Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா விதிமுறைகளில் அவசர மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் - இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஐ.நா விதிமுறைகளில் அவசர மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் - இலங்கை
29 மே 2014

 

srilanka_CI.jpg

ஐக்கிய நாடுகள் அமைப்பின் விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம், அகதி அந்தஸ்து வழங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு எவ்வாறு அகதி அந்தஸ்து வழங்குகின்றது என்பது தெளிவாகவில்லை என இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அகதிகளின் விண்ணப்பங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் ஐக்கிய நாடுகள் அமைப்பு எவ்வித ஆலோசனையும் நடத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பு அகதி அந்தஸ்து வழங்குவதற்கு முன்னதாக சில முக்கியமான விடயங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும், தற்போதைய நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

கடந்த 15ம் திகதி குறித்த மூன்று சந்தேக நபர்களையும் மலேசிய காவல்துறையினர் கைது செய்து, 25;ம் திகதி நாடு கடத்தியிருந்தது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பின் கீழ் பெரும் எண்ணிக்கையிலான புலி உறுப்பினர்கள் அடைக்கலம் பெற்றுக் கொண்டு வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பினை பயன்படுத்தி எவரும் குற்றச் செயல்கள் மோசடிகளில் ஈடுபட அனுமதியளிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு கடத்தப்பட்டவர்கள் அப்பாவிகள் என்றால் அது குறித்த சாட்சியங்களை மனித உரிமை கண்காணி;ப்பகம் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமர்பி;க்க வேண்டுமென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட மூவரும் சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்குள் பிரவேசித்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. யுத்த நிறைவின் பின்னர் பிரி;த்தானியா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து போலியாக புகலிடம் கோரிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/107565/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது மிகவும் சரியானதே. பயங்கரவாதிகளையும், அகதிகளையும் உருவாக்கும் நாடுகள் கண்காணிக்கப்படல் வேண்டும் என்ற விதிமுறை, அவசரமாகவும், அவசியமாகவும் இணைக்கப்படல் வேண்டும். :icon_idea:

அத்துடன் சொந்த நாட்டு மக்களையே ஆயிரக்கணக்கில் இனப்படுகொலை செய்யும்,போர்விதிகளை மீறும்,ஊடகவியாளர்களை கொலைசெய்யும், பாலியல் வல்லுறவு, கொள்ளைகள், சிறுபாண்மை மக்களின் நிலங்களை சுருட்டும், சர்வதேச சட்டங்களை மதிக்காத நாடுகளுக்கு உடன் நடவடிக்கை எடுக்கும் திருந்தங்களை கொண்டுவரவேண்டும். அதாவது அரசபயங்கரவாதம், பூச்சாண்டி வாதம் என்பவற்றிற்கு உடன் நடவடிக்கை மேற்கொள்ளல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.