Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வியட்நாம் தூதுவர் - வடக்கு முதல்வர் சந்திப்பு

Featured Replies

cm%20meet%20viyatnam%2056987.jpg

 

இலங்கைக்கான வியட்நாம் தூதுவரான ரொன் சிங் தங் தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தனர் வியட்நாம் தூதர் இன்று முற்பகல் 11.30 மணியளவில் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்தார். இந்த சந்திப்புக் குறித்து முதலமைச்சர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

 

வியட்நாமின் அனுசரணையுடன் கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்களில் நீர்வாழ் உயிரின மேம்பாட்டுத் திட்டங்களின் நிலைமையை பார்வையிட அந்நாட்டின் தூதர் குழு யாழ்ப்பாணம் வந்தனர். இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சரை இந்த குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது - நாட்டின் பல பாகங்களிலும் பரிசீலனை செய்ததில் வடமாகாணமே நீர் வாழ் உயிரினங்களை வளர்த்தெடுக்கும் தொழிலுக்கு மிகவும் பொருத்தமான இடம் என்பது தெரியவந்தது. இங்கு அதற்கான தொழில் நுட்பப் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளோம். பட்டம் பெற்ற இரு இளைஞர்களைத் தம் நாட்டுக்கழைத்து அங்கு தமது தொழிற்சாலைகளைப் பார்வையிடவும் பயிற்சி பெறவும் உதவியதாகக் கூறினர்.

 

உள்நாட்டு நீர் நிலைகள் வடமாகாண சபையின் அதிகாரத்தினுள் வருவதால் அதன்மூலம் நீர் வாழ் உயிரின இனப் பெருக்கத்திற்கான விஞ்ஞான ரீதியான நடவடிக்கைகளுக்கு நாம் உதவ தயாராக உள்ளோம். இதன்மூலம் உள்ளுர் நீர் நிலைகளில் பெருகி வரும் உயிரினங்களை, குறிப்பாக மீன்கள், கடலட்டை , காணிப் பாசி என்பவற்றை நல்ல விலைக்கு சீனா, யப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். போரினால் பாதிக்கப்பட்டு எதுவுமே இல்லாத ஒரு நிலையில் இருந்த வியட்நாம் இன்று பல இலட்சம் டொலர்களுக்கு மீன் ஏற்றுமதி செய்வதாகவும் தமது நாடு பொருளாதார ரீதியாக மேம்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேற்படி தொழில் நுட்பப் பயிற்சி முறைகளின் வெற்றிக்கு வித்திடும் விதத்தில் தாம் தொடர்ந்து எமக்குப் போதிய உதவிகளை வழங்கப் போவதாகவும் வியட்நாம் தூதுவர் உறுதியளித்தார். என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் பின்னர் ஆளுநரைச் சந்தித்த வியட்நாம் குழுவினர் வேலைத்திட்டம் நடைபெறும் பிரதேசங்களையும் பார்வையிடச் சென்றனர்.

 

malarum.com

 

வடக்கு நீர் நிலை உயிரினங்களை நல்ல விலைக்கு ஏற்றுமதி செய்யலாம் - வியட்னாம்:-
cv_CI.jpg

 

வடமாகாண நீர் நிலைகளில் பெருகி வரும் உயிரினங்களை நல்ல விலைக்கு சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என வியட்நாம் தூதுவர் டோன் சின் தான்ங் தன்னிடம் கூறியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

யாழ் சென்றுள்ள வியட்நாம் தூதுவர் டோன் சின் தான்ங் இன்று காலை 11.30 அளவில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார். 

அச் சந்திப்பின் பின்னர் முதலமைச்சரால் ஊடகங்களுக்கு செய்தி குறிப்பொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அச் செய்தி குறிப்பிலையே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டு இருந்தது. 

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

தம் நாட்டினால் வழிநடத்தப்படும் நீர்வாழ் உயிர் சம்பந்தமான வியட்நாம் தொழில்நுட்ப உதவித் திட்டம் என்ன விதத்தில் கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன என்பதைப் பார்வையிட அவர்கள் வந்துள்ளார்கள். 

நாட்டின் பல பாகங்களிலும் பரிசீலனை செய்ததில் வடமாகாணமே நீர் வாழ் உயிரினங்களை வளர்த்தெடுக்குந் தொழிலுக்கு மிகவும் பொருத்தமான இடம் என்பது கண்டு இங்கு எம் மாகாணத்தில் தொழில் நுட்பப் பயிற்சிகளையும் பாடங்களையும் கொடுத்து வருகின்றனர். 

பட்டம் பெற்ற இரு வாலிபர்களைத் தம் நாட்டுக்கழைத்து அங்கு தமது தொழிற்சாலைகளைப் பார்வையிடவும் பயிற்சி பெறவும் உதவியதாகக் கூறினார். 

அவர்கள் இங்கு வந்து தொடங்கியுள்ள வழிகாட்டல் ஆரம்பத் திட்டமானது ஏற்கனவே வெற்றி கண்டுள்ளது. 

உள்நாட்டு நீர் நிலைகள் எங்கள் வடமாகாண சபையின் அதிகாரத்தினுள் வருவதால் மேலும் மேலும் இப்பேர்ப்பட்ட நீர் வாழ் உயிரின இனப் பெருக்கத்திற்கான விஞ்ஞான ரீதியான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்தால் காலா காலத்தில் உள்ளூர் நீர் நிலைகளில் பெருகி வரும் உயிரினங்களை, மீன்களை, கடலட்டைகளை, காணிப் பாசிகளை எல்லாம் நல்ல விலைக்கு சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என தெரிவித்தனர். 

பதினைந்து வருடங்களுக்கு முன்னர் போரினால் பாதிக்கப்பட்டு எதுவுமே இல்லாத ஒரு நிலையில் இருந்த வியட்நாம் இன்று பல இலட்சம் டொலர்களுக்கு மீன் ஏற்றுமதி செய்வதாகவும் தமது நாடு பொருளாதார மேம்பட்டு வருவதாகவும் அறிவித்தார். 

மேற்படி தொழில் நுட்பப் பயிற்சி முறைகளின் வெற்றிக்கு வித்திடும் விதத்தில் தாம் தொடர்ந்து எமக்குப் போதிய உதவிகளை வழங்கப் போவதாகவும் அவர் என்னிடம் தெரிவித்திருந்தார். 

இச் சந்திப்பின் பின்னர் வடமாகாண ஆளுநரைச் சந்திக்க போவதாகவும் அதன் பின்னர் வேலைத்திட்டம் நடைபெறும் பிரதேசங்களைப் பார்வையிடப் போவதாகவும் அவர் என்னிடம் அறிவித்து விடைபெற்று சென்றார் என அச் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது

gtn

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

அட்லீஸ்ட் ஒரு வேலைத் திட்டமாவது கிடைச்சிருக்கு.  அரசாங்கமும் ஆளுனரும் எங்கையெங்கை  ஆணியடிக்கப் போகினமோ தெரியல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.