Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துள் மக்களை அனுமதிக்க மறுக்கும் படை தெல்செவனவில் தண்ணியடிக்க அனுமதி

Featured Replies

தெல்செவனவை விஸ்தரிக்க கடற்கரைகளும் சுவீகரிப்பு” சண்முகலிங்கம் சஜீவன

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் எங்களது மக்களை மீளக்குடியமர அனுமதிக்க மறுக்கும் அரசு மறுபுறம் தெல்செவன நட்சத்திரவிடுதியை விஸ்தரிக்க கடற்கரைகளையும் சுவீகரிப்பதாக வலி.வடக்கு பிரதேச சபையின் உபதவிசாளரும் மீள்குடியேற்ற குழு தலைவருமான சண்முகலிங்கம் சஜீவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பௌத்தர்கள் தமது போயா தினங்களில் மதுபானம் விற்கத்தடை விதிக்கின்றார்கள். ஆனால் அதே தெல்செவனவில் எந்தவித தடையுமின்றி மதுபானம் விற்பனை செய்கின்றார்கள். அங்கிருந்து எவரும் கொள்வனவு செய்து எடுத்து வந்து வெளியே குடிக்கிறார்கள்.

அதே போன்று மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்ட கடற்கரைகள் எல்லாம் செம்மண் பரப்பி பூங்கா அமைக்கின்றார்கள். அருகாக ஜனாதிபதிக்கு கட்டப்பட்ட மாளிகை வரை காப்பெட் வீதி மின்விளக்கு அலங்காரமென ஜொலிக்க வைக்கிறார்கள்.

ஆனால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள தேவாலயங்களிற்கோ இந்து ஆலயங்களிற்கோ எம்மை செல்ல அனுமதிக்காத இராணுவம் தல்செவனவில் தண்ணியடிக்க எவராயினும் அனுமதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த 9 ஆயிரத்து 948 குடும்பங்கள் அகதிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களை மீளக்குடியமர அனுமதிக்கிறார்கள் இல்லை. அவர்கள் தற்போது அடையாளப் படுத்தப்பட்ட 34 முகாம்களினில் அகதி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தற்போது முகாம் அமைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் காணிகளை கொள்வனவு செய்து அங்கேயே நிரந்தரமாக குடியமர்த்தவும் முயற்சிகள் தொடர்கின்றன.

மறுபுறம் வளலாயில் தலா இரண்டு பரப்பு காணிகளை வழங்கி மாற்று குடியேற்ற திட்டங்களை முன்னெடுக்கவும் முயற்சிகள் நடக்கின்றன. எது எவ்வாறாக இருந்தாலும் எங்களை எங்களது சொந்த நிலங்களில் மீளக்குடியேற்று என்ற கோரிக்கையினை கைவிட நாம் தயாரில்லையெனவும் சஜீவன் அங்கு தெரிவித்திருந்தார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110524/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.