Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் கலவரங்களை ஏற்படுத்தி நாட்டை பிரிப்பதற்கு அமெ. துணைபோகிறது - விமல் வீரவன்ஸ குற்றச்சாட்டு -

Featured Replies

wimal%20vera%2094df.jpg

 

 

 

அமெரிக்கத் தூதரகத்தின் கீழ் உள்ள யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் நிதியுதவி திட்டத்தின் கீழ் ஜ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடாக 5 ஆயிரம் இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இணையத்தளப் பயிற்சியளித்து வருகின்றது. இலங்கையில் இணையத் தளங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்களுக்கு சம்பளமும் வழங்குகின்றது. இந்த இளைஞர்கள் அரசுக்கும் எதிராக செயற்படுவதற்கே இந்த திட்டத்துக்குஅமெரிக்கா தூதரகம் நிதி வழங்குகின்றது. - என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
 
நேற்று மொனராகலை பொதுநூலக மண்டபத்தில் வைத்து 250 குடும்பங்களுக்கு 250 மில்லியன் ரூபா வீடமைப்புக் கடன் திட்டத்தை வழங்கி வைக்கும் வைபவத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் விமல் அங்கு மேலும் உரையாற்றுகையில்- இந்த நாட்டில் 5 ஆயிரம் இளைஞர்களைத் திரட்டி இணையத்தளமொன்றை நிறுவி அவர்களுக்கு மூளைச் சலவை செய்வதன் நோக்கம் என்ன? இந்த அரசுக்கு எதிராக செயற்படும் திட்டத்தையும் இந்த இளைஞர்களது மனதை மாற்றும் வழி வகைகளையும் ஜ.தே.கட்சி ஊடாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரிகளும் தூதுவரும் செயல்படுகின்றனர் எனத் தெரியவருகின்றது. அமெரிக்கா, கடந்த காலத்தில் சிரியா, ஈராக், எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் கலவரங்களை ஏற்படுத்தி அந்நாடுகளை சின்னாபின்னாமாக்குவது போன்று இலங்கையிலும் மேலும் கலவரங்களை ஏற்படுத்தி இந்த நாட்டையும் பிரிப்பதற்கும் தற்போதைய ஆட்சியில் உள்ள அரசையும் மாற்றுவதற்கும் அமெரிக்கா துணைபோகின்றது.
 
ஈராக், லிபியா போன்ற நாட்டில் ஆட்சியில் இருந்த சதாம் ஹூசைன், கேணல் கடாபி போன்றவர்களது ஆட்சிக்கு எதிராக அமெரிக்கா ஆயுதங்களையும் நிதிகளையும் வழங்கி அந்த ஆட்சியாளர்களை கொன்றனர். அதன் பின் இந்த நாடுகளில் வந்த ஆட்சியாளர்கள் யார்? அமெரிக்காவின் அடிவருடிகள். அவர்கள் சொல்வதை செய்பவர்கள். இவ்வாறு சகல அரபு நாடுகளையும் குட்டிச் சுவராக்கி தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது. இந்த அமெரிக்காவுக்கு துணைபோகின்ற சில அரபுநாடுகளும் உள்ளன. இவ்வாறாக இணையத்தளங்களை ஏற்படுத்தி அரசாங்கத்தை பிழையான நிலைக்கு இட்டுச் செல்வதற்காக சமூகத்தில் உள்ள ஊடகவியலாளர், தலைமைத்துவம், மற்றும் சட்டத்தரணிகள் சங்கங்கள் போன்ற அமைப்புகளுக்கெல்லாம் அமெரிக்கத் தூதரகம் டொலர்களில் நிதி வழங்குகின்றது. அந்த நிதிக்காக துணைபோகின்ற பல இயக்கங்கள், சங்கங்கள், அரச சார்பற்ற நிறுவணங்கள் கட்சிகள் பல நம் நாட்டில் உள்ளன. அண்மையில் அளுத்கம, பேருவளை நடைபெற்ற சம்பவங்களை அல்ஜஸீரா, பி.பி.ஸி. சீ.என். ஆகிய ஊடகங்கள் சர்வதேசமயப்படுத்தியுள்ளன.
 
இலங்கையில் பௌத்தர்கள் முஸ்லிம்களைக் கொல்லுகின்றார்கள் என்ற தொனியில் சர்வதேசத்தில் ஓர் ஈனப் பெயரை ஏற்படுத்தியுள்ளது.. ஆனால் பிரான்சில் முஸ்லிம்களது பர்தா உடைக்கு தடைவிதிப்பு, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் முஸ்லிம்களின் பள்ளிவாசல் உடைப்பு போன்ற பல்வேறு சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்தச்ச சம்பவங்களை எப்போதாவது இந்த சர்வதேச ஊடகங்கள் சொல்லிக் காட்டியுள்ளனவா? ஆகக்குறைந்தது இந்தப் பிரச்சினை பற்றி சம்பந்தப்பட்ட நாட்டின் தலைவர்களுக்கு ஜக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூன் முஸ்லிம்களின் பாதுகாப்பைப் பற்றி அறிக்கை சமர்ப்பித்துள்ளாரா எனக் கேட்க விரும்புகின்றேன். - என்றார் அவர். -  http://malarum.com/article/tam/2014/07/07/3469/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.html#sthash.OGShSOjQ.dpuf
 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இலங்கையில் கலவரங்களை ஏற்படுத்தி நாட்டை பிரிப்பதற்கு அமெ. துணைபோகிறது - விமல் வீரவன்ஸ குற்றச்சாட்டு -

 

 

இவருக்கும் ஈழத்தமிழர் பிரச்சனைதான் சோறு போடுது. சிங்களவனுக்கும் இதை விட்டால் வேறை பிரச்சனையே இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.