Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செட்டிகுளத்தில் இராணுவம் கோரும் 6348 ஏக்கர் காணிகளை வழங்க முடியாது! - ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முடிவு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செட்டிகுளத்தில் இராணுவம் கோரும் 6348 ஏக்கர் காணிகளை வழங்க முடியாது! - ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முடிவு. photo.png 

[sunday 2014-07-06 19:00]
chettikulam-meeting-200-news.jpg

வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்தில் இராணுவ தேவைக்காகக் கோரப்பட்டுள்ள 6348 ஏக்கர் காணியையும் அவர்களுக்கு வழங்க முடியாது என செட்டிகுளம் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா, செட்டிகுளம் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று மாலை செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் வர்த்தக கைத்தொழில் அமைச்சரும் வன்னி அபிவிருத்திக் குழு தலைவருமான றிசாத் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது-

  

செட்டிகுளம் பிரதேச மக்களின் காணிகள் உள்ளடங்கலாக 6348 ஏக்கர் காணியை இராணுவத் தேவைக்காக வழங்குமாறு காணி அமைச்சின் மேலதிக செயலாளரினால் செட்டிகுளம் பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடப்பட்டிருந்தது. இந்தக் காணிகள் தனியாருக்கு சொந்தமானவையாகும். அதில் அருவி ஆற்றின் கீழ் விவசாயம் செய்கை பண்ணப்பட்ட 600 ஏக்கர் வயல் நிலமும் அடங்குகின்றது. தற்போது இந்தக் காணிகளுக்குள் நுழைய முடியாது எனவும் இது இராணுவத்தினரின் காணி எனவும் அறிவிப்புப் பலகை நடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். மக்களின் காணியை சுவீகரிக்க ஒரு போதும் அனுமதிக்க கூடாது என அப் பகுதி பொது அமைப்புக்கள் கோரிக்கை விட்டன. இது தொடர்பில் அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் இடம்பெற்ற நீண்ட விவாதங்களின் முடிவில் இக் காணியை இராணுவத் தேவைக்கு வழங்க முடியாது எனவும் அதனை மக்கள் பாவனைக்கு அனுமதி வழங்கவேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், நுனைஸ்பாறுக், முத்தலிப் பாறுக், வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, ஜெயதிலக, வடமாகாண சுகாதார அமைச்சின் பிரத்தியேக செயலாளர், செட்டிகுளம் பிரதேச செயலாளர் கமலதாசன், செட்டிகுளம் பிரதேச சபை உப தவிசாளர் சந்திரமோகன், பிரதேச சபை உறுப்பினர் சிவம், கிராம அலுவலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

 

chettikulam-meeting-060714-seithy%20(1).

 

 

chettikulam-meeting-060714-seithy%20(2).

 

 

chettikulam-meeting-060714-seithy%20(3).
 
நன்றி - செய்தியிணையம்

 

btn-back.gif   lg-share-en.gif

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.