Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் கைதுக்கு இலங்கை மீனவர்களே காரணம்: விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டு

Featured Replies

தங்களது கைதுக்கு இலங்கை மீனவர்களே காரணம் என இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு பின்னர் நல்லெண்ண நடவடிக்கையால் நாடு திரும்பியுள்ள தமிழக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
28-fishermen-Betwa-IndiaInk-blog480-v2.j
 
இதுகுறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 
 
நாங்கள், அனுராதபுரம் சிறையில் 2 நாட்கள் இருந்தோம். அதற்கு பிறகு விடுதலை செய்யப்படுவதாகக்கூறி மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, மீனவர்களை மட்டும் விடுதலை செய்வதாகவும் 6 படகுகள், மீன்பிடி சாதனங்களை விடுவிப்பது தொடர்பான விசாரணை ஜூலை 4-ஆம் திகதி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
 
எங்களை விடுவித்தது மகிழ்ச்சி என்றாலும், எங்களையும், குடும்பத்தையும் காப்பாற்றும் படகுகளை விடுவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.
 
இலங்கை கடற்படையினர் எங்களை ஒப்படைக்க அழைத்து வந்தபோது, இலங்கை மீனவர்களே இந்திய மீனவர்களை இலங்கை கடல் பகுதிக்குள் அனுமதிக்கக்கூடாது' என்று வலியுறுத்தி வருவதாகவும், அதனாலேயே இந்திய மீனவர்களை கைது செய்வதாகவும் எங்களிடம் கூறினர். இதன்மூலம் கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு இலங்கை மீனவர்கள் தான் காரணம் என்பது தெளிவாகிறது.
 
சிறையில் இருந்தபோது இலங்கை மீனவ பிரதிநிதிகள் எங்களை சந்தித்தனர். அவர்கள் எங்களிடம் இலங்கை கடல் பகுதிக்குள் தடைசெய்யப்பட்ட இழு வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க வேண்டாம்' என்று கேட்டுக்கொண்டனர்' என்றார்.
 
virakesari
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மீனவர்களின் வேண்டுகோளின் எந்தத் தவறுகளும் இல்லை!

 

ஆனால், கடற்படையினர் கூறியதாகக் கூறி, இலங்கை மீனவர்கள் மீது சுட்டுவிரல்களை நீட்டுவது தான் தவறு!

 

இங்கே வெற்றி பெறுவது, கடற்படையினரே தவிர, இலங்கை மீனவர்களோ, இந்திய மீனவர்களோ அல்ல என்பதைப் புரிந்து கொள்ளும் வரை, மீட்சி எவருக்கும் இல்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.