Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னை மடியில் கண் திறந்தோம்

மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

அன்னை மடியில் கண் திறந்தோம்

மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

உயிரில் உயிர்கள் ஜனனம்

ஜனனம் இருந்தால் மரணம்

இயற்கை தானடா ஏன் சலனம்

அன்னை மடியில் கண் திறந்தோம்

மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

அன்னை என்பவள் அருகில் வந்துமே

பிள்ளை அறியவே இல்லையே..

பிள்ளை அன்னையை அறிந்தவேளையில்

அன்னை உலகில் இல்லையே..

ஓரக் கண்ணிலே உயிரை சுமந்தவள்..

உன்னைத் தேடியே உலகில் அலைந்தவள்..

சேரும் இடத்திலே சேர்ந்துவிட்டாள்..

அன்னை மடியில் கண் திறந்தோம்

மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

வாழ்வு கொடுத்தவள் வாழ்வு முடிப்பது

வகுத்த நெறியடா மகனே..

வாழை விழுவதும் கன்று அழுவதும்

வாழ்க்கை முறையடா மகனே.

அண்ணன் தந்தவள் அனலில் வேகிறாள்

அன்பு பிள்ளை நீ அழுது சாய்கிறாய்

சுமந்த கடனுக்கா நீ சுமந்தாய்..

  • Replies 6.9k
  • Views 541.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்

ஏன் எனக்கு என்ன ஆச்சு...

ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு வரட்டல்

ஏன் இந்த மேல் மூச்சு...

ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன்

இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்

கால் விரலில் வெட்கம் அளந்தேன் மறந்தேன்... ஹோ..

நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்

உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்

ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்...

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்

ஏன் எனக்கு என்ன ஆச்சு...

ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு வரட்டல்

ஏன் இந்த மேல் மூச்சு....

சம்மதமா சேலை போர்வை போர்த்தி கொண்டு நீ தூங்க...

சம்மதமா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட...

சம்மதமா என்னை உந்தன் கூந்தலுக்குள் குடியேற்ற...

சம்மதமா எனக்குள் வந்து கூச்சம் ஊ..ட்டிட...

கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்...

உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்...

உள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம்...

உன்னை தோளில் சாய்த்து கொண்டு போக சம்மதம்....

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்

ஏன் எனக்கு என்ன ஆச்சு...

ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு வரட்டல்

ஏன் இந்த மேல் மூச்சு....

காதல் என்னும் பூங்கா வனத்தில் பட்டாம் பூச்சி ஆவோமா...

பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கிப் போவோமா...

காதல் என்னும் கூண்டில் அடைந்து ஆயுள் கைதி ஆவோமா...

ஆசை குற்றம் நாளும் செய்து சட்டம் மீறம்மா...

லட்சம் மீன்கள் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன்..

காதல் கொண்ட போதில் தன்னை நேரில் பார்க்கிறேன்...

எந்த பெண்னை காணும் போதும் உன்னை காண்கிறேன்...

உன்மை காதல் செய்து உன்னை கொல்லப் போகிறேன்...

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்

ஏன் எனக்கு என்ன ஆச்சு...

ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு வரட்டல்

ஏன் இந்த மேல் மூச்சு....

ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன்

இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்

கால் விரலில் வெட்கம் அளந்தேன் மறந்தேன்... ஹோ..

நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்

உன்னை கண்டு கிறுக்காய் அழைந்தேன்

ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்..

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்

ஏன் எனக்கு என்ன ஆச்சு...

ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு வரட்டல்

ஏன் இந்த மேல் மூச்சு...

மயக்கமென்ன இந்த மௌளனம் என்ன மணி மாளிகை தான் கண்ணே

தயக்கம் என்ன இந்தச் சலனம் என்ன அன்புக் காணிக்கை தான் கண்ணே

கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா - என்

காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா

தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட

பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட

கார்காலமாய் விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட

கை வளையும் மை விழியும் கட்டியணைத்து கவி பாட

  • கருத்துக்கள உறவுகள்

தேவதை இளம் தேவி

என்னை சுற்றும் ஆவி

காதலான பின்னே.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவி ஸ்ரீதேவி

உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா

பாவி அப்பாவி

உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா

கையில் மணியை தினமும் பிடித்தே ஆட்டும் பக்தனம்மா

சூடம் ஏற்றி மேலும் கீழும் காட்டும் பித்தனம்மா

மாலை மரியாதை மணியோசை எதுக்கு

தேவி அவதாரம் நான்தானா உனக்கு

போலிப் பூசாரியே

பட்ட போடாத பூசாரி நான்

பண்ணக் கூடாதோ பூஜைகள் தான்

அம்மன் உன் மேனி ஆனிப் பொன்மேனி

அன்பன் தொடவேண்டுமே ஹா

எடத்த கொடுத்தா மடத்த புடிப்பே எனக்கா தெரியாது?

ஹே ஹே ஹே ஹே

வரத்த கொடுத்தான் சிவனே தவிச்சான் எனக்கா புரியாது

ஆஆஆஆஆஆ

பாவம் பரிதாபம் பக்தா உன் பக்தி

அண்ட முடியாது ஆங்கார சக்தி

ஆசை ஆகாதய்யா

கண்ணில் நடமாடும் சிவகாமியே ஹே

அன்பின் உருவான அபிராமியே

காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி

எனக்கு நீதானம்மா ஆஹா

செக்கு மாடு சுத்தி வரலாம் ஊர் போய் சேராது

ததரினதரனனா

இந்த மோகம் ஒருதலை ராகம் மயக்கம் தீராது

  • கருத்துக்கள உறவுகள்

உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்

என் மனதின் பாதியும் போக

உன் இமைகளின் கண்ணிமைகளின்

மின்பார்வையில் மீதியும் தேய

ம் இன்று நேற்று என்று இல்லை

என் இந்த நிலை

ம் உன்னைக்கண்ட நாளினின்றே

நான் செய்யும் பிழை

(உன் சிரிப்பினில்)

உனக்குள் இருக்கும் மயக்கம்

அந்த உயரத்துநிலவை அழைக்கும்

இதழின் விளிம்பு துளிர்க்கும்

என் இரவினை பனியினில் நனைக்கும்

எதிரினில் நான் எரிகிற நான்

உதிர்ந்திடும் மழைச்சரம் நீயே

ஒருமுறை அல்ல முதல்முறை அல்ல

தினம்தினம் என்னை சூழும் தீ

(உன் சிரிப்பினில்)

முதல்நாள் பார்த்த வனப்பு

துளி குறையவும் இல்லை உனக்கு

உறக்கம் விழிப்பில் கனவாய்

உனைக்காண்பதே வழக்கம் எனக்கு

அருகினிலே வருகையிலே

துடிப்பதை நிறுத்துது நெஞ்சம்

முதல்முதல் இன்று நிகழ்கிறதென்று

நடிப்பது கொஞ்சம் வஞ்சமே

(உன் சிரிப்பினில்)

(ம் இன்று நேற்று)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை பந்தாடப் பிறந்தவளே

இதயம் ரெண்டாகப் பிளந்தவளே

ஓசை இல்லாமல் மலர்ந்தவளே

உயிரை கண்கொண்டு கடைந்தவளே

உன்னைக்கண்ட பின் இந்த மண்ணை நேசித்தேன்

காலம் யாவும் காதல்கொள்ள வாராயோ

செங்குயிலே சிறு வெயிலே

மண்ணிலுள்ள வளம் இன்னதின்னதென

செயற்கைக்கோள் அறியும் பெண்ணே

உன்னிலுள்ள வளம் என்னதென்னதென

உள்ளங்கை அறியும் கண்ணே

நீ அழகின் மொத்தமென்று சொல்லி

அந்த பிரம்மன் வைத்த முற்றுப்புள்ளி

செங்குயிலே சிறு வெயிலே

வாய்திறந்து கேட்டுவிட்டேன்

வாழ்வை வாழவிடு அன்பே

இனியவனே இணையவனே

உன்னைக் காணவில்லை என்னும்போது

நெஞ்சில் சின்னப் பைத்தியங்கள் பிடிக்கும்

பஞ்சு மெத்தைகளில் தூக்கமில்லை என்று

பற்கள் தலையணையைக் கடிக்கும்

உனைத் தொட்டுப் பார்க்க மனம் துடிக்கும்

நெஞ்சில் விட்டுவிட்டு வெடி வெடிக்கும்

சின்னவனே என்னவனே

மூக்குமீது மூக்கு வைத்து

நெற்றி முட்டிவிட வாடா

என்னைக் கொண்டாடப் பிறந்தவனே

இதயம் ரெண்டாகப் பிளந்தவனே

ஓசை இல்லாமல் மலர்ந்தவனே

உயிரை கண்கொண்டு கடைந்தவனே

உன்னைக்கண்ட பின் இந்த மண்ணை நேசித்தேன்

காலம் யாவும் காதல்கொள்ள வாராயோ அன்பே

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே

எவளோ எவளோ என்று நெடுனாள் இருந்தேன்

இரவும் பகலும் சிந்தித்தேன்

இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்

இளமை இளமை பாதித்தேன்

கொள்ளை கொண்ட அந்த நிலா என்னை

கொன்று கொன்று தின்றதே

இன்பமான அந்த வலி

இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாக் காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே

இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்

தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே

இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்

காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே

ஆஆஆ

வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை

என்றென்றும் வானில்

அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்

இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்

இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்

இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சோலை புஸ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

கண்ணாளனைக் கண்டால் என்ன

என் வேதனை சொன்னால் என்ன

நல்வார்த்தைகள் தந்தாள் என்ன

சோலை புஸ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

கண்ணாளனைக் கண்டால் என்ன

என் வேதனை சொன்னால் என்ன

நல்வார்த்தைகள் தந்தாள் என்ன

கண்ணா ஜோடி குயில் மாலை இடுமா

இல்லை ஓடி விடுமா

கண்ணே நானிருக்க சோகமென்னம்மா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒடிவது போல் இடை இருக்கும்

இருக்கட்டுமே

அது ஒய்யார நடை நடக்கும்

நடக்கட்டுமே

ஒடிவது போல் இடை இருக்கும்

இருக்கட்டுமே

அது ஒய்யார நடை நடக்கும்

நடக்கட்டுமே

சுடுவது போல் கண் சிவக்கும்

சிவக்கட்டுமே

கண் சுட்டுவிட்டால் கவி பிறக்கும்

பிறக்கட்டுமே

கண் சுட்டுவிட்டால் கவி பிறக்கும்

பிறக்கட்டுமே

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் நேரம்

கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் நேரம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேரம் நல்ல நேரம் - கொஞ்சம்

நெருங்கிப் பார்க்கும் நேரம்

காலம் நல்ல காலம் - கைகள்

கலந்து பார்க்கும் காலம்

அழகு பொங்கும் மேனி - நல்ல

ஆடை மாற்றும் நேரம்

மலர்கள் சூடி நின்று - காதல்

வரவு பார்க்கும் நேரம்

மஞ்சள் பூசும் பெண்மை - கண்கள்

மயக்கம் கொள்ளும் நேரம்

அஞ்சும் இந்தப் பெண்ணை - ஆண்மை

அணைத்துப் பார்க்கும் நேரம்

  • கருத்துக்கள உறவுகள்

காலங்களில் அவள் வசந்தம்

கலைகளிலே அவள் ஓவியம்

மாதங்களில் அவள் மார்கழி

மலர்களிலே அவள் மல்லிகை

பறவைகளில் அவள் மணிப்புறா

பாடல்களில் அவள் தாலாட்டு

கனிகளிலே அவள் மாங்கனி

காற்றினிலே அவள் தென்றல்

(காலங்களில் அவள் வசந்தம்...)

பால் போல் சிரிப்பதில் பிள்ளை

அவள் பனி போல் அணைப்பதில் கன்னி

கண் போல் வளர்ப்பதில் அன்னை

அவள் கவிஞனாக்கினாள் என்னை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு

தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு

உள்ளம் கவர் கள்வனா குரும்புகளில் மன்னனா

மன்மதனின் தோழன ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளம் என்பது ஆமை

அதில் உண்மை என்பது ஊமை

சொல்லில் வருவது பாதி

அதில் தேங்கி கிடப்பது நீதி

தெய்வம் என்றால் அது தெய்வம்

அது சிலை என்றால் அது சிலை தான்

  • கருத்துக்கள உறவுகள்

சிலையாலே சிலை செய்து

உனக்காக வைத்தேன்

திருக்கோவிலே ஓடிவா

திருக்கோவிலே ஓடி வா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலையாலே சிலை செய்து

உனக்காக வைத்தேன்

திருக்கோவிலே ஓடிவா

திருக்கோவிலே ஓடி வா

நுணாவிலான் அது "நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் " என்று வர வேண்டும் :icon_idea:

உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலில் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக

எதுக்காக கண்ணே எதுக்காக நீயும் இப்படி அப்படி தள்ளி யிருப்பது எதுக்காக

Edited by இன்னிசை

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணே கலை மானே

கன்னி மயில் என கண்டேன்

உனை நானே

அந்திபகல் உனை நான் காக்கிறேன்

ஆண்டவனும் இதை தான் கேட்கிறான்

ஆரிராரோ ஓ ஆரிராரோ

ஊமையென்றால் ஒரு வகை அமைதி

ஏழையென்றால் அதிலொரு அமைதி

நீயோ கிளிப்பேடு பண்பாடும்

ஆனந்தக் குயில்பேடு

ஏனோ தெய்வம் சதிசெய்தது

பேதைபோல விதிசெய்தது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு

இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ?

நான் கேட்டு தாய்தந்தை படைதானா

இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா

தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி

கொன்றால் பாவம் தின்ரால் போச்சு இதுதான் என் கட்சி

ஆதி வீடு அந்தம் காடு

இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ?

வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்

உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்

கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி

காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி

கொண்டதென்ன கொடுப்பதென்ன

இதில் தாய் என்ன மனந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ?

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்

அது தெரியாமல் போனாலே வேதாந்தம்

மன்னைத் தோண்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி

என்னை தோண்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி

உன்மை என்ன பொய்மை என்ன

இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ?

வீடுவரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்

ஆயிரத்தில் நாட்டம்

கூடிவரும் கூட்டம்

கொள்ளிவரை வருமா?

ஆயிரத்தில் [ப்]ஒருத்தி[/ப்] அம்மா நீ

உலகம் அறிந்திடா பிறவியம்மா நீ

பார்வையிலே குமரியம்மா

பழக்கத்திலே குழந்தையம்மா

ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டாள் அந்த உறவுக்குப் பெயர் என்ன?

காதல்.

அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால் அந்த உறவுக்குப் பெயர் என்ன?

குடும்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பம் ஒரு கதம்பம்

பல வர்ணம் பல வர்ணம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கொடியில் இரு மலர்கள்

பிறந்ததம்மா... பிறந்ததம்மா

அண்ணன் தங்கை உறவு முறை

மலர்ந்ததம்மா... மலர்ந்ததம்மா

ஒரு கொடியில் இரு மலர்கள்

பிறந்ததம்மா... பிறந்ததம்மா

கருமணியின் துயரம்

கண்டு இமைகள் தூங்குமா

அண்ணன் கண்ணீரில் மிதந்திட

என் இதயம் தாங்குமா

கருமணியின் துயரம்

கண்டு இமைகள் தூங்குமா

அண்ணன் கண்ணீரில் மிதந்திட

என் இதயம் தாங்குமா

வரும் புயலை எதிர்த்து

நின்று சிரிக்கின்றேனம்மா

வரும் புயலை எதிர்த்து

நின்று சிரிக்கின்றேனம்மா

தங்கை வாழ்வுக்காக

என் சுகத்தைக் கொடுக்கின்றேனம்மா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.