Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு கிளிகள் சேர்ந்து நடத்தும்

இன்பக் காதல் நாடகம் - ஓ

இன்று தொடங்கும் காவியம்

திரண்ட பருவம் ஆடிப் பாடும்

சிட்டுக்குருவி ஓவியம் ..

சேரும் சுகம் ஆயிரம்..

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்:

ஆடி வெள்ளி தேடி உன்னை

நானடைந்த நேரம்

கோடி இன்பம் நாடி வந்தேன்

காவிரியின் ஓரம்

பெண்:

ஓரக் கண்ணில் ஊறவைத்த

தேன் கவிதைச் சாரம்

ஓசையின்றிப் பேசுவது

ஆசை என்னும் வேதம்

ஆண்:

வேதம் சொல்லி மேளமிட்டு

மேடை கண்டு ஆடும்

மெத்தை கொண்டு தத்தை ஒன்று

வித்தைபல நாடும்

பெண்:

நாடும் உள்ளம் கூடும் எண்ணம்

பேசும் மொழி மெளனம்

ராகம் தன்னை மூடி வைத்த

வீணை அவள் சின்னம்

ஆண்:

சின்னம் மிக்க அன்னக்கிளி

வண்ணச் சிலைக் கோலம்

என்னை அவள் பின்னிக் கொள்ள

என்று வரும் காலம்!

பெண்:

காலம் இது காலம் என்று

காதல் தெய்வம் பாடும்

கங்கை நதி பொங்கும் - கடல்

சங்கமத்தில் கூடும்

சங்கமத்தில் கூடும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னக்கிளி ஒன்னத்தேடுதே

ஆறு மாசம் ஒரு வருசம் ஆவாரம்பு மேனி வாடுதே(2)

னதியோரம் பொறந்தேன் கொடிபோல வளர்ந்தேன்

மழையோடும் வெயிலோடும் மனம்போல் நடந்தேன்

உறங்காத...உறங்காத கண்களுக்கு ஓலைகொண்டு மையெழுதி

கலங்காம காத்திருக்கேன் கைப்பிடிக்க வருவாரோ?

கனவோடு சிலனாள் நனவோடு சிலனாள்

உறவில்லை பிரிவில்லை தனிமை பலனாள்

மழபேஞ்சா...மழபேஞ்சா வெதவெதச்சு நாத்து நட்டு கதிரறுத்து

போரடிக்கும் பொண்ணு மாமன் பொழுதிருக்க வருவாரோ

னதியென்றால் அங்கே கரையுண்டு காவல்

கொடியென்றால் அதைக்காக்க மரமே காவல்

புள்ளிபோட்ட...புள்ளிபோட்ட ரவிக்கைக்காரி புளியம்பூ சேலக்காரி

னெல்லறுத்துப் போகையில் யார் கன்னியெந்தன் காவலென்று

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பூங்காவனம் புதுமனம்

அதில் ரோமாஞ்சனம் தினம்தினம்

உலாவரும் கனாக்கள் கண்ணிலே

ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

(ஒரு பூங்காவனம்)

நான் காலைனேரத் தாமரை

என் கானம் யாவும் தேன்மழை

நான் கால்னடக்கும் தேவதை

என் கோவிலிந்த மாளிகை

என்னாளும் தென்றல் வந்து வீசிடும்

என்னோடு தோழி போலப் பேசிடும்

உலாவரும் கனாக்கள் கண்ணிலே

ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சினிலே நெஞ்சினிலே

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே

நாணங்கள் என் கண்ணிலே

கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ

மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே

தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே ஹோய்

கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ

பஞ்சொளி வர்ணச் சுந்தரி வாவே

தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே

தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே ஹோய்

தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே

சிவந்ததே என் மஞ்சளே

கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே

சிவந்ததே என் மஞ்சளே

கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே

நெஞ்சிலே...ஊஞ்சலே...

ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே

ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே

செவ்விதழ் வருடும்போது தேகத்தங்கம் உருகுமே

உலகின் ஓசை அடங்கும்போது உயிரின் ஓசை தொடங்குமே

வான்னிலா நாணுமே முகிலிழுத்துக் கண் மூடுமே

(நெஞ்சினிலே)

ஹேய்க் குருவாரிக் கிளியே குருவாரிக்கிளியே

குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை

ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே

மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே

குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை

ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே

மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே

(தங்கக்)

குங்குமம் ஏன் சூடினேன் கோலமுத்தத்தில் கலையத்தான்

கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான்

மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில்மேலே நசுங்கத்தான்

தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நாந்தேடத்தான்

(நெஞ்சினிலே)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே

கதை கண்ணீராச்சே

நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே

மழை சூழலாச்சே

கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே

  • கருத்துக்கள உறவுகள்

நிலாவே வா செல்லாதே வா

என்ணாலும் உன் பொன்வானம் நான்

எனை நீதான் பிரின்தாலும் நினைவாலே அணைத்தேனே

நிலாவே வா செல்லாதே வா

என்ணாலும் உன் பொன்வானம் நான்

எனை நீதான் பிரின்தாலும் நினைவாலே அணைத்தேனே

காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை

முள்வேலியா முல்லைப்பூவா சொல்லு கொஞசம் நில்லு

அம்மாடியோ நீதான் இன்னும் சிரு பிள்ளை

தாங்காதம்மா நெஞசம் நீயும் சொன்ன சொல்லை

பொந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை

நிலாவே வா செல்லாதே வா

என்ணாலும் உன் பொன்வானம் நான்

எனை நீதான் பிரின்தாலும் நினைவாலே அணைத்தேனே

புஞ்சோலையில் வாடைக் காற்றும் வாட சந்தம் பாட

கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது

ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே

ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே

அகாயம் தாஙகாத மேகம் ஏது பெண்ணே

நிலாவே வா செல்லாதே வா

என்ணாலும் உன் பொன்வானம் நான்

எனை நீதான் பிரின்தாலும் நினைவாலே அணைத்தேனே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காவேரி மீனடியோ காட்டுக்குள்ளே மானடியோ

கூவாத குயிலடியோ கொல்லிமலைத் தேனடியோ

ஏ புள்ளே ஏ புள்ளே எங்கே போறே - நீ

எந்த ஊரு மாப்பிள்ளையை பாக்கப் போறே

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே நிம்மதி...! எங்கே நிம்மதி...!

எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி

அங்கே எனக்கோர் இடம் வேன்டும்

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எங்கே மனிதர் யாரும் இல்லையோ

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி

அங்கே எனக்கோர் இடம் வேன்டும்

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது

எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது

எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது

எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது

என்ன நினைத்து என்னைப் படைத்தான்

இறைவன் என்பவனே

கண்ணைப் படைத்து பெண்ணை படைத்த

இறைவன் கொடியவனே

ஹோ, இறைவன் கொடியவனே

எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி

அங்கே எனக்கோர் இடம் வேன்டும்

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே

புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே

பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே

புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே

என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால்

வணங்குவேன் தாயே

இன்று மட்டும் அமைதி தந்தால்

உறங்குவேன் தாயே

ஓ, உறங்குவேன் தாயே

எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி

அங்கே எனக்கோர் இடம் வேன்டும்

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன சமையலோ என்ன சமையலோ

எடுத்துக் கேட்க யாருமில்லை என்ன சமையலோ

அண்ணி சமையல் தின்று தின்று மரத்துப்போனதே

என்னடி?...நாக்கு...மரத்துப்போனதே

அடுத்த அண்ணி சமையல் ருசிக்க ஆசை வந்ததே

அடியே...மோகனா...அடுப்படி எனக்கென்ன சொந்தமா

நீயும் வந்து சமைத்துப்பாரு

பேச்சை வள்ர்த்தால் உனக்கெங்கு கிடைத்திடும் சாப்பாடு

சமைத்துப்பாரடி...

சமைத்துக்காட்டுவோம்...

இஷ்டம் போல நாங்கள் இங்கே சமைத்து வெளுத்துக் கட்டுவோம்

ஆசையில் பிறப்பது துணிவு

அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு

தெளிவினில் பிறப்பது அறிவு

அந்த அறிவினில் அமைவது வாழ்வு.. :D

ஆசையில் பிறப்பது துணிவு

அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு

தெளிவினில் பிறப்பது அறிவு

அந்த அறிவினில் அமைவது வாழ்வு..!! :)

ஆசையில் பிறப்பது துணிவு.. :D

விதைத்தவன் மனதில் விளைவதில் ஆசை

காதலன் நினைவில் கன்னியின் ஆசை

விதைத்தவன் மனதில் விளைவதில் ஆசை

காதலன் நினைவில் கன்னியின் ஆசை

பாவலன் மனதில் பாடிடும் ஆசை

பாவலன் மனதில் பாடிடும் ஆசை

படைத்தவன் மனதில் நொடிக்கொரு ஆசை

படைத்தவன் மனதில் நொடிக்கொரு ஆசை..!! :(

ஆசையில் பிறப்பது துணிவு

அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு

தெளிவினில் பிறப்பது அறிவு

அந்த அறிவினில் அமைவது வாழ்வு..!! :)

இளமையில் புதுமைகள் படிப்பதில் ஆசை

முதுமையில் படித்ததை நினைப்பதில் ஆசை

இளமையில் புதுமைகள் படிப்பதில் ஆசை

முதுமையில் படித்ததை நினைப்பதில் ஆசை

வருவதும் போவதும் காலத்தின் ஆசை

வருவதும் போவதும் காலத்தின் ஆசை

திருமண வயதில் தினமொரு ஆசை

திருமண வயதில் தினமொரு ஆசை..!! :)

ஆசையில் பிறப்பது துணிவு

அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு

தெளிவினில் பிறப்பது அறிவு

அந்த அறிவினில் அமைவது வாழ்வு..!!

ஆசையில் பிறப்பது துணிவு.. :(

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது..

பூ பூத்தது...

மலரும் நினைவுகள் நான் சொல்வது

குழலூதும் கண்ணனின் வண்ண மேனி

கதை சொல்வான் கண்களில் அந்த ஞானி

வலை வீசும் கனவிலே வந்து போவான்

கலைமானின் நெஞ்சிலே சொந்தமாவான்

தாயாக மாறும் அவன் தாலாட்டு பாட்டு

சேயாகும் எந்தன் மனம் தேனூறக் கேட்டு

குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே.

இதயம் சிறகடிக்கும் என் வீட்டிலே..

  • கருத்துக்கள உறவுகள்

சங்கீத ஜாதி முல்லை.. காணவில்லை

கண்கள் வந்தும் பாவை இன்றி பார்வை இல்லை

ராகங்கள் இன்றி, சங்கீதம் இல்லை

சாவொன்று தானா நம் காதல் எல்லை

என் நாதமே... வா...ஆ......

(சங்கீத)

திருமுகம் வந்து பழகுமோ..அறிமுகம் செய்து விலகுமோ..

விழிகளில் துளிகள் வடியுமோ..அது சுடுவதை தாங்க முடியுமோ..

கனவினில் எந்தன் உயிரும் உறவாகி

விடிகையில் இன்று அழுது பிரிவாகி

தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ...

திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது

அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது

பொன்னி நதி.. கன்னி நதி.. ஜீவ நதி...

விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி

சிறைகளும் பொடிபட வெளி வரும் ஒரு கிளி

இசை என்னும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்

ஞாபக வேதனை மீறுமோ

ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள்

ஆடிடுமோ... ஆடிடுமோ.. ஆடிடுமோ.. ஆடிடுமோ.....

ராஜ தீபமே....எந்தன் வாசலில் வாராயோ

குயிலே... குயிலே...

உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்....

ராஜ தீபமே..........

நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே... நீதானே...

மனகண்ணில் நின்று பல கவிதை தந்த மகள் நீதானே... நீதானே.. நீதானே...

விழி இல்லை என்னும் போது வழி கொடுத்தாய்

விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்

நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்.. சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்

தத்தி செல்லும் முத்து சிற்பம்...கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்

இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்.....கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்

முல்லை பூவில் முள்ளும் உண்டோ...கண்டு கொண்டும் இந்த வேடம் என்ன

ராஜ தீபமே...............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்

தேகம் என்னவாகும் இன்பமாக நோகும்

மழைத்துளி தெரித்தது எனக்குள்ளே குளித்தது

நினைத்தது பலித்தது குடைக்கம்பி துளிர்த்தது

வானம் முத்துக்கள் சிந்தி

வாழுவு வென்றது காதல் வென்றது

மேகம் வந்தது பூக்கள் சிந்துது

ஆளுமில்லை சேர்த்தெடுக்க நூலுமில்லை கோர்த்தெடுக்க

  • கருத்துக்கள உறவுகள்

வானம் கீழே வந்தாலென்ன

அட பூமி மேலே போனாலென்ன

மாயம் எல்லாம் மாயம்

இது மனிதன் நிலையல்ல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் மாயை தானா

பேதை எண்ணம் எல்லாம் வீணா

ஏழை எந்தன் வாழ்வில்

இனி இன்பம் காண்பேனா

  • கருத்துக்கள உறவுகள்

இன்பம் என்பது என்ன என்றொருவன்

இறைவனைக் கேட்டானாம் - அந்த

இறைவன் தனக்கும் தெரியாதென் என்

தலைவனைக் கேட்டானாம்

தலைவன் தலைவியைக் கேட்டானாம்

(இன்பம்)

கோவில் கோபுரச் சிலைகளிலும்

கொஞ்சும் நாட்டியக் கலையினிலும்

பாட்டிலும் இன்பம் இல்லை என்று - இந்தப்

பாவையின் முகத்தைப் பார்த்தானாம்

கட்டிலில் ஆடும் மயக்கத்திலே

களைபோடுறங்கும் உறக்கத்திலே

பெற்றதுதானா இன்பம் என்று - அவன்

பெண்ணிடம் கண்ணால் கேட்டானாம்

(இன்பம்)

காதல் சுவை ஒரு வடிவாக

கண்மணிச் செல்வம் உருவாக

ஆசைத் தலைவன் கனிவாக- அன்றே

அறிந்தான் இன்பத்தைத் தெளிவாக

தத்தும் மழலை மொழிகளிலே

தளிர்மணிச் செவ்வாய் இதழ்களிலே

இன்பம் பிறந்ததை அவன் அறிந்தான் - அந்த

இறைவனும் அன்றே அதை அறிந்தான்

(இன்பம்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த அரபிக்கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே

அந்தக் கன்னித் தென்றல் ஆடைகளாக்கக் கண்கள் கண்டேனே

ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

ஏ பள்ளித்தாமரையே உன் பாதம் கண்டேனே

உன் பட்டுத் தாவணி சரியச் சரிய மீதம் கண்டேனே

ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

ஏ ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

சேலை ஓரம் வந்து ஆளை மோதியது ஆஹா என்ன சுகமோ

பிஞ்சுப் பொன்விரல்கள் நெஞ்சைத் தீண்டியது ஆஹா என்ன இதமோ

சித்தம் கிளுகிளுக்க ரத்தம் துடிதுடிக்க முத்தம் நூறு விதமோ

அச்சம் நாணம் அட ஆளைக் கலைந்தவுடன் ஐயோ தெய்வப் பதமோ

ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

(அந்த அரபிக்கடலோரம்)

சொல்லிக்கொடுத்தபின்னும் அள்ளிக்கொடுத்தபின்னும் முத்தம் மீதமிருக்கு

தீபம் மறைந்தபின்னும் பூமி இருண்டபின்னும் கண்ணில் வெளிச்சமிருக்கு

வானம் பொழிந்தபின்னும் பூமி நனைந்தபின்னும் சாரல் சரசமிருக்கு

காமம் கலைந்தபின்னும் கண்கள் கடந்தபின்னும் காதல் மலர்ந்துகிடக்கு

ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை

காத்திருந்தால் பெண் கனிவதில்லை

ஒரு முகம் மறைய

மறு முகம் தெரிய

கண்ணாடி இதயமில்லை

காதல் கை மூடி மறைவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

இதில் வாழும் தேவி நீ

இசையை மலராய் நானும் சூட்டுவேன் (2)

(இதயம் ஒரு)

ஆத்ம ராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே

உயிரின் ஜீவ நாடிதான் ராகம் தாளம் ஆனதே

உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே

பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதல்ல

ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதல்ல

எனது ஜீவன் ஒன்றுதான் என்றும் புதிது

(இதயம் ஒரு)

காமம் தேடும் உலகிலே ஜீவன் என்னும் கீதத்தால்

ராம நாமன் மீதிலே நாதத் தியாகராஜரும்

ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா

அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்

என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே

நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது

(இதயம் ஒரு)

நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்

சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்

பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா

எனது பாதை வேறு உனது பாதை வேறம்மா

மீராவின் கண்ணன் மீராவிடமே

எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாயே

வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே

(இதயம் ஒரு)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோவிலிலே வீடுகட்டி கோபுரத்தில் கூடு கட்டி

குடியிருக்கும் பறவைகளே கொஞ்சம் நில்லுங்கள்

(கோவிலிலே)

பறவை என்றாலும் உங்கள் பாசம் போகுமா

பழகிய பின்னே எங்கள் நேசம் போகுமா

சுற்றம் கண்டால் அழைக்கிறோம்

சொந்தம் வந்தால் அணைக்கிறோம்

ஒன்றாய் வாழ்ந்து வருகிறோம்..

உங்களைப் போல

  • கருத்துக்கள உறவுகள்

பறவையே எங்கு இருக்கிறாய்

பறக்கவே என்னை அழைக்கிறாய்

தடயங்கள் தேடி வருகின்றேன்

அன்பே

அடி என் பூவே ...........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா

வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா

அழைப்பு மணி இந்த வீட்டில் கேட்டாலும்

ஒடி நான் வந்து பார்ப்பேன்

தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை

கண்ணில் வென்னீரை வார்த்தேன்

கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது

தீப தீபங்கள் ஓயும் நேரம்

நீயும் மெய்யாக வந்தாய்

இந்த கண்ணில் சோகமில்லை இன்று ஆனந்தம் தந்தாய்

பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்

பாசம் வெளுக்காது மானே

நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்

தங்கம் கருக்காது தாயே

பொன்முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன்

இந்தப் பொன் மானை பார்த்துக் கொண்டே

சென்று நான் சேர வேண்டும்

மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்

நீ என் மகளாக வேண்டும்

பாச ராகங்கள் பாட வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

மணியோசை கேட்டு எழுந்து

நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

திருத்தேரில் நானும் அமர்ந்து. .

..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோடி அண்டம் குலவிடும் வானம் குமரன் வலம் வரும் வாகனம்

நாடி மின்னும் நட்சத்திரங்கள் நாயகன் கோவிலின் தீபமாம்

தேடும் அடியவர்தெளிந்த மனமே தேவதேவனின் அரண்மனை

ஆடும் உலகின் அற்புதம் யாவும் அய்யன் திருவிளையாடலே

பாடும் இசையும் பொருளும் இனிமையும் பரம்பொருள் முருகன் பாடலே

நாடுகள் தாண்டி நானிலம் எங்கிலும் நாதன் கோவில் தீபமே

வேகமாகவே ஓடும் உலகினில் உண்மையான பொருள் ஆண்டவன்

மோகனம் மிகு முழுமையானது முற்றறிந்தோர்கள் உணர்வது

ஆகமம் மாமறை ஆயிரம் சாத்திரம் அனைத்தும் ஆண்டவன் ஒருமொழி

யோகமே தரும் ஓம் சரவணா என உயிரெல்லாம் சுகம் ஊறுமே

ஆறாயிரம் மயிலில் அழைத்துவந்தான் அய்யன்

அறுபடை வீட்டின் ஆண்டவன் என் மெய்யன்

வீராதி வீரர்கள் வெற்றிச்சரித்திரத்தின்

žரான லண்டன் நகர்க்கு செந்திலாண்டவன் வந்தான்

ஞான விஞ்ஞானம் நல்ல தொழில் வல்ல

நண்பர்கள் வாழ்கின்ற லண்டன் நகர் தன்னில்

ஆனந்தக் கோயிலில் ஆண்டவன் சன்னதியில்

அகிலமெலாம் தொழ ஆனந்தமே வாழ்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.