Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் துன்பத்தில் இன்பம் கண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள்

Featured Replies

 
nam_namakkaaka_2009.jpg

தமிழர் துன்பத்தில் இன்பம் கண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள்

  • அநியாயங்களையும் அட்டூழியங்களையும் இஸ்லாம் வெறுக்கின்றது. அதை வெறுக்கின்ற மக்களாகவும் முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. அநியாயங்கள் என்கின்ற போது அது மனித உரிமை மீறல்கள் அடங்குகின்றது. ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அரசின் சொகுசு வாழ்க்கையும் ஆடம்பர வாழ்க்கையும் கண்ணை மூடிவிட்டது. ஈவிரக்கத்தையும் மறைத்து விட்டது. மனித நேயத்தைக் குழி தோண்டிப் புதைத்து விட்டது. இதை நாம் இப்படியும் எடுக்கலாம். அதாவது அடுத்தவன் துன்பத்தில் இன்பம் காணும் கூட்டமாக இன்றைய முஸ்லிம் சமுதாயம். தமிழர் துன்பத்தில் இன்பம் கண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள். எந்த மனித உரிமையை ஏறடெடுத்தும் பார்க்காமல் இருந்தோமோ அந்த மனித உரிமையைக் கேட்கக் கூடிய கூட்டமாக மாற வேண்டிய கட்டாயத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்கள். 

    வடக்கில் அரங்கேறியது மனிதப் படுகொலை மற்றும் இனஅழிப்பு என்பது ஒரே மொழி பேசும் அடுத்த வீட்டு சகோதர இனம் என்று ஒரு முஸ்லிம் அரசியல்வாதியாவது ஒரு பத்திரிகை அறிக்கை விட்டதுண்டா.  ?

    வடக்கில் நடந்த இனஅழிப்பைக் கண்டித்து ஒரு முஸ்லிம் குரலாவது கண்டனம் தெரிவித்ததுண்டா? மனதால் நொந்ததுண்டா? நாமும் ஒரு சிறுபான்மையினம் இன்று தமிழ் மக்களுக்கு நாளை நமக்கு என்று எந்த முஸ்லிம் அரசியல்வாதியாவது சிந்தித்ததுண்டா? 

    மேலும் மேலும் முஸ்லிம்களையும் தமிழர்களையும் இணையவிடாது பிரித்தாளும் செயலில் ஈடுபட்டார்களே தவிர, இந்த இரண்டு இனங்களையும் இணைத்து ஒரு அரசியல் செய்யும் நோக்கமே இல்லாமல் செய்து விட்டார்கள். எந்தவொரு மனித உரிமை மீறல்களையும் தட்டிக் கேட்கும் மக்களாக முஸ்லிம் மக்கள் இல்லை இன்றைய முஸ்லிம்களிடம் மனித நேயமே இல்லாமல் போய்விட்டது.  

    வட கிழக்கு மாகாணத்திற்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் நன்மை கருதி பாதுகாப்புக் கருதித்தான் கிழக்கு மாகாண ஆட்சியை அரசிடம் ஒப்படைத்தோம் என்று மு.கா தலைவர் ஹக்கீம் கிழக்கு மாகாண ஆட்சியை அரசுக்கு தாரைவார்த்துவிட்டுக் கருத்து தெரிவித்திருந்தார்.  எந்த மக்களுக்காக கிழக்கு ஆட்சி அரசுக்கு தாரை வார்க்கப்பட்டதோ அந்த மகக்ளின் பாதுகாப்பு தற்போது என்னவாயிற்று. எப்போதும் பயந்த மக்களாக நடுங்கிய மக்களாக உள்ளார்கள். 

    வடக்கில் தமிழ்ப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் பிரசன்னம் மற்றும் காணாமல் போதல், சித்திரவதை, பாலியல் வல்லுறவு, ஆட்கடத்தல் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் தவறாக நடாத்தப் படுதல், மனித உரிமைப் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள், சட்ட நிபுணர்கள் ஆகியோர் மீதான தாக்குதல்கள் போன்ற பிரச்சினைகள் உள்ளது.  தற்போது முஸ்லிம் பகுதிகள் முற்றாக இராணுவத்தின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளது. கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் தொட்டு புல்மோட்டை வரையுமான முஸ்லிம் பகுதிகள் இராணுவத்தினால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இப்படியாக முற்று முழுதான ஒரு இராணுவ மயமாக்கலை அரசு தமிழ் முஸ்லிம் மக்கள் மீது திணித்து வருகின்றது. இப்படியான இராணுவ மயமாக்கலால் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பு அங்கு அதிகமாகவுள்ளது. எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற அச்சத்தில் முஸ்லிம் மக்கள் மேற்கு. தெற்குப் பகுதிகளில் உள்ளார்கள். 

    இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை வலுப்பெற்று வருகின்றது. இலங்கை ஜெனீவாவில் சொல்வது வேறு இலங்கைக்குள் சொல்வதும், செய்வதும் வேறு வடகிழக்கில் தொடர்ந்து படைகளும், படை முகாம்களும் அதிகரிக்கப்பட்டு வருகின்றது. மீண்டும் ஓமந்தையில் செக்கிங் கெடுபிடிகள்.  இதேவேளை வடக்கில் இருந்து படைகளை வெளியேற்றி இந்தியாவுக்கு அனுப்பவா என்று ஜனாதிபதி கடந்த வருடம் இந்திய எம்பிக்கள் குழுவிடம் கேட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது. மற்றும் வடக்கில் இருந்து படைகள் எக்காரணம் கொண்டும் குறைக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார்.அப்படியானால் ஜெனீவாவில் இலங்கை பூனை மாதிரி பதுங்குவதும், ஜெனீவா மாநாடு முடிந்த பின்பு இலங்கைக்குள் புலி போன்று பாய்வதும் வாடிக்கையாகி இருந்து வருகின்றது.  இதனால்தான் மேற்குல நாடுகள் இலங்கையை நம்புவதாக இல்லை, இலங்கையின் நம்பகத்தன்மையை இலங்கை இழந்து நிற்கின்றது. இலங்கை நினைத்தால் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்தி இலங்கை தனது நம்பகத்தன்மையை உருவாக்கலாம். ஆனால் இலங்கைதான் விடாக்கண்டன் கொடாக் கண்டன் என்றவாறு தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான எந்த நோக்கமும் கிடையாது. 

    இலங்கை கடந்த வருடங்களாக மனித உரிமை விடயத்திலும் காணாமல் போன மக்களின் விடயத்திலும் ஜெனீவாவில் பல வாக்குறுதிகளை அளித்துள்ளது. ஆனால் ஒரு வாக்குறுதியையாவது இன்னும் நிறைவேற்றவில்லையென்று சர்வதேச அமைப்புக்கள் இலங்கை மீது இன்னும் சீற்றம் கொண்டுள்ளது.  மனித உரிமை தொடர்பில் இலங்கை அரசால் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழி களை உலக சமூகமானது ஏற்றுக்கொள்ளமாட்டாது என்றும் இலங்கை அரசு தனது நாட்டில் இடம்பெறும் மனித உரிமைகள் தொடர்பாக பல ஆண்டுகளாக வெறும் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி வந்துள்ளது என்று காட்டமாக பிரித்தானியாவில் இருந்து இயங்கும் அம்னெஸ்டி இன்டர்நெஷனல் என்கின்ற சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை மீது தொடர்ந்தும் கடிந்து வருகின்றது.  வடக்கில் அரங்கேறியது இனப்படுகொலை இனஅழிப்பு. இதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. இந்த மனிதப்படுகொலையை மனித நேயமுள்ள எந்த மனினும் ஏற்றுக் கொள்ள முடியாது.  கொலையாளிகள் விசாரணை செய்யப்பட வேண்டும் தண்டிக்கப்பட வேண்டும். அந்த விசாரணையிலும் தண்டனையிலும் முஸ்லிம்களின் பாதுகாப்புள்ளது. தமிழர்கள் தண்டிக்கப்படும் போது அடுத்த தண்டனை முஸ்லிம்கள்தான் என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவேண்டும். 

    தமிழர்கள் போராட்டத்தில்தான் முஸ்லிம்களின் விடுதலை தங்கியுள்ளது. தமிழர்கள் தோற்று விடக்கூடாது. தமிழர்கள் தோற்று விட்டால் முஸ்லிம்கள் அழிக்கப்பட்டு விடுவார்கள். அதன் ஆரம்பம்தான் அண்மைய தர்கா டவுன், பேருவல சம்பவங்கள்.  

    தமிழர்களை அழித்து விட்டோம் என்கின்ற மமதையில்தான் இன்று முஸ்லிம்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றது. முஸ்லிம்கள் தொடர்ந்து சிங்களக் கட்சிகளுக்கும் சிங்கள அரசியல்வாதிகளுக்கும் கூஜா தூக்கிக் கொண்டு முஸ்லிம் இனஅழிப்புக்கு துணைபோகின்றார்கள் முஸ்லிம் அரசியல்வாதிகள்.  இரண்டாம் இனமான தமிழர்கள் இந்த நாட்டில் தலை நிமிர்ந்து வாழாத வரை மூன்றாம் இனமான முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு பௌத்த ஆதிக்கம் விடாது என்பதை முஸ்லிம்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களின் நியாயமான போராட்டத்தை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழர்களுக்கு விமோசனம் கிடைக்காத வரை முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் நிம்மதி இருக்காது. முஸ்லிம்களுக்கு நிம்மதி அமைதி வேண்டுமானால் முஸ்லிம்கள் தமிழர்களை இனியும் ஒதுக்க முடியாது. முஸ்லிம்களுக்கு தமிழர்களின் தேவை எவ்வளவு அவசியமானது என்பதை முஸ்லிம்கள் மீதான அண்மையச் சம்பவங்கள் புடம் போட்டுக் காட்டுகின்றது. தமிழர்களுடன் இணைந்து செல்ல வேண்டும் என்று தென்பகுதி முஸ்லிம்கள் விரும்புகின்றார்கள். காரணம் அண்மைய முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு ஒரு படிப்பினையாகவுள்ளது. 

    நாங்கள் சிங்கள மக்களுடன் பிட்டும் தேங்காயுமாகவுள்ளோம் எங்களுக்குள் எதுவும் நடக்காது. அந்தளவு நெருக்கமாக சிங்கள மக்களுடன் உள்ளோம் என்றுதான் மேற்கு தெற்கு முஸ்லிம்கள் எப்போதும் சொல்லி வந்தார்கள்.  ஆனால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் அன்னியோன்னியமாக பக்கத்து வீட்டில் நெருக்கமாக வாழ்ந்து வந்த சிங்களக் குடும்பங்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் தொடுத்துள்ளார்கள். இப்போதுதான் முஸ்லிம்கள் தூக்கத்தில் இருந்து விழி;த்தவர்கள் போன்று பட்டுத் தேறியுள்ளார்கள். அப்படியானால் எந்தளவுக்கு சிங்கள மக்களுக்கு நஞ்சூட்டப்பட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மியன்மார் போன்று இலங்கையிலும் ஒரு நிலைமையை உருவாக்க வேண்டும் அதன் மூலமாக தொடர்ந்து தனது ஆட்சியைத் தக்க வைக்கலாம் என்று ஆட்சியாளர்கள் திட்டமிட்டுள்ளார்கள். முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் என்பது தற்போது ஒரு இடைவேளையே ஒழிய நிரந்தரமான நிறுத்தம் அல்ல.முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.நடவடிக்கை தொடரும் என்று பொதுப்பல சேனாவே தெரிவித்துள்ளது. இப்போது முஸ்லிம்கள் தமிழர்களுடன் இணைந்து செல்லக் கூடிய நல்ல நிலை உருவாகியுள்ளது. 

    முஸ்லிம்களை பிழையான வழியில் முஸ்லிம் அரசியல்வாதிகள் இட்டுச் செல்கின்றார்கள். மு.கா.ஆரம்பிக்கப்பட்ட பின்புதான் முஸ்லிம் தமிழர்கள் மத்தியில் பிணக்குகளும் சண்டை சச்சரவுகளும் அதிகரித்துக் காணப்பட்டது.  மு.கா என்கின்ற கட்சியின் தாக்கம், உருவாக்கம் என்பது தமிழ் முஸ்லிம் மக்களிடையே பிரிவை ஏற்படுத்தியுள்ளதே தவிர முஸ்லிம்களின் எந்த உரிமையைப் பெற்றுக் கொடுத்துள்ளது. எந்த உரிமைக்காக மு.கா போராடியுள்ளது என்று முஸ்லிம்கள் சிந்தித்தால் அங்கு ஒன்றுமே இல்லை. ஆனால் முஸ்லிம் காங்கிரசில் உள்ள சிலரை வாழ வைத்துள்ளது. தற்போது பலரை முஸ்லிம் காங்கிரஸ் நடுத்தெருவுக்குக் கொண்டு வந்துள்ளது. பலர் நஷ்டமடைந்துள்ளார்கள். முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட்ட பலர் பெருத்த நஷ்டத்தை அடைந்து விட்டார்கள். காலா காலம் முஸ்லிம் காங்கிரசுக்காக செலவு செய்வதற்காக பலர் முண்டியடித்துக் கொண்டும் வரிந்து கட்டிக் கொண்டும் யாரோ ஒருவரை வெற்றியடையச் செய்வதற்காக வருகின்றாhர்கள்.இப்படிச் செலவு செய்கின்றவர்களில் யாராவது ஒருவர் தமிழ் முஸ்லிம் உறவுக்காக ஏதாவது செய்கின்றார்களா அல்லது செய்துள்ளார்களா இல்லையே. 

    தமிழர்களும் தமிழ் கட்சிகளும் தீண்டத் தகாதவர்கள். ஆனால் சிங்களக் கட்சிகளும் சிங்கள அரசியல்வாதிகளும் தேனிலவுக் கூட்டு. அதனால்தான் முஸ்லிம்கள் இன்று பௌத்த மதத்தின் பெயரால் மிகவும் மோசமான நிலைமையை அனுபவிக்கின்றோம்.  வடகிழக்கு முஸ்லிம்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்தது தமிழ் தேசியம். ஆயுதப் போராட்ட காலத்தில் பல கசப்பான அனுபவங்களை முஸ்லிம்களுக்கு தந்து விட்டுச் சென்றுள்ளது என்பது உண்மைதான். ஆனால் கிழக்கில் நடந்துள்ள அத்தனை முஸ்லிம் படுகொலைக்குக் காரணமானவர்கள் என்று சொல்லப்படுகின்றவர்களான கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் என்கின்றவர்களால்தான் ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டு பலமாகவே உள்ளது. அப்படிப்பட்டவர்களுடன் கூட்டுச்சேர்ந்து ஆட்சியமைத்து முஸ்லிம்கள் தேனிலவு கொள்ளவில்லையா. அப்படியானால் தமிழ் மக்களின் ஏகபிரதிநியான கூட்டமைப்புடன் ஏன் முஸ்லிம்கள் கூட்டுச் சேர முடியாது. முடியும். ஆனால் கூட்டமைப்புடன் கூட்டுச் சேர்ந்தால் அங்கு சுகபோகங்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கையை முஸ்லிம் அரசியல்வாதிகளால் வாழ முடியாது. கூட்டமைப்புடன் இணைந்தால் சொகுசு வாழ்க்கை கிடைக்காது என்ற ஒரேயொரு காரணத்தால்தான் முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட்டமைப்புடன் கூட்டுச் சேர்வதை முஸ்லிம் அரசியல்வாதிகள் தவிர்த்து வருகின்றார்கள். 

    முஸ்லிம் மக்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளால் பிழையாக வழிநடத்தப்பட்டு வருகின்றார்கள். குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பிழையான பாதையில் இட்டுச் செல்லப்படுகின்றார்கள்.  சாரதி இல்லாத வாகனம் போன்று துடுப்பில்லாத வள்ளம் போன்று முஸ்லிம்களுக்கென்று ஒரு தலைமையில்லாது ஒரு அமைப்பு இல்லாது ஒரு கட்சி இல்லாது முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாக உள்ளார்கள்.வாய்ப்பேச்சில் வீரம் பத்திரிகை அறிக்கையில் மன்னர்கள் மேடைப் பேச்சில் உசுப்பேற்றல் போன்றவற்றால்தான் இன்று முஸ்லிம்கள் இவ்வளவு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். 

    அண்மைய முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த தாக்குதல்களைக் கண்டித்து வடக்கு மாகாண சபையில் ஒரு கண்டனப் பிரேரணையே நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் யாழ் பல்கலைக்கழக புத்திஜீவிகளின் கண்டனமும் வேலைநிறுத்தப் போராட்டமும் தெரிவிக்கப்பட்டது.  இவைகள் முஸ்லிம்களுக்காக தமிழர் சேனை பொங்கி எழுந்துள்ளது. மொழியால் நாம் ஒரே இனம். முஸ்லிம்களுக்காக தமிழர் தட்டிக் கேட்க வேண்டும். தமிழர்களுக்காக முஸ்லிம்கள் தட்டிக் கேட்க வேண்டும். இந்த ஒற்றுமைதான் இப்போதைய அவசர தேவை. இது காலத்தின் கட்டாய தேவை. எப்போதும் முஸ்லிம்களுடன் நெருக்கமாகவுள்ள வட மாகாண முதலமைச்சர் ஆட்சியில் உள்ளார். இப்படிபட்ட நிலையில் முஸ்லிம்கள்- தமிழ் தேசியத்துடன் இணைந்த செல்ல வேண்டிய தேவை தொக்கி நிற்கின்றது. ஆனால் கிழக்கு மாகாண சபையில் நாங்கள்தான் கிழக்கின் ஆட்சியைத் தீர்மானித்தோம். நாங்கள்தான் கிழக்கு மாகாண ஆட்சியை உருவாக்கினோம். என்று மார்தட்டுகின்ற முஸ்லிம் காங்கிரசினால் ஒரு கண்டனப் பிரேரணை கொண்டு வரமுடிந்ததா? 

    இல்லையே. 

    இது முஸ்லிம் காங்கிரசிற்கும் முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் பெருத்த அவமானமாகப் பார்க்கப்படுகின்றது. முஸ்லிம் காங்கிரசினால் ஆளப்படுகின்ற சபையொன்றினால் முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஒரு பிரேரணை கொண்டு வர முடியவில்லையென்றால் இதைவிட அவமானம் உள்ளதா? 

    தமிழர்களுக்கு எதிராக இத்தனை கொடுமைகள் நடந்த போதிலும் முஸ்லிம் அரசியல்வாதிகள், சிங்கள ஆட்சியாளர்களுடன் கைகோர்த்துக் கொண்டு வேடிக்கை பார்த்து இரசித்தார்கள். தட்டிக் கேட்க நாதியில்லாத முஸ்லிம் அரசியல்வாதிகள் மனித நேயத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு சவத்தின் மேல் நின்று கொண்டு உணவு உண்பது போன்று முஸ்லிம் அரசியல்வாதிகள் நடந்து கொண்டார்கள். அதன் பலனைத்தான் இன்று முஸ்லிம் சமூகம் அனுபவிக்கின்றது. அந்தப் பாவத்தின் சுமையை இன்று முஸ்லிம் சமுதாயம் சுமக்கின்றது. நேற்று தமிழர்களுக்கு இன்று முஸ்லிம்களுக்கு அதுதான் நடந்துள்ளது. 

    ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான அப்பாவி மக்களின் உயிர்கள் சிங்கள இராணுவத்தினால் நரபலி எடுக்கப்பட்ட போது,காவு கொள்ளப்பட்ட போது ஒரு முஸ்லிம் அரசியல்வாதியாவது குரல் கொடுக்கவில்லையே. ஆனால் முஸ்லிம்களின் நான்கு உயிர்களுக்காக தமிழ் தேசியமும் கூட்டமைப்பும் தனது கடமையை நன்றாகச் செய்துள்ளது.  தமிழ் மக்களுக்கு ஆட்சியாளர்கள் செய்த அத்தனை கொடுமைகளுக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் துணைபோயுள்ளார்கள் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்வான். இந்தப் பழமொழி முஸ்லிம்களுக்கு மிகவும் பொருத்தமானது. 

    பௌத்தத்தின் பெயரால் முஸ்லிம்களுக்கு எதிராக தற்போது தொடுக்கப்பட்டு வருகின்ற போருக்கு எதிராக முஸ்லிம்கள் தமிழ் தேசியத்தின் உதவிக் கரத்தைப் பெறவேண்டிய கட்டாயத் தேவைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதுதான் உண்மை.  

    காலம் கடந்தாவது முஸ்லிம்களுக்கு ஞானம் பிறக்கட்டும்
    . தமிழ் தேசியத்துடன் முஸ்லிம் மக்கள் இணைய வேண்டும். பௌத்தம் முஸ்லிம்களைத் துரத்துகின்றபோது உள்நாட்டில் முஸ்லிம்களுக்கான பாதுகாப்பை எங்கனம் பெறப் போகின்றார்கள் என்பதும் முஸ்லிம்களுக்கான குரலாக முஸ்லிம் காங்கிரஸ் அல்லது முஸ்லிம் அரசியல்வாதிகள் இருப்பார்களா அல்லது ஓடி ஒளிவார்களா என்பது மிகவிரைவில் புலனாகும்.ஆனாலும் அப்போது தமிழ் கூட்டமைப்பு முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் என்பதில் சந்தேகமிருக்காது. 

கட்டுரையாளர் - எம்.எம்.நிலாம்டீன்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.