Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரத்தியோக செய்தி : பிரதமர் பதவியேற்ற கையோடு மோடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திப்பார்

Featured Replies

sampanthan%20modi%204665d.jpg

 

இந்தியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்கும் நரேந்திர மோடி, தமது பதவியேற்பு சமயத்தில் அல்லது பதவியேற்பு முடிந்த கையோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்திக்கக்கூடும் என புதுடில்லி இராஜதந்திர வட்டாரங்கள் 'மலரும்' இணையத்துக்குத் தகவல் வெளியிட்டன. பதவியேற்பு விழாவுக்கு 'சார்க்' நாடுகளின் தலைவர் என்ற முறையில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்‌ஷவும் புதுடில்லிக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார். அவ்வாறு அழைப்பு அனுப்பப்பட்டமைக்கு எதிராகத் தமிழகத்தில் பெரும் உணர்வலைகள் கிளர்ந்திருக்கின்றன. நரேந்திரமோடி பிரதமராகப் பதவியேற்கும் சமயத்தில் அல்லது பதவியேற்ற கையோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் புதுடில்லிக்கு அழைத்து, அவர்களைச் சந்தித்து, அவர்களுக்கும் இராஜதந்திர ரீதியிலான கௌரவத்தை வழங்கினால் அது, தமிழகத்தில் எழுந்துள்ள உணர்வலைகளை சமாளிப்பதாக அமையும் என, மோடியின் ஆலோசகர்கள் கருதுகின்றார்களாம்! பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்படும் சமயம் ம.தி.மு.க. செயலாளர் நாயகம் வைகோ அவரைச் சந்தித்து வாழ்த்தியிருந்தார். ஆனால் மோடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அழைக்கப்படுகின்றார் என்ற செய்தி வெளியானதும் அந்த அழைப்புக்கு ஆட்சேபம் தெரிவிப்பதற்காக வைகோ மீண்டும் புதுடில்லி சென்று நரேந்திர மோடியை இரண்டாவது தடவையும் சந்தித்தார். மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு அழைப்பு அனுப்பியமையால் கிளர்ந்துள்ள உணர்வலைகளைச் சமாளிப்பதற்காக ஏதேனும் மாற்று நடவடிக்கைகளை விரைந்து எடுக்கும்படி வைகோ இந்தச் சந்திப்பின்போது நரேந்திர மோடியை வற்புறுத்தினார் எனத் தெரிகின்றது. அத்தகைய மாற்று நடவடிக்கையில் ஒன்றே பதவியேற்ற கையோடு தமிழ்க் கூட்டமைப்பினரைப் பிரதமர் மோடி சந்திப்பதாகும் என்று புதுடில்லி இராஜதந்திர வட்டாரங்கள் ஊகம் கூறுகின்றன. பிரதமர் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்து தமிழ்க் கூட்டமைப்பு எழுதிய கடிதத்தில் அவரை இயன்ற விரைவில் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருமாறு கோரும் வாசகம் கடைசியாக இடம்பெற்றுள்ளது. அது, புதுடில்லியிலிருந்து கிடைத்த சமிக்ஞைகளின் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக இருக்கக்கூடும் எனவும் ஊகிக்கப்படுகின்றது. இந்தக் கடிதம் இன்று ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது. அதனை அடுத்து அக்கடிதத்தில் தமிழ்க்கூட்டமைப்பினர் கோரியிருக்கின்றபடி, பிரதமராகப் பதவியேற்கும் மோடியை அந்தக் கையோடே தமிழ்க் கூட்டமைப்பினரை சந்திப்பதற்கான ஏற்பாடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மோடியை, மீண்டும் இரண்டாவது தடவையாக வைகோ புதுடில்லியில் சந்தித்து இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு அனுப்பப்பட்டமை குறித்து ஆட்சேபம் தெரிவித்த சமயத்தில் அந்தச் சந்திப்பின்போது அருண் ஜெட்லியும் உடனிருந்தார். பிரதமராகப் பதவியேற்கப் போகும் நரேந்திரமோடி, அச்சமயத்தில் எதிர்கொள்ளும் வெளிவிவகாரப் பிரச்சினை இலங்கை ஜனாதிபதிக்கான அழைப்பு எனச் சுட்டிக்காட்டிய புதுடில்லி வட்டாரங்கள், அந்தச் சந்திப்பின்போது அருண் ஜெட்லியை, பிரதமராகப் பதவியேற்கப் போகும் நரேந்திரமோடி தம்முடன் அருகில் வைத்திருந்தமை அடுத்தே வெளிவிவகார அமைச்சர் அருண் ஜெட்லியே என்பதைக் கோடிகாட்டுவதாகவும் தெரிவித்தன. புதுடில்லிக்கு அழைக்கப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், புதிய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த பின்னர், புதிய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்கும் அருண் ஜெட்லியையும் சந்தித்து விரிவான பேச்சுக்களில் ஈடுபடுவர் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களோடு, வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் புதுடில்லியிலிருந்து அழைப்புக் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது

 

malarum.com

  • கருத்துக்கள உறவுகள்

மோடியால் தீர்வைப் பெற்றுத்தர முடியும்: கூட்டமைப்பு நம்பிக்கை (கடிதம் இணைப்பு)

 

இலங்கையின் தேசியப் பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான பிரதான பங்கை இந்தியாவால் வகிக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் புதிய பிரதமராக மோடி நாளை மறுதினம் திங்கட்கிழமை பதவியேற்கவுள்ள நிலையில்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வாழ்த்துச் செய்தியாகவே சம்பந்தன் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

சம்பந்தனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் :-

”ஒரு அரசியற் தீர்வை வழங்குவேன் என இந்தியாவிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதியை மதித்து இலங்கை அரசாங்கம் நடக்கவில்லை. அத்துடன் கடும்போக்கான ஓர் நிகழ்ச்சித் திட்டத்தை இலங்கை அரசாங்கம் முனைப்பாக முன்னெடுத்து வருகின்றது.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் நீங்கள் பெற்ற பிரம்மாண்டமான வெற்றிக்காகவும்- பாரத தேசத்தின் பிரதமர் என்ற உயர் பொறுப்புக்காக நீங்கள் பெறுகின்ற நியமனத்திற்காகவும்- இலங்கைத் தமிழ் மக்களின் சார்பில் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

2009 மே மாதத்தில் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு வன்முறை முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் தொடர்ச்சியாக- சமத்துவத்தினதும் நீதியினதும் அடிப்படையிலான நிரந்தரத் தீர்வு ஒன்றை தேசிய இனப்பிரச்சினைக்குக் காண்பதற்கான வாய்ப்புக்கள் உருவாகின.

அரசியற் தீர்வை வழங்குவேன் என்ற வாக்குறுதியை போர் நிகழ்ந்த காலத்திலும்- போரின் முடிவிற்குப் பின்னாலும் – இந்தியாவிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்தது. ஆனாலும் தனது வாக்குறுதிகளை மதித்து இலங்கை அரசாங்கம் நடக்கவில்லை.

இலங்கை அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகள்- நல்லிணக்க முயற்சிகளையும் நிரந்தர அமைதி ஏற்படும் சூழலையும் மேலும் பலவீனப்படுத்துவது மட்டுமன்றி எதிர்ப்புணர்வுகளையே உருவெடுத்து வளரச் செய்யும். இத்தகைய ஒரு நிலைமையைத் தமிழ் மக்கள் நிச்சயமாக விரும்பவில்லை.

தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒர் அரசியல் தீர்வை உருவாக்கி எடுப்பதில் அரசு விசுவாசமாக இல்லை என்பதையே தெளிவாக காட்டுகின்றன என்பதையும் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

நாங்கள் அப்படி கருதுவது ஏனென்றால் நீதியினதும் சமத்துவத்தினதும் அடிப்படையிலான கௌரவமான ஓர் சமாதானம் எங்கள் நாட்டில் உருவாகும் என்று நாங்கள் நம்புவதாலும் பாரத தேசம் வகிக்கின்ற பாத்திரம் அதனை உறுதிப்படுத்தும் என்பதனாலும் ஆகும்.

உங்களையும் உங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏனையவர்களையும் சந்திப்பதற்கான ஒரு வாய்ப்பை உங்களால் முடிந்தளவிற்கு விரைவாக எமக்கு வழங்குமாறும் நாம் வேண்டுகின்றோம்” என சம்பந்தன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 

  • Let01-2260x2895.jpg
  • Let02.jpg
  • Let03-2278x2918.jpg
  1. 1
  2. 2
  3. 3

 

மேலதிக செய்திக

 

 

http://www.athavannews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.