Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் இறந்து தெற்கில் மறுபிறப்பெடுத்து மீண்டும் களனிக்கு வருவேன்! - மர்வின் சில்வா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, சுவிட்சர்லாந்து ஆகிய ஐந்து நாடுகளிலும் சொகுசு வீடுகள் உள்ளன என பொதுமக்கள் தொடர்பாடல் மற்றும் மக்கள் விவகார அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா குறிப்பிடுகிறார்.

நேற்று முன்தினம் அவர் அமெரிக்காவுக்குச் சென்றவேளை, 100 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு அந்நாட்டு வீடொன்று வாங்கியதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்ட செய்தியின் நம்பகத் தன்மை தொடர்பில் வினவியபோதே அவர் அவ்வாறு பதிலளித்துள்ளார்.

ஐந்து நாடுகளில் வீடுகள் வாங்கக் கூடிய அளவு பணம் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? என சிங்கள ஊடகமொன்று அவரிடம் வினா தொடுத்தபோது, அந்நாட்டில் வாழ்கின்ற தனது உறவினர்களும், நண்பர்களும் எனது பாதுகாப்பில் அக்கறை காட்டியே அதனை வாங்கித் தந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

“பாதுகாப்பு” எனக் கூறப்படுவது உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தலோ அல்லது பாதுகாப்பின்மையோ எனக் கருதலாமா என மேலும் அவரிடம் வினவப்பட்டபோது, அவர், பிரச்சினைகள் எழுந்தால்.. எனக் கூறிவிட்டு, தனக்கு யாரிடமிருந்தும் எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சித்தார்த்த இளவரசருக்கு ரம்ய, சுரம்ய, சுப எனும் மூன்று மாளிகைகள் மட்டுமே இருந்தன. ஆயினும் மர்வின் சில்வாவுக்கு ஐந்து நாடுகளில் ஐந்து மாளிகைகள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளம் பரிசுத்தமான மனிதர்களுக்கு, மனிதநேயம் உள்ள மனிதர்களுக்கு மனித உலகில் பரிசுகள் வந்து சேர்கின்றன எனக் குறிப்பிட்டுள்ள மர்வின் சில்வா, அனேசிண்டு மன்ன்ன் புத்த பெருமானுக்கு ஜேத்தவனாராமவை பரிசாக வழங்கியதுடன், விசாகா தேவியின் ஆபரணமொன்றை விற்று வேலுவனாராமவயையும் பரிசளித்தார்.

உலகம் முழுதுவதும் எனது உறவினர்களும், நண்பர்களும் ஒரு மாலையாக இருக்கின்றார்கள். எனக்கு இலங்கையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நான் இறப்பது இலங்கையில்தான். இறந்ததன் பின்னர் மீண்டும் தெற்கில் மறுபிறப்பெடுத்து களனிக்கு வருவேன் எனவும் மர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

www.ilankainet.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.