Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்மவர் குறும்படங்கள்!!

Featured Replies

  • தொடங்கியவர்

19. வச்சாக் குடும்பி

 

வயிறு குலுங்க சிரிக்க வேண்டுமா? இந்த குறும்படத்தை தவறாமல் பாருங்கள். முன் தலையில் முடி குறைவாக இருக்கும் ஓர் இளைஞன் படும் அவஸ்தைகளை நகைச்சுவையோடு சொல்கிறது இந்தவச்சாக் குடும்பி”.

 

எல்லோருக்கும் முன்பாக, அதிலும் குறிப்பாக பெண்களுக்கு முன்னால் ஸ்டைலிஷ் ஆக இருக்க விரும்பும் இளைஞர்களுக்கு முன் தலை மொட்டையாக இருந்தால் அதை பெரிய அவாமானமாகவே எடுத்துக்கொள்வார்கள்.

 

அதே போல் தான் நம்ம ஹீரோ முடி வளர்க்க பார்மசியில் உள்ள மருந்தை எல்லாம் தன் தலையில் பரிசோதிக்கிறார். கூகிளில் தேடுகிறார், ஆனால் முடிதான் வளரவே மாட்டேன் என்கிறது. கடைசியில் ஹீரோவின் முறைப்பெண் வீட்டுக்கு வரப்போவதாக சொல்ல அவஸ்தை மேலும் அதிகரிக்கிறது.

 

http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/104082/

 

https://www.youtube.com/watch?v=Y-baFhnASyk

  • Replies 141
  • Views 10.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

20. மிச்சக்காசு

 

சமீப காலமாக தனது குறும்படங்கள் மூலம் பேசப்பட்டு வரும் இளம் ஈழத்தமிழர் மதி. சுதா. நோக்கியா C7 மொபைலில் எடுக்கப்பட்டரொக்கெட் ராஜாமற்றும்துலைக்கோ போறியள்உள்ளிட்ட குறும்படங்களை இதற்கு முன்பு இயக்கி இருக்கிறார். அடுத்ததாக வெளிவந்த படைப்புதான் மிச்சக்காசு.

சங்கர் எனும் சிறுவன் நாயகனாவும், கடைக்காரராக மதி.சுதாவும் நடித்திருக்கும் மிச்சக்காசு 2014 ஆம் ஆண்டு நடந்த AAA சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்றுள்ளது. மிச்சக்காசு முழுக்க சாம்சங் S3 மொபைலில் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.jillmore.com/mathisuthas-micha-kaasu-short-film

 

https://www.youtube.com/watch?v=yrMBar0cnM4

 

  • தொடங்கியவர்

21. பிசகு

 

மூடப்பட்ட ஓர் தனி அறைஅந்த அறைக்குள் அடைக்கப்பட்டிருக்கிறான் ஓரு 25 வயது மதிக்கத்தக்க இளைஞன். குறுக்கும் நெடுக்குமாக நடப்பது, தனக்குத்தானே பேசுவது உட்பட அவனது செய்கைகளை பார்க்கும்போது அவனொரு சித்த சுவாதீனமற்றவன் போல் தோற்றமளிக்கிறான்.

 

யாரோ எதிரில் இருப்பதாக பாவித்து பேசுகிறான். ஆம், அவனது காதலியிடம் பேசுகிறான். இப்போது கதை பின்னோக்கி செல்கிறது. காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவன் மனைவிக்கிடையில் புரிந்துணர்வின்மையால் மோதல் ஏற்படுகிறது. காரில் பயணித்துக்கொண்டிருக்கும்போது சண்டைபிடித்துக்கொண்டு கீழே இறங்குகிறார்கள். மனைவியை கைநீட்டி அடிக்கிறான் கணவன். மனைவி கோபித்துக்கொண்டு செல்ல, கணவன் பின்னே அவளை கூப்பிட்டுக்கொண்டு செல்ல, திடீரென்று அவனை நோக்கி வேகமாக வரும் கார் ஒன்று……… 

 

அந்த இளைஞன் ஏன் அப்படி ஆனான், இறுதியில் என்னாயிற்று என்பதே குறும்படத்தின் கதை. சாதாரண கதைதான் எனினும் வலுவான திரைக்கதையால் குறும்படம் மெருகேறியிருக்கிறது. குறிப்பாக இளைஞனாக நடித்திருக்கும் தயானின் நடிப்பு அட்டகாசம். எடிட்டிங் நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவு ஆஹா என்று சொல்லமுடியாவிட்டாலும் உறுத்தலில்லாமல் அளவாக இருக்கிறது.

 

பிரான்ஸில் நடைபெற்ற சங்கியான் விருது போட்டியில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றிருக்கிறதுபிசகுகுறும்படம் !

 

https://www.youtube.com/watch?v=LJva7CJFyGo

  • தொடங்கியவர்

22. மூக்குப்பேணி

 

ஆக்கியவர்:- .இராகவன்
நாடு:- இலங்கை
ஆண்டு:- 2004

https://www.youtube.com/watch?v=2JFRSQR_2hM

  • தொடங்கியவர்

23. ஒரு சூடு

 

கதை,

வசனம்,

இயக்கம்: பொ.தாசன்

 

https://www.youtube.com/watch?v=pI1YgRAc5w8

  • தொடங்கியவர்

24. நடை நடையாய்...

 

https://www.youtube.com/watch?v=DtYrVIIRq7k

  • தொடங்கியவர்

25. நட்பின் காதல்

 

கதை & இயக்கம் : சதீஸ்

ஒளிப்பதிவு படத்தொகுப்பு : கேதாரன்

தயாரிப்பு : விழிகள்

2007-2008

 

https://www.youtube.com/watch?v=Y12HK_9bAaQ

  • தொடங்கியவர்

26. நீ இடைவெளி நான்

 

திரைக்கதை,

இயக்கம்: சதாபிரணவன்

 

https://www.youtube.com/watch?v=XoyqzAUNT9s

  • தொடங்கியவர்

27. THEFT குறள் 282

(ஒரு நிமிட குறும்படம்)

 

மட்டக்களப்பில் இருந்து வெளியாகியுள்ளது “THEFT குறள் 282” என்னும் ஒரு நிமிட குறும்படம். வித்தியாசமான தலைப்புடன் வெளியாகியுள்ள இக்குறும்படம்உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்என்ற 282 ஆவது திருக்குறளினை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. அதாவது இக்குறும்படத்தின் கருஅடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானதுஎன்று சொல்கிறது.

 

My Heart Creation தயாரித்துள்ள இக்குறும்படத்தை சஜித் இயக்கியுள்ளார். வரப்பிரகாஷ், வேணுதரன் ஆகியோர் நடித்திருக்கும் இக்குறும்படத்துக்கான VFX வேலைகளை  மேகவண்ணனும், எடிட்டிங்கினை வேணுதரனும் செய்திருக்கிறார்கள்.

 

https://www.youtube.com/watch?v=vRPv0GGhpy0

  • தொடங்கியவர்

28. சதம்

 

Casting : STS Nantha, GT Shanth, Manni Vasuthevan(Guest Appearance) 

Music : GT Shanth
Cinematography : PG Krish
Editing : PG Krish
Written & Directed by : STS Nantha

மதிப்பு குறைந்த விடையங்களை கண்டுகொள்வதேயில்லை, உதாசின படுத்துகிறோம், தேவைபடுகின்ற தருணங்களில் அதன் மதிப்பை கணிக்கின்றோம், என்று அரை சதம் அடித்து கூறியிருக்கிறார்கள் இக்குறும்பட குழுவினர்கள்.

2 சதம் ஒன்றை தவறுதலாக போட்டு விட்டு கண்டு கொள்ளாமல்  ஒருவர் வழியில் நகர்கிறார், அதை அவதானித்த நபர் ஒருவரின் பிளாஷ் பாக் தொடர்கிறது, இவ்வாறு சில்லறைகளை பெரிதாக மதிக்காமல் செயல் படும் அந்த நபரின் நிலை வேலையின்மை, பொருளாதார ரீதயில் பாதிக்க படுகிறார், 1.50£ க்கு சில்லறை இல்லாமல் சாப்பிட முடியாமல் வறுமையின் உச்சத்துக்கு தள்ளப்படுகிறார், மதிப்பு தெரியாமல் கீழே விழுத்திய சில்லறைகளை ஒன்றாக பொறுக்கி வயிற்றின் பசியை தீர்த்து விடுகிறார், அப்பொழுது தேடிகொண்டிருந்த வேலை கிடைத்து விடுகிறது, அதற்கு பின் வசதி வாய்ப்புடன் வாழ்கிறார், சிறு துளியாக சில்லறைகளை சேகரித்து பெரும் துளிகளாக பரமாரிக்கிறார் என்று கதை நகர்கிறது, இறுதியில் வீதியில் சதத்தை போட்ட நபரின் நிலமை எப்படி என்பதை சில நொடிகள் கூறி விடுகிறது.

ஒளிப்பதிவு, பின்னணி இசை இக்குறும்படத்தின் ரசனையை உயர்த்தியுள்ளது. அதிலும் எடிட்டிங் போதுமானதாக கொடுத்திருப்பது நன்று.

சில நகைச்சுவை காட்சிகள் சிரிக்கவும் வைக்கிறது, சிந்திக்கவும் வைக்கிறது, உதாசினபடுத்தும் மதிபின்மையை குறைக்கும் எண்ணங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று விழிப்புணர்வை உணர்த்துகிறது.

https://www.youtube.com/watch?v=-AJqvPLE1QI

  • தொடங்கியவர்

29. துரோகம்

 

ராம்ஜி அவர்களின் இயக்கத்தில், கஜன் டினோஜன், சயந்தன் ஆகியோரின் நடிப்பில் துரோகம் குறும்படம் வெளியாகியுள்ளது

derect by K.Ramji
act by Kajan,Dinoyan,Sayanthan
this is the fist film of ramji

மூன்று நண்பர்கள், அவர்களுக்கிடையில் நடக்கும் கற்பனையின் பேராசையின் விளைவுகள், அதன் துரோகத்தின் பக்கங்களாக இக்குறும்படம் வெளியாகியுள்ளது.

கல்லூரியில் படிக்கும் மூன்று, நண்பர்கள் ஒன்றாக வசிக்கிறார்கள், அவர்களுக்கிடையில் நடக்கும் ரகளைகள் என்று ஆரம்பிக்கிறது, விடிந்தால் நூலகம் போக வேண்டும் என்று கூறி விட்டு தூங்கி விடுகிறார்கள், நூலகத்தில் எதிர் பாரத விதமாக மூவரில் ஒருவர் இயல்பாக புத்தகமொன்றை தேடும்பொழுது ஓர் மப் (map) ஒன்று கையில் மாட்டுகிறது, அதில் அடையாளத்தை இனம்கண்டு தேடி போகிறார், அப்பொழுது இரத்தின கல் புதைந்து கிடந்ததை எடுத்து வந்து அம்பானியாவதற்கு திட்டத்தை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்கிறார், ஆனால் அந்த இரு நண்பரும் அவருக்கு தெரியாமல் வேறொரு திட்டம் போடுகிறார்கள், இறுதியில் அது வேறு வடிவில் வந்து முடிகிறது, என்று நண்பர்களுக்கிடையில் நடக்கும் துரோகத்தையும், பேராசையின் விளைவுகளையும் உணர்த்த முயற்சித்துள்ளார் இயக்குனர் ராம்ஜி அவர்கள்.

இளம் கலைஞர்களின் முயற்சியில் இக்குறும்படம் வெளியாகியுள்ளது, வரவேற்க கூடிய முதல் முயற்சி, துரோகத்தின் புலம்பலை சற்று வேகத்துடன் நகர்த்தியுள்ளார்கள், சில காட்சிகள் அதிரடி முனைகள், இளங் குருதியின் திட்டங்கள், ஆசைகள் என்பன குறும்படம் சொல்லுகிறது.

ஆனால் ஒட்டாத திரைக்கதையமைப்பு, 1/2 மணி நேர இழுத்தடிப்பு, , நடிகர்களின் கமெரா தயக்கம், பொறுமையை சோதிக்கும் காட்சிகள் என்று சில குறைகள் இருக்கின்றது, நம்பிக்கையின் எதிர் பாகம்தான் துரோகம், அதனை கொஞ்சம் நேர்த்தியாக கவனித்திருக்கலாம்.

நம்பிக்கைக்கு தரமான நண்பர்கள் இவர்கள் என்பதற்க்கு ஒரு காட்சியுமில்லை ஆனால் துரோகம் என்று முத்திரை குத்துவது சரியா என்று சில கேள்விகள் கேட்க்க வைத்தாலும்.

ஒளிபதிவின் வீரியமும், தெளிவும், குறும்படத்தை தூக்கி நிறுத்துகிறது, விறு விறுப்பாக பயணிக்கிறது, இதெல்லாம் இப்படி சாத்தியமா என்று திரைகதையினை நியாயம் கேட்டால் அதற்க்கான பதிலை இறுதியில் கொடுத்திருப்பது சாமர்த்தியம்.

 

https://www.youtube.com/watch?v=W126F2VEn_8

  • தொடங்கியவர்

30. கொல்லாதே

 

வவுனியா பொன் மீடியயா கலையகம் வழங்கும் S.சுபாசிங்கம் இயத்தில், ஸ்ரீநிவாஸ் நடிப்பில்கொல்லாதேகுறும்படம் சிசு கொலைகளின் தாக்கமும் அறிவுரையும், குழந்தையின் எதிர் கால வெளிப்பாட்டையும் உணர்த்தி வெளியாகியுள்ளது.

 

கொல்லாதேகுறும்படம், கருக்கலைப்பு, கருவிலே குழந்தையை கொல்ல நினைக்கும் தாய்மார்களுக்க்கான ஓர் கருத்துப் படமாக இக்குறும்படம் வெளிவந்துள்ளது.

மேற்படிப்பை படித்து வீடு திரும்பும் மகனை நினைத்து பெருமிதமடையும் தாய், அந்த மகனை கருவில் கொல்ல மருத்துவரை நாடிஇருந்ததையும், மருத்துவரின் கருத்தை உள்வாங்கி மகனை பெற்று, வளர்த்து படிக்க வைக்கிறார் என்பதை சில காட்சி கண்ணோட்டத்தில் இக்குறும்படம் உணர்த்தியிருக்கிறது.

 

சிசுவை கருவிலேயே கலைக்க நினைப்பவர்களுக்கு இக்குறும்படம் ஓர் சில கருத்துக்களை கூறுகின்றது.

 

https://www.youtube.com/watch?v=zePhaWCdaD8

  • தொடங்கியவர்

31. CHECK MATE
 

மட்டக்களப்பைச்  சேர்ந்த  கோவர்த்தனனின்  “CHECK MATE”  குறும்படம்இந்தியாவில்  7 விருதுகளை  தட்டி  சென்றுள்ளது.

ஜனகன் சுதாகரன் தயாரிப்பில், சிவராஜ் பரமேஸ்வரன் ஒளிபதிவில், அருள், மற்றும் வினோதினி அவர்களின் நடிப்பில், பத்மநாதன் கோவர்த்தனன் அவர்களின் இயக்கத்தில், இக்குறும்படம் வெளியாகியுள்ளது.

*Janagan Suthakaran (Producer)
*Sivaraj Parameswaran (Cinematographer)
*Vinodhini Vaidynathan (Actress)
* Aroul D Jody (Actor)
* Caine W Sidharth (Music)
*Sreyes (Editor)
*Abinaya Gunalan (Associate Director)
*Arya Haridas (Assistant Director)
*Vivian Trishan (Assistant Director)
*M.Manu (Assistant Director)
*D.A Vasanth (Sound & Mixing)
*Senthilkumar Dhakshinamurthy (Vibrant Studios)
*Kannan Siala (Publicity design)
*P.Thushanth (Poster Designing)


கணவன் மனைவிக்கிடையிலான புரிதல், அதன் தவறான வழி போக்கு, என்பவற்றை அழுத்தமான காட்சி புலத்தில் உணர்த்தியுள்ளது இக்குறும்படம்.

 

அலுவலகம் முடித்து வீடு திரும்பும் கணவன், வீட்டில் கணவனுக்காய் காத்திருக்கும் மனைவி, இவர்களுக்கிடையில் புரிதலை பிரிவினையாக்கும் சம்பவம் ஒன்று நடக்கிறது, கணவனின் சட்டை பொக்கெட்டை அவருக்கு தெரியாமல் மனைவி சோதிக்கும் பொழுது, எதிர் பாராமல் மொட்டை கடதாசி ஒன்று மனைவின் கைக்கு மாட்டுகிறது, அதில் மனைவியை பற்றி தவறான முறையில் சித்தரித்து எழுதியிருந்ததை பார்த்த மனைவி அதிர்ச்சியடைகிறார், பின்பு சந்தேக புரிதலின் தாக்கம் பற்றியும், மனைவியை நம்ப வைக்க அவர் மேற்கொள்ளும் தவறான நடவடிக்கையும் என்று சில திருப்பங்களுடன் இக் கதை களத்தை கையாண்டுள்ளார்இயக்குனர் கோவர்த்தனன் அவர்கள்.

 

கணவன் மனைவிக்கிடையிலான எதிர் மறை புரிதலை, யூகிக்க முடியாத திரைக்கதையமைப்பு, அதனை அழகாக நகர்த்திய காட்சிகள் என்று நேர்த்தியாக திரைக்கதையினை வகுத்துள்ளார், இயக்குனர் கோவர்த்தனன் பாராட்டுக்கள்.

 

பார்பவர்களையே சோதிக்க விடுகிறது, ஆரம்பத்தில் வழமையான கதையாக்கம் என்று சிந்திக்க வைத்தாலும், பின்பு காட்சிகளை திரிலாக வகுத்தது குறும்படத்தின் மிக பெரிய பலம்.

 

க்ளைமக்ஸ் காட்சிகளுக்கு பின் என்ன நடக்கும் என்று பார்பவர்களை நினைக்க வைக்கும் தருணம் அழகு, கணவனின் தவறுகள் மன்னிக்க பட்டாலும், மனைவியை நம்ப வைக்கும் அளவுக்கு தன மனைவியை கேடயமாக பாவிக்கும் மனோ பாவத்தை எவ்வாறான வரிகள் கொண்டு எழுதுவது, அதனை யூகிக்க விட்டிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்.

 

உளவியலையும், அதனுள், பயணிக்கும் மனோ பாவத்தையும் ஒன்றோடு ஒன்று கட்டி செதுக்கியிருப்பது நன்று.

 

பின்னணி இசை, காட்சிகளை கட்சிதமாய் கவனித்து செதுக்கி கொடுத்துள்ளார்கள். அதிலும் கணவனின் செயல்பாட்டை அறிமுகபடுத்தும் பொழுது இசை அத்தனை அர்த்தங்களையும் சாதரணமாக அவரின் செயல் பாட்டை சொல்லி விடுகிறது.

 

நடிகர்களாக நடித்திருக்கும் வினோதினி வைத்யநாதன் மற்றும்
AroulD jody  இருவரும் கவனிக்க வைக்கிறார்கள். குட் லக் என்ற வார்த்தை பாவிக்கும் இடங்கள் அருமை.

 

ஒளிப்பதிவு கொஞ்சம் தெளிவின்மை நெருடல், தந்திரமாக மனைவியை நம்ப வைக்கிறார் ஆனால் தவறான செயல்பாட்டை முறியடிக்க யாராலும், அல்லது அலுவலக பணியாளர்களோ காட்டி கொடுப்பார்கள் என்று கிருமினளாக கணவன் சிந்திக்காமல் போனது எப்படி ??

 

இருப்பினும் யூகிக்க முடியாத திரைகதையமைப்புகள், நல்ல கருத்தை சமூதாயத்திற்க்கு அடித்து கூறியிருக்கிறது.

இந்தியாவில் ““CHECK MATE” குறும்படம் 7 விருதுகளை தட்டி சென்றுள்ளது என்பது குறிப்பிட தக்கது
விருதுகளின் விபரம் :

1. Rhapsody 2013 Chennai - Best Short film
2.Loyola college short film fest Chennai - Best Short film
3.Ecolades 2013 Chennai -Best Short film
4.Filmy 2014 Coimbatore - Best Short film
5.Hertz 2014 Trichy - Best Short film
6.Jet Gauge Insight 2k14 Chennai - Best Short film
7. Concert 14 chennai - Best Short film

 

கோவர்த்தனன் அவர்கள் இந்தியாவின் இயக்குனர் சிகரம் பாலுமகேந்திராவின் பட்டறையைச் சேர்த்தவர் என்பதும் குறிப்பிடதக்கது.

https://www.youtube.com/watch?v=ROcIG7-Tg8U

  • தொடங்கியவர்

32. தமிழ் பித்தன் (15 செக்கன் படம்)

 

டினேஷ் இன்  இயக்கத்தில்  முள்ளியவளை சுதர்சன்  மற்றும் வரதராஜா அவர்களின் நடிப்பில்  வெளியாகி  இருக்கின்றது  ''தமிழ் பித்தன்'' குறும்படம். 15 வினாடிகள் கொண்டதாக இக்குறும்படத்தை இயக்கி வெளியிட்டிருக்கிறார்கள்

 

நாம் யாரை எமக்கு முன்னுதாரனமா வைத்து வாழ்க்கையை கொண்டுசெல்கின்றோமோ அவர்கள் எல்லோரும்  அதற்கு தகுதியானவர்கள்தானா என்பது பல நேரங்களில் கேள்விக்குறியானதாக அமைந்துவிடுகின்றது.  அவர்களது தனிப்பட்ட வாழ்வில் எப்படி இருப்பார்கள் என்று தெரியாமல் எம்மில் பலர் அவரது வெளி வாழ்க்கையை மட்டும் முன்னுதாரணமாக வைத்துகொண்டு வாழ்க்கையை கொண்டு செல்கின்றோம்

 

இது எவ்வளவுக்கு சரியானது? அவரவர் கைகளில்தான் அவரவர் வாழ்க்கை, தமிழ் தமிழ் என குரிக்கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேர் தங்களது பிள்ளைகளுக்கு தமிழினை சொல்லி கொடுக்கிறார்கள். குடும்பத்தில் கதைப்பதோ " ஹலோ, ஹொவ் ஆர் யூ?" வெளியிலகிற்கு மட்டும் " வணக்கம், எப்படி இருக்கின்றீர்கள்" இப்படி இருந்தால் தமிழ் எப்படி வளரும்? இக்குறும்படத்தில் வரும் தமிழ் பித்தன்போல் எம்மில் எத்தனை பேர் இருக்கின்றார்கள், அவர்களுக்கெல்லாம் சவுக்கடி கொடுக்கும் வகையில்   மிகக்குறுகிய நேரத்தில் நல்லதொரு செய்தியை சொல்லியிருக்கிறார்கள்.

 

https://www.youtube.com/watch?v=c2drS9-JZiI

  • தொடங்கியவர்

33. ஈரவிழிகள்

 

- மன்மதன் பாஸ்கி

 

https://www.youtube.com/watch?v=rOe88wPGQHc

  • தொடங்கியவர்

34. இங்கே இப்படித்தான்

 

Cast: Robin, Bobitha, Sofia, Prashanth, Kones, Jenila
Story & Direction: Jenila
Production: Sarvin Production
Camera & Editing: Kalidas Kavinath
Music: Chak

 

https://www.youtube.com/watch?v=saHccRC7LCo

  • தொடங்கியவர்

35. குருதிப் பூக்கள்

 

நல்லூரன் கலைத்தாய் மன்றம் வழங்கும் விமல் ராஜ் அவர்களின் குருதிப் பூக்கள் குறுந்திரைபடம், நவ்ஷாத், பிரியா நதீஷ், மனோஜ் ஆகியோரின் நடிப்பில், எடிட்டிங் சசிகரன் யோ, ஒளிபதிவு இயக்கம் விமல்ராஜ், கதை திரைகதை வசனம் நவ்ஷாத்.முயற்சியின் குருதியின் வெள்ளத்தில் வாழும் விஞ்ஞான சிந்தனையாக வெளிவந்துள்ளது.

ஓர் மூட நம்பிக்கையாலும், கணவன் மனைவிக்கிடையிலும் ஏற்படும் தவறான புரிதலும், விபரிதமான விளைவுகள் கொடூரமான மனோ பாவத்துக்கு தள்ளப்பட்டு விடும் என்று வெளிபடுத்தி இருக்கிறது இக்குறும்படம்

ஓர் கணவன் மனைவி, இவர்களுக்கிடையில் ஏற்படும் சந்தேக புரிதலால், கணவனின் செயல்பாடு கொடூரமாக இருக்கிறது, ஓர் பூசாரியின் அறிவுரையின் படி, கருவில் வளரும் குழந்தையின் வளர்சியில் உயிராபத்துகள் இருப்பதை அறிந்த மனைவி, கருவை கலைக்கிறாள், இதனை ஓர் மருத்துவர் மூலம் அறிந்த கணவரின் சந்தேகம் மனைவியின் உயிரையே கொடுராமாக பறித்து விடுகிறது என்று, கொஞ்ச திரிலுடனும், இயற்கையின் ஆன்மாவின் ஆவி யுடனும் காட்சிகளை குருதிகளுடன் சில திருப்பமாக நகர்கிறது இக்குறும்படம்

தம்பதிகளுக்கிடையில் ஏற்படும் சந்தேகம், மனம் விட்டு வெளிப்படையாக பேச முயலாத, தவறான புரிதல், அதானால் ஏற்படும் பல குழப்பங்களை கட்டுபடுத்தாமல் உயிரையே பறித்து வாழ்க்கையை சீரழிக்கும் கொடூரமான சம்பவத்தை சந்திக்கக நேரும் என்பதை சொல்ல முயன்றுள்ளார் இயக்குனர் அவர்கள்

ஆவிகளின் உண்மை தன்மை இயற்கையின் பிரபஞ்சம் என்று விஞ்ஞான உலகம் நிரூபித்தாலும், அதனை சாமர்த்தியமாகவும், பார்வையாளனின் மனதை ஓட்டும் விதமாக தந்திரமாக கையாள வேண்டியது அவசியம், ஏனென்றால், ஆன்மாவின் சுழற்சி என்பது நம்பத்தகாத விடையத்தை விஞ்ஞான வடிவில் காட்சியமைப்பது சிறப்பு அதனை இக்குறும்படம் தவறவிட்டது குறும்படத்தின் மிக பெரிய ஓட்டை, இவ்வாறன விடையத்தை கதை கருவாக எடுக்கும் பொழுது திரைகதயமைப்பு சரியாக கையாளப்பட்டிருக்கவேண்டும், சறுக்கலான திரைகதை நெருடல்,

காரணம் தேடி கணவனை நாடி வரும் இறந்த மனைவியின் ஆவி என்றே வைத்துக்கொள்வோம், அல்லது கணவரின் பிரமையாகவோ வைத்துக்கொள்வோம், ஆனால் விசாரணைக்காக வரும் போலிஸ் கண்ணிலே விரலை விட்டு துளைத்து விடுகிறது விஞ்ஞான அறிவு, இந்த இடத்திலே கேள்வி கேட்க வைத்து விடுகிறது பார்வையாளனின் அறிவு

பார்பவர்களுக்கு மனைவியை கொன்றதுக்கான காரணம் கூற வேண்டும் என்பதற்காக இப்படிபட்ட திரைகதயினை புகுத்தியிருப்பது வித்தியாசம் என்றாலும் அதனை நுற்பமாக கையாலபட்டிருக்க வேண்டும்

இசை சில இடங்களில் திரிலாக காண்பிக்க முயற்சித்துள்ளார்கள், ஆனால் பல இடங்களில் ஏறி இறங்குகிறது இசை, இக்கருத்தை 20  நிமிடங்கள் இழுத்திருப்பது, விறு விறுப்பில்லாமல் நகர்கிறது, எடிடர் சில காட்சிகளை கத்தரித்து சுருக்கியிருந்தால், கதையின் நகர்வு ஆர்வமாக இருந்திருக்கும்

இருப்பினும் இக்குறும்படத்தின் மிக பெரிய பலம் ஆனந்தாக நடித்திருக்கும் கணவர் அவரின் மௌனம், அரைவாசி காட்சிகள் வரைக்கும் அவரின் மௌனம் ஏதோ ஒன்றை எதிர் பார்க்க சொல்லி விடுகிறது.

சந்தேக புத்தியால் ஏற்படும் வேகதனமான முடிவுகள் விளைவுகளை சந்திக்க நேரும், விவேகதனமாக சிந்தியுங்கள் என்று தம்பதிகளின் புரிதலுக்கு பாடம் புகட்ட முயன்றுள்ளார்கள் இக்குறும்பட குழுவினர்கள்.

 

https://www.youtube.com/watch?v=uXJ-i3CS1tU

  • தொடங்கியவர்

36. அடங்கா மதவி

 

ராணி பதிப்பகம் பெருமையுடன் வழங்கும், S. மன்மதன் பாஸ்கர் அவர்களது, எழுத்து இயக்கம், திரைகதை, மற்றும் இசையில், மரியநிற், கணேஷ், தனுயா, கௌசிகா, கேசவன், குமார், சுதா, பகீர், சிவம் ஆகியோரின் நடிப்பில் ஒளிபதிவு குமார், இசை பாஸ்கர்,படத்தொகுப்பு சங்கர் ஆகியோரின் பங்களிப்பில் விருதுகள் பெற்ற குறும்படம் "அடங்கா மதவிபாராட்டுகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.

 

சிறந்த கதாநாயகி, மற்றும் சிறந்த படம், இரண்டு விருதைகள் பெற்றது என்பது குறிப்பிட தக்கது.

 

குறிப்பு : அடங்கா மதவி (வட்டார கிராமத்துச்சொல்) பேச்சுவழக்கில் உள்ள சொல் "மதவிகுடிநீர் சொட்டு சொட்டாக குடியுங்கள் என்று சொல்வோம் அவரும் போதாமல் இடைவிடாது குடித்தால் மூக்கு முட்ட குடிக்கிறார் என்று சொல்வோம் மூக்கு முட்ட குடித்துவிட்டு அதற்கும் மேல் குடித்தால் ஏன் இப்படி மதவுற என்று கேட்பார்கள் எவ்வளவுதான் குடித்தாலும் அடங்காது, அடங்காமல் குடிப்பதுதான் "மதவி" என்ற வட்டார கிராமச்சொல்லை குறும்படத்துக்கு தகுந்த தலைப்பாக எடுத்துள்ளார்கள், பட குழுவினர்கள், (நன்றி பாஸ்கி அவர்களுக்கு விளக்க தகவல் தந்தமைக்கு)

 

மது பழக்கத்தால் அடிமையான ஓர் தந்தையின் குடும்பம்,மற்றும் அவரது மனைவி சந்திக்கும் திடுக் திடுக் சவால்கள், என்று புலம் பெயர் நாடுகளில் நடைபெறும் ஓர் சம்பவமாக பிரதி பலித்து இருக்கிறது இவ் குறும்படம்.

 

மூன்று பெண் குழந்தைகள், வேலை செய்து அந்த குடும்பத்தை வழி நடத்தும் ஓர் தாய், குடி பழக்கத்துக்கு அடிமையாகி அதனால் சீரழியும் தந்தையின் வாழ்க்கை பயணம், குடியினால் கொள்ளை, பிச்சை எடுத்தல், வீதிகளில் விழுந்து கிடத்தல்போதையினால் அல்லாடும்  ஓர் குடிகார தகப்பன் என்று அந்த குடும்பச்சூழல் போய்கொண்டிருக்கிறது, தினமும் குடித்து விட்டு, வீதிகளில் விழுந்து கிடக்கும் கணவனை, தெரிந்தவர்களின் அறிவித்தல்களின் படி வீட்டுக்கு அழைத்து வரும் மனைவி, மனைவியின் நகைகளை திருடி விற்க முற்படும் பொழுது, அதனை எதிர் கொண்டு வெல்லும் மனைவி, பெண் பிள்ளைகள் இருக்கும் வீட்டுக்கு குடிக்காரர்களை அழைத்து வந்து கும்மாளம் போடும் தந்தையின் செயல்பாட்டை அதிரடியாக முறியடிக்கும் தாய், என்று புலம் பெயர் உலகின் ஓர் துணிச்சல் மிக்க ஓர் தாயின் சவால்கள் நிறைந்த குடும்ப வாழ்கைகையுடன் தமிழ் சமூகத்தினதும், உறவினர்களின் விரோத பார்வையையும்,  குடும்ப மானத்தையும்ன் அடைகாத்து, அன்பு கொண்ட மனைவியின் செயல் பாடாக  இறுதியில் எதி ர்பாரத ஓர் முடிவை அதிரடியாக கையில் எடுக்கிறார் அந்த தாய், என்று சில திருப்பங்களுடன் களமிறங்கியிருக்கிறது இக்குறும்படம்.

 

போதைக்கு அடிமையான சமூதாயத்திற்கு சவுக்கடி கொடுத்திருக்கிறார், இக் குறும்படத்தின் இயக்குனர் மன்மதன் பாஸ்கி அவர்கள்.

ஓர் குடும்பத்தின் தலைமை என்பது தந்தையின் பங்கு மிக முக்கியம், அதை அவர் கையாளும் முறை, அடுத்த தலை முறைகளை வழி நடத்தும் பக்குவ நிலைதான் ஒவ்வொரு குடும்ப தலைவனின் பங்கு, ஆனால் எதையும் பொருட் படுத்தாமல் சுய நல போக்கோடு போதைக்கு அடிமையாகி வாழும் ஓர் தந்தையின் நிலைப்பாடு, அதனால் அவதிப்படும் மனைவி, பிள்ளைகள், என்று ஓர் குடும்பத்தின் போராட்ட களமாக கதை கருவை கையாண்ட இயக்குனர் மன்மதன் பாஸ்கி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

 

குறிப்பாக மூன்று பிள்ளைகளுக்கும் கொடுத்த தகுந்த காட்சியமைப்புகள் தொடங்கி, ஒவ்வொரு காட்சிக்கும் போராட்டமாக சித்தரித்த அந்த தாயின் மன நிலை வரை நுற்பமாக திரைகதயினை நகர்த்தியுள்ளார்,

இவ்வாறு வாழும் ஓர் குடும்பத்தின் பிள்ளைகளின் மன நிலைகள், உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் பிள்ளைகளின் எதிர் காலம், குடும்ப பொருளாதார பின்னடைவுகள், சமூகத்தில் ஏற்படும் அவமானங்கள், உறவுகளிடம் சந்திக்க நேரும் தலை குனிவுகள், என்று எதார்த்த வாழ்வின் அடையாளங்களை உணர்ந்த ஓர் தாயின் போராட்டம் தான் இக்குறும்படத்தின் மிக பெரிய பலம்.

 

தாயக நடித்திருக்கும் மரியநிற் அவர்களின் நடிப்பு பாராட்டியே ஆக வேண்டும். குடும்பத்தை மட்டுமல்ல, கணவனின் நடவடிக்கைகளையும், பொருளாதார ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் சுமக்கும் கதாபாத்திரமாக இயல்பான நடிப்பு அசத்தல் அத்தனை விடையங்களையும் அவரது முக பாவனை ஒன்றே சொல்லி விடுகிறது,
போதையில் இருக்கும் கணவரோடு போராடும் பொழுதும் சரி, குடும்ப மானத்தை காக்க வெளியில் கூற வேண்டாம் என்று மன்றாடும் பொழுதும் சரி, பிள்ளைகளிடம் சூழ்நிலைகளுக்கு ஏற்பதுபோல் நடந்துகொள்ளும் பொழுதும் சரி, ஓர் இயல்பான தாயின் நடிப்பும், துணிச்சலான பெண்ணின் மனோ பாவத்தையும் ஒவ்வொரு காட்சிகளுக்கும் கட்சிதமாய் நடித்துள்ளார். இறுதியில் அழும் அந்த தாய்மையின் கண்ணீர்கள், மனதை நனைத்து விடுகிறதுகுடிகார தகப்பனாக நடித்திருக்கும் கணேஷ் அவர்களும் சில காட்சிகளில் கவனிக்க வைக்கிறார்

 

பின்னணி இசை, குறிப்பிட வேண்டிய முக்கிய அங்கம், ஒவ்வொரு காட்சிகளையும் திரிலாக நகர்த்துகிறது, பல இடங்களில் இசை மனதோடு பயணிக்கிறது, முக்கியமாக ஓர் காட்சியில் குழந்தையின் சத்தத்தை பின்னணியில் இணைத்தது இயக்குனரின் சாமர்த்தியம். வசனங்களும், ஒளிபதிவும் ஓகே ரகம்.

 

வசனங்களில் கவனம் செலுத்தியிருக்கலாம், ஓர் சில காட்சிகளில் பின்னணி குரல் தொய்கிறது, போதைக்கு அடிமையான தந்தையின் மன உணர்வை சித்தரிக்காமல் போனது கவலைக்குரிய திரைக்கதை அமைப்புஇருப்பினும் மதுபான கடையில் அவரின் புலம்பல்கள் என்று இழுக்காமல் கத்தரித்திருபது நன்று.

 

புலம் பெயர் சமூகத்தில் பல குடும்பத்தில் நடக்கும் ஓர் உண்மை சம்பவத்தை துணிச்சலாக எடுத்து அதற்க்கு சுவாரஷ்யமாகவும், உணர்வு பூர்வமாகவும் பக்குவபட்ட திரைகதயமைத்து காட்சி புலத்தில் உணர்த்தியிருக்கிறது இக் குறும்படம். அதே சமயத்தில் மூன்று பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்தை வழிகாட்டும் துணிச்சல் மிக்க தாயின் இன்னொரு பக்கமாகவும் இக்குறும்படம் வெளிக்கொணர்ந்திருக்கிறது.

https://www.youtube.com/watch?v=SxWqhs2_pzQ

 

  • தொடங்கியவர்

37. அப்பா

 

 

தாய்மையின் அன்பை கடன், கொடுத்து பெற்ற அப்பாவின் நினைவாக மகன் தந்தையின் உறவு உடைந்த பாலமாக உணர்த்தி இருக்கிறது இக்குறும்படம்.

Written & Direct By Thamotharam Vithusan
Cinematography : Vivian Trishan& Selvakumar Thavarasah. 
Music : Sanjit Lucksman
Editing : Thushanth Patkunam

பொருளாதாரத்தால் தள்ளப்பட்ட ஒரு குடும்பம், அப்பாஅவரது மகன் இருவரும் வசித்து வரும் ஓர் ஏழ்மை வாழ்கை, கூலி தொழில் செய்து தன மகனை பொருளியல் படிக்க வைக்கும் பாசம் மிகுந்த தந்தை ஆனால் அதை பொருட்படுத்தாமல் நண்பர்களுடன் இணைந்து தவறான விழியில் செல்லும் மகன், தினமும் பொய் சொல்லி பணம் வேண்டுகிறார் கல்லூரி செல்லும் மகன், பணத்தை அயலவர்களிடம் கடன் வேண்டி தன் மகனிடம் கொடுக்கிறார், ஆனால் அந்த பனைத்தை நண்பர்களுடன் இணைந்து தவறான முறைகளில் செலவழிக்கிறார், இவ்வாறு போய்க்கொண்டிருக்கையில் திடிரென்று ஒரு நாள் அந்த சம்பவத்தை நேரடியாக பார்த்து விடுகிறார் அதற்கு பின்  சிறிய திருப்பங்களுடன் கதை களத்தை கையாண்டுள்ளார் இயக்குனர் விதுஷன் அவர்கள்

அப்பாவின் பாசத்தை தவறாக பயன் படுத்திக்கொள்ளும் மகன், என்ற மையக்கருத்தை எடுத்து உணர்வுகளுடன் இணைத்து காட்சிகளாக்கியிருப்பது சிறப்பு,

ஒளிபதிவு, போதுமானளவு பதிவு செய்திருக்கிறது, பின்னணி இசையும் இயல்பாகவே பல இடங்களில் விட்டிருப்பது, காட்சிகள் மனதில் ஒட்டி விடுகிறது, குறிப்பாக மௌனமாக நகரும் இடங்களில் அதன் இயல்பான சத்தங்களை அப்படியே விட்டிருப்பது நன்று.

அப்பாவாக நடித்திருப்பவரின், நடிப்பு திறமை அற்புதம், ஆக்ரோஷமில்லாத இயல்பான முக பாவனை, அசத்தி விட்டார், அத்தனை ரியாக்சனையும் அவரின் முகம் கூறிவிடும், கதா பாத்திரத்தை உள் வாங்கி நடித்திருக்கும்  அவர்களுக்கு வெல்டன்.

வசனங்களும், செதுக்கி மாரியாதையாக புலப்படுத்தியிருப்பது சிறப்பு.

ஆனால் இவ்வாறு இருக்கும் ஓர் இளைஞனின் பதின் வயது திடீரென்று உணர்ந்து மாறி விடுவதற்கான வலுவான காட்சியமைப்புகள் போதாது, இறுதியில் திருந்தி விடுவார் என்பதையும் யூகிக்க முடிகிறது, ஆனால் தந்தையின் இழப்பை க்லமக்ஷாக வைத்து உணர்வு பூர்வமான பாடலை இறுதியில் கொடுத்திருப்பது ஒட்டுமொத்த காட்சிகளையும் மிதமிஞ்சி விழியோரம் கண்ணீர் அலை மோத விட்டிருக்கிறது க்ளைமக்ஸ் காட்சிகள்.

பதின் வயது துடிக்கும் சில தவறான வழிகளை அப்பா என்கின்ற உறவோடு மைய்யபடுத்தி கதையின் கருவாக எடுத்து இளம் சமூதாயத்திற்கு பாடம் புகட்டியுள்ளது.

 

https://www.youtube.com/watch?v=GD9IuPqN5ZI

Edited by sOliyAn

  • தொடங்கியவர்

38. Kapitel 26 (Act 20 von 1994)

 

மட்டக்களப்பிலிருந்து வளர்ந்து வரும் கலைஞர்கள் இலஞ்சத்தை இல்லாதொழிக்கும் நல்ல கருத்தினை சொல்லும் Kapitel 26 (Act 20 von 1994) எனும் குறும்படத்தினை வெளியிட்டுள்ளனர்.

 

மொழி பயன்பாடு இன்றி கருத்தினை சொல்லும் இந்த குறும்படம், மொழி பேதம் - பிராந்திய பேதமின்றி அனைவரையும் சென்றடையும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

https://www.youtube.com/watch?v=gPDy1DIWseU

 

  • தொடங்கியவர்

39. வேடம் தாங்கி

 

மகளீர் தின சிறப்பு வெளியீடாக நெடுந்தீவு முகிலனின் 8வது குறும்படம்  "வேடம் தாங்கி" .(08-03-2014) வெளியாகியுள்ளது.

Direction - Neduntheevu Mukilan 
Produce - Agaram Foundation - swiss
Media sponsor - www.tamilithal.com
Cinematography,Editing -t.piriyanthan
Background Score - G.Atputhan 
Starring - Thleepan | Thileep | Bharathi | Raji

பெண்களின் மன ஓட்டத்தை பிரதி பலித்து, கண்டதும் காதல் செய்யும் ஆண்களின் செயற்பாட்டை ஆணிவேருடன் அறுத்துள்ளது "வேடம்தாங்கி"

சேலை கட்டி வரும் ஓர் பெண்ணை இரு இளைஞர்கள் தேவாலயம் ஒன்றில் எதிர் பாரத விதமாக காண்கிறார்கள் , அப்பெண்ணை காதலிக்க முயற்சிக்கிறார்கள் இருவரும், அதில் ஒருவர் தனது காதலை பல வழிகளில் வெளிப்படுத்துகிறார், பூ, காதல் கடிதம் கொடுத்து அப்பெண்ணுக்கு தனது காதலை கூற முயற்சிக்கிறார், ஆனால் அப்பெண் அதை கண்டுகொள்ளவே இல்லை..! இதை அவதானித்துக் கொண்டிருக்கும் அதே பெண்ணை காதலிக்கும் இன்னொருவர், காதலை சொல்ல முயன்றவரின் வழிகளை கண்காணிக்கிறார், எல்லாவற்றையும் உதாசீனம் செய்யும் பெண்ணிடம் வித்தியாசமான முறையில் காதலை சொல்ல முற்படுகிறார் அது எவ்வாறு, அதை அந்த பெண் எவ்வாறு எடுத்துக்கொள்கிறார், இரு இளைஞர்களின் மனோ நிலை எப்படி இருக்கிறது என்று வார்த்தை பிரயோகங்கள் ஏதுமின்றி வெறுமனே இசையால் மட்டும் வேடம் ஏந்தி வெளி வந்துள்ளது இக்குறும்படம்.

பொதுவாக நெடுந்தீவு முகிலனின் குறும்படங்கள் சமூதாயத்தின் போக்கினை காட்சிகள் மூலம் கோர்த்து இசையால் மட்டும் மனதை திருப்பி சிந்திக்கவும் ரசிக்கவும் வைப்பது வழக்கம், அதன் தொடர்ச்சியாக வேடம்தாங்கி குறும்படமும் குறுகிய நொடிகளில் பெண்கள் மீது நடக்கும் சில ஆண்களின் வர்க்கத்தை காதல் காட்சிகள் கொண்டு உணர்த்தியிருக்கிறது.

முக்கியமாக,குறிப்பிட வேண்டியது ஒளிப்பதிவின் தெளிவு, ஒவ்வொரு காட்சிகளுக்கும் அழகை அடியோடு சாய்க்கிறது படத்தின் கூடிய பலம் ஒளிபதிவும் மற்றும் எடிட்டிங். இரண்டும் காட்சிகளை மெருகூட்டுகிறது. பிரியந்தனின் கைவண்ணம் அழகு சேர்க்கிறது.

இன்னும் சில காட்சிகள் என்று இழுக்காமல், கத்தரித்து இருப்பது நன்று.வாகன ஒலி , மோட்டார் ஒலி , கதவு பூட்டு படும்போது  கொடுத்த இயல்பான சத்தம்  நன்று

பின்னணி இசை ஒரே பியானோ இசையை அடிக்கடி வாசித்து, சில இடங்களில் நகைச்சுவை டியூன் இணைத்திருப்பது ஒகே..! சில காட்சிகளுக்கு ஒகே என்றே பட்டாலும், ஏனோ பழைய பியானோ டியூன் போன்ற உணர்வை கொடுப்பதால் காட்சிகளோடு ஓட்ட மறுக்கிறது,

 

https://www.youtube.com/watch?v=C9WvgnhVT80

 

  • தொடங்கியவர்

40. தோள் கொடு

 

https://www.youtube.com/watch?v=RPQaBQFTQPU

  • தொடங்கியவர்

41. தெருத்தேங்காய்

 

https://www.youtube.com/watch?v=VHTVYDbVCS4

  • தொடங்கியவர்

42. சமநிலை

 

https://www.youtube.com/watch?v=qZSWhQx7tR0

  • தொடங்கியவர்

43. செத்த பின்

 

https://www.youtube.com/watch?v=LUsfr3uH8eg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.