Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாணசபையின் இன்றைய அமர்வில் 6 பிரேரணைகள் நிறைவேறின! - சபை நடுவே சிவாஜிலிங்கம் போராட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கு மாகாணசபையின் இன்றைய அமர்வில் 6 பிரேரணைகள் நிறைவேறின! - சபை நடுவே சிவாஜிலிங்கம் போராட்டம். Top News
[Thursday, 2014-06-26 17:11:12]
sivaji-protest-npc-150-news.jpg
வடமாகாண சபையின் 11 ஆவது அமர்வு இன்று மின்தடையால் தாமதமாக ஆரம்பமாகி நடைபெற்று முடிந்துள்ளது. வழமையாக 9.30 மணியளவில் ஆரம்பமாகும் அமர்வு இன்று மின் தடை காரணமாக 10. 45 மணியளவில் ஆரம்பமாகியது. வடக்கு மாகாண சபைக்குச் சொந்தமான மின்பிறப்பாக்கியும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் மின்சார சபையின் மின் விநியோகம் அப்பகுதிக்குக் கிடைத்த பின்னரே சபை அமர்வுகள் ஆரம்பமாகின. இன்றைய அமர்வில் 6 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
உறுப்பினர் அஸ்மின் கொண்டு வந்த, அண்மையில் அளுத்கமையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுக்க கோரும் பிரேரணை மீதான விவாதத்தில், சபை உறுப்பினர் சயந்தன், சித்தார்த்தன், சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், சுகிர்தன் , ஆனல்ட் மற்றும் ரவிகரன் ஆகியோர் அதனை ஆதரித்து உரையாற்றினர்.
 
அடுத்து ரவிகரனால் சமர்ப்பிக்கப்பட்ட முல்லைத்தீவில் மீனவர்களின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றது. தென்பகுதியில் இருந்து வந்து தடைசெய்யப்பட்ட முறையில் அட்டை பிடித்து வருகின்றனர் எனவே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரேரணை எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனை ஆதரித்து பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் உரையாற்றினார். இந்தப் பிரேரணைக்கு வடக்கு மீன்பிடி அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
 
3ஆவது பிரேரணையாக ரவிகரன் முன்வைத்த விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் அதனை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரேரணை எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனை பிரதி அவைத்லைவர், விந்தன் கனகரத்தினம் ஆதரித்து உரையாற்றினார். மேலும் ஆனல்ட் உரையாற்றும் போது நாம் விளையாட்டுக்களை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம். அத்துடன் தேசிய போட்டியில் நுழைந்துள்ளோம். அவர்கள் மேலும் பல பதக்கம் வாங்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றார். பிரேரணை தீர்மானமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
 
தொடர்ந்தும் 4ஆவது பிரேரணையாக உறுப்பினர் ரவிகரனால் கொண்டு வரப்பட்ட, தொண்டர் ஆசிரியர் நியமனம் தொடர்பில் வன்னி தொண்டர் ஆசிரியர்களுக்கும் நியமனம் வழங்க கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரேரணை. அதனை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன், மேரி கமலா குணசீலனும் ஆதரித்தனர்.
 
சபை நடுவில் அமர்ந்து சிவாஜிலிங்கம் எதிர்ப்பு போராட்டம்
 
எதிர்ப்புப் போராட்டத்தை சபை நடுவில் இருந்து மேற்கொண்ட உறுப்பினர் சிவாஜிலிங்கம் போராட்டத்தை 5 நிமிடத்தில் முடித்துக் கொண்டார். இவரால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைகளில் 3 பிரேணைகள் அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என கடந்த மூன்று கூட்டங்களில் அவைத் தலைவரால் உறுதிமொழி வழங்கப்பட்டது. எனினும் இதுவரை அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்றும் இன்று ஆவது குறித்த பிரேரணைக்கான சந்தர்ப்பம் வழங்கப்படுமா என்று கேட்ட போதும் இன்றும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டு இருக்கவில்லை. இதனால் தனக்கு சிறப்பு உரிமை மீறப்பட்டுள்ளது என்பதற்காக சபை நடுவில் இருந்து எதிர்ப்பினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் சக உறுப்பினர்களுக்கு வேண்டுகோளுக்கு இணங்க எதிர்ப்பு நடவடிக்கையினை உறுப்பினர் கைவிட்டுள்ளார்.
 
வடக்கு மாகாண சபையின் 11ஆவது அமர்வில் கொண்டு வரப்பட்ட 7 பிரேரணைகளில் 6 பிரேரணைகள் சபையில் ஏகமகதாக நிறைவேற்றப்பட்டதுடன் ஒரு பிரேரணை எதிர்வரும் அமர்விற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றை கூட்டத்திற்கு உறுப்பினர் அஸ்மின், ஒரு பிரேணை , ரவிகரன் 3பிரேரணைகள், கஜதீபன் ஒரு பிரேரணை, அங்கஜன் இராமநாதன் 2பிரேரணைகள் உள்ளடங்கலாக 7பிரேரணைகள் சபையில் கொண்டு வரப்பட்டது. எனினும் உறுப்பினர் அங்கஜனின் பிரேரணைகளில் ஆசிரியர் தொடர்பான பிரேணை அடுத்த அமர்வுக்கு ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
சபையின் அடுத்த அமர்வு ஜூலை 12ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.http://www.seithy.com/breifNews.php?newsID=112039&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.