Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரி.ஐ.டியினரால் பல்கலை மாணவர்கள் 6 பேர் கடத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கடத்திச் சென்றுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

 
கடத்திச் சென்ற மாணவர்களிடம் பல்கலைக்கழகத்தின் வாடி வீட்டில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர் எனவும் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
 
மேற்படி 6 மாணவர்களும்  நேற்று மாலை விரிவுரைகளை முடிந்தவுடன் விடுதிகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இதனை அவதானித்த பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அவர்களைப் பின்தொடர்ந்து விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
 
கடந்த ஓகஸ்ட் மாதமும் இவ்வாறே சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சமூக மற்றும் மொழி பீடத்தின் முதலாம் ஆண்டில் பயின்ற தமிழ் மாணவர் மீது தாக்குதல் நடத்தி அச்சுறுத்தும் வாசகங்கள் எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததுடன் அந்த பீடத்தை சேர்ந்த யோகராஜா நிரோஷன் என்ற மாணவரை கடத்திச் சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அவரை தடுத்து வைத்தனர்.
 
பின்னர் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். எனினும் அதற்கு முன்னர் தாக்குதலுக்கு உள்ளான தமிழ் மாணவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்து கடந்த 23 நாட்களாக தடுத்து வைத்துள்ளனர்.
 
 இந்த மாணவர் அடக்குமுறைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள அனைத்து பல்லைக்கழக மாணவர் ஒன்றியம், அரசாங்கம் மிலேச்சத்தனமாக மாணவர் அடக்குமுறையை மேற்கொண்டு பல்கலைக்கழகங்களுக்குள் இனவாதத்தை தூண்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=363113392103639181#sthash.q4I62o3e.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.