Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.நகரில் தனிநாயகம் அடிகளாருக்கு உருவச்சிலை! - அடுத்தமாதம் 2ம் திகதி திறப்பு விழா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்.நகரில் தனிநாயகம் அடிகளாருக்கு உருவச்சிலை! - அடுத்தமாதம் 2ம் திகதி திறப்பு விழா 
[Friday 2014-07-11 09:00]
யாழ். நகரில் உள்ள மடத்தடிப் பகுதியில், திருக்குடும்ப கன்னியர்மட பாடசாலை அருகில் அரச மரத்தின் கீழ் தனிநாயகம் அடிகள் நினைவு முற்றம் அமைக்கப்படும் வேலைகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன. தனிநாயகம் அடிகளாரின் பிறந்த தினமாகிய எதிர்வரும் 02.08.2014 சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் யாழ். மறை மாவட்டமும் இணைந்து முன்னெடுக்கும் விழாவில் யாழ்.மறை மாவட்ட ஆயர் அதிவண. தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையும் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளும் இணைந்து தனிநாயகம் அடிகளின் திருவுருவச் சிலையைத் திறந்து வைக்கவுள்ளனர்.
  
தனிநாயகம் அடிகள் நினைவு முற்றம் அமைப்பது தொடர்பாக 08.07.2014 யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தினருக்கும் யாழ். மறை மாவட்டத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தனிநாயகம் அடிகளாரின் சிலை திறப்புத் தொடர்பாக ஆராயப்பட்டது. சிலை அமைப்பிற்கான பெரும்பங்கு நிதிப் பங்களிப்பை கனடாவில் உள்ள நெடுந்தீவு ஒன்றியத்தினர் வழங்கியுள்ளனர். சென். பற்றிக்ஸ் சூழலில் உள்ள திருநகரைச் சேர்ந்த சிற்பி சி.ஜெயசீலன் (பாபு) தனிநாயகம் அடிகளாரின் உருவச்சிலையை வடிவமைத்துள்ளார். 6 அடி 3 அங்குல உயரத்தில் நின்ற நிலையில் இந்தச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
 
சிலை திறப்பு விழாவைத் தொடர்ந்து திருமறைக் கலாமன்ற கலைத்தூது அழகியற் கல்லூரி மண்டபத்தில் தனிநாயகம் அடிகள் நினைவுச் சொற்பொழிவு இடம்பெறும். யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்க உபதலைவர் பேராசிரியர் மா.சின்னத்தம்பி நினைவுரையை ஆற்றுவார். நிகழ்விற்காகத் தனியான அழைப்பிதழ்கள் அனுப்புவதில்லை எனவும் தமிழியல் ஆர்வலர்கள் யாவரும் இதில் பங்கேற்க முடியும் எனவும் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பங்கேற்பவர்கள் தனிநாயகம் அடிகளாருக்கு மலர் வணக்கம் செய்வதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்படவுள்ளது.http://www.seithy.com/breifNews.php?newsID=112938&category=TamilNews&language=tamil
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பாராட்டத் தக்க முயற்சி...!

 

ஆனால் அரசமரத்துக்குக் கீழே சிலையை வைப்பதில் ஆபத்துக்களும் உள்ளன!

 

நாளைக்கு யாராவது, அனாகரிகே தர்மபாலாவின் சிலை என்றும் கூறக்கூடும்! :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.