Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா அமைப்புகளுடன் தடையற்ற விதத்தில் அனைத்து நபர்களும் தொடர்புகொள்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துக:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஐ.நா அமைப்புகளுடன் தடையற்ற விதத்தில் அனைத்து நபர்களும் தொடர்புகொள்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துக:
27 ஆகஸ்ட் 2014
 

ஆறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-

Request_CI.jpg

இலங்கையில் மனித உரிமை பணியாளார்களும், தனிநபர்களும் எதிர்கொள்ளும் மிரட்டல்கள், துன்புறுத்தல்கள், போன்றவற்றை கண்டிக்குமாறும், ஐ.நா அமைப்புகளுடன் தடையற்ற விதத்தில் அனைத்து நபர்களும் தொடர்புகொள்வதற்குள்ள உரிமையை உறுதிப்படுத்துவதில் இலங்கைக்குள்ள உரிமையை நினைவுபடுத்துமாறும் ஆறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர், பிரதி தலைவர்கள் மற்றும் உறுப்பு நாடுகளுக்கு  சர்வதேச  மன்னிப்புச்சபை,  மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசிய போரம், சர்வதேச யூரிகள் ஆணைக்குழு, ஐ.எம்.ஏ.டி.ஆர், ஐ.எஸ்எச்ஆர், சிவிகஸ் ஆகிய அமைப்புகள் எழுதியுள்ள கடிதத்திலேயே இது குறித்து தெரிவி;க்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பொறிமுறையோடு இணைந்து செயற்படும் மனித உரிமை பாதுகாவலர்களும், தனிநபர்களும் எதிர்கொள்ளும் தாக்குதல்கள் குறித்து நாங்கள் ஆழந்த கரிசனை கொண்டுள்ளோம்.

சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் அரச படைகளாலும் விடுதலைப்புலிகளாலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவினால் ஆணை வழங்கப்பட்ட விசாரணணைக்கு தகவல்கள் வழங்குவோர் மற்றும் அதனுடன் தொடர்பு கொள்வோர் என கருதப்படுவோர் மீது விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் தாக்குதல்கள் குறித்து அறிந்து நாங்கள் அச்சமடைந்துள்ளோம்.

ஜ.நா. மனித உரிமை  ஆணைக்குழுவின் 27வது அமர்விற்கு முன்னதாக இவ்வாறான சம்பவங்கள் தீவிமைடையலாம் என நாங்கள் அஞ்சுகிறோம். இந்த அமர்விலேயே ஆணையாளர் விசாரணகைள் குறித்த வாய்மூல அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.

சர்வதேச மனித உரிமை சட்டத்தின் கீழ் உங்களுவுக்குள்ள கடப்பாடுகளின் கீழ் மனித உரிமை ஆர்வலர்களையும் தனிநபர்களையும் ஐ.நாவுடன் தொடர்பு கொண்டதற்காக பழிவாங்கப்படுவதிலிருந்து  பாதுகாப்பதற்கான அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நாங்கள் வேண்டுகொள் விடுக்கிறோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது
 

ஐ.நா விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மனித உரிமை அமைப்புக்கள் ஐ.நாவிடம் கோரிக்கை

இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை நடத்தி வரும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வங்குவோரின் பாதுகாப்பை உறதி செய்யுமாறு மனித உரிமை அமைப்புக்கள் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆறு மனித உரிமை அமைப்புக்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளன.

ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவிற்கும் இந்தக் கோரிக்கையின் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை மற்றும் அபிவிருத்திக்கான ஆசிய அமைப்பு, சர்வதேச மன்னிப்புச் சபை,  பிரஜைகள் பங்களிப்பு தொடர்பான சிவில் உலக கூட்டணி, சர்வதேச ஜூரிகள் சங்கம், சகலவிதமான ஒடுக்குமுறைகளுக்குமான சர்வதேச அமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான சர்வதேச சேவை நிறுவனம் ஆகியன கூட்டாக இணைந்த இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் தரப்பினர் பல்வேறு ஒடுக்குமுறைகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளன.

ஐக்கிய நாடுகள் சட்ட திட்டங்கள் மற்றும் பிரகடனங்களுக்கு அமைவாக மனித உரிமைப் பாதுகாவலர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் மனித உரிமை பாதுகாவலர்கள் கடும் அடக்குமுறைகளுக்கு உள்ளாகி வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

சாட்சியங்கள் அளிப்போர் கடுமையாக தண்டிக்கப்படுவர் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மருதானiயில் நடைபெற்ற கூட்டமொன்றின் மீது குண்டர் கூட்டம் தாக்குதல் நடத்தியிருந்தமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சிங்கள ஊடகங்களில் தேசத் துரோகிகளாக சித்தரிக்கப்பட்டு வருவதாக குறித்த அமைப்புக்கள் சுட்டிக்காட்யுள்ளன.

மனித உரிமை செயற்பாட்டாளர்களான ருகி பெர்னாண்டோ, நிமால்கா பெர்னாண்டோ, ஜே.சீ. வெலியமுன, பிரிட்டே பெர்னாண்டோ மற்றும் அருட்தந்தை சத்தியவேல் உள்ளிட்ட பலரது பெயர் குறிப்பிட்டு துரோகச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை ஆர்வலர்கள் திட்டமிட்ட வகையில் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளன.

அடக்குமுறைகள் அச்சுறுத்தல்களிலிருந்து அனைவரையும் பாதுகாக்க வேண்டிய முதன்மைக் கடப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு காணப்படுகின்றது என குறித்த ஆறு மனித உரிமை அமைப்புக்களும் கடிதத்தில் தெரிவித்துள்ளன.
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110964/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.