Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை நிதி நிலைமையில் சீனாவில் தங்கியிருக்கும் நிலை வேகமாக அதிகரிக்கிறது- Aljazeera

Featured Replies

Mattala_CI.png

2009 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை சீனாவிடமிருந்து 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றமை, இலங்கை சீனாவில் பெருமளவு தங்கியிருப்பதை எடுத்துக்காட்டுவதாக விமர்சகர்கள் எச்சரிக்கிறார்கள்.

 

இலங்கையின் புதிய விமானநிலையமாகிய மத்தளை ராஜபக்ஸ சர்வதேச விமானநிலையம் அமைப்பதற்கு சீனா பண உதவியளித்தது. 2009 இல் யுத்தம் நிறைவடைந்ததிலிருந்து 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை கடன்கள், கொடைகள் மற்றும் உதவிகளாக சீனாவிடமிருந்து பெற்று நிதி நிலையில் இலங்கை சீனாவில் தங்கியிருப்பது  அதிகரித்து வருகிறது. 

அரசாங்கம் கடனைப் பேணுவதன் மூலம் அதிகம் தேவைப்படுவதாக சொல்லி  உட்கட்டமைப்புத் திட்டங்களை செயற்படுத்தி முடிக்க, எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் நாடு நிதிநிலையில் சீனாவில் தங்கியிருக்கும் பாதையை நோக்கி பயனித்துக்கொண்டிருப்பதாக எச்சரிக்கின்றனர்.

தெற்கு கடற்கரை நகரமான அம்பாந்தோட்டையிலுள்ள ஒரு ஆழ்கடல் துறைமுகம் மற்றும் மத்தளை சர்வதேச விமானநிலையம் போன்ற     சுமார் 70 சதவீத இலங்கையின் உட்கட்டமைப்பு திட்டங்களிற்கு சீன வங்கிகள் நிதியுதவியளித்துள்ளன.  

"உலக வங்கி அல்லது சர்வதேச நாணய நிதியம் போல நிபந்தனைகள் விதிக்காது, சீன வங்கிகள் கடன் வழங்குகிறது” என எதிர்க்கட்சி அரசியல்வாதியான கர்ச டி சில்வா அல்ஜசீராவிற்கு கூறியதோடு நிபந்தனையற்ற உடனடிப்பணத்தை பெறுவதின் விருப்பத்திலேயே அரசாங்கம் நடத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.   

   

"சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலகவங்கியின் நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டியிருந்தால், பெரும்பாலான கடன்களிற்கு ஒப்புதல் கிடைக்காது”  என மேலும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு மிகப்பெரியளவில் கொடை வழங்கும் நாடாக ஜப்பான் இருக்கும் அதே வேளை இலங்கைக்கான சீனாவின் நிதிப்பங்களிப்புக்கள் சமீபத்திய ஆண்டுகளில் வேகமாக அதிகரித்துள்ளது.

சீனாவும் இலங்கையும் 1971 ஆம் ஆண்டிலிருந்தே நல்லுறவினைப் பேணி வருவதோடு அன்றிலிருந்து இன்று வரை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா நிதியுதவியாக இலங்கைக்கு வழங்கியுள்ளது. ஆனால் 5 வருடங்களிற்கு முன்னர் (2009 இல்) இலங்கையரசிற்கும்  விடுதலைப்புலிகளிற்குமிடையிலான மோதல்கள் முடிவுக்கு வந்த பிற்பாடே பெருமளவான நிதி உதவிகளை சீனா வழங்கி வருகிறது.

அரசாங்கம் சீனாவிற்கு முன்னுரிமையளிக்கின்றமையை மறுத்த    இலங்கையின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, பல நாடுகளுடன் இலங்கை இருதரப்பு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றமையை சுட்டிக்காட்டினார்.        

“இலங்கைக்கு மிகப்பெரியளவில் கடன் வழங்கும் நாடாக ஜப்பான் உள்ளது. நாங்கள் வெளிநாட்டு நேரடி முதலீட்டினை ஊக்குவிப்பது தொடர்பாக டோக்கியோ மிட்சுபிசி வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டோம். எமது அபிவிருத்தித் திட்டங்களிற்கு நிதியுதவியளிக்கப்போகும் மற்றுமொரு நாடாக  குவைத் உள்ளது. உடனடி கட்டுமான திட்டங்களில் இலங்கைக்கு உதவுவதில் சீனா முனைப்புடன் ஒப்பந்தங்களை எமது நாட்டுடன் செய்கின்றது.”, என யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.  

சீனா மிக உயர்ந்த வட்டி வீதங்களிலேயே  கடனுதவிகள் வழங்குவதாக எதிர்க்கட்சி அரசியல்வாதியான டி சில்வா சுட்டிக்காட்டினார்.  

“2014 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் ஜப்பான், குவைத் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் மூன்று முக்கிய முதலீட்டு திட்டங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஜப்பான் மற்றும் குவைத்தின் வட்டி விகிதங்கள் முறைய 0.1 மற்றும் 0.2 சதவீதமாக இருக்கையில் , சீனாவின் வட்டி விகிதம்  3.0 சதவீதத்தை கடந்துள்ளது" என்று அவர் மேலும் தெரிவித்தார். 

பொருளாதாரத்தில் சீனாவின் பங்கு

"நாங்கள் சீனாவில் இருந்து பெறப்பட்ட கடன்களைத் திருப்பி செலுத்துவதற்காக  கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். அரசாங்கம் நம்ப வைப்பது போல சீனாவினால் நிதி உதவி செய்யப்பட்ட திட்டங்கள் பயனளிக்கவில்லை." என அரசாங்கத்தின் மோசமான பொருளாதார திட்டமிடலினை  மேற்கோள்காட்டி அவர் மேலும் தெரிவித்தார்.

சீனாவிடம் இருந்து பெறப்பட்ட கடன்கள் வரத்தக விகிதத்தில் பெறப்பட்டதாக , அதாவது அதிக வட்டி விகிதத்தில் பெறப்பட்டதாகவும், கடன்கள் தொடர்பான  விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் நாட்டிற்கு நாடு வேறுபடுவதாகவும் இலங்கையின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளரான எம்.எம்.சி.பெர்ணான்டோ அல்ஜசீராவிற்கு  தெரிவித்தார்.

209 மில்லியன் அமெரிக்க டொலர்களும் அதற்கான வட்டியுமாக செலவு செய்து புதிதாக கட்டப்பட்ட மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் 16,000 ரூபாய்கள் ($ 120) மட்டுமே வருவாயாக கடந்த வைகாசி மாதம் பெறப்பட்டது என சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன ஏற்றுக்கொண்டார்.

கட்டுமான வேலைகள் சீன நிறுவனங்களிற்கே சென்றதாகவும் எமது நாட்டை சேர்ந்தவர்களிற்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும், வேலை தொடங்கும் முன்பே சர்வதேச விமான சேவைகளுடன் ஒப்பந்தம் செய்யத்தவறியமையால்   இந்த விமானநிலையம் மிக அருமையாகவே தொழிற்படுவதாகவும் கூறி மத்தள விமானநிலையத் திட்டத்தைவி டி சில்வா விமர்சித்தார்.   

  

இதற்கு, " இந்த விமானநிலையம் அதன் முழு சம்பாதிக்கும் திறனை அடைய நேரம் எடுக்கும்." என்று கூறி சிவில் விமான போக்குவரத்து அமைச்சரான ஜயரத்ன மறுதளித்து பேசினார். 

இலங்கைக்கு சீனா கடன்களை வழங்குவது தொடர்ந்து அதிகரிக்கையில்  நிதி உதவி மற்றும் கொடைகள் வழங்கப்படுவது இந்தியாவுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே காணப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா இவ்வாறு 348 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவி செய்துள்ளது.

இந்த இரண்டு தெற்கு ஆசிய நாடுகள் இடையேயான  உறவுகள் ஊசலாடுகின்ற போதிலும், கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக  சிங்களப் பெரும்பான்மை அரசாங்கத்தை எதிர்த்துப்போராடியவர்களும் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பினையுடையவர்களுமான தமிழ் மக்களிற்கு புனர்வாழ்வளிக்கப்படுவதற்கென இந்தியா நிதியுதவிகளை வழங்கி வருகின்றது.

இலங்கையின் சீனாவிற்கான ஏற்றுமதி 1.2 சதவீதமாகவே இருக்கையில், இந்தியாவிற்கான இலங்கையின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 1 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.  அதே நேரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் 16 சதவீதம் சீனாவினுடையதாகும்.

இந்தியாவின் நலன்கள்:

 “இலங்கையில் சீனாவின் நிதி விரிவாக்கம் எமது நாட்டை அபிவிருத்தி செய்வதில் குறைந்தளவு பங்களிப்பையே வழங்குகின்றது. மாறாக, இந்த  சீனாவின் நிதி விரிவாக்கமானது   அதனது  "முத்து மாலை" திட்டத்தினை ஏற்படுத்துவதன் மூலம் இந்து சமூத்திரத்தை சூழவுள்ள நாடுகளில் பீஜிங் தனது செல்வாக்கை அதிகரிக்கவே உதவுகின்றது” என அரசியல் ஆய்வாளரான  சானக பெரேரா குறிப்பிடுகிறார்.

 

"இலங்கையில் சீனாவின் திட்டங்கள் அனைத்தும்  உட்கட்டமைப்பு சார்ந்ததாயும் அவற்றில் பெரும்பாலானவை கடற்கரையோரங்களை  சார்ந்தும்  இருக்கிறது” என பெரேரா அல்ஜசீராவிற்கு  கூறினார்.

"அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தளை விமானநிலையம் ஆகியவை இப்பிராந்தியத்தில் சீனாவின் திட்டங்களுக்கு ஏதுவாயிருக்கும். சீனாவுக்கு இந்த திட்டங்கள் தடையில்லாத அனுமதியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது."

கிழக்கு கடற்கரையில் ஒரு விமான பராமரிப்பு மையம் அமைக்க சீனாவிற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக  எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதனை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் ஏற்றுக்கொண்டார்.

இவ்வாறான உடன்படிக்கைகள் இந்தியா மற்றும் இலங்கையிடையேயான  உறவுகள் மீது ஒரு இருண்ட நிழலை உருவாக்கும் என்றும் இது இலங்கையின் இறைமையை வலியுறுத்தும் 1987 ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கு எதிராக செல்லும் எனவும் பெரேரா கூறுகிறார். 

நிதிநிலையில் இலங்கை சீனாவில் தங்கியிருப்பதால், இலங்கை சிறிய அளவையே பெறமுடியுமாயிருப்பதாகவும், ஆனால் இலங்கை அரசாங்கம் கவனமாக இல்லாவிடின்  அதிகம் இழப்பதற்கு நேரிடும் எனவும் பெரேரா மேலும்  எச்சரித்தார்.

Aljazeera இணையத்தளத்தில் வெளியான இப்பத்தி குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது - தமிழில், இனியவன்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111028/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.