Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் 'இனப்படுகொலை' - அனைத்துலகச் சட்டங்கள் கூறுவதென்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Panel%20Of%20Dublin.jpg

சிறிலங்கா அரசாங்கம் இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் போன்றவற்றை மேற்கொண்டதால் இது குற்றவாளி என்பதை ஐ.நா மற்றும் அனைத்துலக சமூகத்தால் வரையப்பட்ட சட்டங்கள் உறுதிப்படுத்துகின்றமை இங்கு தெளிவாகும். 

இவ்வாறு Dr. Parasaran Rangarajan எழுதியுள்ள ஆய்வில் தெரிவித்துள்ளார். South Asia Analysis Group இணையத்தில் வெளிவந்த இந்த ஆய்வை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

அல்குவைதாத் Al-Qaeda தாக்குதலை அடுத்து, அமெரிக்க உள்ளகப் புலனாய்வுப் பிரிவால் வெளியிடப்பட்ட உலகில் மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளும் உள்ளடங்கியிருந்தனர். சிறிலங்காத் தீவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தம் 2009ல் இறுதிக்கட்டத்தை அடைந்த போது தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டனர். 

எதுஎவ்வாறிருப்பினும், இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையானது அனைத்துலகச் சட்டத்தின் கீழ் மிக மோசமான மீறலாகக் காணப்படுகின்றது. அதாவது சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலை 'இனப்படுகொலை' ['genocide'] என்பதை உறுதிப்படுத்தும் பின்வரும் அனைத்துலகச் சட்டங்களை தற்போது ஆராயமுடியும்: 

01. இனப்படுகொலை இடம்பெறாது தடுப்பதுடன், இதனைச் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்குதல் தொடர்பான 1948 ஜெனீவாச் சாசனம். 

02. அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் உரோமச் சட்டம். 

03. போர்க் காலத்தின் போது அதில் அகப்படும் பொதுமக்களைப் பாதுகாப்பது தொடர்பான நான்காவது ஜெனீவாச் சாசனத்தை உள்ளடக்கிய 1977 மேலதிக உடன்பாட்டு விதிமுறை.

04. 1907ல் உருவாக்கப்பட்ட ஹேக் உடன்படிக்கை. 

05. போர்க் காலத்தின் போது மூச்சுத் திணறலை ஏற்படுத்தக் கூடிய, நஞ்சுமிக்க மற்றும் தீங்கை ஏற்படுத்தும் இராசாயன, எரிவாயுக்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் போர் முறைமைகளைத் தடுப்பதற்கான 1925 ஜெனீவா உடன்படிக்கை. 

06. ஐ.நா வால் 1977ல் உருவாக்கப்பட்ட இராசாயன ஆயுதப் பயன்பாடு தொடர்பான சாசனம். 

மேற்கூறப்பட்ட காரணிகளை ஆராய முன்னர், சிறிலங்காவில் போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைவது தொடர்பில் அனைத்துலகச் சமூகத்திடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன என்பதையும், அமெரிக்க அதிபர் ஒபாமா உட்பட பல்வேறு தரப்பினர் சிறிலங்காவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்த போதிலும் இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தலையீடுகள் செய்யப்படவுமில்லை, தமிழீழ விடுதலைப் புலிகள் இவற்றை ஏற்கவுமில்லை என்பதை நாங்கள் முதலில் உணர்ந்து கொள்ளவேண்டும். 

சிறிலங்காவின் இறுதிக்கட்டப் போரிற்குள் அகப்பட்டுத் தவித்த தமிழ்ப் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனைத்துலக சமூகம் தவறியமையை பாலஸ்தீனத்திற்கான ஐ.நா முன்னாள் சிறப்பு அறிக்கையாளர் பேராசிரியர் றிச்சார்ட் போல்க் Prof. Richard Falk உட்பட ஐ.நா வின் மூத்த அதிகாரிகள் பலர் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் 'போரில் அகப்படும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்பை' அனைத்துலக சமூகம் மேற்கொள்ளத் தவறியமை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

மற்றைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதானது வெளியுறவுக் கொள்கையைப் பாதிக்கக் கூடிய காரணியாக உள்ள போதிலும், சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தம் முடிவுற்று ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையிலும், சிறிலங்காவால் ஐக்கிய நாடுகள் சபைக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் வழங்கிய போர்க் கால மீறல்களை விசாரணை செய்து அவை தொடர்பில் பொறுப்பளிப்பது தொடர்பான வாக்குறுதியை இன்னமும் நிறைவேற்றவில்லை. 

சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பில் உள்ளக விசாரணை செய்து குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவேன் என அனைத்துலகின் முன் வாக்குறுதி அளித்த போதிலும், அதனை நிறைவேற்றத் தவறியதால் ஐ.நா மனித உரிமைகள் சபையால் இதற்கெதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்துலகச் சட்டத்தை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு 42 உறுப்பு நாடுகளின் துணையுடன் சிறிலங்காவுக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதன் விளைவாக சிறிலங்கா மீது விசாரணையை மேற்கொள்வதற்காக மூன்று அனைத்துலக வல்லுனர்களைக் கொண்ட ஆணைக்குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் 2002 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் நடந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே ஐக்கிய நாடுகள் சபையால் சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. 

அனைத்துலகச் சட்டத்தின் பிரகாரம், இனப்படுகொலை இடம்பெறாது தடுப்பதுடன், இதனைச் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்குதல் தொடர்பான 1948 ஜெனீவாச் சாசனம் மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் உரோமச் சட்டம் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு சிறிலங்கா கைச்சாத்திட்டுள்ளது. இந்நிலையில் இவ்விரு சாசனங்களின் சட்ட வரையறைகளின் படி, 'இனப்படுகொலை' என்கின்ற பதம் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது என்பதை நோக்க முடியும். 

1948 ஜெனீவா பரிந்துரை மற்றும் உரோமச் சட்டத்தின் ஆறாவது நிபந்தனையின் பிரகாரம், "ஒரு நாட்டிலுள்ள இனக்குழுமத்தினரை, மத சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பெருமளவில் திட்டமிட்டுப் படுகொலை செய்வதே 'இனப்படுகொலை' எனப்படுகிறது". அதாவது இனப்படுகொலை என்பது பின்வரும் வழிமுறைகளில் மேற்கொள்ளப்படுகிறது:

01. ஒரு குழுவைச் சேர்ந்தவர்களைப் படுகொலை செய்தல். 

02. ஒரு குழுவின் உறுப்பினர்களுக்கு உடல் ரீதியாக அல்லது உள ரீதியாக மிக மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்துதல். 

03. திட்டமிட்ட வகையில் ஒரு குழுவின் வாழ்வாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவது. அதாவது பௌதீக வளங்களை அழித்தல் போன்றன. 

04. குறித்த குழுமத்தில் பிள்ளைகள் பிறப்பதைத் தடுப்பதற்கான வழிகளைக் கைக்கொள்ளுதல். 

05. குறித்த குழுமத்தைச் சேர்ந்த பிள்ளைகளை வேறொரு குழுமத்திற்குப் பலவந்தமாக மாற்றுதல். 

சிறிலங்காவில் 2011ல் வெளியிடப்பட்ட பொறுப்பளித்தல் தொடர்பான ஐ.நா வல்லுனர் குழுவின் அறிக்கையில் இனப்படுகொலை என்பதற்கான வரையறை எவ்வாறு வழங்கப்பட்டுள்ளதை என்பதை ஆராய்வோம். இந்த அறிக்கையின் 68-69 ஆவது பக்கங்களில், ஒரு இனத்தை 'முற்றாக அழித்தல்' என்கின்ற குற்றத்தை சிறிலங்கா தனது யுத்த காலத்தில் புரிந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பேராசிரியர் கிறேகொறி ஸ்ரன்ரன் Prof. Gregory Stanton என்பவரால் எழுதப்பட்ட இனப்படுகொலையின் எட்டுப் படிமுறைகளில் 'இனத்தை முற்றாக அழித்தல்' என்பது ஏழவாது இனப்படுகொலைப் படிமுறையாகக் காணப்படுகிறது. "சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் போர் வலயத்தில் அமைக்கப்பட்டிருந்த 'பாதுகாப்பு வலயங்களில்' அடைக்கலம் புகுந்திருந்த பொதுமக்கள் மீது திட்டமிட்ட வகையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதானது இனப்படுகொலையின் ஒரு பகுதியாகும். இது மனிதகுலத்திற்கு எதிரான நம்பகமான குற்றச்சாட்டாகும்" என ஐ.நா வல்லுனர் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு வலயத்தில் அகப்பட்டுத் தவித்தவர்கள் தமிழ் மக்களாவார். ஆகவே 1948 ஜெனீவா சாசனத்தின் இனப்படுகொலையைத் தடுத்தலும் தண்டிப்பதும் தொடர்பான இரண்டாவது நிபந்தனையின் பிரகாரமும் உரோமச் சட்டத்தின் ஆறாவது நிபந்தனையின் பிரகாரமும் 'இனக்குழுமத்தின் குறித்த எண்ணிக்கையானவர்களை அழிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையானது இனப்படுகொலை ஆகும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்கும் மேலாக, முன்னர் குறிப்பிட்டது போன்று, அனைத்துலக சமூகமானது யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறும், சரணடையுமாறும் கோரிக்கை விடுத்திருந்தது. இதன்மூலம், பொதுமக்கள் இறப்பதைத் தடுக்க முடியும் என அனைத்துலக சமூகம் கருதியது. 

சிறிலங்கா அரசாங்கமானது பாதுகாப்பு வலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த பொதுமக்களைக் குறிவைத்து விமானத் தாக்குதல்களை மேற்கொண்டது. இது மிக மோசமான மனித உரிமை மீறலாகும். போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டிருந்தால் இவ்வாறான இழப்புக்களைத் தவிர்த்திருக்க முடியும். சிறிலங்கா அரசாங்கம் போரின் இறுதிக்கட்டத்தில் மிக மோசமான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதாலேயே பல நாடுகள் சிறிலங்காவிற்கான ஆயுத வழங்கலை நிறுத்திக் கொண்டன. சிறிலங்காவின் இறுதிக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் விளைவாக 75,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர் எனவும் பாதுகாப்பு வலயத்தில் 330,000 வரையான மக்கள் அகப்பட்டிருந்ததாகவும் ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கிளர்ச்சிக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் அழிவுகள் ஏற்படுவதென்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், பல ஆயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்படலாம் என்பது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இவ்வாறு சேதம் விளைவிக்கப்படுவதானது ஒரு மாற்று இராணுவ மூலோபாயம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். 

இதற்கும் மேலாக, தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியமை அல்லது இராணுவ நோக்கங்களுக்காக பொதுமக்களின் கட்டடங்களைப் பயன்படுத்தியமை போன்றன விசாரணை செய்யப்பட வேண்டும். இவை அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களை மீறியுள்ளனவா என்பது ஆராயப்பட வேண்டும். போர்க் காலத்தின் போது பொதுமக்களைப் பாதுகாப்பதுடன் தொடர்புபட்ட 1977ல் உருவாக்கப்பட்ட நான்காவது ஜெனீவா சாசனத்தின் 52(1) நிபந்தனைக்கு சிறிலங்கா சட்ட ரீதியாகக் கட்டுப்பட வேண்டும். போர் வலயத்தில் எவ்வளவு விகிதாசாரத்தில் இராணுவ உத்திகள் பயன்படுத்தப்பட வேண்டும் என 1991 சுவீடன் அனைத்துலக மனிதாபிமானச் சட்டம் வரையறுக்கிறது. 

சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக எறிகணைகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகள் மேற்கொள்ளப்பட்டமை, பாதுகாப்பு வலயம் மீது மீண்டும் மீண்டும் விமானக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டமை போன்றன நான்காவது ஜெனீவாச் சாசனத்தின் பிரகாரம் நியாயமானது என ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. பாதுகாப்பு வலயம் மீது சிறிலங்கா அரசாங்கத் தரப்பால் விமானக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதை செய்மதி ஒளிப்படங்கள் உறுதிப்படுத்துகின்றன. இவ்வாறான குற்றங்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் உயர் தலைமைப்பீடம் ஈடுபட்டமையை உறுதிப்படுத்தும் சாட்சியம் உள்ளதாக சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் எச்.ஈ.பற்றீசியா பியுற்றெனிஸ் தெரிவித்திருந்தார். 

சிறிலங்கா தொடர்பான ஐ.நா அறிக்கையின் 47-48ம் பக்கங்களில், சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான 'வெள்ளைக் கொடி விவகாரம்' குறிப்பிடப்பட்டுள்ளது. சரணடைந்த போராளிகளுக்கு எதிரான தாக்குதல்கள் குற்றமாகும் என போர்க் காலத்தின் போது அதில் அகப்படும் பொதுமக்களைப் பாதுகாப்பது தொடர்பான நான்காவது ஜெனீவாச் சாசனத்தை உள்ளடக்கிய 1977 மேலதிக உடன்பாட்டு விதிமுறை மற்றும் 1907ல் உருவாக்கப்பட்ட ஹேக் உடன்படிக்கை போன்றவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேறுவிதமாகக் கூறினால், சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்யப்பட்டமை போர்க் குற்றமாகும். 

இதேபோன்று இராசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் மிக மோசமான போர் மீறல் என ஐ.நா அறிக்கையின் 47வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்காவில் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில், இராசாயன ஆயுதங்கள், கொத்துக் குண்டுகள் மற்றும் வெள்ளைப் பொசுபரசு போன்றன பயன்படுத்தப்பட்டதாக ஐ.நா அறிக்கை குறிப்பிட்டுள்ளது. 

"சிறிலங்கா இராணுவத்தினர் கொத்துக் குண்டுகள் மற்றும் வெள்ளைப் பொசுபரசு மற்றும் ஏனைய தீங்கு விளைவிக்கக் கூடிய இராசாயன வெடிபொருட்களை பொதுமக்கள் மீது வீசியதாக குற்றம் சாட்டப்படுகிறது. குறிப்பாக புதுக்குடியிருப்பு மற்றும் பாதுகாப்பு வலயங்களைச் சூழவிருந்த பொதுமக்கள் இராணுவத்தினரால் இலக்கு வைக்கப்பட்டிருந்தனர். கொத்துக் குண்டுகள் மிகச் சிறிய சத்தத்துடன் ஏவப்பட்ட போதிலும் இது விழுந்து வெடித்த போது பயங்கரச் சத்தத்தை ஏற்படுத்தியிருந்ததாகவும் கூறப்படுகிறது. பல்வேறு வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்ட காயமடைந்த பொதுமக்கள் கொத்துக் குண்டுகள் மற்றும் வெள்ளைப் பொசுபரசு போன்றவற்றால் பாதிப்படைந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டது" என ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஐ.நா இராசாயன ஆயுத சாசனம் மற்றும் இராசாயன, எரிவாயு போன்றவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் போர் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுவது தடைவிதிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தும் 1925 ஜெனீவா சாசனம் போன்றவற்றில் சிறிலங்கா கைச்சாத்திட்டுள்ளது. இந்தச் சாசனங்களின் பிரகாரம், இரசாயன ஆயுதங்களின் பாவனையால் பாதிக்கப்படும் எவரும் அனைத்துலகப் பாதுகாப்பை அல்லது அனைத்துலக உதவியைத் தேடிக்கொள்ள முடியும். இந்தச் சாசனங்களை ஏற்றுக்கொண்டு கைச்சாத்திட்ட உறுப்பு நாடுகள் இராசாயன ஆயுத வெடிபொருட்களைப் பயன்படுத்தினால் ஐ.நா பொதுச் சபை மற்றும் ஐ.நா பாதுகாப்புச் சபை போன்றவற்றால் தடைவிதிக்கப்படும் என ஏழாவது நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தால் முன்னால் யூகோசிலோவியாவில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, சேர்பிய இராணுவத் தளபதி றட்கோ மலடிக், ஐ.நா வின் நிபந்தனைகளை மீறி இராசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதால் 7500 பொஸ்னியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவமானது மிக மோசமான போர்க் குற்ற மீறல் என அனைத்துலக குற்றவியல் நீதிமன்றால் அறிவிக்கப்பட்டது. 

சிறிலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலையானது 'இனச் சுத்திகரிப்பு' என முதலில் அமெரிக்கா மற்றும் ஐ.நா பாதுகாப்புச் சபை போன்றன தெரிவித்தன. அதாவது பொஸ்னியாவில் இடம்பெற்ற இனப்படுகொலையுடன் தொடர்புபடுத்தி, சிறிலங்காவில் இடம்பெற்றது இனப்படுகொலை என முதலில் கூறப்பட்டது. அதாவது இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டால் அதற்கெதிராக அனைத்துலக ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால் பின்னர் சிறிலங்காவில் இடம்பெற்றது இனச்சுத்திகரிப்பல்ல, அது ஒரு இனப்படுகொலையே என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், அமெரிக்கா மற்றும் ஐ.நா பாதுகாப்புச் சபை என்பன ஏற்றுக்கொண்டன. 

சிறிலங்காவில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு 'பரிகார இறையாண்மையை' வழங்குவதற்காவது அமெரிக்கா நடவடிக்கை எடுக்கவேண்டும் என 2009ல் சிறிலங்காவில் இனப்படுகொலை இடம்பெற்ற பின்னர், பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்பு என்பது தொடர்பில் சூடானுக்கான அமெரிக்காவின் முன்னாள் சிறப்புத் தூதர் றிச்சார்ட் எஸ்;.வில்லியமசன் மற்றும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் மடலின் அல்பிறைற் ஆகியோர் தெரிவித்திருந்தனர். 

சிறிலங்காவில் தொடரப்பட்ட போரால் பாதிக்கப்பட்ட தரப்பு 'பரிகார நீதியை' 'remedial justice' எதிர்பார்ப்பது சரியா பிழையா என்பதை விவாதிப்பதற்கு அப்பால், சிறிலங்கா அரசாங்கம் இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் போன்றவற்றை மேற்கொண்டதால் இது குற்றவாளி என்பதை ஐ.நா மற்றும் அனைத்துலக சமூகத்தால் வரையப்பட்ட சட்டங்கள் உறுதிப்படுத்துகின்றமை இங்கு தெளிவாகும். 

இந்த அடிப்படையில், இனப்படுகொலை விவகாரத்தை விசாரணை செய்வதற்காக அனைத்துலக சமூகத்தால் நியமிக்கப்பட்ட பல்வேறு விசாரணை நீதிமன்றங்கள் குறிப்பாக பிரதான நீதிபதிகள், காந்தி அனைத்துலக சமாதான விருதை வென்றவருமான ஐ.நா வின் முன்னாள் உதவிச் செயலர் மற்றும் முன்னணி அனைத்துலகச் செயற்பாட்டாளர்கள் போன்றோரை உள்ளடக்கிய டப்ளின் குற்றவியல் நீதிமன்றமானது சிறிலங்கா அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட மீறல்களின் அடிப்படையில் இது ஒரு 'குற்றவாளியே' என்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.

 

http://www.puthinappalakai.com/view.php?20140727110963

Edited by தமிழரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.