Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குத் யாழ். மேயர் தடை

Featured Replies

4r(24).jpg

 

 

யாழ்.மாநகர சபையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள்  இன்று வியாழக்கிழமை அனுஷ்டிக்க முற்பட்ட வேளை, மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா அதற்கு இடமளிக்காமல் தடை விதித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாது சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
யாழ்.மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத் தொடர் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இன்று வியாழக்கிழமை (29) மாநகர சபை கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

கூட்டம் ஆரம்பித்த வேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தாங்கள் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப் போவதாகக்கூறி எழுந்த போது, அதனை முதல்வர் மறுத்தார்.

அவ்வாறு அஞ்சலி செலுத்துவதாயின் மறைந்த அல்பிரேட் துரையப்பா (முன்னாய் மாநகர சபை முதல்வர்) முதல் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். 

இதனால் அதிருப்பதியடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

இருந்தும், இறுதி யுத்தத்தில் உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களுக்கான அஞ்சலி செலுத்தப் போவதாக த.தே.கூ தெரிவித்தனர். எனினும் அதனை மறுத்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கூச்சல் குழப்பமிட்டமையினால் சபையிலிருந்து த.தே.கூ உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

இந்நிலையில் தொடர்ந்து கூட்டம் நடைபெற்ற போது, இந்தியாவின் 15 ஆவது பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர தாமோரதாஸ் மோடிக்கு முதல்வர் உள்ளிட்ட ஆளுங்கட்சியினர் எழுந்து நின்று வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

tamilmirror

 

சி.வி. வரலாற்று தவறிழைத்துள்ளார் : யோகேஸ்வரி

 

 

1(5075).jpg

 

 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்குச் செல்லாமல் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரலாற்று தவறிழைத்துள்ளதாக யாழ். மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசா இன்று புதன்கிழமை (28) தெரிவித்தார்.

பதவியேற்பு விழாவிற்குச் சென்றுவிட்டு இன்று (28) காலை யாழ்ப்பாணம் திரும்பி அவரிடம் உங்கள் பயணம் எவ்வாறு அமைந்ததென கேட்டபொழுதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்;

பதவியேற்பு விழாவிற்குச் செல்வது மிகப்பெரிய சந்தர்ப்பம். அதற்கான அழைப்பு ஜனாதிபதியினால் முதலமைச்சருக்கு விடுக்கப்பட்ட போதும், அவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இணைந்து அதனை மறுத்து, தவறிழைத்துவிட்டார்கள்.

தொடர்ந்து தமிழர் சார்பாக பிரதிநிதியொருவரை அழைத்துச் செல்லும் பொருட்டு ஜனாதிபதியினால் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

பதவியேற்பு முடிந்த மறுநாள் நாங்கள் கலந்துரையாடுவதற்கு 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. இதன்போது மோடிக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் இணக்கமான சுமூகமான பேச்சுக்கள் இடம்பெற்றன. 

இதில் 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்ற வகையில் பேச்சுக்கள் இருந்தன. 

அத்துடன் வடமாகாணத்தில் இடம்பெற்ற தேர்தல், மீள்குடியேற்றம், அபிவிருத்தி என்பனவற்றை ஜனாதிபதி மோடிக்கு எடுத்துரைக்கும் போது, கல்விப் பொதுத் தராதரச் சாதாரண தரத்தில் வடமாகாணம் முதலிடம் பெற்றமையும் எடுத்துரைத்ததாக யோகேஸ்வரி மேலும் தெரிவித்தார்.                          

 

tamilmirror                       

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசினது கைக்கூலிகளிடம் தமிழினம் இதைத்தவிர வேறு எதைஎதிர்பார்க்க முடியும்!

இ பி டி பி யால் கொல்லப் பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தலாமோ எண்டு கேளுங்கோ .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.