Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகச்சமரில் புறமுதுகு காட்டக்கூடாது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ico_aaivu.gif :arrow: [url=http://www.eelampage.com/?cn=28853]ஊடகச்சமரில் புறமுதுகு காட்டக்கூடாது

[செவ்வாய்க்கிழமை, 19 செப்ரெம்பர் 2006, 20:18 ஈழம்] [லண்டனிலிருந்து சி.இதயச்சந்திரன்]

தற்போது புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் மத்தியில் பதற்றமான கருத்துநிலையொன்று நிலவி வருகிறது. போராட்டச் சார்பு நிலை ஊடகங்களின், கள நிலவரங்களை பரப்புரைச் செய்தியாக்கும் தன்மையாலும் எதிர்நிலையில் உள்ள இணையத்தளங்களின் மலிவுச் செய்திகளாலும் மக்கள் அதிகமாகவே குழப்பமடைந்துள்ளனர்.

போராட்டச் சார்புநிலை பரப்புரைகளில் சமீப காலமாக தோன்றியிருக்கும் மந்த நிலையும், அதனுள் உள்ள உள்ளார்ந்த அரசியல் பரிமாணங்களை புரிந்து கொள்ளாத சமகால ஆய்வுகளும் பரவிக்கிடக்கின்றன.

செய்தித் தொகுப்புக்களை ஆய்வுகளாக முன்வைப்பதும், இராணுவ நகர்வுகளை சினிமாப் பாணியில் சித்தரிப்பதும் வாசகர் மனங்களில் மர்ம நாவல் படிப்பது போன்றதொரு பிரேமையையும் அடுத்து என்ன நடக்கும் என்ற திகிலூட்டலையும் ஏற்படுத்திவிடுகிறது.

விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளராக இராசையா இளந்திரையன் இருந்தாலும், அடிப்படையில் அரசியல் சார் துறையில் நீண்டகால அனுபவம் பெற்றிருப்பதனால் இராணுவ நகர்வுகளை வெளிப்படுத்துகையில் அதில் அரசியல் பரிமாணங்கள் மேவி நிற்கின்றன.

வலிந்து தாக்குதல், தற்காப்புத் தாக்குதல் போன்ற சொல்லாடல்கள், அறிக்கைகளின் அரசியல் அளவுப் பரிமாணம் சிதைவுறாமலும் தாக்குதல் பின்னணியின் தந்திரோபாய அரசியல் கருத்துநிலை இணைந்தும் பிரயோகிக்கப்படுகின்றன.

பொதுவாக வெற்றிச் செய்திகளில் மக்களின் மிதப்பு நிலை உணர்வுகள் தூண்டப்படுகின்றன. தந்திரோபாய இராணுவ பின்னகர்வுச் செய்திகளில் அது குறித்த அரசியல் தந்திரங்கள் கோடிட்டுக் காட்டப்படாவிட்டால் தடுமாற்றம் ஏற்படும்.

அரசியல், இராணுவ மூலோபாய உத்திகளை விடுதலைப் புலிகள் வெளிப்படையாகக் கூறிவிட முடியாது. ஏனெனில் எதிரியின் அடுத்த நகர்விற்கான அடித்தளமாகவும் அது அமைந்துவிடும். இருப்பினும் போராட்டச் சார்பு கருத்து நிலைவாதிகள், நடக்கும் நிகழ்வுகள் தொடர்பான தமது அரசியல் துணிபுகளை தெளிவாகவும் திடமாகவும் முன்வைக்க வேண்டும்.

தமது ஆய்வுத் துணிபுகள் அடுத்து வரும் இராணுவ அரசியல் மாறுதல்களினால் தவறாகப் போய்விடலாமென்று தயக்கமுற்று அதனை வேண்டுமென்றே தவிர்க்கக் கூடாது.

ஆரம்ப கால கட்டத்தில், விடுதலைப் புலிகளை ஒரு இராணுவக் குழுவாக சித்தரித்தவர்கள், தற்போது அதன் அரசியல் படிமுறை வளர்ச்சியினைக் கண்டு திகைப்படைந்துள்ளனர். இடைக்காலத் தன்னாட்சி கோரிக்கைகளுள் மூழ்கிவிடுவார்கள் என்றும் தனிஈழம் கேட்டவர்கள் சமஸ்டிக்குள் புதைந்து விடுவார்கள் என்றும் குறி சொன்னவர்கள் தற்போது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை பற்றி பேசுகின்றனர்.

இவர்களின் பரப்புரைகளை எதிர்கொண்டு காத்திரமான ஆய்வுகளை மேற்கொள்வது மக்களை அரசியல் மயப்படுத்தும் முன்னகர்வுகளுக்கு இட்டுச் செல்லும்.

விடுதலைப் புலிகளின் தாக்குதலொன்று வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால் தற்காலிக விரக்திநிலையானது மக்கள் மனங்களிலிருந்து நீங்கும் என்றும் அந்த வெற்றிச் செய்திக்கான களப்பின்னணியை ஆய்வு செய்வதிலேயே சிலர் புளகாங்கிதமடைகின்றனர்.

அரச படைத்துறைப் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெலவின் ஊடகவியலாளர்களுடனான சந்திப்புக்களில் அவரால் வெளியிடப்படும் கருத்து நிலை கோணல்களை முன்னிலைப்படுத்தி அரசின் இன மேலாதிக்க சிந்தனைகளை உடனடியாக அம்பலப்படுத்த வேண்டும்.

எனினும் ஊடகச் சமரில் அரசின் கை மேலோங்கியுள்ளது. சிறு வெற்றியை மையப்படுத்தி சோடிக்கப்படும் போலிப் பரப்புரைகளின் வீச்செல்லை அதிகரிப்பதனையும் உணர வேண்டும்.

அண்மையில் உருவாக்கப்பட்ட சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியமானது தனது பங்களிப்பினை ஆரோக்கியமாகவும் திடமாகவும் மேற்கொள்ள வேண்டிய தருணம் இது.

புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் மக்கள் எழுச்சி ஒன்றுகூடல்களுக்கு, அந்தந்த நாடுகளில் உள்ள ஊடகவியலாளர்களை அழைத்துப் பங்கேற்க வைக்கும் கடப்பாடும் இவர்களுக்கு உண்டு.

சர்வதேச "லொபி" என்பது மக்களை நேரடியாக அணுகுவது என்ற வட்டத்திற்குள் மட்டுப்படுத்தப்படக்கூடாது. அதற்கும் மேலாக வாசிப்பு, ஒளி ஊடகங்களினூடாகவும் இத்தகைய பிரச்சாரங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும்.

ஏனெனில் மேற்குலக ஊடகங்கள், அரசின் பிரச்சார அறிக்கைகளை முதன்மைப்படுத்தி விடுதலைப் புலிகளின் படை வலுச்சமநிலை சீர்குலைக்கப்பட்டுள்ளது போன்றதொரு தோற்றப்பாட்டினை உருவாக்குகின்றது.

உதாரணமாக 61 சிறார்களின் படுகொலைக்கு அளிக்கப்பட்ட பிரச்சார முக்கியத்துவமானது 17 பிரெஞ்சு நிறுவனப் பணியாளர்களின் கொலைக்கு வழங்கப்பட்வில்லை. இப்பட்டினிக்கெதிரான தொண்டர் அமைப்பினரின் மீது அரசு கட்டவிழ்த்துவிட்ட இனவெறி அழிப்பு ஐரோப்பியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
114785VBDA_w.jpg

ஊடகமென்பது பரப்புரைச் சாதனமாக வேண்டும்.

ஊடகமென்பது பரபரப்புரைச் சாதனமாக மாறக்கூடாது.

என்று என்னத்தை சொல்ல வருகிறார்? குளப்பமாக இருக்கு? :?

பரப்புரைக்கு என்று ஊடகம் இருக்க வேண்டுமே அன்றி ஊடகத்திற்கா (வியாபாரத்திற்கா) பரப்புரை செய்யக்கூடது என்றாரா? :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளின் தாக்குதலொன்று வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால் தற்காலிக விரக்திநிலையானது மக்கள் மனங்களிலிருந்து நீங்கும் என்றும் அந்த வெற்றிச் செய்திக்கான களப்பின்னணியை ஆய்வு செய்வதிலேயே சிலர் புளகாங்கிதமடைகின்றனர்.

எனினும் ஊடகச் சமரில் அரசின் கை மேலோங்கியுள்ளது. சிறு வெற்றியை மையப்படுத்தி சோடிக்கப்படும் போலிப் பரப்புரைகளின் வீச்செல்லை அதிகரிப்பதனையும் உணர வேண்டும்.

இந்த ஊடக பரப்புரைகளை எங்கட ஆக்கள் சரியா செய்ய இல்லை எண்டதுதான் உண்மை...! அப்பிடி சிலர் செய்ய வெளிக்கிட்டால் உண்மைத்தன்மை அது இது எண்டு சொல்லி குளப்பி போடுவினம்...!

எனக்கு நிதர்சனம் செயற்பட்ட விதம் உண்மையிலேயே திருப்தியாக இருந்தது....! சிங்கள நாளேடுகளில் நிதர்சனத்தை புலிகளின் புலநாய்வாளர்களின் இதள் எண்று சொல்லும் அளவுக்கு அவர்களின் வெறுப்புக்கு உள்ளாகி இருந்ததை காணக்கூடியதாக இருந்தது....! அது உண்மை இல்லை என்பது தமிழ் மக்களுக்கு தெரியும்... நிதர்சனமும் விளக்கம் போட்டு இருக்கு...!

தீவிர போக்கு ஊடகங்கள் என்பன சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் வந்து கொண்டு இருக்கின்றன... ஆனால் அப்படி ஒண்டு தமிழில் வரக்கூடாது என்பது மட்டும் ஏன் எண்டு எனக்கு இப்பவும் விளங்க இல்லை...!

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"சிங்களவரின் இராஐதந்திச முயற்சிகளால் 60 நாடுகள் வரை ஈழத் தமிழரின் விடுதலை முயற்சிகளுக்குத் தடையாக உள்ளன. போரில் ஈழத் தமிழர் காட்டும் அதே இறுக்கத்தையும் உத்வேகத்தையும் இராஞதந்திரத்தில் காட்டுவதில்லையே. உலகம் முழுவதும் ஈழத் தமிழர் பரந்து வாழும் இந்தச் சமயத்தில் சிங்களவரின் இராஜதந்திர முயற்சிகளை முறியடிக்க ஈழத் தமிழர்களால் முடியவில்லையே...."

-----------------------

இந்த தமிழ் பேராசிரியருக்கு இருக்கிற அக்கறையை நான் மனப்பூர்வமாக மெச்சுகிறேன்... இவருக்கு இருக்கின்ற இந்த அக்கறையில் சிறு துளியேனும் எங்களுடைய புலம்பெயர்ந்த மக்களிடத்தில் காணவில்லையே என்பது மிகவும் வருத்தத்துக்குறிய காரியம்.

சமிபத்தில், conflict Management(முரண்பாடுகளை சமாளித்தல் ?) என்ற ஒரு கறுத்தரங்கத்திற்குக்கு (seminar) போயிருந்தேன். அதில் நான் ஒருவனே கறுப்பன் எல்லொரும் வெள்ளையும் மஞ்சள் தோலுமாயிருந்தார்கள். எனக்கு தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட யாவரும் இலங்கையில் 'பயங்கரவாதப் பிரச்சிணை' ஒன்று இருப்பதகவே தங்களுக்குத் தெரியும் என்று தெறிவித்துக்கொண்டார்கள்... இதற்குக் காரணம், சிங்களவர்கள் வெகுத் திறமையாக தங்கள் பரப்புறைகளைச் செய்துள்ளார்கள்; முழு உலகிற்கும் உண்மை நிலையை பார்க்காதவண்ணம் முழுவதையும் மூடி மறைத்து, இன்று இலங்கையில் நடப்பது ஒரு பயங்கரவாதப் பிரச்சனையே என்று திறம்பட கூறிவருகிறார்கள்.

ஓரு சர்ந்தர்ப்பத்தில் நாங்கள் யாவரும் சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு,அந்தக்க்குழு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் ஒபராகவுசில் கலைநிகழ்ச்சி நடத்தி போட்டான் என்று பெருமையாக பேசும் நிலையில் புல தமிழன் இருக்கிறான் இதற்கு விளக்கம் வேறு கொடுக்கிறான் இந்த நிகழ்ச்சிக்கு போகாமல் இருந்திருந்தால் ஜேசுதாசுக்கும் அவ்ரோடு வந்த கலைஞர்களுக்கும்,நிகழ்சியை ஒழுங்கு செய்த அமைப்பாளர்க்கும் ஒரு கேள்வி எழுந்திருக்கும் ஏன் மக்கள் கலந்து கொள்ளவில்லை என்று ? இதன் மூலம் ஈழதமிழருக்கு ஏதோ ஒரு பிரச்சினை இருக்குது அது தான் நிகழ்ச்சியை புறகணித்து இருக்கிறார் என்ற தோற்பாடு நடத்தியவர்களுக்கும் அதில் பங்குகொள்ள வந்த கலைஞர்களுக்கும் விளங்கியிருக்கும் அதன் மூலம் ஏனைய இந்திய சகோதரர்களுக்கும் புரிந்திருக்கும்,நாங்கள் போய் ஆரவாரம் செய்து விசில் அடிப்பதன் மூலம் அவர்களின் மனதில் அவர்களுக்கோ அவர்களின் இனத்தவரும் சந்தோசமாக இருக்கிறார்கள் அவர்களின் நாட்டில் உள்ளவர்களும் சந்தோசமாக் உள்ளனர் என்ற நிலைப்பாட்டே நாங்களே உருவாக்கிவிட்டுள்ளோம்.

நிகழ்ச்சியை தான் நடத்தினோம் ஒரு 10 நிமிடம் எமது போராட்டத்தை பற்றியோ மாவீரர்களை பற்றியோ கதைத்தார்களா?

25 எம்மவருக்கு பாடசாலைகளில் கருத்தரங்கு வைப்பதன் மூலம் நாங்கள் ஒன்றும் சாதிக்க முடியாது. 2000 பேர் அதிலும் இந்திய சகோதரர்களும் கலந்த நிகழ்ச்சியில் இதற்காக ஒரு 10 நிமிடம் செலவழித்து வைத்திருந்தாலும் அது சிறந்த பரப்புரையாக இருந்திருக்கும்.

விழாமலரில் ஆவது ஒரு பகுதியை இதற்காக பாவித்திருக்கலாம்.தமிழன் ஒப்ராகவுசில் நிகழ்சி நடத்தினது தான் பெருமை என்றால் நான் மேற்கூறியவற்றை வாசிக்காம பெருமையை பற்றி வாசிக்கவும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

kfirr.jpg

இப்படியான படங்களை சேர்த்து வையுங்கோ.... உலகத்திற்கு இவருடைய விலையாடுக்கள எடுத்து காட்டத் தான் வேண்டும். அடுத்தது இஸ்ரவேல் காரியாலயத்திற்கு முன்பால புடிச்சுகொண்டு நிற்கிரத்திற்கும் இது நல்ல படம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
moorthy.gif
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
captsgeclk18161006153551photo00photodefault512x384gb8.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

kfirr.jpg

பின்னால் சுவருக்கு அருகாமையிலிருப்பவர் (அப்புகாமி - வாயில கைய வச்சிகிட்டு இருக்கிறவர்) இப்ப வீட்டில இருந்து கொண்டு சொல்லுகிறார்:

"நான் அப்பவே நினைச்சன், இந்த நாசமத்துபோன வெதமாத்தயா அதில ஏறி உட்காருரார்... என்ன சாபக்கேடோ என்று".....

"இப்ப அது சரியா தான் போச்சு... சனியன் விழுந்து நொறுங்கிறீச்சாம்..."

"...என்ற வாயில சக்கர கொஞ்சம் பொடுங்கோ..."

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

slaf_bombing_16_10_06_04.jpg

slaf_bombing_16_10_06_03.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.