Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் மீண்டும் மரண பயத்தை ஏற்படுத்துகிறது அரசாங்கம்! - நிமல்கா பெர்னான்டோ குற்றச்சாட்டு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் மீண்டும் மரண பயத்தை ஏற்படுத்துகிறது அரசாங்கம்! - நிமல்கா பெர்னான்டோ குற்றச்சாட்டு. 

[Friday 2014-08-01 10:00]
nimalka-fernando-200-news.jpg

வடக்கில் பொதுமக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அரசாங்கம் மீண்டும் மரண பயத்தை அரசு ஏற்படுத்தி வருவதாக சிவில் சமூகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சிவில் சமூகக் கூட்டமைப்பு கொழும்பு சி.எஸ்.ஆர். நிலையத்தில் நேற்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில், கருத்துத் தெரிவித்த, இனவாததம் மற்றும் அனைத்து வகையான பாகுபாடுகளுக்கு எதிரான சர்வதேச மையத்தின் தலைவர் நிமல்கா பெர்னாண்டோ, வடக்கு, கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்கள் இன்று தமது ஊடக சுதந்திரத்தை இழந்துவிட்டனர். தமது உரிமைகளைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை இன்று வடக்கிலும் கிழக்கிலும் ஏற்பட்டுள்ளது.

  

மனித உரிமைகளுக்காக மக்கள் போராடும்போது அரசு பாதுகாப்புப் பிரிவினரைப் பயன்படுத்தி அடக்குமுறைகளைக் கையாளுகிறது. இவ்வாறு அரசு செய்வது அரசு கொடுத்த வாக்கினை மீறும் செயற்பாடாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் வடக்கின் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாத்து ஊடகவியலாளர்களுக்கான சுதந்திரத்தையும் உரிமைகளையும் வழங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இன்று அவற்றுக்கு முரணான வகையில் அரசே செயற்பட ஆரம்பித்து விட்டது. நாட்டில் ஜனநாயகம் அழிக்கப்படுகின்ற போதும், மனித உரிமைகளுக்கு எதிராக அரசு செயற்படுகின்ற சந்தர்ப்பத்திலும் நியாயம் கேட்டுப் போராட நாங்கள்தான் உள்ளோம்.

எனவே, எமது வாயையும் மூடுவதற்காகவே இப்படி அரசசார்பற்ற நிறுவனங்களைக் கட்டுப்படுத்த அரசு முயற்சிக்கின்றது. சிவில் அமைப்புகளுக்கு பொறுப்பு இருக்கிறது. இந்த நாட்டின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கவும், நாட்டின் உண்மை நிலைமையினை சர்வதேச அளவில் கொண்டு செல்லவும் எனவும் அனைத்து உரிமைகளும் உண்டு. அதையே நாம் செய்கிறோம். அதேபோல் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டே நாம் செயற்படுகிறோம். இந்த நாட்டின் யாப்பில் சிவில் சமூகம் செயற்படக்கூடாது எனக் குறிப்பிடப்படவில்லை. எனவே, தொடர்ந்தும் சிவில் சமூகத்தின் உரிமைகளுக்காக நாம் போராடுவோம் என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=114175&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.