Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடும் வறட்சியினால் இரு வாரத்தில் 16 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Featured Replies

உதய கார்த்திக் : இலங்கையில் நிலவிவரும் மிக மோசமான வறட்சியான காலநிலையால் 15 நாட்களில் 16 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக  அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.  அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் நாளாந்தம் வெளியிடப்படும்  அறிக்கையில் வறட்சியால் இதுவரை 4,68,329 குடும்பங்களும் 16, 20, 602 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இது குறித்து மேலும் தெரியவருவதாவது ; நாட்டில் நிலவிவரும் மோசமான வறட்சியால் தேசிய உணவு உற்பத்திக்கு பங்களிப்பளிக்கும் பிரதான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மோசமான வறட்சியால் பொதுமக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வரும் நிலையும் காணப்படுகிறது.  இந்நிலையில் மோசமான வறட்சியால் மொனராகலை மாவட்டத்தில் 1,28,183 பேரும்  பொலநறுவை மாவட்டத்தில் 1,47, 439 பேரும்  அநுராதபுரத்தில் 53,323 பேரும் அம்பாறையில் 31, 278 பேரும் ,  மட்டக்களப்பில் 2,52, 673 பேரும் , திருகோணமலை 90, 264 பேரும் குருநாகலில் 4, 73, 125 பேரும் புத்தளத்தில் 88, 091 பேரும்  அம்பாந்தோட்டையில் 1, 06, 420 பேரும் வவுனியாவில் 43, 332 பேரும்  முல்லைத்தீவில் 56, 468 பேரும் மன்னாரில் 76, 870 பேரும் கிளிநொச்சியில் 73, 125 பேரும்  பாதிக்கப்பட்டுள்ளதாக  நாடு முழுவதும் 16, 20, 602 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது

 

http://thinakkural.lk/article.php?local/t3wouqycfn7540a9fb9e6ef419728tjylx0426e9add520623d521ab8xrwux#sthash.2iB4tTQv.dpuf

  • தொடங்கியவர்

நந்திக்கடலில் நீரில்லை

 

 

index(989).jpg-சுப்பிரமணியம் பாஸ்கரன் 

தற்போது நிலவும் வறட்சி காரணமாக முல்லைத்தீவு, நந்திக்கடல் மற்றும் சிறுகடல் குளங்களை நம்பி மீன்பிடியில் ஈடுபட்ட 657 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் நா.வேதநாயகம் செவ்வாய்க்கிழமை (12) தெரிவித்தார். 

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சிறுகடல்கள் மற்றும் குளங்கள் என்ற அடிப்படையில், நந்திக்கடலில் 250 குடும்பங்களும், மாத்தளன் சாலைக்கடலில் 100 குடும்பங்களும், விசுவமடுக்குளத்தில் 124 குடும்பங்களும், உடையார்கட்டுக் குளத்தில் 72 குடும்பங்களும், மருதமடுக் குளத்தில் 27 குடும்பங்களும், தண்ணிமுறிப்புக் குளத்தில் 84 குடும்பங்களும் மீன்பிடியில் ஈடுபட்டு வந்தனர். 

தற்போது நிலவும் வறட்சி காரணமாக மேற்படி சிறுகடல் மற்றும் குளங்களின் நீர்மட்டங்கள் குறைந்து மீன்களின் உற்பத்தி குறைவடைந்துள்ளது. 

இதனால், மேற்படி குடும்பங்கள் வாழ்வாதார ரீதியில் கஸ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார். 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/121826-2014-08-12-10-37-20.html

 

வறட்சி காரணமாக முல்லைத்தீவில் 33,000 குடும்பங்கள் பாதிப்பு

 

 

unnamed(187).jpg-சுப்பிரமணியம் பாஸ்கரன் 

முல்லைத்தீவு மாவட்டத்தில், தற்போது நிலவும் வறட்சி காரணமாக அம்மாவட்டத்தைச் சேர்ந்த 33 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் நா.வேதநாயகம் செவ்வாய்க்கிழமை (12) தெரிவித்தார்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட மாந்தை கிழக்கு, துணுக்காய், புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று, ஒட்டுசுட்டான், வெலிஓயா பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கான குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். 

அத்துடன், வறட்சியால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை  வழங்கும் நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்  தெரிவித்தார். 

வறட்சியினால் அனைத்து விதத்திலும் பாதிக்கப்பட்ட விவசாயம், மீன்பிடி தொழில்கள் சார்ந்த மக்களுக்கு உலக உணவு ஸ்தாபனம் மூலம் உலர் உணவுப் பொருட்கள் இம்மாத இறுதிக்குள் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/121820----33000--.html

 

 

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவிவரும் கடும் வரட்சி மக்கள் பெரும் அவலம்

 

Kili%20water_CI.JPG

 கிளிநொச்சி மாவட்டத்தில்  தொடர்ச்சியாக நிலவிவரும் கடும் வரட்சி காரணமாக மக்கள் குடிநீர் உள்ளிட்ட நீர்த்தேவைகளை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சிறய குளங்கள் வற்றியுள்ள நிலையில் நிலத்தடி நீரும் மிக வேகமாக குறைவடைந்து வருகிறது. கால்நடைகள் கூட குடிநீரை பெற்றுக்கொள்ள முடியாது அலைந்து திரிவதனையும் காணமுடிகிறது.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்,நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, உள்ளுராட்சி சபைகள் மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்ற போது நாளுக்கு நாள் புதிய புதிய பிரதேசங்களில் குடிநீர்த் தேவை ஏற்பட்டு வருகிறது. தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்;ட நான்கு இலட்சம் லீற்றருக்கு மேல் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் குடிநீருக்கான பற்றாக்குறை தொடர்ச்சியாக காணப்பட்டே வருகிறது.

தற்போது நிலவும் வரட்சியான நிலைமை தொடர்ந்தும்  சில மாதங்களுக்கு நிலவுமாக இருந்தால் நீர் தேவையை பூர்த்தி செய்வது என்பது மிகப்பெரும் நெருக்கடியாக மாறுவதோடு நோய்த்தாக்கங்களுகும் ஏற்படும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110469/categoryId/2/language/ta-IN/-----.aspx

 

வற்றிப் போயிருக்கும் இரமணைமடு வாய்க்கால்! குளோபல் தமிழ் செய்தியாளர்

 

Iranaimadu1_CI.jpg

கிளிநொச்சி இரணைமடுக் குளத்திலிருந்து கிளிநொச்சியின் விவசாய கிராமங்களுக்கு நீர் பாயும் வாய்க்காலே இது. வடக்கில் ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சி காரணமாக இரணைமடுக்குளத்தில் நீர் மட்டம் குறைந்த நிலையில் இந்த வாய்க்காலுக்கும் வற்றிக் காணப்படுகிறது.


இந்த வாய்க்காலில் ஆண்டு முழுவதும் தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கும். குறிப்பாக கோடை காலங்களில் இந்த வாய்க்காலில் தான் மக்கள் குளிப்பார்கள். கோவிந்தன்கடைச் சந்தி எனப்படும் இந்த இடத்திலும் எப்போழுதும் மக்கள் குளித்துக் கொண்டிருப்பதைக் காண முடியும்.


மனித்கள் மட்டுமன்றி கால்நடைகளுக்கும் இந்த வாய்க்கால் தாகத்தை தீர்க்கும் இடம். இந்தப் பகுதிகளில் மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகள் இந்த வாய்க்காலில் தமது தாகத்தை தீர்த்துக் கொண்டிருப்பது அழகு மிகுந் காட்சி. தற்பொழுது இந்த வாய்க்கால் தண்ணீரற்றுக் காணப்படுகிறது.


கடுமையான வரட்சியன் காரணமாக இந்தப் பகுதியில் உள்ள மக்கள் குடளிக்கவும் தமது உடைகளை தோய்த்தல் உள்ளிட்ட தேவைகளை நிவர்த்தி செய்யவும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் இந்தப் பகுதியி கால்நடைகள் தண்ணீர் இன்றி அவதியுறுகின்றன.  

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110511/categoryId/2/language/ta-IN/---.aspx

 

  • தொடங்கியவர்

கிளிநொச்சிக்கு குடிநீர் குழாய் பொருத்தும் பணிகள் தீவிரம்

 

DSCF5085.JPG

-சுப்பிரமணியம் பாஸ்கரன் 

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 20 கிராம அலுவலர் பிரிவுகளுக்கான குடிநீர் விநியோக நீர்க்குழாய்கள் பொருத்தப்படும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது. 

மேற்படி 20 கிராம சேவகர் பிரிவுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கான குடிநீர்த் திட்டத்துக்கு 1,620 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
இந்த விநியோகத்திட்டத்தில் கீழ், கண்டாவளை பிரதேசததுக்கான தண்ணீர்த் தாங்கி பரந்தனிலும், கரைச்சி பிரதேசத்துக்கான தண்ணீர்த் தாங்கி இரத்தினபுரம் பகுதியிலும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.  

இந்நிலையில், மேற்படி குடிநீர் விநியோகத்தை இணைக்கும் குழாய்கள் பொருத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்தது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/121984-2014-08-13-09-56-12.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.