Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் ஊடகவியலாளர் மீதான அரச பயங்கரவாத ஒடுக்குமுறைக்கு TNPF கண்டனம்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
தமிழ் ஊடகவியலாளர் மீதான அரச பயங்கரவாத ஒடுக்குமுறைக்கு TNPF கண்டனம்: 
[saturday 2014-07-26 20:00]
TNPF150A.jpg

நேற்றய தினம் வெள்ளிக்கிழமை(25-7-2014) மாலையில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணம் செய்த யாழ் ஊடகவியலாளர்கள் மீது பொலீசாரும் இராணுவத்தினரும் இணைந்து பொய்க்குற்றச் சாட்டுக்களை சுமத்தி கைது செய்ய முயன்றுள்ளனர். குறித்த ஊடகவியலாளர்கள் யாழில் இருந்து கொழும்பு நோக்கி ஹயஸ் வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடியில் இவர்களது வகனம் சோதனையிடப்பட்டுள்ளது.

  

சோதனையிடுதல் என்ற போர்வையில் இவர்களது வாகன சாரதியின் ஆசனத்தின் கீழ் சிகரட் பெட்டி ஒன்றினை ஒரு இராணுவ சிப்பாய் வைத்ததை அதில் பயணம் செய்த ஊடகவியலாளர்கள் மூவர் நேரில் அவதானித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பொலீசார் வாகனத்தை சோதனையிடுவது போன்று சோதனையிட்டு அந்தப் பொட்டியை எடுத்து அதில் போதைப் பொருள் உள்ளதாக கூறி குறித்த வாகனத்தில் பயணம் செய்த ஏழு ஊடகவியலாளர்களையும்�� வாகன சாரதியையும் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். இவ்விடயம் உடனடியாக குறித்த ஊடகவியலாளர்களால் சக ஊடகவியலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் சம்பவம் உடனடியாகவே கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுடன் தொடர்பு கொண்டு குறித்த ஊடகவியலாளர்களது விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு எமது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் தூதரக அதிகாரிகளிடம் கோரியிருந்தார். பல தரப்புக்களிலிருந்தும் அரசுக்கு வழங்கப்பட்ட அழுத்தத்தை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையிலும்�� ஊடக சுதந்திரத்தை நசுக்கும் வகையிலும் சிறீலங்கா அரசு தனது இராணுவ மற்றும் பொலிஸ் இயந்திரத்தைப் பயன்படுத்தி தமிழ் ஊடகவியலாளர்களை கைது செய்வதற்கு மேற்கொண்டுள்ள இந்த அநாகரீகமான செயற்பாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.

செ.கஜேந்திரன்

பொதுச் செயலாளர்

http://www.seithy.com/breifNews.php?newsID=113849&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தொலைபேசி எதற்கு என யாழ், வன்னி ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்த போது,

கொழும்பில் உள்ள ஊடக பயிற்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக யாழில் இருந்து 15 ஊடகவியலாளர்கள் இரண்டு வாகனங்களில் வந்தோம்.

அதன்போது இராணுவத்தினர் திட்டமிட்டு எமது வாகனத்தில் கஞ்சாவை வைத்துவிட்டு எமது ஊடகவியலர்கள் ஏழு பேரை கைதுசெய்தனர்.

இரவு 10 மணியளவில் இராணுவத்தினரதும் பொலிசாரினதும் முற்றுகைக்குள் அகப்பட்டுகொண்ட நாம் அதிலிருந்துவிடுபட பலரது உதவிகளையும் கோரினோம்.

குறிப்பாக எமது வவுனியா சக ஊடகவியலாளர்களும், சம்பவ இடத்திற்கு வருகைதந்து இரவு இரவாக அழுத்தங்களுக்கு மத்தியிலும் எமக்காக குரல்கொடுத்தார்கள்.

ஆனால் நாம் தொடர்பு கொண்டவர்களில் முக்கியமாக வன்னி (வவுனியா) பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்பை ஏற்படுத்தினோம்.

10.30இல் இருந்து 1மணிவரை எம்மால் தொடர்புகொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்களது தொலைபேசிகள் எமது அழைப்ப ஏற்கமறுத்தன.

அந்தவகையில், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களது கைத்தொலைபேசி மற்றும் நிலையான தொலைபேசி இரண்டிற்கும் 10.30இல் இருந்து தொடர்பு எடுக்கப்பட்ட போதும் அதற்கு எந்தவித பதிலும் வரவில்லை.

தொலைபேசி அழைப்புக்களை அவர் ஏற்கவில்லை. அதன்பின் வவுனியா ஊடகவியலாளர், அவரது சகாக்களுக்கு தெரியப்படுத்தியிருந்தனர். அதன் பின்னும் எதுவும் நடக்கவில்லை.

அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இரு வவுனியா ஊடகவியலாளர்கள் எம்.பியின் வீட்டு கதவை இரவு 11மணியளவில் பலமுறை தட்டியும் எந்த பதிலும் இல்லை. அவரது தொலைபேசி அழைப்புச்சத்தங்களை மட்டுமே வெளியே கேட்கமுடிந்தது.

அடுத்தது, வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.. இவரை தொடர்புகொள்ள ஆள்மாறி ஆள்மாறி அழைப்பை ஏற்படுத்தியபோதும் அவரும் பதில் இல்லை.

அதன்பின் அவரது சக பாராளுமன்ற உறுப்பினர் வினோ அவர்களுக்கு அழைப்பை ஏற்படுத்தியபோது அவரது தொலைபேசி இலக்கம் செயலற்று இருந்தது.

பாருங்கள் எமது வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களை, அவர்களது அறிக்கைகளையும் செய்திகளையும் மக்களுக்கு கொண்டு சென்று சமூகத்திற்காக உழைக்கும் ஊடகவியலாளருக்கே இந்தநிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன?

இரவு 10 மணியில் இருந்து காலை 5.30 வரை வவுனியாவிலே நின்று போராடிய ஊடகவியலாளருக்கு அதுவரை இந்த எம்.பிமார் தொடர்பு எடுத்தார்களா? இல்லை. இவர்கள்தான் மக்கள் பிரதிநிதிகள்.

இது யாழ் ஊடகவியலாளருக்கோ அல்லது வவுனியா ஊடகவியலாளருக்கோ நடந்த பிரச்சனை இல்லை. எந்த ஊடகவியலாளருக்கு பிரச்சனை என்றாலும் இவர்கள் இதைத்தானே செய்வார்கள்.

மாகாணசபை உறுப்பினர்கள் சிலரை தொடர்பு கொண்ட போது, சிவமோகன் மட்டும் ஓமந்தைப் பொலிஸ் நிலையம் வந்து எமக்காக சில வார்த்தைகள் கதைத்து எம்முடன் சில மணிநேரம் நின்றார். மற்றவர்கள்…???

1545999_331431950353155_2087003160169070

 

https://www.facebook.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.