Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயர் பாதுகாப்பு வலய இந்து ஆலயங்களுக்குச் செல்ல இராணுவத்தினர் பாதுகாப்புடன் அனுமதி

Featured Replies

 

வலி.வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில அமைந்துள்ள மயிலிட்டி நாகதேவன்துறையில் அமைந்துள்ள மூன்று இந்து ஆலயங்களுக்குச் செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கியமையால் இன்று வெள்ளிக்கிழமை ஐநூறுக்கும் மேற்பட்ட மக்கள் அந்த ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டுவிட்டுத் திரும்பினர். 30 வருடங்களின் பின்னர் இன்று அந்த ஆலயங்களுக்குச் சென்ற பொதுமக்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
mayilitti%20kovil%20%281%29.JPG

காலையில் காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள இராணுவத்தினரின் சோதனைச் சாவடியில் ஆலயத்துக்குச் செல்லும் பொதுமக்கள் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.

mayilitti%20kovil%20%282%29.JPG
பின்னர் அவர்களின் தேசிய அடையாள அட்டைகள் மற்றும் விவரங்களைப் பதிவு செய்த இராணுவத்தினர் தமது பஸ் வண்டிகளில் அந்தப் பொது மக்களை ஆலயங்களுக்கு ஏற்றிச்சென்றனர். அந்த ஆலயங்களின் சுற்றாடலில் பொது மக்களின் நன்மை கருதி தாகசாந்தி தீர்ப்பதற்கு பந்தல் அமைத்து குளிர்பானங்கள், பிஸ்கட் வகைகள் என்பன வழங்கப்பட்டன.
mayilitti%20kovil%20%283%29.JPG
ஆலயங்களின் சுற்றாடல் துப்புரவு செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டு இருந்ததன; சேதமடையாத கட்டடங்கள் வர்ணம் பூசப்பட்டிருந்தன. வழிபாட்டுக்குச் சென்ற மக்கள் தங்குவதற்கு வசதியாக கூடாரங்கள் அமைக்கப்பட்டு கதிரைகளும் போடப்பட்டிருந்தன. கோயில் பூசை நிறைவு பெற்று திரும்பிய பக்தர்களுக்கு உணவுப் பார்சல்களும் வழங்கப்பட்டன
mayilitti%20kovil%20%284%29.JPG
மயிலிட்டி கண்ணகை அம்மன் கோயில், முருகன் கோயில், தோப்புப் பிள்ளையார் கோயில் ஆகியவற்றுக்கே இன்று பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  
mayilitti%20kovil%20%285%29.JPGmayilitti%20kovil%20%286%29.JPG

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.