Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மைகள் வெளிவந்து விடும் என்ற அச்சத்தினாலேயே அரச கையாட்கள் ஊடகங்களை அச்சுறுத்துகின்றனர்! - மன்னார் ஆயர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
உண்மைகள் வெளிவந்து விடும் என்ற அச்சத்தினாலேயே அரச கையாட்கள் ஊடகங்களை அச்சுறுத்துகின்றனர்! - மன்னார் ஆயர் photo.png 
[sunday 2014-08-03 09:00]
bishop-Rayappu-Joseph-200-news.jpg

உண்மைகள் வெளிவந்து விடும் என்ற அச்சத்தினாலேயே அரச கையாட்கள் ஊடகங்களை அச்சுறுத்துவதாக, மன்னார் ஆயர் ஆண்டகை இராயப்பு யோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். மன்னாரில் இருந்து வெளிவரும் புதியவன் நாளிதழின் 150 இதழ் வெளியீட்டு விழா நேற்று, துணை ஆசிரியர் மக்கள் காதர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக மன்னார் ஆயர் பேரருட் தந்தை கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகை அவர்கள் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கு உரையாற்றிய போது மன்னார ஆயர் இவ்வாறு குறிப்பிட்டார்.

  

ஊடகம் என்பது உண்மைகளை வெளிக்கொண்டு வருதே. ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் ஊடகசுதந்திரம் என்பது கேள்விக்குறியே. பல ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படுவதும் காணாமல் போவதும் ஊடக அலுவலகங்கள் தாக்கப்படுவதும் என நீண்டகாலமாக இருந்துவரும் துர்ப்பாக்கிய நிலை தொடர்ந்த வண்ணமே உள்ளது. உண்மைகள் வெளிவந்துவிடும் எனும் அச்சத்தினாலேயே அரச கையாட்கள் இவ்வாறான தீயகாரியங்களை மேற்கொள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமெல், வடமாகாண சுகாதார திணைக்கள பணிப்பாளர் திருமதி யூட்ரதனி ஆகியோர் கலந்து கொண்டனர். மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை தவிசாளர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாணசபை உறுப்பினர்கள், வாழ்நாள் பேராசிரியர் சிற்றம்பலம், மன்னார் நகரபிதா, பத்திரிகையாளர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

புதியவன் நாளிதழின் கடந்தகால பணிகள், செய்திகள், அதன் வளர்ச்சியை பிரமுகர்கள் வாழ்த்தியும் பாராட்டி பேசினர். நிறைவுரையை பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சிவகரன் நிகழ்த்தினார்.

 

puthiyavan-event-030814-seithy%20(1).jpg

 

 

puthiyavan-event-030814-seithy%20(2).jpg

 

 

puthiyavan-event-030814-seithy%20(3).jpg

 

 

puthiyavan-event-030814-seithy%20(4).jpg

 

 

puthiyavan-event-030814-seithy%20(5).jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=114281&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.