Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படக் கூடுமென ஐரோப்பிய நிறுவனங்கள் ஊகம்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படக் கூடுமென ஐரோப்பிய நிறுவனங்கள் ஊகம்:-
17 ஆகஸ்ட் 2014
 
economic-sanctions1_CI.png

இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படக் கூடுமென ஐரோப்பிய நிறுவனங்கள் ஊகம் வெளியிட்டுள்ளன.

இலங்கையுடனான உடன்படிக்கைகளின் போது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படல் என்ற நிபந்தனையும் உள்ளடக்கப்பட்டு உடன்படிக்கைகள் தயாரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய நிறுவனங்களின் இந்த நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய ஏற்றுமதி கடன் முகவர் நிறுவனங்கள் இவ்வாறு புதிய நிபந்தனைச் சரத்துக்களை உடன்படிக்கைகளில் உள்ளடக்கியுள்ளன.

ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் அப்போது சில ஏற்பாடுகள் செய்யப்படும் என உடன்படிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

சர்வதேச ரீதியில் இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படக் கூடும் என்ற கருதுகோளின் அடிப்படையில் இந்த நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையானது இலங்கைக்கு பல்வேறு வழிகளில் பாதகத்தை ஏற்படுத்தக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக இலங்கைக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வட்டி வீதத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிதி அபிவிருத்தித் திட்டங்கள்தொடர்பிலான பல்வேறு புதிய உடன்படிக்கைகளில் இந்த நிபந்தனைகள் உள்ளடக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிபந்தனைகளுக்கு அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110648/language/ta-IN/article.aspx

 

சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக பொருளாதார தடையை எதிர்பார்க்கும் ஐரோப்பிய நிதி நிறுவனங்கள்!

eu_logo.pngசிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக பொருளாதார, வர்த்தக, நிதித் தடைகள் அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கும், ஐரோப்பிய ஏற்றுமதி கடன் வழங்கும் நிறுவனங்கள், தமது வரைவு உடன்பாடுகளில், தடைகள் குறித்த உட்பிரிவுகளை சேர்க்கத் தொடங்கியுள்ளன.

இதற்கமைய, சிறிலங்கா மீது பொருளாதாரத் தடையோ கட்டுப்பாடுகளோ விதிக்கப்பட்டால், ஏற்றுமதிக்கடன் காப்புறுதிகள் இடைநிறுத்தப்படும்.

இதன் விளைவாக, கடன் ஆபத்தைச் சுட்டிக்காட்டி கடன்களுக்காக வட்டி வீதங்களை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது சிறிலங்காவுக்குப் பாதகமாக அமையும் என்றும் கருதப்படுகிறது.

சிறிலங்காவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவதற்கான சூழல் தற்போது தென்படாத நிலையிலும், ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கமைய, மேற்கொள்ளப்படும் போர்க்குற்ற விசாரணையின் விளைவாக, இத்தகைய தடைகைள் விதிக்கப்படலாம் என்று ஐரோப்பிய கடன் வழங்கும் நிறுவனங்கள் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

ஐ.நா சாசனம் மற்றும் பிரகடனங்களை மீறிச் செயற்பட்டதற்காக ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் இணைந்து, சிரியா, வடகொரியா, ஈரான், ரஸ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக, பொருளாதாரத் தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்று சிறிலங்கா மீதும் பொருளாதாரத் தடை அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமது உடன்பாடுகளில் அதுகுறித்த உட்பிரிவுகளையும் ஐரோப்பிய கடன் வழங்கும் நிறுவனங்கள் சேர்க்கத் தொடங்கியுள்ளன.

இதற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.http://www.pathivu.com/news/33241/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.