Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசை ஆட்டிப்படைக்கப் போகும் ஐ.நாவின் பதின்மூவர் யாவர்?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை அரசை ஆட்டிப்படைக்கப் போகும் ஐ.நாவின் பதின்மூவர் யாவர்?!

 

 

navi_pillay_un_human_rights-300x168.jpgசிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நியமிக்கவுள்ள விசாரணைக் குழுவில் குறைந்தபட்சம் 13 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணைக் குழுவை இரண்டு நிபுணர்கள் மேற்பார்வை செய்யவுள்ளனர். அவர்களில் ஒருவர், அனைத்துலக அளவில், பிரபலமான உயர்மட்ட பிரமுகராக இருப்பார்.

இந்த விசாரணைக் குழுவில், டிஜிட்டல் சான்றுகளை ஆய்வு செய்வதற்கான தடயவியல் நிபுணர்களும் இடம்பெறவுள்ளனர்.

இவர்கள், அடுத்த எட்டு மாதங்களில் சாட்சிகளை சேகரிக்கவும், பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களைப் பெறவும், ஏனைய தகவல் மூலங்களைப் பெற்று, தமது கண்டறிவை முழுமைப்படுத்துவதற்கு சிறிலங்காவுக்கும், ஆசிய பசுபிக். வடஅமெரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகளுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, இந்த விசாரணைக் குழு அடுத்த வாரங்களில் நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விசாரணைக் குழுவில் இடம்பெறும் இரண்டு நிபுணர்கள், உயர்மட்ட நிபுணத்துவத்தைர் வழங்கவும், விசாரணைகளை வழிநடத்தவும், பகுப்பாய்வு செய்யவும், அறிக்கையை தயாரிக்கவும், பத்து மாதங்களுக்கு நலன்சார் அடிப்படையில் பணியாற்றவுள்ளனர் என்று சிறிலங்கா விசாரணைக்கான பூர்வாங்க வரவுசெலவுத் திட்டம் மற்றும் பணியாளர்கள் குறித்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தின் அதிகாரிகளே விசாரணைகளை மேற்கொள்வார்கள் என்றும், ஆனால் விசாரணை அறிக்கை, இரண்டு நலன்சார் நிபுணர்களின் முத்திரையுடனேயே வெளியிடப்படும்.

இவர்களில் ஒருவர் மிகவும், உலக அரங்கில் மிகவும் மூத்த பிரமுகர் என்று உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விசாரணைக்கு அனைத்துலக அங்கீகாரத்தைப் பெறுவதற்காக, ஐ.நாவின் முன்னாள் பொதுச்செயலர் கோபி அன்னான் விசாரணைக் குழுவுக்குத் தலைமையேற்கலாம் என்று ஊகங்கள் வெளியாகியுள்ளன.

எனினும், அணுகப்பட வேண்டிய மூத்த நிபுணர்களின் பட்டியல் ஒன்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்திடம் இருப்பதாக அறியப்படுகிறது.

மைக்கல் கிர்பி அல்லது கோபி அன்னான் போன்ற – அனைத்துலக அளவில் உயர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் இருக்க வேண்டும் என்று எமக்குத் தெரியும் என, விசாரணைக் குழு அமைப்புடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மைக்கேல் கிர்பி அவுஸ்ரேலிய நீதிபதியாவார்.

இவரே ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையின் பேரில் அமைக்கப்பட்ட வடகொரியா குறித்த விசாரணைக் குழுவுக்குத் தலைமை தாங்கியிருந்தார்.

எனினும், கோபி அன்னான் சிறிலங்கா குறித்த விசாரணைக் குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

ஏனென்றால், இந்த விசாரணைக் குழுவின் தலைவரே, ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் அறிக்கையை கையளிக்க வேண்டும்.

அவ்வாறாயின் ஐ.நாவின் முன்னாள் பொதுச்செயலராக இருந்த கோபி அன்னான், தனக்கு கீழ் பணியாற்றிய அதிகாரிகளிடம் அறிக்கை அளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இந்தநிலையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பதவியில் இருந்து, வரும் ஓகஸ்ட் மாதம் விலகவுள்ள நவநீதம்பிள்ளையினால், சில உயர்மட்ட பிரமுகர்களின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன.

அதேவேளை, ஆரம்பகட்ட வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடு, பணியாளர்கள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை.

எனினும், மூன்று மனித உரிமை விசாரணையாளர்கள், ஒரு சட்ட ஆலோசகர், ஒரு மூத்த ஒருங்கிணைப்பாளர், ஒரு நிர்வாகி, சிங்கள மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோரை விசாரணைக் குழுவில் நியமிக்க ஐ.நா மனித உரிமை ஆணயாளர் பணியகம் முடிவு செய்துள்ளது.

மனித உரிமை விசாரணையாளர்களில் ஒருவர் பாலின சமத்துவம் தொடர்பான நிபுணராக இருப்பார் என்று ஆரம்பக்கட்ட பணியாளர் வரைவு கூறுகிறது.

ஒளிப்பட மற்றும் காணொளி ஆதாரங்களைப் பகுப்பாய்வு செய்வதற்காக, தடயவியல் ஆலோசகர் ஒருவரும், குறுகிய காலத்துக்கான ஆவண ஆலோசகர் ஒருவரும் இந்தக் குழுவில் சேர்க்கப்படவுள்ளதாக அறியப்படுகிறது.

சிறிலங்கா அனுமதி வழங்கினால், இந்த விசாரணைக் குழுவுடன், பயணம் செய்வதற்கு ஒரு பாதுகாப்பு அதிகாரியும் வழங்கப்படுவார்.

இந்த விசாரணைகளுக்கு 1.4 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், நவநீதம்பிள்ளையின் பணியகம் இந்த விசாரணைக் குழுவின் காலத்தை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் போது, இந்த செலவுத்தொகை அதிகரிக்கக் கூடும்.

இந்த மாத முற்பகுதியில், விசாரணைக்குழு பற்றிய இறுதி அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்னதாக, சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம்.

விசாரணையாளர்கள், மூன்று சம்பந்தப்பட்ட ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்களுடன் ஆலோசனை நடத்துவர்.

நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும், தன்னிச்சையான கொலைகள், பலவந்தமாக காணாமற்போனோர் குறித்த பணிக்குழு, மற்றும் சித்திரவதைகள் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர்களுடனேயே இந்த விசாரணைக்குழு ஆலோசனை நடத்தவுள்ளது.

இரண்டு நலன் சார் நிபுணர்கள் தலா ஐந்து நாட்கள் சிறிலங்கா, ஜெனிவா மற்றும் ஆசிய பசுபிக்கிற்கு பயணம் மேற்கொள்ளவும், ஒரு நிபுணர் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவுக்கு தலா ஐந்து நாட்கள் பயணம் செய்யவும், பயணச் செலவுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இரண்டு நிபுணர்களும், இந்த இடங்களில், தகவல் சேகரிப்பு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளிடம் நேர்காணல் செய்வது, போன்றவற்றில் ஈடுபடுவர் என்றும் ஐ.நா ஆவணம் கூறுகிறது.

விசாரணைக் குழுவைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள், தலா பத்து நாட்கள், ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கு பயணம் மேற்கொள்வர்.

இரண்டு அதிகாரிகள், ஐரோப்பாவுக்கு ஏழு நாட்கள் பயணம் மேற்கொள்வர்.

ஏனைய இரண்டு அதிகாரிகள், வட அமெரிக்காவுக்கு தலா ஏழு நாட்கள் பயணம் செய்வர்.

இவர்கள், சிறிலங்காவுக்கு வெளியே வசிக்கும் எல்லா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களிடம் இருந்தும், ஏனைய தகவல் மூலங்களில் இருந்தும் தகவல்களைத் திரட்டவுள்ளனர்.

ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இந்த விசாரணைக் குழுவை, வரும், 9ம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுக்கு முன்னதாக அறிவிக்கவுள்ளார்.

10 மாதங்கள் பணியாற்ற வேண்டியுள்ளதால், விசாரணைக் குழுவுக்குத் தலைமை தாங்கும் – இரண்டு உயர்மட்ட நிபுணர்களில் ஒருவரின் நியமனத்தை உறுதி செய்து கொள்வதில், ஏற்பட்ட இழுபறியால் இந்த விசாரணைக் குழு அறிவிப்பில் தாதம் ஏற்பட்டிருக்கலாம் என்று பல்வேறு வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த விசாரணைக் குழு தமது ஆரம்பக்கட்ட வாய்மொழி அறிக்கையை வரும் செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆனால் இறுதி அறிக்கை, அடுத்த ஆண்டு மார்ச் மாத கூட்டத்தொடரின் ஒழுங்கமைப்புக்கு முன்னதாக – அடுத்த ஆண்டு ஜனவரியிலேயே தயார் செய்யப்பட வேண்டும்.

இதனால், இந்த விசாரணைக் குழுவுக்கு விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை தயாரிக்க ஆறு மாதங்கள் மட்டுமே கிடைக்கும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ள போதிலும், விசாரணைப் பொறிமுறை குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதில், நவநீதம்பிள்ளையும் அவரது பணியாளர்களும் உறுதியாக உள்ளனர்.

இந்த விசாரணைகள், வடகொரியா மற்றும் சிரியா தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்கள் போலல்லாது, ஐ.நா மனித உரிமை ஆணயாளர் பணியகத்தின் விசாரணையாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில், நவநீதம்பிள்ளையின் பணியகம் உறுதியாக உள்ளது. இவ்வாறு கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

http://tamilleader.com/?p=34752

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.