Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடும் வாதப் பிரதிவாதங்களுடன் முல்லைத்தீவு அபிவிருத்திக் கூட்டம்!

Featured Replies

DCC%20meeting%20in%20mullaitivu%20546565

 

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று மாலை 3 மணியளவில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள், கேள்விகள் எழுந்த நிலையில் இரவு 7.30 மணிக்கு கூட்டம் நிறைவடைந்தது. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான அமைச்சர் ரிசாட் பதியூதீன், வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
 
இந்தக் கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்கள், வடமாகாண அமைச்சர்கள், அரச அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் காணி அபகரிப்பு, சிங்களக் குடியேற்றம், வளச்சுரண்டல், சட்டவிரோத மீன்பிடி, பொதுமக்களது சொத்துக்களை இராணுவத்தினர் தொடர்ந்து தமது பிடியில் வைத்திருக்கினறமை உள்ளிட்ட பல விடயங்கள் விவாதிக்கப்பட்டன.
 
குறிப்பாக, இடப்பெயர்வின் போது பொதுமக்கள் விட்டுச் சென்ற கால்நடைகளை இராணுவத்தினர் பிடித்துத் தமது பாராமரிப்பில் வைத்துள்ளனர,. இவற்றை உடனடியாக பொதுக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த இராணுவத் தரப்பினர் உரிமையாளர்கள் தமது கால்நடைகளை இனங்காட்டி உறுதிப்படுத்தினால் அவை மீள ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தனர்.
 
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மாகாண சபை உறுப்பினர்கள் " உங்களுக்கு மாடு பிடிப்பதற்கு யார் அனுமதி தந்தது. பொதுமக்களிடம் அனுமதி பெற்றா மாடுகளைப் பிடித்தீர்கள்?" - என்று கேள்வி எழுப்பினர். இதனால் இராணுவத்தினருக்கும் மாகாண சபை உறுப்பினர்களுக்குமிடையில் பெரும் வாதம் எழுந்தது. வாதத்தைக் கைவிடுமாறு அமைச்சர் ரிசாத் கேட்டுக்கொண்டார். எனினும் பிரச்சினை ஒன்றுக்குத் தீர்வு காணாமல் அடுத்த விடயம் குறித்து பேச முடியாது என்று மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவிக்க மாடுகளை கையளிப்பது தொடர்பாக எதிர்வரும் 9 ஆம் திகதி விசேட கூட்டம் ஒன்று நடத்துவது என்று அறிவிக்கப்பட்டது. இதேபோன்றே காணி அபகரிப்பு, வளச்சுரண்டல், சட்டவிரோத மீன்பிடி போன்ற விடயங்களிலும் பெரும் வாதங்கள் இடம்பெற்றன. - 
 
 
 
  • தொடங்கியவர்

வெலிஓயா, முல்லைத்தீவுக்கு வேண்டாம் : அன்ரனி ஜெகநாதன்

 

தேர்தலில் வாக்களிப்பதற்கு அநுராதபுரம், திருகோணமலை மற்றும் வவுனியா செல்லும் வெலிஓயா பகுதி மக்களை ஏன் முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைத்தது என்பது தொடர்பில் வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் கேள்வி எழுப்பினார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷhத் பதியுதீன் ஆகியோரின் இணைத்தலைமையில் கரைத்துரைப்பற்றுப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (03) மாலை தொடக்கம் இடம்பெற்று வருகின்றது.

இதன்போதே, அன்ரனி ஜெகநாதன் மேற்கொண்டு கேள்வி எழுப்பினார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், 

வாக்களிப்பதற்கு அங்கு செல்லும் வெலிஓயா வாசிகளுக்கு, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வரும் நிதியில் இருந்தே நிதி செல்கின்றது. அதிலும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வரும் நிதியின் மூன்றில் ஒரு பங்கு, சில வேளைகளில் மூன்றில் இரண்டு பங்கு நிதிகூட அங்கு செல்கின்றன. 
முல்லைத்தீவுக்கு கிடைக்கப்பெற்ற 5 அம்புலன்ஸ் வண்டிகளில் இரண்டை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி வெலிஓயாப் பிரதேச வைத்தியசாலைகளுக்கு வழங்கினார்.

அத்துடன், சமுர்த்தித் திட்டத்தில் பெருமளவு நன்மைகள் வெலிஓயாப் பிரதேசத்திற்குச் செல்கின்றது என்றும் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்கனவே ஓட்டுசுட்டான், துணுக்காய், கரைத்துரைப்பற்று, மாந்தை கிழக்கு, புதுக்குடியிருப்பு ஆகிய 5 பிரதேச செயலகங்கள் இருக்கின்றன. இருந்தும் அவற்றுக்கு குறைந்தளவு நிதியே அபிவிருத்தி நடவடிக்கைக்கு ஒதுக்கப்படுகின்றன. ஆனால், வெலிஓயாப் பிரதேசத்திற்கு அதிகமான நிதி ஒதுக்கப்படுகின்றது என்றார்.

இதற்குப் பதிலளித்த முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகம்,

பொதுஉள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்புரையின் கீழ், 2011 ஆம் ஆண்டு வெலிஓயாப் பிரதேச செயலகம் முல்லைத்தீவுப் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. 

அத்துடன், அபிவிருத்திப் பணிகளின் நிதி தொடர்பிலும் பொது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுத் தீர்மானித்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார். 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/125360-2014-09-03-13-22-14.html


மலசலகூடம் அமைப்பதில் ரூ.27 இலட்சம் மோசடி

 

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் யுனிசெப் நிதியுதவியில் மலசலகூடங்கள் அமைப்பதில் 27 இலட்சம் ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகம் குறிப்பிட்டார். 

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷக்த் பதியுதீன் ஆகியோரின் இணைத்தலைமையில் கரைத்துரைப்பற்றுப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (03)இடம்பெற்று வருகின்றது. 

இதன்போது, மலசலகூடங்கள் அமைப்பதில் மோசடிகள் இடம்பெற்றது என்பதை வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கூறினார். 

அதனை, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ரி.குருபரன் மற்றும் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகம் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர். 

மேலும், மோசடிகள் இடம்பெற்றமை தொடர்பில் கணக்காய்வுக்குழுவொன்று நியமிக்கப்பட்டு கணக்காய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

யுனிசெவ் நிறுவனத்தால் ஒட்டுசுட்டான் பண்டாரவன்னியன் அபிவிருத்திக் கிராமத்திலுள்ள 151 குடும்பங்களுக்கு மலசலகூடங்கள் அமைப்பதற்கு தலா 70 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

மலசலகூடங்கள் அமைத்துக் கொடுப்பதற்கான பணிகள் ஒப்பந்தகார நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டது. 

அந்நிறுவனம், ஒரு மலசலகூடத்திற்கு 3 உழவு இயந்திரங்கள் மண் தேவையான நிலையில் 2 உழவு இயந்திர மணலை மாத்திரம் கொண்டு வேலை தொடங்கியுள்ளது. 

அத்துடன், ஒரு உழவு இயந்திர மண் 2,300 ரூபாய் ஆன தொகைக்கு கொள்வனவு செய்யப்பட்ட போதும், அந்நிறுவனம் ஒரு உழவு இயந்திர மண் 4,450 ரூபாய் என்ற தொகைக்கு கணக்குக் காட்டியுள்ளது. 

மேலும், மலசலகூடம் அமைப்பதற்கான கம்பிகள், இதர பொருட்களை பயனாளிகளிடம் காசு வாங்கிக்கொண்டு செய்துள்ளது.
 
அத்துடன், தரமற்ற விதத்தில் மலசலகூடங்களை அமைத்தும் கொடுத்துள்ளது. இது தொடர்பில் மக்கள் கொடுத்த முறைப்பாட்டின் பிரகாரம் மாவட்டச் செயலாளர் கணக்காய்வுக் குழுவின் மூலம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார். 

அந்த மோசடி நடவடிக்கையில், அரச அலுவலர்களுக்கும் தொடர்புகள் இருக்குமா என்ற ரீதியிலும் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்டச் செயலாளர் கூறினார். 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/125350---27--.html

  • கருத்துக்கள உறவுகள்

" உங்களுக்கு மாடு பிடிப்பதற்கு யார் அனுமதி தந்தது. பொதுமக்களிடம் அனுமதி பெற்றா மாடுகளைப் பிடித்தீர்கள்?" -

அவன்கள் மனுசை பிடிச்சாலே அவங்கன்ட தலைமை கேள்வி கேட்காது ...மாட்டை பிடிச்சதற்கு மட்டும் நீதி கொடுத்துடுவாங்களாக்கும்...:D

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.