Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துருக்கிஸ்தானில் சிக்கியுள்ள உறவுகளை மீட்டுத் தருமாறு உறவினர் மன்றாட்டம்

Featured Replies

THURUKIS98765456.jpg

துருக்கிஸ்தான் நாட்டில் கடமை புரியும் தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு மட்டக்களப்பைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட உறவினர்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். பழுகாமம் கிராமத்தைச் சேர்ந்த 24 பேரும், காந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த 05 பேரும், மண்டூர் 39 ஆம் கிராமத்தைச் சேர்ந்த 3 பேரும் எனத் தமக்குத் தெரிந்தளவில் துருக்கிஸ்தானில் உள்ளனர் என்றும், இதனைவிட வெல்லாவெளி, தாந்தமலை போன்ற பல கிராமங்களைச் சேர்ந்தவர்களும் அங்குள்ளனர் என்றும், அவர்களுள் 39 பேர் துன்புறுத்தப்பட்டு காயங்களுக்குள்ளாக்கப்பட்ட நிலையில் அங்கு உள்ளனர் என்றும், துருக்கிஸ்தானுக்கு தொழிலுக்குச் சென்றவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த 2012, 2013 ஆம் ஆண்டுகளில் தொழில் வாய்ப்புக்காகச் சென்ற எமது உறவினர்கள், துருக்கிஸ்தான் நாட்டில் நிகழும் அசாதாரண சூழ்நிலையில் சிக்குண்டுள்ளனர். எங்களது உறவுகளை எதுவித பாதிப்புமின்றி, விரைவில் மீட்டுத்தருமாறு கேட்டுக் கொள்கின்றோம் எனவும் அவர்கள் கூறுகின்றனர். இவர்களின் கருத்துக்களின்படில் கடந்த 2012 ஆம் ஆண்டு துருக்கிஸ்தான் நாட்டுக்குச் சென்றவர்கள்தான் அதில் அதிகம்பேர் உள்ளனர். இவ்வாறு சென்றவர்கள் அனைவரும் சட்டரீதியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் மூலமாக ஒவ்வொருவரும் தலா 29 ஆயிரம் ரூபா செலவு செய்து தொழிலுக்குச் சென்றுள்ளனர். அப்படி துருக்கிஸ்தானில் தொழிலுக்குச் சென்றவர்களில் பெரும்பாலானோர் அந்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட விமானநிலையத்தில் சுத்திகரிப்புத் தொழிலுக்கு அமர்த்தப்பட்டனர்.
 
இவர்களுக்குரிய மாதாந்த சம்பளங்கள் அனைத்தும் முறையாக வழங்கப்பட்டு வந்த நிலையில் துருக்கிஸ்தான் நாட்டை அண்டியுள்ள நாடுகளில் பலத்த ஆயுத மோதல்கள் இடம்பெறுவதனால் தாம் இனிமேல் இங்கு வேலைசெய்வது சிக்கலான விடயமாகவுள்ளது என்றும் எனவே, தங்களை தமது சொந்த நாட்டுக்கு அனுப்புங்கள் என தொழிலாளர்கள் கூறியுள்ளனர் எனவும், அதன் பிற்பாடே அந்த நாட்டைச் சேர்ந்த ஆயுததாரிகள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர் என்று கூறப்பட்டது. அவர்களுள் 39பேர் இவ்வாறு சென்றுள்ளனர். சென்றவர்கள் அனைவரையும் ஓர் அறையில் பூட்டி வைத்து அவர்களை அடித்துத் துன்புறுத்தியுள்ளனர் எனவும், அவர்களுள் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
 
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.