Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தின் பின்னர் வடக்குப் பகுதியில் பௌத்த வழிபாட்டுத்தலங்கள் அதிகரிப்பு - அமெ­ரிக்கா

Featured Replies

27 வருட கால யுத்­தத்தின் பின்னர் வடக்கில் பௌத்த வழி­பாட்டு தலங்­களை படை­யினர் தொடர்ச்­சி­யாக அமைத்­து­வ­ரு­கின்­றனர். யாழ்ப்­பாணம் மற்றும் கிளி­நொச்­சியில் அமைக்­கப்­பட்­டுள்ள பௌத்த மத வழி­பாட்டுத் தலங்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது என்று அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது.
americanflag_0.jpg
 
பொது­ப­ல­சேனா அமைப்­புக்கும் அர­சாங்­கத்­துக்கும் இடையில் மிகவும் வலு­வான தொடர்­புகள் இருப்­பதை உள்ளூர் ஊட­கங்­களும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களும் அவ­தா­னித்­துள்­ளன.
 
மேலும் இலங்­கையில் கடந்­த­ வ­ருடம் ஆல­யங்கள் மற்றும் பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­தல்கள் அதி­க­ரித்­துள்­ளன என்றும் அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது.
 
கடும்­போக்­கு­வாத அமைப்­புக்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­கின்ற வன்­மு­றை­களின் பின்­ன­ணியில் பொது­ப­ல­சே­னாவின் அலை­களே உள்­ளன என்றும் அமெ­ரிக்கா குறிப்­பிட்­டுள்­ளது.
 
அமெ­ரிக்­கா­வினால் நேற்று முன்­தினம் வெளி­யி­டப்­பட்ட உலக மத சுதந்­திரம் தொடர்­பான வரு­டாந்த அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
 
அமெ­ரிக்க இரா­ஜாங்க செய­லாளர் ஜோன் கெரி­யினால் உலக மத சுதந்­திரம் குறித்த அறிக்கை வெளி­யி­டப்­பட்­டது. மேற்­படி வரு­டாந்த அறிக்­கையில் 9 பக்­கங்­களில் இலங்கை தொடர்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
 
அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது ;
 
நடை­மு­றையில் தோல்வி
 
இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பு மற்றும் சட்­டங்­களின் ஊடாக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக மத சுதந்­திரம் பாது­காக்­கப்­பட்­டாலும் நடை­மு­றையில் உள்ளூர் அதி­கா­ரிகள் மத வன்­மு­றை­களை தடுப்­பதில் தோல்­வி­கண்­டுள்­ளனர். குறிப்­பாக மத சிறு­பான்­மை­யி­னத்­த­வர்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­படும் சம்­ப­வங்கள் மற்றும் குற்­ற­வா­ளிகள் சட்­ட­ததின் முன் நிறுத்­தப்­ப­டாமை என்­ப­வற்றை குறிப்­பி­டலாம்.
 
அதி­கா­ரிகள் உதவி
 
தம்­புள்ளை இந்து ஆலயம் மீதான தாக்­கு­தல்கள் மற்றும் கிரான்பாஸ் பள்­ளி­வாசல் மீதான தாக்­கு­தல்கள் என்­ப­ன­வற்றை தடுப்­பதில் அதி­கா­ரிகள் தோல்­வி­கண்­டுள்­ளனர். மத சிறு­பான்­மை­யி­னரை இலக்கு வைத்து மேற்­கொள்­ளப்­படும் சம்­ப­வங்­களில் அர­சாங்க அதி­கா­ரிகள் குறைந்த பட்ச உத­வி­களை குழுக்­க­ளுக்கு வழங்­கு­வ­தாக அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் குற்றம் சாட்­டி­யுள்­ளன.
 
பள்­ளி­வா­சல்கள் ஆல­யங்கள் தாக்­கப்­பட்­டுள்­ளன
 
மத அடை­யாளம் நம்­பிக்கை மற்றும் நடை­முறை ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு சமூக துஷ்­பி­ர­யோ­கங்கள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் அறிக்­கை­யி­டப்­பட்­டுள்­ளது. மத சதந்­திரம் மீதான மதிப்பில் வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளது. முஸ்­லிம்­க­ளையும் கிறிஸ்­த­வர்­க­ளையும் இலக்கு வைத்து பிர­சா­ர­களை கடும்­போக்­கு­வாத அமைப்­புக்கள் முன்­னெ­டுத்­துள்­ளன. இவ்­வா­றான குழுக்கள் பள்­ளி­வா­சல்­க­ளையும் ஆல­யங்­க­ளையும் தாக்­கி­யுள்­ளன.
 
அமெ­ரிக்க தூத­ரக அதி­கா­ரிகள் மத சுதந்­திரம் தொடர்­பான கரி­ச­னை­களை வெளி­யிட்­ட­துடன் குறிப்­பாக ஆல­யங்கள் பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­தல்கள் தொடர்பில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை கைது செய்­யு­மாறும் அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தினர். மத குழுக்­களின் பிர­தி­நி­தி­களை தூது­வரும் தூத­ரக அதி­கா­ரி­களும் சந்­தித்து மத சுதந்­திர கரி­ச­னைகள் குறித்து கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­துடன் யுத்­தத்­துக்குப் பின்­ன­ரான நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் தொடர்­பா­கவும் ஆராய்ந்­துள்­ளனர். அமெ­ரிக்க தூத­ரகம் மத நல்­லி­ணக்க கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் கூட்டு ஈடு­பாட்­டையும் முன்­னெ­டுத்து நல்­லி­ணக்க முயற்­சி­க­ளுக்கு உதவ பல திட்­டங்­களை முன்­னெ­டுத்­தது.
 
அதி­கா­ரிகள் தயக்கம்
 
இலங்­கையின் மொத்த சனத் தொகையில் 70 வீத­மா­ன­வர்கள் பௌத்­தர்­க­ளாக உள்­ளனர். 15 வீத­மானோர் இந்­துக்­க­ளாக உள்­ளனர். அத்­துடன் 8 வீத கிறிஸ்­த­வர்­களும் 7 வீத முஸ்­லிம்­களும் உள்­ளனர். வடக்கில் அதி­க­ளவில் இந்­துக்கள் உள்­ளனர். மேற்கில் அதி­க­ளவில் கிறிஸ்­த­வர்­களும் கிழக்கில் அதி­க­ளவில் முஸ்­லிம்­களும் உள்­ளனர்.அர­சி­ய­ல­மைப்­பின்­படி யாரும் எந்த மதத்­தையும் பின்­பற்ற உரி­மை­யு­டை­ய­வர்கள். பௌத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட்­டுள்­ளது. அர­சாங்கம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக மத சுதந்­தி­ரத்தை அங்­கீ­க­ரித்­தாலும் நடை­மு­றையில் சில துறை­களில் பிரச்­சி­னைகள் உள்­ளன. ஆல­யங்கள் இந்து கோயில்கள் பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­த­லுக்கு பொறுப்­பா­ன­வர்கள் குறித்து விசா­ரிக்க அதி­கா­ரிகள் தயக்கம் காட்­டி­வ­ரு­வ­தாக அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் குற்றம் சாட்­டு­கின்­றன.
 
தம்­புள்ளை பத்­தி­ர­காளி அம்மன் கோயில்
 
தம்­புள்ளை பத்­தி­ர­காளி அம்மன் கோயில் அமைந்­துள்ள பிர­தே­சத்தை பௌத்த புனித பிர­தே­ச­மாக அறி­விக்க ஒக்­டோபர் மாதம் 29 ஆம் திகதி நகர அபி­வி­ருத்தி அமைச்சு முயற்­சித்­தது. இதனால் பல தசாப்­தங்­க­ளாக இந்த கோயிலை சுற்றி இருந்த சுமார் 40 குடும்­பங்கள் அகற்­றப்­பட்­டன. மாற்று இடங்கள் வழங்­கப்­படும் என்ற வாக்­கு­று­தி­யுடன் இந்த ஏற்­பாடு முன்­னெ­டுக்­கப்­பட்­டாலும் அதி­கா­ரிகள் அந்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­ற­வில்லை. மேலும் தம்­புள்­ளையில் பள்­ளி­வாசல் ஒன்றும் புனித பிர­தே­சத்தில் அமைந்­துள்­ள­தா­கவும் அத­னையும் அகற்­ற­வேண்டும் என்று பௌத்­தர்கள் கோரி­யுள்­ளனர்.
 
வலு­வான தொடர்பு
 
பொது­ப­ல­சேனா அமைப்­புக்கும் அர­சாங்­கத்­துக்கு இடையில் மிகவும் வலு­வான தொடர்­புகள் இருப்­பதை உள்ளூர் ஊட­கங்­களும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களும் அவ­தா­னித்­துள்­ளன. குறிப்­பாக பாது­காப்புச் செய­லா­ள­ருக்கும் இந்த அமைப்­புக்கும் இடை­யி­லான தொடர்பு குறித்தும் கூறப்­பட்­டுள்­ளது. பாது­காப்புச் செய­லாளர் பொது­பல சேனாவின் பொது நிகழ்வில் கலந்­து­கொண்­டி­ருந்தார். பொது­பல சேனாவின் அழுத்தம் கார­ண­மாக நகர சபைகள் மாடு­களை அறுப்­பதை நிறுத்தும் வகையில் விதி­மு­றை­களை நிறை­வேற்­று­வ­தற்கு ஆரம்­பித்­தன.
 
வடக்கில் பௌத்த தலங்கள்
 
மேலும் அதி­க­மான கிறிஸ்­தவ ஆல­யங்கள் அவற்றின் சட்­டத்­தன்மை குறித்து விசா­ரிக்­கப்­பட்­ட­தாக கிறிஸ்­தவ அமைப்பு தெரி­வித்­துள்­ளது. 27 வருட கால யுத்­தத்தின் பின்னர் வடக்கில் பௌத்த வழி­பாட்டு தலங்­களை படை­யினர் தொடர்ச்­சி­யாக அமைத்­து­வ­ரு­கின்­றனர். இது அரச அனு­ச­ர­ணை­யு­ட­னான சிங்­கள குடி­யேற்­றங்­களை வெளிக்­காட்­டு­வ­தாக தமிழ் அமைப்­புக்கள் தெரி­வித்­துள்­ளன. யாழ்ப்­பாணம் மற்றும் கிளி­நொச்­சியில் அமைக்­கப்­பட்­டுள்ள பௌத்த மத வழி­பாட்டுத் தலங்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளன.
 
கைது செய்ய பொலிஸார் தயக்கம்
 
பௌத்த கடும்­போக்­கு­வாத அமைப்­புக்கள் மத சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­களை இலக்­கு­வைத்து மேற்­கொள்­கின்ற வன்­மு­றைகள் குறித்து மனித உரிமை அமைப்­புக்­களும் மத சிறு­பான்மை குழு­வி­னரும் கரி­சனை வெளி­யிட்­டுள்­ளனர். மத சிறு­பான்மை பகு­திகள் மீதான குற்றச் செயல்­களை தூண்­டி­விட்­ட­வர்­களை கைது செய்­வதில் பொலிஸார் தோல்வி கண்­டுள்­ளனர்.
 
கிராண்பாஸ் பள்­ளி­வாசல் விவ­காரம்
 
கிறிஸ்­த­வர்கள் மற்றும் முஸ்­லிம்கள் மீது தாக்­குதல் நடத்­திய சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டைய பௌத்த பிக்­கு­மார்­களை கைது செய்ய அர­சாங்கம் தயக்கம் காட்­டி­வ­ரு­கின்­றது. பிக்­கு­மார்கள் பொது­வா­கவே அர­சாங்­கத்தின் பாது­காப்­புடன் செயற்­பட்­டு­வ­ரு­கின்­றனர். ஆகஸ்ட் 10 ஆம்­தி­கதி 50 க்கும் 60 க்கும் உட்­பட்ட பிக்­குகள் கிராண்பாஸ் பள்­ளி­வா­சலை தாக்­கினர். பலர் காய­ம­டைந்து மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். பொலிஸார் அங்கு இருந்­தனர். எவ­ரையும் கைது செய்­ய­வில்லை.
 
கொட்­டாவ சம்­பவம்
 
மார்ச் 24 ஆம் திகதி பிக்கு ஒரு­வரின் தலை­மை­யி­லான 100 பேர் கொட்­டாவ பகு­தியில் உள்ள கிறிஸ்­தவ ஆலயம் ஒன்றை தாக்­கினர். எவரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை.
கடும்­போக்­கு­வாத அமைப்­புக்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதிராக மேற்கொள்கின்ற வன்முறைகளின் பின்னணியில் பொதுபலசேனாவின் அலைகள் உள்ளன. பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் முஸ்லிம்களுக்கு எதிரான ஹலால் விவகாரம் போன்றவற்றின் பின்னணியில் கடும்போக்குவாத குழுக்கள் உள்ளன. பொதுபல சேனா ராவணா பலயவுடன் இணைந்து செயற்படுகின்றது. எனினும் தாக்குதல் குறித்த குற்றச்சாட்டுக்களை பொது பல சேனா நிராகரித்துள்ளது.
 
60 தாக்குதல்கள்
 
பல்வேறுபட்ட மத குழுக்களைச் சார்ந்தவர்கள் மற்றவர்களின் மத நம்பிக்கைகள் குறித்து பொறுமையாக இருந்தாலும் நம்பிக்கையின்மையும் அச்சமும் அதிகரித்துள்ளன. குறிப்பாக மத சிறுபான்மையினத்தவர்களில் இந்த நிலைமை உள்ளது. ஆலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.கடந்த வருடம் கிறிஸ்தவர்கள் மற்றும் ஆலயங்களில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினரின் 60 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக கிறிஸ்தவ குழுக்கள் அறிக்கையிட்டுள்ளன.
 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.