Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிராக சாட்சியமளிக்க கோருகிறது கனடிய தமிழர் பேரவை

Featured Replies

canadajdikcfkijd.jpg

 

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் நடத்தும் விசாரணையில் சாட்சியமளிக்குமாறு அல்லது மனு மூலம் விடயங்களைத் தெரிவிக்குமாறு கனடிய தமிழர் பேரவை கோரியிருக்கின்றது. இவ்விடயம் தொடர்பாக கனடிய தமிழர் பேரவையின் பன்னாட்டு அணி விடுத்துள்ள செய்திக் குறிப்பின் முழுவிவரம் வருமாறு:-
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர் ஆணையர் அலுவலகம் (OHCHR) கடந்த ஓகஸ்ட் 05, 2014 அன்று ஓர் அறிவித்தல் விடுத்திருந்தது. அந்த அறிவித்தலில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை (UNHCR) தனது 25 ஆவது அமர்வில் தமக்குக் கொடுத்த ஆணை தொடர்பாக பெப்ரவரி 2002 - நவம்பர் 2001 இடையிலான காலப்பகுதியில் சிறீலங்காவில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் கடுமையான மற்றும் முறைகேடான மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது.
 
இந்த ஆணையின் அடிப்படையில் சிறீலங்கா பற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் அலுவலகம் ((OHCHR) ஒரு முழுமையான விசாரணையைத் தொடக்கியுள்ளது. கனடிய தமிழர் பேரவை சிறீலங்கா பற்றிய இந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ((UNHCR) விசாரணைக் குழுவுக்கு தமிழ்ச் சமூக உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அல்லது அனைவரும் மனுக்களை சமர்ப்பிக்குமாறு விரும்பிக் கேட்டுக்கொள்கிறது.
 
கனடிய தமிழர் பேரவை மே 2009 இல் இருந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தமிழ் மக்கள் சார்பான வாதங்களை முன் வைக்கும் முயற்சியில் முன்னிடத்தில் இருந்து வருகிறது. சிறீலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் கனடிய தமிழர் பேரவையின் பன்னாட்டு அணி வேறு நாடுகளில் இயங்கும் பல்வேறு அமைப்புகளோடு கைகோர்த்து செயலாற்றி வந்துள்ளது. ஒத்த கருத்துடைய பல தமிழ் அமைப்புக்களின் முயற்சி காரணமாக சிறீலங்காவில் மீளிணக்கம் மற்றும் உண்மை அறிதல் பொருட்டு ஐக்கிய நாடுகள் அவையில் ஒரு தீர்மானம் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.
 
இந்த முக்கிய விடயம் தொடர்பாக நீங்கள் நல்கிய ஆதரவுக்கு நன்றி சொல்கிறோம். தயவுசெய்து இந்த விசாரணை பற்றிய செய்தியை உங்கள் நண்பர்கள், குடும்பத்தவர்கள் மற்றும் உங்களுக்குத் தெரிந்தவர்கள் எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள். மனுக்கள் சமர்ப்பிக்கும் இறுதி நாள் ஒக்ரோபர் 14, 2014 ஆகும். பலர் முன்வந்து விசாரணைக் குழுவின் முன் சாட்சியம் அளித்தால் சிறீலங்கா அரசுக்கு எதிரான வழக்கு வலுவடையும். சிறீலங்காவில் அமைதி, மீளிணக்கம் மற்றும் நீதியை நோக்கிய பயணத்தில் கனடிய தமிழர் பேரவை எடுக்கும் இந்த முக்கிய முன்னெடுப்புக்கு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - என்றுள்ளது
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.