Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்மவர் குறும்படங்கள்!!

Featured Replies

  • தொடங்கியவர்

90. இனி எனினும்

 

https://www.youtube.com/watch?v=VEwlwWB65m4

Edited by sOliyAn

  • Replies 141
  • Views 10.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

91. நெஞ்சுக்குள்ளே

 

https://www.youtube.com/watch?v=cXxqtlwtE10

  • தொடங்கியவர்

92. தொடுகின்ற தூரம்

 

https://www.youtube.com/watch?v=6UHDoIqPaEU

  • தொடங்கியவர்

93. வள்ளுவன்

 

கவிமாறன், திலீப், திபர்சன், நிவேதன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் குறும்படம் வள்ளுவன். இக்குறும்படத்தை இயக்கி, ஒளிப்பதிவும் செய்துள்ளார் பிரியந்தன்.

 

தயாரிப்பு காரணங்களால் வெளியாகாமல் தள்ளிப் போன இக்குறும்படம் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் மொழியை மையமாக கொண்டு வெளிவந்துள்ளது வள்ளுவன்.

 

சுருக்கமான கதைக்களம், அம்மாவை மறந்தியா, அப்பாவை மறந்தியா, பின் ஏன் தாய் மொழியை மட்டும் மறந்த என்ற நச் வசனங்கள் குறும்படத்திற்கு ஒரு ப்ளஸ்.

 

https://www.youtube.com/watch?v=z8hUasNM6_Y

 

  • தொடங்கியவர்

94. நிஜங்கள்

 

https://www.youtube.com/watch?v=O8t-VzM9HS4

  • தொடங்கியவர்

95. இடிமுழக்கம்

 

Cast: Sathapranavan, Rajinth, Sujeepan, Sujith,Gayani, Muthujaisingham
Music Arrangement: Vikram
Cinematography & Editing : Desuban
Production : Abisha Production
Screenplay & Direction : Sathapranavan

➢ Year Of Production: 2006

https://www.youtube.com/watch?v=qIxTUa-lS-Q

  • தொடங்கியவர்

96. அஞ்ஞான வாசம்

 

➢Short Film Festival of Sankiiyan Viruthu (Paris)
Best Actress (Shiny)
Best Supporting Actor (Vigithan)
Best Music (M.R.Raheis)
Best Cinematography (Desuban)
Best Editing (Desuban)
Best Screnplay

 

https://www.youtube.com/watch?v=ETfDMPgpBLM

 

  • தொடங்கியவர்

97. தினப்பயணம்

 

பிரான்ஸில் அடிக்கடி நடக்கும் மொபைல் போன் வழிப்பறியை மையமாகக் கொண்டு சதா பிரணவன் இயக்கி இருக்கும் குறும்படம் தினப்பயணம்.

 

சதாபிரணவன், ரஜிந்த் ஆகிய இருவருக்கும் குறும்படம் எடுக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. அதனால் வட்டிக்கு கடன் வாங்கி, அப்போது சூப்பர் ஸ்டாராக இருந்த கதாநாயகன் பாஸ்கியிடம் தமது படத்தில் நடிக்க அனுமதிகேட்டு போகிறார்கள்.

 

பாஸ்கி அறிமுகமாகும் இடமும், படத்தை பற்றி அவர்களின் உரையாடலும் சூப்பர். அடக்க முடியாத சிரிப்பை ஏற்படுத்துகிறது.

 

அதேபோல் மொபைல் போன் வழிப்பறி கும்பலிடம் அடிவாங்கி ஐபோனை பறிகொடுத்துவிட்டு வரும் சந்தர்ப்பத்தில், அதைப்பற்றி விசாரிக்கும் தமிழர்களிடம் நக்கலாக சொல்லும் வசனங்கள் அட்டகாசம்.

 

இறுதியில் சிம் காட் அளவு சுதந்திரத்தையாவது வாங்கி கொடுங்கோ என்ற வசனம் செம. மொத்தத்தில் கதைக்களம் மிகவும் சூப்பர்.

 

https://www.youtube.com/watch?v=LLwqe2Jhh7s

 

  • தொடங்கியவர்

98. நான்கள்

 

Cast : Ajenthas, Sathapranavan, Rajinth, Ramana...
Music arrangement: Vikram
Cinematography & Editing : Desuban
Production : Rajinth
Screenplay & Direction : Sathapranavan

 

https://www.youtube.com/watch?v=PyOk8dfg2hA

 

  • தொடங்கியவர்

99. போராளிக்கு 'இட்ட' பெயர்

 

cast: SATHAPRANAVAN / NAGA KONES / VIGITHAN
music M.R. RAHEIS
sound design PRATHAP
cinematography & editing DESUBAN
produced AVATHARAM
screenplay & direction SATHAPRANAVAN

 

https://www.youtube.com/watch?v=FtBbBDuifB4

 

  • தொடங்கியவர்

100. பேரன் பேத்தி

 

தாத்தாவுக்குத் தன் பேரப்பிள்ளைகளுக்குத் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்ற ஆசை. பக்கத்து வீட்டுச் சிறுமி தன்னுடன் தமிழ் கதைக்கும் போது அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சி தனது பேரப் பிள்ளைகள் பிரெஞ் கதைக்கும் போது அவரிடம் காணாமல் போய்விடுகிறது. அவரது பேரன், பேத்திக்கு தமிழ் தெரியாதது இறுதியில் அவருக்கு வினையாக முடிந்து விடுகிறது. பராவின் பேரன் பேத்தி குறும்படத்தின் கதை இதுதான்.

 

https://www.youtube.com/watch?v=Nqs4AtP9D88

 

  • தொடங்கியவர்

101. பழி

 

கே. தேவிதா தயாரிப்பில் சிவதுஷியாந்தன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் குறும்படம் பழி.கவிமாறன், மிதுனா, சிவசோதி ஆகியோர் நடித்திருக்கும் இக்குறும்படத்திற்கு பிரியன் அவர்கள் இசையமைத்துள்ளார்.

 

நல்ல கதைக்களத்துடனும், சூப்பரான ட்விஸ்ட்டுடனும் உருவாகி இருக்கிறது பழி குறும்படம்.கணவன், மனைவி இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். ஒரு நாள் அவர்கள் வீட்டிற்கு ஒரு போஸ்டர் வருகிறது, அதை பார்த்ததும் அப்பெண் பயப்படுகிறாள்.

 

அதில் இருந்து ஏதோ ஒரு உருவம் அப்பெண்ணை அடிக்கடி பயம்புறுத்துகிறது. அடிக்கடி தன் மனைவி ஒரு மாதிரியாக செய்வதை பார்த்த அப்பெண்ணின் கணவன் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

 

கடைசியில் அப்பெண்ணை பயம் புரித்தியது யார், எதற்கு என்பது கதையில் ட்விஸ்ட்.

 

இக்குறும்படத்தில் மிதுனா நடிப்பு அற்புதம், சூப்பர், அவரின் நடிப்பு குறும்படத்திற்கு ஒரு ப்ளஸ். பயப்படுவது போல் நடித்த எல்லா இடத்தில் வெவ்வேரு முக பாவனைகளை காட்யிருந்தார்.

 

குறும்படம் மிகவும் அருமையாக இருக்கிறது. குறும்படத்தில் கடைசி இடத்தில் இசையை கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

 

https://www.youtube.com/watch?v=4zjzj4hIQMw

 

  • தொடங்கியவர்

102. நீ இடையில் நான்

 

Cast : Sathapranavan, Ashvina
Music : Jana
Assistant Music: Vikram
Costume & Make-up : Desmila - Mayuri
Cinematography & Editing : Desuban
Production : Rajinth
Screenplay & Direction : Sathapranavan
AVATHARAM PRODUCTION

Festival of Thavam: (Paris)
2nd Price
Best Actor
Best Cinematography

Festival of Vinbam :: (London)
Best Actor

 

https://www.youtube.com/watch?v=unbWCh3Ms8c

 

Edited by sOliyAn

  • தொடங்கியவர்

103. Today 27

 

Cast SRI.THAYALAN – N.KAMALA – RAMANA 
Sound Design PRATHAP
Sound Dubbing SURENDRAN
Assistant Director NS JANA
Cinematography & Editing DESUBAN
Producer RAJINTH
Screenplay & Direction SATHAPRANAVAN

♦Norway Tamil Film Festival (2013)
✭Best Cinematography (Desuban)

https://www.youtube.com/watch?v=I0YOHyH51vA

 

  • தொடங்கியவர்

104. ஆசுவாசம்

 

Cast : BALARAJA – YAMUNA – FRANKLIN
Music Coordination : PRATHAP
Editing : SURENDRAN
Cinematography, Story & Direction : PREM.K

 

https://www.youtube.com/watch?v=m4ZsgL-v_cY

 

  • தொடங்கியவர்

105. FindMe

 

நடிகர்கள்: விக்ரம் - குஷ்பு - விஜிதன் 
இசை: N.சதீஷ்
ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்: சுரேந்திரன் 
கதை & இயக்கம்: J.சதீஷ்

 

https://www.youtube.com/watch?v=bbDcMbvrPoA

  • தொடங்கியவர்

106. Mobila Mobila

 

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முறையாக பெண்கள் கூட்டணியில் உருவான குறும் திரைப்படம் மட் வின்சென்ட் பாடசாலை மாணவிகளின் முயற்சியில் உருவாகி பலரின் வரவேற்பினை பெற்ற 'மொபைலா மொபைலா'


முக்கிய பாத்திரங்கள் :
செல்வி தேனுஜா மோகனதாஸ்,
செல்வி பிரனித்தா ரமணாநிதா,
செல்வி வேணுகா ரவிச்சந்திரன்
இயக்குனர் : செல்வி சாருணி இந்திரஜித்

ஒளிபதிவு: செல்வி வேணுகா ரவிச்சந்திரன்
தயாரிப்பு : செல்வி கோபிகா ரவிச்சந்திரன்
படத்தொகுப்பு: செவன் விஷ்ணுகாந்த் குமரஜோதி
இசை: செல்வன் சஞ்சித் லக்ஷ்மன்.
இத் திரைப்படத்துக்கான ஆலோசனையை திரு கோவர்த்தனன் பத்மநாதன் அவர்கள் வழங்கியுள்ளார்.

 

https://www.youtube.com/watch?v=7wy941kPP2o

 

  • தொடங்கியவர்

107. நாதாரி

 

Tamilan Present Creation வழங்கும் 

Cast: Manmathan & Kesavan
Camera & : Kumar 
Editing ; Shankar

 

https://www.youtube.com/watch?v=v-RlB4AZI74

 

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஐயா

நன்றிகள்

 

நேரம் போதாமையால்  பதில் எழுத

பார்க்க

அதிகம் மினக்கெட முடியவில்லை

ஆனால் அடிக்கடி  மறக்காமல் வந்து  போகும் திரி

எல்லோரும் பார்க்கணும்

பாராட்டணும்

அவர்களை  ஊக்குவிக்கணும்

  • தொடங்கியவர்

தொடருங்கள் ஐயா

நன்றிகள்

 

நேரம் போதாமையால்  பதில் எழுத

பார்க்க

அதிகம் மினக்கெட முடியவில்லை

ஆனால் அடிக்கடி  மறக்காமல் வந்து  போகும் திரி

எல்லோரும் பார்க்கணும்

பாராட்டணும்

அவர்களை  ஊக்குவிக்கணும்

 

மிகவும் நன்றி ஐயா! 

  • தொடங்கியவர்

108. மறுதாக்கம்

 

ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி சக்சஸ் விளையாட்டுக்கழகம் சேவகம் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த மதனுகண்ணாவின் மறுதாக்கம் குறும்படம். 
 
வயதான பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் விடுவதனால் எதிர்காலத்தில் நாம் முதியோராகும் போது எமது பிள்ளைகள் எம்மை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் என்ற செய்தியை தாங்கி இக் குறும்படம் வெளிவந்துள்ளது. மிகக் குறைந்த செலவில் எந்தவிதமான நவீன தொழில் நுட்பங்களும் இன்றி ஏறாவூர் பிரதேச கலைஞர்களை வைத்து தயாரிக்கப்பட்ட இக் குறும்படத்தின் வெளியீடு சேவகம் நிறுவனத்தினால் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.
 

https://www.youtube.com/watch?v=0gjocM22noc

 

  • தொடங்கியவர்

109. கொலையாளி

 

'கொலையாளி'
இலங்கையில் தமிழக் குறுந்திரைப்படங்களுக்கான விருதுகள்:

இலங்கையைப் பொறுத்தவரையில், சிங்களத் திரைப்படத்துறை அதனளவில் அபார வளர்ச்சி அடைந்த ஒன்றாகவே உள்ளது. குறிப்பாக இலங்கைத் தமிழ்த் திரைப்டத்துறையுடன் ஒப்பிடும் போது சிங்களத் திரைப்படத்துறையானது தொழில்சார் துறையாக உச்ச நிலையில் உள்ளது என்றே சொல்லமுடியும்.

உண்மையில் இலங்கைத் திரைப்படத்துறை என்பது 'சிங்களத் திரைப்படத் துறை' ஆகவே உள்ளது. ஆயிரக்கணக்கான தொழில்சார் நிபுணர்களைக் கொண்ட ஒரு வயர்ச்சியடைந்த உட்கட்டமைப்பு சிங்களத் திரைப்படத் துறைக்கு உள்ளது. 'இந்தியன்' படத்துக்கான ஒப்பனைக் கலைஞர் கூட இலங்கையில் இருந்து சென்றுள்ளார் என்பது பலர் அறியாத உண்மை.

எல்லாவற்றுக்கும் மேலாக, சிங்களத் திரைப்படத்துறைக்கான அரச ஆதரவு 50களில் இருந்தே மிக பலமாக இருந்து வருகின்றது. எல்லா நாடுகளையும் போன்று இலங்கை அரசும் சினிமாத் துறையை வெறும் கலை ஊடகமாக அல்லாது அதன் மேலாதிக்கம், உலக அரங்கில் தனக்கான ஸ்தானம் அல்லது பிடிமானம் என்னும் வகையிலேயே பார்த்து வருகிறது.

சினிமா என்பது வெறும் கலை ஊடகம் அல்ல. அது வல்லரசுகளின் ஒரு ஆயுதமும் கூட. சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமான வல்லரசுப் போட்டியில் சினிமா ஒரு பிரதான ஆயுதமாக இருந்து வருகிறது. இது அவர்கள் வைத்திருக்கும் அணு ஆயுதங்களை விடவும் பலமான பங்கினை ஆற்றி வருகின்றன. ஈரான் மற்றும் பிரேசில், கியூபா போன்ற இலத்தீன் அமெரிக்க நாடுகள் சினிமாவை அமெரிக்க வல்லரசுக்கு எதிரான ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தி வருகின்றன. இந்தியாவின் சினிமா வெறும் கூத்தாடிகளின் குமமாளம் அல்ல. அதற்குப் பின்னால் இந்தியாவின் பொருளாதார நலனும் பிராந்திய மேலாதிக்க நகர்வும் உள்ளது. என்னதான் தலைகீழாக நின்றாலும் தமிழ்நாட்டில் ஒரு இலங்கைத் தமிழர் (பாலுமகேந்திரா, வி.சி.குகநாதன், ஐங்கரன் உட்பட) திரைப்படத்துறையில் ஒரு கட்டத்துக்கு மேல் செல்ல அனுமதிக்கப்படாதிருப்பதின் இரகசியம் இதுதான்.

சிங்களத் திரைப்படத் துறையின் மீதான இலங்கை அரசின் கவனமும், காத்திரமும் கூட இவற்றின் பின்னணியிலேயே அமைகின்றன என்பது மிக நுணுக்கமாகப் பார்த்தால் விளங்கும். இலங்கை அரசுக்கெதிராக எடுக்கப்படும் திரைப்படங்கள், தமிழர்களுக்கு ஆதரவானவை எனச் சொல்லப்படும் திரைப்படங்கள் கூட மறைமுகமாக இந்தப் பின்னணியிலேயே உருவாக்கப்படுகின்றன. அதிலும், அத்தகைய படங்களுக்கும், இலங்கை அரசு மறைமுக ஆதரவை வழங்கி வருகிறது என்பதுவும் ஒரு விடயம்.

2002 ஆம் ஆண்டு ஸ்க்றிப்நெட் (ScriptNet) இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டதின் முக்கிய நோக்கம், சிங்களத் திரைப்படத் துறைக்கு நிகரான ஒரு தமிழ்த் திரைப்படத் துறையை முஸ்லிம், தமிழர் சூழலில் உருவாக்குவது என்பதாகும். இந்த நோக்கத்தை அடையும் பொருட்டு, பாதுகாப்புப் பிரச்சினைகளைக் கையாளும் வகையில் பாவிக்கப்பட்ட உத்திகளும் தந்திரோபாயங்களும் பல. அதனடிப்படையில், முதற்கட்டமாக, குறுந்திரைப்படப் படைப்பாகத்தில் அதிக கவனத்தைச் செலுத்தியது. குறுந்திரைப்படத்தை தொழில்துறைசார் நுட்பங்களுடன், சர்வதேச தரத்துக்கு தயாரிப்பதற்கான பயிற்சிகளை வழங்கியதுடன், குறுந்திரைப்படம் செய்வது என்பது தமக்கு எட்டாக்கனி என்ற நிலைப்பாட்டிலிருந்த பல கலைஞர்களை ஒரே நாளில் ஒரு குறுந்திரைப்படத்தை செய்யமுடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்து அதனை செயற்படுத்தியும் காட்டியது. முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு தலையில் கைவைத்தப்படி பூனேக்குப் போய் படித்துவிட்டு வந்துதான் குறுந்திரைப்படம் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு பலர் இருந்து கொண்டிருந்த வேளை, அதனை ஒரு விளையாட்டாக, கவிதை எழுதல், படம் கீறுதல், போன்ற ஒரு தன்னெழுச்சியான படைப்பாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஸ்க்றிப்ட்நெட் பல முஸ்லிம், தமிழ் இளைஞர்களுக்கு வழங்கியது. தமிழ்ச் சூழலில் குறுந்திரைப்படம் என்னும் பாரிய அலை உருவாக அது முக்கிய ஒரு காரணமாக இருந்தது.

அந்த வகையில் ஸ்க்றிப்நெட் தனது நோக்கில் வெற்றி கண்டுள்ளது. இன்று இலங்கையில் தமிழச் சூழலில் நடைபெற்று வரும் குறுந்திரைப்படச் செயற்பாடுகள் பலவும் நேரடியாகவும் மறைமுகமாவும் அதன் தாக்கமாகவும், பெறுபேறாகவும் இருப்பதை அவதானிக்க முடிகிறது.

ஆயினும், எமது படைப்புகள், தமிழ்ச் சூழல் என்னும் வட்டத்தைக் கடந்து சிங்கள மற்றும் சர்வதேச சூழலில் நிலைநிறுத்தப்பட வேண்டியனவாகவும் நிரூப்பிக்கப் படவேண்டியனவாகவும் உள்ளன. ஏனெனில், எப்படி திரைப்படத்துறை ஏனைய சமூகங்கள், நாடுகளின் கையில் கலை, மற்றும் பொழுபோக்குக்கு அப்பாற்பட்ட கருவியாக உள்ளதோ அவ்வாறே இலங்கையில் முஸ்லிம், தமிழ் மக்கள் சார்ந்த ஒரு சமூகக் கருவியாக, பரந்த உலகில் எமக்கான இடம், பிடிமானம் என்பதாக தமிழ்த் திரைப்படங்கள் இருக்க வேண்டியுள்ளது.

அந்த வகையில், இலங்கையில் 2007ம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெற்ற குறுந்திரைப்பட போட்டியில் (Bonjour Award) ஸ்கிறிப்ற்நெட்டினால் தயாரிக்கப்பட்ட 'அழுத்தம்' திரைப்படம் 2007ம் ஆண்டுக்கான சிறந்த (முதலாவது) திரைப்படத்துக்கான விருதைப் பெற்றமை முக்கியமான வரலாற்றுச் சம்பவமாகும். போட்டிக்கு வந்த 168 குறுந்திரைப்படங்களுக்குள் 150 க்கு மேற்பட்டவை சிங்கள குறுந்திரைப்படங்களாகும். ஐந்து திரைப்படங்கள் விருதுக்காக சிபார்சிக்கப்பட்டு விழாவில் திரையிடப்பட்ன. அவற்றுள் அழுத்தம், செருப்பு ஆகியன தமிழ்க் குறுந்திரைப்படங்கள் (இரண்டும் ஸ்க்றிப்நெட் தயாரிப்புக்கள்).

இந்த விருதின் பின்னரான சம்பவங்கள் கவனிக்கப்பட வேண்டியவை.

அடுத்தநாள், சக்தி தொலைக் காட்சியில் செய்தியில் (தமிழ்) இந்த Bonjour Award விருது விடயம் சொல்லப்பட்டு விருது வழங்கப்படும் காணொளியும் காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆங்கிலச் செய்தியில் அந்தச் செய்தி சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இடையில் நிறுத்தப்பட்டு, திரை கறுப்பாக்கப்பட்டு பின்னர் வேறு விடயத்துக்கு செய்தி தாவியது.

அடுத்தது, இந்த விழாவுக்கு முன்னர், ஊடகங்களில் பெரும் நிகழ்வாக, இலங்கையில் பிரெஞ்சு பேசும் ஐந்து (France, Swiss, Canada, Belgium, Romania) நாடுகளினால், நடாத்தப்படும் முதல் குறுந்திரைப்பட விழா என்று கொண்டாடப்பட்டும் விருதுக்குப் பின்னர் அது ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் மட்டும் ஒரு பெட்டிச் செய்தியாக வந்தது. சிங்களப் பத்திரிகைகளில் அச் செய்தி வந்ததாக இல்லை.

அதைவிட முக்கியமான விடயம், ஒரு வரலாற்று முன்னெடுப்பாக ஆரம்பிக்கப்பட்ட அந்த குறுந்திரைப்பட விழாவின் முதலும் கடைசியுமாக அது இருந்தது.

அதே ஆண்டு, இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தினால் நடாத்தப்பட்ட சிங்கள-தமிழ் குறுந்திரைப் போட்டியில் ஸ்க்றிப்நெட்டினால் தயாரிக்கப்பட்ட குறுந்திரைப்படம் 'செருப்பு' இரண்டாவது இடத்துக்கான விருதைப் பெற்றது.

பிரஞ்சு திரைப்பட விழாவினால் நடாத்தப்பட்ட குறுந்திரைப்பட விழாவில் முதற் பரிசு எந்தக் குறுந்திரைப்படத்துக்கு வழங்குவது என்பதில் இரண்டு குறுந்திரைப்படங்களுக்கு இடையிலேயே போட்டி நிலவியது. அது 'அழுத்தம்' மற்று 'செருப்பு' ஆகிய தமிழ்க் குறுந்திரைப்படங்களுக்கிடையையே இருந்தன. இதனை, விருது வழங்கும் விழாவின் பின்னரான விருந்துபசாரத்தின் போது பிரான்ஸ், சுவிஸ், கனடா நாட்டு தூதரகத்தின் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்ட நடுவர்கள் என்னிடம் தெரிவித்தனர். சிலர் அழுத்தம் திரைப்படத்துக்கு வாக்களித்தாகவும் வேறு சிலர் செருப்பு குறுந்திரைப்படத்துக்கு வாக்களித்தாகவும், இறுதியில் அழுத்தத்துக்கு அதிக வாக்குகள் கிடைத்தாகவும் சொன்னார்கள்.

அத்தகைய செருப்பு' குறுந்திரைப்படத்துக்கு இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபன குறுந்திரைப்பட விழாவில் இரண்டாம் இடம் கிடைத்தது. முதலாவது இடத்தைப் பெற்ற, குறுந்திரைப்படத்தின் இயக்குனர், திரைபபடப்பட இயக்கம் சம்பந்தமான மேற்படிப்பு படிப்பதற்காக வடகொறியா நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதற்கான புலமைப்பரிசிலை வடகொறியா வழங்கியது.

இந்நிலையில்,

இன்று 2013, டிசம்பர் 04 மொறட்டுவ பல்கலைக் கழகத்தினால் ('Pehesara 2013' cultural festival) நடாத்தப்பட்ட சிங்கள-தமிழ் குறுந்திரைப்படப் போட்டியில் மொறட்டுவ பல்கலைக் கழக மாணவர்கள் சுபாஸ், கணரூபன், தனஞ்சயன் ஆகியோரின் உழைப்பில் உருவாகியுள்ள 'கொலையாளி யார்' என்னும் குறுந் திரைப்படம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளமை இலகுவாக எடுக்கப்பட வேண்டிய விடயம் அல்ல. ஏனெனில், இலங்கையில் சிங்களச் சூழலில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் ஒரு தமிழ்க் குறுந்திரைப்படம் விருது பெறுவது கேன்ஸ் விருதை (Cannes Award) விடக் கடினமானது.

'கொலையாளி யார்' குறுந்திரைப்படத்துக்கு விருது கிடைத்தது பற்றி கணரூபன் அவர்கள் முகநூலில் எழுதியுள்ள குறிப்பில் இருந்து சில மேற்கோள்கள்:

//பெருமளவு செலவினங்கள், அதீத தொழிநுட்பங்கள், பெரிய அணிகள், தொழில்முறை இயக்குனர்கள், திரைப்படத் துறையில் உள்ள தயாரிப்பாளர்கள் எனும் வகையறாவில் மொத்தம் 7 படங்கள் வந்திருந்தன.

ஒவ்வொன்றினதும் அழகியலும் ஒளிப் பதிவுத் தரமும் சொல்லி மாளப் பட முடியாதவை. நடித்த அனைவருமே தொழில்முறை நடிகர்கள். அவைகளில் அவ்வளவு நேர்த்தி, தரம், எழில். செலவு இலட்சங்களிலும் இருக்கலாம். நாங்கள் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தோம்.//

//கடைசியில் எங்களுக்குத்தான் இரண்டாவது இடம் அறிவிக்கப் பட்டது.

ஏன்?

ஒரே ஒரு காரணந்தான்.

எமது படத்தில் ஒரு கதை இருந்தது. அது முழுக்க முழுக்க எங்களுடையதாயிருந்தது.

இந்தப் படத்துக்கான அங்கீகாரம், உண்மையில் கதைக்கான அங்கீகாரம், வெற்றி.

'கதை' என்பதன் வீரியத்தினையும் முக்கியத்துவத்தினையும் நெற்றிப் பொட்டில் அறைந்து தீர்ப்புச் செய்த நடுவர்களுக்கு நன்றி.//

 

https://www.youtube.com/watch?v=ULSgsEg5Zwk

Edited by sOliyAn

  • தொடங்கியவர்

110. தாய் (ஈழம் குறும்படம்)

 

https://www.youtube.com/watch?v=_xsS5pd4Wd0

  • தொடங்கியவர்

111. மௌனம் (ஈழம் குறும்படம்)

 

https://www.youtube.com/watch?v=NnSSvt6kBuE

  • தொடங்கியவர்

112. விடிநிலம் (ஈழம் குறும்படம்)

 

https://www.youtube.com/watch?v=JXlIwOobwvc

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.