Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புல்மோட்டையில் விகாரைக்கு காணி சுவீகரிப்பதற்கு எதிராக மக்கள் போர்க்கொடி! - மோதலில் ஒருவர் படுகாயம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
புல்மோட்டையில் விகாரைக்கு காணி சுவீகரிப்பதற்கு எதிராக மக்கள் போர்க்கொடி! - மோதலில் ஒருவர் படுகாயம்.  Top News 
[Tuesday 2014-08-26 18:00]
pulmoddai-tension-150-news.jpg
புல்மோட்டை, அரிசிமலை பகுதியில் விகாரை விஸ்தரிப்புக்காக இன்று மேற்கொள்ளப்படவிருந்த 500 ஏக்கர் காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நில அளவீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அங்கு வந்த பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நில அளவை நடவடிக்கைக்கு எதிராக அரிசிமலை பகுதியில் கடை அடைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், ஹர்த்தாலும் அனுஷ்டிக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது.
 
தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களிற்கு சொந்தமான காணிகளை ஆக்கிரமித்தே விகாரை மற்றும் பன்சலை அமைக்கப்பட்டுள்ளது.அதனை விஸ்தரிக்க ஏதுவாக இன்று அளவைகள் மேற்கொள்ள திட்டமிடப்படிருந்தது. நில அளவை பணிகளை மேற்கொள்ள நில அளவை பணியாளர்கள் வருகை தந்திருந்தனர். இவர்களுக்கு எதிராக குறித்த இடத்தில் 1000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
சம்பவ இடத்துக்கு திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபிக், கிழக்கு மாகாணசபை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எம். அன்வர், குச்சவெளி பிரதேச சபை தலைவர் எ.பீ.முபாறக், உபதலைவர் எ.ஹதம் பாபா தௌபிக், திருகோணமலை மேலதிக அரசாங்க அதிபர் எஸ். அருள்ராசா, கிண்ணியா நகரசபை தலைவர் டாக்டர்.ஆர்.எம்.கில்மி, குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் எம். ஹாசிக், குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.புஸ்பகாந்தன், குச்சவெளி பிரதேச சபை செயலாளர் கிருஷ்நேந்திரன் ஆகியோர் வருகை தந்தனர்.
 
இதேவேளை, குறித்த இடத்துக்கு வருகை தந்த திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.யே.மார்க் அரசியல்வாதிகளுடனும் பொதுமக்களுடனும் கலந்துரையாடினார்.அப்போது, நில அளவை நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுமெனவும் எனினும், மற்றுமொரு தினத்தில் குறித்த நில அளவை நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும், அதன்போது அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
 
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு புல்மோட்டை பொலிஸார் மாத்திரமின்றி குச்சவெளி, நிலாவெளி, திருகோணமலை, ஸ்ரீபுபுரம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்தும் பொலிஸார் வரவழைக்கப்பட்டிருந்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு கலகம் அடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.http://www.seithy.com/breifNews.php?newsID=115654&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.