Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களத்தில் வெளியாகிய “பிரபாகரனா” தமிழகத்தில் வெளியாகும் “புலிப்பார்வை” - ஆதி

Featured Replies

அண்மையில் பாலச்சந்திரன் உள்ளிட்ட சிறுவர்களை போராளிகளாக சித்தரிக்கும் தமிழக திரைப்படமான “ புலிப்பார்வை” யின் வெளியீட்டிற்கு நாம்தமிழர் கட்சி தலைவர் சீமான் சென்று ஆசிர்வாதம் வழங்கியிருந்ததது மட்டுமல்லாமல் சிறுவர்களை போராளிகளாக புலிகள் வைத்திருந்தார்கள் என தவறாக சித்தரிக்கும் திரைப்படத்தை தடை செய்யச் சொல்லி கோசம் எழுப்பிய மாணவர்களும் மிருகத்தனமாக தாக்கபட்டிருந்தார்கள்.
 
“புலிப்பார்வை”யின் சில காட்சிகள் சிங்களத்தில் மொழிபெயர்க்கபட்டு சிங்களவர்கள் மத்தியில் பரப்புரை வெகு விமர்சையாக ஆரம்பிக்கபட்டுவிட்டது. பாலச்சந்திரன் ஒரு போராளி என்றும் அவன் சண்டையில் கொல்லபடப்டதாகவும் சிங்களவர்கள் மத்தியில் பரப்புரை செய்யபட்டுவருகிறது. பாலச்சந்திரன் ஒரு போராளி என்பதை தமிழ்நாடே ஏற்றுக்கொண்டுள்ளது என்பது அவர்களின் வாதம்.
 
“புலிப்பார்வை” என்ற தமிழக சினிமா தொடர்பாக பேச முதல் தமிழ்நாட்டு உணர்வாளர்களுக்கும் நாம்தமிழர் கட்சிக் காரர்களுக்கும் ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
  10599719_715024525237338_714150935032944
2008 இல் சிங்களத்தில் வெளியாகிய பிரபாகரன்
 
விடுதலைப்புலிகள் சிறுவர்களை படையில் வைத்திருந்தார்கள் என்று சித்தரிக்கும் சிங்கள திரைப்படம் ஒன்று “பிரபாகரன்” என்ற பெயரில் 2009 காலப்பகுதியில் வெளியாகியது. அதில் பல காட்சிகள் தமிழகத்தில் எடுக்கட்டிருந்தன. “பிரபாகரன்” என்ற சிங்கள திரைப்பட இயக்குனர் துசார பீரிஸ் மற்றும் குளுவினர் 2008 இல் தமிழகத்தில் இருந்து விரட்டப்பட்டனர். (2008 இல் சீமான் தலமையிலான நாம்தமிழர் கட்சி ஆரம்பிக்கபட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது). தமிழீழ விடுதலை ஆதரவுச் சக்திகள் அந்த சிங்கள திரைப்படக் கும்பலை தமிழநாட்டில் இருந்து விரட்டியிருந்தது. ஆனால் இன்று சிங்கள திரைப்படத்தில் மூலக்கருவான “சிறுவர்களை புலிகள் போராளிகளில் வைத்திருந்தனர்” என்ற கருப்பொருளை மெய்பிக்கும் வகையில் “புலிப்பார்வை” என்ற போர்வையில் தமிழில் திரைப்படம் தயாரித்து அதை “நாம் தமிழர்” கட்சியின் தலமையினூடாக அங்கிகாரம் பெற்று தமிழகத்தில் வெளியிட இருக்கிறது தமிழக திரையுலகம்.
 
சீமான் கட்சி தொடங்க முதல் “பிரபாகரன்” என்ற சிங்கள திரைப்படத்தை தமிழகத்தில் இருந்து விரட்டிய உணர்வாளர்கள் “புலிப்பார்வை”யை துரத்த வேண்டும். சீமான் குறுக்கிட்டால் சீமானையும் துரத்த வேண்டும்.
 
“பிரபாகரன்” என்ற திரைப்படத்தில் எல்லா இடத்திலும் புலிகளின் வரிச்சீருடை பாவிக்கபட்டிருப்பதோடு  சிறுவர்கள் மீது அது திணிக்கபட்டிருந்தது. “பிரபாகரன்” என்ற சிங்கள  திரைப்படத்தால் சாதிக்க முடியாமல் போனதை இலங்கை அரசு “புலிப்பார்வை”யினூடு நிட்சயமாக சாதிக்க முடியும் என்று நம்புகிறது. பாலச்சந்திரன் குழந்தையல்ல அவன் ஒரு போராளி என்று சாட்சியத்தை மாற்றும் வகையில் “புலிப்பார்வை”யை தயாரித்து அதை நாம்தமிழர் கட்சித் தலமையையின் அங்கிகாரத்துடன் வெளியிடுவது என்பது இலங்கை அரசின் தமிழகத்தில் செய்த மிகப்பெரிய உளவு நடவடிக்கையாக தான் கருத முடியும்.
10378160_715024941903963_467205042891393
2008 இல் சிங்களத்தில் வெளியாகிய பிரபாகரன்
 
தமிழக மாணவர்களே!!!
புலிகள் சிறுவர்களை போராளிகளாக வைத்திருந்தார்கள் என்று சொல்லும் “பிரபாகரன்” என்ற சிங்களத் திரைப்பட படமாக்கலையே தமிழகத்தில் இருந்து துரத்திய மறத்தமிழர்கள் இன்னமும் தமிழகத்தில் இருக்கிறார்கள். அந்தக் காலப்பகுதியில் நாம் தமிழர் என்ற கட்சி கூட இருக்கவில்லை என்பதை ஞாபகம் வைத்திருங்கள். 
 
ஆரம்பத்தில் சீமான் மீது அதீத நம்பிக்கை இருந்தது என்னமோ உண்மைதான். ஆனால் சீமானின் அரசியல் நோக்கிலான நகர்வுகள் மற்றும் சீமானை சுற்றியிருக்கும் அல்லக்கைகள் அந்த நம்பிக்கையை தகர்த்திருந்தன. தமிழீழ தேசிய கொடி மற்றும் மாவீரர் நாள் வணக்கங்களை சீமானின் கட்சியினர் படுத்தும் பாடு அவர்கள் மீது எரிச்சலை உண்டுபண்ணியது. இன்று சிங்கள அரசின் திரைப்படத்தை வேறு தொனிப்பொருளில் தமிழ்ப்படமாக்கி அதன் வெளியீட்டிற்கு சீமானே சென்றுவிட்ட நிலையில் இனிமேல் சீமான் குறித்து அமைதியாக கடந்து செல்வதே சிறந்தது. 
 
சீமான் வரமுதே தமிழகத்தில் தமிழீழத்திற்கா பலமான குரல் இருந்துவருகிறது. அதை உடைத்து தனக்கு கீழ் கொண்டுவந்து அதை திசைமாற்றவா சீமான் செயற்படுகிறார் என்பதை தமிழக மாணவர்களும் மக்களும் உணர்ந்து செயற்படுவது நன்று. அது குறித்து எங்களிடம் எந்த கருத்தும் கிடையாது.
10540543_715025278570596_221240174770071
2008 இல் சிங்களத்தில் வெளியாகிய பிரபாகரன்

10628229_715025748570549_389904981522931

10616060_715025605237230_680294358277687

2014 இல் தமிழில் வெளியாகும் புலிப்பார்வை
 
2008 இல் சிங்களத்தில் வெளியாகிய “பிரபாகரன்” என்ற திரைப்படத்தினதும் 2014 இல் தமிழகத்தில் இருந்து தமிழில் வெளியாகும் “புலிப்பார்வை” என்ற திரைப்படத்தினதும் நோக்கம் ஒன்றுதான்.
 “பிரபாகரன்” திரைப்படக்குழுவை தமிழக மக்கள் 2008ல் தமிழகத்தில் இருந்து துரத்தியடித்தனர் ஆனால் “புலிப்பார்வை” என்ற திரைப்படத்தை எதிர்த்த மாணவர்களை மண்டையை உடைத்து கலைத்தனர் நாம் தமிழர் மற்றும் புலிப்பார்வை படக்குழுவினர்.
ஆறு வருடத்தில் பெரும் மாற்றம்.
 
ஆதி
18-08-2014

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.