Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் வாழ்வியலில் இருந்து பறிக்கப்படும் கன்னியா வெந்நீரூற்று!

Featured Replies

kanniya%2011425123417.jpg

 

இலங்கையின் பல பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளை கவரும் இடங்கள் இருக்கின்றன. இவற்றில் தமிழர் வரலாற்றுடனும் அவர்களின் கலாசாரத்துடனும் இணைந்த சுற்றுலா மையமாக விளங்கும் ஓர் இடமே கன்னியா வெந்நீரூற்று. இது திருகோணமலை மாவட்டத்தின் கன்னியா கிராம அலுவலர் பிரிவில் உள்ளது. புராதன மன்னராட்சிக் காலத்துக்குரிய இந்த புனித இடம் தமிழ் மக்களின் சமூக, சமய நம்பிக்கைகளுடனும் அனுட்டானங்களுடனும் நெருங்கிய தொடர்பை கொண்டது என வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. 
 
 
 
ஆனால் இன்று அதன் நிலை...?
 
சிவபெருமானின் தெற்கு உறைவிடமான திருகோணமலை கோணேஸ்வரர் கோயிலுக்கு சிவபக்தனாகிய பத்துத் தலை இராவணன் சென்றான். அங்குள்ள லிங்கத்தில் மனதைப் பறிகொடுத்த அவன் அந்த லிங்கத்தை அப்பாறையிலிருந்து வெட்டி எடுத்து தனது தாயாரின் வணக்கத்துக்காக கொண்டு செல்ல வேண்டும் என விரும்பினான். அப்படி அவன் பாறையை வெட்டிய பகுதியே கோணேஸ்வரத்தின் வலது புறத்தில் காணப்படும் இராவணன் வெட்டு. இராவணணின் இச் செயலால் கோபமுற்ற சிவன் பாறையைத் தமது காலால் நகர்த்தி அழுத்தினார். அவன் அதில் சிக்கிக் கொண்டான். இந்தியாவில் இருந்த இராவணணின் தாயார் இதனைக் கேள்விப்பட்டு இராவணன் இறந்துவிட்டான் என நினைத்தாள். அந்த அதிர்ச்சியில் அவள் உயிரிழந்தாள். புத்த கோயில் ஆனால், அவனால் 
 
kanniya%2011425123419.jpg
 
புத்த கோயில்
 
சிவலிங்கத்தை எடுத்துச் செல்ல முடியவில்லையே தவிர இறக்கவில்லை. அவன் சிவனைப் பிரார்த்தித்து தன்னை மன்னிக்க வேண்டினான். சிவன் மன்னித்தார். அதன் பின் இராவணன் தனது தாயாருக்கு 31 ஆவது நாள் கிரியையைச் செய்ய முனைந்தான். அவன் கன்னியா என்று அழைக்கப்படும் இடத்துக்குச் சென்று தனது உடைவாளை உருவி ஏழு இடத்தில் குத்தினான். அந்த இடத்தில் வெந்நீரூற்றுக்கள் வெளிக்கிளம்பின என புராதன கதைகள் கூறுகின்றன. இந்தக் கிணறுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமான தன்மையுடைய சூட்டினைக் கொண்டவை. 90 - 120 சென்ரிமீற்றர் ஆழமுடைய சிறிய சதுர கிணறுகளே ஆரம்பத்தில் இருந்தன. காலப்போக்கில் அவை புனரமைக்கப்பட்டன. இங்கு ஒரு பிள்ளையார் ஆலயம் உள்ளது. பல தலைமுறையாக இந்து, தமிழ் மக்கள் தங்களின் நெருங்கிய உறவுகளின் 31 ஆவது நாள் சமய அனுட்டான கடமைகளை இங்கேயே செய்து வந்தனர். கைவிடப்படும் பிள்ளையார் இவ்வாறு தமிழர் -
 
kanniya%2011425123412.jpg
கைவிடப்படும் பிள்ளையார்
 
வாழ்வியலுடன் இணைந்த இந்த வெந்நீரூற்று தொடர்பாக நவாலியூர் சோமசுந்தரப் புலவர், 'காதலனை பிரிந்தவளின் மனம் போல ஒன்று கவி பாடிப் பரிசு பெறான் மனம் போல ஒன்று தீது பழி கேட்டவன் தன் மனம் போல ஒன்று செய்த பிழைக் கலங்குபவன் மனம் போல ஒன்று நீதி பெறா வேழைதுயர் மனம் போல ஒன்று நிறைபழித்த கற்புடையாள் மனம் போல ஒன்று காது மழுக் காறுடையான் மனம் போல ஒன்று கனலேறு மெழு நீர்கள் உண்டு கன்னியாயில்' எனப் பாடியுள்ளார்.
 
இத்தகைய சிறப்பு மிக்க கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் புதிதாகப் புத்தர் சிலை வைக்கப்பட்டு பௌத்த மயமாகி வருகிறது. அங்குள்ள பிள்ளையார் ஆலயம் மெல்ல மெல்ல மறைந்து செல்கின்றது. அங்குள்ள பெயர் பலகைகளில் ஒரு சில தமிழ் சொற்களே. அதிலும் கூட தமிழ் கொலை. வெந்நீரூற்றைப் பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளிடம் 10 ரூபா வீதம் கட்டணம் அறவிடப்படுகின்றது. தனிச்சிங்களத்தில் டிக்கெற் அதற்கு வழங்கப்படுகின்ற சிட்டையில் கூட ஒரு தமிழ் எழுத்து இல்லை. பௌத்த விகாரை விரிவாக்கமும் இராணுவ பிரசன்னமுமே அங்குள்ளது என்கின்றனர் சுற்றுலாப் பயணிகள்.
 
kanniya%2011425123414.jpg
தனிச்சிங்களத்தில் டிக்கெற்
 
 
இது தவிர, வெந்நீரூற்றுக்கு செல்லும் வகையில் புதிய பாதை அமைக்கும் பணியும் நடக்கிறது. இது தொடர்பில், திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேசத்திற்கான உள்ளூராட்சி சபைத் தலைவரான இராமலிங்கம் விஜேந்திரன் இப்படி கூறுகின்றார். -
 
 
 
"பல ஆண்டுகளாக எங்கட உள்ளூராட்சி மன்றத்தின் பராமரிப்பிலேயே கன்னியா வெந்நீர் ஊற்றுப் பிரதேசம் இருந்தது. 2010 ஆம் ஆண்டு தொல்பொருள் ஆய்வு மற்றும் வன பரிபாலனம் என்ற காரணங்களை கூறி சபையின் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் பறிமுதல் செய்யப்பட்டு விட்டது. ஏழு வெந்நீரூற்றுக் கிணறுகளைக் கொண்ட கன்னியா பகுதியில் இப்போது இந்து மத அடையாளங்கள் அருகி பௌத்த வழிபாட்டுக்குரிய அடையாளங்களே முன்னிலைப்படுத்தப்பட்டு வருகின்றன.
kanniya%2011425123413.jpg
 
ஏற்கனவே திருகோணமலை – அனுராதபுரம் நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் பாதை வழியாகவே கன்னியா வெந்நீரூற்றுக்கான பொது போக்குவரத்து நடைபெறுகின்றது. தற்போது அதற்கு பதிலாக அதே நெடுஞ்சாலையில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் சந்தாபுர வீதி என புதிய பாதையொன்று அமைக்கப்பட்டு வருகின்றது- என்கிறார். அந்த பாதையில் சுமார் 1000 ஏக்கர் பரப்புள்ள அரச காணிகள் இருக்கின்றன. இப் புதிய பாதை அமைப்பு வேலைகளை இராணுவமும், தொல்பொருள் ஆய்வுத் திணைக்களமும் மேற்கொள்வதாக அப் பகுதி மக்கள் கூறுகின்றனர். இதேவேளை, இக் கன்னியா வெந்நீரூற்று தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அண்மையில் நாடாளுமன்றத்திலும் தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.
kanniya%2011425123416.jpg
 
சரித்திர ரீதியாகவும், தலைமுறை தலைமுறையாகவும், பல நூற்றாண்டுகளாகவும் தமிழ் - இந்துக்களுக்கு இருந்து வரும் மத, கலாசார ரீதியிலான உரிமைகளை மூர்க்கத்தனமாகவும் கொடூரமாகவும் மறுக்கும் வகையில் திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் மேற்கொள்ளப்படும் பௌத்த - சிங்கள அத்துமீறலையும் அட்டகாசங்களையும் நேரடியாக வந்து பாருங்கள் என்பதே அவரின் கோரிக்கை. இவ்வாறு தமிழர் வாழ்வில் இருந்து கன்னியா வெந்நீரூற்று விடுபடுகின்றது - விடுவிக்கப்படுகிறது. அதனை தடுத்து நிறுத்திக் காப்பதற்கு மக்கள் பிரதிநிதிகளும் பொறுப்பு வாய்ந்த சமூக, சமய அமைப்புக்களும் முன்வரவேண்டும்.
 
'மலரும்' இணையத்துக்காக கே.வாசு -
 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக் குழுக்கள்... இப்படியான திரிகளை பார்ப்பதில்லையா?
பார்த்தால்... கொஞ்சமாவது, ரோசம் வருமே.... என்பதற்காக கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக் குழுக்கள்... இப்படியான திரிகளை பார்ப்பதில்லையா?

பார்த்தால்... கொஞ்சமாவது, ரோசம் வருமே.... என்பதற்காக கேட்டேன்.

 

நீங்க வேற....

நல்ல  பெயர்  வாங்குவதற்காக

(சிங்களவன் மறந்திருந்தாலும்)

போட்டி போட்டு  இது போன்ற ஆலோசனைக்கொடுத்து

சிங்களவனுக்கு வால் பிடிப்பதே இவர்கள் தான்..

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க வேற....

நல்ல  பெயர்  வாங்குவதற்காக

(சிங்களவன் மறந்திருந்தாலும்)

போட்டி போட்டு  இது போன்ற ஆலோசனைக்கொடுத்து

சிங்களவனுக்கு வால் பிடிப்பதே இவர்கள் தான்..

 

தமிழனின்.... கதிர்காமத்தை பறித்தான் சிங்களவன்.

தமிழ் மன்னன் இராவணன், குளித்த இடத்தை பறிக்கிறான் சிங்களவன்.

இதுகளை..... தட்டிக் கேட்க, திராணி இல்லாத ஒட்டுக்குழு, இங்கு வந்து யாருக்கு... வகுப்பு எடுத்து கொண்டிருக்குது.

உண்மையில்..... இதுகள், சோத்துக்கு.... உப்புப் போட்டுத்தான் சாப்பிடுதுகளா? 

ரோச நரம்பு.... அறுந்ததுகள்.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.