Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய 13க்கும் அப்பாலும் சென்று தீர்வு! விரைந்து செயற்பட மோடி வற்புறுத்து

Featured Replies

modi%20mahintha%20meet%2056998d.jpg

 

ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, அமைதி, கௌரவம் ஆகியவற்றுடன் வாழும் வகையில் ஈழத் தமிழ் சமூகம் கொண்டுள்ள அபிலாஷையை நிறைவு செய்யும் விதத்தில் தேசிய நல்லிணக்கச் செயற்பாட்டை விரைவுபடுத்துமாறும், 13 ஆவது திருத்தத்தை முழு அளவிலும், அதற்கு அப்பாலும் விரைந்து நடைமுறைப்படுத்துவதன் மூலம் அதனை எட்டுமாறும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி நேரடியாக வற்புறுத்தினார் என்று கூறப்படுகின்றது. தான் பிரதமர் அலுவலகப் பொறுப்பை ஏற்ற முதல் நாளில் - பொறுப்பேற்று சில மணி நேரத்தில் - இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்த போது இந்தியப் பிரதமர் இப்படி வற்புறுத்தினார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இந்தச் சந்திப்புக் குறித்து விடுத்த செய்திக் குறிப்பிலும் இவ்விடயம் அடங்கியிருந்தது. யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னரும் நல்லிணக்கம் உருவாக்கப்படாமை குறித்து புதிய இந்தியப் பிரதமர் விசனம் தெரிவித்தார் என்றும் கூறப்பட்டது. இருநாட்டு மீனவர் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்வது குறித்தும் இரு தலைவர்களும் விரிவாகப் பேசினர் என்றும் கூறப்பட்டது. இந்தச் சந்திப்பின் போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், வெளிவிவகார அமைச்சின் செயல் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்த்தனா, யாழ். மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கேஷுனுகா செனிவிரத்ன, இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவாசம் ஆகியோரும் உடனிருந்தனர். 

 

malarum.com

  • தொடங்கியவர்
இந்தியாவிற்கும் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்திற்கும் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒப்பந்தங்களையும் நிறைவேற்றுமாறு புதிய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வலியுறுத்தியுள்ளமை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கு மகிழ்ச்சியை தருகின்றது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
 
sumanthiran.jpg
 
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் உருவாக்கப்பட்டதும் அரசியல் அமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான 13 ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றதோடு அதற்கு அப்பாலும் சென்று அதிகாரப் பகிர்வை அர்த்தப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனான முதலாவது சந்திப்பிலேயே வலியுறுத்தியுள்ளார். எனவே, இனியும் காலம் தாழ்த்தாது 13ஆம் திருத்தம், அதிகாரப்பகிர்வு என்பவற்றை அரசாங்கம் மீள ஆரம்பிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். 
 
கொழும்பில் நேற்று நடைபெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஒருமைப்படுத்தும் அமைப்பு  ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
 
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் காங்கிரஸ் கட்சித் தலைமையிலான அரசாங்கத்திற்கும் தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தேவையில்லை. அவர்கள் ஆட்சியில் இல்லாதபோது அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளும் செயலற்றுப் போய்விட்டது என்ற  எண்ணத்திலேயே இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சியில் இருந்தது. ஆனால், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மன்மோகன் சிங்கிற்கோ காங்கிரஸிற்கோ அல்ல. இந்தியாவிற்கு என்பதனை மோடி நினைவுபடுத்தியுள்ளார். 
 
இந்தியப் பிரதமரின் பதவி ஏற்பு விழாவிற்கு வடமாகாண  முதலமைச்சர் விக்னேஸ்வரனை அழைத்துச்  சென்று பொய்யான நாடகம் ஒன்றை காட்டுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ முயற்சித்தார். ஆனால், மிகவும் துணிச்சலுடன் மஹிந்தவின் அழைப்பை முதலமைச்சர் வெளிப்படையாக மறுத்தார். நான் தங்களுடன் வந்தால் நாட்டில் நிலவும் உண்மை மறைக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். இந்த செய்தியும் இந்தியாவிற்குச் சென்றுள்ளது.
 
13ஆம் திருத்தம் அதற்கு அப்பாலான அதிகாரப்பகிர்வு என்பதனைவிட சாதாரண விடயங்களில்கூட நாம் ஒடுக்கப்படுகின்றோம். எமது வடமாகாண முதலமைச்சருக்கான அதிகாரங்கள் என்பதே கேள்விக்குறியாக உள்ளன. முதலமைச்சரின் விருப்புக்கமைய மாகாண சபையின் பிரதம செயலாளர் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபரைக்கூட முதலமைச்சரினால் நியமிக்க முடியவில்லை.
 
முதலமைச்சர் சரியான விதத்தில் யாப்பு அதிகாரங்களின்படி இயங்குவதற்குக்கூட இங்கு அனுமதி இல்லை. இந்த சூழ்நிலைகளையெல்லாம் புரிந்துகொண்ட பின்னரே  இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி ஜனாதிபதிக்கு 13ஆம் திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இந்து நாடு இந்திய நாடு என்ற வகையில் இந்தியப் பிரதமர் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை விளக்கமாக புரிந்து கொண்டுள்ளார் என்பன ஜனாதிபதி மஹிந்தவுடனான முதலாவது சந்திப்பே உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது. இந்திய வெளியுறவு செயலாளர் சுஜாதாசிங் வெளியிட்டுள்ள ஊடக செய்தி இதனை தெளிவுப்படுத்தியுள்ளது.
 
எனவே, இனியும் காலம் தாழ்த்தி எம்மை அரசாங்கம் ஏமாற்ற முடியாது. 13ஆம் அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்தி அதற்கு அப்பாலான அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் காலம் தாழ்த்தாது உடனடியாக செயற்பட வேண்டும் என்றார். 
 
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருக்கேக்க.. நாங்க சொல்லுறதை உலகம் கேட்ட காலம் போய்.. இப்ப உலகம் எப்படா கொட்டாவி விடும் என்று காத்திருக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்கினம். இதுதான் இப்ப ஈழத்தமிழர்களின் சாணக்கிய அரசியல். :D

 

இதில புலியை அழி.. தீர்வை தருவம்.. என்று சிங்களவன் சொல்ல தலையாட்டின எங்கட ஆக்கள் செய்த திருவிளையாடல்களும் அடங்கும்..! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.