Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள வைரவர் ஆலயத்திற்கு விரைவில் பூஜை; என்கிறார் விஜயகலா எம்.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

b240826801a092ad2c715b66038179c5.jpg

யாழ்ப்பாணம் வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்துக்குள் இருந்த வைரவர் ஆலயம் ஒன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

வீமன்காமத்தில் தனி நபர் ஒருவரால் கட்டப்பட்ட தலைசிட்டி ஞான வைரவர் ஆலயம் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் இராணுவத்தினருக்கே தெரியாத நிலையில் இருந்த ஆலயத்தை பார்ப்பதற்கு உரிமையாளர்கள் விரும்பியதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதனையடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய  ராஜபக்சவிடம் அனுமதிபெற்றதையடுத்து குறித்த ஆலயத்துக்கு சென்று தரிசித்திருந்தனர்.

இது குறித்து விஜயகலா மகேஸ்வரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, 

தலைசிட்டி ஞான வைரவர் ஆலயம் தனியாள் ஒருவரால் கட்டப்பட்டது. இதுதான் உலகத்திலேயே முதல் கருங்கல் வைரவர் என்ற பெருமைக்கும் உரியதாகும். ஆலயத்தின் உரிமையாளர்கள் குறித்த ஆலயத்தை பார்ப்பதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் உதவியை நாடியதாகவும் அவை பயனளிக்கவில்லை என்றும் தெரிவித்தனர். 

எனவே என்னை அணுகி குறித்த ஆலயத்தை பார்க்க வேண்டும் என்றும் அனுமதியை பெற்றுத் தருமாறும் கேட்டிருந்தனர். அதனையடுத்து காங்கேசன்துறை வீதியில் உள்ள இராணுவ படைத்தலைமையின் முகாமிற்குச் சென்று விடயத்தை தெரியப்படுத்தினேன். 

எனினும் அவ்வாறானதொரு ஆலயம் தமது கட்டுப்பாட்டிற்குள்  இல்லை என்றனர். அத்துடன் அனுமதியின்றி உள்ளே போகமுடியாது என்றும் தெரிவித்தனர். 

அதனையடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாருடன் பேசி அனுமதியை பெற்றுக்கொண்ட பின்னர் நாம் அங்கு சென்றோம் எனினும் அங்குள்ள குறித்த ஆலயத்தை பார்வையிட எமக்கு 3 மணித்தியாலயம் தேவைப்பட்டது. 

அங்குள்ள வேறு ஆலயத்தையே எமக்கு காட்டினர். அதில் இருந்து தெரிந்து கொண்டது குறித்த ஆலயம் அங்கு இருப்பது இராணுவத்திற்கே தெரியவில்லை என்றும். அதுபோல அவர்களும் ஆலயம் இருந்ததை இதுவரை அறிந்திருக்கவில்லை. 

வீதியில் இருந்த 700 மீற்றர் தூரத்தில் ஒற்றையடிப்பாதையூடாக  சென்று பார்த்த போது, பற்றைக்காடுகளால் மூடப்பட்ட நிலையில் 54 அடி கோபுரம் கொண்ட வைரவர் ஆலயம் சேதம் எதுவும் ஏற்படாது இருந்தது. எனினும் ஆலயத்தின் கோபுர மணியே துருப்பிடித்து கீழே விழுந்து கிடந்து வேறு ஒரு குறையையும் அங்கு நாம் காணவில்லை.  

எனவே புகையிரத சேவையும் காங்கேசன்துறைக்கு வரவுள்ள நிலையில் பாதுகாப்பு செயலருடன் பேசி தினமும் ஒரு வேளை பூஜையினை மேற்கொள்வதற்கு மிகவிரைவில் நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.  

 

1(128).jpg

 

8(30).jpg

 

2(98).jpg

 

3(84).jpg

 

5(48).jpg

 

 6(30).jpg

 






http://www.onlineuthayan.com/News_More.php?id=792483221013682828

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.