Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் முஸ்லீம் உறவும் எதிர்கால அரசியல் இருப்பும்..

Featured Replies

உலக வல்லாதிக்க நாடுகளின் கண்களில் பல தலைமுறைகளாக  பல்வேறு காரணங்களால் உறுத்திக்கொண்டிருக்கும் இலங்கைத்தீவின் சுகந்திரத்தோடு ஆரம்பிக்கும் இனவாத வரலாற்றை நோக்கினால், உள்ளெரியும் இனமுரண்பாடுகள்  ஊதி பெருப்பிக்கப்பட்டு கொழுந்துவிட்டுப் பரவும் காலப்பகுதியாகவும், முழு இலங்கைத்தீவும் பதற்றத்துடன் அணுகும் காலமாகவும் யூன் யூலை  ஆகஸ்ட் மாதங்களே தொடர்ந்தும்  இருந்து வந்துள்ளதை அவதானிக்கலாம்.

 

இனமுரண்பாடு கூர்மையடையக் காரணமான தனிச் சிங்களச்சட்டமும் (02.06.1956)சரி முழு இலங்கையையும் கலங்கவைத்த வெலிக்கடைப் படுகொலைகளும் சரி அண்மைய தர்க்கா நகர் அளுத்தகம மத வன்முறைகளும் சரி  இந்தக் காலப்பகுதியில் தான் நடந்தேறியிருக்கிறது. மற்றைய காலங்களில் ஓரளவு இனமுரண்பாடுகள் நிகழ்ந்தாலும், இந்த மாதங்களின் நிகழும் வன்முறைகளைப் போல பெருமளவு  தீப்பற்றி எரிவதில்லை எனலாம். நிற்க,

 

இனவாதத்தளத்தின் மூலம் சிங்கள மேலாண்மையைக்  கட்டமைக்கும் அரசாங்கத்தின் படிமுறைகளில் ஒன்றாக உருவாக்கம் பெற்றுள்ள   பௌத்தவாதம், தேர்ந்து எடுக்கப்பட்ட கடும் தீவிர பௌத்த துறவிகளின் கைகளில் பூமாலையாக சுற்றப்பட்டுக் கிடக்கிறது. இதற்கான முழு வேலைத்திடங்களும் அரசின் நிகழ்ச்சி நிரல் மூலமே செயற்டுத்தப்பட்டு வருகின்றமை தெளிவானது. எல்லோராலும் ஏன் தமிழ்ச்சிறுபான்மையினர்  கூவி அழைக்கும் சர்வதேசத்தினராலும் நன்றாக புரிந்துகொள்ளப்படுள்ளது.

 

தமிழர்கள் மீது மொழிரீதியான இனவாதமாக விழுந்த பேரினவாதக் காடைத்தனம்  இலங்கை முஸ்லீம்களின்  மீது  மதவாதமாக விழுந்துள்ளது. வடிவங்களை மாற்றி இனவாதத்தை கட்டவிழ்த்துவிடும் அரசானது தன் பேரினவாத நிறைவேற்று அச்சில் இருந்து துளியளவேனும் மாறவில்லை. மாறப்போவதுமில்லை. இதனை தமிழ்ச்சமூகமும் செயற்பாட்டளர்களும் புரிந்து கொள்வார்களா என்ற கேள்வியையே இங்கு தோற்றுவித்திருக்கிறது  .

 

முள்ளிவாய்க்கால் அவலத்துடன் கைமாற்றப்பட்ட பேரம் பேசும் ஆற்றலை, கைவிட்டுவிட்டு  அல்லது விரும்பாமலேயே  அதில் ஒரு சிறுபகுதியை மட்டும் தொட்டுக்கொண்டு இனவாத அரசின் நிழல்களில் உறங்கிக்கொண்டே அரசியல் தீர்வுகள் குறித்து ஆலோசிப்பதாகவும் புனர்வாழ்வு கட்டமைப்புக்களை சீரிய முறையில் அனுகுவதாகவும் தமக்கு வாக்களித்த  மக்களை ஏமாற்றிக்கொண்டு நாட்களைக் கடத்தும் ஒரு தரப்பும், அரசுடன் ஒரு உடன்பாட்டின்   மூலமாக குறிப்பிடத்தக்களவு அதிகாரங்களை உடனடியாக பெற்றுக்கொண்டும் அதிலிருந்து படிப்படியாக மேலதிக அதிகாரங்களை பெற முயல்வது என்ற ஒரு உத்திசார் கோட்பாட்டினை கொண்ட ஒரு தரப்பினராகவும் இயங்கிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் மற்றும்  செயற்பாட்டாளர்கள் செயற்பாட்டாளர்கள்  முஸ்லீம் சிறுபான்மையினர் மீதான வன்முறைகளில் இருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள் தான் இலங்கையில் இனிவரும் காலங்களில் சிறுபான்மையினருக்கான தீர்வுகளை முன்னெடுக்கப்போகிறது.

 

இலங்கை முழுதும் பரந்துவாழும் முஸ்லீம்கள்  முள்ளிவாய்க்காலுக்கு முன் நிகழத்திய  அரசியல் வகிபாகமும், தமிழ்பேசும்  சிறுபான்மை இனமானது கையறுநிலைக்கு தள்ளப்படதன் பின்னான காலப்பகுதியில் நிகழ்த்தும் அரசியல் வகிபாகமும் ஆழந்து நோக்கப்படவேண்டியதாகும்.

 

தமிழ்ச் சிறுபான்மை இனம் பேரம் பேசும் வலுவுடன் இருந்த காலப்பகுதிகளில், முஸ்லீம் மக்களின் தலைவர்கள் இலங்கையின் பேரினவாத அரசுடன் நட்பு அரசியலை மேற்கொண்டு இருந்தார்கள். தங்களுக்கு எப்போதெல்லாம் பொருளாதார அரசியல் இருத்தல் தொடர்பிலான பிரசன்னைகள் வருகின்றனவோ அப்போதெல்லாம் நட்பு அரசியலை களைந்து எதிர்ப்பு அரசியல் செய்து தங்கள் இருத்தலையும் இனமான உணர்வுகளையும் பகட்டாக வெளிக்கொண்டு வந்திருதார்கள். ஆட்சி மாற்றங்களை தீர்மானிப்பவர்களாகவும், தமது மக்களின் வாழ்வாதாரங்களுக்கு உரிய கோரிக்கைகளை சந்தர்ப்ப சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு  மிடுக்குடன் கேட்டுப் பெற்றுக்கொள்ளும் தரப்பாகவும் இருந்து வந்திருந்தனர்.

 

சிறுபான்மை தமிழ் பேசும் மக்களின் பேரம் பேசும் ஆற்றல் உடைத்தெறியப்பட்டதன் பினான காலப்பகுதியில் இதே முஸ்லீம் அரசியல் வாதிகளின் வகிபாகம் முழுமையாக மாற்றமடைதிருந்தது. இனவாத அரசின் அனைத்து செயற்பாடுகளுக்கும் ஆதரவு கொடுத்து  போர்க்குற்றங்களை நீர்த்துப்போகவும், அரசுடன் துணை நின்று தமிழ் தரப்பினரின் அபிலாசைகளை இயன்றவரை ஒடுக்கியும்,  தமிழ் பேசும் தரப்பினருக்கு  அதிகாரமையங்கள் கிடைக்காமல் இருக்கவும் மட்டுமே தமது விசுவாசங்களை காட்டிக்கொண்டனர்.

 

குறிப்பாக இலங்கையின் நீதி அமைச்சு உற்பட சில முக்கிய அமைச்சுக்கள் முஸ்லீம் சிறுபான்மையினருக்கே வழங்கப்பட்டுள்ளது என்ற பிரச்சாரத்தினை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்லவும், அதன் மூலம் இரண்டாம்  உலக முஸ்லீம் நாடுகளை திருப்திப்படுத்தி இனவாத அரசினை போர்க் குற்றங்களில் இருந்து காப்பாற்றவும் துணை நின்றனர்.

 

இவற்றின்  விளைவாக முஸ்லீம் அரசியல் தரப்பினர்  அரசினை பயன்படுத்திய அல்லது மிதவாததால் மிரட்டிய காலம் போய்  முழுமையாக இணக்க அரசியல் அல்லது சமர அரசியல் என்பதையும் தாண்டி அடிபணிவு அரசியல் செய்யும் நிலைக்கு தள்ளப்படு உள்ளனர்.

 

எவ்வாறு இலங்கை இனவாத அரசானது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கு இருந்த வாக்கு வங்கியினை உடைத்து அந்த இடத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டதோ அதேநிலமையினை முஸ்லீம் அரசியல் தரப்புக்கும் உருவாக்கும் நோக்குடன் மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. முழுமையான இணக்கம்  ஒன்றினை செய்வதுபோல நடித்து பயன்படுத்திவிட்டு தம் இனவாத கிளைகளால் தாக்கும் பேரினவாத இருப்பியல் உத்திகளை பயன்டுத்திக்கொண்டார்கள்.

 

 இதனை முழுமையாக உணர்ந்துகொண்டும் எதுவும் செய்யமுடியாத நிலையில் நின்றுகொண்டே வெட்கப்படுகிறோம், அவமானப் படுத்தப்படுகிறோம், அமைச்சரவை விடயங்களை பொதுவெளியில் பேசமுடியாது நல்ல தீவு கிடைக்கும் என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டுகின்றனர். இவர்களின் இந்த சப்பைக்கட்டுக்கு முன்னோடிகள் சம்மந்தர் சுமந்திரன் போன்ற அரசியல்வாதிகள் தான் என்பதும் இந்த இடத்தில் நினைவு கூறப்படவேண்டியது. அரசியலைப் பொருத்தவரை தற்சமயம் அரசில் இருந்து வெளியேற முடியாத நிலையினை அரசு உருவாக்கி வைத்திருக்கிறது. வெளியேறினால் முஸ்லீம் தலைமைகள் தங்கள் இருப்பு செலாக்காசாகி விடும் என்பதனால் மக்களின் அவலங்களை கடந்தும் இன்னும் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

 

எவ்வாறு தமிழ் பேரம் பேசும் சக்திகளின் அழிவுக்குப் பின்னால் முஸ்லீம் மக்களின் இருத்தல் அழிப்புக்கு உள்ளாகிறதோ  அதேபோல மீள ஒருமுறை தமிழ் மக்களின் இருத்தல் முழுமையாக இல்லாமல் செய்யப்படும்.இதன் மூலம் இலங்கை நாடானது முழுமையான ஒரு பௌத்த சிங்கள நாடாக உருமாற்றம் செய்யப்படும்.

 

இலங்கை இனவாத அரசினைப்பொறுத்தவரையிலும், உடன்பாட்டு அரசியலுக்கு என்றுமே தயாராக இருந்ததில்லை, இணக்க அரசியல் என்னும் அடிபணிவு அரசியலுக்கே தயாராக இருக்கிறது. அது பொதுபலபலசேனா முடக்கப்பட்டால்  இன்னொரு கஜபல சேனாவை உருவாக்கும்.

 

இந்நிலையினை இலங்கை வாழ் சிறுபான்மை இனங்கள் எவ்வாறு  எதிர்கொள்ளப்ப போகின்றன என்பதில் தான் இலங்கை சிறுபான்மை இனங்களின் இருப்பு தங்கி இருக்கிறது. வெறுமனே கோசங்களை பதாதைகளை ஆர்ப்பாட்டங்களை மட்டும் நடத்தி விட்டு ஒதுங்கிப் போவதுடன் நில்லாமல் தமிழ் - முஸ்லீம் தரப்பினர் இதயசுத்தியுடனான ஒருமைப்பாட்டுக்கு வரவேண்டும். பரஸ்பர நம்பிக்கையும் இதயசுத்தியுடனான அர்ப்பணிப்பும் இருந்தால் மட்டுமே அதற்க்கான ஆரம்ப சுழிகளை இடமுடியும்.

 

முஸ்லீம்கள் தாக்கப்டும் போதில் உள்ளூர மகிந்துகொண்டு ஒப்புக்காக அரசியல் செய்வதைவிடுத்து தமிழர்களும், தமிழர்கள் தாக்கப்படும் போதில் மௌனம் காத்து பேரினவாத அரசின்  நிகழ்ச்சிநிரலை பாதுக்காத்துக்கொண்டு முஸ்லீம்களும் இருப்பதைவிடு நியாயபூர்வமான செயற்பாட்டுக்கு முன்வரவேண்டும். குறிப்பிடத்தக்களவு முஸ்லீம் தமிழ் மக்களிடையே புரிந்துணர்வுடன் கூடிய நல்லிணக்கம் காணப்படுகிறது. அதனை மேலும் வளர்த்தெடுக்கும் பணியினையே முதற்கட்டமாக செய்யவேண்டும்.

 

தொடர்ந்தும் முஸ்லீம், தமிழ்,மலையக   அரசியல்தலைவர்கள் கண்மூடித்தனமான, கேள்விகளற்ற ஆதரவினை அரசுக்கு வழங்க முன் வருவார்கள்  என்றால் முஸ்லீம் மக்கள் உளப்பூர்வமாக சொன்ன இன்னொரு தலைவர் பிரபாகரன் உருவாகுவார் என்பதனை  காலம் உணர்த்தும்.

 

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=aa1dcd1f-abd9-450b-afec-99905ad2a482

 

Edited by நெற்கொழு தாசன்

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வாறு தமிழ் பேரம் பேசும் சக்திகளின் அழிவுக்குப் பின்னால் முஸ்லீம் மக்களின் இருத்தல் அழிப்புக்கு உள்ளாகிறதோ அதேபோல மீள ஒருமுறை தமிழ் மக்களின் இருத்தல் முழுமையாக இல்லாமல் செய்யப்படும்.இதன் மூலம் இலங்கை நாடானது முழுமையான ஒரு பௌத்த சிங்கள நாடாக உருமாற்றம் செய்யப்படும்.//

திகிலூட்டும் யதார்த்தம்... :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.