Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தின் சேலம் மேட்டூர் வனத்தில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் புலிகளுடையதா? வீரப்பனுடையதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழகத்தின் சேலம் மேட்டூர் வனத்தில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் புலிகளுடையதா? வீரப்பனுடையதா?
28 ஆகஸ்ட் 2014
 

 

Tamilnadu%20arms_CI.jpg

இந்தியாவின் தமிழகத்தின் சேலம் மேட்டூர் அருகே வனப்பகுதியில் மீட்கப்பட்டுள்ள  கையெறி குண்டுகள் உட்பட்ட ஆயுத குவியல் வீரப்பனுக்குச் சொந்தமானதா.. அல்லது விடுதலைப் புலிகள் மறைத்து வைத்ததா என்ற கோணத்தில் தமிழக பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகில் பச்சமலை காப்புகாடு உள்ளது. அடர்ந்த காடுகளை கொண்ட இந்த பகுதியில் மரக்கன்றுகள் நடுவதற்காக நேற்று முன்தினம் வனத்துறையினர் குழிகள் தோண்டியபோது ஏராளமான ஆயுதங்கள், குண்டுகள் செய்வதற்கான வெடிப் பொருட்கள் சிக்கின.

மாவட்ட கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையிலான போலீசார் சென்று, அவற்றை அப்புறப்படுத்தி ரகசிய இடத்துக்குக் கொண்டு சென்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு விடுதலைப்புலிகள் முகாமிட்டு போர் பயிற்சிகள் பெற்றனர்.

அப்போது விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதா இந்த ஆயுதங்கள்? அல்லது வேறு தீவிரவாத அமைப்புகள் பதுக்கியதா – அல்லது வீரப்பன் பதுக்கியதா? என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீசார் நேற்று (27.08.14) காலை அப்பகுதியில் உள்ள முட்புதரில் 3 கையெறி குண்டுகளை கண்டெடுத்தனர். ஆயுத புதையல் கிடைத்த பகுதியில் உள்ள ஒரு சுவரில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த தடயங்கள் இருந்தது.

சந்தன கடத்தல் வீரப்பன் குழுவும்; நவீன துப்பாக்கி, கண்ணி வெடிகளை பயன்படுத்தி வந்தது. எனவே, வீரப்பன் குழுவைச் சேர்ந்தவர்கள் பதுக்கி வைத்திருந்ததாகவும் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது சிறிய இரும்பு கொள்கலனில் சில ஆண்டுகளுக்குள் புதைக்கப்பட்டது போல் காணப்படுவதால் இது புலிகளுக்கு சொந்தமானதாக இருக்காது என்று பொலிஸார் கருதுவதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110997/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.