Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுவோம் தமிழா! காணாமல் போனோரின் பிள்ளைகளுக்கு கல்வி சார் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் ரவிகரன்!

Featured Replies

எழுவோம் தமிழா அறக்கட்டளையின் ஊடாக முல்லைத்தீவில் காணாமல் போனோரின் பிள்ளைகளின் கல்விவளர்ச்சிக்கான நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தார் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன். நேற்று காலை ஏற்பாடுசெய்யப்பட்ட இந்நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட காணாமல் போனோரின் பிள்ளைகளுக்கு கல்வி சார் பொருட்களும் வழங்கப்பட்டன.
 

kanamal_ponor_ravikaran.1.png

இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,

29/08/2014 அன்று  காலை 9 மணியளவில் முல்லைத்தீவு – கள்ளப்பாடு பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற பொருட்கள் வழங்கும் நிகழ்வில் 20 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு பொருட்கள் வழங்கப்பட்டன.
 

kanamal_ponor_ravikaran.2.png

எழுவோம் தமிழா அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த 10 மாணவர்களும் காணாமல் போனோரின் குடும்பங்களில் வறுமைநிலையோடு கற்றல் செயற்பாடுகளை தொடரும் 10 மாணவர்களும் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான கல்வி சார் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
 

kanamal_ponor_ravikaran.3.png

இது தொடர்பில் கருத்து தெரிவித்த வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன்,

லண்டன் நகரை சேர்ந்த திரு. என். சிவகணேஸ் மற்றும் திரு. தி. சதீஸ்குமார் ஆகியோர் ( தமிழ் சமூக நிலையம், லண்டன் ) ஆகியோர் எமது எழுவோம் தமிழா அறக்கட்டளைக்கு வழங்கிய நிதியின் மூலமாக கல்வி ஊக்குவிப்பு செயற்திட்டத்தின் நான்காவது கட்டம் தற்போது செயற்படுத்தப்படுகிறது. இதற்கு முன்னர் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் 107 மாணவர்களுக்கான தைத்தபடியான சீருடை புத்தகப்பை காலணி மற்றும் 10 கொப்பிகள் என்பன வழங்கப்பட்டிருந்தன.
 

kanamal_ponor_ravikaran.4.png

நேற்றைய முன் தினம்  நடைபெற்ற நிகழ்வில் உள்ளடக்கப்பட்ட 20 மாணவர்களோடு இச்செயற்திட்டம் தற்போது 127 மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவித்துள்ளது. இந்தப்பயணம் தொடரும். புலம்பெயர் உறவுகள் ஊடாக இச்செயற்திட்டம் இன்னும் பல மாணவர்களை ஊக்குவித்து தாயகத்தின் எதிர்கால சந்ததியை வளப்படுத்தும் என்றார்.

kanamal_ponor_ravikaran.5.png
kanamal_ponor_ravikaran.6.png
kanamal_ponor_ravikaran.7.png

http://www.pathivu.com/news/33540/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.