Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமற்போனவர்கள் மரணித்து விட்டனர் என்றால், எதற்காக விசாரணை நடத்துகிறது ஆணைக்குழு? - சுரேஸ் எம்.பி கேள்வி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமற்போனவர்கள் மரணித்து விட்டனர் என்றால், எதற்காக விசாரணை நடத்துகிறது ஆணைக்குழு? - சுரேஸ் எம்.பி கேள்வி. 

[Thursday 2014-08-14 18:00]
Suresh-150-mp.JPG

காணாமற்போனவர்கள் மரணித்து விட்டார்கள் என ஆணையாளர் கூறுவாறாயின் அவர்கள் எவ்வாறு, யாரால் கொல்லப்பட்டார்கள் என்பதையும் அவரே வெளியிட வேண்டும். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்தாவது- காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்கான விசாரணை ஆணைக்குழுவின் தலைவரான மக்ஸ்வெல் பரணகம மன்னார் மாவட்ட விசாரணைகள் முடிந்த பின்னர் மடுவில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் உண்மைக்கு மாறான சில செய்திகளை வெளியிட்டிருக்கின்றார்.

  

மன்னார் மாவட்டத்திலிருந்து 1 லட்சத்து 47 ஆயிரம் பேர் காணாமல் போயிருக்கின்றனர் என்று சில செய்திகள் வந்துள்ளன. ஆனால் வடக்கில் 3 ஆயிரத்து 300 பேரே காணாமல் போயுள்ளனர் என்று முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் அவை உறுதிப்படுத்தப்படவில்லை. மன்னாரிலிருந்து 312 பேர் தொடர்பில் மாத்திரமே முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 250 பேர் விசாணைக்கு அழைக்கப்பட்டனர். எனினும் 153 பேர் மாத்திரமே சாட்சியமளிக்க வந்திருந்தனர் என்று ஆணைக்குழுவின் தலைவர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

இந்த விசாணைக்குழு ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் போன்ற மாவட்டங்களில் விசாரணைகளை முன்னெடுத்தபொழுது தமது உறவுகளைத் தொலைத்த பல குடும்பங்கள் பயங்கரவாதத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டார்கள். மரணச்சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தப்பட்டார்கள் என்பதும் இந்த விசாரணைக் குழுவுக்குத் தெரிந்த விடயமே. இதன் காரணமாகத்தான் அரைவாசிக்கும் மேற்பட்டோர் சாட்சியமளிக்க வரவில்லை என்பதும் இந்த விசாரணைக்குழு அறிந்ததே.

ஆனாலும் கூட, இவை எதுவுமே தனக்குத் தெரியாததுபோல் அதன் தலைவர் பத்திரிகையாளர் மாநாடு நடத்துவது ஆணைக்குழு தன்னைத்தானே கேவலப்படுத்துவதாக உள்ளது. பத்திரிகையாளர் மாநாட்டில் மற்றொரு விடயத்தையும் இவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது, தங்களுக்கு சுமார் 19 ஆயிரம் மனுக்கள் கிடைத்துள்ளன என்றும் இதில் ஏறத்தாழ 5ஆயிரம் பேர் இராணுவத்தினர் என்றும் ஆக 14 ஆயிரம் முறைப்பாடுகளே பொதுமக்கள் சார்ந்தவை. இதிலும் பலர் யுத்தத்தில் இறந்துபோயிருப்பர் என்றும் அவர் கூறுகிறார். 14 ஆயிரம் பேர் காணாமற்போயினர் என்பது அவரைப் பொறுத்தவரையில் சாதாரணமான விடயமாகத் தெரிகின்றது. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டபொழுது 'காணாமற்போனவர்கள் மரணித்துவிட்டனர் அதைப்பற்றிப் பேசுவதற்கு ஒன்றுமில்லை' என்று ஆணைக்குழுவின் தலைவர் கூறியிருக்கிறார்.

காணாமற்போனவர்கள் மரணித்து விட்டனர் என்று கூறும் ஒரு ஆணையாளர், என்ன காரணத்துக்காக விசாரணை ஆணைக்குழுவுக்குத் தலைமை தாங்கி நடத்த வேண்டும்? யுத்தத்தில் காணாமற்போனவர்களை மட்டும் எமது மக்கள் தேடவில்லை. பல்வேறு சுற்றிவளைப்புகளின் போதும் சந்தேகத்தின் பேரிலும் கைது செய்யப்பட்டவர்கள், படைத்தரப்பின் உத்தரவாதத்தை நம்பி பெற்றோர், உற்றார் உறவினர்கள் முன்வந்து இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் ஆகியோருக்கு என்ன நடந்தது என்பதைத்தான் எமது மக்கள் கேட்கிறார்கள். இவையெல்லாம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவருக்குத் தெரிந்த போதிலும் அவர் காணாமற்போனவர்கள் மரணித்துவிட்டார்கள் என்று தனது முடிவைச் சொல்லியிருக்கின்றார்.

இவர்கள் மரணித்துவிட்டார்கள் என ஆணையாளர் கூறுவாறாயின் இவர்கள் எவ்வாறு? யாரால்? கொல்லப்பட்டார்கள் என்பதையும் அவரே வெளியிட வேண்டும். அதேசமயம் காணாமற்போனவர்கள் மரணித்து விட்டார்கள் என்றால் இந்த விசாரணைக்குழு எதற்கு என்பதனையும் ஆணையாளர் தெளிவுபடுத்த வேண்டும். இந்த விசாரணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க இப்பொழுது சர்வதேச நிபுணர்களும் வரவழைக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் கவலைக்குரிய விடயம் எதுவென்றால் ஆணையாளர் காணாமற் போனோர் தொடர்பில் ஒரு தெளிவான முடிவிற்கு ஏற்கனவே வந்துவிட்டார் என்பதையே அவரது பத்திரிகையாளர் மாநாடு புலப்படுத்துகின்றது.

எனவே இந்த ஆணைக்குழு ஒரு கண்துடைப்பு என்றும் காலத்தைக் கடத்தும் அரசாங்கத்தின் தந்திரோபாயம் என்றும் நாம் ஏற்கனவே சொல்லியதை இங்கு மீண்டும் நினைவூட்ட விரும்புகின்றேன். இந்த ஆணைக்குழு என்பது நாட்டு மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் நடவடிக்கை என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆணைக்குழுவே இதனை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.என்றுள்ளது.

http://seithy.com/breifNews.php?newsID=114924&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.