Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேச்சுக்கு மத்தியஸ்தம் வகித்தால் நாம் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம்; தென்னாபிரிக்க குழுவிடம் சம்பந்தன் உறுதி

Featured Replies

TNA%20SA%20meet%206551255.jpg

 

தென்னாபிரிக்கப் பிரதிநிதிகளுடனான இன்றைய சந்திப்பு ஆக்கபூர்வமானதாக அமைந்தது. அவர்கள் தமது நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வந்தனர் என்பது குறித்து எமக்கு விளக்கினர்.
 
இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வை எட்டுவதற்கு தாம் முழு ஆதரவை வழங்குவோம் என்றும் தென்னாபிரிக்க குழுவினர் உறுதியளித்தனர். இவ்வாறு 'மலரும்' இணையத்துக்கு தெரிவித்தார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். தென்னாபிரிக்க உப ஜனாதிபதி சிறில் ரமபோஷா தலைமையிலான குழுவினர் இன்று காலை 7.15 மணி தொடக்கம் 8.45 மணி வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளை கொழும்பில் சந்தித்துப் பேசினர்.
 
இந்தச் சந்திப்புக் குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
 
ஏற்கனவே தென்னாபிரிக்காவில் நாம் தீர்வு முயற்சிகள் குறித்து சந்திப்புக்களை நடத்தியிருந்தோம். இதன் தொடர்ச்சியாகவே இன்றைய சந்திப்பும் அமைந்தது. இந்தப் பேச்சும் எமக்குத் திருப்திகரமாக அமைந்தது. அவர்கள் தமது நாட்டுப் பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்பட்டது என்பது குறித்து விளக்கினர். இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தென்னாபிரிக்கக் குழுவினர் மத்தியஸ்தம் வழங்கினால் நாம் அவர்களுக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம். இங்கு பல தரப்பட்ட தரப்பினர் இருக்கின்றனர் அவர்களுடனும் விரிவாகப் பேசி ஓர் இணக்கத்திற்கு வருவதே முக்கியமானது - என்றார்.
 
இன்றைய சந்திப்பில் தென்னாபிரிக்க குழு சார்பில் அந்நாட்டு உதவி ஜனாதிபதி சிறில் ரமபோஷ, உதவி வெளிவிவகார அமைச்சர் இப்ராகிப் இஸ்மாயில் இப்ராகிம், தற்போது ரமபோஷவின் சிரேஸ்ட ஆலோசகர் றூத் மேயர், ஐவர் ஜெனின், இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் ஆகியோர் கலந்துகொண்டனர். தென்னாபிரிக்க கறுப்பினப் பெரும்பான்மையினருக்கும் சிறுபான்மை வெள்ளையருக்குமிடையில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முக்கிய பங்காற்றியவர்களாக ரமபோஷவும் றூத் மேயரும் விளங்குகின்றனர். கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிரதிநிதியாக இப்போதைய உப ஜனாதிபதி சிறில் ரமபோஷவும் வெள்ளையர்களின் பிரதமரான டி கிளார்க்கின் பிரதிநிதியாக றூத் மேயரும் செயற்பட்டனர். இவர்கள் இருவரின் மூலமே அந்த நாட்டுப் பிரச்சினை தீர்க்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டு தரப்பிலுமாக முக்கியத்துவம் வகித்த பிரதிநிதிகள் இலங்கை விவகாரத்தைக் கையாள்வதற்கு வந்திருப்பது முக்கியமானது என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
 
கூட்டமைப்பு பிரதிநிதிகள் சார்பாக சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டனர்.
 
http://malarum.com/article/tam/2014/07/08/3475/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF.html#sthash.C02tgVzJ.dpuf
 
 
  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியில் போய் பேசிட்டு வந்தும் ஆக்கபூர்வம் என்று தான் சொல்லிச்சினம். அப்புறம் பார்த்தா.. 13+.. 13 ஆகி அப்புறம்.. 0 ஆன கதை தெரியுமில்ல.

 

அதுபோல.. இதுவும் ஆகி.. போர்க்குற்ற சிறீலங்காவை.. குற்றமற்ற சிறீலங்கா ஆக்கி நிற்காமல் விட்டாலே பெரிய காரியம்.


சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும். அதனை எமக்கு சாதமாக்கிக் கொண்டு வருவது எமது இராஜதந்திரத்தில் தங்கி உள்ளதே அன்றி இணங்கிச் செல்வதில் அல்ல...!!!! :icon_idea:

  • தொடங்கியவர்

பேச்சுக்களுக்கு முன்னோடியாக இராணுவ ஆக்கிரமிப்பு நீக்கப்பட வேண்டும் - தென்னாபிரிக்க குழுவிடம் TNA
 

 

TNA_CI.jpg

பேச்சுவார்த்தை ஒன்று ஆரம்பமாவதற்கு முன்னர் வடக்கு, கிழக்கில் காணப்படும் இராணுவ ஆக்கிரமிப்பு தளர்த்தப்பட்டு, இடம்பெயர்ந்த மக்களுடைய மீள் குடியேற்றம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை தென்னாபிரிக்க தூதுக்குழுவிடம் வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இதனை தாம் ஒரு முன்நிபந்தனையாக முன்வைக்கவில்லை எனவும், மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இதனை அரசாங்கம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றது. 

கொழும்பு தாஜ் சமூத்திரா ஹொட்டலில் இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டழமைப்புக்கும் தென்னாபிரிக்காவின் பிரதி ஜனாதிபதி சிறில் ரமபோசவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. காலை 7.15 க்கு ஆரம்பமான இச்சந்திப்பு 8.45 வரையில் நீடித்தது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், மாவைசேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், தென்னாபிரிக்க பிரதி ஜனாதிபதி சிறில் ரமபோச தலைமையிலான குழுவில், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிம், ரோயல் கிளாக் உட்பட ஆறு பேர் இடம்பெற்றிருந்தனர். 

கூட்டமைப்பின் சார்பில் பேச்சுக்களுக்குத் தலைமை தாங்கிய சம்பந்தன், போருக்குப் பிந்திய நிலைமைகள் குறித்து விளக்கிக் கூறினார். 'வடக்கில் பாரியளவில் இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. பொதுமக்களுடைய காணிகளில் இராணுவம் ஆக்கிரமித்துள்ளதால் இடம்பெயர்ந்த மக்கள் பெருமளவுக்கு மீளக்குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது. 

அதனால், இராணுவப் பிரசன்னம் நீக்கப்பட்டு மக்கள் மீளக்குடியேறி வழமையான வாழ்க்கையைத் தொடர்வதற்கான சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.  முன்னிரிமை அடிப்படையில் இதனைச் செய்ய வேண்டும். இதன் மூலமாக மட்டுமே மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்' என சம்பந்தன் தெரிவித்தார். 

சமாதானப் பேச்சுவார்த்தை முயற்சிகள் மற்றும் பாராளுமன்றத் தெரிவுக்குழு குறித்து தென்னாபிரிக்க குழுவினர் கேள்வி எழுப்பிய போது பதிலளித்த சம்பந்தன், அரசாங்கத்துடன் மூட்டமைப்பு முன்னர் நடத்திய பேச்சுக்கள் தொடர்பில் விளக்கினார். 'அரசாங்கத்துடன் ஒருவருடகாலமாக கூட்டமைப்பு பேச்சுக்களை நடத்திய போதும் அரசாங்கமே பேச்சுக்களை முறித்துக்கொண்டது' எனக் குறிப்பிட்ட சம்பந்தன், இலங்கை இந்திய உடன்படிக்கை உட்பட முன்னைய உடன்படிக்கைகளை முன்னைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தத்தவறிய வரலாற்றையும் விளக்கினார். 

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் நம்பிக்கை வைக்க முடியாததத்கான காரணங்களையும் தெரிவித்த சம்பந்தன், அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் காணப்படக்கூடிய உடன்படிக்கையை பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்பாக கொண்டு செல்வதற்கு அரசாங்கம் தயாராக இருக்குமாயின் அது தொடர்பில் பரிசீலிக்கலாம் எனவும் தெரிவித்தார்.  

இந்த நிலையில் கூட்டமைப்புடனான பேச்சுக்களைத் தொடர்ந்து தென்னாபிரிக்க குழு யாழ்ப்பாணம் புறப்பட்டுள்ளது. 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/109125/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.