Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் முக்கிய மையங்கள் மீதான தாக்குதல் திட்டமும் மொகமட் ஸாகிர் ஹுசைனின் வாக்குமூலமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை துறைமுகம், சென்னை மத்திய ரயில் நிலையம், சென்னை விமான நிலையம் மற்றும் பெங்களூர் நகரம் ஆகியவற்றை இலக்கு வைத்து, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுப் பிரிவின் ஆதரவுடன் இயங்கும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு முயன்றனர்  குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் கைதுசெய்யப்பட்ட இலங்கையரான மொகமட் ஸாகிர் ஹுசைன் என்ற சந்தேக நபர் இது தொடர்பான முக்கியங தகவல்களை வெளியிட்டிருக்கின்றார். இதன் மூலம், இலங்கையில் உள்ள தனது பிரதிநிதிகள் மூலம் பாகிஸ்தான் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை உறுதியாகி உள்ளதாக 'எக்னமிக்ஸ் ரைம்' இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

ஸாகிர் ஹுசைன் கொடுத்த வாக்குமூலத்தின்படி பெங்களூர் இலத்திரனியல் நகரம், தமிழ்நாடு கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவையும் தீவிரவாதத் தாக்குதலுக்கு இலக்கு வைக்கப்பட்டிருகின்றன. இந்த தாக்குதல் நடவடிக்கைக்கான வேவு வேலைகளுக்காக இலங்கையரான 36 வயதுடைய ஹுசைனை முகவராக அமர்த்தி, அவரை சென்னைக்கு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. அமைப்பு அனுப்பி இருந்தமையையும் அவர் ஏற்றுக்கொண்டு இருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஸாகிர் ஹுசைனின், ஆபத்தான இந்தப் பணிக்கு இலங்கையில் இருந்தவாறு நிதி உதவி அளித்து, வழிகாட்டுதல்களை வழங்கி, அவரைக் கையாண்டவர் எனக் கூறப்படும் பாகிஸ்தான் இராஜதந்திரியின் பெயர் விவரங்கள், அடையாளங்கள் உட்பட மேலும் பல விடயங்களையும் அவர் புலனாய்வாளர்களிடம் தெரிவித்திருக்கின்றார் என்றும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இலக்குகளைக் குறி வைப்பதில் தொடங்கி, திட்டமிடல், நிதியளித்தல் போன்றவை அனைத்தையும் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரிகளே கையாண்டனர் என்றும் ஹுசைன் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், ஹுசைனுடன் தொடர்பு கொள்வதற்கு இலங்கை, மலேசியா மற்றும் மாலைதீவு நாடுகளின் பெருமளவிலான தொலைபேசி இலக்கங்களையும் பயன்படுத்தி இருக்கின்றமையும் விவரமாகத் தெரிய வந்திருப்பதாக 'எக்னமிக்ஸ் ரைம்' இதழ் கூறுகிறது

இதேவேளை விசாகப்பட்டினம் மற்றும் கொச்சின் கடற்படைத்தளங்கள், சென்னைத் துறைமுகம், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவற்றில் பணியாற்றும் நம்பகமான தரப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறு ஹுசைன் அறிவுறுத்தப்பட்டிருந்தார்.
 
கூடவே சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், சென்னைத் துறைமுகத்தின் கப்பல் தளம், சென்னை விமான நிலையம், சென்ரல் ரயில் நிலையம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் துணைத் தூதரகம், பெங்களூர் விமான நிலையம் ஆகியவற்றைப் படம் எடுத்து அனுப்பும்படி 2013 ஜுனில் ஹுசைன் அறிவுறுத்தப்பட்டாராம். அதன்படி அவர் படங்களை எடுத்து அனுப்பியுள்ளார். கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் உயர் அதிகாரி ஒருவரின் மடிக்கணினியை திருடி எடுத்துவர முயலும்படியும், அந்தத் தூதரகத்தில் பணியாற்றும் தொடர்புகள் மூலம் அத்தூதரகத்தின் மின் அஞ்சல் தொடர்புகளை களவாகப் பெற்றுக் கொள்ள எத்தனிக்கும்படியும் 2013 ஜுலையில் ஹுசைன் பணிக்கப்பட்டிருந்தார்.

பாகிஸ்தான் பிரஜைகள் இந்தியாவுக்குள் களவாகப் பயணிப்பதற்காக அவர்களுக்குப் போலியாக இலங்கைக் கடவுச் சீட்டுக்களை தயார்படுத்திக் கொடுப்பது உட்பட பல பிரமிக்க வைக்கும் வேலைகளைத் தாம் செய்திருக்கின்றார் என்பதையும் ஹுசைன்ஏற்றுக் கொண்டுள்ளதாக கொண்டார் என 'எக்னமிக்ஸ் ரைம்' செய்தி தெரிவிக்கின்றது.

இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்று கூறப்படும் - இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் - பல இராஜதந்திரிகளின் பெயர் விவரங்களையும் அந்தப் பத்திரிகை தனது செய்தியில் வெளியிட்டுள்ளது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108105/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.