Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரிக் குதிரைகளின் வியத்தகு உலகம்

Featured Replies

zebra%200027.jpg

 

சொந்த மண்ணை விட்டு புலம்பெயர்வதுபோல கொடுமையான வலி எதுவுமில்லை. ஆனால் புலம்பெயர்ந்து செல்வதையே வாழ்க்கை முறையின் ஒரு கூறாக வைத்திருக்கின்றன பல பறவைகளும் விலங்குகளும். எவ்வித உறுத்தலும் இல்லாமல் இடம்பெயர்ந்து வாழ்வதை ஆண்டுதோறும் வாழ்க்கையின் வாடிக்கையாகக் கொண்ட உயிரினங்களில் வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் மீன்களும் கூட உண்டு. இந்நிகழ்வில் இவை கடக்கும் தூரங்கள் அதிர்ச்சி தரக்கூடியதாகவும், வியப்பளிக்கக் கூடியதாகவும் இருக்கின்றன. சில பறவைகள் கடந்து வரும் தூரத்தை மற்றவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. இவைகளுக்கு எல்லைகள் கிடையாது. இப்படி இடம்பெயர்வதை வாழ்க்கையின் முக்கிய அங்கமாக வைத்திருக்கும் விலங்குகளில் வரிக்குதிரைகள் முக்கியமானவை. வரிக்குதிரைகளின் வியத்தகு உலகில் சுவையான தகவல்களுக்கு பஞ்சமே கிடையாது.

 

கோடுகளை வரைந்த ஓவியன் யார்?

 

slider05.jpg

வரிக்குதிரைகளை பார்த்தவுடன் நம் மனதில் தோன்றும் முதல் கேள்வி - இந்தக் குதிரைகளுக்கு ஏன் இப்படி வரிகளாக இருக்கிறது? இவைகளின் மீது கோடுகளை வரைந்த அந்த ஓவியன் யார்? இந்தக்கோடுகளால் அவற்றுக்கு என்ன பயன்? இந்தக் கேள்விக்குப் பல பதில்களை விலங்கிலாளர்கள் கூறி ஆச்சரியப்படுத்துகிறார்கள்? அடிப்படைக் காரணமாக அவர்கள் கூறுவது அபாயகரமான விலங்குகளிடமிருந்து தப்பிப்பதற்காகத்தான் இப்படி வரிகள் உள்ளன என்கிறார்கள். ஆப்பிரிக்கக் காடுகளில் காற்றில் எந்நேரமும் அசைந்து கொண்டிருக்கும் நீண்ட கோரைப் புற்களின் நடுவே வரிக்குதிரைகளை அவ்வளவு எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது! இந்தப் புற்களின் நடுவே ஒரு வரிக்குதிரை அசையாமல் எவ்வளவு நேரமானாலும் நிற்க முடியும். அப்படி நிற்பது அதைத் தாக்க வரும் சிங்கத்துக்குத் தெரியவே தெரியாதாம்! அதெப்படி? வரிக்குதிரையின் வரிகள் கருப்பு நிறத்திலும் சுற்றியுள்ள புற்கள் பச்சை வண்ணத்திலும் இருக்கும்போது எப்படித் தெரியாமல் போகும் என்று வியப்பாக இருக்கிறதல்லவா? நிறக் குருடு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்! பல நிறங்களைப் பகுத்தறிய முடியாமல் எல்லாமே கறுப்பு-வெள்ளையாகத் தெரியும் நிலைதான் நிறக்குருடு. பல மிருகங்களைப் போலவே காட்டு ராஜா சிங்கமும் ஒரு நிறக்குருடு! ஆகவே, அதற்குப் புற்களுக்கும் வரிகளுக்கும் வித்தியாசம் தெரியாது! அதெல்லாம் சரி! ஒரு குதிரை நின்றால் வித்தியாசம் தெரியாது. கூட்டம் கூட்டமாக நின்றால்? இங்கேதான் இயற்கை விளையாடுகிறது! வரிக்குதிரைகள் எங்கே சென்றாலும் கூட்டமாகத்தான் செல்லும்! கூடவே ஒன்றுக்கொன்று இடைவெளி இல்லாமல் நெருக்கித் தள்ளிக்கொண்டுதான் போகும்! இப்படிப் போகும் போது வரிகள் எல்லாம் சேர்ந்து ஒரு புது டிசைனை உருவாக்கும்! இந்த டிசைன் தூரத்தில் பார்க்கும் சிங்கத்துக்கு மிகவும் குழப்பத்தைத் தரும். அங்கே என்ன நடக்கிறது என்பதே தெரியாது! அது மட்டுமல்லாமல் இந்தக் கூட்டம் எந்தப் பக்கம் நகருகிறது என்பதுகூடத் தெரியாது!

 

48fb7c6ff0-Zebras.jpg

ஒவ்வொருவருக்கும் வேறுவேறு விதமாகக் கைரேகை இருப்பது போல, வரிக்குதிரைகளின் வரிகளும் வேறு வேறாகவே இருக்கும். (டிசைனர் சட்டை போல!) ஒன்றின் வரி அமைப்பு போல இன்னொரு குதிரையில் பார்க்கவே முடியாது.

 

இதில் மற்றொரு அதிசயம் என்னவென்றால், நமக்குத்தான் ஒரு வரிக்குதிரையைத் தனியாக அடையாளம் காண முடியாதாம்! வரிக்குதிரைகள் தங்கள் நண்பர்களையோ உறவினர்களையோ இந்த வரிகளை வைத்துதான் அடையாளம் கண்டு கொள்கின்றனவாம்! தாய்க்குதிரை தனது குட்டிகளை இனம் கண்டுகொள்ள இந்த வரிகள்தான் உதவுகின்றன. அப்படியானல் வரிக்குதிரைகளின் மீது விதவிதமான கோடுகளை வரைந்துகொண்டேயிருக்கும் கடவுள் எத்தனை சிறந்த ஓவியர்? -

 

வியப்பூட்டும் ஆய்வும் முடிவும்

 

கடந்த இரண்டாண்டுகளாக ஆபிரிக்காவில் உள்ள வரிக்குதிரைகளை ஒரு வனவிலங்கு பாதுகாப்புக் குழு ஆய்வுக்குட்படுத்தியுள்ளது. எட்டு வரிக் குதிரைகளின் உடலில் ஜி.பி.எஸ் தகடுகளைப் பொருத்தி அவற்றின் நடமாட்டத்தை கவனித்துள்ளார்கள்.

 

இவை நமீபியாவின் சோபே நதி சமவெளியில் இருந்து போட்ஸ்வானாவில் உள்ள நக்சாய் பான் தேசிய பூங்காவுக்கு இடம் பெயர்ந்து செல்வதை ஆய்வில் கவனித்துள்ளனர். இவை சோபே நதிக்கரையில் இருந்து நக்சாய் பான் தேசிய பூங்காவுக்கு சென்று மீண்டும் சோபே நதிக்கரைக்கு வர 500 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும். இவை நமீபியா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, ஜாம்பியா, அங்கோலா ஆகிய நாடுகளைக் கடந்துள்ளன. இவை நேர்வழியில் செல்வதில்லை. இவை சுற்றுவழியில் செல்வதால் போகும் பாதையில் மீண்டும் வருவதில்லை. இவைகளின் இடம்பெயர்தலும் மனிதர்கள் தலையீட்டால் ஆபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த வேளையில் நடந்துள்ள ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. இது போன்ற இடம்பெயர்தல் நாடுகளின் எல்லைகளால் கட்டுப்படுத்தப்படுவதில்லை. விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், நீர்வாழ் பிராணிகளுக்கும் தேசிய எல்லைகள் ஒரு தடையாக இருப்பதில்லை. எனவே வனவிலங்குப் பாதுகாப்பு இயக்கங்களும், முயற்சிகளும் எல்லைகளுக்குள் சுருங்கி விடாமல் பரந்துவிரிந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை இந்த ஆய்வுகள் காட்டுகின்றன

 

NortTZ_3457.jpg

 

malarum.com

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவன் மற்றைய விலங்குகளை விட வரிக்குதிரை புண்ணியம் செய்திருக்கோ ??? மற்றைய விலங்குகளுக்குக் கடவுள் இப்படி ஒரு வாய்ப்பைக் கொடுக்கவில்லையே

 

 

  • தொடங்கியவர்

மசாய்மாரா : அழகும், ஆளுமையும்

 

140602150529_rexfeatures_goldstein-8.jpg

 

ஆப்ரிக்காவில் சூரிய உதயம் மற்றும் அஸ்தமன நேரங்களில் இயற்கைக் காட்சிகள் மற்றும் வனவிலங்குகளை படம் பிடித்துள்ளார் பிரிட்டிஷ் புகைக்ப்பட கலைஞர் பால் கோல்ட்ஸ்டெயின். சூரிய அஸ்தமன நேரத்தில் ஒட்டகச்சிவிங்கிகளை இப்படத்தில் காணலாம்.

 

140602150534_rexfeatures_goldstein-10.jp

 

இந்தப் படங்களை எடுக்க பல ஆண்டுகள் செலவழித்ததாகக் கூறுகிறார் பால் கோல்ட்ஸ்டெயின். வனவிலங்குகள் இடம்பெயர்ந்து செல்லும் காலகட்டத்தில் மிகச் சரியான ஒளிச்சூழலில் இப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

 

140602150527_rexfeatures_goldstein-7.jpg

 

'கறுப்புத் தொப்பை பஸ்டர்ட்' என்று அழைக்கப்படும் இந்தப் பறவை பெரும்பாலும் தரைப்பகுதியிலேயே வாழும். சூரியன் மறையும் நேரத்தில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

 

140602150531_rexfeatures_goldstein-9.jpg

 

தான்சானியா-கென்யா எல்லைப் பகுதியிலுள்ள மசாய் மாரா வனவிலங்கு சரணாலயமே, இப்படியான புகைப்படங்களை எடுப்பதற்கு மிகச்சிறந்த இடம் என்கிறார் கோல்ட்ஸ்டெயின். ஆள் அரவமற்ற இப்பகுதியில் அஸ்தமன நேரத்தில் தனியாக இருக்கும் ஒரு யானையின் புகைப்படம் இது.

 

 

140602150513_rexfeatures_goldstein-1.jpg

 

இந்தப் படங்கள் திட்டமிடாமல் எடுக்கப்பட்டவை என்று கூறப்படுவது நகைப்புக்குரிய ஒரு விஷயம் என்கிறார் படமெடுத்தவர். சூரியன் உதயமாகும் நேரத்தில், எந்த விலங்கு, எங்கு, எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து, விரைவாக அவ்விடத்தில் இருந்தால் மட்டுமே இப்படியான படங்களை எடுக்க முடியும் என்கிறார் அவர்.

 

140602150525_rexfeatures_goldstein-6.jpg

 

மசாய் மாரா வனவிலங்கு சரணாலயம் பலவகையன நிலப்பரப்புகளைக் கொண்டது. வரிக்குதிரைகள், காட்டெருமைகள் மற்றும் மான்கள் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் பகுதி இது.

 


140602150523_rexfeatures_goldstein-5.jpg

 

சிங்கங்கள் வாழ்வதற்கு மிகவும் ஏற்ற பகுதி இந்தச் சரணாலயம். சுமார் 1500 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த நிலப்பரப்பில் 20 வகைகளைச் சேர்ந்த 500 க்கும் அதிகமான சிங்கங்கள் வாழ்கின்றன.

 

140602150515_rexfeatures_goldstein-2.jpg

 

மசாய் மாராப் பகுதியில் மழை பெய்யும்போது, புல் பூண்டு முதல் அனைத்து வகையான உயிரினங்களும் தழைத்து வளரும். அச்சமயத்தில் கூட்டம் கூட்டமாக மிருகங்கள், புதிதாக முளைத்துள்ள தாவரங்களை மேய்வதற்காக வரும். ஒரு மழைநாளில், அந்தி நேரத்தில் ஒற்றை வரிக்குதிரை மெதுவாக நகர்ந்து செல்வதை இப்படத்தில் காணலாம்.

 

 


140602150520_rexfeatures_goldstein-4.jpg

 

மழையைப் பொருட்படுத்தாமல் மகிழும் யானைகள், சிக்கலான சமூக வாழ்க்கை அமைப்பைக் கொண்டவை. கூட்டத்தில் இருக்கும் மூத்த பெண் யானையே அக்கூட்டத்தை வழிநடத்தும்.

 

140602150518_rexfeatures_goldstein-3.jpg

 

மசாய் மாராப் பகுதியில், சிறுத்தைகளின் ஆளுமை அதிகம். நீண்டு உயர்ந்து வளரும் புற்கள் இவை வேட்டையாடுவதற்கு மிகவும் உதவுகின்றன. இந்தப் பகுதியை மிகவும் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டவை சிறுத்தைகளே. கரையான் புற்றுகள் மற்றும் முறிந்து விழுந்த மரக்கிளைகள் மீதேறி சமவெளிப் பகுதியை பார்ப்பதற்கு அவற்றை சிறுத்தைகள் பயன்படுத்திக் கொள்கின்றன.

 

bbc tamil.

 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.