Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Image may contain: 1 person
 
 
 
1300 கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர் தாமஸ் ஆல்வா எடிசன்.
அவரால் இது எப்படி சாத்தியமானது என்று எல்லோருக்கும் வியப்பு. பத்திரிகையாளர்கள் அவரை சந்தித்து உங்களுடைய வெற்றியின் ரகசியம் என்ன?
என்று கேட்ட பொழுது அவர் ஒரு புன்னகையோடு சொன்னார்.
எனக்கு காது சரியாய் கேட்காது. அதனால் என்னை திட்டினாலும் தெரியாது. புகழ்ந்தாலும் புரியாது . அதனால் நான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் என் வேலையில் ஈடுபட்டேன்.
என் கவனம் எல்லாம் வேலையிலேயே இருந்தது. அதனால் தான் வெற்றி பெற முடிந்தது. "
தன் உடல் குறைபாட்டையே வெற்றியாக மாற்றியவர் #எடிசன்
  • Replies 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

National Grilled Cheese Day! April 12,2017

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 1 person, text

happy tamil new year ?உதயமாகும் புது வருடம் அனைவர் வாழ்விலும் வசந்தத்தை வருவித்து வாழ்க்கை வளமாக்கட்டும்.. அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் என் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Posted

No automatic alt text available.

இதை முகநூலினூடாக ஒருவர் என்னுடன் பகிர்ந்திருந்தார். "தமிழ்" என்ற சொல்லை எழுதிய விதம் பிடித்திருந்தது. எங்கு பதியலாம் என்று யோசித்தபோது உங்கள் பக்கம் ஞாபகம் வந்தது - பதிந்து விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Image may contain: 1 person, text
 
 

ஏப்ரல் 15, 2017- ஆபிரஹாம் லிங்கன் அவர்களின் 152 நினைவு தினம்

ஐக்கிய அமெரிக்காவின் 16வது ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன் அமெரிக்க ஜனநாயக முறையின் கலங்கரை விளக்காக விளங்கி அமெரிக்காவில் அடிமை வியாபாரத்தினை ஒழிக்கும் முயற்சியில் தன் உயிரை அர்ப்பணித்த மகான். 

ஆபிரஹாம் லிங்கன் ~ தோல்விகளால் துவண்டு போகாதவர்....

 
 
Abraham-Lincoln-9382540-2-402.jpg
 
 
ஐக்கிய அமெரிக்காவின் 16வது ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன் அமெரிக்க ஜனநாயக முறையின் கலங்கரை விளக்காக விளங்கி அமெரிக்காவில் அடிமை வியாபாரத்தினை ஒழிக்கும் முயற்சியில் தன் உயிரை அர்ப்பணித்தவர். வறுமை காரணமாக  பாடசாலை செல்லமுடியாது தந்தையின் தச்சுப்பட்டறையில் துணைபுரிந்தார். பலமைல்கள் தூரம் நடந்து சென்று கடன் வாங்கிப் புத்தகங்களைப் படித்தார். பின்பு சட்டம் பயின்று சாதாரண வழக்கறிஞர் ஆனார். 
 
தன் வாழ்வில் உயரிய இலட்சியத்தினை அடைய வேண்டும் என்ற இலட்சியத்தினை பல்வேறு தோல்விகளைக் கடந்து1860ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியாக வெள்ளை மாளிகையை அலங்கரித்தவர். 
 
ஆபிரஹாம் லிங்கன் வெள்ளை மாளிகையை அடைய கடந்துவந்த பாதை.....
 
Ø  1816 ~ ஆபிரஹாம் லிங்கனின் குடும்பத்தினர் அவர்கள் பாரம்பரியமாக குடியிருந்த வீட்டிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் தன் குடும்பத்திற்கு உதவு புரியுமுகமாக வேலைக்கு செல்ல நேர்ந்தது.  
 
Ø  1818 ~ ஆபிரஹாம் லிங்கனின் தாயார் மரணம்
 
Ø  1831 வியாபாரத்தில் தோல்வி
 
Ø  1832 ~ சட்டசபை தேர்தல் தோல்வி
 
Ø  1832 ~ சட்டக்கல்லூரி செல்வதற்காக தனது தொழிலினை இழந்தார், ஆனாலும் சட்டக்கல்லூரியில் அனுமதி கிடைக்கவில்லை.
 
Ø  1833 வியாபாரத்தில் தோல்வி
 
Ø  1834 ~ சட்டசபைத் தேர்தல் தோல்வி
 
Ø  1835 ~ பிரஹாம் லிங்கன் மணம்முடிக்கவிருந்த அவனது காதலி மரணம்
 
Ø  1836 ~ நரம்புக் கோளாறு நோய் பாதிப்பினால் 6 மாதங்கள் படுக்கையிலேயே காலத்தினைப் போக்கினார்
 
Ø  1838 ~ சட்டசபை சபாநாயகர் தேர்தல் தோல்வி
 
Ø  1840 ~ எலக்டர் தேர்தல் தோல்வி
 
Ø  1843 ~ காங்கிரஸ் தேர்தல் தோல்வி
 
Ø  1846 ~ காங்கிரஸ் தேர்தல் வெற்றி; வாசிங்டன் சென்று நல்லதொரு வேலையில் இணைந்துகொண்டார். 
 
Ø  1848 ~ காங்கிரஸ் மீள் தேர்தல் தோல்வி
 
Ø  1849 ~ தன் சொந்த மாநிலத்தில் காணி அதிகாரி பதவியில் இணைய விண்ணப்பித்தார்; விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
 
Ø  1854 ~ செனெட்சபை தேர்தல் தோல்வி
 
Ø  1856 ~ உப ஜனாதிபதி தேர்தல் தோல்வி
 
Ø  1858 ~ செனெட்சபை தேர்தல் தோல்வி
 
Ø  1860 ~ ஜனாதிபதி தேர்தல் வெற்றி      
 
***
  • கருத்துக்கள உறவுகள்
Posted
கிறிஸ்தவத்தின் போதனைகளைச் சரியாய்ப் பின்பற்றும் அனைத்து உறவுகளுக்கும் உதித்த ஞாயிறு நல் வாழ்த்துக்கள்!
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சார்லி சாப்ளின்.

  • உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் பிறந்த தினம்(1889)
அவனும், அவனுடைய தாயாரும், கலை அரங்குகளில் பாடல் பாடி நடித்தால்தான், மொத்தக் குடும்பமுமே உயிர்வாழ முடியும் என்ற துயரநிலை. ஒருமுறை அவனது தாயாரால் பாட முடியாமல் போக, அவன் பாடத் தொடங்கினான். அவன் பாடிய பாடலைக் கேட்ட ரசிகர்கள், காசை அள்ளி வீசினர். 
 
அப்படி வீசப்பட்ட காசுகளை எடுப்பதும், பிறகு பாடுவதுமாக இருந்த அவனது செய்கை, அத்தனை பேரையும் சிரிக்க வைத்தது. 
 
அந்தச் சிரிப்புக்குப் பின்னால், அவன் அழுது கொண்டிருந்தது யாருக்கும் தெரியாது. 
 
அந்தச் சிறுவன்தான் பின்னாளில் உலகையே சிரிக்க வைத்த, சார்லி சாப்ளின்
 
f0faf-chaplin1.jpg?w=658&h=671
லண்டனில் ஏழைக் குடும்பத்தில் சாப்ளினின் இளைமைக்காலம் இனிமையானதாக இல்லை. 
சிறுவயதிலேயே தந்தையை இழந்து தாயுடன் வளர்ந்தார். அவரது தாயும் மனநிலை பிறழ்வு நோயில் பாதிக்கப்பட்டு இருந்தார். பசியும் வறுமையும் சாப்ளினை வாட்டின. 
பல துன்பங்களைக் கடந்த சாப்ளினுக்கு, 14 வயதில் ஷெர்லாக் ஹோம்ஸ் கதையில் நடிக்க ஒரு சிறு வாய்ப்புக் கிடைத்தது. அதுதான் ஆரம்பம். 
அதன்பிறகு, உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களின் எழுத்துகளை வாசித்து, அவற்றை திரையில் கொண்டு வந்தார்.
ஓரளவு வளர்ந்ததும், அமெரிக்கா சென்று நாடகக் குழுவில் சேர்ந்து புகழ்பெற்றார். அதன்பிறகு, 1914ல் 'டிரெம்ப்' (TRAMP) படத்தில், நாடோடியாக நடித்து ரசிகர்களின் மனதை ஆட்கொண்டார். 
இறுக்கமான கோட், பெரிய சைஸ் பேன்ட், டூத்பிரஷ் மீசை, கிழிந்த தொப்பி, பொருத்தமில்லாத காலணி, வாத்து நடை என, அந்த வேடத்திலேயே தொடர்ந்து 25 ஆண்டுகள் நடித்து, உலக மக்களை மகிழ்வித்தார்.
அவருக்கு 1972ல், சிறப்பு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. நமது இந்திய அரசாங்கம் அவரது தபால் தலையை வெளியிட்டு, மாபெரும் கலைஞனுக்கு மரியாதை செய்தது.
1__2__1850429g.jpg

சார்லி சாப்ளினால் 
புகழ்பெற்ற படங்கள்:

டிரெம்ப் (Tramp)

தி கிட் (The Kid)

கோல்ட் ரஷ் (Gold Rush)

சர்க்கஸ் (Circus)

சிட்டி லைட்ஸ் (City Lights)

மாடர்ன் டைம்ஸ் (Modern Times)

தி கிரேட் டிக்டேட்டர் (The Great Dictator) 
சாப்ளின், தன்னுடைய படம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக மிகவும் சிரமம் எடுத்துக்கொள்வார். செலவைப்பற்றி கவலைப்பட மாட்டார்.
 “தி கிட்” படத்தில் ஒரு காட்சிக்காக 50 ஆயிரம் அடி வரைக்கும் படம் எடுத்தார். அதில் 75 அடி தான் படத்தில் இடம் பெற்றது. சார்லி சாப்ளின் நடித்த “கிட்” என்ற புகழ் பெற்ற படத்துக்கு வெளியான விளம்பரம், அனைவரையும் கவர்ந்தது. 
தான் எடுக்கும் பேசாத படம் மக்களைப் பேச வைக்கும் என்ற தன்னம்பிக்கையோடு எடுக்கப்பட்ட படந்தான்,”நீவீtஹ் றீவீரீலீts”. எதிரிகள் சதி செய்ததால், இந்த படம் ஒரே ஒரு தியேட்டரில் மட்டும் திரையிடப்பட்டு, கட்டுக்கடங்கா கூட்டத்தைக் கூட்டி எதிரிகளை பணிய வைத்தது. 1940–ம் ஆண்டு வெளியான” தி கிரேட் டிக்டேட்டர்” என்ற படத்தில் ஹிட்லர் போன்ற ஒரு வேடத்தில் இவர் நடித்தார். இவரது முதல் பேசும் படமே, இது தான். 
இது அடால்ப் ஹிட்லரையும், அவரது பாசிச கொள்கையையும் எதிர்த்து குரல் கொடுத்த படம். இப்படம் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் புகுவதற்கு ஒரு வருடம் முன்பு அங்கு வெளியிடப்பட்டது. இது உலக அளவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. 
இரண்டாம் உலகப்போரில் கொடும் சர்வாதிகாரியாக உலா வந்த ஹிட்லரை விமர்சித்து, இவர் எடுத்த படம், ஹிட்லரையே கொஞ்சம் யோசிக்க வைத்தது.
images (1)
அந்த படத்தில் ஹிட்லரை கேலி செய்து சாப்ளின் ஆற்றும் உரையில், “நாமெல்லோரும் ஒருவொருக்கொருவர் உதவி செய்துகொள்ளத்தான் வேண்டும். மனிதர்கள் அப்படித்தான். நாம் ஒவ்வொருவரும் அடுத்தவர்களின் மகிழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டுதான் வாழ வேண்டும்., அடுத்தவர்களின் துன்பத்தை ஆதாரமாகக் கொண்டல்ல. 
நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் வெறுக்கவும், துவேஷம் கொள்ளவும் வேண்டியதில்லை. நான் பேரரசனாக ஆக விரும்பவில்லை. அது என்னுடைய வேலை அல்ல. சர்வாதிகாரிகள் தங்களை விடுவித்துக் கொள்வார்கள். ஆனால், மக்களை அடிமைப்படுத்திவிடுவார்கள்!” என்ற இவரது சவுக்கடி வசனங்கள், போர் விரும்பாத மக்களை அதிகம் கவர்ந்து இழுத்தது. 
சினிமா மீது மோகம் கொண்ட ஹிட்லர், இப்படத்தை இரு முறைப் பார்த்தார். இந்தியாவிலிருந்து வந்த அண்ணல் காந்தியின் அஹிம்சை போராட்டாங்களை பற்றி கேள்விப்பட்டு, அவரை சந்தித்து மகிழ்ந்தார்.
Charlie-Chaplin-silent-movies-11196808-1024-768
ஹிட்லர், ரஷியா மீது பாய்ந்த பொழுது, “ஜனநாயகம் ஆபத்துக்கு உள்ளாகி இருக்கிறது ; எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். அமெரிக்கா உதவிக்கு போக வேண்டும்” என்றார், சார்லி. தொழிலார்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட அவரின் படங்கள், அரசாங்கங்களை உலுக்கி எடுத்தன. 
தொழிலாளர் நலன், மக்கள் மீதானா அக்கறை யாவும் சாப்ளினைப் பற்றி அமெரிக்க அரசுக்கு பெரும் சந்தேகத்தை கொண்டு வந்தது. அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்து இருந்தாலும், அவர் பிரிட்டன் குடிமகனாகவே இருந்தார். இவர் அமெரிக்க கொள்கைகளுக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், கம்யூனிஸ்ட்-எனவும் அமெரிக்காவால் சந்தேகிக்கப்பட்டார். 
அப்போதைய அமெரிக்க அதிபர், எப்.பி.ஐ-யிடம் இவரை கண்காணிக்குமாறு உத்தரவிட்டு, அமெரிக்காவில் சாப்ளின் வாழும் உரிமையை நீக்க முயற்சித்தார். 1952–ம் ஆண்டில் சாப்ளின் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
 இதனை தெரிந்துகொண்ட அமெரிக்க அரசு, ஐ.என்.எஸ் -உடன் பேச்சுவார்த்தை நடத்தி, சாப்ளின் அமெரிக்கா திரும்பும் அனுமதிச் சீட்டை ரத்து செய்தது. ஆதலால் அவர் ஐரோப்பாவிலேயே தங்கும்படி நேர்ந்தது.
”நான் புரட்சியாளன் இல்லை! மக்களை ஆனந்தப்படுத்துகிற கலைஞன் அவ்வளவே!”என்றார் சாப்ளின். எனினும் அமெரிக்க அரசு அவரை உதாசீனம் செய்தது.
 “அமெரிக்காவில் காலடி வைத்தால் கைது செய்யப்படுவீர்கள்” என்று எச்சரித்தது. எனினும் எதற்கும் அஞ்சாத அந்த மாபெரும் கலைஞர், ஸ்விட்சர்லாந்து நாட்டிற்கு குடிபெயர்ந்து அங்கும் இரண்டு படங்களை இயக்கினார். ஐரோப்பியாவில் இருந்து தயாரித்த முதல் படத்தை அமெரிக்காவில் வெளியிடவே முடியாத அளவுக்கு, அமெரிக்க அரசு முரண்டு பிடித்தது.
சாப்ளின், இருமுறை சிறப்பு ஆஸ்கார் விருதினைப் பெற்றார். 
1967–ல் அவர் இயக்கிய கடைசிப்படம் வெளிவந்தது. 
1922—ல் ஆஸ்கார் விருதுகள் வழங்கியபொழுது, இப்பொழுதுள்ள வாக்களிப்பு முறை இல்லை. எனவே நேரடியாக சாப்ளின் “தி சர்க்கஸ்” திரைப்படத்துக்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர் விருதுகளுக்குத் தேர்வானார்.
ஆனால், இவருக்கு விருது வழங்க முடியாதிருந்த நிலையில், இத்திரைப்படத்தை எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்த அவருடைய பன்முகத்தன்மையையும், மேதைமையையும் பாராட்டிச் சிறப்பு விருது அளித்தார்கள். சார்லி சாப்ளின் அமெரிக்காவை விட்டு வெளியேறிய 20 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் ஒரு ஆஸ்கர் விருது அளிக்கப்பட்டது. .
 
சார்லி சாப்ளின் 1977இல் இறந்தார். 
அவரது உடலை அடுத்த ஆண்டே திருட முயற்சித்தனர். அமைதிக்குப் பெயர் பெற்ற ஸ்விட்சர்லாந்தில் அமைதியாக மீளா உறக்கத்தில் இருந்த அவருக்கா இந்த கதி என்று உலகமே அல்லோலகல்லோலப் பட்டது. 
2014இல் இண்டிபெண்டண்ட் பத்திரிகைக்குப் பேட்டி அளித்த அவரது மகன் உலகின் மோசமான சம்பவம் இது என்று விமரிசித்தார்.
உடலைத் திருப்பித் தர பெரும் தொகையை சவத் திருடர்கள் கேட்ட போது சார்லி சாப்ளினின் மனைவி பணம் தர மறுத்து விட்டார்.
சார்லியின் வெறும்  செத்த உடலுக்கு என்ன மதிப்பு ? என்ற அவரது பதிலைக் கேட்டத் திருடர்கள் பணம் கிடைக்கும் என்று வந்தவர்கள் அதிர்ந்து போனார்கள்.
சார்லியின் உடலை தேடிக்கொண்டிருந்த போலீஸார் சார்லி மனைவியின் உதவியுடன் அவரது தொலைபேசி  பேச்சை ஒட்டுக் கேட்டனர். அதன்படி  கிழக்கு ஐரோப்பாவில் பதுங்கி இருந்த இரண்டு பிரேதத் திருடர்களைப் போலீஸார்பிடித்தனர். 
அப்போதுதான் சார்லி சாப்ளினின் உடல் புதைக்கப்பட்ட  கல்லறைக்கு அடுத்த கல்லறையில்தான் அவரது உடல்  மாற்றி புதைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
201604191100091827_Charlie-Chaplin-birthday-April-16-1889__SECVPF.gif
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
நான் வருவதும் போவதும் வழமையென்டு யாழ் உறவுகள் தேடாமலே விட்டுட்டார்கள் போலும்..நல்லது...
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Image may contain: bird and outdoor
 

நீர் நாரை (Flamingo) என்பது நீண்ட கால்களையும் நீண்ட கழுத்தையும் கொண்ட பறவை. இப்பறவைகள் ஏன் ஒரு காலிலேயே நீண்ட நேரம் நிற்க விருப்பமுள்ளவை?

விலங்குக்காட்சிச் சாலைகளுக்கு செல்லும் பலரும் கேட்கும் கேள்வி இது. ஆனாலும் இதற்கு எவரும் விளக்கமான பதில் தரவில்லை.
இப்போது கரிபியன் நீர்நாரைகளை நீண்டகாலம் ஆய்வு நடத்திய அறிவியலாளர்கள் இதற்கு ஒரு விடை கண்டுபிடித்துள்ளார்கள்.

நீர்நாரைகள் தமது உடல் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கே ஒரு காலில் நிற்கின்றன என அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
பில டெல் பியாவின் புனித யோசப் பல்கலைக்கழகத்தின் உளவியல் வல்லுநர்கள் மத்தியூ அண்டர்சன், சேரா வில்லியம்ஸ் ஆகியோர் (பரிணாம) படி வளர்ச்சியின் நடத்தைகளை ஆய்வு செய்பவர்கள்.
இவர்கள் நீர்நாரைகளின் நடத்தைகளை ஆராய்ந்தார்கள். 

குறிப்பாக, மனிதர்கள் இடக்கை, வலக்கை பழக்கங்கள் கொண்டிருப்பது போல, நீர்நாரைகள் தமது உடலின் எப்பகுதியை தமது பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றன என்பது குறித்து ஆராய்ந்தார்கள்.

ஒரு காலில் நிற்கும் அமெரிக்க நீர்நாரைகள், டொமினிக்கன் குடியரசு
நீர்நாரைகள் தமது தலைப்பகுதியை ஒரே பக்கத்தில் அதிக நேரம் ஓய்வாக வைத்திருப்பதை அவதானித்தார்கள். அத்துடன், தலைப்பகுதியின் எப்பக்கத்தை அதிக நேரம் ஓய்வாக வைத்திருப்பதை வைத்து அவை தமது கூட்டத்தில் ஏனைய பறவைகளுடன் எவ்வாறு முரட்டுத்தனமாக நடந்து கொள்கின்றன என்பதையும் அது தீர்மானிக்கிறது.வலப்பக்கத்தில் தலைப்பகுதியை அதிகநேரம் ஓய்வாக வைத்திருக்க விரும்பும் நீர்நாரைகள் அதிக முரட்டுத்தனத்துடன் தென்படுவதாக மத்தியூ அண்டர்சன் தெரிவித்தார்.

இதனை அடிப்படையாக வைத்து நீர்நாரைகள் ஒரு காலில் நிற்கும் பழக்கத்தையும் ஆராய்ந்தார்கள். இதற்காக அவர்கள் கரிபியன் நீர்நாரைகளை (Phoenicopterus ruber) பிலடெல்பியா விலங்குக்காட்சிச் சாலையில் பல மாதங்களாக அவதானித்தார்கள்.

லிசுபன் விலங்குக்காட்சி சாலையில் நீர்நாரைஎந்தக்காலில் அவை நிற்க விரும்புகின்றன என்பது பெரிதாகத் தெரியவில்லை. ஆனாலும் அவை குளிர் நீரில் நிற்கும் போது நீண்ட நேரம் ஒரு காலில் நிற்பதையே விரும்புகின்றன.

ஒருகாலில் நிற்பதன் மூலம் அவை பெருமளவில் ஆற்றலை உள்வாங்கிச் சேமிப்பதன் மூலம், அவை நீண்ட நேரம் குளிர்ந்த நீரில் நடக்க முடிகிறது என அண்டர்சன் தெரிவித்தார்.
இரண்டு கால்களையும் நீரில் வைப்பதன் மூலம் அவை அதிகளவு வெப்பத்தை இழக்க வேண்டி வரலாம்.

ஆனாலும் இவை தவிர ஒரு காலில் நிற்பதன் மூலம் வேறு பயன்களையும் நீர்நாரைகள் பெறலாம் என்ற கருத்தையும் அவர்கள் மறுக்கவில்லை.

- படித்தது

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பூப்பூவாப் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ... (1)

 
 
 நான் ரசித்த சில மலர்கள் 
உங்கள் ரசனைக்காகவும் இங்கே... 


 
Eucalyptus%2Bflowers.JPG
1. யூகலிப்டஸ் பூக்கள் (Eucalyptus)
 
bees1.JPG
2. பாப்பி பூ (poppy)
 
P1690920a.JPG
3. பாட்டில் பிரஷ் பூ (callistemon)
 
P1680486a.JPG
4. மஞ்சள் மலர்கள் (aeonium arboreum)
 
aloe%2Bvera%2Bblooming.JPG
5. கற்றாழைப் பூக்கள் (aloe vera)
 
Iris%2BJaponica.JPG
6. ஐரிஸ் ஜாப்பனிகா (Iris Japonica)
 
P1710773.JPG
7. அஸேலியா பூக்கள் (Azalea flowers)
 
poppy.JPG
8. மஞ்சள் பாப்பி மலர் (poppy)
 
christmas%2Bcactuss.JPG
9. கிறிஸ்துமஸ் கள்ளிப்பூ (christmas cactus)
 
%25E0%25AE%2589%25E0%25AE%2589.JPG
 10. செவ்வந்தி (marigold)
 
white%2Bdaisy.JPG
11. சாமந்தி (daisy)
 
P1710718.JPG
12. மேக்னோலியா மலர்கள் (magnolia)
 
P1700136.JPG
13. ரோஜா (rose)
 
P1680399a.JPG
 14. தீக்குச்சிப் பூக்கள் (Aechmea gamosepala)
 
water%2Blily.jpg
15. அல்லிப்பூ (water lily)
 
P1690520a.JPG
16. பாப்பி பூ (poppy)
 
P1710840a.JPG
17. சைக்ளமென் (cyclamen)

_1670331.JPG
18. ஃப்யூஷியா (fuchsia)
a.JPG
19. அலமாண்டா (allamanda)
 
P1690630%25E0%25AE%2585.JPG
20. மந்தாரை (Bauhinia)
 

பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ - 2

 
daylily.JPG
21. மஞ்சள் லில்லி மலர் (daylily - Hemerocallis)
 
 
 
crape%2Bmyrtle%2Bbloom.JPG
22. crape myrtle flowers
 
b2.JPG
23. தேவதையின் ஊதுகொம்பாம் (Angel's trumpet - Brugmansia)
 
re58%2Bhibiscus%2BBonaire%2BWind.JPG
24. மஞ்சள் செம்பருத்தி  (yellow hibiscus)
 
 
Hemerocallis%2Bred%2Bvelvet%2Bdaylily.JPG
25. Hemerocallis red velvet daylily
 
ad36a.JPG
26. இலவம்பூ வகையுள் ஒன்று  (silk floss flower - Ceiba speciosa)
 
grevillea%2Bred.jpg
27. சிலந்திப்பூ (spider flower - grevillea)
 
pink%2Btulips.JPG
28. துலிப் மலர்கள் (Tulips)
 
ad6a.JPG
29. பெயர் அறியாப்பூ
 
Begonia%2B1.JPG
30. பெகோனியா (begonia)
 
ads43.JPG
31. (Brillantaisia)
 
ads28.JPG
32.  (star cluster)
 
ass1.JPG
33. நித்திய கல்யாணிப்பூக்கள் (rosy periwinkle)
 
 
abutilon%2Bpink.JPG
34. pink abutilon
 
 
ad83.JPG
35. வெட்சியில் ஒரு வகை (ixora)
 
 
za52.JPG
36. ரோஜாக்கள்  (roses)
 
columbine.JPG
37. கொலம்பைன் மலர்கள் (columbine flowers)
 
P1820530a.JPG
38. ஆந்திரியம் பூக்கள் (Purple Arc Anthurium)
 
 
grevillea%2Bwhite.JPG
39. சிலந்திப்பூ -  (white grevillea)
 
 
a10.JPG
40. அடுக்கு செம்பருத்தி (layered hibiscus)


http://geethamanjari.blogspot.ca/
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted


கனேடிய வைத்தியசாலைகளில் நோயாளிகளிடம்
சுய அறிவை  நினைவை மீளப் பெற உலகப்போர் பற்றி கேள்வி கேட்கிறார்கள் .....:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எதிர் பாராத துன்பமும் அதிர்ச்சியும் வாழ்வின் மிகச்சிறந்த ஆசான்..அடுத்து எப்படி வாழனும் என்பதற்கு!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனைத்து தொழிளாளர்களுக்கும் மற்றும் தொழிளாளர்களுக்காக குரல்கொடுக்கும் உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.

No automatic alt text available.
No automatic alt text available.

தொழிளாளர் (மே) தினம் எப்படி வந்து...?

உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மே முதல் தேதியை மே தினம் என்றும் தொழிலாளர் தினம் என்றும் கொண்டாடி மகிழ்கிறார்கள். 

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இதற்கு எதிரான குரல்கள் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் தொடங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (Chartists). சாசன இயக்கம் 6 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை என்ற கோரிக்கை.1830 ஆம் ஆண்டு, பிரான்சில் நெசவுத் தொழிலாளர்கள் தினமும் 15 மணி நேரம் உழைத்து வந்தனர்.இதனை எதிர்த்து அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

1834 இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற வாசகத்தை முன்வைத்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால், இது தோல்வியில் முடிந்தது. ஆஸ்திரேலியா விலுள்ள மெல் போர்னில் கட்டிடத் தொழிலாளர்கள் 1856 இல் முதன்முதலாக 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்தனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றனர்.

1896 ஏப்ரலில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறுபிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளர் களின் நிலைமை குறித்து விரிவாக அலசினார். மேலும், ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதாரப் போராட்டம் அரசியல் போராட்டமாக எழுச்சி கொள்ள வேண்டும். என்பதையும் வலியுறுத்தினார். தொழிலாளி களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது எனலாம்.அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து, அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் உருவாக்கப் பட்டது. இந்த இயக்கம் 1886, மே 1 ஆம் நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இந்த இயக்கமே மே தினம் தோன்றக் காரணமாக இருந்தது எனலாம்.

1889 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் சோசலிசத் தொழிலா ளர்களின் சர்வதேசத் தொழிலாளர் பாராளு மன்றம் கூடியது. 18 நாடுகளிலிருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேரப் போராட் டத்தை முன்னெடுத்துச் செல்வது என்று முடிவு செய்தனர். 1890 மே 1 ஆம் நாள், அனைத் துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட அறைகூவல் விடுக்கப்பட்டது. இந்த அறைகூவலே, மே முதல் நாள் சர்வதேச தொழிலாளர் தினமாக - மே தினமாக வருவதற்குக் காரணமாக அமைந்தது. 
அடுத்த ஆண்டிலிருந்து உலக நாடுகள் பலவற்றில் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது .!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகின் முதலாவது உத்தியோகபூர்வ ஒட்டக்கூடிய தபால்தலை 'பென்னி பிளாக்'
(Penny Black) உலகின் முதலாவது உத்தியோக பூர்வ ஒட்டக்கூடிய தபால்தலையாகும்.இது பெரிய பிரித்தானியாவால் 1840 மே 1 அன்று மே 6ம் திகதியிலிருந்து உபயோகிப்பதற்காக வெளியிடப்பட்டது.

No automatic alt text available.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வானொலிச் செய்தி வாசிப்பில் பல தசாப்த காலம் தனக்கெனத் தனியிடத்தை வகித்து, நேயர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருந்த செல்வி சற்சொரூபவதி நாதன், தனது 80வது வயதில் இன்று காலமானார்.

 
 
Image may contain: 1 person
Vannathamil
2 hrs · 

வானொலிச் செய்தி வாசிப்பில் பல தசாப்த காலம் தனக்கெனத் தனியிடத்தை வகித்து, நேயர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருந்த செல்வி சற்சொரூபவதி நாதன், தனது 80வது வயதில் இன்று காலமானார். 

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட செல்வி சற்சொரூபவதி நாதன், யாழ். இந்து மகளிர் கல்லூரியில் பாடசாலைக் கல்வியையும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் உயர்கல்வியைக் கற்று அறிவியல் பட்டதாரியானார். 

பின்னர் விஞ்ஞான ஆசிரியையாகவும், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஒலிபரப்புத் துறையில் பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ள அவர், 1965ல் இலங்கை வானொலியில் பகுதிநேர அறிவிப்பாளராக இணைந்து ஒலிபரப்பாளரானார் . 
பின்னர் 1969இல் நிரந்த அறிவிப்பாளரான அவர், ஈழத்திலும் உலகெங்கிலும் வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியிலும், தமிழகத் தமிழர்கள் மத்தியிலும் பெரிதும் மதிக்கப்படும் ஒலிபரப்பாளராகத் திகழ்ந்தார். 

அவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் செய்தி வாசிப்பாளராக, செய்தி ஆசிரியராக, தயாரிப்பாளராக, நிகழ்ச்சி கட்டுப்பாட்டாளராக 40 வருடங்களுக்கும் அதிகமாகப் பணியாற்றியுள்ளார். 

1989 தொடக்கம் 1991 வரை இலங்கை வானொலி ஆங்கில சேவையின் பதில் இயல்நாடக கட்டுப்பாட்டாளராகவும், பின்னர் செய்தி ஆசிரியராகவும் பணியாற்றியதோடு, கல்விச் சேவையின் பொறுப்பாளராகவும் கடமையாற்றினார். 

ஒலிபரப்புத்துறைக்கு அப்பால் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் முதல் பெண் துணைத்தலைவராகத் தெரிவான இவர் நீண்டகாலம் அப்பதவியில் பணியாற்றியுள்ளார். 

காலஞ்சென்ற செல்வி சற்சொரூபவதி நாதன், இந்துசமய கல்வி கலாசார அமைச்சின் தொடர்பியல் வித்தகர் பட்டம், வானொலி பவள விருது, ஜவஹர்லால் நேரு விருது போன்றவற்றையும் 1995 ஆம் ஆண்டில் சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான இலங்கை ஜனாதிபதி விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். 

2017. 02. 13ஆம் நாள் இடம்பெற்ற வானொலிசார் அரச விருது வழங்கும் விழாவில் சற்சொரூபவதி நாதன் அவர்களுக்கு “பிரதிபா பிரணாம - வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக ஒலிபரப்புத்துறையில் தடம்பதித்திருந்த சற்சொருபவதி நாதன் அவர்களின் மறைவிற்கு வண்ணத்தமிழ் வானொலி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றது. 

அம்மையாரது குரலும் புகழும் என்றும் 
நம்மத்தியில் நிலைத்திருக்கும்!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பசுமை நிறைந்த நினைவுகளே.......
பறந்து சென்றதே - ஒரு பறவை.

இலங்கை வானொலி வரலாற்றில் 'சொற்சொரூபவதியாய்' போற்றப்பட்ட சகோதரி, செல்வி.சற்சொரூபவதி நாதன் அவர்கள், இன்று (4/5/17) பிற்பகல் 2.45 அளவில் தன் இன்னுயிர் நீத்த செய்தி, நம் வானொலிக்குடும்பத்தில் ஒரு 'மூத்த' சகோதரியை இழந்த துயரினைத் தருகிறது. 
'யாழ் இந்து மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவியர் சங்கம்' அவருக்கு "சகலகலா வித்தகி" எனும் பட்டம் வழங்கிக் கௌரவித்தமைக்குப் பொருத்தமாக, வானொலித்துறையின் பல்வேறு அம்சங்களிலும் தன்னை ஈடுபடுத்தி மிளிர்ந்தவர். 
வானொலிக் கலைஞராக, அறிவிப்பாளராக,செய்தி வாசிப்பாளராக, செய்தி ஆசிரியராக, வானொலி எழுத்தாளராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, வானொலித்துறைக்கான 'பயிற்சிப் பட்டறைகள்' பலவற்றின் நெறியாளராக, பல்கலைக் கழகத்தில் 'ஊடகத்துறைக்கான' பகுதிநேர விரிவுரையாளராக, என அவரது பங்களிப்புகள் பரந்து விரிந்தவை. 
சிறிது காலத்திற்கு முன்.........
சென்னைப் பல்கலைக் கழகத்தில், 'ஊடகக் கற்கை நெறி' பயிலும் மாணவ மாணவியர் முன்னிலையில் உரையாற்ற வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்று அங்கு நான் சென்று, கேட்போர் கூடத்துக்குச் செல்லும் மாடிப்படிக்கட்டுகளில் கால்வைத்தபோது, மேல்தளத்துச் சுவரில் மாட்டியிருந்த மிகப்பெரிய படம் ஒன்று வரவேற்றது. அண்ணார்ந்து பார்த்தபோது, சென்னைப் பல்கலைக்கழகத்தின், முதலாவது 'பட்டதாரி' C.Y. தாமோதரம் பிள்ளை என, எங்கள் மண்ணின் மைந்தரது பெயர் பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்டு பெருமையால் நெஞ்சமும் நிமிர்ந்தது. கூடவே, இன்னும் யார் யாரெல்லாம் நம் மண்ணிலிருந்து இங்குவந்து கல்விகற்று பட்டம் பெற்றிருப்பார்கள்? என அறிய ஆவல் கொண்டு பார்த்தபொழுது, அவ்வரிசையில் எம் வானொலிக் குடும்பத்தின் மூத்த சகோதரி 'சற்சொரூபவதி நாதன்' என்ற பெயரும் இருக்கக் கண்டு இருமடங்குப் பெருமிதம் கொண்டேன்.
தன் 21 வது வயதிலேயே, 'ஜவஹர்லால் நேரு விருது' பெற்றவர் என்ற செய்தியும் அவர் பெருமையினைப் பறைசாற்றியது. 
நாடு திரும்பி, கொழும்பு 'பௌத்த மகளிர் கல்லூரியில்' விஞ்ஞான ஆசிரியையாகப் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் வானொலி கலைஞராக, பங்களிப்பினை வழங்கிவந்தவர், 1965 ம் ஆண்டிலே ஒரு அறிவிப்பாளராகத் தெரிவாகி நிரந்தரமாகவே வானொலியோடு தன் வாழ்வைப் பிணைத்துக்கொண்டார்.
அவர் அறிவிப்பாளராக இணைந்து இரண்டாண்டுகளுக்குப் பின்னர்தான், நாம் அறிவிப்பாளர்களாக இணைந்தோம். விடலைப்பருவத்தைத் தாண்டிய இளையவர்களான, எம்மைத், தம் வயதொத்தவராக மதித்து, நேசமுடன் பழகியது அவரது பெருந்தன்மை. அறிவிப்பாளரானாலும் வானொலிக்கலைஞராகவும் தன் பங்களிப்பினைத் தொடர்ந்து வழங்கிவந்த அவருடன், நம் வானொலி நாடகத் தந்தை திரு. 'சானா' அவர்களது நெறியாழ்கையில் இணைந்து நடித்த நாடகங்கள். திரு. ராஜசுந்தரம் அவர்களது தயாரிப்பில் பங்கெடுத்த 'உரைச்சித்திரங்கள் யாவும், இன்னும் பசுமையான நினைவுகளாக நிலைத்திருக்கின்றன.
தமிழ் வானொலி வரலாற்றில் முதல் பெண் அறிவிப்பாளரான, திருமதி. செந்திமணி மயில்வாகனன் அவர்களுக்குப் பின், 'செய்தி' வாசிப்பில் தனி முத்திரை பதித்தவர் சகோதரி சற்சொரூபவதியே என்றால், அது மிகையாகாது. அவரது ஆங்கிலப் புலமை, பின்னாளில் செய்தி ஆசிரியராகவும், எமது வானொலியிலும், ரூபவாஹினி தொலைக்காட்சியிலும், மிக நீண்டகாலம் பங்களிப்பினை வழங்கும் வாய்ப்பினை அவருக்கு உருவாக்கித் தந்தது. 
இளைப்பாறிய பின்னரும் ஊடகத்துறையோடு தன்னைப் பின்னிப் பிணைத்துக்கொண்டு வானொலி, தொலைகாட்சி எனத் தன் முதுமைக்கும் சவால் விட்டு வாழ்ந்துவந்தவர். கொழும்பு பல்கலைக் கழகத்திலும் அவ்வப்போது 'ஊடகக் கற்கை நெறி' பயிலும் மாணவருக்கு விரிவுரைகள் ஆற்றிவந்தவர். 
அதுமட்டுமன்றி 'கொழும்பு தமிழ்ச்சங்கத்தின்' துணைத்தலைவர் பதவியேற்ற முதல் பெண்மணி என்ற பெருமையும் அவரையே சாரும். 'பெண்ணியத்தின்' பெருமை பாடவும், மகளிர் மேம்பாட்டுக்காகவும் அயராது உழைத்தவர். சர்வதேச மட்டத்தில் வழங்கப்படும் 'உண்டா' விருதினை ஒலிபரப்புத்துறைக்காக முதலில் பெற்றவர் எனது ஆசான், திரு.எஸ்.கே. பரராஜசிங்கம் என்றால், அவரை அடுத்து 'உண்டா' விருதினைப் பெற்ற பெருமைக்குரியவர் சகோதரி சற்சொரூபவதியே. 
சிறந்த ஒலிபரப்பாளருக்கான 'ஜனாபதி விருதினையும்' பெற்றவர்.
"பிறப்பவர் எல்லோருமே என்றோ... ஓர்நாள் 
இறப்பதுவும் உறுதி" இது மாற்றவியலா விதி.
மூப்புடன் பிணியும் வாட்டிவைத்திட, தன் 80தாவது வயதில் இறப்பது என்பதை 'ஓர் பேரிழப்பு' என்ற வழக்கமான அனுதாபச் சொல்லோடு முற்றுப்புள்ளி வைத்து முடித்துவிடாமல், தமிழ் ஊடகத்துறைக்கு அவர் ஆற்றியுள்ள தொண்டினையும், தனது வழிகாட்டலில், 'விழுமியங்கள் பேணும் ஊடகவியலாளர்கள்' உருவாக அவர் ஆற்றிய சேவைகளையும் நினைவு கூர்ந்து, அவருக்கு நன்றி கூறுவதும், அவரது ஆத்மா, நற்பேறு அடைய, நம் இதயங்களால் பிரார்த்தனை செய்வதுமே நம் கடமை என உணர்வோம்.
அவரை இழந்து துயருறும் இரத்த உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
.

 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மே 5: சரித்திர மாவீரன் நெப்போலியன் நினைவு தினம் இன்று..

நெப்போலியன் இறந்தது எப்படி என்கிற கேள்விக்கு வரும் பதில்கள் இவை...

நெப்போலியன் போனபார்ட் எப்படி இறந்தார்?' - ஐரோப்பா பல்லாண்டுகளாக விடை தேடிக் கொண்டு இருக்கும் கேள்வி. ஏனெனில், மைனஸ் 26 டிகிரி குளிரில் குதிரைகளின் ரத்தத்தைக் குடித்து உயிர் வாழ்ந்தவர். தீவுச் சிறையில் இருந்து கடலை நீந்திக் கடந்த மாவீரன் நெப்போலியன்.அவர் தானாக நோய் வாய்ப்பட்டு இறந்தார் என்றால், எப்படி நம்புவது? 'தனிமைச் சிறையில் நெப்போலியனுக்கு என்ன நடந் தது?' என்பதை அறிய யாருக்கும் எந்த க்ளூவும் அப்போது கிடைக்கவில்லை.

1816-ம் வருடத்தில் இருந்து 1821-ம் ஆண்டில் அவர் இறக்கும் வரை உதிர்ந்த முடிகள் ஆய்வுக்குக் கிடைத்தன. அப்போதுதான் நெப்போலியனின் முடிகளில் ஆர்சனிக் அமிலம் கலந்திருந்தது முதல் க்ளூவாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 'ஆரோக் கியமான ஒரு மனிதரின் முடியில் சோதனையில் வெளிப்படையாகத் தெரியும் அளவுக்கு ஆர்சனிக் இருப்பது இல்லை. எனவே, நெப்போலியன் மரணத்துக்குக் காரணம் விஷமாக இருக்கலாம்' என்று கண்டுபிடித்தார்கள். 'விஷம் கலந்த காற்றை அவர் சுவாசித்ததாலோ, விஷம் கலந்தவற்றை உண்டதாலோ நெப்போலியன் மரணம் அடைந்திருக்கலாம்!' என்று லக்ஸம்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் வென்னிங் அறிவித்தார்.

பின்பு, நெப்போலியனின் அறை பற்றிய ஆய்வுகள் இரண்டு க்ளூக்களை அளித்தன. ஒன்று, அங்கு இருந்த ஓவியம். இரண்டாவது, அந்த அறையின் சுவரை அலங் கரித்த வால் பேப்பர்கள். இவை இரண்டிலுமே 'மெள்ளக் கொல்லும்' ஸ்லோ பாய்சன் பூசப்பட்டு இருந் தது. 'அந்த ஓவியத்தில் பாம்பின் விஷத்தை ஒரு வண்ணமாகப் பயன்படுத்தி இருந்தார்கள். அந்த ஓவியத்தின் அருகிலேயே இருந் ததால், விஷத்தைச் சுவாசித்துச் சுவாசித்து அவர் இறந்துவிட் டார்!' என்று ஒரு தரப்பு ஆய்வாளர் கள் சொன்னார்கள்.

'வால் பேப்பரை ஒட்டும் பசையில் விஷத்தைக் கலந்திருந்தார்கள். பசி தாங்க முடியாமல் நெப்போலியன் வால் பேப்பரைக் கிழித்துத் தின்றதால் இறந்தார்' என்று இன்னொரு தரப்பு அறிவித்தது. இன்னும் ஊர்ஜிதமான உண்மை வெளிவந்த பாடு இல்லை!

Image may contain: 1 person
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் (International Red Cross and Red Crescent Day) 

செஞ்சிலுவைச் சங்கத்தினை நிறுவியவரான ஹென்றி டியூனண்ட் (Henry Dunant) (இவரே முதலாவது நோபல் விருதைப் பெற்றவராவார்) அவர்களின் பிறந்த நாளான (மே 8, 1828) இந்நாள் 1948 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டது

Image may contain: text
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜீன் கென்றி டியூனண்ட்,செஞ்சிலுவைச் சங்கத்தின் தந்தை.

No automatic alt text available.
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Image may contain: one or more people, beard and closeup
 

தனிமை எவ்வளவு கொடுமையானது. அதுவும் முதுமையில் தனிமை ஒரு பேரிடர். அந்தத் தனிமையில் நோய்மையும் சேர்ந்து கொண்டால்!
அவருக்கு அறுபத்தைந்தும் அவர் மனைக்கு அறுபத்தாறும் வயதாகிறது. மூப்புக்கே உரிய நோய்கள் இருக்கிறதே! Alzheimer's- ஒருவகையான மறதி நோய்- அது அந்தம்மாவை தொற்றிக்கொள்கிறது. அப்போ அவருக்கு? அவருக்கும் இருக்கிறது.. புற்று நோய். வாய்ப்புற்று. கடந்த காலங்களில் அறுவைசிகிச்சை செய்தார்கள். கீமோவும்தான். தாடை என்புகள் தேயுமளவுக்கு சிகிச்சை செய்தார்கள். என்ன பயன்? வாழ்க்கை எவ்வளவு சுமையாகப் போயிற்று. போதாக்குறைக்கு அவர் மனைவியை வேறு அவர்தான் பார்த்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. ஒரு குழந்தையைப் போல. 

குழந்தைக்கு டைபர் மாற்றுவதைப் போல அவர் மனைவிக்கும் டைப்பர் மாற்ற வேண்டி இருக்கிறது. தினமும் அதைத்தான் அவர் செய்து கொண்டிருக்கிறார்.

இப்போதெல்லாம் அவரால் வண்டி ஓட்டக்கூட முடிவதில்லை. அவ்வளவு ஏன்! பேசக்கூட முடிவதில்லை. வைத்தியசாலைக்குப் போக வேண்டி இருந்தது. டெக்சி எடுத்துக்கொண்டார். போக வேண்டிய இடத்தை ஒருதுண்டு பேப்பரில் எழுதிக்காட்டினார். 

அவரது கடைசி விஜயத்தின் போதுதான் அதைச் சொன்னார்கள். அவருக்கு இன்னுமொரு சத்திரசிகிச்சை செய்ய வேண்டி இருக்கிறது. இடதுபக்க கன்னத்தையும் சற்றே நாக்கையும் சேர்த்தாற்போல.. 

அவர் வீடு திரும்பிய போது பெரிதாக ஆர்ப்பாட்டங்கள் இல்லை. எல்லாம் வழமை போலவே இருந்தது. மனைவின் டைப்பரை மாற்றிவிட்டார். ஒவனை ஆன் செய்து உணவுப் பொதியை உள்ளே வைத்து மூடிவிட்டார். மாலைச் செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தார். எல்லாம் வழமை போலவே இருந்தது. 

வழமை என்பது எப்போதும் வழமையாகவே இருப்பதில்லை. சமனிலை குலைந்து எல்லாம் கூடி அழுத்துகிற போது மனிதன் ஆழ்கடல் அமைதிபோல இருக்கிறான் என்பதால் உள்ளே கொதித்துக்கொண்டிருக்கிற கங்குல் அடங்கிற்று என்று பொருளில்லை. முடிவுகள் ஒரு நொடியில் தீர்மானிக்கப்பட்டாலும், அந்த ஒரு நொடி வெறும் ஒரு நொடியில் தீர்மானிக்கப்பட்டதில்லை. அது ஒரு கூட்டுத் திரட்சி. 

பெரியவர் உள்ளே சென்றார். வெளியே வருகிற போது அவரது கையில் ஒரு பிஸ்டல் இருந்தது. முகத்தில் சலனமில்லை. மனைவியைப் பார்க்கிறார். அவருக்குப் பதிலாக துவக்கு மனைவியின் வலது கன்னத்தை முத்தமிடுகிறது. 'டும்' 
இடதுபக்கமாக சரிந்து விழுந்து அந்த உடல். விடுதலைதான் கட்டுண்ட மனுடத்தின் இலக்கு. மரணம் ஒரு விடுதலை. 

இனியும் என்ன இருக்கிறது இந்த வாழ்வில்! 

பெரியவர் வசதியாக இருக்கையில் அமர்ந்து கொண்டார். துவக்கு வாய்வழி மூளையைக் குறிவைத்தது. 'டும்'.
ரத்தமும் மூளைச் சிதறல்களும் பின் சுவற்றை 'சதக்' என அறைந்தன. பெரியவருக்கு இனி இந்த வாழ்க்கை குறித்து எந்த வழக்குகளும் இருக்காது. அவருக்கு இந்த பூமியோ, பூமிக்கு அவரோ பாரமாக இருக்கப்போவதில்லை. விடுதலை, விடுதலை!

வெடித்த துவக்கு அக்கம் பக்கம் இருந்த யாரையும் சென்று சேரவில்லை. இப்போதெல்லாம் துவக்குச் சத்தம் யாரையும் கிளர்ச்சி அடையச் செய்வதில்லை. அனுகுண்டை வைத்து மிரட்டிக்கொண்டிருக்கிறோம், துவக்காவது மண்ணாக்கட்டியாவது. 

நாழிகள் பல கழிந்து ஒவனில் இருந்த உணவு கருகி ஏதோ ஒரு அபாயச் செய்தியை ஒருவரிடம் கொண்டு சேர்த்தது. கதவுகள் தள்ளித் திறக்கப்பட, உள்ளே நுழைந்த அவர், அந்தப் பூ மரணத்தை முதலில் காணும் பாக்கியம் பெற்றார். 

பொலிஸ் படை வந்தது. அவர்களது வழமையான கடமைகள் தொடங்கிற்று. முடிவொன்றுக்கு வர அவர்களுக்கு தேவையாக இருந்தது மூடப்பட்ட ஒரு பழைய சேமிப்புக் கணக்கும், வெறுமனே $1.14 பணம மீதியாய் இருந்த ஒரு வங்கிப் புத்தகமும்தான்.  
'தற்கொலை' 
எனப் பிரகடனப்படுத்தி காவல்துறை தனது கடமை நிறைவேற்றிற்று. 

அது ஒரு சமூகக் கொலை என்பது அவர்களும், இந்த உலகமும் அறியமாட்டார்கள். 

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. உங்களது மரணம் இந்தப் பரந்த பூமியில் நிகழ்ந்த இன்னுமொரு மரணம் மட்டுமே! 

மூன்று வாரங்கள் கடந்து போயிற்று. அந்த வீட்டிற்கு புதிதாக ஒரு இளஞ்சோடி குடிவந்திருந்தனர். ஒரு கம்பியூட்டர் இன்ஜினியரும், அவனது மனைவியும். 

அவர்கள் ஒன்றும் வாழ்வைக் கொண்டாட வந்தவர்களில்லை. அவர்களும் இன்னுமொரு ஆணும் பெண்ணும்தான்... 

குறிப்பு:

Bukowskiயின் hell is the lonely place கவிதையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது இது. தகுதியான யாராவது இதை ஒரு குறுப்படமாக எடுப்பீர்கள் என்றால் நான் திரைக்கதை எழுதித் தருகிறேன். 

இந்தக் கவிதை வருசங்களாக ஒரு குறும்படமாக என்னில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு shot by shot ஆக, frame by frame ஆக. 

Amor என்கிற பிரன்ச்சுப் படம் இதே போல ஒரு கதை அமைப்புக் கொண்டதே. 

இப்போது Bukowskiயின் அந்தக் கவிதையை வாசித்து விடுங்கள். 

#Hell_is_a_lonely_place

he was 65, his wife was 66, had 
Alzheimer's disease. 

he had cancer of the 
mouth. 
there were 
operations, radiation 
treatments 
which decayed the bones in his 
jaw 
which then had to be 
wired. 

daily he put his wife in 
rubber diapers 
like a 
baby. 

unable to drive in his 
condition 
he had to take a taxi to 
the medical 
center, 
had difficulty speaking, 
had to 
write the directions 
down. 

on his last visit 
they informed him 
there would be another 
operation: a bit more 
left 
cheek and a bit more 
tongue. 

when he returned 
he changed his wife's 
diapers 
put on the tv 
dinners, watched the 
evening news 
then went to the bedroom, got the 
gun, put it to her 
temple, fired. 

she fell to the 
left, he sat upon the 
couch 
put the gun into his 
mouth, pulled the 
trigger. 

the shots didn't arouse 
the neighbors. 

later 
the burning tv dinners 
did. 

somebody arrived, pushed 
the door open, saw 
it. 

soon 
the police arrived and 
went through their 
routine, found 
some items: 

a closed savings 
account and 
a checkbook with a 
balance of 
$1.14 
suicide, they 
deduced. 

in three weeks 
there were two 
new tenants: 
a computer engineer 
named 
Ross 
and his wife 
Anatana 
who studied 
ballet. 

they looked like another 
upwardly mobile 
pair.

படித்ததிலிருந்து....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகத்தில் வாழும் அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்.

Image may contain: flower
Image may contain: one or more people

14.05.2017

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.