? இப்ப பஸ்சிலை வரேக்கை மனுஷபுத்திரனின்ரை ஒரு கவிதை படிச்சன், கேளுங்கோ...'  

ஒருமை- பன்மை

'எந்தக் கணத்தில்
என்னை அழைப்பதில்
பன்மையிலிருந்து
ஒருமைக்கு மாறினாய்?

பன்மையிலிருந்து
ஒருமைக்கு மாறும்போது
ஆட்டத்தின் ஒரு விதி மாற்றப்படுகிறது
சீட்டுக்கட்டில் ஒரு சீட்டு
ரகசியமாக இடம் மாறுகிறது
ஓசையில்லாமல் ஒரு பூனை
அறைக்குள் நுழைகிறது
கிணற்றுத் தண்ணீரின் சுவை
திடீரென மாற்றமடைகிறது
ஒரு அனுமதிச் சீட்டின்
ஓரத்தில் கிழிக்கப்படுகிறது'

'ஓம், கவிதை சொல்ற மாதிரி உறவு ஒன்று நெருக்கமாகும் போது எவ்வளவு சந்தோசப்படுறம். மரியாதையை, உரிமையை விட்டுக் கொடுக்கிறதிலை கூட ஒரு மகிழ்ச்சியை அனுபவிக்கிறம் .... ஆனால் பிறகு அதைச் சகபாடி துஸ்பிரயோகம் செய்யேக்கைதானே பிரச்சினையே ஆரம்பமாகுது.'

'அதைத்தான் நானும் சொல்ல வாறன், சீலன். இன்னொருவரை, இன்னொரு இனத்தை நசுக்கி மற்றவரோ அல்லது மற்ற  இனமோ நன்மை அடைய முயற்சிக்கும் போது எல்லாமே பிரச்சினைதான் '  என்றாள் பானு விரக்தியாக.

பீசா ஓடர் பண்ணிச் சாப்பிட்டு முடிக்கும் வரை பொதுவாகவும் குறிப்பாகவும் அவளுடன் கதைத்தது சீலனின் மனசுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது. அவள் சொன்ன அந்தக் கவிதைக்குள்தான் எத்தனை பொருள் இருக்கிறது என அதிசயித்தான் அவன்.

போகிற வழியில், வீட்டுக்குக் காசு அனுப்பிப் போட்டு, தவத்தாரையும் சந்திக்க வேண்டும் என நினைத்த சீலன், பானுவுடன் சேர்ந்து மீண்டும் மக்டொனால்ஸ்க்குப் போய் தவத்தாருக்காக இரண்டு கம்பெக்கரை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தான்.

சில நாட்களாக பனி கொட்டாமல் வெப்பம் சிறிதும் குளிர் அதிகமாகவும் இருந்தது. மீண்டும் பனி கொட்டத் தொடங்கியது.

வெண்பனி பூத் தூவி அவனை வரவேற்றது. பனி கொட்டும் அழகைப் பாத்ததும் சின்னக் குழந்தை மாதிரி அவன் மனசு குதூகலித்தது. முதல் முதல் அவன் அனுபவிக்கும் பனிக் குளியல் அது. மழையில் மட்டுமே நனைந்து பழகியவனுக்கு பனிக் குளியல் மிகவும் வினோதமான அனுபவத்தைக் கொடுத்தது. மெதுவாக நாக்கை நீட்டி விழும் பனியைச் சுவைத்துப் பார்த்தான்.

அந்த இனிமையுடன் பானுவுடன் கதைத்தவை அவன் மனசுக்குள் மீளவும் மீளவும் ஓடிகொண்டிருந்தன.

'சீலன், இனி வேலையோடை எதையாவது நீங்கள் படிக்கத் தொடங்கிறது நல்லம். அதைப் பற்றி ஏதாவது யோசித்துப் பாத்தனீங்களோ?'

 'ஓம், படிக்கத்தான் வேணும், பாப்பம், முதலிலை கடன் முடியட்டும்'

 'கடன் முடியும்வரை பாப்பம், எண்டு பாத்தீங்கள் எண்டால் பிறகு தங்கைச்சியின்ரை கலியாணம் அது இது எண்டு நெடுக ஏதாவது ஒரு காரணம் வந்து கொண்டேயிருக்கும். அதோடை கலா டொக்டரானால் நீங்களும் அது மாதிரி ஒரு தகுதியைத்  தேடிக்கொள்ளுறதுதான் உங்கள் இரண்டு பேருக்கும் நல்லது. அல்லது நீங்கள் என்ன தான் சொன்னாலும்,  ஒரு தாழ்வு மனப்பான்மை உங்களை வாட்டிக்கொண்டேயிருக்கும்.'

 'இதைத் தான் தவத்தாரும் அண்டைக்கு இன்னொரு விதத்திலை சொன்னவர்.  பெண்சாதிமாரைக் கூப்பிட்டு அவையைப் படிக்கவிட்டிட்டு, பிறகு அவை ஒவிஸ் வேலை பாக்க, ஆம்பிளைகள் பக்ரறியிலை முறிஞ்சு போட்டு வீட்டை வந்து தாழ்வுச்சிக்கலிலை  அவையளைப் படுத்தாத பாடு படுத்தியினமாம்.'  

 'மனிசன்மாரால்தானே தாங்கள் அப்படி ஒரு நிலைக்கு வந்தவை எண்டு சில பொம்பிளையளும் யோசிக்கிறதுமில்லை, மதிக்கிறதுமில்லைத்தான்.  எல்லாப் பக்கமாயும்
தான் பிரச்சினை இருக்குது.

தொடரும் 23
 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விழுதல் என்பது எழுகையே  பகுதி 23

 

எழுதியவர் சிறீரஞ்சனி கனடா எழுத்தாளர்

சிறீரஞ்சனி அவர்களின் அறிமுகம்
தெல்லிப்பழையைச் சேர்ந்த ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா தற்போது கனடாவில் வாழ்கிறார். இவரது முதலாவது சிறுகதைஇ ‘மனக்கோலம்’இ   ஏப்ரல் 1984 ல் ஈழநாடு பத்திரிகையில் பிரசுரமானது.
ஈழநாடுஇ தினக்குரல்இ மல்லிகைஇ ஞானம்இ நான்இ ஜீவநதிஇ உதயன்இ வைகறைஇ தூறல்இ காலம்இ காலச்சுவடுஇ யுகமாயினிஇவல்லினம்இ பதிவுகள்இ மகாஜனன் ஆண்டுமலர்கள்இ திண்ணைஇ  வூயஅயடையரவாழசள.உழஅஇ  பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரிக் கைநூல்இ தாய்வீடுஇ முகங்கள் (புலம் பெயர் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு) போன்றவற்றில் இவரது சிறுகதைகள்இ கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன.  
தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு நினைவாகஇ  
தமிழ் படிப்போம்இ பகுதி 1 ரூ பகுதி 2  எனும் இரு நூல்களை  2009லும்
நான் நிழலானால் – சிறுகதைத் தொகுப்பை (யுகமாயினி சித்தன் கலைக்கூட வெளியீடு)- 2010 லும் இவர் வெளியிட்டுள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழக பட்டதாரியான ஸ்ரீரஞ்சனி தற்போது அங்கீகாரம் பெற்ற ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் ரொறன்ரோ கல்விச்சபையின் ஒரு தமிழ் ஆசிரியராகவும் தொழில் புரிகின்றார்.
கதை தொடர்கிறது 23


 'போன கிழமை கலா சொன்ன செய்தி இன்னும்தான் என்ரை மண்டையைக் குழப்பிக் கொண்டிருக்குது. அங்கை ஒரு தாய் தன்ரை இரண்டு பிள்ளையளையூம் கொன்று போட்டு தானும் தற்கொலை செய்திட்டாவாம்.”

 'ம....ம்இ அங்கை இருந்து உயிரைப் பிடிச்சுக்கொண்டு இங்கை ஓடி வாறம்… பிறகு இங்கை இப்படிப் போகுது. ஆம்பிளையள் கடன் அடைக்கஇ உழைக்க எண்டு இரண்டு வேலையிலை ஓடித்திரிய .... வீட்டுக்கை பொம்பிளையள்இ பிள்ளையளோடை தனிய இருக்கிறது ….. அது ஒரு பெரிய பிரச்சினை. ஊரிலை இருந்த மாதிரி இங்கை ஒத்தாசைக்கு யார் இருக்கினம்? ” எனப் பானு சொன்ன போது அவள் தன்னைப் பற்றியூம் சொல்வது மாதிரித் தெரிந்தது சீலனுக்கு.

தன்னுடைய வீட்டுக்கு முன்னால் இருந்த பனியை அள்ளிக்கொண்டிருந்த தவத்தார் சீலனைக் கண்டதும்இ  'சீலன்இ வாரும் வாரும். கொஞ்ச நாளா பனி கொடஇடாமலிருந்து இன்று கொட்டத் தொடங்கி விட்டுது  கொட்டக் கொண்ட  அள்ளினால் கொஞ்சம் சுகம் எண்டு போட்டு இப்பத்தான் வெளியிலை வந்தனான். கவனம் வழுக்கிக் கிழுக்கி விழுந்து போகாதேயூம்இ பிறகு எலும்புநோ வைத்தியத்துக்கு அலையத்தான் காசும் காலமும் சரியாயிருக்கும் ” என்ற படி அவனுக்கு வழிவிட்டார்.'
 
'தேவலோகம் மாதிரியிருக்குதுஇ இல்லையே! ” என்றான் மிகுந்த குதூகலத்துடன் சீலன்

'ஓம்இ ஓம் இப்ப உமக்கு தேவலோகம் மாதிரித்தானிருக்கும். உமக்கென்று ஒரு வீடெடுத்து பனி வழிக்க வெளிக்கிட்டால் தான் தெரியூம்இ என்ன லோகம் இது என்று.” எனச் சலித்தபடி தானும் வீட்டுக்குள் வந்தார் தவம்.

கம்பெக்கரை எடுத்து தவத்திடம் கொடுத்தான் சீலன்.

 'ஒரு பியர் எடுக்கிறீரோஇ குளிருக்கு நல்லா இருக்கும்” என்றபடி பியருடன் வந்தமர்ந்தஇ தவம்.  'அம்மா என்னவாம்இ கதைச்சனீரோ? ” என்றார்.

 'ஓம்இ இப்ப அவ தங்கைச்சியைப் பற்றிக் கவலைப்படுறாஇ அங்கை இருந்தால் போராட்டத்துக்கு சேர்க்கப்படுவாளோ இல்லைஇ ஆமியின்ரை ஆக்கினைக்கு உட்படுவாளோ எனப் பயப்பிடுறா. அதாலை நான் வந்த கடன் அடைச்சு ... பிறகு அவளுக்குக் கலியாணம் எண்டு காத்திராமல் எங்கையாவது மாத்துச் சம்பந்தம் செய்யலாம் என யோசிக்கிறா”இ எனப் பெருமூச்சு விட்டான்இ சீலன்.

  'அப்ப அம்மாவூக்கு உம்மடை கலாவின்ரை கதை தெரியாது  போலை .... சீலன் கவனமாயிரும். இங்கை பொம்பிளையளைக் கூப்பிட்டுப் போட்டு பிடிக்கேல்லை எண்டு கலியாணம் கட்ட மாட்டன் என்கிறவை ஒரு புறம். இன்னும் சிலருக்கு ஏற்கனவே இங்கை பொம்பிளை இருக்கும். தாய்மாருக்கு சொல்லாயினம்இ பொம்பிளை வந்தாப் போலைதான் எல்லாம் சந்திக்கு வரும்.”  

 'ஓம்இ அது தான் எனக்கும் பயமாயிருக்குஇ போதாதுக்கு விறுமாண்டியின்ரை கதை போல வந்தால் என்ன செய்யிறது”

 'விறுமாண்டியின்ரை குடும்பம் மாதிரி எங்கடை ஆக்களும் ஒரு ஆள் ‘கே’ எண்டால் ஒத்துக் கொள்ளாயினம். அதாலை அவங்களும் சொல்லத் துணிய மாட்டான்கள். பிறகு பொம்பிளை வந்தாப் போலைதான் பிரச்சினை வெடிக்கும்.”  

 'எங்கடை பிரச்சினைக்கெல்லாம் எந்த முடிவூமில்லை. உயிரைக் காப்பாற்றியிருக்கிறம்இ பயமில்லாமல் நித்திரை கொள்றம் அவ்வளவூதான். பிரச்சினைகளின் சுமை இப்போதைக்கு குறைகிற மாதிரியில்லை எண்டு ஒரு நேரம் விரக்தியாயிருக்கு. பிறகு பேராசிரியர் குமாரவேல் சொன்னதை நினைச்சால்இ நம்பிக்கை தானே வாழ்க்கை. வாழும் வரை வாழ்வதை ஒழுங்காக அனுபவித்து வாழ்வோம் எண்டிருக்கு.... ம்... சரிஇ நான் வரப்போறன்இ கலா இரவைக்கு கோல் பன்ணுறதாய்ச் சொன்னவ” இ என்றபடி சீலன் வெளியேறினான்.

வெளியே பனி பெருங் குவியலாகக் குவிந்திருந்தது. தான் விழுந்து போகாமல் இருப்பதற்காக ஒவ்வொரு அடியாக எடுத்துக் கவனமாக வைத்தான்இ சீலன்.

(தொடரும் )

அடுத்து தொடர் 24 ஐ தொடருபவர் நயினை விஜயன்
 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகுதி 24 எழுதுபவர் நயினை விஜயன் யேர்மனி


தமிழருவி நயினை விஜயன் அவர்கள் அறிமுகம்

1979 முதல் எமது தாய்மொழிக்காகவும், கலைவளர்ச்சிக்காகவும் இன்றுவரை  அயராது உழைத்துக்கொன்டிருப்பவர்.
20 ஆண்டுகளாக எசன் நகரில் தமிழ்தூது தனிநாயகம் அடிகள் நுண்கலைகல்லூரியை நடாத்தி வருபவர்.150 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் கலைகளைப் பயின்று வருகிறார்கள்.எமது பாரம்பரியக் கலைகளை 3 தலைமுறைக் குழந்தைகளுக்கு பதியமிட்டுள்ளார்.இவரது சேவைப்பாரட்டி தென்னபிரிக்கத் தமிழர்களும்இ பெங்களூர் டாக்டர்.அம்பெத்கார் பல்கலைகழக முதல்வரும் பாராட்டி வாழ்த்திஉள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.உ.த.ப.இயக்க தலைவர் பேராசிரியர் இர.ந.வீரப்பன் அவர்களால் தமிழவேள் என சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தமிழிசைத் துறைக்கு யெர்மனியில் காத்திர்மான பங்களிப்பைசெய்துள்ளார் இவரது முயற்சிகளுக்கு ஆசிரியையான திருமதி.சசிகலா விஜயன் உற்ற துணை என்பதை என்றும் நினைவில் கொள்வார்.
இவர் ஒரு செயல்பாட்டு வீரர். துணிவும் தன்னம்பிக்கையும் கொண்டவர் கம்பீரமான இவருடைய நடவடிக்கைகள் வியந்து பார்ந்து மனம் கொள்ளத் தக்கவை.

தனது நகரத்தில் நடைபெறும் வெளிநாட்டவர் வாரத்தில் தமிழரின் கலை கலாச்சார நிகழ்ச்சிகளை பல்கலாச்சார  நிகழ்ச்சிகளில் பங்காற்றச் செய்பவர்.

ஐந்து வருடங்களாக தமிழருவியின் இசைத்திருவிழாவை நடத்தி சிறந்த ஆண் பாடகர், சிறந்து பெண் பாடகர், சிறந்த ஜோடிப் பாடகர்களைச் தெரிவு செய்தும் சிறந்த இசைக்குழுவையும் இரசிகர்களின் வாக்களிப்பு மூலம் தெரிவு செய்து பரிசளித்து கௌரவித்தவர்.

இன்று பலராலும் பேசப்படும் விஜய் தொலைக்காட்சியின் அதிசிறந்த பாடகர் போட்டியில் சிறந்த பாடகர்களைத் தெரிவு செய்வதற்கு மின்னஞ்சல் வழியாகவும்இகுறுஞ்செய்தி வழியாகவும் வாக்களிக்கும் முறையை கையாள்கிறார்கள்.

அதனை முதன்முதலாகச் செய்து காட்டியவன் ஜேர்மனியில் இருக்கின்ற முன்னோடி மணிபல்லவம் தந்த திரு.நயினை விஜயன்  அவர்கள்.

கதை தொடர்கிறது



பனிதூவூம் போது அதிகம் குளிராத  கால நிலை. இருப்பினும்  சு+டேற்றியை இதமான வெப்பத்தில்  நிறுத்திவிட்டு படுக்கையில் சாய்ந்தான் சீலன்……! .

கலா தொலைபேசி எடுக்க இன்னும் ஐந்து மணித்திலாயாலங்கள் காத்திருக்க வேண்டும்.எப்படி இந்த நேரத்தைக் கடத்துவது..!

சுவிசுக்கும் கனடாவூக்கும்; 5 மணித்தியாலங்கள் நேர வித்தியாசம்

என்ன விந்தை உலகின்; ஒருபக்கம் விடிய மற்றொரு ஒருபக்கம் உறங்கும் !

புதிய நாடு புதிய வாழ்க்கை எல்லாமே புதிதாய்….

நித்திரை வந்தாலும்  நினைவூகள் விட்டிடுமா ? தூக்கத்தை கலைப்பதற்கே நினைவூகள் துரத்தும் புலம்பெயர்வாழ்வூ…..!

எல்லா வற்றையூம் அனுபவித்துத் தானே ஆகவேண்டும்…!

காக்கைக் கூட்டில் குயில் வாhழ்க்கை

ஒரு மனிதன் தூங்கி விழிப்பதற்குள் 243 தடவைகள்  புரண்டு புரண்டு படுப்பானாம் ஆய்வாரள்கள் கூற்று.

சீலன் அரைவாசியைத் தாண்டிவிட்டிருந்தான்.

கலாவூடன் ஊரில் பழகிய நாட்கள்  பேசிப் பிரிந்த பொழுதுகள் சின்னச்சின்ன கோபங்கள்  தணிப்புக்கள்  எல்லாம்…..!

சிந்தனைத் திரையில் தோன்றி மறைந்து கண்ணாம்பூச்சி விளையாட்டாய் …..

இன்று கலாவூடன் நீண்டநாட்களுக்குப்பின் பேச சந்தர்ப்பம் கிடைப்பதே….. …இருவர் மனங்களும்  பேசிக்கொள்வதால் இருக்குமோ…!

இரவூ 10  மணியை கடிகாரம் நெருங்கிக் கெண்டிருந்தது. குளிரும் கொஞ்சம்கொஞ்சமாக ஏறிக்கொண்டிருந்தது.

இன்னும் 2 மணித்தியாலங்கள்……! காத்திருப்புக்கு மட்டும் ஏன் இந்த நேரம் விரைவாகப்போவதில்லை ….! வேலை நேரத்தில் மட்டும் நத்தைவேகம் ….!

மீண்டும் நினைவூகளின் ஊர்வலம்….! கலாவூடன்  முதன்முதலாக பூங்காவில் உலாவிய நாட்கள்……!

ஊர்க்கண்ணுக்கு தண்ணிகாட்டிக் கடந்த பல நாட்களும்…எதிர்பாராமல் ….பக்கத்து வீட்டு  பையன் கண்டுவிட்ட அதிர்ச்சியூம்….! இன்று வரை அவன்  வாய் திறக்காத  நட்பும்…..!  எத்தனை எத்தனை !  காதலை விட காதலர்கள் சந்திக்கும் இன்ப இடையூ+றுகள் தான் காதற்செடிக்கு நீர்பாய்ச்சும் ஊற்;றுக்கள்…!இல்லையா …?

வாழ்க்கையில் தான் எத்தனை எத்தனை போராட்டங்கள்…இன்பமாக சில துன்பமாக….சில ..

ட்;றிங்….ட்றிங்……..

தொலைபேசி  அடித்ததோ இல்லை அலறியதோ  ….நித்திரைத்தூக்கத்தில்  மெதுவாக சீலனை எழுப்பியது…

என்ன இன்னும் இரண்டு மணித்தியாலங்கள் இருக்கே   கலா  அழைப்பதற்கு …. இதற்கிடையில் யாராயிருக்கும்…..?

“கலோ…….!”  

“யாரது……சீலனோ..?”

ஆகா  அம்மாதான்  ….  “நான் சீலன்தான்  பேசிறன் அம்மா

“சொல்லுங்கோ….!  சுகமாயிருக்கிறியளோ…!”

“ஓம் தம்பி …..! பார்வதிமாமி அலுவலா கொழும்புக்கு வந்தவா….

நானும் அவகூட வந்தனான்….தம்பி….!“


பார்வதி மாமி கிட்டிய சொந்தமென்றாலும்  …  எங்களைவிட பணம் படைத்தவை யாராயிருந்தாலும் ஏதோ முறைசொல்லி சொந்தம் கொண்டாடும் நவநாகரீகப் பெண்மணி….! ஏன்ன அம்மாவைச் சேர்த்திட்டாh  !

ஓகோ நானும் வெளிநாட்டில என்ன…..!  சுற்று முற்றும் ஒருதடைவை பார்த்துக்கொண்டான்…!

„சுந்தர வதனி சுகுண மனோகரி …..“  என்று  பொடியள் ஏன்  நானும் உட்படத்தான் ….பகிடி பண்ண சிட்டாய் பறந்து திரிந்த மனோகரியின் தாயார்…சும்மா சொல்லக்கூடாது அப்படியொரு அழகு…மனோகரி..!

„தங்கச்சி வரவில்லையோ…!“  

„இல்லைத்தம்பி…..! அவளுக்கு சோதின வருகுது…படிக்கிறா..1“

„சரியம்மா சொல்லுங்கோ….!“

„சீலன்….நீ; அனுப்பிய   இரண்டு லட்சம் ..கிடைச்சுது தம்பி…“

„பாலன் மாமாவிட்ட  பட்ட கடனைக் கொடுத்திட்டன்….!

நன்றி  என்று சொன்னார்…!



தொடரும் 25
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எத்தனையோ பேர் வெளிநாடுபோய் அனுப்புறம் என்று சொல்லி வாங்கியவை 5 வருசமாகியூம் தொடர்பே இல்லை  சீலன் போய் குறுகிய காலத்துக்குள்ள கடனை திருப்பிவிட்டியள்;…எல்லோரும்; சீலனாக முடியூமோ …? என்று வேற சொன்னார் தம்பி..!

மக்டொனால்சில  கிறில்ல கைபட்டு  கொப்பளித்த கையை ஒருதடைவை பார்த்துக்கொண்டான் சீலன்……!

„நல்லது அம்மா….!  வேற சொல்லுங்கோ…!.“

கலாவூக்கும்  சீலனுக்கும் இன்னும் ஒருமணிநேர இடைவெளியிருப்பதை  கடிகாரம் ஞாபகப்படுத்திக்கொண்டிருந்தது..!

„இல்லத்தம்பி….சீலன்… இனி அடிக்கடி கொழும்புக்கு வரவேண்டியிருக்கும்….! தங்கச்சியூம்..கொழும்பில நல்ல பள்ளிக்கூடத்தில படித்தால்  ரஞ்சினியைப்போல  லண்டனில வேலைகிடைக்கும் என்று சொல்லுறா…“

„அதுதான் பார்வதி மாமியூம் தனக்குத் தெரிந்த  ஒருகுடும்பம் வாறமாதம் லண்டன் போயினமாம் ……வெள்ளவத்தையில வீடு …..!  நானும் தங்கச்சியூம் …வந்து இருக்கலாம் என்டு நினைக்கிறம். எதுவூம் தம்பி உம்முடைய சம்மதத்தோடதான்….சீலன்…!“

ஒரே மூச்சில் அம்மா சொல்லி முடிக்க…. ஒரே மூச்சில  உயிரே போய்விடும்போல ….சீலனுக்கு  ! குரல்கேர   மேசையில இருந்த தண்ணீரை எடுத்து இணர்டு மிடறு குடித்தான்……!
..ம்…

„சொல்லுங்கோ…அம்மா…..“

„வீட்டுக்கு அட்வான்சைக் கொடுக்கட்டோ தம்பி…!இதை விட்டா வேற நல்ல இடம் கிடைக்காது அப்பு…..!“

„ம்….சரியம்மா…எவ்வளவூ கேட்கீனம்..?“

„75 ஆயிரம்..! பாலன் மாhவூக்குப்போக மிச்சக்காசு இருக்கு…..சீலன்…“!

„சரியம்மா  கொடுங்கோ…!  சரி மாத வாடகை எவ்வளவூ…சொன்னவை அம்மா?“
35 ஆயிரமாம் தம்பி…!

சீலனின் மூளை சுவிஸ் பிராங்குக்குள் புகுந்து ரூபாவூக்குள் மூழ்கியது…! அட மாதம்..350 பிராங்தானே  ….பரவாயில்லை… ! மலிவூதான் என கணப்பொழுதில் முடிவூக்கு வந்தது.

இங்கு பாடசாலை நாட்களில் வாய்ப்பாடு பாடமாக்கிறத விட  ஆங்காங்கே நாணயமாற்றங்களை நம்மவர்கள் நொடியில்….பெருக்கிப் பிரித்து மேய்வார்கள்.

„சரியம்மா…!  வேறு என்ன  வாறமாதம் தங்கச்சியையூம் கூட்டிக்கொண்டு வாங்கோவன்…!“

„இன்னும் ஒரு விடயம் தம்பி…..! ஐ…..போன் ஒன்று கேட்டவள்……!சோனியோ இல்லாட்டி  கலக்சி என்று சொன்னவள் இப்ப இது தான் எல்லாரும் வைச்சிருக்கினமாம் …..அதுதான்……யோசிக்கிறன்;…!“

“அப்படியா அம்மா…சரி  நீங்க எப்ப ஊருக்குப்போறீங்க..!“

„இரண்டு நாட்கள் செல்லும்…சீலன்…!“

„நாளைக்கு  காசு அனுப்புகிறன் அம்மா…..தங்கச்சி கேட்டதை வாங்கிக் கொடுங்கோ….…!“

“சரி தம்பி ….வைக்கிறன். நாளைக்கு எடுக்கிறன்…..!“

“சரியம்மா……”  

கலாவின் தொலைபேசி…..க்கு …நேரம்  சரியாக இன்னும்….சில நிமிடங்களே
கடிகாரம்…  சரியாகச் சொன்னது …!

தான் நாட்டில் இருந்தபோது அம்மா தங்கச்சிக்கு கேட்டதை வாங்கிக் கொடுக்க உழைப்பிருக்கவில்லை ….. இப்போ வெளிநாட்;டில…. அவர்கள் அனுபவிக்கட்டுமே..…! எல்லோரையூம் போல அவனும்…!

அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கையொரு தெய்வம் என்றௌ……!

பெருமூச்சொன்று அவனின் அனுமதியில்லாமலே வெளிப்பட்டது…..!

நீண்டநாட்களுக்குப் பின் அம்மாவூடன் பேசியதும் தங்கையின் விருப்பத்தை நிறைவேற்றியதும் … பெரிய பேறாக  கடவூளுக்கு நன்றியைத் தெரிவித்துக்கெசாண்டான்….!

எதிர்காலத்தில் தன்னைப்போல….  பாசவலையில் சிக்குண்ட புலம்பெயர் உறவூகள்..இ கேட்டக கேட்க பணம் அனுப்பி …அங்க இளசுகள்    சீரழிஞ்சு போறதாகப் பலர் கதைத்தாலும் செய்திகளாக வந்தாலும் இரத்த சொந்தங்கள் அனுபவிக்கட்டுமே என்ற ஆவலில் சீலனும் சிக்கிவிட்டதை கடவூளே நேரில் வந்த சொன்னாலும் அதை நம்ப சீலன் மட்டுமல்ல தாமே நேரில் அவஸ்தைப்படும் வரை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்…! வெளிநாடு வராதே இங்கு வாழ்க்கை சுலபமல்ல என்பதை நம்ப மறுக்கும் தாயக உறவூகள்போல….!


சூ+டாக கோப்பி கலந்து  குடித்தபடி  கலாவின் தொலைபேசி அழைப்புக்காக காத்திருந்தான் சீலன்….! கட்டிலில் தலையைச் சாய்த்தபடி …!


இரவூ 12.00 மணியை தாண்டி முட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.கனடாவில் இப்போ6.00 மணி. இன்னும் பத்து பதினைந்து நிமிடங்களில்….அழைப்பு வரலாம்…..!  

தாயூம் ….தாரமும்…….பாச வயலில் விளையூம் பயிர்கள் தானே…! ஓவ்வொரு பருவத்தையூம்  இணைக்கும் உன்னத உறவூகள் தானே …!இரண்டு  உறவூகளையூம் இணைப்பதிலும் பிரிப்பதிலும் காலம் தன் வேலையைச் செய்துகொண்டே இருக்கும்….!

“ட்;றிங்…ட்றிங்…..”

“ஹலோ…….”  ஆயிரம் மின்னல் தெறித்து  செவிவழி புகுந்து நெஞ்சை நிறைத்த அந்தக் குரல்
நிச்சயமாய் கலாதான்…….!

“வணக்கம்….கலா ….உன் சீலுதான்….”

“வணக்கம்… இப்ப புலம்பெயர்ந்த நாடுகள்ல வணக்கத்தோடு தான்…ஆரம்பம் எப்படி இருக்கிறீங்க சீலன் …?”

“நல்லா இருக்கிறன் கலா…”

இருவர் குரலும் தழுதழுக்க நிச்சயமாய் சீலன் கண்கள் இரு துளிகளை விட்டது போல் கலாவூம் கண்களும் நிச்சயமாய்….! ஆயிரம் வார்த்தைகள் ஆயிரம் அர்த்தங்கள்…..அத்தனையூம் அந்தத் துளிகளில் சங்கமமாகி நின்றன…!

எத்தனை மாதங்கள்….. எத்தனை சோதனைகள் …..!

சிறிது நேரம் மௌனம் …விம்மல் ….! சொல்லும்… கலா எப்படிப் படிப்புகள்….! வில்லங்கமாய் திசைதிருப்பிப் பேச முயன்றான்….சீலன்..!

“நல்லாப் போகுது இன்னும் 2 வருடங்கள் செல்லும்…என நினைக்கிறேன்..! பதிலுக்காய்  காத்து நின்றாள் ஏக்கத்தோடு… கலா..”

“உங்கள் படிப்பு வேலையெல்லாம் ….”

“இப்பதான் நல்ல வேலை கிடைத்து செய்து கோண்டிருக்கிறன் கலா…இரவூநேர பாடசாலைக்கு விண்ணப்பித்திருக்கிறன்….விரைவில் கிடைக்கும்…”

“அம்மா போன் பண்ணினவா….. உமக்குமுதல் அம்மாவூடன்தான் பேசிக்கொண்டிருந்தனான்..
எப்படி எல்லோரும் நலம்தானே….”

“ஓமோம்”

நடந்த உரையாடலை சுருக்கமாகக் கூறிமுடித்தான் சீலன்…!

சீலனின் குடும்பத்தாரை கலாவூக்குத் தெரியூம் அன்பான குடும்பம். எதிர்கால மாமியார் குறித்து கலாவின் மனதில் ஒரு மகிழ்ச்சி….! கலா மட்டக்களப்பைச் சேர்ந்தவள் என்றாலும் யாழ்ப்பாணத்திலிருந்த சீலனின் வீட்டுக்கு இரண்டு மூன்றுமுறை சீலனுடன் போயிருக்கிறாள்.

சீலன்இ “சொல்லும்….கலா” என்கிறான்

“எவ்வளவோ கதைக்கவேண்டும் என நினைத்திருந்தன் ….ஒன்றும் ஞாபகமில்லை.”

கலா நிறுத்தி.-…. சீலனுக்கு விடையளிக்க விட்டாள்….!

கலா நானும் டொய்ச்சும் ஆங்கிலமும் படிக்க விண்ணப்பித்திருக்கிறன்..! எப்படியாவது படித்து டாக்டராகவேணும்…!என்ற இறுமாப்போடு இருக்கிறன்.!

“நாமிருவரும்  என்றௌ ஒருநாள் தாயகம் சென்று நமது உறவூகளுக்கு எமது பணிகளைச் செய்ய வேண்டும்”

“இது தான் எனது…  இல்லை நமது லட்சியம் தானே கலா….”

“ஓம் டாக்டர் ஐயா….. கல கல என சிரித்தாள் கலா…….”
இந்த சிரிப்பை அவன் கேட்டு பல காலமாகி யிருந்தது..

குறும்பும் கலகலப்புமாய் நேரம் போனதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்தனர்

நாளை இருவருக்கும் விடுமுறை என்ற ஆறுதலில் நேரம் போவதை அவர்கள் கணக்கிலெடுக்கவில்லை…..!

சீலன் நீங்கள் கனடாவந்து என்னோடு இணைந்து படிக்கலாம் தானே…..? நாம் பிறருக்காக வாழ நினைக்கும் அதே வேளை நமது வாழ்க்கையையூம் பலமானதாக்க வேண்டாமா? அப்போது நமது பணி இன்னும் இரட்டிப்பாகும் அல்லவா..?   நினைத்தவூடன் ஒரு நாட்டுக்குள் வரவூம் பிறிதொரு நாட்டுக்குள் செல்லவூம் புலம்பெயர்  அகதித் தமிழனுக்கு முடியூமா……?

“சீலன் …. நான்  ஒரு முயற்சி செய்து பார்க்கப்போகிறேன்….!நீங்கள் ஒத்துழைத்தால்…வெற்றி கிடைக்கும் என நினைக்கிறேன்…”

“அது இப்போதுள்ள நிலையில் தெய்வசித்தம் கலா ….!தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும் அல்லவா…சீலன்…..”

“நிச்சயமாக உமது முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்……”

“சீலன் …..உங்களுக்கு நித்திரை வந்துவிட்டது என நினைக்கிறேன்… நாளை எனக்கும் விடுமுறை … நிறையப் பேசவேண்டும்…..பேசுவோம்….”

கலா ஒரு  பறக்கும் முத்தத்தோடு போனை வைத்தாள்.


 தொடரும் 26    - பொலிகை nஐயா


 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விழுதல் என்பது எழுகையே

பகுதி 26  பொலிகை ஜெயா

 

சுவிஸிலிருந்து பொலிகை ஜெயா  அவர்கள் பற்றிய அறிமுகம்

பகுதி 26

பொதுவாக இவர் ஒரு இலக்கியவாதி.முக்கியமாக அவர் ஒரு கட்டுரையாளர்.அதன் பின்பே சிறுகதைஇகவி வடிப்பவர்இ   அவரது கட்டுரைகள் இலங்கை வீர கேசரிஇஜீவநதிஇபுதிய பூமிஇஇந்தியா இனிய நந்தவனம்இகனடா உதயன் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தன
சிறு கதைகள் சில சுவிஸ் தமிழ் ஏடுஇவீரகேசரிஇஜீவநதி ஆகியவற்றில்
பிரசுரமாகியன.
கவிதைகள் பல ஐரோப்பிய வானொலிகளில் வெளிவந்தன .அத்தோடு வானொலிகளில் அரசியல் களத்தில் பங்கெடுத்துள்ளார்.
சுவிஸில் பல பட்டிமன்றங்களில் பேச்சாளராகவும் தலமை ஏற்றும் உள்ளார்.
முல்லையமுதன் டழனெழn டைஉ வானொலியில் நடாத்தும் இலக்கியப்பூக்கள்
நிகழ்வில் அண்மைக்காலமாக பங்குபற்றுகிறார்.
2010 பாரிசிலும்இ2014 ஜெர்மன் காம் ல் நடைபெற்ற உலக தமிழர் பண்பாட்டு இயக்க மாநாட்டில் பங்கு பற்றி கட்டுரைகள் சமர்ப்பித்து தமிழ் ஆய்வரங்கத்தில் பங்கெடுத்து தமிழ் ஆய்வு  செய்தார்.

தகவல் தொகுப்பு
பண்ணாகம் இக.கிருட்ணமூர்த்தி (எ.வி.வி)
ஏலையா முருகதாசன் (எ.வி.வி)

கதை தொடர்கிறது

தாயுடனும் காதலி கலாவுடனும் கதைத்த பின் அதிகாலை மூன்று மணிபோல் தூக்கத்திற்கு சென்ற சீலனை தூக்கம் அணைக்க மறுத்தது.படுக்கையில் சிந்தனை ஓட்டங்களை "தெறித்திட்ட முத்துக்களைப்போல சிதறவிட்டு" புரண்டு புரண்டு படுத்து தூக்கத்திற்கு முயன்றான்.

ஆனால் அவனால் தூங்க முடியவில்லை. அவனது மனமோ வேதனையில் துடிக்க பஞ்சணையும் நொந்தது அவனுக்கு.

தாய் தன்னை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக பட்ட கடன் குடியிருக்கும் வீட்டு காணியின் அடகை வட்டி முதலுமாக செலுத்தி மீட்க வேணும் சகோதரியின் படிப்பு செலவு கொழும்பு வெள்ளவத்தையில் வாடகைக்கு பெறவிருக்கும் வீட்டின் மாதாந்த  வாடகை அத்தோடு அதற்கு செலுத்த வேண்டிய முற்பணம்இ இவற்றோடு தான் கற்கவுள்ள ஜேர்மன் ஆங்கில கோசுக்கான செலவு வேறு.

இயற்றை எல்லாம் சமாளிக்க ஒரு தொகைப்பணம் ஒவ்வொரு மாதமும் கையில் புரளவேணுமே.அதற்குரிய பணத்தை எந்த வழிமுறையை கையாண்டு சமாளிப்பது என ஏங்கினான்  தவித்தான்.

உலக நாடுகளை எடுத்துக்கொண்டால் "சுவிஸில் வாழ்க்கை!
தரம் மிக்கது. ஆனால் வாழ்க்கை செலவோ அதிகமானது". இப்படிப்பட்ட ஒரு நாட்டில் இரு வேலை பாராது எமக்குள்ள அகபுற செலவுகளை இலகுவில் சமாளித்து விட முடியாது.

தான் தற்போது பார்த்திடும் மக்டொனல்ஸ் வேலையில் பெறும் ஊதியம் ஒருபக்க செலவுக்கே போதக்கூடியது.ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் எப்படி முக்கியமோ அதுபோல இரண்டாவது தொழில் முக்கியமாக இருந்தது சீலனுக்கு.

இரண்டாவது வேலை பார்க்கும் சர்ந்தர்ப்பம் கிடைக்குமானால்!தற்போதைய வேலை நேரம் பொருந்தி வராதே என்ற மறு பிரச்சனை தொக்கி நின்றது. "நின்ற வெள்ளத்தை வந்த வெள்ளம் அள்ளி சென்றது போல" ஆகிவிடாமல் பார்க்க வேண்டிய இக்கட்டான நிலையும் சீலனுக்கு.

இருந்த போதும் அப்துல் கலாம் சொன்னது போன்று "நல்லது நடக்க கனவு காணுங்கள் அது நிறைவுறும்" கண்ணதாசன் சொன்னது போல "நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் அது தெய்வமாக காட்சி தரும்" இவற்றை விட அவனது யாழ் பல்கலைக்கழக விரிவுரை ஆசான் குமாரவேலு சொன்னது போல "முயற்சி திருவினையாக்கும்" போன்ற வேத வாக்குகளை மனதில் நிறுத்திஇ மனம் தளராது முயற்சி செய்வோம் என்ற முடிவுக்கு வந்தான்.
மறுநாள் சீலன் மக்டொனால்ஸ் வேலைக்கு செல்வதற்காக தனது வாசல் கதவை திறந்து வெளியில் வந்த போது! வானம் இருட்டி தமக்குள் குழம்பியபடி முகில்கள் மெல்ல மெல்ல நடை போட்டு அசைந்தன.பனிமலைகளுக்கு விடைகூறி அங்கிருந்து புறப்பட்ட இளம் காற்று சீலன் அணிந்திருந்த அழகு மிக்க ரீ சேட்டை ஊடறுத்து அவனுக்கு குளிரை உணர்த்தி நின்றன.

அவன் மேல்நோக்கி அண்ணார்ந்து வானத்தை ஒரு தரம் நோக்கினான்.மழை பெய்வதற்கான அறிகுறிகளை அவனது கண்கள் கண்டு கொண்டன.

தனது வீட்டிலிருந்து சிறிது தூரம் நடந்து சென்றால் அவன் போய் சேர வேண்டிய இடத்துக்கான பேரூந்து நிலையத்தை அடைந்து விடலாம் இதே நேரம் வானம் சிறு சிறு துளிகளாக தனது கண்ணீரை தூறல் வடிவில் சிந்த தொடங்கியது. அவனோ தனது கால் பாதங்களின் இடைவெளியை மேலும் அகட்டி நடையின் வேகத்தை அதிகரித்தான்.அவனிடம் குடை வேறு இல்லை.

சுவிஸில் சொல்லாமல்கொள்ளாமல் காற்று வீசிடும் மழை பெய்திடும்.இவற்றை நாம் புரிந்து கொள்வது கடினமாகவே இன்னும் தோன்றுகிறது.

சீலனின் நடையின் வேகம் அதிகரிக்க அதிகரிக்கஇ வானத்தின் தூறல் வேகமும் அதிகரித்து. ஈற்றில் அவனது நடை வேகத்தை தூறல் வேகம் வென்று மழையாக நிலத்தை முத்தமிட்டது.

சிறிது நனைந்தபடி பஸ் தரிப்பிடத்தினுள் நுழைந்து தன் கைக்குட்டையால் நெற்றியிலிருந்து நாடி வரை துடைத்துவிட்டு தனது தலையை துவட்டும் வேளை! அவன் செல்ல வேண்டிய பஸ்சும் வந்து நின்றது.


பஸ்ஸினுள் கூட்டம் அதிகமாக இருந்தது.பஸ்ஸின் இருக்கை கம்பி வளையத்தை தான் விழுந்து விடாதபடி ஆதாரமாக பிடித்தவாறுதான் இறங்க வேண்டிய இடத்தை நோக்கினான்.
ஆனால் மழையோ தனது நீரால் பஸ்ஸின் சாரளத்தை ஆக்கிரமித்து வெளியிடங்களை பஸ்ஸினுள் இருந்து பார்க்க முடியாதவாறு யாழ் ஏலோல சிங்கன் போல தடைபோட்டு நின்றது.

பஸ் எங்கு செல்கிறது எந்த தரிப்பிடத்தில் நிற்கிறது என்பதனை அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை.இருந்த போதும்  பஸ்ஸினுள் உள்ள திரை பஸ் செல்லும் இடத்தையும் தரிப்பிடத்தையும் பறைசாற்றியபடி இருந்தது.

சில வேளை இயற்கையை கூட மனிதன் தனது மூளை சக்தியால் வெல்லுகிறான்.ஆனால் பலமுறை இயற்கையிடம் மனிதன்  தோற்று விடுகிறான்.
பஸ்ஸால் இறங்கி மக்டொனால்ஸ் உடுப்பு மாற்றும் அறைக்கு சென்று தனது வேலைக்கான உடுப்பை மாற்றியபின் இன்னும் வேலை ஆரம்பிக்க 20 நிமிடங்கள் இருந்த படியால் ஒரு கோப்பியை அடித்து எடுத்து வந்து உழியர் இளைப்பாறும் அறையில் மேசைமீது வைத்து விட்டு  கலக்கமான முகத்துடன் கோப்பியை அருந்தாது இருந்தான்.

அதே வேளை  தனது இளைப்பாறும் 30 நிமிட நேரத்தில் பானுவும் ஒரு கோப்பியுடன் அங்கு வந்தாள்.சீலன் சோகமே உருவாக கண்கள் கலங்கியபடி இருப்பதை கண்டு அவனருகில் உட்கார்ந்தாள்.

தொடரும் 27
----------------------------------------------------------------------------------------

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவிஸிலிருந்து பொலிகை ஜெயா

பகுதி 27


சிறிது நேரம் அவனை கவனித்தவள்இ "என்ன சீலன் கண்கள் கலங்கியிருக்கு முகத்தில் எவ்வித களையும் இல்லாமல் சோகத்துடன் இருப்பது போல் தெரிகிறதுஇ
என்ன நடந்தது கலாவுக்கு கனடாவில் முரளியை முடிவு செய்து விட்டார்களா? அல்லது அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா?“என தனது சகோதரனை கேட்பதுபோல உரிமையுடன் கேட்டாள்.

அவனோ பதில் எதுவும் கூறாது அமைதியாக இருந்தான்.மீண்டும் பானு கேட்டாள்.

அவனை நேசிக்கும் இரு உள்ளங்களில் பானுவும் ஒருத்தி.அவளிடம் தனது பிரச்சனைகளை சொன்னால் மனதுக்காவது சிறு ஆறுதல் கிடைக்கும் என எண்ணியவாறு...

தனது மவுனத்தை கலைத்து „அக்கா! .. எனக்கு.. என இழுத்தான்."எதுவாக இருந்தாலும் தயங்காது சொல்லுங்கள் என்றாள்" பானு.

“தங்கச்சிக்கு கொழும்பில் வெளிவாரி பட்டப்படிப்புக்கு இடம் கிடைத்துள்ளது.அம்மா தங்கச்சியை கூட்டி வந்து வெள்ளவத்தை இராம கிருஷ்ணன் விடுதியில் நிற்கிறா.
அடுத்த மாதம் படிப்பு தொடங்குகிறது.குமர்ப்பிள்ளை.தனிமையில் இருக்க விட முடியாது.இருவருக்கும் கொழும்பு புதிய இடம்.அங்கு எவரையும் தெரியாது.யாரையும் அங்கு நம்பவும் முடியாதல்லவா?“

அதனால் ஒரு வீடு வாடகைக்கு எடுக்கவேணும்.அம்மா ஏற்கனவே வெள்ளவத்தையில் வீடு ஒன்று பார்த்துள்ளா. அவ்வீட்டிற்கு வாடகை முற்பணம் வேறு செலுத்த வேணும் மாதா மாதம் தங்கச்சியின் கல்விச்  செலவு நான் இங்கு வருவதற்காக பட்ட கடன்  எனது முடிக்கபடாத டாக்டர் படிப்பை தொடர இங்கு ஆங்கிலமும் டொச்சும் பயில விண்ணப்பித்துள்ளேன்.இன்னு இரு மாதமளவில் என் படிப்பை தொடங்கலாம் என எண்ணுகிறேன்.நீங்களும் மொழி தெரிந்தால் நல்ல வேலை எடுக்க முடியும் எனக் கூறினீர்கள்“ என்றான் சீலன்.
„முதல் நீங்கள்  கவலையை விடுங்கள் .மனதை தேற்றிக்கொள்ளுங்கள்.சகலதும் மெல்ல மெல்ல ஒழுங்காக நிறைவேறும்.நீங்கள்  விரும்பினால் சொல்லுங்கள் .நான் வேலை செய்யும் கம்பனியில் உங்களுக்கு அதிகாலையில்  பேப்பர் போடும் வேலை பெற்று தருகிறேன். நீங்கள்  பேப்பர் போட்டு விட்டு இங்கு பத்து மணி வேலைக்கு அல்லது ஒருமணி வேலைக்கு வர முடியும்.இரவு வேலையை தவிர்ப்பது உங்களுக்கு நல்லது.நீங்கள் நித்திரைகொண்டுவிட்டு அதிகாலை பேப்பர் போட வசதியாக இருக்கும்.அத்தோடு உங்களுடைய  உடம்பையும் பாது காத்திட முடியும்“ என்றாள்.

„ஓம் அக்கா நல்ல யோசனைதான்.ஆனால் இங்கு எனது வேலை நேரம் ஒத்து வராதே.இரவு ஒரு மணிக்கு வேலை முடித்து  எப்படியக்கா அதிகாலை நாலு மணிக்கு தூக்கத்தை விட்டெழுந்து பேப்பர் போட செல்ல முடியும்?

“நீங்கள்  அதைப்பற்றி யோசிக்க வேண்டாம்.இங்கு படிப்பதற்கும் இராணுவ பயிற்சிக்கும் முதலாளிகள் நிறுவனங்கள் ஊழியர்கள் கேட்கும் நேரங்களைஒதுக்கி கொடுக்கவேண்டியது கட்டாயம்.அது சட்டத்திலே கூட உண்டு".எமது மனேஜர் பீல்மான் நல்லவர் என்பது உங்களுக்கு தெரியும் தானே“.

„ஓம் அக்கா நீங்களும் பேசிப்பாருங்கள்.நானும் எனது படிப்பு பற்றி மனேஜருக்கு சொல்லுகிறேன்.அப்படி இரவு வேலையை தவிர்த்தால் என் எதிர்கால கல்வியை கற்பதற்கும் இரண்டாவது வேலை செய்வதற்கும் பெரும் வசதியாக அமையும்“.

"சீலன்! இப்ப அம்மாவுக்கும்  தங்கச்சிக்கும் வீடு எடுக்க எவ்வளவு பணம் தேவை"?

"அது.....அது....வந்து...வந்து...அக்கா...“ என இழுத்தான் சீலன்.

"சங்கடப்படாது சொல்லுங்கள்  என்றாள்“ பானு.

„இலங்கைப்பணம் எப்படியும் மூன்று இலட்சம் தேவை” என்றான்.அவள் சிறிது யோசனையின் பின்இ „ அப்பணத்தை நான் தருகிறேன்.நீங்கள்  உடனே அம்மாவுக்கு அனுப்பிவிடுங்கள்“ என்று சொன்னதை சீலன் சிறிதும்  எதிர்பார்க்கவில்லை பானு தனக்கு பணம் தருவாள் என்றுஇ „அக்கா என்ன சொல்லுகிறீர்கள்? என அவளை பார்த்தான்.

அவன் பார்வையின் அர்த்தத்தை புரிந்திட்ட பானு புன்சிரிப்புடன் உண்மையாகத்தான் சொல்லுகிறன் சீலன் நான் பணம் தருகிறேன் என்றவள் தொடர்ந்து
எனக்கு நீங்கள்  உடனே திருப்பிதரவேண்டும் என்ற அவசரம் இல்லை.உனது பதின்மூன்றாவது சம்பளத்தில் திரும்ப தந்தால் போதும் எனச்  சொன்ன போது அவனையறியாது உணர்ச்சி பெருக்கத்தில் அவளது வலது கரத்தை பற்றி நன்றி கலந்த கண்களுடன் அவளை பார்த்தான்.
பதிலுக்கு அவளும் தன் பரவாயில்லை என்னும் சைகையை வெளிப்படுத்தினாள்.

இரு கிழமைகளின் பின்னர் பானு மனேஜருடன் பேசி சீலனுக்கு இரவு வேலையை தவிர்த்து பகல் வேலைக்கான அனுமதியை பெற்று கொடுத்தாள்.
        
ஆனால் சனிகிழமை மட்டும் இரவு வேலை சீலன் செய்தே ஆக வேண்டும்.அது கூட அவனுக்கு வசதியாகவே இருந்தது.மறுநாள் பேப்பர் போடும் வேலை இல்லை. விண்ணப்பித்த படிப்பு தொடங்கினால்  அதற்கும் ஞாயிறு விடுமுறை நாள்.நன்றாக தூங்கி உடலலுப்பை போக்க முடியும் என தனக்குள் நினைத்துக் கொண்டான்.

அன்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு மிக உற்சாகத்துடன் வந்து அன்றைய வீட்டு காரியங்களை முடித்துஇதொலைக்காட்சி பார்க்க விரும்பாது முன்னர் அறிமுகமற்ற நல்ல உள்ளம் படைத்த பானு அக்கா நான் எதிர்பாராத உதவிகளை எனக்கு செய்கிறா என வியந்து இப்பெரும் உதவிகளுக்கு நான் எப்படி நன்றிக்கடன் செலுத்தப்போகிறேன் என்ற பரிதவிப்புடனும் மறுநாள் காலை தாய்க்கும்காதலி கலாவுக்கும் வீடு எடுப்பதற்கான பணமும் இரண்டாவது வேலையும் கிடைக்க இருக்கும் செய்தியை கூற வேண்டும் என்ற ஆவலில் விழுதல் என்பது மறுபடியும் வீழ்ந்து விடாதிருப்பதற்கான முன் எச்சரிக்கையும் வாழ்வின் முன்னேற்றத்திற்கு முயல வைக்கும் முதல் படியுமே ஆகும் என்ற எண்ணக்கருவுடன் இனிது தூங்கி விட்டான்.
(தொடரும் )

தொடர்ச்சி 28 (எழுதுபவர் திருமதி. தேனம்மை இலட்சுமனன் இந்தியா)
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விழுதல் என்பது எழுகையே“
பகுதி: 28

எழுதியவர்: திருமதி. தேனம்மை லகஸ்மணணன்  --- கைதராபாத், ,ந்தியா
திருமதி.தேனம்மை லக்ஸமணன் பற்றிய அறிமுகம்
வசிப்பிடம்: கைதராபாத், ,ந்தியா (காரைக்குடி, சென்னை,தமிழ்நாடு)
,ளங்கலை வேதியல் பட்டதாரி (டீ. ளுஉ (ஊhநஅளைவசல) முதுநிலை அரசியல் அறிவியல்  பட்டதாரி (ஆ.யு  Pழடவைiஉயட ளுஉநைnஉந)
புத்தக ஆசிரியர்,சுதந்திர எழுத்தாளர்,ஊடகவியலாளர், கவிஞர், வலைப்பதிவர்,சிறப்புப் பேச்சாளர்,வசனகர்த்தா,பாடலாசிரியர், நிகழ்ச்சித் தொகுப்பாளர்,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.
மூன்று புத்தகங்களின் ஆசிரியர்: “சாதனை அரசிகள்” (போராடி ஜெயித்த பெண்களின் சாதனைக் கதைகள்) “ங்கா” (குழந்தைக் கவிதைகள்) “அன்னப் பட்சி” (கவிதைத் தொகுப்பு)
தினமணி- காரைக்குடி புத்தகத் திருவிழா ,ணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றமை, தினமலரில் 4 சிறுகதைகள், குங்குமத்தில் 4 சிறுகதைகள், புதிய தரிசனத்தில் 2 சிறுகதைகள் வெளியாகின.சிறந்த வலைப்பதிவாளராக 25 விருதுகளுக்கு மேல் வாங்கியமை.
,வருடைய வலைப்பதிவில்  கதை,கவிதை,கட்டுரை,சினிமா,புத்தக விமர்சனம்,நிகழ்வுப் பகிர்வுகள்,புத்தக வெளியீடுகள், போன்றவை வலைப்பதிவில் பதிவேற்றம் செய்தல் சமையல் குறிப்புகள், ,ளமைக்கால பள்ளிப்பருவ காலக் கவிதைகளை, சமையல் குறிப்புகளை வலைப்பதிவில் பதிவு செய்தல்.
,துவரை 1500 கவிதைகளை எழுதியிருக்கிறார்.லேடீஸ் ஸ்பெசல், ,வள் பதியவள்,சூரியக்கதிர்,நம் தோழி, குமுதம் பக்தி ஸ்பெஸல் ஆகியவற்றில் கட்டுரைகள் பேட்டிகள் கோலங்கள்.குங்குமத்தில் 4 சிறுகதைகள்,3 கவிதைகள் வெளிவந்துள்ளன.சமையல் குறிப்புகள்,உணவுக் குறிப்புகள் வெளிவந்துள்ளன.
குமுதத்தில் “அம்மா யானை” என்ற தலைப்பில் குழந்தைக் கவிதைகளும் 11 கைக்கூ கவிதைகளும் வெளிவந்துள்ளன.பூஜை அறைக் கோலங்கள் என்ற தலைப்பில் 300 கோலங்கள் வரை வெளிவந்துள்ளன.
குமுதம் கெல்த் ஸ்பெஸலில்( முரஅரவாயஅ ர்நயடவா ளுpநஉயைட ) “மேக்கப்பிற்கு பேக்கப”; என்ற தலைப்பில் ,வரின் கருத்து வெளிவந்துள்ளது. ஆனந்தவிகடன் சொல்வனத்தில் 8 கவிதைகள் வெளிவந்துள்ளன. கல்கியில் 4 கவிதைகள் வெளிவந்துள்ளன. ,ந்தியா ருடேயில் ரஜனி பற்றி ,வர் கூறிய கருத்து வெளிவந்துள்ளது. அவள் விகடனில் ஒரு கவிதை வெளியாகியுள்ளது.தேவதையில் ஒரு கவிதை வெளியாகியுள்ளது.மல்லிகை மகளில் ,ரு கவிதைகளும் 9 குட்டிக் கவிதைகளும் வெளியாகியுள்ளன.அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் “மெல்லினம்” ,தழில் “பெண் மொழி”என்ற தலைப்பில் 30 கட்டுரைகளும், ஒரு கவிதையும் வெளிவந்துள்ளன.”,ணையதள ப்ளாகர்”என்ற தலைப்பில் “நம் உரத்த சிந்தனை”,தழில் ,வரைப் பற்றி வெளியாகி உள்ளது.
“சாதனை அரசி” “ங்கா” ஆகிய ,வரின் நூல்கள் பற்றிய விமர்சனத்தை திருச்சி தினமலர்”பதிப்பிலும் ,ந்தியா ருடேயிலும்,லேடீஸ் ஸ்பெஸலிலும் வெளியிட்டுள்ளன.
,வ்விரு நூல்களும் பல்வேறு கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் ,டம்பெற்றுள்ளன.
மக்கள் தொலைக்காட்சியில் சாதனை அரசி நூல் பற்றிய விமர்சனம் ,டம்பெற்றிருந்தது, கலைஞர் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி ஆகியவற்றின் நிகழ்ச்சிகளில் ,வர் பங்கு கொண்டிருந்தார்
(குறிப்பு: திருமதி. தேனம்மை லக்ஸ்மணன் அவர்களின் கலை ,லக்கிய பன்முகத்தளங்களில் ,வரின் செயல்பாடுகள் வியப்பைத்தரும் அளவிற்கு மிக அதிகமாகவே உண்டு. அவற்றிலிருந்து பெறப்பட்ட சுருக்கமே ,து.முழு விபரத்தையும் காலக்கிரமத்தில் “தமிழ் எழுத்தாளர் ,ணைய அகம் முகநூலில் வெளியிடுவோம்.)
தகவல் தொகுப்பு
பண்ணாகம் திரு.,க.கிட்ணமூர்த்தி
திரு.எiயா முருகதாசன்
(தமிழ் எழுத்தாளர் ,ணைய அகம்)


கதை பகுதி 28 தொடர்கிறது.
கிளிக்...கிளிக்  என்று ஒரு சத்தம்.பக்கத்திலிருந்த பெண் கைத்தொலைபேசியால் பஞ்சுப் பொதியாய்க் குவிந்திருக்கும் மேகங்களை விமானத்தின் கண்ணாடி வழியாக சுட்டுக் கொண்டிருந்தாள்.
லேசாக கண்ணயர்ந்த மங்கையற்கரசிக்கு ,ந்தச் சத்தம் விழிப்பைக் கொடுக்கவே திரும்பிப் பார்த்தார்.அவள் திரும்பிப் புன்னகைத்து முகநூலில் பதிவேற்றம் செய்வதற்கு புகைப்படம் பிடிப்பதாகக் கூறினாள்.வாழ்க்கை வாழ்வதற்கே என்று எண்ணும் ,ளையதலைமுறையினரில் ,வளும் ஒருத்தி.அவளைப் பாரத்து மங்கையற்கரசியும் நட்போடு புன்னகைத்தாள்.
மங்கையற்கரசி மதுரைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியை. ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களின் அழைப்பின் பேரில் அங்கே உரையாற்றச் செல்வதற்காக ,ந்தப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
முதல்நாள் கனடாவில் சந்தித்துவிட்டு வந்த பத்மகலாவின் சாயல் தனக்கருகில் ,ருந்த  ,வளிடம் லேசாக ,ருந்தது. பத்மகலாவை முதன்முதலாக யாழ்ப்பாண பல்கலைக் கழகத்துக்கு சிறப்பு அழைப்பாளராக உரையாற்றச்  சென்ற போது சந்தித்தது நினைவுக்கு வந்தது.
„தமிழரும் மூலிகை மருத்துவமும்“என்ற தலைப்பில் உரையாற்றச் சென்ற அவரை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சரவணபவான் அவரை அழைத்துச் செல்வதற்காக கொழும்பு விமான நிலையத்திற்கு வந்திருந்த போது அவருடன் பத்மகலாவும் சீலனும் வந்திருந்தனர்.
பேராசியர் சரவணபவான் ஏற்கனவே பேராசிரியை மங்கையற்கரசிக்கு அறிமுகமானவர். மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியர் சரவணபவானும் சென்று வந்திருக்கிறார். விமான நிலையத்தில் வைத்து பத்மகலாவையும் சீலனையும் பேராசிரியர் மங்கையற்கரசிக்கு அறிமுகம் செய்து வைத்த அவர்“,வர்களிருவருமே நீங்கள் மதுரைக்கு செல்லும் வரை உங்களுக்கான உணவு தங்குமிட வசதி போன்றவற்றை மேற்கொள்வார்கள்“ எனச் சொன்னார்.
ஈழத்தில் தங்கியிருந்த ஒரு வாரத்திற்கும் பத்மகலாவும் சீலனும் அன்போடும் மிகுந்த அக்கறையுடனும் பேராசிரியைக் கவனித்துக் கொண்டனர்.பத்மகலா மீன்பாடும் தேன்நாடான  மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு படிக்க வந்து பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் தனது தோழியர்களுடன் சேர்ந்து ஒரு வீடு எடுத்து தங்கியிருந்தார்.
பேராசிரியை  அவர்களுடன் தங்குவதற்கு விருப்புக் கொண்டதால் தங்குவதற்கு விடுதி வேண்டாம் என்று சொல்லி அந்த ஒரு வாரத்திற்கும் பத்மகலாவுடனேயே தங்கியிருந்தார். பத்மகலா மட்டக்களப்பிலிருந்து ஒருவகையான அரிசி கொண்டு வந்திருந்தார்.அதன் சுவையே தனிரகமானது.
சீலனும் தனது தாயாரைக் கொண்டும் ஆப்பம்,பிட்டு,பொரித்த மிளகாயில் தேங்காய்ச் சம்பல்,ரொட்டியும் உருளைக்கிழங்கு மசியல்,,டியப்பம் பால்சொதி,சக்கரைப் பொங்கல்,குழம்பு சமைப்பித்துக் கொண்டு வந்து பத்மகலாவிடம் கொடுத்தும், பத்மகலாவும்  சீலனும் விதம் விதமாக உணவு தந்து என்னைத் திக்குமுக்காட வைத்தனர்.
அவர்களுக்குள் தோழமையைத் தாண்டிய ஒரு ஈர்ப்பு அவர்களுக்குள் ,ருப்பதை பேராசிரியையால்  கவனிக்க முடிந்தது. சீலனும் பத்மகலாவும் ஒவ்வொரு வேளையும் அவரைக் கவனித்துக் கொண்டதோடு மட்டமல்ல அவர் ஆசைப்பட்ட யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு கூட்டிச் சென்று காண்பித்தனர்.அப்போது அவர் பேசுவதை எல்லாம் கேட்பதில் அவர்களுக்கு அலாதிப் பிரியம்.
எப்பேர்ப்பட்ட நூலகம்.,ன்றைக்கெல்லாம் கிடைக்குமா அப்பேர்ப்பட்ட ஓலைச்சுவடிகள். அவர் கல்லூரிக்காலத்தில் படிக்கும் போது அங்கிருந்த நூல்கள் எரியூட்டப்பட்ட செய்தி கேட்டறிந்து பரிதவித்தது பற்றி ஆதங்கத்துடன் பகிர்ந்து கொண்டார்.
ஒருவர் மொழியைப் புத்தகங்களை எரிப்பதன் மூலம் அவர்களை வேரோடு அழித்துவிட முடியும் என்று எண்ணுவது எவ்வளவு கொடுங்கனவு.பேராயர் ஜெபநேசனும்,நூலகர் செல்வராஜாவும்,வி.எஸ்.துரைராஜாவும் எழுதி ,ருந்ததைப் படிக்கும் போது தன் ரத்தம் எவ்வாறு கொதித்தது என்று அவர் சொல்லும் போது முகம் எல்லாம் சிவந்து விட்டிருந்தது. உணர்ச்சிப்பெருக்கில் அதiனைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தார்.
,ன்றைக்கு திரும்ப நெடிதுயர்ந்து நின்றாலும் சில மூலிகை மருத்துவக் குறிப்புகள் கொண்ட ஒலைச்சுவடிகளும் எரியூட்டப்பட்டிருக்கலாம் என்பது அவர் அனுமானம். வெளியே வந்த அவர்கள் சில மீற்றர் தூரத்திலிருந்த சுப்பிரமணியம் பூங்காவில் அமர்ந்து கொண்டனர்.
,ன்றைய ஆங்கில மருத்துவம் நோய்வந்தபின் மருந்து கொடுத்துக் குணமாக்குவது.நோய் மூலத்தை ஆராய்வதல்ல.தமிழர் சித்தமருத்துவம் நோய்நாடி நோய் முதல் நாடி மருத்துவம் அளிப்பது.ஆங்கில மருந்துகள் விற்பனைக்காக நோயை உருவாக்கிப் பின் அதற்கான மருந்தை விற்பனைக்கு கொண்டு வருபவை.
நம் முன்னோர்களின் மூலிகை குறிப்புகளில் எய்ட்ஸிலிருந்து எல்லா வியாதிக்கும் மருந்து ,ருக்கிறது.சிலவற்றின் வேர்,சிலவற்றின் பட்டை,சிலவற்றின் ,லைகள் ,ப்படி.அவற்றை எல்லாம்  உரிமையம் அடிப்படையில் வாங்கி வைத்துக் கொண்டு ஒவ்வொரு நாட்டினரையும் நவீன முறையில் அடிமைப்படுத்தல் நடக்கிறது. நில வேம்பின் பட்டையைக் காய்ச்சிக் குடித்தால் காய்ச்சல் மட்டுப்படும்.,தைக்கூட தங்கள் நாட்டுமரம் என்ற உரிமையத்தை வாங்கி வைத்துக் கொள்ள முயற்சி நடக்கிறது. அதன் பின் நம்முடைய வேரையும் மூலிகைகளையும் பயன்படுத்துவதற்கு நாங்கள் அவர்களுக்கு கப்பம் கட்ட வேண்டிவரும்.பேராசிரியை மங்கையற்கரசி சொல்வதைக் கேட்டு சீலனும் பத்மகலாவும்“ஓம் அது உண்மைதான் புரொபஸர்“ என ஆமோதித்தனர்.
பத்மகலாவினதும் தருமசீலனினதும் முகத்தைப் பார்த்தார் பேராசிரியை. ,ருவருமே பருவ வயதை உடையவர்கள். கண்களில் ஆவலும் பருவ வயதிற்கான காதலும் துளிர்விடுவதை உணர்ந்தார்.தன் வயதினர் போல் அவர்களிடம் பேசாமல் சற்று வேறு ஏதும் பேசலாம் என்று பேச்சை மாற்ற எண்ணினார்.
பி.எச்.அப்துல் கமீத்,கே.எஸ்.ராஜா,,ராஜேஸ்வரி சண்முகம் ,வர்களது  பாணியில் வானொலி நிகழ்ச்சிகளைத் தொகுப்பது போல் பேசிக் காட்டினார்.“மேலூர்தான் எங்கள் ஊர்.பள்ளிவிட்டு வந்ததும் ஐந்து முப்பதிலிருந்து ஆறு மணி வரைக்கும் எங்கள் அம்மா பாட்டுக் கேட்பார்கள். நாடாக்கட்டிலில் அமர்ந்தும் விளையாடியபடியும் அந்தப் பாடல்களைக் கேட்போம்.அந்த வளமைமிக்க சொற்கள் தமிழ்நாட்டில் கூடக் கேட்கக் கிடைக்காது.நாங்கள் எல்லோரும் சிலோன் வானொலிப் பைத்தியங்கள்.
தொலைக்காட்சி வருவதற்கு முன் அதில் சில கதைகளை அந்தப் பாத்திரங்கள் போலப் பேசி நடிப்பார்கள். அதன் பின்னணியில் ,சையும் ஒலிக்கும், அதற்குப் பெயர் ,சையும் கதையும்.எத்தனை ,ன்பம் நிரம்பிய காலகட்டம் அது.நான் கல்லூரி வருவதற்குள் எல்லாம் திசைமாறி எங்களுக்கு பித்துப் பிடித்தது போலாயிற்று. 71களிலேயே மணல்தேரியில் காத்துக்கிடந்து கிடைத்த படகில் வந்ததாகச் சொன்ன நீலாக்கா எங்கள் வீட்டில் பலவருடம் வேலை பார்த்தார்.83 ஆவணி 3 ஞாபகம் ,ருக்கு.கல்லூரியில் ,ருந்து விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த நாங்கள் 20 நாட்கள் கல்லூரிக்குச் செல்லவில்லை.
கலவரம் பற்றிக் கேள்விப்பட்ட நீலாக்கா வந்தபோது,  தன்னைப் படகில் ஏற்றிவிட்டு ,டம் ,ல்லாமல் அங்கேயே தங்கிவிட்ட அப்பாவின் ஞாபகம் வந்து கதறி அழுதார்“என்றார்.அவர் கண்கள் லேசாகக் கசிந்திருந்தன.
பேராசிரியை யதார்த்தமானவர் நகைச்சுவை உணர்வுமிக்கவர். மீண்டும் அவர்கள் முகம் தீவிரமாவதைக் கண்டு போர்த்துக்கேயர் விட்டுச் சென்ற பைலாப் பாடல் மெட்டில்“ சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே பள்ளிக்குச் சென்றாளோ படிக்கச் சென்றாளோ“எனப் பாடவும் புன்னகை புரிந்தார்கள்.
„கள்ளுக்கடைப் பக்கம் போகாதே உன் காலைப் பிடித்துக் கெஞ்சுகிறேன்“ என்று அவர் சிலோன் பொப்பிசைப் பாடலை அபிநயம் பிடித்துப் பாடவும் ,குபுக்கென்று சிரித்தார்கள்.
„அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே கேள்வி ஒன்று கேட்கலாமா உனைத்தானே ,ருமனம் ஒரு மனம் ஆகும் திருமணம் அப்போது ஆகும் செலவிற்கு வழி யாது என்கிறாய் கேள்வி அதுதானே“ என்று சேமிப்புப் பற்றிப்  பாடும் பாடலைச் சொல்லும் போது அவர்கள் ,ருவரும் நாணத்தோடும் சங்கோசமாகவும் சிரித்த முகத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதை உணர்ந்தார்.
,ந்தக் காதல்தான் மனிதர்களை எப்படி ஆட்டிப் படைக்கிறது.ஒருவர் ஒருவர் கண்ணாலேயே விழுங்கச் செய்கிறது.ஒருவருக்காக ஒருவரை துடிக்கச் செய்கிறது. மாயக்காரன் கோல் போல் உலகில் எங்கிருந்தாலும் தொட்டுவிட்டு வருகிறது. உணர்வுகளால் ஒன்றியவர்களை கண்டங்கள் பிரிக்க ஏலமா. காதல் போயின் காதல் போயின் சாதல் என்று எழுதி வைத்தானே முண்டாசுக் கவிஞன்.
காதல் மனிதரைத் தோல் போலாக்குமா......ஆக்கி ,ருந்ததே அந்த பிரிவுத் துயர்.பசலை படிந்த தோற்றத்தில் பத்மகலா.அவருக்கே நம்ப முடியவில்லை. மூன்று வருடங்களுக்கு முன் பார்த்தவளா ,வள்.....,ங்கே எப்படி...
நேற்று கனடாவில் தமிழ்ச்சங்கத்தின் பேரில் சென்றிருந்த அவர்“தமிழ்ச்சித்தர்களும்மூலிகை மருத்துவமும்“என்ற தலைப்பில் அகத்தியரின் செங்கடுக்காய் கற்பம்,கருவூரானின் நாறுகிரந்தைக் கற்பம்ஆகியவற்றை விரிவுரையாற்றிக் கொண்டிருந்தார். கனடாவில் பிறந்த வில்லியம் ஆஸ்லே என்ற ஆங்கில மருத்துவர்கூட நம் தமிழ்ச்சித்த வைத்தியப் பாணியில் நோய் நாடி நோய் முதல் நாடி என்பது போல எப்படிப்பட்ட வியாதியை நாம் குணப்படுத்துகிறோம் என்பதைவிட நோயாளிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதை முடிவு செய்து மருந்து கொடுப்பதே சாலச் சிறந்தது என்று கூறியதையும் மேற்கோளாகக் கூறினார்.அப்போது ஆவலூறும் ,ரு விழிகள் அவரை மொய்த்துக் கொண்டிருந்தன. சில நிமட நினைவு மீட்டலுக்குப் பின் அவருக்கு ஞாபகம் வந்தது.
தன்னையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்த அவள்......அவள்......அவள்
யாழ் பல்கலைக் கழகத்தில் பார்த்த துடிப்பான பெண்..... நிகழ்வு முடிந்ததும் ஓடி வந்து கைகொடுத்த சிரித்தாள்.
„,ங்கே எப்பொழுது வந்தாய்.....,ங்கே படிக்கிறாயா....“
„புரொபஸர்....புரொபஸர்“ என அழைத்து மரியாதையுடன் பார்த்தாள்...எதிர்பாராமல் பேராசிரியைச் சந்தித்த ஆச்சரியம் பத்மகலாவிற்கு....எதிர்பாராத சந்திப்பு தடுமாறினாள்....
„அங்கை எங்களால தொடர்ந்து படிக்க முடியவில்லை. சூழ்நிலை எங்களைத் துரத்திக் கொண்டேயிருக்குது.பல்கலைக் கழகத்தில் நடந்த சம்பவத்தில் எதிலுமே ஈடுபடாத சீலனைக் கைது செய்தார்கள். எனக்கு பாதி உயிர் அங்கேயே போய்விட்டது. நாங்கள் ,ருவரும் வௌ;வேறு நாடுகளில் அகதிகளாக ,ருக்கிறம். நான் ,ப்ப ,ங்கை அக்கா வீட்டிலை ,ருக்கிறன். ,ருவரும் உயிரோடிருக்கிறம். ஊரிலை விட்ட மருத்துவப் படிப்பை ,ங்கை தொடருகிறன். அவர் சுவிஸில் மக்டொனசில் வேலை செய்கிறார்.வீட்டிலை முரளி என்பவரைத் திருமணம் செய்யச் சொல்லி அக்கா வற்புறுத்துகிறார்.என்ன செய்வதென்று புரியல...“என்றாள்.
கொழுகொம்பில் ,ல்லாத கொடி துவண்டு நிற்பதைப் பார்த்தது போல பேராசியை மங்கையற்கரசிக்கு வருத்தமாக ,ருந்தது.
„சீட் பெல்ட்களை அணிந்து கொள்ளுங்கள்“விமானத்தில் அறிவிப்பு வந்ததும் சிந்தனைகளில் ,ருந்து வெளிவந்த மங்கையற்கரசி பக்கத்திலிருந்த பெண்ணைப் பார்த்து முறுவலித்தார்.விமானம் தரை ,றங்கியது.அவள் குடும்பத்தாரைச் சந்திக்கப் போகும் பரபரப்பில் ,ருந்தாள்.
தொடரும்  29
 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

„விழுதல் என்பது எழுகையே“
பகுதி: 29

 

எழுதியவர்: திருமதி. தேனம்மை லகஸ்மணணன்  --- கைதராபாத்இ இந்தியா

பேராசிரியை மங்கையற்கரசி தருமசீலனை சந்திக்கும் ஆவல் ஏற்பட்டது. பத்மகலாவிடம் தொலைபேசி எண்ணை வாங்கி தருமசீலனிடம் தொடர்பு கொண்டு பேசி மறுநாள் சந்திப்பதாகச் சொல்லி இருந்தார். பேராசிரியை மங்கையற்கரசி சுவிசுக்கு வந்திருக்கிறார் என்பதை சீலனால் நம்பமுடியவில்லை. ஆச்சரியத்துடன் „எங்கை தங்கியிருக்கிறீர்கள் நான் வந்து சந்திக்கிறன்“ என்ற சீலன் பேராசிரியை மங்கையற்கரசியிடமிருந்து அவர் தங்கியிருந்த விடுதியின் பெயரையூம் வீதியின் பெயரையூம் கேட்டு அறிந்து கொள்ளுகிறான்.
வேலையை முடித்துக் கொண்டு வந்து பேராசிரியை மங்கையற்கரசியை அவர் தங்கியிருந்த விடுக்கு வந்த சந்தித்தான் சீலன். மக்டொனாசிலிருந்து வந்திருந்ததனால் முகம் களைத்து எண்ணைத் தன்மையாகவிருந்து.
பேராசிரியை மங்கையற்கரசி விடுதியின் வரவேற்புக்கூடத்தில் சீலனின் வருகைக்கா காத்திருந்தார்.சீலன் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு உறவினரைப் பார்க்க வருவது போல் பேராசிரியை மங்கையற்கரசி அமர்ந்திருந்த இடத்தை நோக்கி வருவது வரவேற்புக் கூடத்தின் பெரிய கண்ணாடிச் சுவருக்கூடாகத் தெரியவே பேராசிரியை மங்கையற்கரசியூம் தனது இருக்கையைவிட்டு எழுந்து வாசலுக்கு விரைந்தார்.
பேராசிரியை மங்கையற்கரசி சீலனை தனது பிள்ளையைப் போல கட்டியணைத்து மகி;ழ்கிறார். இருவர் கண்ணிலும் கண்ணீர் கசிகிறது.சீலன் மெலிந்திருப்பதாக பேராசிரியை உணர்கிறார்.
„புரொபஸர் உங்களை நான் சந்திப்பன் என்று எதிர்பார்க்கேலை.நீங்கள் பத்மகலாவைப் பார்த்தது சநதோசம்“. ஆர்வத்துடன் தன்னைப் பார்த்து பேசியதைப் பார்த்த போது தனது கண்ணுக்குள் பத்மகலாவைத் தேடியது போல் இருந்தது.
மருத்துவராக வர வேண்டிய இளைஞன் மக்டொனால்ஸில் வேலை செய்கிறானே என மனம் வாடினார் பேராசிரியை மங்கையற்கரசி. ஆனால் மக்டொனால்சில் தான் வேலை செய்வதைப் பற்றி அவன் கலைப்படவில்லை.பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்கள்  பகுதி நேர வேலை செய்வது ஐரோப்பாவில் சகஜம். இங்கு தெருக்கூட்டுவதைக்கூட யாருமே  கௌரவக் குறைஞ்சலாக நினைப்பதில்லை என சீலன் சொன்னதை பேராசிரியை மங்கையற்கரசி“உண்மைதான்“ என ஏற்றுக் கொண்டார்.
இருவரும் திறமைசாலிகள்.உயிரையூம் மானத்தையூம் காப்பாற்றிக் கொள்ளு கண்டம் கண்டமாக ஓடும் ஓட்டத்தில் எத்தனை விசயங்கள் முக்கியமானதாக இல்லாமல் போகின்றன.முதலில் வெட்டு விழுவது கல்வியின் மேல்தான்.திருமணம் செய்தால் தொல்லை போச்சு.சீரழிவில் இருந்து காப்பாற்றினாற் போல் ஆச்சு என்று திருமணம் செய்து அனுப்பி விடுகிறார்கள்.ஆணுக்கு மட்டும் அல்ல பெண்ணுக்கும் படிப்பு முக்கியம்.சொந்தக் காலில் நிற்பதும்இசுயமான சிந்தனை என்பதும் சுய விடுதலை என்பதும் இருபாலாருக்கும் கல்வியூம் பதவியூந்தான் தரும்.
„சீலன் அவளை நான் பார்த்தேன்.பாதியாக இருக்கிறாள்.இங்கே நீ மறுபாதியாக இருக்கிறாய்.காதல் ஒரு நோய்தான். ஒருவரை மட்டுமல்ல இருவரை ஒரே நேரத்தில் எப்படிப் பீடித்து வாட்டுகிறது.இந்தக் காதல் நிறைவேற ஒரே ஒரு வழிதான் இருக்கிறது“
சொல்லுங்கோ புரொபஸர் என்ன வழியூண்டு.எதானாலும் உடன்படுகிறௌம்“ஆவல் ஒளிவிட்டது சீலனின் கண்களில் தங்களை ரட்சிக்க வந்த தேவதை போல பேராசிரியை மங்கையற்கரசியைப் பார்த்தான்.
„பத்மகலா கனடாவில் படிக்கத் தொடங்கிவிட்டாள். நானும் அவளிடம் முதலில் படிப்பை முடிக்கச் சொன்னேன்.தற்போது இங்கே வேலை செய்யூங்கள்.நான் திறமையான வெளிநாட்டு மாணவருக்கான கோட்டாவில்  உதவித் தொகையூடன் கூடிய மருத்துவப் படிப்பிற்கு என்னுடைய பேராசிரியைக் கோட்டாவில் தமிழகத்தில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் முயற்சி செய்கிறேன்.
படிபு;புத்தான் உண்மையான சுதந்திரத்தைக் கொடுக்கும்.அதன் பின் கிடைக்கும் உத்தியோகம் பதவிதான் முடிவெடுக்கும் தைரியத்தைக் கொடுக்கும்.உங்கள் படிப்பில் இருவரும் முதலில் கவனம் செலுத்துங்கள்.பத்மகலாவின் அக்காவிடமும் திருமணம் செய்வதை சில ஆண்டுகள் ஒத்திப்போடும்படியூம் அவளை மருத்துவராக்குவது குடும்பத்துக்கு மட்டுமல்ல மனித குலத்திற்கே செய்யூம் நன்மை என்றும் கூறியூள்ளேன்.எனவே அவளை நினைத்து இருவரின் காதலும் நிறைவேறுமா நிறைவேறாத என மனம் பதைபதைப்படையாமல் நீங்களும் படிக்கலாம்.இன்னும் மனித குலத்திற்கு நீங்களிருவரும் இணைந்து ஆற்ற வேண்டிய தொண்டு இருக்கிறது.மருத்துவர்களை மட்டுந்தான் எந்தத் தேசமும் வேண்டாம் என்று சொல்வதில்லை இருகரமும் கூப்பி வரவேற்கும்.
இனி எந்த அசம்பாவிதமும் உங்கள் வாழ்வில் தொடராது.இந்த விழுதல் இனி எப்படி மீண்டு எழப்போகிறௌம் என்பதை எதிர்நோக்கி இருக்கிறது. நம்பிக்கையூடன் இருங்கள்.நான் தமிழகம் சென்றதும் தொடர்பு கொள்கிறேன் என்றார்.
சீலனின் கண்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன.கல்வியூம் கிடைக்கப் போகின்றதுஇகாதலியூம் கிடைக்கப் போகின்றாள்.மகத்துவம் வாய்ந்த விசயங்கள் பேராசிரியையின் வரவால் நிகழப் போகின்றன.அவன் ஒன்பதாம் மேகத்தில் மிதப்பவன் போல உணர்ந்தான். காதல் மாயக்காரன் தூரிகை போல இருவெறு தேசத்திலிருக்கும் இதயங்களையூம் பாசத்தின் வண்ணங்களால் குழைத்துக் குழைத்து இழைத்துக் கொண்டிருந்தது.
பேராசிரியை மங்கையற்கரசியிடம் சீலன் விடைபெறும் நேரம் வந்தது“புரொபஸர்...“எனத் தயங்கினான் சீலன். „உங்களுடைய உதவிக்கு நன்றி புரொபஸர்....ஆனால் எனக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏதாவது ஒன்றில் அல்லது கனடாவில் படிக்கத்தான் விருப்பம். இப்ப நான் ஜேர்மன் மொழி படித்துக் கொண்டிருக்கிறன்....எனச் சொல்லி முடிப்பதற்குள்“நல்லது நானும் தமிழ்நாட்டில் படிக்க முயற்சி செய்கிறேன்....நீங்களும் முயற்சி செய்யூங்கள் ...எது வசதியோ அதைச் செய்யூங்கள்“ எனச் சொல்ல சீலன் விடைபெற்றுச் செல்லுகிறான்.
(தொடரும்)
தொடர்ச்சியை (30) திரு.எம்.என.;எம். அனஸ் இலண்டன் அவர்கள் எழுதுவார்.
   



   
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விழுதல் என்பது எழுகையே

 

பகுதி 30 எழுதியவர்
இளைய அப்துல்லாஹ் (அனெஸ்)  இலண்டன்-

இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற எழுத்தாளர்

1984 ம் ஆண்டில் இருந்து சிறுகதைகள்இ இலக்கியக்கட்டுரைகள் கவிதைகள் மூலம் எழுத்துலகில் பிரவேசித்தவர் இளைய அப்துல்லாஹ்.
இளைய அப்துல்லாஹ் லண்டன் ‘தீபம்’ தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராகவும்இ விவரணத் தயாரிப்பாளராகவும் 13 வருடங்கள் பணிபுரிந்தார்.

இளைய அப்துல்லாஹ்வின் ஆறு தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன.

1‘துப்பாக்கிகளின் காலம்’ சிறுகதை
2‘பிணம் செய்யும் தேசம்’ ‘உயிர்மை’ வெளியீடாக வெளிவந்த ‘பிணம் செய்யும் தேசம்’ கவிதை நூலுக்கு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்திருக்கிறது.
3-அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன்-கட்டுரை(உயிர்மை)இ
4-கடவுளின் நிலம்-கட்டுரை (விஸ்வ சேது இலக்கியபாலம்)
5-லண்டன் உங்களை வரவேற்பதில்லைகட்டுரை(காலச்சுவடு)இ
6-நீரில் விளக்கெரியும் நந்திக்கடல்-கட்டுரை (காலச்சுவடு

தொடர்ந்து இந்தியா டுடே இதழில் நூல் விமர்சனங்கள் எழுதி வருகிறார்.

இளைய அப்துல்லாஹ் (அனெஸ்)  இலண்டன்



சீலன் எப்பொழுதும் கெட்டிக்காரன் என்று பேராசிரியர் மங்கையற்கரசி நினைத்துக்கொண்டார். அவருக்கு உதவி செய்யூம் மனம்.
பொழுது போய் விட்டது. வெளியில் பனி லேசாக துhறிக்கொண்டிருந்தது. இறங்கி நடந்தான்.எப்படித்தான் இந்த வெள்ளைக்காரனுக்கு பனியில் பழக முடிந்ததோ. மனதுக்குள் சிரித்துக்கொண்டான். சில நேரங்களில் பனி வேண்டும் போல இருக்கும். சில நேரங்களில் வேண்டாம் போல இருக்கும். வாழ்க்கையூம் அப்படித்தான்.
பேராசிரியர் சொன்னதை மனம் அசைபோட்டபடியே நடந்து கொண்டிருந்தான். எல்லாம் அவர் சொன்னபடி நடந்தால் நல்லாயிருக்கும். பஸ் தரிப்பிடத்திற்கு வந்து விட்டான். பஸ் தரிப்பிடத்தில்  காதல் சோடி ஒன்று கருத்தொருமித்து கட்டிப்பிடித்தபடி இருந்தது குளிருக்கு அது இதமாக இருந்தது. கலாவை நினைத்துக்கொண்டான் மனதில் பூ பூத்தது. அவள் இங்கை இருந்தால் எப்பிடி இருக்கும். கற்பனையில் கலாவின் உதட்டில் ஒரு முத்தம் வைத்தான். எல்லாம் துhரத்து நினைவூகள் மட்டும்தான். உதட்டோரம் லேசான புன்னகையூம் முத்த சுவையூம் வந்து போயின.
என்னதான் இருந்தாலும் தமழரின் அகதி வாழ்க்கை ஒரு அந்தரமான வாழ்க்கைதான். ஐரோப்பாவின் வாழ்க்கையை ஊரில் இருந்து பார்க்கும் போது பெரும் செல்வந்த வாழ்க்கையாகத்தான் தெரியூம். ரஸ்யா நாட்டுக்குள்ளால் உக்ரெயின் எல்லையில் பனி ஆற்றில் எத்தனை தமிழர்கள் அடையாளம் தெரியாமல் செத்துப்போனார்கள். எத்தனை கனவூகளோடு வந்தவர்கள் அவர்கள். அவர்களை நினைத்தால் அவனுக்கு துக்கம் தொண்டையை அடைத்துக்கொண்டு வரும்.
உயிரை கையில் பிடித்துக்கொண்டு இங்கு வந்ததன் பின்பும் எத்தனை பிரச்சனைகள் எத்தனை சிக்கல்கள்.
இலங்கையில் இருந்து தப்பி வந்து சீலனின் நண்பன் தியாகு  இந்தியாவில் இருக்கிறான். இந்தியாவில் இருந்து லண்டன் வருவதற்கு பல வழி முறைகளை முயற்சி செய்து பார்த்தான். முடியாமல் இருக்கிறது.
இதற்கிடையில் கனடாவில் இருந்த தியாகுவின் காதலி அடம் பிடித்து தமிழகம் போய் அவனை கலியாணம் செய்து கொண்டாள். சரி வாழ்க்கைதானே வாழ்ந்து பார்ப்போமே என்றுதான் நினைத்தான் தியாகு.
அவளும் கெட்டிக்காரி அவள் கனடாவில் அவன் தமிழகத்தில் புருசன் அந்தரத்தில் இருக்கிறான். ஆனால் எத்தனை காலத்துக்கென்று இப்படி வாழ்வது என்று முடிவெடுத்து விட்டாள். அவளின் முடிவூ சரிதான்.
அவர்களுக்கு ஒரு பெடியன் பிறந்தான். அவன் அம்மாமாதிரி வெள்ளையாக இருந்தான். அவனுக்கு மூன்று வயதில் தமிழகம் போய் அப்பாவை அவன்  பார்த்தபோது ~~அப்பா நீ ஊத்தை|| என்று சொல்கிறான்.
தியாhகு நல்ல பகடிக்காரன். ~~நீ வெள்ளையாய் அம்மா மாதிரி பிறந்திட்டாய் அதுக்கு நான் என்னடா செய்யூறது.||
~~உனக்கு நெஞ்சிலை முடி இருக்கு நான் எப்பிடி உன்ரை மேலிலை படுக்கிறது|| என்று  சொன்ன மகன் ஓடிப்போய் துவாய் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து தகப்பனின் நெஞ்சில் போட்டுக்கொண்டு அவன் மீது ஏறிப்படுத்துக்கொண்டான்.
தியாகு ஒருநாள் தொலைபேசியில் கதைக்கும் போது இதனை சீலனிடம் சொன்னான். இது சொல்லிச்சிரித்தாலும் இதற்குள் எத்தனை வாழ்வூச்சிக்கல்கள் இருக்கின்றனஇஎத்தனை சமூக முரண்பாடுகள் இருக்கின்றன.
எமது தலைமுறையோடு எமது மண்ணின் மணம் இல்லாமல் போய் விடுமோ என்ற பயம் சீலனை பல முறை ஆட்கொள்ளும்.
யாழ்ப்பாணத்திற்கு வரும் வெளிநாட்டில் பிறந்த எமது தமிழ் பிள்ளைகள் படும் அந்தரத்தை பார்த்தால் தெரியூம். நல்லுhர் கோவில் திருவிழா நேரம் மட்டும் காஃப் சாறியை ஆசையாக கட்டுவார்கள் பெண் பிள்ளைகள். திருவிழா முடிந்த கையோடு வெளி நாட்டு உடுப்புக்கு மாறி விடுவார்கள்.
ஊரில் உள்ள பேரன் பேத்திகளின் வியர்வை மணம் இவர்களுக்கு பிடிக்காது. ~~வாம்மா அல்லது வா அய்யா|| என்று கொஞ்சக்கூப்பிட்டால் கிட்டவே போக மறுக்கிறார்கள். வயதான ஊரில் உள்ள பேரன் பேத்திக்கு இவர்களின் வெளிநாட்டு பேர்ஃபியூ+ம் வாசனை ஒத்து வருகுது இல்லை. இவர்களுக்கு அவர்களின் வியர்வை வாசம் ஒத்து வருகுதில்லை.
நாங்கள் அம்மம்மா சந்தைக்கு போய்விட்டு வந்தபோது அவவின் சீலை மடிக்குள் கட்டிவந்த இலந்தைப்பழத்தை பங்கு போட்டு சாப்பிட்டோம். அம்மம்மாவின் சீலை வாசம் இன்னும் மனதுக்குள் ஒட்டியே கிடக்கிறது. அது அன்பு...... சீலனுக்கு பெரு மூச்சு ஒன்று இரைந்து வெளியானது...
பஸ்ஸில் சனம் இல்லை. ஆசனத்தில் சிக்காராக அமர்ந்து கொண்டான். ஊரில் வாழ்ந்த வாழ்க்கை எப்படி இருந்தது. மனம் சஞ்சலப்பட்டது. ஊரை நினைத்தால் அவனுக்கு எப்பொழுதும் மனதுக்குள் பல நினைவூகள் வாட்டும்.
தனது அம்மாவின் ஐயாவை நினைத்தான்.அம்மய்யா வாழ்வின் மறக்கமுடியாத ஒரு மனிதர்.பெரும் உழைப்பாளி.பேராசை இல்லாத மனிதர்.யாருடனும் எந்த வம்பு தும்புக்கும் போகாத மனிதர். அவர் இப்பொழுது உயிருடன் இருந்திருந்தால் அவரை தாங்கு தாங்கென்று தாங்கியிருப்பான். அம்மய்யா படிப்பறிவூ இல்லாத மனிதர் தான் ஆனால் உலக அறிவூஇ அரசியல் அறிவூ நிரம்ப்பப்பெற்றவர். தந்தை செல்வாவில் அன்பு அதிகம்.ஆனால் அவர் எந்தக்கட்சியையூம் சார்ந்து இருந்தவரில்லை.
அவரால்தான் சீலனுக்கு இவ்வளவூ தமிழ் அறிவூ வந்தது. அரசியலில் நாட்டம் வந்தது. காலையில்  போய் கடையில் பேப்பர் வாங்கி வந்து வைத்திருப்பார். அவன் பாடசாலை விட்டு வந்து அந்த தினபதி பேப்பர் முழுவதுமாக அவருக்கு உரத்து வாசித்துக்காட்டவேண்டும். அதனால் தான் அவன் இலங்கையில் இருக்கும் பொழுது இலங்கை வானொலியில் மாணவர் நிகழ்ச்சிகளில் அறிவிப்பாளராக இருக்க முடிந்தது. அவனின் கனவே அதுதான் இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக வர வேண்டும் என்பது. ஆனால் எல்லாம் கனவாகவே போய் விட்டது.
இங்கை வந்து நாங்கள் மூன்று வேளை சாப்பாட்டை பிரச்சனை இல்லாமல் சாப்பிடுகிறௌம். ஆனால் எங்கடை சனம் யூத்தம் முடிந்து ஆறு வருடமாகியூம் இன்னும் கால் வயிறு கஞ்சியோடுதான் கழிக்கிறார்கள் என்றால் அது பெருங்கொடுமை. மனதில் அலுத்துக்கொண்டான்.
எல்லாவற்றிலும் அரசியல் அரசியல் மனித வாழ்வை சிதைத்துப்போடுகிறது. அவன் அரசியல் பிரக்ஞை உள்ளவன். இங்கு பல அரசியல் சந்திப்பு மேடைகளுக்கு போயிருக்கிறான். ஆனால் ஆத்திரம் தான் மிஞ்சும். ஊரில் அந்த மனிதர்களின் வாழ்வை சிதைத்து விட்டு இங்கு அரசியல் பேசும் மனிதர்களை அவன் அறவே வெறுத்தான்.
தன் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பான். நீண்ட நாட்களாக அவன் தன் கிராம மக்களுக்கு செய்யூம் திட்டம் ஒன்றை வைத்திருக்கிறான்.அது சரி வந்தால் அவன் கிராமம் இலங்கையிலேயே செழிப்பு மிக்கதாக ஆகி விடும். அது அவனது மக்களுக்கு செய்யூம் நன்றிக்கடன். அவனது கிராம மக்கள் எல்லோருமே அவனோடு எவ்வளவூ பாசம். யூத்தத்தில் செத்துப்போன தன் கிராம மக்களை நினைத்து இன்னும் மனம் வெதும்புவான்.
தான் சம்பாரிக்கும் தொகை தன் குடும்பத்துக்கே போதாமல் இருக்கிறது. அம்மா தங்கச்சி என்று அவன் தன் ரத்த சொந்தங்களோடு போராடிக்கொண்டிருக்கிறான். ஆனால் அது கூட அவனுக்கு சுகம்தான்.

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விழுதல் என்பது எழுகையே
பகுதி 31 எழுதியவர்
இளைய அப்துல்லாஹ் (அனெஸ்)  இலண்டன்

போன் அடித்தது. அட அம்மா எடுக்கிறா.
“ஹலோ அம்மா...||
மறு முனையில்  அம்மா
“தம்பி சீலன்........||
அம்மா அழுது கொண்டிருந்தா....
“என்னம்மா ஏன் அழுறீங்கள். அழாம விசயத்தை சொல்லுங்கோ...||
“தம்பி.....தம்பி....|| என்று அம்மா விம்மிக்கொண்டிருந்தாள்.
அம்மாவை தேற்றினான்.
“என்னவெண்டாலும் சொல்லுங்கோ நானிருக்கிறேன்.||
அம்மா எப்பொழுதும் அப்படித்தான் உடனே அழுது விடுவா.
“தங்கச்சி இண்டைக்கு காலையிலை கிணத்துப்படியில் இருந்து தடக்கி விழுந்திட்டாள். கால் முறிஞ்சு போச்சுது தம்பி......|| அம்மா தொடர்ந்து அழத்தொடங்கினாள்.
சீலன் எப்பவூம் திடகாத்திரமானவன். பதட்டப்பட மாட்டான் முடிவூகளை சரியாக எடுப்பான்.
“அவளுக்கு சின்ன வயதுதானே அம்மா கால் முறிஞ்சாலும் கவலைப்படத்தேவையில்லை நல்ல ஒரு வைத்தியராப்பார்த்து சரியாக்கிடலாம். நீங்கள் தைரியமாக இருங்கோ நாளைக்கு உங்களுக்கு காசு அனுப்பி வைக்கிறேன்.||
“அங்கை பெரியாஸ்பத்திரியில் என்ரை நண்பன் ஒருவன் முறிவூ வைத்தியராக இருக்கிறான் அவனிட்டை இப்பவே கதைக்கிறன். அவன் நாளைக்கு வீட்டுக்கு வருவான்.போனை ஒருக்கால் தங்கச்சியிட்டை குடுங்கோ.||
அவளுக்கு அண்ணா என்றால் உயிர் அவனைத்தவிர அவளுக்கு இந்த உலகத்தில் வேறு ஒருவர் மீதும் அவ்வளவூ பாசம் இல்லை. அண்ணா என்ன சொல்றானோ அதுதான் வேதம்.
அம்மாதான் ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தாள்.
அவளுக்கு கால் வலிதான் ஆனால் அவள் அண்ணாவின் தங்கையல்லவா. அவள் தையிரியமானவள். அது சீலனுக்கும் தெரியூம்.
“என்னடி காலை உடைச்சுப்போட்டியா?||
“நான் என்ன வேணுமெண்டா என்ரை அழகான கால்களை உடைச்சனான்.||
“மடைச்சி பாத்து காலை வைக்கிறதில்லையா? மடச்சி மடச்சி....|| ஏசினான்.
அவளுக்கு தெரியூம் அண்ணா தன்மேலை உயிரையே வைத்திருக்கிறான். தனக்கு ஒன்று என்றால் தாங்க மாட்டான். அவர்கள் இருவரும் அண்ணன் தங்கச்சி மாதிரி இல்லை . நண்பர்கள் மாதிரி. அவன் அடிக்கடி சொல்லுவான்  நீ எனக்கு தங்கச்சியாக கிடைத்தது நான் பெற்ற தவமடி. அப்படி சொல்ல அவள் அண்ணாவை முத்தமிடுவாள்.தங்கச்சி எப்பொழுதும் அண்ணாவை விட்டுக்கொடுக்க மாட்டாள்.
காலையிலை எழும்ப முதல் அவனுக்கு கோப்பி ஊத்திக்கொண்டு வந்து தலைமாட்டில் இருந்து விடுவாள். அண்ணாவின் முகத்தில்தான் அவள் முதலில் விளிக்கவேண்டுமாம்.
ஊராட்களுக்கே தெரியூம் இவர்களின் பாசம் பக்கத்து வீட்டுக்காரர்கள் இவர்களை சின்ன வயதில் இருந்தே பார்த்து வருகிறார்கள்.
இரண்டு பேருக்கும் நான்கு வயது வித்தியாசம் சின்னனிலை தங்கச்சியை கொஞ்சிக்கொஞ்சி இடுப்பிலையே துhக்கி வைத்து வளர்த்தவன் சீலன். அப்பொழுதே ஊராட்கள் வியந்து போவார்கள். உவன்கள் இரண்டு பேரும் என்ன பாசம். என்று சொல்லாத ஆட்களே இல்லை.
~~அண்ணாச்சி நீ இப்ப எனக்கு வேணும் போல இருக்கு உன்ரை மடியிலை படுத்துக்கிடந்தால் இந்த வலி காத்தாய் போய் விடும். நீ இல்லாதது வெறுமையாய் கிடக்கெடா...||
“எனக்கு மட்டும் எப்பிடி இருக்கும் எண்டு உனக்கு தெரியாததா? நீ காலுடைஞ்சு கிடக்க நான் இங்கை எப்பிடி நிம்மதியா இருப்பன். உன்ரை வலி என்ரை வலியல்லவா||
இரண்டு பேரும் விம்மி விம்மி அழுது விட்டார்கள்.
“எல்லாம் உனக்காகவூம் அம்மாவூக்காகவூம் மற்றது அங்கை நான் இருக்கேலாது என்ன செய்யூறது புடிச்சுக்கொண்டு போய் விடுவான்கள். இதுதானடி எங்கடை சனத்துக்கு வந்த துன்பம். பாப்பம் எல்லாம் சரி வரும். இங்கை எனக்கு அகதி அந்தஸ்த்து கிடைச்சுதெண்டால் முதல் வேலை உன்னையூம் அம்மாவையூம் இங்கை கூப்பிடுறதுதானே||
இருவரையூம் சோகம் பிய்த்துக்கொண்டது.
சோகத்தை திருப்பினான் சீலன்.
“அடி நாளைக்கு என்ரை பிரண்ட் ஒருத்தன் வாறான் முறிவூ டொக்டர். அவனை சைட் அடிச்சு துலைச்சிடாதை அவனுக்கு எற்கனவே கேர்ள் பிரண்ட் இருக்கு. கடைசியிலை அவள் பாடு அவ்வளவூதான்.||
~~ம்ம்ம்ம்..... இந்த அழகை கண்டிட்டு உன்ரை டொக்டர் என்னிலை விழுந்திட்டால் நான் ஒண்டும் பண்ண முடியாது சீலா! அதுவூம் இந்த வாளிப்பான காலை பார்க்க வாறார்.||
தங்கச்சியூம் அண்ணனும் போடுற கூத்தை பாத்தா அம்மாவூக்கு பத்திக்கொண்டு வந்தது.
~~அடியேய்.. நீ கால் முறிஞ்சு கிடக்கிறாய். குமர்ப்பிள்ளை நான் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்கிறன்.|| அம்மா கத்தினாள்.
“அம்மா எப்பவூம் அப்படித்தான். ஓகே நீ சாப்பிட்டியா? பின்னேரம் என்ன சாப்பிட்டனீ குளிருக்கு நல்ல உடுப்பு போடு..||
“அது சரி கல்ல்ல்லாh.... என்ன கதை றொமான்ஸ் ஓடுதோ... டெலிபோன் கதைச்சே காசைக்கரியாக்காதை..||
“அடி இப்ப கனடாவூக்கும் சுவிஸூக்கும் ஃபிறீ கோல் வந்திட்டுது. முந்தின மாதிரி இல்லை. தெரியூமோ.
“அப்ப கல்ல்ல்லா ...... வை நினைச்சு டெலிபோனைக்கட்டிப்பிடிச்சுக்கொண்டு கிடக்கிறியோ சீலா!||
தங்கச்சி சீலா! என்று சொல்வதை அவன் ரசிப்பான். அதில் எவ்வளவூ பாசம் இருக்கிறது என்று அவர்கள் இருவருக்கும் மட்டும்தான் தெரியூம்.
முதல் வேலை அவளின் காலை குணமாக்க வேண்டும். என்ரை அழகு தேவதையை எழும்பி நடக்க பண்ண வேணும்....
“ஓகேயடி  நான் டொக்டருக்கு பேசீட்டு உனக்கு நாளைக்கு எடுக்கிறன். யோசிக்காதை நான் இருக்கிறன்.||
~~உன்ரை டொக்டர் நாளைக்கு......சரி......|| சிரி சிரி என்று சிரித்தாள் அவள். அவளின் அந்த சிரிப்பே போதும் அவனுக்கு....
“ஓக்கே சீலா!||
-------------------
வீட்டுக்கு வந்து  குளிர் உடுப்பை கழட்டினான் சீலன். வீட்டுக்குள் ஏதோ மாற்றம் இருந்ததை உணர்ந்தான். கள்ளர் யாரும் வந்தார்களோ? மனம் சும்மா நினைத்தது.
நினைத்தது சரி பின் கதவை போய் திறந்த பார்த்தான். அது தொட்டவூடன் திறந்து கொண்டது. சுவிஸில் கள்வர்கள் வரமாட்டார்களே. இது தெரிந்த கள்ளராகத்தான் இருக்கவேண்டும். தமிழ் கள்வர்களா?
அதையூம் அவன் சுவாரஸயமாகத்தான் பார்த்தான். மனதுக்குள் சிரித்துக்கொண்டான்.
திருடன் என்றவூடன் சீலனுக்கு இப்பொழுதெல்லாம் நினைவூக்கு வருபவர் திருடன் மணியம்பிள்ளைதான்.
64 வயதான மணியன்பிள்ளை ஒரு காலத்தில் கேரள போலீஸாரின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய பெரிய திருடர். வாழ்க்கையின் பெரும் பகுதி ஓட்டத்தில் கழிந்தாலும் தன் மனைவியின் இறப்புக்குப் பின்பு மணியன்பிள்ளை திருந்தி வாழ ஆரம்பித்தார். பிறருக்கு ஒரு பாடமாக அமையட்டும் என்ற யோசனையில்இ ஒரு கட்டத்தில் சுயசரிதை எழுதத் தீர்மானித்தார்.
அவர் இவ்வாறு எழுதுகிறார்
“திருடனைப் போன்ற துயரம் நிரம்பிய வாழ்க்கை வேறு யாருக்குமே கிடையாது. திருட்டை நிறுத்தினாலும் பெயர் மாறாது. உறவினர்கள் வீட்டுக்கோ தெரிந்தவர்கள் வீட்டுக்கோ போக முடியாது. கண்கள் நம்மையறியாமல் எங்காவது தட்டுப்பட்டுவிட்டால்இ வீட்டுக்காரர்களுக்கு நோட்டமிடுகிறானோ என்ற சந்தேகம் வந்துவிடும். வாழ்க்கை முழுவதுமே குனிந்த தலைதான்.
இப்போதெல்லாம் நான் திருடுவதில்லை என்றால் யாருமே நம்ப மாட்டார்கள். திருடனுடைய பச்சாதாபத்தில் யாருக்குமே நம்பிக்கை வராது. பீடி வாங்கவூம்கூட இரவூ நேரங்களில் திருடன் வெளியே வர பயப்படுவான். போலீஸ் வேன் பக்கத்தில் வந்து பிரேக் போட்டு நிறுத்தப்படலாம்.||
அந்தப்புத்தகத்தை படித்ததில் இருந்து திருடர்கள் மீது ஒரு பற்று இருந்து கொண்டே இருந்தது சீலனுக்கு.
எல்லாம் வைத்தது வைத்தபடியே இருந்தது. மேலே அறையில் போய் பார்த்தான் லப்டொப்பை காணவில்லை.
அதைத்தான் கொண்டு போய் விட்டார் திருடன். பொலிஸில் சொன்னால் அது இருக்கும் இடத்தை கண்டு பிடித்து விடுவார்கள். அதன் சீரியல் நம்பரை பொலிஸில் பதிந்து வைத்திருந்தான். ஆனால் மணியம்பிள்ளையை நினைத்துக்கொண்டான். பொலிஸூக்கு போவதை தவிர்த்து விட்டான் பிளைச்சு போகட்டும்.
படுக்கையில் விழுந்தான். மனம் முழுக்க தங்கச்சியின் முறிந்த காலின் நினைவாகவே இருந்தது. இன்று கலாவூடனும் கதைக்கவில்லை நாளைக்கு அம்மாவூக்கு காசு அனுப்ப வேண்டும். நினைத்தபடியே துhங்கி போய் விட்டான்.

தொடரும்- பகுதி - 32
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
 
விழுதல் என்பது எழுகையே… 
பகுதி 32   
 

எழுதியவர் இணுவையூர் சக்திதாசன்,டென்மார்க் 
அறிமுகம்
இணுவையூர் சக்திதாசன் டென்மார்க்
புலம்பெயர் படைப்பாளிகளில் ஒருவர் இலங்கையில் யாழ் தாவடியி  பிறந்த இவர் இணுவிலை வசிப்பிடமாக கொண்டவர் கனகசபாபதி சக்திதாசன்.
கடந்த 25 வருடங்களா புலம்பெயர்ந்து டென்மார்க்கில் வாழ்ந்து வருகிறார்.
கொக்குவில் மேற்கு உஉவஅ தமிழ் கலவன்இ கொக்குவில் இந்துக்கல்லூரிஇ கொக்குவில் தொழில் நுட்பக்கல்லூரி ஆகியவற்றின் பழய மாணவரான இவர் தமிழில் அதிக ஆர்வம் கொண்டு பட்டிமன்றம் கருத்தரங்கம் கவியரங்கம் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு உடையவராக இருக்கிறார்.
இவர் புலம்பெயர்விற்கு பிறகு புதுக்கவிதையிலே அதிக ஈடுபாடு கொண்டவராக டென்மார்கில் பல மேடைகளில் தனது குரல்வளத்தால் இரசிகர்களை கவர்ந்து கொண்டவர்.
டென்மார்க்கில் தமிழ்த்தாய் நாடகமன்றம் ஒன்றின் அமைப்பாளராக இருந்து 24 வருடங்களாக பலவிதமான நாடகங்களை மேடையேற்றிக்கொண்டிருப்பவர். தனிநடிப்பில் தொடங்கி .. 25 நடிகர்கர்கள் வரை இவரது நாடக மன்றத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றார்கள் வருடத்துக்கு குறைந்தது 2 நாடகங்களாவது இவரது நெறியாழ்கையில் மேடையேறும்.
40 நாடகங்களுக்கு மேல் இவரது நெறியாழ்கையில் மேடையேறியிருக்கிறது. நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் டென்மார்கில் பல மேடைகளில் கடந்த 24 வருடங்களாக பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்.
ஐரோப்பிய தமிழ் வானொலி தொலைக்காட்சி பலவற்றில் இவரது கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றது. தொலைக்காட்சி நாடகங்கள் ஒரு சிலவவற்றில் நடித்திருக்கிறார் ...  டென்மார்கில் தயாரிக்கப்பட்ட முழு நிளத்திரைப்படம்  மன்னிப்பாயா என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக இவர் நடித்திருக்கிருக்கிறார்.
இவரது கவிதைகள் பல சஞ்சிகைகள் பத்திரிகைகள் இணைய சஞ்சிகைகள் பலவற்றில் வெளியாகிக்கொண்டிருக்கிறது.
நெஞ்ச நெருடல் இ காற்றை கானமாக்கிய புல்லாங்குழல்இ ஒர் அகதியின் கைரேகை ஆகிய இவரது 3 கவிதைத்தொகுதிகள் புத்தகமாக வெளிவந்திருக்கின்றன
இதுதவிர ´ கவிச்சாறல்;; ´ இவரது குரலில் கவிதைகள் இறுவெட்டாக வந்திருக்கிறது.
10 பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு இவரது பாடல்வரிக்கு தென்னிந்திய திரைப்படப் பாடகர் மாணிக்கவினாயகம் மற்றும் சீர்காழி சிவசிதம்பரம். ஆகியோருடன் மற்ரும் பலரது குரலில் பாரதிமோகன் இசையில் வெளியாகியிருக்கிறது. இலக்கியத்துறையில் பன்முக ஆற்றல் கொண்டவராக இருந்தாலும் 
 டென்மார்கில் கொல்பெக் என்னும் நகரினில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் 1969 ம் ஆண்டு பிறந்த இவர் டென்மார்க்கில் வாடகை கார் ஓட்டுனராக பல வருடங்கள் பணியாற்றி விட்டு தற்போது ஒரு சிறிய வியாபார கடை ளரடிநச அயசமநன   ஒன்றை நடாத்திக்கொண்டிருக்கிறார் . 
தகவல் தொகுப்பு 
பண்ணாகம் திரு.இக.கிருட்ணமூர்த்தி
திரு.எலையா முருகதாசன்
தமிழ் இணைய எழுத்தாளர் அகம்
Tamil WNP  Germany
------------------------------------------------
கதை தொடர்கிறது
ஆர்ப்பாட்டமில்லாத மார்கழிமாத .. ’ காலைப்பொழுதொன்று,’  ஐரோப்பாவுக்கே உரிய மிடுக்கோடு விடிந்திருந்தது.’  பட்சிகளின் ரீங்காரமில்லை…. தென்றலின் சங்கீதமில்லை…..                                          கதிரவனின் ஆர்ப்பரிப்;பில்லை …. 
காலை 8 மணி …….
இலைகளையெல்லாம் உதிர்த்து விட்டு வெறிச்சோடிப் போயிருந்த…. மரங்களை பாரத்;தபடி …… ஐன்னல் கம்பியை பிடித்தபடி ’மாரிமுத்து’’ அவனது மனமும் வெறிச்சோடிப் போயிருந்தது.!’
”  சன் கோலம் அகதிமுகாம் ”
’டென்மார்க்கிற்கு அகதித்தஞ்சம் கோரி வருகின்ற வெளிநாட்டவர்கள் அனைவரும் முதற்கட்ட விசாரணை முடியும்வரை …… தடுத்து வைக்குமிடம்!’ ”பாதுகாப்பு அதிகாரிகள், அரச அலுவலர்கள், கிறிமினல் மொழிபெயப்பாளர்களைத் தவிர ….. யாரும் உள்ளே போக முடியாது.”
’அவனும், அவனுடனிருந்த சிலரும் ..  காவலதிகாரி அழைத்த பக்கமாக இன்னொரு மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்ட போது……’ கம்பி வேலிக்கு வெளியே நின்ற பலரும் ….  தத்தமது உறவினர்களை பார்பதற்காக… நின்றுகொண்டிருந்தனர்.! 
ஆனால் ’தமிழர்கள் ஒன்றிரண்டு பேர் மட்டும் ……..  நிற்பதை ’ மாரிமுத்து கடைக்கண்ணால் அவதானிக்க தவறவில்லை அவனோடு தஞ்சமடைந்திருந்த ஒரு தமிழ் பெண்ணின் உறவினர்களாக இருக்கலாமென்று …… தனக்குள்ளே எண்ணிக்கொண்டான். ’தன்னைத் தேடி இஞ்சே யாரும் வந்திருக்கமாட்டார்கள் என்பது அவனது நம்பிக்கை.’
” பல நாட்களாக சேவெடுக்காமல் தாடி வளர்த்த முகம், முடி வெட்டாத தலை கசங்கிய உடை .. பாரக்;கப்  பரதேசிக் கோலத்தில்தான் அவனிருந்தான்.
சில்லென்ற குளிர்காற்றுடன் …. அமைதியான சூழல்,  ’வெண்ணிற ஆடை பூண்டு .பவுடர் பூசி ... வெளிக்கிடுத்தி விட்ட பொம்மை போல … வானமாய் கதிர்களை ஆங்காங்கே …. தெறிக்க வைக்கும் சூரியன்…. ’இந்த அழகான ரம்மியக் காட்சிகளைக் கூட ரசிக்கமுடியாத மனதுடன்  அவனிருந்தான்.’ 
”அண்ணா நீங்களும் தமிழரா .? எங்க இருந்து வாறியள்…. ?  கலியாணம் கட்டியிட்டீங்களா.. ? கட்டாட்டியும் கட்டியாச்சுது என்று சொல்லுங்கோ இஞ்சை கூப்பிட்டு தருவாங்கள் !                     ’கம்பி வேலிக்கு அங்கல நின்ற ஒரு பெண் இலவச ஆலோசனைகளை எறிஞ்சு கொண்டு நின்றாள்.’ ‘ எதையும் காதில் வாங்கிக்கொள்கின்ற நிலையில் அவனில்லை’ ”
’அவன் பாகிஸ்தானோ இல்லை எந்த நாடோ …..                                                          உனக்கேன் தேவையில்லாத வேலை …. ’ஒரு ஆணின் குரலும் பின்னால் தொடர்ந்தது ….. பல நாட்டவர்களோடு இவனும் வரவேற்பு கூடத்தில் அமரவைக்கப்பட்டான். ஓவ்வொருவராக ஒவ்வொரு அதிகாரிகள் வந்து அவர்களது பெயர்களை கூப்பிட்டதும், அவர்கள் கூப்பிடுகின்ற அறைகளுக்கு அவர்களின் பின்னால் சென்றுகொண்டிருந்தனர்.
”விழுதல் என்பது எழுவதுக்கு தானென்றால்
இறைவ என்னை மட்டுமேன் 
தொடந்து வீழ்த்திக்கொண்டிருக்கிறாய்
.பழுதலில்லாத வாழ்வை கேட்டதற்காக
இன்னும் எத்தனை நாட்டில்தான் 
என்னை விழுத்தப்போகிறாய் .. ? ”
”மா..ரி..மு..த் ..து   சி..வ..க்..கொ..ழு..ந்…து.”  என்று தடக்கி தடக்கி அதிகாரி பெயரை வாசித்ததும் இவனெழுந்து போகாததால் …. அதிகாரி கிட்ட வந்து இவனை தட்டி மீண்டும்  ” மா..ரி..மு..த் ..து   சி..வ..க்..கொ..ழு..ந்…து.” என்ற போதுதான்                                                  சுய நினைவு வந்தவனாய் எழும்பி அவன் பின்னால்  ……. சென்றான் !                                                     ” அறையின் உள்ளே இன்னுமொரு அதிகாரி …..  இவனையொத்த நிறத்தில் இன்னுமொருவர் ’ மொழிபெயர்ப்பாளர் … இருந்தார்கள் ”
டேனிசில் வணக்கம் சொல்லி ….அதிகாரி வரவேற்க .. அதை தமிழில் மொழி பெயர்த்து மொழிபெயர்ப்பாளர்  சொல்ல … தொடர்ந்த விசாரணையில் முதற்கட்ட விசாரணை முடிந்து முகாமுக்கு கொண்டு வந்து விடும் வரையில் மொழிபெயப்பாளரும் கூட நின்றார். 
” மொழிபெயர்ப்பாளர் மாரிமுத்துவையே தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தாலும், மாரிமுத்து யாரையும் நேரே பார்க்கின்ற மனநிலையில் இல்லாமல் இருந்தான். ஏற்கனவே, விசாரனையில் இவனை உளவியல் ஆலோசகரிடம் காட்ட வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டு, இருந்ததால் மீண்டும் நாளை சந்திப்பதாக கூறி அதிகாரியுடன் மொழிபெயப்பாளரும் விடை பெற்றுக்கொள்கின்றார். இவனுக்கு கொடுக்கப்பட்ட அறையில் நாலு கட்டில்கள் இருந்தாலும் தற்போது வேறு யாருமில்லாதது கொஞ்சம் நின்மதியாக இருந்தது. 
”நேரம் மாலை ஆறு மணியாகிவிட்டதால் சாப்பாடு … ரீ ஏதாவது எடுப்பதாக இருந்தால் ஆறு மணியிலிருந்து ஏழு மணிவரைதான் கன்ரின் திறந்திருக்கும்.
பின்பு நாளை காலை ஆறு மணிக்குத்தான் திறக்குமென்று …… ’அதிகாரிகள் சொல்லிவிட்டிருந்ததால்.’அவனுக்கு பசியில்லாமல் இருந்தாலும் எடுத்துக்கொண்டு வந்து வைப்பம் என்று’ அவனுக்கு கொடுத்த கோப்பையையும் கப்பையும் எடுத்துக்கொண்டு கதவைத்திறந்து …. ’கன்ரின் நோக்கி விரைந்தான்.’….
’சீலன் என்று சத்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பி பார்த்தவன்’ மீண்டும் தன்னை சுதாரித்துககோண்டு நடக்கத்தொடங்கினான் ….
”மீண்டும் மீண்டும் சீலன் ….. டேய் சீலன் …..  என்று தன்னை ஒருவன் துரத்தி வர நிற்காமல் நடந்தவனை ஓடிவந்து மறித்தவுடனே நிமிர்ந்து பார்த்தபோதுதான். காலை தனக்கு வந்த மொழிபெயர்ப்பாளர் நின்றுகொண்டிருந்ததை கண்டு திடுக்கிட்டுப்போனான். ”           
ஆரயோவெண்டு நினைச்சு என்னைக் கூப்பிட்டிட்டியள் போல…’ என்று முடிக்கமுன்னம்
”டேய் உண்மையை சொல்லு என்னை தெரியேல்லையா ?                                                    உன்ர பத்மகலா எங்கயடா இருக்கிறாள் …. ?   கலியாணம் கட்டிட்டியேடா ..?                                நான் சாந்தனடா …..   உன்னோட ஒன்றா …. ஒரே மேசையில… அருகருகாய் இருந்த சாந்தனடா  இன்னும் என்னை நம்பேல்லையடா …? ”
அப்பவே நான் உன்னை அடையாளம் பிடிச்சிட்டன். அங்க நான் மொழிபெயப்பாளராக …. இருந்தபடியால் என்னையே கட்டுப்படுத்திகொண்டிருந்தன் ….. அதாலதான் வேலை முடிஞ்சும் வீட்டை போகமல் உனக்காக காத்துக்கொண்டிருந்தனான்.!
”இப்ப அதிகாரிகள் எல்லாரும் போய்விட்டினம்…….  நாளைக்கும் அதிகாரிகளோடதான் வரவேணும் உன்னோட தனியக் கதைக்க முடியாது என்று தான் இஞ்ச நின்டனான”;.
”அதுக்கு பிறகுதான் சீலன் விக்கிவிக்கி அழத்தொடங்கிவிட்டான்……”
”அழாத சீலன் அழாத …..  ஊரில நீ பட்ட கஸ்ரத்தை விட இஞ்சை ஒன்றும் உயிர் போறளவுக்கு பிரச்சனையிலலை ” 
”என்ன கோலமடாப்பா ! என்ன சிமாட்டான ஆள் நீ ! நானே உன்னைப்பார்த்து பொறாமைப்பட்டனான். அவ்வளவு அழகானவன் ஏனிப்படி அலங்கோலமா …..” ?
”நான்தான் நாட்டுப்பிரச்சனையென்று அப்பவே பாதியில் படிப்பை விட்டிட்டு வந்திட்டன் நீயும் பத்மகலாவும்  இப்ப டொக்டராக இருப்பியள் என்று நினைச்சுக்கொண்டிருக்க  ….”
”என்;னடா நடந்தது உனக்கு….. ”?
”நான் சுவிசுக்கு வந்து, அங்கே அக்சற்ப்பும் கிடைச்சு,  ஒரு மக்டோனாசில வேலையும் கிடைச்சது………”  சொல்லத் தொடங்கினான் சீலன். …
” தன் வாழ்வின் கடந்தகால நினைவுகள் மனத்திரையில் ஒன்றன்பின் ஒன்றாக படமாக வந்து விழ மனசு அசை போடத்தொடங்கியது.”  பட்ட கஸ்ரங்கள், அவமானங்கள், நம்பிக்கைத்துரோகங்கள், நன்றிமறப்புக்கள்…. ஆதனால் அவன் எதிர்கொண்ட போராட்டங்கள்.”
”சொந்தம், பந்தம், பாசம், காதல், பின்னர் இவையெல்லாம் தாண்டி .., கண்டம் தாண்டிய பிரிவு, இப்ப .. தனிமை ஏக்கம்!  என, ஒன்றன் பின் ஒன்றாக நடந்தவற்றையெல்லாம் சொல்லத் தொடங்கினான். 
முகாமில் இருக்கும் போதே வேலை கிடைச்சதில் சந்தோசம்!
வழமைபோல அன்றும் வேளையோடு படுக்கைக்கு போனாலும்  பாதியில் நித்திரை குழம்பிவிட்டது. நினைவலைகளில் முழ்கினான் …. வந்த கடன் தங்கச்சியின்ர கலியாணம் எல்லாம் மிச்சம்பிடிச்சு வேளைக்கு செய்து வைக்க வேணும் அதற்குப்பிறகுதான் தன்ர வாழ்க்கை என்று ஒன்றன்பின் ஒன்றாக … நினைவலைகளில் ….இருக்க,  மணிக்கூடின் மணிச் சத்தம் கேட்டு வேலை நேரத்தை ஞாபகப்படுத்துவும் சரியாக இருந்தது!”
”காலைக் கடன்களை முடித்துக் கொண்டு தேத்தண்ணியும் போட்டு எடுத்துக்; கொண்டு வந்து சோபாவில் இருக்க முன்னம் மணிக்கூட்டை பார்த்ததும் தாமதம் தேத்தண்ணியையும் குடிக்காமல் படிகளில் இறங்கி ஓடினான்.” 
;ஐந்து நிமிடம் நடைதூரம்; ”பஸ்தரிப்பிடம்”இப்பவே நடக்க வெளிக்கிட்டால் தான் ”பஸ்” வருவதற்கு முன்னம்; பஸ்தரிப்பிடத்தைச் சென்றடைய முடியும்.  அவசரமாக இறங்கி வாசல் கதவை திறந்து கொண்டு முகாமைவிட்டு வெளியேற … ”முகாம் ஒப்பிசில் கடமையிலிருந்த அதிகாரி இவனை கூப்பிடுவதை கேட்டு திரும்பி பார்க்க, அதிகாரியே கதவைத்திறந்து வந்துகொண்ருப்பதை கண்டவுடன் அதிகாரியை நோக்கி வணக்கம் சொல்லிக்கொண்டு கை கொடுத்தான்.!
”எங்கே அதிகாலையில் போகின்றாய் ?  வேலைக்கா ! என்று அவனே விடையையும் சொல்ல, ”ஆம்” என்று தலையாட்டி விட்டு அமைதியாக நின்றான் .”
எவ்வளவுதான் நல்லாப்பழகினாலும் வெள்ளைக்காறர்களின் சுபாவம் வெட்டொன்று துண்டொன்று என்று பட்டென்று முடிவுகளை சொல்லி விடுவார்கள.; இப்ப அதிகாரி சொல்லப் பொகிற முடிவும் இவனுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கப்போகிறது. ஆமாம்! நீ வேலை செய்ய தொடங்கிவிட்டபடியால் இனிமேல் இங்கே தங்க முடியாது. தனியாக வீடு எடுத்துக்கொண்டு போகும்படி அதிகாரி சொன்னதுடன் அகதி முகாமைவிட்டுப் போவதற்கு ஒரு கிழமை அவகாசம் கொடுத்தார். 
”உலகமே இருண்டது போன்ற சூனியமாக இருந்தது அவனுக்கு!”
எதுவுமே பேசாமல் தலையாட்டிவிட்டு, பஸ்ராண்டை நோக்கி நடக்க தொடங்கினாலும் அவனால் வேகமாக நடக்க முடியவில்லை  … ”அதற்கு இரண்டு காரணங்கள் அதில,; ஒன்று பஸ் போயிருக்கும்! இரண்டாவது ’அவனது மனமும் சோர்ந்து விட்டது’.” 
”அப்போது தான் அம்மாவின் அருமை தெரிஞ்சது.” சுடச்சுட ஆவி பறக்க …. அம்மா தரும் தேத்தண்ணி சர்க்கரையுடன் நக்கி,நக்கி குடிச்சாலும் இப்பவும் நெஞ்சுக்குள்ள இனிக்குது. ”அந்த நினைப்புத்தான் இப்பவும் தெம்பாக நடக்க உதவுகிறது.”
அடுத்த பஸ் வர இன்னும் அரை மணித்தியாலம் காத்திருக்க வேண்டும் என்ற சலிப்பு ஒரு புறமும் வேலைக்கு அரை மணித்தியாலம் பிந்தப்போகிறேனே….. என்ற படபடப்பு மறுபுறமுமாய்…. பஸ்ரான்டில் இருந்த சீலனுக்கு ”வீடெடுக்கிற பிரச்சனை பெரும் தலையிடியாய் இருந்தது.”  கேட்கமுன்னம் ’தவத்தார்’ தன்னோடு வந்திருக்க சொல்லுவார்தான் ஆனாலும், ….. முரளி அங்கே இருப்பதினால் இவனுக்கு அங்கே இருப்பது விருப்பமில்லை.!”
’லப்டப்’துலைந்ததினால் ஒரு வாரமாக கலாவுடனும் கதைக்கவில்லை. என்ற கவலை ஒருபுறம் தங்கையின் கால் முறிவு மறுபுறம் ஒன்றன் பின் ஒன்றாக …..சிந்தித்துக்கொண்டிருந்ததில் அரை மணித்தியாலம் போனதே தெரியவில்லை ”பஸ் வந்துவிட்டது.!”
”ஓடிச்சென்று பஸ்சில் ஏறியமர்ந்து கொண்டு யாருமில்லாத பின் சீட்டில் உக்கார்ந்து கண்களை இறுக்க மூடிக்கொண்டு ……”பட்டாம் பூச்சியைப்போல ’மூளை ஓரிடத்தில் நிக்காமல் அங்குமிங்கும் சிறகடித்து பறக்கிறது”
அடுத்த பஸ் தரிப்பிடத்தில், பஸ் நிக்க, தமிழில் யாரோ கதைப்பது கேட்டு, விழித்து கொள்ள ”; ரெலிபோன் கதைத்தபடி ஒருவர் ஏறி ... உள்ளே வந்துகொண்டிருந்தார்!
”வாட்ட சாட்டமான ஒரு இளைஞன் ”
வைத்த கண் வாங்காமல் ‘இவன்’  அவனையே பார்த்துக்கொண்டிருக்க, ’அவனும், ஏறியவுடன் பின்னிருக்கையை நோக்கியே வந்து இவனருகில் இருந்து கொண்டாலும், வேற்றினத்தவர்கள் இருக்கின்றார்களே… என்ற கவலை சிறிது கூட இல்லாமல் சத்தமாக  தமிழில் கதைத்துக்கொண்டே இருந்தான்.’
 
தொடரும்  பகுதி -33
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
 
விழுதல் என்பது எழுகையே…
 
பகுதி 33
 
எழுதியவர் திரு.சக்திதாசன்  டென்மார்க்
 
“வடிவா யோசிச்சு முடிவெடுங்கோ!  ஓ …. ஓ 
எனக்கு இன்டைக்குள்ள முடிவு தெரிஞ்சால்தான் நல்லது.  நாளைக்கு சீட்டு தொடங்குது!
காசைப்பற்றி நீPங்களேன் யோசிக்கிறீங்கள் !                                                             இந்த மாதம் தரத்தேவையில்லையென்றுதானே சொல்லுறன். என்ர தாச்சி காசு தானே அதை ஆறுதலாக தாங்கோ ஒரு பிரச்சனையுமில்லை. 
பேந்தும் பார் ….  இதுக்கெல்லாம் நான் வட்டி வாங்கினால் நான் என்ன உழைச்சு சந்திரமண்டலத்திலயா வீடு வாங்கப்போறன் !
நீங்கள் கனநாளா என்னையும் சேருங்கோவென்டு கேட்டதாலதான் உங்களுககு ஒரு துண்டு வைச்சிருந்தனான்
வாறீங்களோ இல்லையோ என்கிறதை இன்டைக்கே எனக்கு சொல்லிப்போடுங்கோ ?
’உங்கை நாலைஞ்சு பேர் இப்பவும் கலைக்கினம்.’ கண்டவையையும் போட எனக்கு விருப்பமில்லை பதினைஞ்சு துண்டில இன்னும் இரண்டு தான் இருக்குது 
’என்ர சீட்டில எந்த சீட்டு கழிவு போகாத சீட்டு …. சொல்லுங்கோ பார்ப்பம் ?’
 சீட்டுக்கு வராமலேயே…. யெனிவாவில இருந்து கூடப் போடுகினம்                                பரமசிவத்தின்ர சீட்டென்றால் பரம விரோதிகூட பயப்படுவாங்கள்……..
ஓ …. நான் வேலையால வீட்டை போய்க்கொண்டிருக்கிறன் நீங்கள் வேலையால வரேக்க நல்ல முடிவோட வாங்கோ … இஞ்ச பஸ்சுக்குள்ள இருந்து கதைக்கிறன். சனங்கள் என்னையே …. பார்த்துக்கொண்டிருக்கினம் வைக்கிறன் !”
”ரெலிபோனை வைச்சதும் தாமதம், பக்கத்தில இருந்த சீலனைப் பார்த்து,”                                 நீங்களும் தமிழரா ?! என கேக்கமுன்னம்,                                                           ’சீலனும் தனக்கே இயல்பான புன்னகையுடன் ஆமண்ணா !’ என்று சொல்ல அண்ணா என்று சொல்லாதேங்கோ என்ர உடம்பு தான் அப்படி எனக்கு வயசு குறைவு இப்பதான 22 , என்ர பெயர் பரமசிவம் சிவமென்று தான் எல்லாரும் கூப்பிடுவினம்.
” உங்கள ஒருநாளும் காணேல்லையே இந்தப்பக்கம் நீங்களும் இஞ்சதான் எங்கயோ            இருக்கிறீங்களா ? அல்லது வேற இடத்தில எங்கயாவது இருந்து வாறிங்களா ?” 
”இல்லை நானும் இஞ்சதான் இருக்கிறனென்று தொடங்கி ……  இப்ப வேலைக்கு பஸ்சை விட்டு ….  வீடுமில்லாமல் இருக்கிற வரையில் சொல்லி முடித்தான் சீலன்.”
ஓன்றுக்கும் யோசியாதைங்கோ! 
”நானும் யாழ்ப்பணம்தான்.! வந்தாரை வரவேற்று வாழ்வளித்த யாழ்ப்பாணத்தாருக்கு இப்ப உலகமெல்லாம் வீடு இனி என்ர வீடும் உங்கட வீடுதான்  சீலண்ணா !
”அவன் என்ன சொல்லுகிறானென்று புரியாமல் எல்லாம் சிலேடையாக இருந்தது.”
”பகிடிக்கில்லை சீலன் அண்ணா ! என்ர வீட்டில நீங்கள் தங்கலாம். ”
’நானும் இன்னும் கலியாணம் கட்டெல்லத்தான், இஞ்சை எனக்கு சொந்தமா வீடு இருக்குது!’ என்னோட சேர்த்து ஐந்து பேர் இருக்கிறம். எல்லாரும் பொடியள்தான்!
வீட்டு வாடகையை ஐந்தாப் பிறிச்சு கட்டுறம். சமறியும் அப்படித்தான்!                               சமையலும் ஐந்து பேரும் ரேன் போட்டு சமைப்பம்.                                                  நீங்களும் ஆறாக எங்களோட சேர்கிறதில எனக்கு சந்தோசம். உங்களுக்கொன்றும் ஆட்சேபனை இல்லையென்றால். யோசிச்சுப்போட்டு சொல்லுங்கோ?
” இதில ஒன்றும் யோசிக்கிறத்துக்கு ஒன்றுமில்லை உங்களப்போல உதவி செய்கிறவர்கள் இருக்கிறதினாலதான் எங்களைப் போலவர்களும் வாழக் கூடியதாக இருக்குது!. ஆனால், உங்களோட இருக்கிற மற்றைய ஆட்களும்  இதுக்கு சம்மதிக்க வேணுமெல்லோ?”
நீங்கள் அதைப்பற்றி எதுவும் யோசிக்கத் தேவையில்லை அது என்ர வீடு நான்தான் முடிவெடுக்கிறது.. 
” இந்தாங்கோ என்ர விசிற்றிங் காட்” 
அடுத்த ஸ்ரொப்பில நான் இறங்கப்போறன். நீங்கள் வீட்டை வாங்கோ கதைப்பம். என்று சொல்லியபடி …. சிவம் பஸ்சில் இருந்து இறங்கிவிட்டான்.!
”சீலனின் மனதில் ஒருவித ஆனந்தம்.” 
ஒரு கதவை அடைக்க கடவுள் இன்னொரு கதவை திறக்கிறார். 
”தவத்தார் எப்பவோ சொன்ன வார்த்தை மனதில் முட்டிமோதி போனது’ இஞ்சை தமிழர்கள் ஒருதரும் ஒற்றுமையில்லை கண்டாலும் காணாமல்தான் போவார்கள் நீ ஆரைக்கண்டாலும் கதையாதே …. !” ஆனால் இண்டைக்கு திக்கற்று நின்றவனுக்கு தெய்வம் காட்சி கொடுத்தது போல சீலன் மனதுக்குள் சிவம் தெய்வமாக தெரிந்தான்.!
வேலை முடிந்ததும் சீலன் நேராக சிவத்தின் வீட்டுக்கே போக திட்டமிட்டான்.
”இப்ப அவசரப்பட்டு தவத்தாருக்கு ஒன்றும் சொல்லாமல் பின்னர் சொல்லுவம். முரளி அங்க அவரோட இருக்கிறதால என்று சொன்னால் அவரொண்டும் கோவிக்க மாட்டார்.”
”சிவம் வீட்டு வாசலுக்கு போய்விட்டான் சீலன்.!
 உள்ளுக்;குள் பெலத்த சத்தமாக கவியரசர் கண்ணதாசனின் தத்துவப் பாடலொன்று  ஒலித்துக்கொண்டிருந்தது  
        .எங்கே வாழ்க்கை தொடங்கும்
        அது எங்கே எவ்விதம் முடியும்
        இதுதான் பாதை இதுதான்
        பயணம் என்பது யாருக்கும் தெரியாது! 
அந்த சத்தம் அதிகமாக இருந்ததினால் இவன் அடித்த ‘பெல்´ சத்தத்துக்கு யாருமே செவி சாய்;த்ததாக தெரியவில்லை. கொஞ்ச நேரமாக அப்படியே நின்றபோது பின்னால் வந்த ஒருவன் முதுகில் தட்டி நீங்கள் தான் சீலனா ! என்றான். ஆமென்ற முதல், “தனது கையை கொடுத்து நானும் இஞ்ச தான் இருக்கிறேன் சிறிராமச்சந்திரன் என்ர அப்பா வைச்ச பெயர் இஞ்சை இவங்கள் எல்லாரும் என்னை ‘அனுமான் ‘ என்று தான் கூப்பிடுவாங்கள். 
“ வாங்க உள்ளுக்குள்ள என்று திறப்பு போடாமலே கதவை திறந்து கொண்டு முன்னுக்கு அனுமான் போக பின்னுக்கு இவனும் போனான்.’ “சீலன் மனதில் அனுமான் இடம்பிடித்துக் கொண்டான் ‘வஞ்சகமில்லாத பேர்வழி’ ” இந்த வீடு எப்பவும் பூட்டுவதில்லை …. யாரும் ‘பெல்லடிச்சு’ வாறதுமில்லை …. 
“அப்ப கள்ளர் யாரும் வந்தால் ? வஞ்சமில்லாமல் கேட்டான் சீலன் ! “
“கெக்..கெக்…” கென்று …… சிரித்தான் அனுமான்!
“இஞ்சையாவது கள்ளர் வாறதாவது நாங்களே கள்ளர்! என்று அனுமான் சொன்ன வார்த்தை கேட்டு திக்கென்றது சீலனுக்கு“ டே அனுமான் சீலண்ணாவை பயப்படுத்திப் போடாதே !
“நீங்கள் வாங்கோ!”
என்று வரவேற்பறைக்கு அழைத்து சென்றான் சிவம்!
“ வரவேற்பறையில் அமர்ந்து எல்லாவற்றையும் வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தான் ”  அகதிமுகாமில் இருந்த இவனுக்கு அவர்களுடைய வீட்டைப்பார்த்தபோது இது ஆண்கள் மட்டும் இருக்கின்ற வீடா …..  நம்ப முடியாமல் இருந்தது.  வரவேற்பறையே அவ்வளவு அழகானதாக அழகுபடுத்தப்பட்டிருந்தது. ……’ வடிவேலைக்கூட அவ்வளவு வடிவாக காட்டிக்கொண்டிருந்த 50 இஞ்சியளவு ரிவியை கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தவனை அனுமானின் குரல் திசை திருப்பியது. “என்ன அப்படிப்பாக்கிறீங்கள் ரீவியை?” இனி இதுகும் உங்கடதான்! ஆறாப்பிறிச்சு ஒன்றுதான். என்று சொல்லியவாறு கூல்றிங்சை அவன் முன்னால வைத்துவிட்டு சென்றான்.
“ என்னடா எதுக்கெடுத்தாலும் ஆறாப்பிரிக்கிறது என்கிறாங்கள். திரௌவுபதையின்ர நிலைமைதானோ பத்மகலாவுக்கும் …….. தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டு …..”
கூல்றிங்சை எடுத்து குடித்தான்.
அங்கே இருந்த ஐந்து பேரும் ஐந்து கோணங்களிலே பிசியாக இருந்தார்கள்.
ஒருவர் கண்ணதாசன் பாடலிலேயே காதை கொடுத்து ரசித்துக்கொண்டிருந்தான். இன்னுமொருவன் அதை விட சத்தமாக ரெலிபோன் கதைச்சுக்கொண்டிருந்தான். அனுமான் தான் கிச்சினுக்குள் கோழியுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தான்..அவன்ர சமையல் ரேனாயிருக்குமென்று இவன் மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.”
இன்னுமொருவன் கையில் பியர் போத்திலுடன் அறைக் கதவை திறந்துவிட்டபடி ‘சிகறற்’ பத்துவதும் பியர் குடிப்பதுமாக இருந்தவரைப் பார்த்து ….. “உங்களுக்கு எத்தினதரமண்ண சொல்லியிட்டன் உந்தக்கோதாரியை வீட்டுக்கை நின்று பத்தாதையுங்கோவென்று”  உங்களை விட எங்களுக்குத்தான் உதால வருத்தம் வரப்போகுது. ! 
“சிகறற்றை வெளியே வீசி எறிஞ்சுவிட்டு கிச்சினுக்குள் போய் அனுமானோட ஏதோ புறுபுறுத்துக்கொண்டு நின்றவன்ர சத்தத்தை .பின்னர் காணவில்லை. மேலே தன்னுடைய றூமுக்குள் போட்டான் போல ….
     
கொஞ்சம் இருங்கோண்ண வாறனென்டு ஏதோ கணக்கு பார்த்தபடி இருந்தான் சிவம்!
அவனுக்கும் மாறி,மாறி ரெலிபோன் வந்துகொண்டிருந்தது. சிலர் வந்து காசுகளும் கொடுத்துவிட்டு போய்க் கொண்டிருந்தார்கள். அந்த காசுகளை எண்ணுவதும் கொப்பியில் எழுதுவதமாக இருந்த சிவம் நீங்களும் சீட்டுப் பிடிக்கிறனிங்களா ? என்று கேட்டவுடன் ‘இல்லையண்ணா இப்பதானே வேலை தொடங்கினனான். எனக்கு உதில பெருசா அனுபவமுமில்லை’ என்று சீலன் முடிக்கமுன்னம், கிச்சினுக்குள்ள நின்ற அனுமான் ஓடிவந்து என்னண்ணை அனுபவம். எனக்கும் சீட்டைப்பற்றி ஒன்றும் தெரியாது. மூன்று சீட்டு போட்டு எடுத்துத்தான் ஊரில மருதனார்மடச்சந்தியில  நிரைச்சுக்கு இருக்கிற கடை என்ரதான.;  
“தோட்டக்காணியை வாங்கி கடை கட்டி விட்டன் அத்தனை கடையும் வருமானத்தை அள்ளிக் கொட்டுது.! எல்லாம் சிவமண்ணாதான்……!
சீட்டில ஒன்றும் பெரிய அனுபவம் தேவையில்லை சீலண்ணா! 
ஒரு துண்டு ஆயிரம் பிராங், என்றால் பதினைஞ்சு துண்டு 15000 பிராங் முதல் சீட்டு எனக்கு தாச்சி. அதுக்கு கழிவு இருக்காது அதுக்கு பிறகு ஒரு குறிப்பிட்ட கட்டாயக்கழிவு ஆனால் அதுக்கும் மேலால கழிவு போகும்
உங்களுக்கொரு அவசர தேவையென்றவுடன் யாரிட்டையும் பல்லைக் காட்டத் தேவையில்லை உடன கழிச்சு எடுக்கலாம். மேசையில காசு. உங்களுக்கு அவசரமில்லையென்றால் நீங்கள் கடசியில எடுத்தால் முழுக்காசும் கழிவில்லாமல் எடுக்கலாம். அப்படி எடுக்கேக்க நீங்கள் கட்டிய தொகை கூட சில வேளை 10.000 பிராங் தானிருக்கும் உங்களுக்கு அப்படியே சுளையாக காசு வரும் ‘சீலனுக்கும் ஒரு நம்பாசை பிறந்தது தங்கச்சிக்கு கலியாணம் செய்ய இப்படி சேர்த்து வைத்தால் உதவும்தானே …… ஆனால் இப்ப என்னட்டை ஒரு காசுமில்லாமல் எப்படி ….. இனி வீட்டு வாடகை… அற்வானஸ் …… எல்லாத்தையும் யோசித்துக் கொண்டிருக்க …….’
என்ன யோசிக்கிறீங்கள் “சீட்டு கட்ட விரும்பினா கட்டுங்கோ” இந்த மாதம் காசுப் பிரச்சனையென்றால் நான் பார்க்கிறன் வாற மாதத்தில இருந்து என்ர காசையும் சேர்த்து தாங்கோ! என்றான் சிவம்! 
“சீலனும் அதுக்கு சம்மதம் தெரிவித்து விட்டு முகாமுக்கு போக வெளிக்கிட்டான்.!”
    
‘காம்பில என்ர சாமானுகள் கொஞ்சம் கிடக்குது எடுத்துக் கொண்டு; ஆறுதலாக துப்பரவாக்கி கொடுத்திட்டு நாளைக்கு வாறன்.என்று புறப்பட்டு விட்டான்.’
•    
வருடங்கள் உருண்டோடி.. சீலனும் சீட்டுப் பிடிக்க தொடங்கிய படியால் ஒன்றுக்கு இரண்டு மூன்று வேலை செய்யத் தொடங்கி ஓட்டமும் நடையுமாய் அவனது வாழ்வு உருண்டுகொண்டிருந்தது.
ஒரு சீட்டும் எடுக்காமல் … பிரமிப்பாய்… ‘தன் சொத்து என்;று அடிக்கடி நூறால் பெருக்கிப்பார்த்து கொள்வான்’ சிவத்தின் மீது அதிக நம்பிக்கையானபடியால் …..  சீட்டு  கூறும் நேரம் கூட .. இவன் வீட்டில் நிற்பதில்லை…’ அவன் சொல்லும் காசை கொடுத்துவிட்டு தானுண்டு தன் வேலையுண்டு என இருந்து விடுவான்.
“தங்கச்சிக்கும் ஒரு நல்ல சம்பந்தம் வந்திருக்கு மோனே …                                                      ‘20 இலச்சம் காசு கேக்கிறாங்கள் ……..’  நான் உன்னோட கதைச்சிட்டு முடிவு சொல்லுறன் என்று புறோக்கறிட்டை சொல்லியிட்டன் நல்ல பொருத்தமாம் .மாப்பிள்ளை கனடாவாம் தையில இஞ்ச வர இருக்கிறாறாம்.” என்று அம்மா ஒருநாள் ரெலிபோனில் கதைக்கும் போது சொன்னவுடன் ….‘ பொருத்தமென்றால் ஓமென்று சொல்லுங்கோ ! நல்ல இடமென்றால் செய்துவைப்பம் காசைப்பற்றி நீங்கள் ஒன்றும் யோசிக்க தேவையில்லை அதெல்லாம் நான் ஒழுங்குபண்ணுறன். என்று அம்மாவிடம் முடிவாக சொல்லிவிட்டான்.
“இந்தமுறை எப்படியும் சீட்டு எடுக்க வேணும் ….. என்று, அன்றைய தினம் வேலைக்கும் இரண்டு  மணித்தியாலம் லீவு எடுத்துக்கொண்டு சீட்டு தொடங்கும் நேரத்துக்கு கணக்கா வி;ட்டை வந்துவிட்டான் . சீட்டை சீலன் கேக்கத்தொடங்கியவுடன் …… அங்கே இருந்தவர்கள் எல்லாரும் சீலனைப் பார்த்து சிரித்தார்கள். அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை ….
‘ஒருவர் சொன்னார் சீலன் உம்முடைய சீட்டை எத்தினை தடவைகள் நீர் எடுப்பீர் ?
உமக்கு தெரியாதா ஏற்கனவே உம்முடைய சீட்டு எடுக்கப்பட்டுவிட்டது.
‘ஒன்றும் புரியாமல் விழிக்க …… ‘ நீர் பேசாமல் இரும் நான் பிறகு கதைக்கிறன் உம்மோட… ‘சிவம் சொன்னவுடன் எதுவுமே கதைக்காமல் எழுந்து வெளியே போய்விட்டான் சீலன்’
‘சீட்டு முடிந்து எல்லாரும் போன பின்னர்‘ தன்னுடைய அறைக்கு வந்து, கோவித்துக் கொள்ளாதேங்கோ சீலண்ணா ! உங்கட சீட்டுகளை நான் அவசரத்துக்கு எடுத்துப் போட்டன.; நாலஞ்சு மாசத்துக்குள்ள நான் தருவன் என்று சொன்னவுடனே ‘சீலனுக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை  …’ 
அவனிடம் வைத்த நம்பிக்கை இன்னுமிருந்ததினால் ….  ‘ எனக்கு அவசரமாய் காசு தேவையாக இருக்குது. ‘வட்டிக்கெண்டாலும் தாங்கோ’ என்று சீலன் கேக்க, என்னட்டை காசு இருந்தால் நானேன் உங்கட சீட்டை எடுக்கிறன். எதுக்கும் வேற ஆக்களிட்டை கேட்டுப்பார்ப்பம்’ எழும்புங்கோ? ‘பேத்தே பாட்டீக்கெல்ல போகவேணும் நேரமாகுது. ஏன்று சிவம் எழுப்ப … ‘ இல்லை சிவம் நான் வரேல்ல எனக்கு கொஞ்சம் அமைதியாக இருக்கவேணும் போல கிடக்குது என்று இவன் மறுக்க….வலுக்கட்டாயப்படுத்தி ….. அங்க பிறன்ஸ் எல்லாரும் வருவாங்கள் அவங்களோட கதைச்சு காசும் ஒழுங்குபண்ணலாம் வாங்கோ என்று சீலனையும் அழைச்சுக்கொண்டு பேத்டே பாட்டி வீட்டுக்கு கிளம்பிவிட்டார்கள்….
 
அங்கே பேர்த்டே பாhட்டியென்றால் பெரிய மண்டபம் எடுத்து கேக் எல்லாம் வெட்டி நடக்கின்ற  பேர்த்டே பார்ட்டியென்றுமில்லாமல் சும்மா எல்லாரும் சேர்ந்து தண்ணியடிக்கும் பார்ட்டியாக மட்டும் தானிருந்தது, 
இதிலே சீலன் மட்டும் தான் தண்ணியடிக்கவில்லை ‘மற்றவர்கள் எல்லாம் அங்கே மப்பும் மந்தாரமாக இருந்தார்கள்’ சீலனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை கொக்கோ கோலாவை சுவைத்தபடி … ஒரு மூலையில் இருக்க, ஒருவன் வந்து உந்தக் கொக்கோ கொலாவை விட இது பரவாயில்லை உது உடம்புக்கு கேடு … என ஒரு பிரசங்கமே நடாத்தி முடித்தான்.
திடீரென்று பார்த்தால் தண்ணியடிச்சுக் கொண்டிருந்த பெடியளுக்கு இடையில் வாய்த்தர்க்கம் மாறி மாறி இடம்பெற்றுக்கொண்டிருந்தது. சிவத்துக்கும் இன்னொருவனுக்குமிடையில் … வாய்த்தர்க்கம் கைகலப்பாக உருவெடுத்தது. சிவத்துக்கு இரண்டு மூன்றடி விழுந்துவிட்டது. இதை கண்ட சீலன் ஓடிப்போய் விலக்குதீர்க்க….. ‘சிவத்துக்கு அடித்தவனை எட்டிப் பிடிக்க 
‘ உனக்கு வந்தாத் தான் தெரியும் கொஞ்சநஞ்ச காசா ….. வாயைக் கட்டி வயித்தை கட்டி சீட்டுப்போட்டா  என்ரை சீட்டை எடுத்துப்போட்டு பேக்காட்டிக்கொண்டு திரிகிறான்.! இவங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது. வீடுமய்சே… என்று சீலனின் பிடியிலிருந்து திமிறி …. சிவத்துக்கு திரும்பவும் அடிப்பதற்கு முன்னம் ‘எங்கயோ மறைச்சு வைத்திருந்த கத்தியை எடுத்து அவனின் வயித்தில் ஒரு குத்து. குத்திவிட்டான் சிவம்’ இடையில் நின்ற சீலனுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் குத்து வேண்டியவனை காப்பாற்றும் நோக்கோடு கத்தியை பிடித்து வெளியே இழுக்க கலவரமாகி போக …. நின்றவர்களெல்லாரும் இதுதான் தருணமென்று ஆளுக்காள் ஓடிவிட்டார்கள் சிவமும் உட்பட யாரையும் காணவில்லை
அந்த பேர்த்டே பாட்டியை ஏற்பாடு செய்தவன் குழம்பி போய் அம்புலன்சுக்கு அடிச்சுப்போட்டான்.
என்ன தம்பி ‘நீர் தேவையிலாமல் உதுக்குள்ள மாட்டுப்பட்டு போனீர்?’ உம்மட கை அடையாளம் தான் பதிஞ்சு போயிருக்கப்;போகுது. ….. போகிற போக்கில ஆள் தப்பாது  போல ….  அம்பிட்டீரென்றால் ஏழு வருசம் உள்ளுக்குள்ள உம்மை பார்க்க பாவமா கிடக்குது. நீரெங்கயாவது ஓடித்தப்பும்.! என்று ‘அங்க நின்ற ஒரு முதியவர்’ சொல்ல …
 எங்கயண்ண போவன் … ? என்னட்டை ஐந்து சதம் கூட கையில காசு இல்லை…
என்று சீலன் சொல்லிக்கொண்டு நிக்க …. ‘இஞ்ச வாரும் என்னோட,’  என்று அவனை அழைச்சுக்கொண்டு …. வந்து தன்னோட தலைமறைவாய் வைச்சிருந்து புகையிரத நிலையத்தில் வைச்சு ‘கொப்பனேகனுக்கு’ ரிக்கெற்றும் எடுத்துக்கொடுத்து மாரிமுத்து என்ற பெயரில் ஒரு பேர்த்சேட்டிபிக்கற்றும் செய்து கொடுத்து…. அங்கே.. போனவுடன உந்தப்பாஸ்போட்டை கிளித்தெறிஞ்சு போட்டு மாரிமுத்து என்ற பெயரில் பதியும். 
பாரும் உம்மட பிறன்ஸ் ….. என்று நீர் நினைச்சவர்களெல்லாம் எங்கயெண்டு பார்த்தீரே ….. உம்மைப்பற்றி தெரியும் என்றதாலதான் இவ்வளவு உதவியையும் செய்கிறன். ‘நான்தான் இவ்வளவும் செய்தனான் என்பதை ஆருக்கும் சொல்லிப்பொடாதேயும் ‘ என்று கூறி ரெயிலேற்றி விட்ட சோகக் கதையை சொல்லி முடித்தான் சீலன்.
தொடரும் ………..
பகுதி 34  எழுதுபவர் திரு.ஜெயராம சர்மா அவர்கள்,அவுஸ்திரேலியா
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

  
  " விழுதல் என்பது எழுகையே" - பகுதி 34
               எழுதியவர்  எம்.ஜெயராமசர்மா ... மெல்பேண் ..அவுஸ்த்திரேலியா
அறிமுகம்
--------------------
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்ததுஇ படித்ததுஇ வேலை பார்த்ததுஇ     யாவுமே இலங்கையில்த்தான்.
தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.
பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப்
பட்டதாரி.அத்தோடுஇ கல்வியியல் துறையில் டிப்ளோமாஇ சமூகவியல் துறையில்
டிப்ளோமாஇகற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும்
பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக்கல்விப்பணிப்பாளராகவும்இவட இலங்கை
புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர தமிழ்இ இந்துகலாசார விரிவுரையாளராகவும்இ
 யாழ்ஃ பேராதனை பல்கலைக்கழகங்களின்
வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்இஇலங்கை ஒலி
பரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும்இ நாடகத்தயாரிப்பாளராகவும்
கடமையாற்றியுள்ளார்.மாற்றம்இஉதயன்இஈழ நாடுஇ சிந்தாமணிஇ உதயசூரியன்
இந்துசாதனம்இமெல்லினம்இஉதயம்இபத்திரிகைகளில்.. கவிதைஇகட்டுரைஇசிறுகதைஇ
விமர்சனம்இஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்இ100
ஓரங்க நாடகங்களையும்இ10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்இ20க்கு
மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும்இஎழுதியுள்ளதோடு.. "முதற்படி" என்னும்
குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியா
வில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்ப்ட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்க
ளுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா
பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும்
ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ
சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும்இஆய்வுக்கட்டுரையாள
ராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம்
சென்று அங்கெல்லாம்.. தமிழ்இ கலாசாரம்இஇந்துசமயம்இசம்பந்தமாக விரிவுரை
கள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்இதமிழர்பண்பாடு
சம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.
தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்இவிக்டோரியா இந்து
கல்விமையத்தின் ஆலோசகராகவும்இ தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின்         
 இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.
      
தகவல் தொகுப்பு
பண்ணாகம் திரு.இக.கிருட்ணமூர்த்தி
திரு.ஏலையா முருகதாசன்
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்
வுயஅடை றுNP புநசஅயலெ
தொடர்கிறது 34

     நான் யார்? எனக்கு ஏன் இந்த நிலை? மாரிமுத்தா அல்லது சீலனா ....... கடவுளே எனக்கேன் இந்தச்சோதனை ? என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி நின்றான் சீலன்.
    கால்முறிந்த நிலையில் தங்கை.கொழும்பில் வீடு எடுக்க ஆயத்தமாகும் அம்மா.பட்டப்படிப்பு படிக்க ஆசைப்படும் தங்கை.கனடாவில் காதலித்த பெண். காதலுக்குக் குறுக்கே வில்லனாய் முளைத்த முரளி.வேலையும் போய்... கொலையிலும் தேவையில்லாமல் மாட்டுப்பட்ட நிலை.இடமும் மாறி- பேரும் மாறி இக்கட்டாக வந்து விட்ட நிலைமை.
    சீலனுக்கு என்ன முடிவு எடுப்பது? எங்குபோய் இது முடியப் போகிறது ..... என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்கவே முடியாமல் இருந்தது.
    எல்லாக் கடவுளையும் மனதில் பிரார்த்தித்துக் கொண்டான்.விழுதல் என்பது எழுதலுக்கே என்றாலும் எனது நடைமுறை வாழ்க்கையிலே தொடர்ந்து விழுதலாகவே இருக்கிறதே என்று சீலன் மனத்துக்குள் வேதனைப் பட்டுக்கொண்டான்.
     டேவிட்டைக் கண்டதும் அவரால் மக்டொனால்டில் வேலை கிடைத்ததும் ... தனது கஷ்டத்தை சொன்னதும்.. பானு; தான்இ காசுதருகிறேன் என்று சொன்ன தும்..யாவும் சீலனின் மனதில் படமாக ஓடியது.ஒரு சிறிது சந்தோஷமோ    அல்லது நிம்மதியோ நிரந்தரமாக நிற்குது இல்லையே ..என எண்ணிய பொழுது சீலனிடம் வெளிப்பட்ட அழுகையை கட்டுப்படுத்தவே முடியாமற் போய்விட்டது. தன்னையும் மீறி சீலன் ஓவென்று அழுதே விட்டான்.
     சீலனுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் சீலன் மாரிமுத்து என்ற பெயருடன் தங்கவிடப்பட்டான்.அடுத்த நாள் காலை மீண்டும் அதிகாரிகள் வரத்தொடங் கினார்கள். தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்றன. சீலனின் நண்பன் சாந்தனின் சாதுர்யமான மொழிபெயர்ப்பால் மாரிமுத்து என மாறிய சீலனை வெளியில் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
      சாந்தன் வெளியில் வந்து சீலனை தான் தங்கியிருந்த அறைக்குக் கூட்டிச் சென்றான். சீலனுக்கு இப்போது பெயர் ஒரு பிரச்சினையாகப் படவில்லை. இனிமேல் என்ன செய்வது என்பதே பெரும் கேள்விக்குறியாகி நின்றது.சீலன் என்றாலும் மாரிமுத்து என்றாலும் அகதி அகதி தானே என்ற எண்ணமே அவனுள் ஏற்பட்டது.
     தங்கையின் கல்யாணத்துக்கு இருபதுலட்சம் தாய் கேட்டதும் ... அப்போது இருந்த நிலையில் சீலன் தலையாட்டி சம்பந்தத்தைப் பற்றி யோசிக்க வேண்டாமென்று தாய்க்கு உறுதியும் கொடுத்தான். வெள்ளவத்தையில் வீடு எடுக்க இ தங்கை படிக்க எல்லாவற்றும் காசுபற்றிக் கவலைப்படவேண்டா மென்று தைரியமும் கொடுத்தான்.
      ஆனால் இப்போது சீலனோ தைரியம் இழந்து தடுமாறி நிற்கும் நிலைக்கு வந்துவிட்டான்.தான் தாய்க்குச் சொன்னதையெல்லாம் நினைத்துப்பார்க்கிறான். அழுவதைத் தவிர அவனால் ஒன்றுமே செய்யமுடியாத நிலை......
       சீலனின் மனதில் பழைய ஞாபகங்கள் எல்லாம் வருகின்றன. ஏழைக்குடும்பத்தில் பிறந்தவன். அப்பா இடையில் இறந்துவிட அம்மாதான் குடும்பப் பாரமனைத்தையும் சுமக்கும் நிலை. என்றாலும் எப்படியும் பிள்ளை களைப் படிப்பிக்க வேண்டும் என்னும் பேரவாவை மட்டும் தாய் விட்டு  விடவில்லை.
      மகன் சீலனை எப்படியும் ஒரு மருத்துவராக்கிப் பார்க்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக அவர் இருந்தார்.ஏழைக்குடும்பத்தில் பிறந்த காரணத்தால் ... மருத்துவம் ஏழைகளுக்கு நல்ல முறையில் கிடைக்கவில்லை என்பது சீலனின் மனதில் பதிந்திருந்தது. எனவே படிக்கும் காலத்திலேயே சீலனின் கனவு தான் ஒரு மருத்துவராகி  தன்னைப் போல் இருகின்ற எத்தனையோ ஏழைகளுக்கு மருத்துவம் செய்ய வேண்டும் என்பதேயாகும்.
      அதேவேளை இலவச மருத்துவ மனை ஒன்று நிறுவி ஆதரவற்றவர்கள் அனைவருக்கும் மருத்துவத்தை வழங்கவேண்டும் எனக் கனவும் வைத்திரு ந்தான்.
    யாழ் பல்கலைக்கழகத்துக்கு தனது மகன் தெரிவாகி விட்டான் என்பதைக் கேட்டதும் சீலனின் தாய் மகனைக் கட்டியனைத்து தேம்பித் தேம்பி அழுதே விட்டார்.அதுவும் மருத்துவத்துறைக்கு என்றதும் சீலனின் தாயாருக்கு ..... தான் பிறந்ததின் அர்த்தம் புரிந்தது போலாகிவிட்டது.சீலனின் கிராமமே விழாக் கோலம் பூண்டது.சீலனுக்கும் அவனது குடும்பத்துக்கும் ஏகப்பட்ட மரியாதை மாலைகள் வந்து குவிந்தபடியே இருந்தன.சீலனின் குடும்பத்தை ஏறெடுத்துப் பார்க்காதவர்கள் எல்லாம் பெரும் மரியாதை கொடுத்து நின்றனர்.
     ஆனால் சீலன் மட்டும் என்றும் போல அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லா மல் தனது அன்றாட அலுவல்களைப் பார்த்தபடியே இருந்தான்.
     யாழ் பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்ற வேளையில் இவனது தனிப்பட்ட ஆற்றலாலும். இயல்பான நற்குணத்தாலும் விரிவுரையாளர்கள்இ பேராசிரியர்கள் அனைவரதும் நன்மதிப்பைப் பெற்றுக் கொண்டான். இதனால் மருத்துவ பீட மாணவர் தலவனாக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டான்.
     பல்கலைக் கழகம் முழுவதும் சீலனைப் பற்றிய பேச்சாகவே இருந்தது.
பல்கலைக் கழக நடவடிக்கைகள் அத்தனையிலும் மிகவும் நன்றாகவே ஈடு பட்டான். சீலனினுடன் கூடப்படித்த பத்மகலா என்பவளுக்கு சீலன் மீது ஒரு விருப்பு ஏற்பட்டது. அதனால் சீலனுடன் நெருங்கிப்பழக ஆசைப்பட்டாள். ஆனால் சீலனோ காதல் எதையும் காதில் போட்டதாகத்தெரியவில்லை. அவனது லட்சியம் படிப்பாகவே இருந்தது. மற்றயது தனது தாயும் தாய்பட்ட கஷ்டங்களும் அவன் மனத்தில் ஊன்றிப்போய் இருந்தன.
     கலாவோ எப்படியும் சீலனை தன்வசப் படுத்திவிடுவதில் நோக்கமாகவே இருந்தாள்.நாளாவட்டத்தில் சீலனும் கலாபற்றி உணரத்தலைப் பட்டான். இருவருக்கும் இடையில் ஒரு காதல் பாலம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் இருவரும் படிப்பில் அக்கறை கொண்டபடியால் வரம்புடன் காதலில் ஈடுப ட்டார்கள்.
 
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted





 

 

தொடர் 35
     " விழுதல் என்பது எழுதலே" - பகுதி 35
               எழுதியவர்  எம்.ஜெயராமசர்மா ... மெல்பேண் ..அவுஸ்த்திரேலியா
அறிமுகம்
--------------------
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்ததுஇ படித்ததுஇ வேலை பார்த்ததுஇ     யாவுமே இலங்கையில்த்தான்.
தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.
பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப்
பட்டதாரி.அத்தோடுஇ கல்வியியல் துறையில் டிப்ளோமாஇ சமூகவியல் துறையில்
டிப்ளோமாஇகற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும்
பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக்கல்விப்பணிப்பாளராகவும்இவட இலங்கை
புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர தமிழ்இ இந்துகலாசார விரிவுரையாளராகவும்இ
 யாழ்ஃ பேராதனை பல்கலைக்கழகங்களின்
வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்இஇலங்கை ஒலி
பரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும்இ நாடகத்தயாரிப்பாளராகவும்
கடமையாற்றியுள்ளார்.மாற்றம்இஉதயன்இஈழ நாடுஇ சிந்தாமணிஇ உதயசூரியன்
இந்துசாதனம்இமெல்லினம்இஉதயம்இபத்திரிகைகளில்.. கவிதைஇகட்டுரைஇசிறுகதைஇ
விமர்சனம்இஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்இ100
ஓரங்க நாடகங்களையும்இ10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்இ20க்கு
மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும்இஎழுதியுள்ளதோடு.. "முதற்படி" என்னும்
குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியா
வில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்ப்ட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்க
ளுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா
பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும்
ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ
சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும்இஆய்வுக்கட்டுரையாள
ராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம்
சென்று அங்கெல்லாம்.. தமிழ்இ கலாசாரம்இஇந்துசமயம்இசம்பந்தமாக விரிவுரை
கள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்இதமிழர்பண்பாடு
சம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.
தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்இவிக்டோரியா இந்து
கல்விமையத்தின் ஆலோசகராகவும்இ தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின்         
 இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.
      
தகவல் தொகுப்பு
பண்ணாகம் திரு.இக.கிருட்ணமூர்த்தி
திரு.ஏலையா முருகதாசன்
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்
 
-----------
தொடர்கிறது பகுதி 35
    படிப்பிலே இருவரது கவனமும் இருந்தாலும் இருவரும் தனிமையில் சந்தித்தித்து சிரித்து மகிழ்வதையும் விட்டுவிடவில்லை.சீலனின் காதல் பற்றி தாய்க்கு ஒன்றுமே தெரியாது.ஆனால் சீலனின் தங்கைக்கு மட்டும் ஓரளவு தெரியும்.என்றாலும் அவளும் தாயிடம் இது பற்றிச் சொல்லாமல் இருந்தது சீலனுக்கு நிம்மதியாக இருந்தது.காதல் இப்பவே வந்துவிட்டால் படிப்பு என்னாவது... லட்சியம் என்னாவது... என்று தாய் கவலைப் பட்டுவிடுவார். அதனால் இந்தக்காதல் தாய்க்குத் தெரியவரக் கூடாது என்பதில் சீலன் மிகவும் அவதானமாகவே இருந்தான்.இதனால் கலாவை வெளியில் கூட்டிப் போவதோ அல்லது படத்துக்குக் கூட்டிப்போவது .... எதையும் சீலன் செய்தது கிடையாது. தனிமையில் எங்காவது கதைப்பதும் சிரிப்பதுமே அவனது காதலாக இருந்தது. அதனால் தாய்க்குக் கடைசிவரையும் தனது காதலைக் காட்டிக் கொள்ளாமலே தப்பிவிட்டான் சீலன்.
    தேவையில்லாமல் பிடிபட்டதும் சிறைக்குச் சென்றதும் மருத்துவப்படிப்பு கனவாகிப் போனதும் தாய்பட்ட பாடுகளும் வெளிநாடுவந்தால் விடிவு கிடைக் கும் என்று கனவில் மிதந்ததும்...... யாவும் இப்பொழுது சீலனின் மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்ததனது.கதிரையில் இருந்தவன் எந்தவித சலனங்களும் இல்லாமல் வெறித்துப் பார்த்தபடி இருந்தான்.
      .... என்ன சீலா .. இப்ப என்ன நடந்துவிட்டது என்று பேயறைஞ்சது மாதிரி இருக்கிறாய் !உனக்கு என்ன தூக்குத் தண்டனையா தந்திருக்கிறாங்கள்? இது எல்லாம் இங்கு வெரி சிம்பிள் ! தேவையில்லாமல் கவலைப்படாதே. நான் உன்னைக் கண்டதே கூட உனக்குக் கொஞ்ஞமேனும் அதிர்ஷ்டம் இருக்கிற படியால என்று எண்ணு ! நானில்லாமல் வேறுயாராவது உனக்கு மொழி பெயர்க்க வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று .. ஒருக்கால் யோசித் துப்பாரு. எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளு.
         சாந்தனது வார்த்தைகள் எதுவுமே சீலனின் காதுகளில் விழுந்ததாகத் தெரியவில்லை.அவனுக்கு... தான் இனி என்ன செய்யப் போகிறேன் என்பதே மனதில் எழுந்து நின்ற பெரும் பிரச்சினையாக காணப்பட்டது. சீலனின் மன ஓட்டத்தை ஓரளவு உணர்ந்துகொண்ட படியால் சாந்தன் அவனைச் சமாதானப் படுத்தி எப்படியும் பழைய நிலைக்குக் கொண்டுவரப் பெரும் பிரயத்தனப் பட்டுக்கொண்டிருந்தான்.
      திடீரெனக் கதிரையை விட்டு எழும்பிய சீலன் ... மச்சான் எனக்கு ஒருக்கா போன் கதைக்க உதவிசெய்வியா என்று பதட்டத்துடன் கேட்டான். சீலன் மெளனம் கலைந்து பேசியதே சாந்தனுக்கு ஒருவித திருப்பம் வந்தது போலக் காணப்பட்டது. ஆருக்குக் கதைக்கப் போறாய். உனக்கிட்ட நம்பர் எல்லாம் இருக்கோ என்று சாந்தன் கேட்டான்.அப்பொழுதுதான் சீலன் தனது பொக்கற்றைப் பார்க்கிறான். அதற்குள் நிறையப் பேப்பர்கள் இருந்தன.   நிலத்தில எல்லாத்தையும் கொட்டி ஒவ்வொன்றாக பார்த்தபடி நின்றான்.
      கொஞ்சநேரம் ஒன்றுமே பேசாமல் மீண்டும் வெறுத்துப் பார்த்தபடி நின்றான். என்னடா .. நம்பர் கிடைக்க வில்லையா? ஏனடா பழையபடி ஆகிவிட்டாய்? என்று சாந்தன் கேட்டதுதான் ..... சீலன் நிலத்தில் விழுந்து புரண்டு அழத்தொடங்கிவிட்டான். சாந்தனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. சாந்தன் சீலனை தடவி .. மச்சான் என்னடா சின்னப் பிள்ளை மாதிரி அழுகிறாய். அழுதா எல்லாம் நடந்திடுமாடா? என்னடா பிரச்சினை சொல்லுடா? என்று சாந்தன் மிகவும் ஆதரவுடன் சீலனை ஆசுவாசப் படுத்தினான். மச்சான் அம்மாவின் ரெலிபோன் நம்பரைத் தொலைத்து விட்டேனடா! அங்க அவ என்ற பதிலுக்குக் எந்தநேரமும் காத்துக்  கொண்டிரு ப்பாவடா.அங்கயோ எல்லாரும் என்ர பதிலில தான் தங்கி இருக்கினம். இங்கே நானோ சிக்கலில.... என்னடா மச்சான் செய்யிறது ?
       சீலன்இஇஇ நீ ஒன்றுக்கும் கவலைப் படாதே. உனக்கிட்ட வேறு யாருடை நம்பர் இப்ப இருக்கு என்று பாரு. மற்றதைப் பிறகு பாப்பம். மச்சான் முதல் அழுகிறதை நிப்பாட்டிடா.அழுது ஒன்றும் ஆகப்போவதில்லை. நீ முதலில உன்னைத்தேற்றிக் கொள்ளடா. என்னால் முடிஞ்சளவுக்கு உனக்கு எல்லாத்தை யும் செய்து தருவன்.
      சாந்தனின் வார்த்தைகள் ஓரளவு சீலனை சுய நிணைவுக்குக் கொண்டு வந்தது.மீண்டிம் சீலன் கீழே கிடந்த பேப்பர்களை கிளறினான்.மச்சான் ஒரு நம்பர் கிடக்குது.ஆருடையநம்பர் என்று சாந்தன் கேட்டான். மச்சான் என்னைக் கைதூக்கிவிட்ட வரின் நம்பர்தாண்டா அதுஎன்று சொல்லி அந்த நம்பரை சாந்தனிடம் சீலன் கொடுத்தான்.
     ஆருடா இது? டேவிட் என்று இருக்கு. உன்னோட படிச்சவரா? அல்லாட்டி உன்ர ரீச்சரா ஃ என்று சாந்தன் கேள்விமேல் கேள்வியாய்  கேட்டான்.அவர்தா ண்டா நான் இங்க வாறதுக்கு முன்பு நல்ல நிலையில் இருக்கவும் எனக்குள் ஒரு நம்பிக்கை வரவும் பண்ணிய நல்ல மனிசனடா என்று சீலன் சொல்லி ..டேவிட்பற்றி பலவிஷயங்களை சாந்தனிடம் பகிர்ந்து கொண்டான்.
     டேவிட் என்றதும் சீலனின் முகத்தில் ஒருவித பிரகாசம் தென்பட்டதை சாந்தன் உடனே கவனித்துக் கொண்டான்.டேவிட் எப்படியும் நல்ல மனிசனாக இருக்கத்தான் வேண்டும் என்று சாந்தனும் மனத்திற்குள் எண்ணிக்கொண் டான்.
     மச்சான் ஒருகதவு மூடப்பட்டால் இன்னொருகதவு எப்படியும்திறக்கப் படும் என்பது உனக்குப் பொருந்தி இருக்கிறது.கடவுள் உனக்கு அப்பப்போ கஷ்டங் களைத்தந்தாலும் டேவிட் போன்றநல்ல மனிதர்களையும் காட்டியிருக்கிறார் என்றே நினக்கிறேன்.ஆனபடியால் மச்சான் உனக்கு இனி எல்லாம் நல்லபடி நடக்குமடா.கவலைப்படாதே. நான் இப்பவே நீ தந்த டேவிட்டின் நம்பருக்குப் போன் பண்ணுறன். அதற்குப் பிறகு நடப்பதைப் பார்ப்போம் என்று சொல்லி சாந்தன் டேவிட்டுக்குப் போன்செய்தான்.
        சீலன் கடவுளைப் பிரார்த்தித்தபடியே நின்றான். மச்சான்.... போன் அடிக்குதடா என்று சாந்தன் சொல்லியபடி சீலனிடம் போனைக்கொடுத்தான்.

    ( தொடரும் )
தொடர்ச்சி 36ஐ எழுதுபவர் ச.நித்தியானந்தன் ,இலங்கை
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடர் 36 எழுதுபவர் ச.நித்தியானந்தன் ,இலங்கை
விழுதல் என்பது எழுகையே..
பகுதி 36 
எழுத்தாளர் அறிமுகம் 
பெயர் சகாதேவன் நித்தியானந்தன் 
ஆரம்பக் கல்வி பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயம் 

உயர்கல்வி யாழப்பாணம் இந்துக்கல்லூரி 

அரசபணி பதவி நிலை உத்தியோகத்தர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 
கலைப்பணி 
சுமார் பத்துக்கு உட்பட்ட நாடகங்கள் எழுதி நடித்தமை 

சொந்தப்பெயரிலும் 

நாரதன் 

அங்குசன் 

சனீஸ்வரன் 

என்ற புனை பெயர்களிலும் கவிதைகள் யாழ் உதயன் சஞ்சீவி மித்திரன் போன்ற அச்சு ஊடகங்களிலும் 

இணையத்தில் கவிதைகள்இகதை 

பண்ணாகம்.கொம் அக்கினிக்குஞ்சு.கொம் பதிவு.கொம் சங்கதி-   தமிழ் மிறர்- இனிஒரு- சரிதம் – தமிழ்வின் – காலச்சுவடு- தமிழ் சி.என. என் -அருவி போன்றவற்றிலும் வெளியாகியிருக்கின்றன.

தகவல்த் தொகுப்பு

பண்ணாகம் திரு.இக.கிருட்ணமூர்த்தி

திரு.எலையா முருகதாசன்

தமிழ் எழுத்தாளர் இணைய அகம் -யேர்மனி

கதை பகுதி 36  தொடர்கிறது

வீழ்ந்துவிட்டோம் என்று நீ நினைக்காதே 

வெட்டினாலும் வாழை முளைக்கும் மறக்காதே 

தாழ்ந்துவிட்டோம் என்று நீ கலங்காதே 

நம்பிக்கைதான் வாழ்க்கை அது மறக்காதே 

சீலனின் மனம் அங்கலாய்த்தது. 

தொலைபேசி அழைப்பு மணி அடித்து ஓய்ந்தது. தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள் ஒரு தரம், இரண்டு தரம் இல்லை மணி அடிக்கிறது யாரும் எடுக்கவில்லை 
என்ன வாழ்க்கையடா சாமி. 

வாழ்க்கையென்றால் சில சோதனைகள் வேதனைகள் இருக்கத்தான் செய்யும் சோதனையே வாழ்க்கை என்றால் 

சீலனின் மனம் பிதற்றிக் கொண்டேயிருந்தது 

கலா, 

அம்மா, 

தங்கை, 

தவம் , 

டேவிட் அங்கிள் , 

பானு, 

விறுமாண்டி 

சிவம் 

எல்லோரும் தட்டாமாலையாக மனதில் சுழன்று கொண்டிருந்தார்கள்.  
சாந்தன் தொலைபேசியில் மீண்டும் மீண்டும் முயன்று கொண்டிருந்தான். பலனில்லை என்பது தெரிந்தது. 

அம்மா என்ன செய்கிறாளோ தெரியவில்லை. 

தொலைபேசி பணம் உடுப்புகள் எல்லாம் இழந்து சொந்தப் பேரிழந்து இப்போது மாரிமுத்து என்ற பேருடன்

”சீலன் என்ரை குஞ்சு” அம்மா கூப்பிடுவது காதில் ஒலித்தது. 

 ”சீல்” என்றுதான் கலாவும் ஆசை வந்தால் அழைப்பாள். 

நாங்கள் ஊரிழந்தவர்கள், உறவிழந்தவர்கள், நாடிழந்தவர்கள், நாதியிழந்தவர்கள் 

இப்போது பேரிழந்தவர்கள் 

இந்தாடா மச்சான் டேவிட் அங்கிளிடம் எல்லா விசயமும் சொல்லிப்போட்டன் 

அவரோடை கதை சாந்தன் தொலைபேசியை தருகிறான் 

”அங்கிள்” குரல் தளு தளுக்கிறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றன. வாய் புலம்புகின்றது. 

மறுமுனையில் அங்கிள் 

எடேயப்பா சீலன் ஒண்டுக்கும் கவலைப்படாதை நான் சாந்தனிடம் எல்லாம் சொல்லிப்போட்டன் இப்ப மணிகிராமில் இரண்டாயிரம் அனுப்பிவிடுகிறன் போனொன்டும் வாங்கி உடுப்புகள் சாமான்களும் வாங்குடா தம்பி. நடந்ததை நினைச்சு கலங்காதை 

இனி உனக்கு புது வாழக்கை பழைய எல்லாம் போகட்டும். சாந்தனிடம் கதைத்திருக்கிறன் அவன் மூலமா ஒரு வேலைக்கும் தங்கிற இடம் ஒன்றுக்கும் ஏற்பாடு பண்ணிறன். நீ வேலை செய் மக்னொடால்ஸசுக்கு போறன் உன்ரை அரியர்ஸ் சம்பளங்களை வேண்டி அனுப்பிறன்.

” அங்கிள் அம்மா...” 

கவலைப்படாதை தம்பி வெள்ளவத்தை இராமகிருஸ்;ண மிசன் மனேஜர் என்ரை வேண்டப்பட்டவர்தான். அவரிட்டை தொடர்பு கொண்டு உன்ரை அம்மாவின் போன் நம்பர் வேண்டி தாறன். எல்லாம் சாந்தனிட்டை கதைச்சிருக்கிறன். இரண்டு நாளிலை நான் உம்மை வந்து சந்திக்கிறன். போன் வாங்கின உடனை போன் பண்ணும் என்ன தேவை என்டாலும் என்னட்டை சொல்லும் 

”..........................”

”என்ன சீலன் என்ன சொல்லும்” 

அங்கிள் என்ரை பேர் இப்ப மாரிமுத்து இப்ப.... நான்.... பேரிழந்தவன்.....

எடேய் சீலன் இங்கை யார்தான் சொந்தப் பேரிலை நிற்கினம் உதெல்லாம் ஒரு விசயமே இல்லை. கவலைப்படாதை தம்பி நாங்கள் இருக்கிறம் முதல் உன்ரை சாமான்களை நீயிருந்த சிவத்தின் வீட்டை போய் எடுக்க முடியுமோ என்று பார்க்கிறன். அவன் சிவம் ஊரறிஞ்ச கள்ளன் அவனிட்டை சீட்டு கட்டிறன் எண்டு சொல்லியிருந்தா நான் கட்ட விட்டிருக்கமாட்டன். 

சரி தம்பி உன்னை நான் குழப்ப விரும்பவில்லை இப்ப சாந்தனிடம் காசை வாங்கு சாந்தன் சொல்லிற இடத்திலை தற்காலிகமாக தங்கியிரு. உன்ரை வேலைக்கும் அவனிட்டை சொல்லியிருக்கு அவன் பாத்துக்கொள்வான் பிறகு போன் பண்ணு தம்பி வைக்கிறன். 

வைத்துவிட்டார்   

அதன் பின் சாந்தன் தன் பணமும் சேர்த்து 3000 பிராங்காக கொடுத்ததும் அதன்பின் தற்காலிக ரூம் ஒன்று எடுத்து சாந்தன் மூலமாக அதில் தங்கவைக்கப்பட்டதும். புதிய ஆடைகள் போன் என்பன வாங்கியது விரைவாக நடந்தேறியது. 

சாந்தன் ஆறுதல் கூறிவிட்டு போய்விட்டான். புது போன் சிம் அக்டிவேட் ஆக 3 மணி நேரம் செல்லும் என்பதால் யாருடனும் தொடர்பு கொள்ள முடியாது. அறையில் பேசாமல் படுக்கும்படிnயும் வெளியில் வீணாக தரிய வேண்டாம் என்றும் சாந்தன் அறிவுறுத்தலுக்கேற்ப கட்டிலில் சரிகிறேன் மாரிமுத்து என்கிற சீலன். 

அம்மா இப்ப என்ன செய்வா...? எனது போன் நம்பருக்கு முயன்று அது வேலை செய்யாமல் போக சிவம் வீட்டு பொது தொலைபேசிக்கு முயன்று நடந்ததை அறிந்திருப்பாவோ அல்லது சிவம் வீடு பொலிசாரின் கட்டுப்பாட்டில்தான் இருக்குமோ.  

ஒரு வேளை சிவம் செத்திருந்தால் 

சுவிசிற்கு வந்து கொலைக் குற்றம் வேறா. ஏசியிலும் பொல பொல என்று வேர்த்தது. 

மனம் அழுதது 

இரண்டு மூன்று வேலை செய்து வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி சிவத்திடம் சீட்டுக்காசு இருபதாயிரம் பிராங்குகளுக்கு மேல் கட்டியிருப்பான். 

எல்லாம் கனிந்து வரும்போல இருக்கும் போது பேரிடி போல எல்லாமே முடிந்துவிட்டது 

தவம் அண்ணை கூறியது ஞாபகம் வந்தது 

இங்கை யாரையும் நம்பாதையும் சீலன் 

முக்கியமா இலங்கைத்தமிழரை நம்பாதையும். பெரிய கள்ளர் உவங்கள்தான். 

சிவத்திற்கும் முற்பிறப்புக்கடனோ என மனம் அங்கலாய்த்தது. 

தூக்கம் பாதி துக்கம் பாதி ஏக்கம் மீதியாக சீலன் என்கிற மாரிமுத்துவிற்கு மனம் அங்கலாயத்துக் கொண்டிருந்தது. தூக்கம் வரவில்லை 

புரண்டு புரண்டு படுக்கிறான். 

அழுதழுது கண்ணீரும் வற்றிவிட்டது. 

” அம்மா வெள்ளவத்தை பெனான்டோ வீதியில் பிச்சை எடுக்கிறாள்” 

” தவம் அங்கிள் சிவத்தை குத்திக் கொல்கிறார்”  

”முரளி கலாவின் கழுத்தில் தாலி கட்டுகிறான்” 

திடுக்கிட்டு விழிக்கிறான் சீலன் 
எல்லாம் கனவு 
 
 
தொடரும் பகுதி 37
 
எழுத்தாளர் அறிமுகம்

பெயர் சகாதேவன் நித்தியானந்தன்

ஆரம்பக் கல்வி பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயம்

உயர்கல்வி யாழப்பாணம் இந்துக்கல்லூரி

அரசபணி பதவி நிலை உத்தியோகத்தர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

கலைப்பணி

சுமார் பத்துக்கு உட்பட்ட நாடகங்கள் எழுதி நடித்தமை

சொந்தப்பெயரிலும்

நாரதன்

அங்குசன்

சனீஸ்வரன்

என்ற புனை பெயர்களிலும் கவிதைகள் யாழ் உதயன் சஞ்சீவி மித்திரன் போன்ற அச்சு ஊடகங்களிலும்

இணையத்தில் கவிதைகள்இகதை

பண்ணாகம்.கொம் அக்கினிக்குஞ்சு.கொம் பதிவு.கொம் சங்கதி-   தமிழ் மிறர்- இனிஒரு- சரிதம் – தமிழ்வின் – காலச்சுவடு- தமிழ் சி.என. என் -அருவி போன்றவற்றிலும் வெளியாகியிருக்கின்றன.

தகவல்த் தொகுப்பு

பண்ணாகம் திரு.இக.கிருட்ணமூர்த்தி

திரு.எலையா முருகதாசன்

தமிழ் எழுத்தாளர் இணைய அகம் -யேர்மனி

 

 

பகுதி – 37 தொடர்கிறது

நடந்தது யாவுமே ஒரு கனவாக இருக்கக்கூடாதா

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் , மருத்துவபீடம் பேராசிரியர் குமாரவேல், கலா, சாந்தன் கோப்பாய் இராணுவ புலனாய்வாளர்களால் இலக்கத்தகடற்ற வாகனத்தில் கடத்தப்பட்டது.

இராணுவத்தினரின் சித்திரவதைகள்

கோபமடைந்த அதிகாரியின் கையால் அடிபட்டு உடைந்த கையெலும்பு

பொலிஸ் விசாரணைகள்

தலைகீழா கட்டித் தொங்கவிட்டது

மனித உரிமைக்குழுவினர் வந்து பார்வையிட்டமை

செஞ்சிலுவைச்சங்கம் உணவுப் பொதிகள் தந்தமை  

பூசா பனாகொடை வெலிக்கடையென்று மாறி மாறி அடைக்கப்பட்டமை

நோ டேற் என்னும் கொடுமையான விளக்கமறியலில் கழிந்த 3 வருடங்கள்.

இறுதியாக சாட்சிகள் போதவில்லை நிதாஸ் என்று கூறி தீர்ப்பெழுதிய நீதிபதி

இனி இந்த நாட்டிலிருக்க முடியாதென்று எல்லா சொத்துகளைகளையும் ஈடு வைத்து ஏஜன்சியிடம் பணம்கட்டிய அந்த நாள்.

கொழும்பில் லொட்ஜில் ஆடு மாடுகள் போல் அடைபட்டு கிடந்த அந்த ஆறேழு மாதங்கள்

இறுதியாக கனவு நாடாகிய சுவிஸ் நோக்கிய பயணம் புறப்பட்ட அந்த அதிகாலை

தாய்நாட்டைவிட்டு மேலெழுந்த விமானம்.

அதன் பின் இங்கு வந்து பட்ட அவலங்கள் ”

சீலன் மாரிமுத்தாகிய உச்சக்கட்ட அவலம்:

இதெல்லாம் கனவாயிருக்காதா

கண் விழித்து பார்க்கையில் மருத்துவபீடத்;தில் பேராசிரிய பாலசுப்பிரமணியம் உயிர் இரசாயனவியல் பாடம் எடுத்துக்கொண்டிருக்கும் காட்சி விரியாதா?

மனம் அங்கலாய்த்தது

பின் அழுதது

இறுக்கி கிள்ளிப்பார்த்தான்  

வலித்தது

இது நிஜந்தான்

இதை தாங்கித்தான் ஆகவேண்டும்

தாண்டித்தான் ஆகவேண்டும்

எங்கோ யாழ்ப்பாணத்தில் இராமசாமிப்பரியாரியின் பீட்டனாயும். பிரக்கராசி கந்தவடிவேலரின் பேரனாயும் போலிஸ்கார புத்மநாதனின் மகனாயும் பிறந்த தர்மசீலனின் வாழ்க்கை இது.

எனக்கு விதிக்கப்பட்டது.

இது எனது விதி

சில நல்ல கிரகங்களும் சில பாவக்கிரகங்களும் என்னை இந்ம நிலைக்கு ஆளாக்கியுள்ளன

கோப்பாய் பொலிஸ் அதிகாரிரி சமிந்தவாஸ் - பத்தில் வியாழன்

நோ டேற் அடித்த நீதவான் இராகு

நிதாஸ் தந்தவர் - கேது

சிவம் ஏழரைச்சனியன்

டேவிட் அங்கிள் எம்மைக்காக்கும் புதன்

தவம் அண்ணை, பானு எல்லாம் நல்ல கிரகங்கள்

சீலன் என்கிற மாரிமுத்து தலையை உதறிக் கொள்கிறான்

இனி அவனது கண்கள் அழமாட்டாது.

இராமசாமிப்பரியாரியின் பீட்டனாயும்.....

பிரக்கராசி கந்தவடிவேலரின் பேரனாயும்....

போலிஸ்கார பத்மநாதனின் மகனாயும் பிறந்த தர்மசீலனின் வாழ்க்கையை அவன்தான் வாழ்ந்தாக வேண்டும்.

வீழ்ந்தான் என்பது சிறுமையல்ல.

வீழ்ந்தவன் ஒவ்வொரு விழுகையின் அடுத்த கணமே எழுந்தான் என்பதே பெருமை.

சீலனாக வீழ்ந்தவன் மாரிமுத்தாக எழுந்தான்

போன் வேலை செய்யத் தொடங்கிவிட்டது.

டேவிட் அங்கிளின் நம்பரை டயல் செய்தான்

சீலனிடம் இப்போது பயம் இல்லை

கவலை இல்லை

பாசம் இல்லை

எழவேண்டும் என்ற வெறி மட்டுமே எஞ்;சியிருந்தது.

போன் மணி அடிக்கத் தொடங்கியது

( தொடரும் .....38)

 

பகுதி 38 எழுதியவர்   செல்வன் .மகேந்திரன் குலராஜ் – பிரான்ஸ்

 அறிமுகம்

 

மகேந்திரன் குலராஜ் – பிரான்ஸ்

இவர் இலங்கை யாழ்மாவட்டத்தில் வலிகாமம்  மேற்கு பிரதேச சபைக்குற்பட்ட பண்ணாகம் கிராமத்தில் பிறந்தார். யாழ்ஃபண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயத்தில் பயின்ற இவர்  11வது வயதிலிருந்து கவிதை எழுத ஆரம்பித்த இவர் 2011ஆம் ஆண்டு தனது  முதல் நூலான "வைரம்" கவிதைதொகுப்பை தனது பாடசாலையில் நடந்த முத்தமிழ் விழாவில் மிகச்சிறப்பாக வெளியிட்டார் வலிகாமம் கல்விவயத்தில் 11வயதில் நூல் வெளியிட்ட முதல்மாணவர் என்ற பெருமைக்குரியர் குலராஜ்.

2012ஆம் ஆண்டு தனது இரண்டாவது நூலான "சீரழிந்துபோகும் தமிழரின் பண்பாடு"என்ற கவிதைநூலை வெளியிட்டுவைக்கப்பட்டது.

இவ் நூலுக்காக வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இவருக்கு "கவி அரசு"என்ற கௌரவத்தையும் வளங்கி கௌரவித்தார்.

  பல பத்திரிக்கைகள் இசஞ்சிகைகள் ,இணைய வலைத்தளங்கள் பலவற்றிலும் இவரது படைப்புக்கள் இடம்பெற்றது  பன்முகம் ஆற்றல் மிக்கவராக சிறுவயதில் திகழ்கிறார்  

            தற்போது இருஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் இவர் அங்கு கல்விற்றுக்கொண்டிருக்கும் மாணவன் 16 வயது சிறுவன் குலராஜ் இலக்கியத்துறையில் தன்னை அடையாளம் காட்டிவருகின்றார். அவர் எமது பெருந் தொடர் கதையை வாசித்து தானும் இதில் எழுத வேண்டும் என்று வாய்ப்பை தானாக வலிந்து பெற்றுக் கொண்டார்.  விழுதல் என்பது எழுகையே தொடரை எழுதிய இஎழுதவிருக்கும் எழுத்தாளர்கள் அனைவரும் மிக பிரபலியமான நிலையில் இருப்பவர்கள். அவர்கள் சார்பாகவும்  தமிழ் எழுத்தாளர் இணைய அகம் சார்பாகவும் சிறுவன் குலராஜ்சை ஊக்கமளிக்கவேண்டியது எமது கடமையாகும்.

அன்புடன்

பண்ணாகம் திரு.இக.கிருட்ணமூர்த்தி

திரு ஏலையா முருகதாசன்

(தமிழ் எழுத்தாளர் இணை அகம் யேர்மனி)

தொடர்கிறது  பகுதி 38

 

தொலைபேசி  மணி அடிக்கத் தொடங்கியது.

தேநீர்க் கோப்பையை வைத்துவிட்டு அவசரமாக தொலைபேசியை எடுத்தான்  சீலன்.

 „சீலன் நான் டேவிட் கதைக்கிறன்“ என்று டேவிட் அங்கிளின் குரல் மறுமுனையில் ஒலித்தது.

„என்ன அங்கிள் இப்பத்தானே போன் பண்ணிணீங்க என்ன விசயம் சொல்லுங்கள்“ எனறு சீலன் கேட்க,

„சீலன் இப்பத்தான் போன் பண்ணினான்.......“என்று சொல்லிய டேவிட் அங்கிள் „சீலன்......“ என்று அவரின் குரல் மெல்ல தளர்ந்தது.

„என்ன விசயம்  அங்கிள் எதுவென்றாலும் பரவாயில்லை சொல்லுங்கள்“என்றான் சீலன்.

„சீலன் என்னைக் குறை நினைக்காதை நான் அனுப்பிறன் என்று சொன்ன இரண்டாயிரம் பிராங்கை என்னால் அனுப்ப முடியாமலிருக்கிறது.....குறை நினைக்காதை சீலன்“ என்று டேவிட்  கவலையுடன் சொல்லுகிறார்.

பணம் கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த சீலனுக்கு இது ஏமாற்றந்தான். இருந்தாலும் டேவிட் அங்கிள் சுவிஸ்ஸில் நிறைய உதவி செய்திரக்கிறார். இப்பொழுது உதவி செய்ய முடியாத சூழ்நிலையிலிருக்கிறார் என நினைத்துக் கொண்ட சீலன் ஏன்,எதற்காக என்று கேட்காமல்,

„பரவாயில்லை அங்கிள் நான் பார்க்கிறேன்“ என்று சொல்லிவிட்டு தொலைபேசியை வைக்கிறான்.“என் கையே எனக்கு உதவி“ என்ற பழமொழியை தனக்காகப் புதுபித்து நெஞ்சில் பதித்தான்.

எங்கே போவது யாரைப் பார்ப்பது என்ற வினா மட்டும் சீலனின் மூளையில் ஓடிக் கொண்டிருந்தது. என்னடா இந்த வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டு வீதியில் நடந்து கொண்டிருந்தான்.உடல் மட்டுந்தான் வீதியில் நடந்து கொண்டிருந்தது. உள்ளம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. யாரிடம் போவது என்ன செய்வது என்று எதையும் சிந்திக்க முடியாது திக்கித் தவித்தான்.

இங்கேதானே நிறைய தமிழ்க்கடைகள் இருக்கு. அவர்களிடம் ஏதாவது வேலை கேட்டுப் பார்ப்போம் என்று யோசித்தவன் வேலை கேட்டு எல்லாக் கடைகளுக்கும் ஏறி இறங்கினான்.

„இப்ப ஆள் இருக்கு பிறகு பார்ப்போம்“ என்ற ஒரே பதிலே எல்லோர் வாயிலும் இருந்து வந்தது.

சீலன் ஏறி இறங்கிய கடைகளில் ஒரு கடையில் பணிபுரிந்த ஒருவர்,

„உங்களுக்கு வேலைதானே வேணும்“ என்று சீலனிடம் கேட்க சீலனும்,“ஓம் ஓம்“ என்று கொஞ்சம் புன்னகை பூத்த முகத்துடன் தலை அசைத்தான்.

„தம்பி என்னுடைய பெயர் காந்தன்“ என்று அவர் சீலனுக்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். சீலனும்“எனது பெயர் சீலன்“ என்று தன்னை அறிமுகப்படுத்தினான்.

„தம்பி எனக்குத் தெரிந்து ஒரு முதலாளி இருக்கிறார், தமிழ் ஆள்தான் அவர் நல்ல மனுசன் நான் உங்களை அவரிடம் அறிமுகப்படுத்துகிறன், அவர் உங்களுக்கு நிச்சயம் வேலை தருவார்“ என்று சீலனிடம் காந்தன் கூறி அவரிடம்  சீலனை அழைத்துச் சென்றான்.

„வணக்கம் அண்ணை“ என்று காந்தன் வணக்கம் சொன்னான்.

„வணக்கம் தம்பி பார்த்து கனநாள் ஆச்சுது இந்தப் பக்கம் இப்ப வாறதே இல்லை  தொலைபேசி எடுக்கிறதும் இல்லை“ என்று அந்த முதலாளி காந்தனிடம் கேட்கிறார்.

உடனே காந்தன் „எங்கையண்ணை நேரம் கிடைக்குது,தொலைபேசி எடுக்கவே நேரம் இல்லை. வேலை வேலை முடிஞ்சா நேர வீடு அப்படி வாழ்க்கை ஓடுது“ என்று காந்தன் பதில் அளித்தான்.

அவர்களின் தனிப்பட்ட உரையாடல் முடிவுக்கு வந்தது.முதலாளி காந்தனிடம்“யார் இந்தத் தம்பி“என்று சீலனை பற்றி விசாரித்தார்.

„எனக்கு தெரிந்தவர்தான் பெயர் சீலன். இப்பதான் இவர் இங்கை வந்தவர்.இவருக்கு விசாவும் இல்லை வேலையும் இல்லை இவருக்கு தயவு செய்து வேலை கொடுங்களேன்“ என்று காந்தன் முதலாளியிடம் கேட்டான்.

கொஞ்ச நேரம் முதலாளி சீலனை பார்த்தபடி யோசித்தார்.

பிறகு „சரி நான் வேலை கொடுக்கிறன், என்ன வேலை என்றால் என் கடையில் சாமான்கள் அடுக்கும் வேலை. ஒவ்வொரு நாளும் காலை ஒன்பது மணியிலிருந்து இரவு பத்து மணிவரையும் வேலை. ஞாயிற்றுக்கிழமை மட்டுந்தான் லீவு. சம்பளம் அறுநூறு குரோன்கள்.ஓகே என்றால் இன்றைக்கே வேலையில் சேருங்கள்“ என்று முதலாளி சீலனிடம் கூறினார்.

சீலன் உடனே, கடவுள் இப்பொழுதுதான் கண்ணைத் திறந்திருக்கிறார் என மனதில் நினைத்தபடி „சரி அண்ணை“என்று கூறிவிட்டு வேலையில் சேர்ந்தான்.

சீலன் வேலை செய்து கொண்டிருக்கும் போதே“தம்பி நீங்கள் இப்ப எங்கை இருக்கிறீர்கள்“ எனக் கேட்டார்.

„இப்போதைக்கு நிரந்தரமான ஒரு இடமும் கிடைக்கவில்லை, இனித்தான் இடம் பார்க்க வேணும்“ எனப் பதில் அளித்தான் சீலன்.

சீலனின் நிலையை முதலாளி புரிந்து கொண்டார்.

„தம்பி இந்தக் கடைக்கு மேலே ஒரு அறை இருக்குது அதில் தங்குகிறீர்களா“ என முதலாளி கேட்க சீலன் அதற்கச் சம்மதித்தான்.

„அங்கை ஒரு சின்ன அடுப்பு வைத்துச் சமைக்கலாம்;“  என்று சொல்லிவாறே  கடையின் ஒரு மூலையிலிருந்த அலுமாரிக்குள்ளிருந்து அடுப்பு பானை சட்டி எல்லாவற்றையும் எடுத்துக் கொடுத்தார்.

அவர் தொடர்ந்து, „நான் கல்யாணம் செய்ய முதல் இந்த அறையிலைதான் இருந்தனான்,இந்தச் சட்டி பானை அடுப்பு எல்லாம் நான் பாவித்தவை பரவாயில்லைத்தானே“ என முதலாளி சீலனைக் கேட்க „ஒரு பிரச்சினையும் இல்லை, நன்றி அண்ணை „ என்று வாங்கிக் கொண்டான்.

„சமையல் சாமான்கள் வாங்க காசு இருக்கா“ எனக் கேட்க மௌனமாக நின்றான். அவன் நிலையைப் புரிந்து கொண்ட முதலாளி ஐம்பது குரோன்களை அவனிடம் கொடுத்து கடையள் பூட்ட முந்தி கெதியிலை போய் சமையல் சாமான்களை வாங்கிவரச் சொல்லுகிறார்.

முதல் நாள் வேலை என்றபடியால் சீலனிடம் „சாமான்களை வாங்கிக் கொண்டு போய் அறையில் சமையுங்கள், வேலைக்கு வர வேண்டாம், நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை ஓய்வெடுங்கள், நாளண்டைக்கு தொடக்கம் வேலைக்கு வாருங்கள்“ எனச் சொல்லி சீலனை சமையல் சாமான்களை வாங்க கடைக்கு அனுப்பி வைக்கிறார்.

சீலனும் விறுவிறுவென்று கடைக்குச் சென்று தனக்குத் தேவையான உணவு பொருட்களை வாங்கி வந்து சமைத்துவிட்டு சிறிது நேரம் கட்டிலில் படுத்து ஓங்வெடுத்தான்.

காந்தனுடன் கடை முதலாளியைச் சந்தித்த போது நேரம் மாலை நான்கு மணியிருக்கும். கட்டிலில் படுத்திருந்து சீலன் தன்னிலையை யோசிக்கத் தொடங்கினான்.

ஊரிலிருந்த தன்னை காலம் எங்கேயோ தூக்கி எறிந்ததை நினைத்து கவலைப்பட்டாலும் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

தான் இப்பொழுது டென்மார்க் நாட்டில் ஏதூ ஒரு இடத்தில் ஒரு கடைக்கு மேலே உள்ள ஒரு சிறு அறையில் கட்டிலில் படுத்திருக்கிறான்.

உடலின் களைப்பு அவனைத் தூங்க வைத்துவிட்டது. அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டது. நித்திரைக் கலக்கத்தில் தான் எங்கேயிருப்பதென்று தெரியாத சீலன் தட்டுத்தடுமாறி எழுந்து லைட்டைப் போட்டு கதவைத் திறந்தான்.

எதிரே கடை  முதலாளி நின்றிருந்தார். கையில் இரண்டு பார்சல்கள் வைத்திருந்தார்.

„இந்தாருங்கள் சீலன் இந்தப் பார்சலில் இடியப்பமும் சம்பலும் இருக்கு. வீட்டுக்கு போன எனக்கு மனம் வரவில்லை, நீங்கள் சமைச்சியளோ சாப்பிட்டியளோ தெரியாது அதுதான் இடியப்பம் கொண்டு வந்தனான் „ என்று சொல்லிக் கொண்டு இடியப்பத்தை சீலனின் கையில் கொடுத்தார்.

„நன்றி“ என்று கூறிவிட்டு வாங்கிய சீலன் தானும் சமைத்துவிட்டதாகச் சொல்லுகிறான்.

„பரவாயில்லை அதை நாளைக்குச் சாப்பிடலாம், இப்ப இடியப்பத்தைச் சாப்பிடுங்கள்“ என்று சொன்ன கடை முதலாளி இன்னொரு தட்டையான பெட்டியை சீலனின் கொடுத்தார்.

சீலன் அதை பிரித்துப் பார்த்த போது அதற்குள் ஒரு சுவர் கடிகாரம் இருந்தது. கடைக்கார முதலாளி சீலனிடமிருந்து கடிகாரத்தை  வாங்கி அதில் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்து நேரத்தை சரி செய்து கொடுத்தார்.

சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான் அப்பொழுது நேரம் இரவு பத்து மணி. கடை முதலாளி விடைபெற்றுச் சென்றுவிட்டார்.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமையாக விடிந்தது. அலைக்கழிவிலிருந்தும் மன உளைச்சலிலிருந்தும் ஒரு ஆறுதல் கிடைத்தது போலிருந்தது ஞாயிற்றுக்கிழமை ஓய்வு.

தொடரும் பகுதி 39

 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகுதி 39

தொடர்கிறது...

 

அம்மா, தங்கச்சி, பத்மகலா, சுவிசில் சந்தித்த தவத்தார், இராமலிங்கம், அவரின் மகள், ஆபிரிக்க இளைஞன், டேவிட் அங்கிள், பானு, தமிழகப் பேராசிரியை, யாழ்ப்பாண பேராசிரியர் என எல்லோருடைய நினைப்பும் அவனைச் சூழ்ந்து நின்றது.

எனது படிப்பு?. ஏக்கம் அவன் இதயத்தை ஓங்கி அறைந்தது.எங்கும் போகாமல் அறைக்குள்ளேயே இருந்தான்.

ஞாயிற்றுக்கிழமையும் இரவைச் சந்தித்து விடிந்தது. விடிந்ததும் மீண்டும் சீலன் எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு கடைக்குச் சென்றான்.வேலை செய்யத் தொடங்கினான்.

கடை முதலாளி, „வெளிநாட்டிலை போன் இல்லாமலே வாழ முடியாது இதிலை பத்து குரோன்கள் இருக்குது அவசரத் தேவைக்கு மட்டும் பாவியுங்கள்“ எனக் கூறியபடியே சீலனிடம் ஒரு கைப்பேசியையும் அதற்குரிய சிம் கார்டையும் கொடுத்தார்.

எதிலுமே பிடிப்பு இல்லாமலிருந்த சீலனுக்கு கடை முதலாளியின் உதவி பெரும் அறுதலாய் இருந்தது. குழம்பி இருந்த சீலனின் மனம் தெளிவடையத் தொடங்கியது.

இனி என்ன? என் வாழ்வில் வசந்தம் வருமா?. பலவாக அவன் மனம் எண்ணத் தொடங்கியது. குழம்பிய அவன் மனதில் வேலை கிடைத்தமையால் மனதுக்கு ஒரு ஆறுதல் கிடைத்தது.

அம்மாவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைக்க வேண்டும் என்ற ஆவலுடன் தாயாரின் தொலைபேசி இலக்கத்தைத் தேடினான்,கிடைக்கவில்லை இலக்கம் தொலைந்துவிட்டது.

கவலையுடன் படுக்கையில் கண்களை மூடியபடி யோசித்தான். தாயாரின் தொலைபேசி இலக்கம் அவன் மூடிய கண்களின் படலத்தில் தெரிந்தது.

கடை முதலாளி தந்த கைத்தொலைபேசியை எடுத்து தாயாருக்கு போன் பண்ணினான். மணிச்சத்தம் போய்க் கொண்டிருந்தது யாருமே எடுக்கவில்லை. சில விநாடிகளின் தாமதம்கூட தாயாருடன் கதைக்க முடியாமல் போய்விடுமோ என்ற பரிதவிப்பை அவனுள் ஏற்படுத்தியது.

மீண்டும் இலக்கங்களை அழுத்தினான்.

“கலோ” மறுமுனையில் தாயாரின் குரல்.பாசத்துடன் தாலாட்டுப் பாடுவது போல் அவனுக்குக் கேட்டது. பல நாட்களின் பின் தாயாரின் குரலைக் கேட்டதால் சில விநாடிகள் எதுவுமே பேசாது உறைந்து நின்றான்.

“அம்மா நான் சீலன்தான் கதைக்கிறன்” மகனின் குரலைக் கேட்ட தாய்

“சீலன்” தாயின் குரல் கரகரத்து.

தாய் தன்னை பாசத்துடன் பார்ப்பது போல அவன் உணர்ந்தான். கண்கள் கசிந்தன.

“நீ எப்படி அப்பு இருக்கிறாய், எல்லாம் எங்கடை விதி, உன்னை அனுப்பிப் போட்டு நாங்கள் நிம்மதியில்லாமலிருக்கிறம்” என்று தாய் கவலைப்படத் தொடங்கினார்.

“அம்மா நீங்கள் கவலைப்படாதையுங்கோ நான் ஒரு குறையுமில்லாமல் இருக்கிறன், சந்தோசமாய் இருக்கிறன்” என சீலன் தாயாருக்கு பதில் அளிக்கிறான்.

தனக்கு இருக்கும் வேதனையைச் சொல்லித் தாயாரை நோகடிக்க சீலன் விரும்பவில்லை.

“அம்மா எப்படியம்மா இருக்கிறியள், தங்கச்சி எப்படி இருக்கிறாள்” என சீலன் கேட்கிறான்.

“நாங்கள் நல்ல சுகமாய்  இருக்கிறம். எங்களுக்கென்ன நீ அங்கை என்ன பாடுபடுகிறாயோ என்ற யோசனைதான் எப்பொழுதும் எங்களுக்கு.  உனக்கு ஒரு பிரச்சினையும் இல்லைத்தானே, கனநாளாய் ரெலிபோன் நீ எடுக்கேலை பயந்திட்டம் , இப்ப நீ எங்க யாரோட இருக்கிறாய் “என தாய் வாஞ்சையுடன் கேட்கிறாள்;.

சுவிஸ்ஸிலிருந்து டென்மார்க்கிற்கு வந்த விபரத்தை கவலையுடன்  தட்டுத்தடுமாறிச் சொல்லிய  சீலன் இப்பொழுது ஒரு தமிழருடைய கடையிலை வேலை கிடைத்திருப்பதையும் கடைக்கு மேலேயே  கடை முதலாளி அறை தந்ததாகவும் சொல்லுகிறான்.

“எங்கை அப்பு சாப்பிடுகிறாய்” தாய் கேட்கிறாள்

“அம்மா நான் சமைத்துத்தான் சாப்பிடுகிறன் நீங்கள் ஒன்றுக்கும் யோசியாதையுங்கோ,எனக்கு ஒரு குறையுமில்லை, அம்மா எனக்கு வேலைக்கு நேரமாகுது பிறகு போன் பண்ணுறன்” என்று சொல்லிவிட்டு சீலன் கைத்தொலைபேசித் தொடர்பைத் துண்டிக்கிறான்.

தாயுடன் கதைத்ததால் சீலனின் மனதில் இருந்து பாரம் குறைந்தது போல் அவனுக்கிருந்தது.

 

கடையும் அறையுமாக இருந்த சீலனுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வந்தது மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

சீலன் கடைகளைச் சுற்றிப் பார்ப்பதற்காக வெளியே சென்றான். கடைகளைச் சற்றிப் பார்த்துத் தனக்குத் தேவையான சில பொருட்களையும் வாங்கினான்.

கடைகளைச் சுற்றிப் பார்த்ததனால் அவனுக்கு களைப்பு ஏற்பட்டது. கோப்பிக்கடையொன்றுக்குளஇ சென்ற அவன் கோப்பியொன்றையும் கேக் துண்டொன்றையும் வாங்கி கண்ணாடி யன்னலோடு இருந்த நாற்காலியில் உட்கார்ந்து யன்னலுக்கூடாக போவோர் வருவோரைப் பார்த்தபடி கோப்பியைக் குடித்துக் கொண்டும் கேக்கை கரண்டியால் எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டுமிருந்தான்.

தமிழர்கள் சிலர் வீதியால் போய்க் கொண்டிருந்தனர். அவர்கள் சீலனை திரும்பிப் பார்த்தனர். பக்கத்தில் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு ஏதோ சொல்ல அவர்களும் திரும்பிப் பார்த்தனர். அவர்களை நோக்கிச் சீலன் கையசைக்க அவர்களும் அசைத்துவிட்டுப் போய்க் போய்க் கொண்டிருந்தனர்.

தானாடாவிட்டாலும் தன் தசை ஆடுமென்பார்களே அது போல் சக தமிழனுக்கும் தசை ஆடுமென்பது போல் கையசைத்துச் சென்றனர்.

நேரம் கிட்டதட்ட இரவு 7.30 மணி. வாங்கிய பொருட்களுடன் சீலன் கோப்பிக் கடையைவிட்டு வெளியே வந்து தனது அறையை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

வீதியின் ஒரு திருப்பம் அதில் தெருவிளக்கின் வெளிச்சம் வீதியில் விழவில்லை. சீலனுக்கு எதிரே இருவர் வந்து கொண்டிருந்தனர்.

வந்த இருவரில் ஒருவன் சீலனைப் பிடித்துக் கொள்ள மற்றவன் சீலனின் சட்டப்பையிலிருந்த பணத்தையும் கையில் இருந்த பொருட்பகளையும் பறித்தெடுத்தனர். அவர்களை சிறிதளவுதான் சீலன் தடுத்தான்லு ஆனால் அவனின் சூழ்நிலை அதற்குமேல் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.

கவலையுடன் அறைக்குத் திரும்பினான் சீலன். சோர்ந்து போய் பொத்தென்ற கட்டிலில் உட்கார்ந்தன். இரண்டு கைகளையும் கட்டிலில் ஊன்றியபடியே மேலே பார்த்துக் கொண்டிருந்தான். கண்களைத் துடைத்தது கை

சீலனின் வாழ்க்கை இருண்டது போலிருந்தது, கேள்விக்குறியாகியது. வாழ்க்கையில் சின்னச் சின்னத் தடங்கல்கூட சூழ்நிலை காரணமாக சூனியமாகத் தோன்றும். அந்த நிலைதான் இப்பொழுது சீலனுக்கும்.

தன்னிடம் இருந்து போனையுமமல்லவா பறித்துவிட்டார்கள். இருந்த கொஞ்சப் பணத்தையும் பறித்து விட்டார்களே. என்ன செய்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. சாப்பிட மனமில்லாமல் உடை மாற்ற மனமில்லாமல் போட்ட உடுப்புடனேயே படுத்துவிட்டான்.

 

அடுத்த நாள் திங்கட்கிழமை.வழமை போல் வேலைக்கச் சென்றான். சீலனின் முகம் வழமை போல் இல்லை. சீலனைப் பார்த்த முதலாளி அதை உணர்ந்து கொண்டார்.சீலனை அருகில் அழைத்து “ என்ன உங்கள் முகம் வாடியிருக்குது என்ன நடந்தது” எனக் கேட்க “நீங்கள் எனக்குத் தந்த போனையும் அம்மாவுக்கு அனுப்பவென்று வைத்திருந்த காசையும் வழிப்பறியர்கள்  பறித்துவிட்டார்கள்” எனக் கவலையடன் சொன்னதைக் கேட்டதும் முதலாளிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.சீலனைச் சமாதானப்படுத்துவதற்காக” பரவாயில்லைச் சீலன் நடந்தது நடந்து போச்சுது இனி என்ன செய்வது கவலைப்படாமல் இருங்கள்” என அவனின் முதுகைத் தடவி சமாதானப்படுத்தினார்.

சீலனின் கைகள்  வேலைகளைச் செய்தாலும் மனம் பலவற்றையும் யோசிக்கத் தொடங்கியது.எனது அகதி விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்களா நிராகரிப்பார்களா, நிரந்தர வதிவிட விசா கிடைக்குமா இல்லையா, எனது பெயரும் மாரிமுத்துவாகிவிட்டது. பாஸ்போர்ட்டும் இல்லை,சீலன் என்பதற்க எந்தவொரு ஆதாரமும் இல்லை……….

எந்த ஒரு முடிவையும் காண இயலாதவாறு குழம்பிக் கொண்டிருந்தான் சீலன்.

புத்மகலாவைப் பற்றி நினைக்கத் தொடங்கினான்.இப்பொழுது  என்ன செய்து கொண்டிருப்பாள், கனடாவிலை இப்பொழுது என்ன நேரமாக இருக்கும் என சீலனின் அங்குமிங்குமாக அலைபாயத் தொடங்கியது.

எனது கையறு நிலையை முதலாளிக்குச் சொல்லிப் பார்ப்போம். அவர் ஏதாவது உதவி செய்வார் என்று சீலன் நினைத்தான்.

வேலையில் சிறு இடைவேளை கிடைத்தது.

“அண்ணை எனக்கு ஒரு உதவி செய்வீர்களா” எனது தயங்கித் தயங்கி கேட்க” தயங்காமல் கேளுங்கள் சீலன் நான் என்ன செய்ய வேண்டும் என கடை முதலாளி சீலனைக் கேட்டார்.

தான் வெளிநாட்டுக்கு வந்ததிலிருந்து இன்றுவரை தான் பட்ட கஸ்டங்களையும் தனது பெயர் மாற்றப்பட்டதையும் தான்தான் சீலன் என்பதற்கான எவ்விதமான ஆதாரமும் இல்லையென்று சொல்லிக் கவலப்பட்டவன் விசா எடுத்தால்தானே இங்கு இருக்க முடியும் எனச் சொல்லிக் கவலைப்பட்டான்.

“சீலன் கவலைப்படாதை நானும் உன்னைப் போல எத்தனையோ பிரச்சினைகளையும் கஸ்டங்களையும் தாங்கித்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறன்,கஸ்டங்களை எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்:டிருந்தால் வாழ முடியாது, எதற்கும் தீர்வு உண்டு,இது ஒரு பெரிய விசயமும் இல்லைஈவிசா எடுத்துத் தாறது எனது பொறுப்பு” என்று சொன்னு கடை முதலாளி” எனக்குச் சொன்ன மாதிரி வேறு எவருக்குமே சொல்லாதை கண்டபடி வெளியிலை திரியாதை காவல்துறை கண்ணிலை பட்டால் பெரிய பிரச்சினையாகிவிடும் கவனம்” என சீலனுக்கு புத்தமதிகள் சொன்னார் கடை முதலாளி.

“சரி அண்ணை நான் கவனமாக இருக்கிறன்” என்று சொன்ன சீலனிடம்,

“சீலன் முதலிலை நீ உன் வீட்டுக்கு ரெலிபோன் செய்து பிறப்புச் சான்றிதழையும் அடையாள அட்டையின் புகைப்படப் பிரதியையும் நான் சொல்லும் முகவரிக்கு அனுப்பச் சொல்லு” என்று சொல்லிய கடை முதலாளி ஒரு முகவரியை எழுதிக் கொடுத்து கடை ரெலிபோனிலேயே ரெலிபொன் செய்யச் சொல்ல சீலனும் உடனடியாகவே தாயாருக்கு ரெலிபோன் செய்கிறான்.

சில நாட்கள் சென்றன. வேலைக்குப் போன காலை நேரத்திலேயே”சீலன் ஒரு நல்ல செய்தி பிறப்புச் சான்றிதழும்,அடையாள அட்டை புகைப்படப் பிரதியும் நான் சொன்ன முகவரிக்கு வந்துவிட்டது “ என்று சொல்லியபடி ஒரு தபால் உறையக் கொடுக்கிறார்.

கடை முதலாளி செய்து கொண்டிருக்கும் உதவியை நினைத்து சீலன்” நன்றி அண்ணை” என நெகிழ்கிறான்.

“சீலன் இன்றைக்கு கடை பூட்டியதும் நானும் நீங்களும் ஒருவரைப் புஹ்ர்க்கப் போக வேணும், இரவுச் சாப்பாட்டை எங்கடை வீட்டிலை சாப்பிடலாம்” என்கிறார்.

கடையைப் பூட்டியதும் கடை முதலாளி சீலனை ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் செல்லுகிறார். வீட்டு வாசலடிக்குப் போகும் போதே “ இந்த வீட்லிருப்பவரின் பெயர் வேல்முருகன், இவர்தான் உனது கேஸ்ஸை எழுதப் போகிறவர்” எனச் சொல்லியவாறு வீட்டு மணியை அழுத்துகிறார்.

கதவைத் திறந்த வேல்முருகன் இருவரையம் வரவேற்று உட்கார வைக்கிறார். கடை முதலாளி சீலனை வேல்முருகனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.

 

தொடரும்  பகுதி  40  தொடர்ச்சியை எழுதுபவர்: காசி.வி.நாகலிங்கம், ஜேர்மனி
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விழுதல் என்பது எழுகையே.
தொடர்ச்சி பகுதி 40
எழுதியவர்-     காசி.வி. நாகலிங்கம்  யேர்மனி
அறிமுகம்       
காசி.வி.நாகலிங்கம் அவர்கள்  
இவர் யாழ் -பொன்னாலையை பிறப்பிடமாக கொண்டவர்  தனது ஆரம்பகல்வியை பொன்னாலை வரதராசப்பெருமாள் வித்தியாசாலையிலும்   உயர்கல்வியை யாழ்-விக்ரோறியாக் கல்லூரி சுழிபுரத்த்pலும் கற்றார.; அதன்பின்   சங்கானை -ப.நோ.கூட்டுறவுச்சங்க தலைமை அலுவலகத்ததில் பணியில் ஈடுபட்டார். தமது  மாணவர்களின் நன்மைகருதி  -ரியூட்டறி அமைத்து கல்வி கற்பித்துவந்த காலத்தில் நாட்டு சூழ்நிலைகாரணமாக யேர்மனிக்கு 1979ம் ஆண்டு வந்தடைந்து. அக்காலத்தில் இருந்து எழுத்துத்தறையில் ஆர்வம் கொண்டார் அதன்பயனாக 1988 இல் யேர்மனியில் இஇவண்ணத்துப்பூச்சிஇஇ என்னும் சஞ்சிகையை 2000ம் ஆண்டுவரை வெளியிட்டார். ஆந்த காலத்தில் 10 நாவல்களை எழுதி வெளியிட்டார்.
கடலில் ஒரு படகு  - சிறகொடிந்த பறவை மீண்டும் சிறகடித்தபோது - விடியலில் மலர்ந்த பூக்கள்-2000இ - விழிகளைநனைத்திடும் கனவுகள் 2001 - வீட்டுக்குள் வந்த வெள்ளம் 1996இ -சொந்தமும் சோதனையும் 1990 - ஒட்டாதஉறவுகள 2003 -மனங்கலங்கிய மன்னன் 1988 - வாழ நினைத்தால் வாழலாம் 2007 - புதிய திருப்பம்  1988 - அவன் காட்டிய வழி 1988 -அழாத உலகம் (நாடகம்)  1992;
யேர்மனியில் வாணிவிழாவை தனது வெளியீட்டகம்  மூலம் 1991 இல் தொடங்கி பின்னர் அந்த நகரமக்கள் விழாவாக இன்றுவரை ஆண்டு தோறும் சமய அறிவிப் போட்டிகள் நடாத்தி திறம்பட நாடாத்திவருகிறார்.
அத்துடன் யேர்மனி தமிழ்ப்பாடசாலையில் 2000ம் ஆண்டுமுதல் 2011 ஆண்டுவரை தமிழாசிரியராகவும் பணிபுரிந்தார்.
தகவல்
பண்ணாகம் திரு.இக.கிருட்ணமூர்த்தி
திரு.ஏலையா முருகதாசன்
(தமிழ் எழுத்தாளர் இணைய அகம்)
விழுதல் என்பது எழுகையே   
தொடர் பகுதி 40 தொடர்கிறது.
டென்மார்க்கில் சீலனுக்குக் கடைமுதலாளி ஆனந்தர் பெரும் உதவியாக இருந்தார். அவர் கடையின் மேல்மாடியிலிருந்த சின்னஞ் சிறிய அறையே அவன் வசந்தமாளிகை. கடையில் வைக்க இடமில்லாத பல சாமான்கள் அந்த அறையில் அங்குமிங்கும் போடப்பட்டு இருந்தன. அதற்குட்தான் சீலனுடைய சமையல்இ படுக்கையுடன் கூடிய வாழ்க்கை தொடர்ந்தது.
வீசா இல்லாததால் துணிந்து வெளியே நடமாடமுடியவில்லை. இடையிடையே தலை கிண்கிண் என்று இடிக்கும். முதலாளியிடம் டிஸ்பிரின் வாங்கிப் போட்டுக்கொள்வான். யோசிப்பதாலோ அல்லது வீட்டுக்குள்ளே அடைபட்டுக்கிடப்பதாலோ இருக்கலாம் என்று நினைத்தான். கள்ளன் போல் பயந்து பயந்து திரிவதும் குட்டியறைக்குள் பெட்டிப்பாம்பாகக் கட்டுப்பட்டுக் கிடப்பதுமாக சீலனின் பயனுள்ள வாழ்நாட்கள் குரங்கு பிடுங்கி எறியும் பூந்தளிர்கள் போல் வீணாகி மடிந்தன.
முதலாளி ஆனந்தர் தரும் சிறுதொகை சம்பளப்பணத்தை சீலன் மிகச்சிக்கனமாகப் பயன்படுத்தினான். கடையில் தூக்கிறஇ பறிக்கிறஇ கூட்டுறஇ கழுவுற வேலைகளைத் தானே இழுத்துப்போட்டுச் செய்தான். டாக்டராக வரப்போகின்றேன் என்று நெஞ்சை நிமிர்த்திப் பெருங்கனவுகளுடன் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட மாணவர்களில் முதல்மாணவனாக விளங்கிய தர்மசீலன் இன்றுஇ படிப்பைப் பாதியிலே குழப்பி சிறுவயதிலேயே கடைவேலையே தஞ்சம்புகுந்தவன் போல் தொட்டாட்டு வேலைகளைச் செய்துகொண்டு நின்றான்.
„இதுதானா  என் வாழ்க்கை? இதற்கு மேல் என்னால் முன்னேற முடியாதா? சாண் ஏற முழம் சறுக்கிதே!' என்று அவன் மனதில் எண்ணங்கள்இ விட்டு விட்டு அடிக்கும் மின்னல்கள் போல் வந்து ஒளிப்பதும் ஒடுங்குவதுமாக இருந்தன.    
அகதிப் பதிவுக்கு வேண்டிய பத்திரங்கள்இ சீலன் கேட்டுக் கொண்டபடி தாயும் தங்கையும் அலுவலகர்களுக்குஇ அவசியமான போது காசைக் கொடுத்துஇ உடனே வாங்கி அனுப்பியிருந்ததால் எல்லாம் வந்து கிடைத்துவிட்டன.
ஆனந்தர்இ தனக்குத் தெரிந்த நண்பர் மூலம் சீலனின் புதிய அகதி விண்ணப்பத்தைக் கொடுக்கஇ ஒழுங்கு செய்திருந்தார். இன்று மாலை அவரிடம் சென்றுஇ கதைத்துஇ எழுத்து வேலைகளை முடித்தால் நாளை வெளிநாட்டு அலுவலகத்துக்குச் சென்றுஇ அகதி விண்ணப்பத்தைக் கொடுக்கலாம். இது பற்றி சீலன்இ டேவிட் அங்கிளிடம் தொலைபேசியில் குறிப்பிட்டிருந்தான். ஆனால் அவர் அதைக் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை.
„அவர் தருவதாகக் கூறிய பணத்தைத் தந்து உதவ முடியவில்லையே என்ற கவலையாக இருக்கலாம்' என்று அவன் நினைத்தான்.
பத்மகலாவுக்கு பல தடவை ரெலிபோன் எடுத்தும் அவளைச் சந்திக் முடியவில்லை.
„இன்று இறுதியாக ஒருக்கா எடுத்துப் பார்ப்போம்' என்று நம்பர்களை அழுத்தினான்.
மறுமுனையில் தொலைபேசி ஒலிக்கஇ சீலனின் மனதில் ஒரு புது இன்ப ஆரவாரத்தின் அதிர்வு இடித்தது.
கலாவின் வார்த்தைகள் வேண்டாவெறுப்பாக வந்தன. சீலன் பொறுமையாகஇ அன்போடு கதைத்தான். அவன் சொல்வது எதையும் கலா கேட்கத் தயாராக இல்லாதவளாய்இ „சீலன்! உங்களை நீங்களே காப்பாற்றத் தெரியாமல் நிற்கிறீங்கள்! பத்தாததுக்கு யாரோ ஒருவன் பெண்சாதியாம்இ பானு என்றவளோடை கூத்தடிச்சுத் திரிகிறீங்களாம்! நீங்கள் நீங்களாக இல்லை. வெளிநாடு வந்ததும் தலைகீழாக மாறிவிட்டீங்கள். எங்கள் பழைய காதல் இனிச்சரிவரும் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் ஆதாளபாதாளத்துக்குள் விழுந்து விட்டீங்கள். நீங்களாவது இனி எழுந்திருப்பதாவது! தங்கச்சிஇ அம்மா என்று தலைக்கு மேலை பொறுப்புகளைச் சுமந்து கொண்டு நிக்கிறீங்கள். எனக்கு இணையான டாக்டராக வர இந்த ஜென்மத்தில் உங்களாலை முடியாது. தயவு செய்து என்னை மன்னித்துக்கொள்ளுங்கோ!'
சீலனின் பதிலை எதிர்பார்க்காமலே தொடர்பைத் துண்டித்துக் கொண்டாள் பத்மகலா.
அவன் ஒரு கணம் ஆடிப்போனான்.
ரெலிபோன் எடுக்கும் போது இருந்த இன்ப ஆரவாரம் இப்போ ஆழிப்பேரலையாகி அவன் நெஞ்சில் பேயாட்டம் ஆடியது.
சீலனின் வாழ்க்கையை நிர்ணயிக்க இவள் யார்?
எப்பிடி --- எப்படி ஆதாளபாதாளத்துக்குள் அவன் விழுந்து விட்டானாம் --- இனி அவனுக்கு அஸ்தமனமாம் --- இந்த ஜென்மத்தில் எழுந்திருக்கவே முடியாதாம்!
ஆருயிர்க் காதலியாக நித்தம் நித்தம் நெஞ்சில் உலா வந்த பத்மகலா சொல்கிறாள்.
சீலன் ஒரு கணம் ஆடிப்போனது உண்மைதான். ஆனால் மறுகணம் அவன் முதுகில் சுளீர் என்று ஒரு சாட்டையடி விழுந்தது போல சிலிர்த்து எழுந்தான்.
„விழாதே! எழுந்து நில்!' என்று வீடு அதிரக் கத்தினான்.
„சீலா! தர்மசீலா! எழுந்து நில்லடா!' என்று தனக்குத் தானே அறைகூவல் விடுத்தான்.
நெஞ்சுக்குள் ஆழிப்பேரலையாக அடித்த பத்மகலாவின் வாசகங்கள் புஸ்வாணங்களாக அடங்கி ஒழிந்திடஇ ஒரு அமைதித்திரை இடையே விழுந்தது.
„ஒன்றும் இல்லாதவனா நான்?'
„அம்மா!'  என்று உதடுகள் துடிக்க விம்மினான்.
„பெற்றதாயைத் தலைக்குச் சுமை என்று சொல்கிறாளே! இவள் எல்லாம் படித்தவளா? தாய்ப்பாசம் என்றால் என்ன என்று அறியாத முட்டாள். அற்ப வசதிகளைக் கண்டு மதிகலங்கிப்போய் நிற்கும் பைத்தியக்காரி.
அம்மாவும் தங்கச்சியும் எனக்குப் பொறுப்பாம் --- உயிரடி! உயிருக்கு உயிர் தந்த உறவடி!
பாசம் என்றால் என்ன என்று தெரியாத மடைச்சாம்பிராணியடி நீ!'
சோகமும் கோபமும் அவனைச் சில நிமிடங்கள் எரிமலையாக்கி வேடிக்கை பார்த்தன.
„அகதியாகப் பதிஞ்சதாலை நான் அகதியா?
பரந்துபட்ட உலகமெல்லாம் சமுத்திரம்போல் விரிந்து கிடக்கடி என் உறவுகள்.
விழுந்தவனை மாடேறி விழக்குவது போல வார்த்தைகளால் என்னை மிதிக்கிறியா?
கேளடி பத்மகலா!
என்றைக்கோ ஒரு நாள் உனக்கு முன் வந்து நெடுமால் போல நிமிர்ந்து நிற்பேன்.
இது என் சபதமடி பத்மகலா!'
சீலனின் மனம் ஆவேசம் தாங்க முடியாமல் தனக்குள்ளே பொங்கிக் கொதித்தது.
„ஒன்றும் இல்லாதவனா நான்?
தாயே கலைவாணி! வித்தகியே! நீ எங்கே போய்விட்டாய்?
படித்த படிப்பெல்லாம் பாழாகிப் போய்விட்டதா?
ஆதாளபாதாளத்துக்குள் நான் விழுந்து விட்டேனாம்இ அவள் சொல்கிறாள்.
வாணி சரஸ்வதி தாயே! நீ என்ன சொல்லுகிறாய் அம்மா?
ஓரு வழியும் அறியாமல் நட்டாற்றில் நிற்பவன் போல் கதியற்று நிற்கின்றேன்.
வழிகாட்டு! நான் ஜெயிக்க வேண்டும். என் கடமைகளைச் செய்ய வேண்டும். என்னைத் தூக்கிவிடு!' என்று கண்களில் நீர் பாயஇ பராசக்தியை மன்றாடிக் கொண்டிருந்தவன்இ மனச்சோர்வும் பசிக்களைப்பும் கண்களை மொய்க்க தன்னையறியாமலே தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டான்.
„சீலன்! சீலன்!' என்றபடி கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த முதலாளி ஆனந்தர்இ அவன் அயர்ந்து தூங்குவது கண்டுஇ „எழும்பு சீலன்! போகவெல்லே வேணும் எழும்பு!' என்று அவனைத் தட்டி எழுப்பினார்.
ஆழ்ந்த தூக்கத்திலிருந்த சீலன்இ திடுக்கிட்டுப் பதறித் துடித்து விழித்தவன்இ ஆனந்தரைக் கண்டதும் அவசரமாக எழுந்தான்.
„கோவிக்காதேங்கோ முதலாளி! அவள் சொன்னதை என்னாலை தாங்க முடியவில்லை.' என்றான் கண்கலங்கியபடி.
„யார் சொன்னது என்ன சொன்னது?' என்று ஏதும் விளங்காமல் ஆனந்தர் அவனைப் பார்த்தார்.
சீலன்இ தொலைபேசி உரையாடலின் போது பத்மகலா போட்டுடைத்ததை விபரித்தான். அவன் நா சோகத்தில் வறண்டு போயிருந்தது.
ஆனந்தர் அவனைத் தடவி ஆறுதல் வார்த்தைகள் பல கூறினார்.
„சீலா! மனிதர்கள் பறந்து கொண்டிருக்கிறார்கள்இ மனிதாபிமானத்தை மறந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆங்காங்கே நல்ல மனிதர்கள்இ உண்மை உறவுகள்இ உயிர் நண்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் நீ தழம்பாதே! சூரியனுக்கு அஸ்தமனம் வந்தால் மறுநாள் காலை உதயமாகிஇ இளங்கதிர்கள் வீசி எழுந்திருக்கப் போகிறான் என்பதுதான் உண்மை. இது போலத்தான் இன்று உனக்கு அப்பிடியும் இப்பிடியுமாகக் குழப்பங்கள் வந்து கொண்டிருக்கு. இது ஓடி மறைந்து விடியும் நாள் விரைவில் வரும்!
முகத்தைக் கழுவிப்போட்டு வெளிக்கிட்டுக் கீழே வா! நான் கடைக்குள் நிக்கிறன்.' என்று வெளியேற முனைந்தார்.
அப்போ சீலனின் கைத்தொலைபேசி ஒலித்தது.
மறுமுனையில் டேவிட் அங்கிள்.
சீலனுடன் டேவிட் அகதிவிண்ணப்பம் பற்றிக் கதைத்தார். அவன் ஆனந்தரை நிற்கும்படி கைகாட்டிச் சைகை செய்தபடிஇ
„நீங்களே முதலாளியுடன் கதையுங்கோ!' என்று தொலைபேசியை ஆனந்தரிடம் நீட்டினான்.
ஆனந்தர் தொலைபேசியை வாங்கிக் கதைத்தார்.
„நீங்கள் சொல்வது எனக்கும் சரி எனப்படுகிறது. சீலனுக்குச் சம்மதம் என்றால் ஓகே.
படித்தபிள்ளை அவன் என்ரை கடையிலை தொட்டாட்டு வேலை செய்து வாழ்நாளைப் பாழடிக்கக் கூடாது. வேறு வழியில்லாமல் இவளவு நாளும் அவன் தங்கியிருக்கஇ என்னால் முடிந்த உதவியைச் செய்தேன். இனி தன் முன்னேற்றத்துக்கு ஒரு வழி பிறக்க வேண்டும் என்றால் முயற்சி செய்து பார்க்கட்டுமே டேவிட்!'
„திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை என்று சொல்வார்கள். நீங்களும் தெய்வம் போல் சீலனுக்கு உதவி புரிகிறீங்கள்' என்று டேவிட் கூறஇ „சீச் -- சீ – அப்படி ஒன்றும் நான் பெரிதாகச் செய்யவில்லை. நீங்கள் தான் சுவீஸிலை மைக்டொனல்ஸ் வேலை எடுத்துக் கொடுத்ததிலிருந்து தொடர்ந்து அவனுக்குக் கைகொடுத்து உதவி வருகிறீங்கள்!' என்று கூறிஇ தொலைபேசியைத் திரும்பச் சீலனிடம் கொடுத்தார்.
„நன்றி அங்கிள்! இவளவு உதவி செய்கிறீங்கள் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நீங்கள் அனுப்பும் நண்பருடன் நான் ஜேர்மனிக்குப் போகிறேன். அங்கு போன பிறகு உங்களுடன் கதைக்கிறேன்.' என்று தொலைபேசி உரையாடலை முடித்துஇ முதலாளி ஆனந்தரைப் பார்த்தான்.
அவர் சீலனின் அருகே வந்துஇ அவனை ஆதரவோடு தடவியபடிஇ
„சீலா! நீ நல்லா இருப்பாய்! நான் எத்தனையோ மனிதர்களைப் பார்த்திருக்கின்றேன். ஆனால் உன்னை மாதிரி ஒருவனை நான் உன்னிடம் தான் பார்க்கிறேன். உன்னுடைய உயர்ந்த மனசு உன் கண்களுக்குள் தெரிகிறது. பெரிய ஆலமரமாய் நிமிர்ந்து நிழல் கொடுத்து நிற்பாய்! எதையும் உன்னால் எதிர்கொள்ள முடியும். விழுந்தாலும் மறுபொழுது வீராப்புடன் எழுந்து நிற்க உன்னால் முடியும்!
ஜேர்மனிக்குப் போ! அங்கே அகதியாகப் பதி!
அது ஒரு பெரிய தேசம். எங்கள் பிள்ளைகளெல்லாம் அங்கே படித்து நல்ல நிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். நீ அங்கே போய்ப் பார்!
வந்த சில நாட்களிலே என் மனதில் இடம் பிடித்துவிட்டாய். டேவிட் உன்னிடம் நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார். சுவீஸ் தவம்இ அந்த பானு இவை எல்லாம் உன்மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்கள்.
மக்னெற் மாதிரி பழகிற எல்லாரையும் உன்னிடம் ஈர்த்து நண்பர்களாக்கிக் கொள்கிறாய்!
சீலா! காதலி கை விரித்தாலும் நண்பர்கள் உனக்கு நிறையவே இருக்கின்றார்கள். உயிர் கொடுப்பார்கள். துணிந்து செல்!' என்று முதலாளி அவனுக்குத் தைரியமூட்டினார். கொடுக்கவேண்டிய சம்பளத்தடன் மேலும் ஐந்நூறை „ஆரம்பச் செலவுக்குத் தேவைப்படும் வைத்துக்கொள்!' என்று சீலனின் கைக்குள் வைத்தார் ஆனந்தர்.
டேவிட் கூறிய நேரத்துக்கு ஆனந்தரின் கடை வாசலில் கார் ஒன்று வந்து அமைதியாக நின்றது.
காரிலிருந்து இறங்கிய விவேக்இ அவர் மனைவி வவா இருவரும் ஆனந்தருக்கு வணக்கம் சொல்லஇ அவரும் பதிலுக்கு வணக்கம் வாங்கோ! என்று வரவேற்றார்.
சூறாவளியில் சிக்கி அடிபட்ட மாங்கன்று போல் வாடிவதங்கி நின்ற சீலனை இருவரும் கட்டியணைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்திய போது அவன் நெஞ்சுக்குள் கோடி நட்சத்திரங்கள் ஒன்றாகி ஒளிர்ந்ததை உணரமுடிந்தது. அவன் கண்களிலிருந்து கண்ணீர் அவனையறியாமலே வழிந்தது.
‚யார் இவர்கள்? டேவிட் அங்கிளுக்கு வேண்டப்பட்டவர்கள். ஆனால் என்னை இவர்கள் முன்பின் அறியாதவர்கள்.
இப்படி ஒரு ஆதரவான அணைப்பு.... அதுவும் இந்த வவா அன்ரி... அன்பொழுக அணைத்த விதம்.... என் தாயோ இப்படி ஒரு உருவத்தில்.... அல்லது கலைவாணி அம்மையோ இவ்வேடத்தில்?' என்று அக்கணம் திகைத்துப்போய் நின்றான்.  
சிறிய பை ஒன்றை முதலாளி ஆனந்தர் கொடுக்கஇ அதற்குள் தன் உடுப்புகளையும் சேட்டிபிக்கற்களையும் வைத்துக்கொண்டான்.
கை எடுத்து அவரை நன்றியுடன் கும்பிட்டான். அவன் கண்களில் கண்ணீர் படர்ந்தது.
ஆனந்தர்இ அவன் கையைப் பிடித்து „சுகமாகப் போட்டு வா! எல்லாம் வெற்றியாக அமையும்' என்று விடை கொடுத்தார்.
சீலனின் புதிய பயணம் ஆரம்பமாகியது.
தொடரும் பகுதி 41

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 
பகுதி  41
எழுதியவர்  காவி.வி.சாகலிங்கம்  யேர்மனி
தொடர்கிறது
 
சீலனின் புதிய பயணம் ஆரம்பமாகியது.
„என்னிடம் பாஸ்போட் வீசா ஒன்றும் இல்லை. போடர் பொலிஸ் கேட்டால் என்ன செய்யிறது?'
தன் மனதுக்குள் இடித்துக் குத்திக் கொண்டிருந்த பயத்தை வெளியிட்டான்.
„பயப்படாதையும். அப்படி ஒரு பிரச்சனையும் வராது!
முப்பத்தைந்து வருடத்துக்கு முன் நான் இந்த போடரைக் கடந்த போதுஇ மறித்துஇ பாஸ்போட்டில் ஜேர்மன் நாட்டுக்கு வருவது நிராகரிக்கப்பட்டு. அதாவது றிஜெக்ற் என்று சீல் அடித்துஇ திரும்பிப் போ! என்று விரட்டிவிட்டார்கள்.                                    
என்றாலும் எப்படியோ அங்கையிங்கை நுழைந்து ஜேர்மனிக்குள் அடிபதித்துஇ இன்றைக்கு எப்படி இருக்கிறம் பார்!
எல்லாம் முயற்சி! பயத்தை வென்றுஇ சோம்பலை விரட்டிஇ அயராது முயன்றால் வாழ்க்கையில் நினைத்ததைச் சாதிக்கமுடியும்' என்று விவேக் அங்கிள் சீலனுக்கு துணிவூட்டினார்.
மகன் சுந்தரன் காரை ஓட்டஇ பக்கத்தில் மகள் சிந்துஜாஇ பின் சீற்றில் சீலன் நடுவில்இ இருபக்கமும் விவேக்இ வவா இருவரும் இருக்கக் கார் வேகமாக விரைந்தது.
கார்றேடியோ ஜேர்மன் பாடல்கள் இசைக்கஇ அண்ணனும் தங்கையும் ஜேர்மன் மொழியும் தமிழும் கலந்து ஏதோ கதைக்கஇ பின்னால் இருந்த மூவரும் இனி மேற்கொண்டு என்ன செய்யலாம் என்றது பற்றிய ஆலோசனைகளில் ஈடுபட்டிருந்தனர்.
என்ன இருந்தாலும் போடர் பயம் சீலனின் உணர்வுகளைக் குழப்பிக் கொண்டே இருந்தது. போலீஸ் என்றாலே ஊரில் அவன் வாங்கிய அடியும் உதையும் பூசாக் காம்பில் அனுபவித்த சித்திரவதைகளும் அவன் கண்முன்னே வந்து மிரட்டிக் குடல் நடுங்கச் செய்யும். இது போதாது என்று தலையிடியும் கிண்கிண் என்று மண்டைக்குள் குதிரை ஓட்டியது. இதனால் சீலன் ஒருசில வார்த்தைகளுக்கு மேல் பேசாது அமைதியுடன் இருந்தான்.
அவன் நிலையைப் புரிந்துகொண்ட விவேக்இ தானும் சோம்பலில் இருப்பது போன்று கண்ணை மூடுவதும் முழிப்பதுமாக இருந்தார். வவா இடையிடையேஇ „ காரின் வேகத்தைக் கொஞ்சம் குறை! மழை தூறிக்கொண்டிருக்குஇ றோட்டு வழுக்கினாலும் வழுக்கலாம். கவனம்!' என்று எச்சரிப்பதும்இ தூங்குவதுமாக இருந்தார்.
மாரிக்குளிர் இன்னமும் ஐரோப்பா மண்ணை விட்டுப் போவதாக இல்லை என்பதைக் காலநிலை வெளிக்காட்டிக் கொண்டே இருந்தது. மகனுக்கு நித்திரைத்தூக்கம் வந்துவிடக்கூடாது என்று தகப்பன் இடையிடையே கதைகொடுத்துக் கொண்டிருந்தார். மற்றவர்கள்இ சீலன்கூட கண்ணயர்ந்து தூங்கிவிட்டனர்.
கார்ப்பயணங்களில் நித்திரை தானாக வந்து தொத்திக்கொள்ளும். அலுப்புப் பஞ்சிபாராமல் வண்டி ஓட்டுவோரின் கவலையீனங்களினால் தினந்தினம் எண்ணற்ற வீதிவிபத்துக்கள்இ மரணங்கள் ஏற்படுவதை மனதிற் கொண்டு விவேக் காரில் பயணம் செல்லும்போது தூக்கத்துக்கு இடங்கொடுப்பதில்லை. இன்றும் அப்படியே மகனோடு ஏதேதோ மனதிற்பட்டதைக் கதைத்துக் கொண்டிருந்தார்.
டென்மார்க் ஜேர்மன் எல்லையில் போலீஸ் வாடையே இருக்கவில்லை. ஐரோப்பா என்று கூட்டு ஒப்பந்தங்கள் வந்த பின் போடர்கள் திறந்திருப்பது எவளவு நன்மையாகிவிட்டது என்று மனதில் நினைத்துக் கொண்டார் விவேக். மெதுவாகச் செல்லவேண்டிய இடங்களில் மெதுவாகச் சென்றுஇ மீண்டும் வழக்கமான வேகத்தில் காரைச் செலுத்தினான் சுந்தரன். பிரயாணம் தொடர்ந்தது.
ஜேர்மன் நாட்டுக்குள் வந்து ஓரளவு தூரம் ஓடியபின் விரைவு நெடுஞ்சாலையில் இருந்த எல்லா வசதிகளுடனும் கூடியஇ அதாவது இருக்கலாம்இ கழுவலாம்இ குளிக்கலாம்இ குடிக்கலாம்இ சாப்பிடலாம் என்று பலதும் உள்ள பெற்றோல் நிலையத்தில் கார் வந்து நின்றது.
'குட்டி! டீசல் அடிக்க வேணுமா?' என்று சோம்பல் முறித்துக்கொண்டே அம்மா மகனைச் செல்லம் பொழியக் கேட்டாஇ
'தேவையில்லை அம்மா. முன் கண்ணாடி ஊத்தையாக் கிடக்கு கழுவப்போறன். புறொஸ் சுற்ஸ்(தண்ணீரை உறையவிடமற் தடுக்கும் திரவம்) கலந்து தண்ணி விடவேணும் வாங்கிக்கொண்டு வாறன்இ பாத்றும்இ கன்ரீன் போறவை போட்டு வாங்கோ.!'
„நீ வரேல்லையோ? சூடாக் கோப்பியும் குடிச்சு ஏதாவது கடிப்பம்'
„நீங்க போங்கோ! நான் இந்த வேலைகளை முடிச்சுக்கொண்டு வாறன்' என்று கூறிஇ சுந்தரன் பெற்றோல்செற் கடைக்குச் சென்றான்.
பாத்றூம் அந்த நேரத்திலும் சுத்தம் குன்றாது பளபளவென்று நல் வாசனைகள் வீசிக்கொண்டிருந்தது. காசு போடத்தான் வேணும். சும்மா போய் இருக்கேலாது. என்றாலும் இப்படி ஒன்று இடையிடையே இல்லாட்டி எவளவு கஸ்ரம்? வெள்ளைக்காரன் எல்லாப் பக்கத்திலும் சிந்திக்கப் பழகியிருக்கிறான். நாங்கள் திருக்குறளைப் படிச்சிட்டு பக்குவமா மூடிவைத்திடுவோம். இவன் திருவள்ளுவரிடம் றெயினிங் எடுத்துவிட்டுஇ அதை வாழ்க்கையிலும் பயன்படுத்தத் தெரிந்து கொண்டான் போலக் கிடக்கு. வீட்டை வீடாகஇ றோட்டை றோட்டாகஇ காட்டைக் காடாக பேணிப் பாதுகாக்கும் விந்தை ஜேர்மன் நாட்டில் உள்ளங்கை நெல்லிக்கனி போல் பளிச்சென்று தெரியஇ இவற்றை எங்கள் நாட்டிலும் நடைமுறைப்படுத்தினால் வாழ்க்கை எவளவு இலகுவாயும் மகிழ்ச்சி ஊட்டுவதாயும் அமையும் என்று நினைத்துக் கொண்டான் சீலன்.    
பாத்றூம் அலுவல்கள் முடித்துஇ கோப்பிக்கடைக்குச் சென்றுஇ நாவறட்சியைப் போக்கிக் கொண்டுஇ வாய்க்கும் கொறிக்க அதை இதை வாங்கிச் சுவைத்துக் கொண்டிருக்கஇ சுந்தரம் கார் அலுவல்களை முடித்துக் கொண்டு உள்ளே வந்தான். அவனும் தனக்குப்பிடித்ததை வாங்கிக் கொண்டான்.
சீலனுக்கு எல்லாம் புதுமையாக இருந்தது. போடர் தாண்டும் போது தான் நித்திரையாக இருந்ததை அவனால் நம்பவே முடியவில்லை. இருந்த தலையிடியும் காணாமற் போய் விடஇ 'எப்படி என்னால் அமைதியாகத் தூங்க முடிந்தது?'  அவனுக்கே அது பெரும் அதிசயமாக இருந்தது.
அந்தச் சாப்பாட்டுக்கடைக்குள் இருந்தபடி அவன் கண்கள் விவேக் குடும்பத்தை சுற்றி வந்தன. 'இவர்கள் யார்? கடவுள் வடிவில் என்னை இந்த ஜேர்மன் நாட்டில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்!' என்று நெஞ்சமெல்லாம் நன்றி மழை பெருக்கெடுத்து ஓடஇ உணர்ச்சிகளை அடக்கமுடியாது ஆனந்தக்கண்ணீர் பொங்க நின்றான்.
மீண்டும் பயணம் தொடர்ந்தது.
„அலுப்பாக இருக்கு படுக்கப் போகிறேன்இ நீ ஓடுறியா?' என்று தங்கை சிந்துஜாவை சுந்தரன் கேட்கஇ அவள் சம்மதித்து காரை இயக்கினாள். விவேக் முன்னால் ஏறிக்கொண்டார். சுந்தரன் படுக்க வசதியாகப் பின் சீற்றிற்கு மாறி உட்கார்ந்தான்.
கார் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.
அப்பா முன்போலவே ஏதோ கதைத்துக் கொண்டிருக்கவேணும் என்பதற்காக 'ஆனந்தம்' என்ற திரைப்படத்தில் அவர் இரசித்து அனுபவித்த சகோதர பாசத்தின் உருக்கமான காட்சிகளைப்பற்றி விபரித்துக் கொண்டிருந்தார். ஜேர்மனில் பிள்கைகள் இருவரும் பிறந்து வளர்ந்தாலும் தாய்மொழி தமிழை ஒழுங்காகப் படித்திருக்கிறார்கள் என்பது சீலனுக்குப் புரிந்தது. சுந்தரனும் சிந்துஜாவும் எந்தத் தடங்கலும் இல்லாது தமிழ் மொழியில் உரையாடுவது கண்டு அவன் நெஞ்சம் குளிர்ந்தது.  
அகண்ட நீண்ட அந்தப் பெருந்தெருவில் கார் நிதானமாக ஓடிக் கொண்டிருந்தது. எத்தனை விதமான கார்கள்இ லாறிகள் இந்த நேரத்தில் கூட எங்கெங்கோ விரைந்தோடிக்கொண்டிருந்தன. வீதிகள் அமைக்கப்பட்டமுறை ஒன்றை வைத்துக்கொண்டே ஜேர்மன் நாட்டைப்பற்றி தான் படித்ததுஇ கேள்விப்பட்டது எல்லாமே வியந்து பாராட்த்தக்க உண்மைகளாக அவன் மனதுக்குப்பட்டன.
வவா அன்ரிஇ சீலனுக்கு அவன் முன்னேற்றத்துக்குரிய வழிகளையும் ஜேர்மன் நாட்டு நடப்புகளையும் சொல்லிக்கொண்டிருந்தா.
தடங்கல் ஏதும் ஏற்படாததால் டென்மார்க்கிலிருந்து புறப்பட்டுச் சுமார் ஏழு மணி நேரங்களில் வீட்டு வாசலில் வந்து கார் நின்றது.
இரவு இரண்டுமணி.
அவர்கள் வீட்டை நோக்கி வரஇ தானியங்கி விளக்குகள் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சின. அழகிய புதிய வீடு. படிகளில் ஏறிக் கதவைத்திறக்கஇ உள் விறாந்தையின் கூரை விளக்குகள் நட்சத்திரங்கள் போல் ஒளி உமிழ்ந்தன.  
இலங்கைத் தமிழர்களான இவர்கள்இ ஜேர்மனில் இப்படி ஒரு அழகு மாளிகையில் வாழ்வதுஇ சீலனுக்கு அந்தப் பொழுதில் எண்ணிப்பார்க்க முடியாத அதிசயமாக இருந்தது.
அது ஒன்றும் அதிசயமில்லைஇ மிகக் கஸ்ரப்பட்டு உழைத்த பணத்திலும் மிகுதி வங்கியில் கடனெடுத்தும் கட்டப்பட்டிருக்கிறது என்பதைப் போகப்போக சீலனும் புரிந்து கொள்வான். வீடு என்றால் எல்லாருக்கும் ஆசையாகத்தான் இருக்கும். ஜேர்மனில் பல கிராமங்களில் பழைய பெரிய வீடுகள் மலிவாக வாங்கக்கூடியதாகவும் இருக்கின்றது. அவரவர் வசதியைப் பொறுத்து புதுவீடோ பழைய வீடோ வாங்கி வசதியாக இருப்பதற்கு வங்கிகள் கடன்கொடுத்து உதவவும் முன்வருகின்றன. பிறகென்ன! ஆனால் ஒழுங்கான வேலை ஒன்று இருக்க வேண்டும். இதெல்லம் சீலனுக்கு நாங்கள் சொல்லத் தேவையில்லை. சில நாட்கள் கழிய எல்லாவற்றையும் அவனே அறிந்து கொள்வான். ஆனாலும் அவனுக்கு இப்ப வேண்டியது வீடல்லஇ முதலில் இந்தநாட்டு விசாஇ தங்க ஒரு இடம்இ கடன்அடைக்க ஒரு வேலை. வேறொரு எண்ணமும் இப்போ சீலனின் மனதில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
வீட்டுக்கு வந்து முக்கிய வேலைகளை மட்டும் முடித்துவிட்டு பிரயாண அசதி தலைதூக்கஇ எல்லாரும் படுக்கைக்குச் செல்லத் தயாரானார்கள்.
விவேக்கும் வவாவும் சீலன் தங்குவதற்கு விருந்தினர் அறையைத் தயாராக்கி வசதிகள் செய்து கொடுத்தனர்.
„வெட்கப்படாமல் என்ன வேணும் என்றாலும் கேளும். நாளைக்கு விசாவுக்குரிய அலுவல்களைப் பார்ப்பம். ஓண்டுக்கும் யோசிக்காதையும் நல்லாப் படுத்துத் தூங்கும்.' என்று மனம் நிறைந்த வார்த்தைகளால் அவனை அன்போடு உபசரித்துவிட்டுஇ அவர்கள் தங்கள் அறைக்குச் சென்றார்கள்.
சிறிது நேரத்தில் வீட்டில் அமைதி குடிகொண்டது. சீலனுக்கு பஞ்சிஅலுப்பு இருந்த போதும் நித்திரை வராமல் வெகுநேரம் உழன்றுகொண்டிருந்தான். அவன் நெஞ்சில் நினைவு ஈட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து குத்திச்சென்றன.
சுவிஸில் செய்வதறியாது நின்ற தனக்குஇ ஆறுதல் வார்த்தைகள் கூறி வஞ்சகமின்றப் பழகியஇ மக்டோனல்ஸ் பானுவையும் தன்னையும் இணைத்து தவறான தொடர்பு இருக்கென்று பத்மகலா ரெலிபோனில் கூறிய விசம்கலந்த வார்த்தைகள் முதலில் அவன் மனதைத் தாக்கிக் குத்திச் சென்றன.
தொடர்ந்து அவனுக்குத் தாயின் நினைவு வந்தது. 'அம்மா என்னை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கின்றா. கொழும்பில் தங்கி நிற்கும் அவர்களுக்கு வீட்டு வாடகைக்கும் செலவுக்கும் பணம் அனுப்புவதாச் சொன்னனான்இ இரண்டு மாதங்களாகிவிட்டனஇ இன்னும் ஒருகாசும் அனுப்பவில்iஇ என்ன கஸ்ரப்படுகிறாவோ தெரியவில்லை' என்ற எண்ணம் வந்து அவனைப் பெரும் சங்கடத்துக்குள்ளாக்கியது.
தொடர்ந்து தங்கையின் முறிந்தகால் இப்ப எப்படி இருக்கோ? என்ற யோசனை எழுந்தது. அவனைச் சமாதானப்படுத்த சிரித்துச் சிரித்து அவள் ரெலிபோனில் சுகமாக இருக்கிறன் என்றவள்... உண்மையாக எப்படி இருக்கோ? பாவம் தங்கச்சி!' என்ற எண்ணமும் வந்து நெஞசில் பாசத்தின் வலியை ஏற்படுத்தியது.
அடுத்து வந்த நினைவுஇ அவன் நித்திரையையே சின்னாபின்னமாகச் சிதற வைத்து விட்டது. சுவீஸ் பேத்டேப்பாட்டியில் நடந்த கத்திக்குத்து...... 'அவன் செத்திருப்பானா?..... செத்தால் குத்திய சிவம் பிடிபட்டிருப்பானா? ....இல்லாட்டி என்னையும் அதற்குள் சேர்த்து கொலை வழக்கில் தேடுவார்களா?' என்று அடுத்தடுத்து இடி மாதிரி நெஞ்சுக்குள் எழுந்த கேள்விகள் அவனைப் படுக்கவிடாமல் எழுந்திருந்து மண்டையைச் சொறிய வைத்தன. இனி எப்படியெல்லாம் பிரச்சனைகள் வளரப்போகின்றனவோ என்ற குழப்பத்துடன் கட்டிலில் சாய்ந்தபடி கண்ணை மூடிஇ கடவுளே இது என்ன சோதனை? என்று மனம் தவிக்கஇ யோசித்துக் கொண்டிருந்தவன்இ தன்னைச்சுத்திச் சூனியமாக விரிந்து கிடக்கும் இருளைப் போக்க சிறு கைவிளக்குக் கிடைக்காதா? என்று ஏங்கினான்.
எப்போ துங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை. அவன் யோசனைகளை இடித்து வீழ்த்திவிட்டுஇ அவனைத் தன் சிறைக்குள் மூடிக்கொண்டது தூக்கம்...............

தொடரும் பகுதி 42   எழுதுபவர்  காசி வி.நாகலிங்கம்   யேர்மனி

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

---------------------------
பகுதி  42

 

எழுதியவர்  காவி.வி.நாகலிங்கம்  யேர்மனி
மறுநாள் விடிந்தது. ஆனால் வெளியே சூரியனின் ஆதிக்கம் இருக்கவில்லை. நீலவானம் பளிச்சென்று இருக்க, வெண்முகில்கள் ஆங்காங்கே நீந்திக் கொண்டிருந்தன. பகலவன் வரப்போகின்றான் என்ற மழையற்ற காலநிலை தெரிந்தது.
காலநிலை என்பது ஒரு முக்கிய அம்சம் வகிக்கின்றது. செய்தி அறிக்கையுடன் காலநிலை பற்றியும் அறிவிக்கப்படும். இதனைப் பலரும் உன்னிப்பாகக் கவனித்துக் கொள்வார்கள். பனிகாலங்களில் சறுக்கும் அபாயங்கள். வீதி விபத்துக்களும் அதிகமாக இருக்கும். கார்க்கடைகளுக்கும் கறாஜ் வைத்து கார் திருத்துபவர்களுக்கும் வருமானம் பெருகும். நடக்கும்போதுகூட பாதையில் உறைந்திருக்கும் பனி, விழப்போகிறோம் என்று நாம் உணர முன்பே எம்மை, வழுக்கி வீழ்த்திவிடும். இதனால் எலும்பு முறிவுதறிவு டாக்டர்களிடம் கூட்டம்கூடும். இன்னமும் பனிகாலம் என்பதால், திடீர் வசதிவந்த மனிதர்கள் சிலர், திடீர்திடீர் என்று மனதை மாற்றிக்கொள்வது போல, ஐரோப்பாக்காலநிலை தலைகிழாக மாறலாம். சரி இது கிடக்கட்டும். நாங்கள் விவேக் வீட்டில் சீலன் படுத்தானா, விடிய எழுந்தானா? அங்கு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
இன்று விவேக்கும் வவாவும் சீலனுக்குரிய முக்கிய வேலைகளைக் கவனிப்பதற்காக நேரத்தை ஒதுக்கியிருந்தார்கள்.
காலைச்சாப்படு அந்த மாதிரி, புறோச்சின் என்ற ஜேர்மன் பேக்கரிகளில் காலைநேரத்தில் குவிந்து கிடக்கும் பணிஸ் உடன் பொரித்த முட்டையும் சாப்பிட்டு பால்ரீயும் குடித்த போது சீலனுக்கிருந்த மனக்கவலைகள் தற்காலிமாக மறைந்து போக, வயிறு மகிழ்ச்சியில் ஊஞ்சலாடியது. தலை மட்டும் கொஞ்சம் இடித்துக் கொண்டிருந்தது. இதனை வவா அன்ரியிடம் சொன்னான். நித்திரை குறைவு என்றாதாலை தலைஇடிக்குது போலை என்று வீட்டில் இருந்த தலையிடிக்குளிசை ஒன்றையும் விழுங்கத் தண்ணீரும் கொடுத்தா வவா.
டேவிட்க்கு விவேக் ரெலிபோன் எடுத்து, சீலனை ஜேர்மனிக்குக் கூட்டி வந்த விடயத்தை விபரித்துக் கொண்டே ரீயையும் குடித்தார். இவர்களுக்குள் எப்படி அறிமுகம் என்று நீங்கள் அறிந்திருப்பீர்களோ தெரியாது, பள்ளிக்கூடங்களில் ஒன்றாகப் படித்திருக்கலாம், ஓட்டப் போட்டிகளில் முதலாம் இடத்துக்கு வாறதுக்குப் போட்டி போட்டவர்களாக இருக்கலாம் அல்லது ஒரு இடத்திலை வேலை பார்த்திருக்கலாம். எப்பிடியோ சந்தித்து நல்ல நம்பிக்கையான நண்பர்களாக நீண்டகாலமாகத் தொடர்புகளை வைத்துக் கொண்டிருக்கிறர்கள் என்பது உண்மை.
நண்பர்கள் என்னும் போது அதுவும் வெளிநாடுகளில் சந்தர்ப்ப வசமாகப் பழகிய நட்புக்களில் எந்த அளவுக்கு அன்பு பாசம் இணைந்து இருக்கிறது என்பது சரியாகச் சொல்ல முடியாது. இருக்கிற மாதிரியும் இருக்கும் இல்லாத மாதிரியும் இருக்கும்.
ஒருவனுக்கு வாழ்க்கையில் நம்பிக்கைக்குரிய ஒரு நண்பனாவது (உயிர் கொடுக்க வேண்டாம்) கண்ணீர் துடைக்க இருந்தால் போதும், வாழ்க்கை வாழ்ந்ததாக இருக்கும்.
விவேக் ரெலிபோன் கதைத்து முடித்து அதைச் சீலனிடம் கொடுத்தார். அவன் மகிழ்ச்சியும் நன்றியும் பொங்க டேவிட்டுடன் கதைத்தான்.
„சீலன் நீ வந்திருப்பது இலங்கைத் தமிழர்களுக்கு அடைக்கலங்கொடுத்து, தாங்கி வைத்திருக்கும் சொர்க்கபூமி. சட்டமும் ஒழுங்கும் கட்டப்பாடும் நிறைந்த தேசம். எங்கள் பிள்ளைகள் படித்து முன்னேற, பாரபட்சமின்றிக் கைகொடுத்து உதவுகிறது. பரந்த மனம் படைத்த, வசதிகள் வாய்ப்புக்கள் கொண்ட நாடு. இனி உன் ஆட்டத்தை நீ ஆடு! கொடி கட்டிப் பறப்பாய் தர்மசீலா! உனக்கு மற்றவர்கள் விட்ட சவால்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று பறந்தோடும்!…….. சரியா? … விவேக் உனக்கு வேண்டிய உதவி எல்லாம் செய்து தருவார் ஒன்றுக்கும் யோசிக்காதே! பிறகு கதைப்போம்.“
ரெலிபோன் உரையாடலின் பின் சீலனின் உள்ளம் உற்சாகத்தால் நிறைந்தது.
முதலில் சீலனுக்கு வீட்டுப்பதிவு செய்ய வேண்டும்.
ஜேர்மன் நாட்டுக்கு யார் வந்தாலும் அவர் எங்கு தங்கி இருக்கின்றார் என்ற பதிவு (அன்மெல்டுங்) செய்ய வேண்டும்.
வவாவும் விவேக்கும் தங்களுக்கு நீண்டகாலப் பழக்கமான ஜேர்மனியர்கள் வீட்டின் மேல் மாடியில் சீலன் வாடைக்கு இருக்க ஒழுங்கு செய்து, அதற்கான பதிவுப்பத்திரஙகள் அரசஅலுவலகத்தில் எடுத்து வீட்டுப் பதிவு செய்தாகிவிட்டது.
அடுத்து மிக முக்கிய விடயம், அகதி விண்ணப்பம் வெளிநாட்டலுவலகத்தில் கொடுக்கவேண்டும். பெரிய புதிய கட்டிடத்தில் அந்த அலுவலகம் இருந்தது. அந்தக்காலத்தில் 1979 களில் அந்த அலுவலகத்தை நினைத்தாலே நடுநடுங்கும். தகுந்த வீசா இல்லாமல் இருந்தவர்களை, படுத்திருந்த உடுப்போடு அள்ளிக் கொண்டு சென்று… பிறகு தகுந்த உடுப்பு அணிவித்து… விமானத்தில் ஏற்றி அவரவர் சொந்தநாட்டுக்குத் திருப்பி அனுப்பிவிடும் அதிகாரம் அவர்களுக்கு இருந்தது. இப்படி நிகழ்ந்த சம்பவங்களைக் கண்கூடாகக் கண்டவர்களுக்குப் பயம் வரத்தானே செய்யும்!
இப்போ காலம் மாறி நம்மவர்களில் அதிகமானோர் பிரஜா உரிமை எடுத்துவிட்டார்கள். வெளிநாட்டலுவலகம் ஊரிலிருந்து உறவினர்களை ஸ்பொன்சரில் அழைப்பது போன்ற அலுவல்களுக்கு மட்டுமே என்ற அளவில் இருந்தது.
டொல்மேச்சர் நடா, விவேக்கின் நெருங்கிய நண்பர். அவரிடம் சீலனின் நிலைமையைக் கூறி, ஆலோசித்தபோது தான் வெளிநாட்டலுவலகத்துக்குச் சீலனை கூட்டிச் சென்று அகதி விண்ணப்பம் செய்ய முன்வந்தார்.  சீலனிடம் கைவசம் இருக்கும் ஆதாரங்களைக் கொண்டு வரும்படியும் சொன்னார். அவர் இத்தகைய விடயங்களை ஆரம்பத்திலே இருந்து செய்து வருவதால், நல்ல அனுபவசாலியாகவும் அத்துடன் உதவிசெய்யும் தாராள மனப்பான்மை கொண்டவராகவும் இருந்தார். அன்றே விவேக் வீட்டுக்கு வந்து சீலனைச் சந்தித்துப் பேசினார். டாக்டராக வரமுடியும் என்ற நம்பிக்கையுடன் பல்கலைக்கழகம் சென்றவன், விதியின் சதியால், நட்டாற்றில் கப்பல் கவிண்டு, ஆதரவற்று தவிப்பவன் போல்,  மருத்துவப்படிப்புக் குழம்பி, காதல்வாழ்க்கையும் கேள்விக்குறியாய் நிற்கும் சீலனின் கதையைக் கேட்க, டொல்மெச்சர் நடாவுக்கும் கண்கள் கலங்கியன. இப்படி எத்தனை இலட்சம் இளைஞர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கித் துன்பச்சேற்றுக்குள் புதைத்துச் சென்றிருக்கின்றது போர் என்னும் பயங்கரச்சூறாவளி என்று வேதனைப்படுவதைத் தவிர, நாம் வேறு என்ன செய்யமுடியும்? அன்பையும் சமாதானத்தையும் சிறுவயதில் இருந்தே பிள்ளைகளுக்குப் போதிப்பதன் மூலம் போர்கள் உருவாவதை ஓரளவு குறைக்க முடியுமே தவிர, போர்களைத் தடுக்க முழுதான வழிகள் கிடைக்குமா?
வெளிநாட்டுஅலுவலகத்தில் சீலன் நடாவுடன் சென்று, அகதிக்குரிய விண்ணப்பம் செய்துவிட்டான். அவன் எதிர்பார்த்துப் பயந்தது போல் ஏதும் நடக்கவில்லை. தமிழ்மக்களுக்கு இலங்கையில் பிரச்சனை என்றது, பல்வேறு வடிவங்களில் அந்த அலுவலகத்தில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பதியப்பட்டிருக்கு. பிறகென்ன…. சீலனுக்குத் தற்காலிக வீசாக் கொடுத்து, ஜேர்மன் என்ற பெரிய தேசம் அவன் இம்மண்ணில் வாழ இடந்தந்தது.
இந்த மகிழ்ச்சியான செய்தியை கொழும்பில் தங்கியிருந்த அம்மாவுக்கும் தங்கை ரேணுகாவுக்கும் தெரிவித்துவிட்டான். டேவிட், டென்மார்க் ஆனந்தர், சுவீஸ் தவம், பானு ஆகியோருக்கும் சொல்லிவிட்டான். சீலனுக்கு விசா கிடைத்தது எல்லோருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஆனால் தவம் சொன்ன, பத்மகலா பற்றிய அந்தத் தகவல், அவனைக் கொஞ்சம் நோகடிக்கத்தான் செய்தது. என்ன செய்வது காதல் என்றால் இன்பம் பொங்கும் அழகான தாமரைக்குளம் என்று இளைஞர்கள் நினைக்கலாம். அதற்குள் இறங்கியவர்களுக்குத்தான் தெரியும் அது பலருக்கு, உயிர் கொல்லும் ஆழங்காண முடியாத ஆழியாகவும் மாறிவிடலாம் என்று. இனிமேல் இந்தச் சிந்தனை வேண்டாம் என்று ஏற்கனவே சீலன் பத்மகலாவின் காதலை இதயத்தின் ஒரு மூலைக்குள் தள்ளி மூடி வைத்துவிட்டான். இனி இதற்குக் காலமே பதில் சொல்லும் என்று தன் கடமைகளைச் செய்வதில் கவனத்தைத் திருப்பினான்.   
சீலனின் மனம் ஓரளவு பயம் குறைந்து மீண்டும் தன் சுயநிலைக்குத் திரும்பியிருந்தது. மனத்துணிவும் அறிவும் சீலனிடம் இருந்தபோதும் அன்னிய நாட்டில் மொழிதெரியாமல் வீசா, தங்க வீடு ஏதும் இல்லாததால் அவன் மனம் பெரும் தவிப்பில் துடித்துக்கொண்டிருந்து. விசா கிடைத்ததும் அவன் வேலை தேடத்தொடங்கினான்.
பனிகாலம் விடைபெற்றுச் செல்ல கோடைகாலத்தின் ஆரம்பம் பூ மொட்டுக்களாக தலைகாட்டின.
வவா அன்ரி, தான் வேலை செய்யும் மனநோயளார் பராமரிப்பு இல்லத்தில் தோட்ட வேலைக்கு ஆள்தேவை என்று எழுதிப்போட்டிருக்கினம், என்று கூறி, சீலனை அந்த வேலைக்கு எழுதிப்போட வைத்தா. அணைவு இல்லாமல் வேலை எடுப்பது கடினம் என்பதை அவர்கள் அனுபவத்தில் கண்டிருக்கின்றார்கள். இதனால் இது பற்றி சீலனை அவன் தங்கியிருந்த வீட்டுக்காரருடன் கதைக்கும்படி விவேக்கும் வவாவும் அவனுக்கு ஆலோசனை கூறினர்.
சீலன் இதுபற்றி அவன் வாடைக்கிருந்த வீட்டுக்காரருக்கு எடுத்துரைத்தான். அவன் மீது இரக்கம் கொண்டிருந்த அவர்கள், அந்த இல்லத்தின் நிர்வாகத்துக்கு ரெலிபோன் எடுத்து, சீலனுக்கு அந்த வேலையைக் கொடுத்துதவும்படி கேட்டனர். அவர்களும்; அதற்குச் சம்மதித்தனர்.
தோட்ட வேலை என்பதால் பாசைக்குப் பெரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதனால் சீலனுக்கு அந்த வேலை எளிதில் கிடைத்துவிட்டது. அவனைப் போன்று இன்னும் பலர் அந்த வேலையை தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் செய்து கொண்டிருந்தனர். சீலன் வேறொரு அனுபவம் மிக்க வயதான ஒருவருடன் சேர்ந்து வேலைசெய்ய நியமிக்கப்பட்டிருந்தான்.
எட்டுமணித்தியாலங்கள் தோட்ட வேலை செய்வது என்றால் சாமனியமானதா? பழக்கமில்லாத வேலை என்பதால் ஆரம்பத்தில்  கை, கால், முதுகு எல்லாம் பெரும் உளைவைக் கொடுத்தது. உள்ளங்கை கண்டி, புண்ணாகி வேதனையாக இருந்தது. கடினமான வேலை சம்பளம் அதிகம் இல்லை என்றாலும் இப்போதைக்கு இந்த வேலை கிடைத்தது பெரும் நிம்மதியைக் கொடுத்தது. காலை நேர வேலை. என்றதால் பின்னேரம் அவனுக்கு நிறைய நேரம் இருந்தது. இனி மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று சீலன் யோசிக்கத் தொடங்கினான்.
‘அம்மாவும் தங்கச்சியும் மீண்டும் ஊருக்குப் போய் சொந்த வீட்டில் இருக்கலாம் அல்லவா? கொழும்பில் தகுந்த துணையும் இல்லாமல் உதவிகளுக்கு அடுத்தவர்களிடம் எதிர்பார்த்துக் கடமைப்படுவதை விட, திரும்பிப் போனால் சொந்த வீட்டில் நிம்மதியாய் இருக்கலாம். அயலவர்கள், சொந்தக்காரர்கள், ஊரவர்கள் கோயில் குளம் என்று அம்மாவுக்கும் மனதுக்கு நிம்மதியாக இருக்கும். தங்ச்சியும் முதற் படித்த பள்ளிக்கூடத்தில் படிப்பைத் தொடரலாம், யாழ்ப்பாணத்தில் இல்லாத படிப்பா!‘ என்று நினைத்தவன், இதுபற்றிக் கதைக்க கொழும்புக்கு ரெலிபோன் எடுத்தான்.
தங்கச்சி ரெலிபோனை எடுத்து, „கலோ அண்ணை!“ என்றாள். ஆந்தக்  குரலின் உயிர்த்துடிப்பு சீலனின் நெஞ்சில் பாசமழையை அள்ளி இறைத்தது.
இந்தப் பாசம்…. வெளிநாட்டில், பணவசதி வந்ததனால்….. திருமணம் செய்து கொண்டதனால்…..உறவுகள் வெடித்து, இடைவெளி கண்டு, விம்மிக்கொண்டு இருக்கிறவர்களையும் நிறையவே காணக்கூடியதாக இருக்கின்றது.
சீலன், தங்கையிடம் சுகம் விசாரித்தபின், தன் மனக்கருத்தை வெளிப்படுத்த நினைத்தான். கொழும்பில் எல்லா வசதிகளுடனும் இருக்கும் அம்மாவையும் தங்கையையும் திரும்பி ஊருக்குப்போங்கோ என்று சொல்ல அவன் மனம் சங்கடப்பட்டது. அதற்குள் தங்கை ரேணுகா முந்திக்கொண்டாள்.
„அம்மா உன்னோடை கதைக்கவேணும் என்று சொன்னவ, ஊருக்குப் போனால் நல்லது என்று நினைக்கிறம் அண்ணை! இங்கை வசதிகள் இருந்தாலும் எங்களுக்கு சொந்தஊர் மாதிரி வருமா அண்ணை.“
„உன்ரை படிப்பு?“
„என்னண்ணை கேக்கிறாய்? நீ அங்கை படிச்சு மெடிசீன் என்ரர் பண்ணேல்லையே? அங்கையில்லாத படிப்பே அண்ணை. நான் அங்கை போய்ப் படிப்பன் நீ ஒண்டுக்கும் யோசிக்காதையண்ணை…. அதோடை அம்மா என்னைப் படிக்க விடாமல் கலியாணம் செய்துவைக்கத்தான் யோசிக்கிறா. எனக்குப் படிக்கத்தான் விருப்பம். இப்ப எனக்கு கல்யாணத்துக்கு ஒரு அவசரமும் இல்லையண்ணை….. அம்மாவுக்கு நீ சொல்லு.“ என்றாள் சீலனின் தங்கை ரேணுகா.
„உனக்குப் படிக்க விருப்பமில்லை என்றெல்லோடி நான் நினைச்சன்.“
„இல்லையண்ணை, அம்மாதான் படிக்கிறதெண்டால் காசுச் செலவாகும்…… நீயும் வெளிநாடுபோய்க் கஸ்ரப்படுகின்றாய்….. அதோடை மேலை மேலை படிச்சால், பிறகு படித்த மாப்பிள்ளை தேடவேண்டும். நிறையப் பணமும் தேவைப்படும். எங்களிட்டை எங்கையண்ணை கிடக்கு.“
„எடி தங்கச்சி! அண்ணை இருக்கிறனடி! நீ தாரளமாய்ப் படி! நான் ஜேர்மனில் இருக்க விசாவும் கிடைத்துவிட்டது. அதோடை எனக்கு வேலையும் கிடைத்து விட்டது.“
„காசெல்லாம் பெரிய விடயம் இல்லையண்ணை! நீ தங்க இடமில்லாமல் தகுந்த சாப்பாடில்லாமல் கஸ்ரப்படுறதுதான் எங்களுக்குக் கவலையாக இருக்கு!“
„நீ கவலைப்படதை! ஜேர்மனிக்கு வந்த பிறகு கடவுளருளாலை எல்லாம் கிடைச்சிருக்கு. எனக்கு இங்கை எந்தக் கஸ்ரமும் இல்லை.“ என்று தங்கைக்கு தன் முன்னேற்ற நிலையை எடுத்துரைத்தான். அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த ரேணுகா, „இதை அம்மா கேட்டால் மிகவும் சந்தோசப்படுவா, குடுக்கிறன் கதையண்ணை!“ என்று தாயிடம் ரெலிபோனைக் கொடுத்தாள்.
„அப்பு என்ரை குஞ்சு எப்படியடி இருக்கின்றாய்?“ என்ற சீலனின் தாய், மகனின் குரல் கேட்ட சந்தோசமும், கண்காணாத தேசத்தில் அவன் பிரிந்திருக்க வேண்டிவந்துவிட்டதே என்ற சோகமும் ஒருங்கே அவள் நெஞ்சைத்தொட தொண்டை அடைத்துக்கொண்டது.
„அம்மா! ஏன் அழுகிறீங்க? நான் நல்லா இருக்கிறன். அழாமல் கதையுங்கோ! வேலையும் கிடைச்சிட்டுது. எனக்கு இங்கை எந்தக் கஸ்ரமும் இல்லை.“ என்று சீலன் பலமுறை உறுதியாகக் கூறிய பின்தான் தாயின் மனது சற்று சமாதானமடைந்து பேசும் நிலைக்கு மீண்டது.
„என்ரை பிள்ளை நீ நல்லா இருக்க வேணும் என்று நான் கும்பிடாத கடவுள் இல்லை. ஏதோ கூடாத காலம் எங்களைப்போட்டு உலைக்குது.“
„அது கிடக்கட்டும் அம்மா, யாழ்ப்பாணம் திரும்பிப்போக யோசிக்கிறீங்கள் என்று தங்கச்சி சொன்னாள் உண்மையோ?“
„ஓமடா குஞ்சு, அங்கை எல்லாம் நல்லத்தானே இருக்கு. சொந்த பந்தங்களோடை இருந்தா மனதுக்கு நிம்மதியாய் இருக்கும். அங்கை போய் உன்ரை தங்கச்சிக்கும் ஒரு கல்யாண ஒழுங்கையும் செய்ய வசதியாக இருக்கும்.“
„இல்லை அம்மா அவளைப் படிக்க விடுங்கோ! அவள் படிக்கட்டும்.“
„அவள் படிச்சு என்னத்தை சாதிக்கப் போறாள்? நேரகாலத்துக்கு கலியாணங் கட்டிக்கொடுத்தால் குடும்பம் பிள்ளைகுட்டி என்று சந்தோசமாக இருப்பாள் எண்டு நினைச்சன்.“
„அம்மா! படிப்பிலை ஆண்பிள்ளை பெண்பிள்ளை வேறுபாடு பார்க்கக் கூடாது. இந்தப் பெரிய ஜேர்மன் தேசத்தை அங்கேலா மார்க்கல் என்ற அம்மா தான் ஆள்கிறா. எவளவு திறமையாக இந்த வல்லரசு நாட்டை ஆளுகிறா. எத்தனை நாட்டு அரசியல் தலைவர்களுடன் சரிசமமாக இருந்து வாதிட்டு நாட்டுக்கும் உலகத்துக்கும் நன்மை ஏற்படுத்துவதுக்காகப் பாடுபடுகின்றா! அதுதான் தங்கச்சி விருப்பப்படி விடுங்கோ! படிக்கட்டும்.“
„அவள் பிள்ளை படிக்கிறதெண்டால் படிக்கட்டும் நான் தடுக்கேல்லை. ஊருக்குப் போனாலும் முன்பு படித்த பள்ளிலேயே படிக்கலாம் தானே!“
„ஓம் அம்மா, படிக்கலாம். என் படிப்பு இனி எப்படி என்று சொல்ல முடியாது. அதுவும் நான் டாக்டருக்கு படிக்கப்போறது இல்லை.“
„ஏன் குஞ்சு இப்பிடிச் சொல்லுறாய்! உன்னுடைய கனவு அது தானே?“
„இல்லை அம்மா. இப்போ இல்லை. டாக்டர் படிப்பு நல்லது தான் என்றாலும் அதுக்கும் ஈடான வேறு படிப்புகளும் இந்த நாட்டிலை இருக்கு என்று அறிகிறேன். காலம் வரும்போது நான் பார்த்துக் கொள்ளுகின்றேன். இப்ப தங்கச்சி படிக்கட்டும்! அவளை டாக்டராக்கி நான் காட்டுறன்.“;
„சரி! நீ சொல்லுறபடி செய்யிறன். நீ எங்களை நினைத்துக் கவலைப்படாதை! ரேணுகாவின் கால் காயமும் மாறிவிட்டது. அவள் முன் போல வடிவா நடக்கிறாள். நாங்கள் வாறகிழமை ஊருக்குப் போகலம் என்று இருக்கிறம்.“
„காசு எவளவு அனுப்பிறது? கடன் இன்னும் இருக்கோ?“
„நீ கடைசியா அனுப்பினதிலை கடன் எல்லாம் கொடுத்திட்டன். வசதிப்பட்டால் இருபதினாயிரம் அனுப்பு“
„உண்டியல்லை குடுத்து நாளைக்கே கிடைக்க ஒழுங்கு செய்யிறன்“ என்று சீலன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கைத்தொலைபேசி காசு முடியப்போகிறது என்று அறிவித்தது.
„அம்மா! போன் காசு முடியுது. நான் பிறகு கதைக்கிறன் என்று சொல்ல, தொடர்பும் தானாகவே நின்றது.
அம்மாவுடனும் தங்கையுடனும் கதைத்தது சீலனுக்குப் பெரும் பாரம் குறைந்தது போல இருந்தது. அவர்கள் ஊருக்குத் திரும்பிப்போவது, தங்கை படிக்கும் ஆவலுடன் இருப்பது என்ற செய்திகள் அவன் மனதுக்குச் சந்தோசத்தைக் கொடுத்தன.
மனநோயாளர் பராமரிப்பு இல்லத்தில் சீலன் வேலைசெய்த நேரங்களில் அவன் காணும் அந்தக் காட்சிகள் மனதை நெகிழ வைத்தன. கடவுளே! உன் படைப்பில் ஏன் இப்படி ஒரு அவலக்கோலம்? பாவம் இந்த மனிதர்கள்! என்று சீலன் கவலைப்பெருமுச்சு விட்டான். நரம்புக் கோளாறு காரணமாக அவர்கள் சுயபுத்தி இழந்து, தாங்கள் என்ன செய்கின்றோம் என்று தெரியாது, சின்னஞ்சிறுகுழந்தைகள் போல் சுத்துவதும் கத்துவதும் கூவுவதும் குளறுவதும் அடிப்பதும் உடைப்பதும் என்று செயற்பட்ட விதங்களைக் கண்டபோது, மனித வாழ்க்கையே ஓர் அற்பமாகத் தோன்றியது. இந்தப் பைத்தியக்கார நிலை, என் போன்ற சாதாரணமானவர்க்கு வர எவளவு நேரமாகும்? இதற்குள் காதல், கத்தரிக்காய், நீ பெரிது, நான் பெரிது என்று யாரிபிடித்து யுத்தம் புரியும் மமதை!  ஆணவம், அதிகாரம் என்று துள்ளிக் குதிக்கும் மனிதர்களைச் சிறைபிடித்துவந்து சில காலம் இவர்களுடன் அடைத்து வைத்தாற் போதும் அவர்கள் மனிதர்கள் ஆகிவிடுவார்கள் என்று நினைத்தான்.
புத்தருக்கு ஞானம் பிறந்தது போல் சீலனுக்கும் அவனையறியாமல் பீடித்திருந்த அறியாமை விலகியது. இனி தான் என்ன செய்ய வேண்டும் என்ற முடிக்கு அவன் வந்தான்.
‘உழைக்க வேணும்  படிக்க வேணும் உதவ வேணும். மனிதருக்கு உதவக்கூடிய ஒரு படிப்பு நான் படிக்க வேணும். இன்று இல்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் நான் படிப்பேன். படித்து உதவிபுரிந்து கொண்டே வாழ்வேன்! வாழ்ந்து கொண்டே சாவேன்! செத்த பிறகும் வாழ்வேன்!‘ என்று சீலன் தன் மனதுக்குள் ஓர் உறுதி எடுத்துக் கொண்டான்.
சீலன் அகதிவிண்ணப்பும் செய்து சில மாதங்களின்பின், அவனை நேரடி விசாரணைக்கு அழைத்திருந்தார்கள். அதற்குப் போய்வந்தபின், என்ன பதில் வருமோ என்று அவன் பயந்துகொண்டிருந்தான்.
சீலனின் நல்லகாலமோ, வணங்கிய கடவுளின் பேரருளோ அவனது அகதிவிண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நிரந்தர விசா கிடைத்துவிட்டது.  
சீலன் வேலையை மனம் வைத்துச் செய்தான். மண் வெட்டுவது, மரம் நடுவது, நீர் ஊற்றுவது, நிலம் கூட்டுவது என்று கடினமான வேலைகள் செய்யும் போது வியர்வையுடன் கண்ணீரும் சொட்டும். படிக்கும் போது அவன் எண்ணியும் பார்த்திராத வேலையை அவன் நாரி முறியச் செய்து கொண்டிருந்தான். அவனுடன் வேலை செய்த ஜோசேப் என்ற ஜேர்மன்காரரும் அவனும் எட்டு மணிநேரமும் என்ன மொழியில் கதைத்திருப்பார்கள்?..... ஊமைப் பாசையில் முதல் நாள் தொடங்கியது. நாட்கள் செல்ல ஜோசேப் அவன் நெருங்கிய நண்பர் ஆகிவிட்டார்.  வவா லட்டு செய்தால் இதில் நாலு சீலனுக்கு என்றால் இரண்டு ஜோசேப்புக்கு ஆகும். பயிற்றம் பணியாரம், உறைப்புக் குறைந்த றோல்ஸ் ……. போகப் போக புட்டும் கறியும் கூட சாப்பிடத் தொடங்கிவிட்டார் ஜோசேப் அண்ணை. அதோடை எங்கடை சீலன் தம்பி ஜேர்மன் கதைக்கத் தொடங்கிவிட்டார்.
மண்வெட்டிக்கு டொச்சில் என்ன என்று சொல்லிக் கொடுத்து, பிறகு மண்ணுக்கு, மரத்துக்கு என்று கண்ணில்பட்டவைக்கு  டொச்


 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விழுதல் என்பது எழுதலே - பகுதி 43
எழுதுபவர் மதுவதனன் மௌனசாமி – டென்மார்க்
 
இவரது அறிமுகம்
அடுத்த பகுதி 44 இல் பார்க்கலாம்.
 
கதை தொடர்கிறது.
 
சீலன் டொக்ரரிடம் போயிருந்தான். மொழிபெயர்ப்பாளர் இன்றியே டொக்ரருடன் ஆங்கிலத்தில் கதைத்தான். அவன் படித்த மருத்தவப் படிப்பு அவருடன் கதைப்பற்கு இலகுவான சந்தர்ப்பத்தை வழங்கியது. போனது தலையிடிக்குத்தான் என்றாலும் டொக்ரர் அவனிடம் நிறையக் கதைத்தார். அவனது பழைய வருத்தங்கள்இ குடும்பத்திலே இருக்கும் வருத்தங்கள் மற்றும் அவனது வாழ்க்கை முறை என்று நிறையவே கலந்தாலோசித்தார்.

ஐரோப்பிய வைத்தியர்கள் இலேசில் நாங்கள் எதிர்பார்க்கும் மருந்துகளை தந்துவிடமாட்டார்கள். நிறையக் கதைப்பார்கள். வருத்தம் தானாகவே மாறட்டும் என்ற நிலையைத்தான் கூடுதலாகத் தேர்ந்தெடுப்பார்கள். இவையெல்லாம் நிறையப்பேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறான் சீலன். மருத்துவப் படிப்பை தொடர்ந்த சீலனுக்கு மருத்துவ ரீதியாக இங்குள்ள வைத்தியர்களின் நடைமுறை சரியானதுதான் என்றும் தெரிந்திருந்தது. ஆனாலும் சிலசந்தர்ப்பங்களில் அம்முறை பிழைத்துப்போயும் இருக்கிறது என்று அறிந்திருக்கின்றான்.

"உந்த டொக்ரர்மார் வருத்தம் வந்து சாகப்போற கட்டத்திலதான் எல்லாத்தையும் கண்டுபிடிப்பாங்கள். உவங்களை நம்பக்கூடாது" என்று சிலர் சொல்லவும் கேட்டிருக்கின்றான்.

அதனால்தான் சீலனும் தனது ஞாபகத்தில் இருந்த தான் சம்மந்தப்பட்ட மருத்துவரீதியான பிரச்சினைகளை வைத்தியரிடம் சொன்னான். தலையிடி திடீரென்று வந்திருக்கிறதுஇ ஏதும் மூளையில் கட்டியாக இருக்குமோ என்றும் கவலைப்பட்டான்.

"இதுவரை காலமும் இப்படியானதொரு தலையிடி வந்ததில்லை என்று சொல்கிறீர்கள். குடும்பத்திலும் யாருக்கும் இல்லை. திடீரென்று வந்திருக்கிறது. நீங்கள் நிறைய யோசிக்கின்றீர்கள் போல இருக்கிறது. உங்கள் நாட்டில நிறையப் பிரச்சினை. அங்கிருந்து வந்த பல பேருக்கு இப்பிடி தலையிடி சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்குது. உங்களது முகத்தைப் பார்த்தே என்னால கண்டுபிடிக்கக்கூடியதாக இருக்கிறது நீங்கள் நிறையப் பிரச்சினைகளை தலையில் வைத்திருக்கிறீர்கள் என்று. இது தலையிடி வகைகளில் முதலாவது வகையான டென்சன்-ரைப் தலையிடியாகத்தான் இருக்கும்போலத் தெரிகிறது."

கொஞ்சம் ஆறுதலாக இருந்தது சீலனுக்கு. தான் இப்போது இருக்கும் நிலைக்கு உலகத்துத் தலையிடிகள் எல்லாம் வந்துதானே போகும் என்று அவனுக்குத் தெரியும். என்றாலும் ப்ரைன்-ரியூமர் வகைத் தலையிடி பற்றி தேவையில்லாமல் யோசித்து கவலைப்பட்டுக்கொண்டிருந்தான்.

"ஆனால் டொக்ரர்இ இந்தத் தலையிடி என்னால தாங்கேலாமல் இருக்கு. வந்தால் வேற வேலைகளே செய்யேலாமல் இருக்கு."

வைத்தியர் சிரித்துக்கொண்டே… "உங்களுக்கு முதலில் தலையிடிகள் பெரிதாக வந்ததில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆகவே இது சாதாரண தலையிடி என்றாலும் பெரிதாகத்தான் தெரியும். அத்துடன் தலையிடியென்றால் தாங்கேலாமத்தான் இருக்கும். தலையிடி வெறும் தலையிடியாகவும் இருக்கலாம் அல்லது வேறு வருத்தங்களுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். நீங்கள் இப்ப இருக்கிம் நிலையில் நிறைய யோசிக்கின்றீர்களா?"

சீலனுக்கு தான்பட்ட வேதனைகளையும்இ இப்போது இருக்கும் சிக்கலான நிலையையும் அவருக்கு சொல்லவேண்டும் போல இருந்தது. ஆனால் அதுவே பிறகு தனது இருப்புக்கு சிக்கலேதையும் கொடுத்துவிடுமோ என்று கொஞ்சம் அடங்கிப்பேசினான்.

"ஓம்இ இப்ப இருக்கிற நிலை ஒன்றும் யோசிக்காதிருப்பதற்கான நிலையல்ல. நிறைப் பிரச்சினைகள் இருக்கின்றன." என்று சாடைமாடையாக பிரச்சினைகளைச் சொன்னான்.

"சரிஇ ஆரம்பத்திலேயே நான் உங்களுக்கு தலையை ஸ்கான் செய்யவேண்டி பிரேரிக்கமாட்டேன். வழமையான சில மருந்துகள் எழுதித்தருகின்றேன். கொஞ்சநாள் போகட்டும் ஸ்கான் எடுப்பது பற்றி யோசிப்போம். குறிப்பாக பிரச்சினைகளை தலையில் போட்டுக் குழப்புவதால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை மாறாக அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய சக்திகூட எங்களிலிருந்து இல்லாது போய்விடும்" வைத்தியர் குட்டிப் பிரசங்கமொன்றை நடத்தியிருந்தார்.

"நன்றி டொக்ரர்" என்று அவர் எழுதித்தந்ததை வாங்கிக்கொண்டு எழந்தான்.

"முதலில் உங்கள் சம்மந்தப்பட்ட பிரச்சினைகளை நீங்களே சொல்வது நல்லது என்றுதான் ஆங்கிலத்தில் கதைத்தேன். இனி விரைவில் நீங்கள் டொச் மொழியில கதைப்பதற்குரிய தகைமையைப பெறவேண்டும்" என்று கடைசியாகக் கூறியிருந்தார் வைத்தியர்.

வெளியில் வந்த சீலன் வைத்தியரின் நாட்டுப் பற்றைச் சிலாகித்துக்கொண்டு யோசித்தான்.

"நான் நிறைய யோசிக்கிறன் போலத்தான் கிடக்குது. இவ்வளவு பிரச்சினைகளையும் சந்திச்சாப்பிறகு யோசிக்காம இருக்க நானென்ன ரோபோவா… நிறையப் பிரச்சினைகள் இருந்தாலும் உவள் பத்மகலா அதுக்கெல்லாம் மருந்தாக இருந்தவள். இப்ப அவளே பிரச்சினை ஆகிட்டாள். உவளை யோசிச்சுத்தான் எனக்கு தலையிடியே வந்திருக்குமோ. அவளை யோசிக்கிறதில்லை என்று எங்கோ மூலையில ஒளிச்சுவச்சாலும் அவளைப் பற்றி யோசிக்காமலும் இருக்கிறதில்லை. இவ்வளவு காலம் காத்திருந்தவள் இன்னும் கொஞ்சக் காலம் பொறுத்திருக்கலாம். இப்ப நிரந்தர வீசா வேற கிடைச்சிட்டு. உவன் முரளிதான் எதாவது சொல்லிக் குழப்பியிருப்பானோ… என்னை வேறு பானுவோட இணைச்சுக் கதைச்சு.. சிச்சீ..."

வைத்தியர் சீலனை யோசிக்கவேண்டாம் என்று சொல்லியிருந்தார். ஆனால் சீலனோ வைத்தியரை சந்தித்து திரும்பும் வழியிலேயே யோசிக்க ஆரம்பித்திருந்தான்.
 
தொடரும் 44

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகுதி 44 

விழுதல் என்பது எழுகையே

எழுதுபவர் மதுவதனன் மௌனசாமி – டென்மார்க்   

 

திரு.மதுவதனன் மௌனசாமி அவர்களின் கலை இலக்கிய ஈடுபாடு கொண்ட ஒரு சிறந்த எழுத்தாளர். 

 

கதை தொடர்கிறது.

 

"நேற்றோ முந்தநாளோ கனடாவில இருந்து ஒரு போன் வந்திருந்து. திருப்பி எடுக்க காசு இருக்கேல. காசு போட்டுட்டு எடுக்கோணும் எண்டு யோசிச்சானான். மறந்துபோனன். அதுக்கும் கலாவுக்கு ஏதும் சம்மந்தம் இருக்குமோ… சீ.. என்னை உப்பிடி கேவலமா யோசிசவளைப்பற்றி நானெதுக்கு யோசிக்கவேணும்… உவள்தான் தலையிடிக்கு காரணமா இருக்கும்" சீலன் ஏதேதோவெல்லாம் யோசித்தான்.

 

 

வீட்டுக்கு வந்து விவேக் அங்கிளிடம் வைத்தியரைச் சந்தித்தது பற்றியும் நடந்தவற்றையும் கூறினான்.

 

 

"ஓம் சீலன்இ தலையில ஸ்கான் பண்ணுறது நல்லதில்லை எண்டும் ஆக்கள் சொல்லுறவையள். உந்த யோசினைகளை குறைத்துப் பார்த்தால் தெரியும் தலையிடி குறையுதோ எண்டு."

 

 

"அங்கிள் உந்த ஸ்கானில வேற வேற வகையள் இருக்கு. எம்ஆர்ஐ ஸ்கான் பிரச்சினை குடுக்குறதில்லை. சீ.ரீ ஸ்கான் கொஞ்சம் அதிகமான கதிரியக்கத்தை தலைக்குள்ள செலுத்தும் அதுவும் கனதரம் தலையைக் கொண்டே குடுத்தாத்தான் பிரச்சினை" தான் படித்தவற்றில் தெரிந்ததைக் கூறினான்.

 

 

"சரிதான் சீலன்இ பேசாம தலையைக் கொண்டே குடுக்காம இருக்கிறது நல்லம். விசாவும் கிடைச்சுட்டுத்தானே. கொஞ்சம் யோசனைகளைக் குறைத்து தலையிடியையும் குறைத்துப் பார்க்கலாம்தானே."

 

 

"ஓம் அங்கிள். வேலைஇ படிப்புஇ இவங்கட டொச் மொழிப்படிப்பு எண்டு வாழ்க்கை கொஞ்சம் பிசியாகப் போறதால இனிக்கொஞ்சம் ஓகேயாக இருக்கும் எண்டு நினைக்கிறன். என்ன இரவில படுக்கேக்கதான் யோசனைகள் வாறத தடுக்கேலாமல் இருக்கு."

 

 

"எல்லாம் சரிவரும். ஊரில அம்மா தங்கச்சியை நினைத்து இங்க இனி எப்படி எதிர்காலம் இருக்கவேணும் எண்டதையும் நினைத்து இயங்கினால் எல்லாம் சரியாகிவிடும்." விவேக் அங்கிள் வழமையைப் போலவே உற்சாகம் கொடுத்தார்.

 

 

விவேக் அங்கிள் சென்றதும் போனை எடுத்தான் சீலன். கனடாவிலிருந்து வந்த தொலைபேசி இலக்கத்தைப் பார்த்தான். நேற்று வந்திருக்கிறது. எதுக்கும் எடுத்துப்பார்ப்போம் என்று முயன்றான்.

 

 

சிறிது நேர காத்திருப்புக்குப் பிறகு எதிர்முனையில் ஒரு பெண்குரல்.

"ஹலோ யாரிது?"

 

 

தமிழ்தான். கேட்டமாத்திரத்திலேயே புரிந்துகொண்டான் இது பத்மகலாவல்ல என்று.

 

 

"நான் சீலன். ஜேர்மனில இருந்து கதைக்கிறன். இந்த நம்பரிலயிருந்து நேற்று ஒரு கோல் வந்திருந்தது. அதுதான் இப்ப எடுத்துப் பார்க்கிறேன்."

 

 

"ஓ… அது நீங்களா. என்ரை பிரண்ட் கலா நேற்று என்ரை போனை வாங்கி உங்களுக்கு கோல் பண்ணினவள். எனக்குத் தெரியாது ஏனெண்டு. இன்னும் கொஞ்ச நேரத்தில வருவாள். ஏதும் சொல்லிவிடவேணுமோ? அவளின்ட நம்பர் இருக்கு தாறதோ?"

 

 

"ஒண்டும் சொல்லுறேக்கு இல்லை. நம்பர் என்னட்ட இருக்கெண்டு நினைக்கிறன்" ஒருவித படபடப்புடன் சொல்லி துண்டித்துவிட்டான். படபடப்பு உடலெல்லாம் பரவியிருந்தது. கையில் அது தெரிந்தது.

 

 

"என்னத்துக்கு வேற ஆற்றையோ போனிலயிருந்து எனக்கு கோல் பண்ணினவள்… அதுவும் கனகாலத்துக்கு பிறகு நேற்று..." படபடப்பில் என்னத்தை யோசிப்பதென்றே தெரியவில்லை சீலனுக்கு. இதுவேற இன்னொரு தலையிடி என்று யோசித்துக்கொண்டான்.

 

 

அப்படியே கதிரையில் இருந்தவனுக்கு அரைமணி நேரம் கடந்தது தெரியவில்லை. போன் கிணுகிணுத்தது. திடுக்கிட்டுக்கொண்டு போனைப் பார்த்தான். அதே கனடா நம்பர். ஒரு வித பதைபதைப்புடன் காதில் வைத்து ஹலோ என்றான்.

 

 

"சீலன்இ நான் கலா கதைக்கிறன்."

 

 

"..."

 

 

"என்ன சீலன் சத்தத்தைக் காணேல?"

 

 

"..."

 

 

"சீலன். நான் கடைசியாகக் கதைத்ததுக்குப் பிறகு உங்களுடன் தொடர்புகொள்ளவேண்டும் என்று பலதரம் முயன்றேன். ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்போதுதான் கிடைத்திருக்கிறது. நான் கடைசியாக் கதைக்கேக்க கோபம் மாதிரி நிறையக் கதைச்சிருந்தன். என்ன கதைச்சன் எண்டு ஞாபகம் இல்லை. ஏனெண்டால் நான் அப்ப உண்மையாகக் கதைக்கேல. உங்களோட பானு எண்டு யாரையோ இணைச்செல்லாம் கதைச்சனான் எண்டு நினைக்கிறன். அதெல்லாம் கட்டாயத்துக்குத்தான் கதைச்சனான். இங்க அக்காமார் தாங்கள்தான் என்னை எடுத்துவிட்டதெண்டு கொஞ்சம் அதிகமாக என்னில ஆதிக்கம் செலுத்தினம். நான் முரளியைத்தான் கட்டவேணும் எண்டமாதிரி நிக்கினம். உங்கட விடயம் தெரிஞ்சுபோச்சு. அக்காக்களுக்கு விருப்பம் இல்லை. முரளிதான் நீங்கள் பானு எண்டு யாரோடயோ தொடர்பாம் எண்டு அக்காக்கு சொன்னவர். இங்க அது பெரிய பிரச்சினை. எனக்கு ஒண்டிலயும் கவனம் செலுத்தேலாமல் இருந்தது. அதுதான் அண்டைக்கு அக்காவும் பக்கத்தில நிண்டவாஇ உங்கட கோல்தான் வருது எண்டு அவவுக்கும் தெரியும். அதாலதான் அப்பிடிக் கதைச்சனான். எனக்கும் கொஞ்சம் ரைம் வேண்டும் போல இருந்துது. உங்களுக்கும் நிறையப் பிரச்சினைகள். சுவிஸில சீலனா இருந்து டென்மார்க்கில மாரிமுத்து ஆகி இப்ப ஜேர்மனில...சீலனா மாரிமுத்துவா தெரியாது. உங்களுக்கும் ரைம் கொஞ்சம் தேவைப்படுது எண்டு யோசிச்சன். இவ்வளவு காலம் காதலிச்சனாங்கள். நான் கதைக்கேக்க அது உண்மையில்ல எண்டு கண்டுபிடிச்சிருப்பீங்களோ தெரியாது. திருப்பி என்னைத் தொடர்பு கொள்ள நீங்கள் முயலேல எண்டதில கோபமா இருக்கிறீங்கள் போலத்தான் கிடக்கு." பொலபொலவென்று உதிர்ந்து தள்ளினால் கலா.

 

சீலனுக்கு தூக்கிவாரிப் போட்டது. சொல்வதற்கு ஏதுமே இல்லாத வெறுமையொன்று அவனை ஆட்கொண்டிருந்தது.

 

"என்ன சீலன்இ ஏதுமே கதைக்கமாட்டன் எண்டு நிக்கிறியள்."

 

"கலா. எனக்கு என்ன சொல்லுறது எண்டு தெரியேல. கொஞ்ச நேரம் கழிச்சு போன் பண்ணுறன்."

 

 

"ஓகே சீலன். ஏதோ கதைச்சிட்டியள். சந்தோசமா இருக்கு. இந்த நம்பருக்கே போன் பண்ணுங்கோ. எனக்கு பண்ணவேண்டாம். இவளுக்கு பக்கத்தில நான் இருந்தாக் கதைக்கிறன். இல்லாட்டி நாளைக்கு இதே நேரம் கதைக்கிறன்."

 

"ஓகே.."

 

போனை வைத்த சீலனை ஒரு வெறுமை சூழ்ந்திருந்தது. மனதின் எங்கோ ஒரு மூலையில் சந்தோசப்புள்ளியொன்று தோன்றியிருந்தது. இயற்கையும் இயல்பு வாழ்வும்கூட விழுந்துபோகும் தருணங்களிலெல்லாம் எழுந்துகொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்கியே செல்கின்றன. சீலனுக்கு தலையிடி இல்லாமல் போவதற்கான காரணமும் வந்திருக்கிறது என்று போகப் போகத் தெரியும்.

 

 
 
 
விழுதல்  என்பது  எழுகையே.......  தொடரின்  45  
எழுதியவர் மாலினி மாலா - யேர்மனி

அறிமுகம்

ஈழத்து  சகல  பத்திரிகைகள்இ  மூலம்  சிறுகதை  தொடர்கதை கட்டுரைகள்  பேட்டிகள்  விமர்சனங்கள்......
இலங்கை வானொலி  நாடகங்கள்  சிறுகதைகள்  இசையும்  கதையும்  கட்டுரைகள்  வேறு  ஜனரஞ்சக   நிகழ்ச்சிகள்   
இருபத்திரண்டே   வயதுக்குள்  மிகவேகமாக  இலக்கியத்துறையில்  ஓரளவு  உயரம்   தொட்டு  நின்ற  போது   அறிமுகமாகி  இருந்த  பெயர்.   அரியாலையூர்   மாலினி  சுப்பிரமணியம். 
புலப்பெயர்வின்  பின்  ஈழமுரசு  உட்பட   சில  பத்திரிகைகளில்  சில  கதைகள்இ  வானொலி  நாடகங்கள்  நிகழ்ச்சிகள்  சில  என்பதுடன்  அந்தத்  துறையை  விட்டே  நீண்ட  கால  ஒதுக்கம்.   இடையில்  இருமுறை   ஐரோப்பிய  மற்றும்  இலங்கை  இணைந்த  சிறுகதைப்  போட்டிகளில்  இருமுறை   முதலிடம்  தன்ன்கப்பதக்கமாய்  வென்றும்  விலத்திப்  போன  ஆர்வம்  பின்  அந்தத்  துறை  விட்டே  ஒதுங்க  வைத்தது.   
     நீண்ட  வருடங்களின்  பின்  வீரகேசரியில்  முன்பு  தொடராக  வெளியாகி  பலரது  பாராட்டைப்  பெற்ற  நாவலை   மணிமேகலைப்பிரசுரம்  வெளியிடஇ   குடும்பப்  பாசமும்  நட்பின்  நேசமும்  முன்னே  இருந்த   பாதை  நோக்கி வற்புறுத்தி  நகர்த்தஇ   எழுத்தின்  மௌனத்தை  உடைத்து  வெளிவந்த  இரண்டாவது  நாவல்  அர்த்தமுள்ள  மௌனங்கள்.   அதன்  பின்னான  பயணம்  கவிதையாக இ  கட்டுரையாக இ சிறுகதையாகஇ   நாவலாக   மீண்டும்  அதே  பாதையில்  நிறுத்திவிடா   தீர்மானத்துடன். ....  முன்னைய பெயர்  அடையாளம்  தவிர்த்த  வெறும்  மாலினியாய்    உங்கள்   அறிமுகத்துடன்  தொடரும்  பேனாவின்  பயணம்......
தகவல்
பண்ணாகம் திருஇக.கிருட்ணமூர்த்தி
திரு.ஏலையா முருகதாசன்
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்
கதை தொடர்கிறது பகுதி 45
 

        இரவுகள்  என்பதே   விடியலுக்காகத்தான்  என்பது  போல்   வீழ்ச்சிகள் எல்லாமே   அதிகமாய்   உன்னி   எழுந்து  கொள்ள  ஏற்பட்ட   வாய்ப்புக்கள்   என்று  மனதுக்குள்  எண்ணிக் கொண்டான்  சீலன்.   வாழ்க்கையின்   ஒவ்வொரு  அனுபவமும்  கற்றுக்  கொள்ள  வேண்டிய  அவசிய   பாடங்கள்.   அடி  பட  பட  மனம்  உறுதி  கொள்ளும்.  தடங்கல்கள்  வர  வர   அதைத்  தாண்டி  வெளிவரும்  வேகம்  வரும்.  தடங்கல்   தாண்டி  நிமிர  வழி  தேடும்  மனம்.   அந்தத்  தேடலில்   ஓய்வற்ற   உன்மத்தம்  இருக்கும்.  எதிர்ப்படும்  இடரை   படிகளாக்கி   அழுத்தி  ஏறும்   திடம்  வரும்.  அவன்  தாத்தா  அப்பா   கற்றுத்தந்த  பால  பாட  வார்த்தைகள்   இப்போது  அவனுக்கு  நினைவு  வந்தன.  மனம்  திடப்பட  ஆரம்பித்தது.  

       விழுந்து  கிடக்கையில்   எழுந்து  நில்  என்று  சொல்ல   ஒரு  உண்மையான  குரல்.  கை கொடுக்க  ஒரு   நம்பிக்கையான  கரம்  போதும்.  எந்த  வீழ்ச்சியிலும்  இருந்து  ஒரு  மனிதன்  எழுந்து  விடுவான்.  ஆனால்  அந்த  உண்மைக் குரலும்இ  நம்பிக் கை யும்  கொடுக்க  ஏனோ  பலர்  தாயாராக   இருப்பதில்லை.    பெற்றோர்  செய்தது  பிள்ளைக்கு  என்பது  போல்    சீலனின்  பெற்றோர்  செய்த  நல்வினையோ  என்னவோ  அவன்  விழுந்த  போது  பற்றி   எழ  பல  கரங்கள்  பல  இடங்களில்  பல  விதங்களில்  நீண்டிருந்தன.  

      பகல்  முழுவதும்  தோட்ட  வேலை   மாலை  நேர   டொச்  பாடசாலை   என  வேகமாக  ஓய்வின்றிக்   கழிந்த  அவனது  நாட்களில்இ  எண்ணிப்பார்க்க  ஓய்வற்று  நேரத்தை  இழந்து  கொண்டுஇ   பணத்தை  யூரோவாக   எண்ணி  எண்ணி  சேர்க்க  முடிந்தது. அறிவை  மொழியாக   மீண்டும்  கற்றுக்  கொள்ள  முடிந்தது.  

       தெரியாத  புதிய  நாடு  ஒன்றில்  மொழி   பிடிபடலும்  பொருளாதாரம்  சீர்  பெற்றிருப்பதும்  தன்னபிக்கை  தரும்  விடயங்கள்.  மனம்  சோர்வுறாது   தொடர்ந்து  நடக்கத்  தூண்டும்  ஊக்கிகள்.  அவை    அவனை  ஊக்க   ஆரம்பித்தன.  மனம்  மெல்ல  மெல்ல   இறுக்கம்  தளர்ந்து  இளக     நம்பிக்கை  வானில்  சிறகு  விரித்தது   மனப் பறவை. 

     அதற்கு  ஏற்றாற்   போல்  வீட்டில்  இருந்து  வரும்  கடிதங்கள்   தொலைபேசி  அழைப்புக்கள்    என்பன   பாசத்தையும்  அக்கறையையும்  இடைக்கிடை   அவனது   கடமைகளையும்  சுமந்து  வர  அவனது   வாழ்க்கை  ஒரு   சரியான  கட்டுக்குள்  நிதானப்  பட   ஆரம்பித்தது. 

     பத்மகலாவிடம்  இருந்து  தொலைபேசி  அழைப்புக்கள்  காதல்  சுமந்து வந்து  கொண்டே  இருந்தாலும் இ  அவளுடன்  அவனும்  ஆவலுடன்  பேசிக்  கொண்டே  இருந்தாலும்  மனதுக்குள்  எப்போதும்  ஒரு  அபாயச்  சங்கு  ஒலித்துக்  கொண்டே  இருந்ததில்  அவனிடம்  அவதானம்  இருந்தது.  

      உறவோ  நட்போ  இடையில்  ஒரு  கீறலும்  பிரிவும்   ஏற்பட்டு   பின்  இணைந்து  கொள்கையில்   முன்பிருந்த  அதே  நெருக்கம்  முயன்றாலும்  முடிவதில்லை.    காயப்பட்ட  மனம்  தன்னைக்  காப்பாற்றிக்  கொள்வதிலேயே  குறியாக  இருக்கிறது.   பத்மகலாவின்   மனதினுள்  அப்படி  ஒரு  உணர்வு  இருந்ததா  என்பது  அவனுக்குத்  தெரியாது   ஆனால்  அவனுக்குள்  அந்த  அவதானம்  இருந்ததை  அவனே  உணர்ந்திருந்தான். 
தொடரும் 46

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.