Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மாணவர்களின் கவனயீர்ப்பு போராட்டம்

Featured Replies

ஈழத்தமிழர்களின் நிலத்தை சிறீலங்கா அரசு ஆக்கிரமிப்பதை தடுத்து நிறுத்து ஐ.நா முன்னிலையில் பொது வாக்கெடுப்பை நடத்து போன்ற கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் கவனஈர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.
 

porattam.jpg
 

முள்ளிவாய்க்கால் முடிவல்ல தமிழ் ஈழத்தில் -தமிழர்கள் மீது நடந்த இனப்படுகொலை -சிங்கள அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டது ! மனித உரிமை சின்னாபின்னப்படுத்தப்பட்டது !

பெண்ணுரிமை சீரழிக்கப்பட்டது ! குழந்தைகள் உரிமை கொன்று புதைக்கப்பட்டது ! பாலச்சந்திரன் மரணமே சாட்சியாய் நிற்கிறது !

உலகமே இதை மௌனமாய் வேடிக்கைப்பார்த்தது ! ஜனநாயகத்தைப் பேணி பாதுகாப்பதாகத் துடித்து நடிக்கும் வல்லரசாகிய எத்தர்கள் தமிழீழ விடுதலையை முடிந்தவரை தடுக்கிறார்கள். முள்ளி வாய்க்காலில் நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலையே !

அதை எவன் மறுத்தாலும் அவன் மனிதனில்லையே !
தற்போது ஈழத்தமிழர்களின் நிலத்தை இலங்கை அரசு ஆக்கிரமித்து நடப்பது உள்கட்டமைப்பு சிதைப்பே ! 2009 வரை இலங்கையில் நடைபெற்றது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை போருக்குப் பின் இலங்கையில் நடைபெறுவது தமிழினத்தை துடைத்து எறியும் கலாச்சார சீரழிவே !

இதுபோன்ற மிகக்கொடூரமான இனஅழிப்பு இந்த நூற்றாண்டில் வேறெங்கும் நடைபெறவில்லை. தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்பது ஒவ்வொரு தமிழனின் தலையாயக் கடமையாகும். தனி ஈழக் கனவு நெடுந்தொலைவில் இல்லை.

இந்திய அரசே!

ஈழத்தமிழர்கள் மீது நடக்கும் திட்டமிட்ட இன அழிப்பு மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரியும் இலங்கை அரசு மீது ஐ.நா முன்னிலையில் சர்வதேச சுயாதீன விசாரணை உடனே நடத்து.

ஈழத்தமிழர்களின் நிலத்தை இலங்கை அரசு ஆக்கிரமிப்பதை தடுத்து நிறுத்து!

ஐ.நா முன்னிலையில் பொது வாக்கெடுப்பை நடத்து!!!

நாள்: ஜூன் 18, நேரம்:காலை,10மணி

இடம்: தலைமை தபால் நிலையம், பாரிமுனை, சென்னை.

ஒருங்கினைப்பு: மாற்றம் மாணவர் இளையோர் இயக்கம், தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு, தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு, தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு, முற்போக்கு மாணவர் முன்னணி ,பாலச்சந்திரன் மாணவர் இயக்கம், கேம்பஸ் பிரன்ட் ஆப் இந்தியா. தமிழர் நலன்காக்கும் இயக்கும்,

தொடர்புக்கு: 9940364232 ,9884890103


தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

 

http://www.pathivu.com/news/31694/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.