Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
377687_10152123397280198_1232197970_n.jp
 
 

நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்

 

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செலவத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

 

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்

 

1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

 

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்

 

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற்கொள்ளுங்கள்

 

கவனிக்க ஏழு விஷயங்கள்

 

1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை

  • Replies 3.9k
  • Views 330.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

The 2014 Global AgeWatch Index

Global Index Ranks the World based on Quality of Life for the Over-60s.

*Sri Lanka - 43

 

 

10462400_818454841521743_657822245952732

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரே ஒரு தமிழ் பல் வைத்தியரிடம்தான் இதுவரையில் போயிருக்கிறேன். அதுவும் இங்கு வந்த புதிதில். அதன்பிறகு வேறு ஆட்களிடம்தான் போவது.

புலம் பெயர்ந்து வந்த பல் வைத்தியர்கள்/ வைத்தியர்களிடம் ஒரு இயந்திரத்தன்மையை கண்டுள்ளேன். இது எனது அனுபவம் மட்டுமே..

 

கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி இசையண்ணா...அதிகமான புலம் பெயர்ந்து வந்த வைத்தியர்கள்  பணத்தில் மட்டுமே கவனமாக இருக்கிறார்கள் என்பதற்காகவே எனது அனுபவத்தை பதிந்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1013_499831236717363_1103112027_n.jpg?oh

 

 

malathi_banner.png

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10348603_660999267331523_573249069945987

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் சாகும் போதும் தமிழ் படித்து சாகவேண்டும்..
என் சாம்பலும் தமிழ் மணந்து வேகவேண்டும்.கவிஞர் கண்ணதாசன்


 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கற்கள் சில மனிதர்களின் உள்ளங்களை விடவும் மென்மையானவை.

 

10003346_492417347553720_376283375_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி,நீங்கள் பதிவிடும் வேகத்திற்கு வாசகரால் பின் தொடர்வது கஷ்டமாக இருக்கும்.கால இடைவெளி விட்டு பதிந்தால் நன்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1229937_640018362698649_1114881145_n.jpg

 

மண்ணில் வரைய பட்டாலும்

மண்ணில் புதைக்க பட்ட பின்பும்

சில பேர் மதிக்கபடுகிரார்கள்

"""""!!!உதாரணத்தில் ஓன்று அன்னை தெரஸா

"""""""""கரு உறாமல்""""""..........

""""""""""கருணை உற்றவர் """""""....

 

1655896_481959008613785_7283057624800867

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

580773_342412772512601_1316459626_n.jpg?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காரியங்களைச் செய்ய ஒரு போதும் பயப்படாதீர்கள்!

தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!!-நெப்போலியன் கில்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று அனைத்துலக வன்முறையற்ற நாள்..

 

வன்முறைகளுக்கு பஞ்சம் அற்ற நாட்களாகவே காலம் ஓடிக் கொண்டு இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எளிமையின் மறு உருவம்,மதிய உணவு கொடுத்து ஏழைகளை நேசித்த மாமனிதர் முன்னாள் முதல்வர் காமராஜரின் நினைவு தினம் இன்று...

 

10649975_469430599866626_600669256919402

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காமராஜர் பற்றி படித்ததிலிருந்து.....

 

 

இது கட்டுக் கதையல்ல.
கண்ணீரால் நிறைந்த நிஜம்.

அந்தக் காலம் இப்படியும் இருந்திருக்கிறது
 என்பதினை படிக்க படிக்க
உறக்கமின்றி தவித்தேன்...

“அப்போது காமராஜர் முதல்வர். பழைய
சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர்
கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற
உறுப்பினர்கள்கேட்பதை வாங்கிவந்து தருவார்.

முதல்தளத்தில் .., முன்பகுதியிலேயே இருக்கும்
மூக்கையா தேவர் அறையிலேயே இருப்பார்.

ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக
வெளியில போறன்
.

.
குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள
இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -
ருபாயை கொடுத்தார் மூக்கையா தேவர்.
சொன்னபடியே அவர்
ரெடியாகி காத்திருந்தார்.

ரொம்ப நேரம் ஓடியது. தலையில்
சுமையுடன் தட்டுத்தடுமாறி வந்தார்
மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா.

நான்அவசரமா வெளியில
போகணும்னு காத்துக்கிட்டு இருக்கேன்.
இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார்
மூக்கையா தேவர். மண்ணாங்கட்டிக்க
ு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க
ஆஸ்ட்டல்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க.

மவுண்ட் ரோடெல்லாம் போய்
அலைஞ்சு 100 ரூபாய்க்கும்
இட்லி வாங்குறது லேசுபட்ட
காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார்.

அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி.
அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி....

அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில்
ஒருநாள் இடி விழுந்தது.

ஒரு அரசாணயை வெளியிட்டிருந்த
து அரசு..அந்த உத்தரவை படித்துக்காட்டச
்சொன்னார்..வீட்டிலுள்ளவர்களை..அதனைக்
கேட்டதும் அழுது புரண்டு கதறினார்.

’அரசாங்க உத்தியோகத்தில் எழுதப்படிக்கத்
தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில்
இருக்கக் கூடாது. பணியில்
இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர்
போட்ட உத்தரவுதான் அந்தக்கடிதம்.
இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற
உறுப்பினர் விடுதிக்கு வந்தார்.

முக்கையா தேவரிடம் தரையில்
விழுந்து கதறி அழுகிறார்.
என்னவென்று கேட்கிறார்.

’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என்
குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு
வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க
ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார்.
அவரும் ஏதாவது சமாதானம்
சொல்லணுமே என்று ’முதல்வர்
ஆபிசுக்கு போன் போடுடா.

கேட்டுடலாம்’
என்றார். அப்போது எல்லாம் நேரடியாக
தொலைபேசும் வசதி இல்லை.

ஆப்பரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க
வேண்டும். முதல்வர் அலுவலகத்தில்
யாராவது உதவியாளர் எடுப்பார்கள்.

மண்ணாங்கட்டி புக்செய்த நேரம்
உடனே தொடர்பு கிடைத்தது.
மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள்
உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார்.
அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன்
மண்ணாங்கட்டி பேசுறங்க
ஐயா என்றபடியே அருகில் இருந்த
மூக்கையா தேவரைப் பார்க்கிறார்.

அவருக்கு முதல்வர் அலுவலகத்தில்
இருந்து யாராவது உதவியாளர்கள்தான்
டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற
நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க
எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான்
பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா”
என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம்
அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க
தெரியாதவங்க எல்லாம்
முதல்வரா இருக்கிறப்போ நான்
பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர்
ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார்
மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை....

அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-
பேர் அங்கே வந்துவிட்டார்கள்.

முதல்வருக்கு போன் செய்தது யார்?
என்றார்கள். நான்தான்
ஐயா என்று முன்னே வருகிறார்
மண்ணாங்கட்டி. முதல்வர் உங்களைக்
கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிற
ார். உடனே புறப்படுங்கள்
என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம்
பேசியிருப்பது முதல்வரிடம் என புரிகிறது.
மூக்கையா தேவருக்கும் பதட்டம்.

மண்ணாங்கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’
என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன்.
நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார்.
கோட்டையில் உள்ள முதல்வர்
காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.
முதரல்வரின் அறையில் உள்ள சோஃபாவில்,
கன்னத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த
முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர்.
கதவு திறக்கப்படுகிறது.

மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள்
சற்று ஒதுங்கி கதவோரம்
நின்று கொண்டார்கள். நீங்கதான்
மண்ணாங்கட்டியா...என்கிறார். ஆமாங்க ஐயா.
நான்தெரியாம பேசிட்டேன்.

என்னை மன்னிச்சுடுங்க
ஐயா என்றபடியே கீழே விழுந்தார்.

அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது.

அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க
வைக்கிறார்கள். அவரை வா...வாண்னேன்.

வந்து பக்கதில உட்காருங்கன்னேன்
என்றழைக்கிறார்.

மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர்
முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில்
சென்று உட்காருகிறார்.

மண்ணாங்கட்டியை முதுகில்
தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த
முதல்வர் காமராஜ்,
பட்டென்று கையெடுத்து கும்பிட்டு ‘நான்
தப்பு பண்ணீட்டன் தெரியாம செய்திட்டன்.

மன்னிச்சுடு. அந்த தவறை நீதான்
புரியவைச்சே...ரெண்டு நாளா உங்கவீட்ல
சோறுதண்ணியில்லியாமே.

சமைக்கலயாமே....
உங்களுக்கு ரெண்டு பொம்பள
புள்ளைங்க...எல்லாத்தையும் இப்பதான்
தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய
தப்பு செய்திருக்கேன்.. நான்
அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கக்கூ
டாது. ‘இனிமே புதிதாக
வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க
தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க
வேண்டும். நான் செய்தது
தவறுதான் என்று தட்டிக்கொடுத்து
ஆதரவு சொல்ல
மண்ணாங்கட்டி கதறி அழுகிறார்.

காமராஜருக்கும் பேச்சு இல்லை...

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது.
காமராஜர் கையொப்பமிடுகிறார்.
மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை.
அதிகாரிகளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு
போங்க. வேலை கொடுத்தாச்சு.
இனி கவலைப்படாதீங்கன்னு அவரோட
மனைவி, குழந்தைங்ககிட்ட
சொல்லுங்க’ன்னு அதிகார குரலில்
உத்தரவிடுகிறார். பிறகென்ன
நினைத்தாரோ சற்று தயங்கி ’போகிறபோது வெறும்
கையோட போகாதீங்க. ஓட்டல்ல
எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய்க்
கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள்
சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என
கண்டிப்போடு கூறுகிறார் அந்த
அதிகாரிகளிடம்.

மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி
கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற,
முதல்வர் காமராஜரும்
எழுந்து கையெடுத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.
.
ஒரு ஏழையின் கண்ணீர்
வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும்.
ஆமாம் காமராஜர் ஏழையாகவே,
எழைகளுக்காகவே இருந்தார்....

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாயினி,நீங்கள் பதிவிடும் வேகத்திற்கு வாசகரால் பின் தொடர்வது கஷ்டமாக இருக்கும்.கால இடைவெளி விட்டு பதிந்தால் நன்று.

 

ம்ம்ம்..கவனத்தில் எடுக்கிறன் நந்தண்ணா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மனிதன் ஏன்?
********************
அன்பிற்கு அன்றில் பறவைகள்--

நன்றிக்கு நல்ல நாய்கள்--

கடின உழைப்புக்குக் காளைகள்--
 
மடியிலா மாட்சிக்கு மான்கள்--
 
பிடித்த பிடிக்குக் குரங்குகள்--
 
எடுப்பான வேகத்திற்குக் குதிரைகள்--
 
பொங்கும் வீரத்திற்குச் சிங்கங்கள்--
 
எங்கும் நன்நடைக்கு யானைகள்--
 
இனிய பேச்சுக்குக் கிளிகள்--
 
இனிஎன்றும் ஒற்றுமை வேண்டுமென
சீராகக் காட்டும் காக்கைகள்--
 
கூரிய நோக்கிற்குக் கழுகுகள்--
 
வன்மண்ணை மென்மண் ஆக்கும்
மண்புழுக்கள்;
 
சேர்த்து வைத்துத்
தேன்கொடுக் கும்நல் தேனீக்கள்--
 
நன்மை மகரந்தச் சேர்க்கைக்கு
வண்டினங்கள்;
 
வண்ணப் பூச்சிகள்--
பசித்தோர்க்குப் பற்பல பழமரங்கள்
 
நோய்கள் நீக்கும் மூலிகைகள்--
 
படிமீது இப்படியும், அப்படியும்
பலபடி உயிர்களைப் படைத்தவன்,
 
பாவ மனிதனையும் ஏன்தான்
படைத்து வைத்தானோ.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பான காலை வணக்கங்கள்...அனைவருக்கும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்!

 

171353_188745697825920_1206945_o.jpg

 

 

10694273_819411248092769_202127247895913

 

உலகில் மிகப்பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியா, ஐக்கிய அமெரிக்காவுக்கு அன்பளிப்புச் செய்த "கல்வித் தெய்வம்" சரஸ்வதியின் சிலை….!

இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவின் ஒரு அங்கமாக இந்த சரஸ்வதி சிலை விளங்குகின்றது.

16அடி உயரமான இந்த சரஸ்வதி சிலையானது ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டனில், அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான வெள்ளைமாளிகைக்கு அண்மையில் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

விஜயதசமி திருநாள் வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்ததிலிருந்து..........யானைகள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை ,,

474531_462263917185264_2062337702_o.jpg

 

 

 

 

உலகில் வாழும் உயிரினங்களில் புத்திகூர்மையும் பேராற்றலும் வலிமையையும் கொண்ட விலங்கு யானை .யானை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது அதன் தும்பிக்கை .நாம் நம்பிக்கை வைத்து செய்யதொடங்கும் எந்த காரியத்துக்கும் முதல் தும்பிகையான் விநாயகனை வணங்கி செய்தால் இனிதே நிறைவேறும் என்பது நம் முன்னோர்கள் கூற்று .

மனிதர்களின் மதிப்புக்கு உரிய விலங்கான யானை .மனிதனுக்கு அன்றில் இருந்து இன்றுவரை பல்வேறு வழிகளில் உதவியாய் இருந்து இருக்கின்றது .போர்காலங்களிலும் சரி .பாரமான பொருட்களை இடம் நகர்த்துவதிலும் சரி பல வழிகளில் உதவி இருக்கின்றது .இன்றைய உலகம் பார்த்து வியந்து நிற்கும் புராதன கட்டடக்கலைக்கு தேவையான பொருட்களை நகர்த்துவதற்கு யானையே பெரிதும் உதவி இருக்கின்றது .பல்வேறு காலங்களின் பல்வேறு இடங்களில் கண்டு எடுக்கப்பட்ட புதைபொருள் ஆதார சான்றுகளை வைத்து பார்க்கும் பொழுது .உலகில் கடுமையான குளிர்பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் 600 மேற்பட்ட வகையான யானைகள் வாழ்த்து இருபதாக ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள் ஆனால் இவற்றில் இன்று இருப்பது இரண்டே இரண்டு வகை தான் என்பது வருந்த தக்க செய்தி .1 .ஆபிரிக்க யானை 2 ஆசிய யானை இவை இரண்டுக்கும் பல்வேறு வித்தியாசமான அம்சங்கள் உண்டு .,,,,

 

ஆப்பிரிக்க யானை 4 மீட்டர் நீளம் வரை உயரமும் சுமார் 7 டன் வரை எடையும் கொண்டு விளங்குகின்றது. ஆசிய யானையைப் பொருத்த வரையில் அளவில் ஆப்பிரிக்க யானையைக் காட்டிலும் உயரத்திலும் எடையிலும் குறைவானதாகும். அதிக பட்சமாக 5 டன் எடை வரை இவை வளரக்கூடியன. ஆப்பிரிக்க யானையின் காது அதன் தோல்புறத்தைக் முழுதும் மறைக்கும் முகமாக அமைந்துள்ளது. இவற்றின் காது 1.5 மீட்டர் நீளமும் 1.2மீட்டர் அகளமும் உடையது. ஆசிய யானையின் காது அமைப்பு தோல் புறத்தை காட்டிலும் தாழ்ந்து அளவில் சிறியதாகவும் அமைந்துள்ளன. ஆப்பிரிக்க யானையின் ஆண் பெண் இரண்டிற்கும் தந்தம் வளர்ச்சியடைகின்றது. ஆசிய யானை வகைகளில் ஆண் யானைகளுக்கு மாத்திரமே தந்தம் வளர்ச்சியடைகின்றன. பெண் யானைகளுக்கு வளர்ச்சியே இல்லை என்று சொல்லுமளவிற்கு மிக சிறிய அளவிற்கே வளர்ச்சியடைகின்றது. ஆப்பிரிக்க யானையின் தும்பிக்கையின் முனையில் இரு உதடைப் போன்ற பற்றி பிடிக்கும் தசைப் பகுதியும் ஆசிய யானையின் தும்பிக்கை முனை ஒரு பற்றிப் பிடிக்கும் தசைப் பகுதியும் அமையப் பெற்றுள்ளன. ஆசிய யானையின் கால்களின் விரல் நகம் முன்காலில் 5 நகங்களும் பின்கால்களில் 4 நகங்களும், ஆப்பிரிக்க யானைகள் முன் கால்களில் 4 அல்லது 5 நகங்களும், பின்புறக் கால்களில் மூன்று நகங்களும் இருக்கின்றது . பொதுவாக யானைகள் வெளிர் சாம்பல் நிறத்தை உடையவையாக இருப்பினும் இவைகள் குளம் மற்றும் குட்டைகளின் சேற்று சகதிகளில் புரண்டெழுவதனால் சேற்றின் நிறத்திற்கொப்ப அடர் சாம்பல், மற்றும் பழுப்பு நிறங்களிலும் காணப்படுகின்றது.

 

சாதாரணமாக மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகம் செல்லக்கூடிய இவைகள் அவசியம் ஏற்படும் போது 40 கிலோ மீட்டர் வேகம் வரைச் செல்லும் ஆற்றல் பெற்றவை. பிரம்மாண்டமான உடல் அளவை பெற்றுள்ள யானைகள் புற் தரையில் மாத்திரமல்லாது கடினமானத் தரையிலும் கூட சப்தமின்றி நடந்து செல்லக் கூடியவை. யானையின் கால்களின் அடிப்புறத்தில் வளரும் மென்னையான சதைப்பகுதி யானை நடக்கும் போது சத்தமின்றி நடக்கவும், அதன் உடலின் எடையை தாங்கி நடப்பதன் மூலம் ஏற்படும் அதிகபடியான அதிர்சியை குறைத்து அதன் உடலைப் பாதுகாக்கும் அம்சமாகவும் விளங்கி வருகின்றது. யானைகள் இவ்வளவு வேகமாக செல்லக் கூடியதாக இருப்பினும் இவைகளினால் வழியில் குறுக்கிடும் சிறிய பள்ளங்களைக் கூட தாவிப் பாய்ந்துச் செல்ல முடிவதில்லை. இருப்பினும் வழியில் குறுக்கிடும் ஏரி மற்றும் ஆறு போன்ற நீர் நிலைகளை எந்த விதமான களைப்புமின்றி எளிதாக நீந்தி கடந்து செல்லும் ஆற்றல் பெற்றுள்ளன. இவைகளின் முழு உடலும் தண்ணீரில் மூழ்கியப் பின்னரும் கூட அவற்றின் தும்பிக்கையை தண்ணீருக்கு மேலே உயர்த்தி சுவாசத்தை பெற்றுக் கொள்வதன் மூலம் மிக நீண்ட தூரம் இவைகளினால் களைப்பின்றி தண்ணீரில் நீந்திச் செல்ல முடிகின்றது.

உலகில் வாழக்கூடிய உயிரினங்களிலேயே மிக உறுதியான நீண்ட பற்கள் யானையின் தந்தம் ஆகும். யானையின் தந்தம் மிக நீளமான அதன் மேற்புற முன் வரிசைப் பற்களாகும். வருடத்திற்கு 17 செ.மீ வரை வளரக்கூடிய இவைகள் யானை மரணிக்கும் காலம் வரை தொடந்து வளர்ச்சியடைகின்றது. அதிகபட்சமாக இரண்டரை மீட்டர் நீளமும் 45 கிலோ எடை வரை வளர்ச்சியடைகின்றது. இதைக் கொண்டு பூமியைத் தோண்டி கிழங்கு வகைகளை உண்பதற்கும், , மற்ற விலங்குகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், இனப் பெருக்கத்தின் போது ஏற்படும் போட்டியில் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்ளவும் பயன்படுத்துகின்றன. இந்த தந்தம் தான் யானையை வேட்டையாடி அழிக்க முக்கியக் காரணமாக இருப்பவை. இவற்றின் மூலம் செய்யப்படும் கைவினைப் பொருட்கள் மிகவும் மதிப்பு வாய்ந்ததாக இருப்பதனால் இதற்காகவே இவை சட்ட விரோதமாக வேட்டையாடப் படுகின்றன. இவற்றைத் தவிர்த்து மேலும் யானைக்கு நான்கு பற்கள் அமைந்துள்ளன. நான்கு பற்களும் கடைவாய்ப் பற்களாகும். இவற்றின் முதல் வரி பற்கள் விழுந்தவுடம் பின்புற பற்கள் இரண்டும் முன் வரிசைக்கு இடம் பெயருகின்றன. பின் புறம் புதிய பற்கள் இரண்டு முளைக்கின்றன. இது போல் யானையின் வாழ்நாளில் 6 முறை பற்கள் விழுந்து முளைக்கின்றன. 40 முதல் 60 வயதிற்க்குள் கடைசிக் கட்ட பற்கள் விழுந்து விடுவதனால் உணவை சரிவர மென்று உண்ண முடியாத நிலை ஏற்படுவதால் செருமானக் கோளாறுகளினால் இறக்கும் நிலையும் யானைகள் சிலவற்றிற்கு ஏற்படுகின்றது.

 

மனிதர்களுக்கு கைகள் பயன்படுவதை விட யானைக்கு தும்பிக்கை பலவழிகளில் பயன்படுகின்றது .யானையின் மூக்குத் துவாரங்கள் நீண்ட வளைந்துக் கொடுக்கக் கூடிய தசைப் பிணைப்புக்களினால் இணைந்த இந்த அமைப்பையே தும்பிக்கை என்று அழைக்கின்றோம்.யானையின் தும்பிக்கை ஏறக்குறைய 1,50,000 தசைப் பிணைப்புக்களினால் இணைக்கப் பட்டுள்ளதாகக் கணக்கிட்டுள்ளார்கள். முக்கியமாக மனிதனின் கைகள் அவனுக்கு எந்த அளவிற்கு உபயோகப் படுகின்றனவோ அது போல அவற்றின் தும்பிக்கை அமைப்பு அவற்றிற்கு பல வகையிலும் உதவியாக இருக்கின்றன. சுவாசிப்பதற்கும், தண்ணீரை உறிஞ்சி அவற்றை வாயில் பீய்ச்சிக் குடிப்பதற்கும், தண்ணீரை உறிஞ்சி உடல் முழவதும் செலுத்தி உடல் வெப்ப நிலையை தணித்துக் கொள்வதற்கும், சிறிய புற் பூண்டு வகைகள் முதல் பெரிய மரக் கிளைகள் வரை உடைத்து உண்பதற்கும், தண்ணீருக்கடியில் பயணிக்கும் போது சுவாசத்திற்கும் மேலும் இது போன்று பல உபயோகங்கள் தும்பிகையால் யானைகளுக்கு உண்டு. இந்த தும்பிக்கை அமைப்புத்தான் மனிதர்களினால் பாரம் தூக்கும் வேலைக்கு இவைகளைப் பயன்படுத்தக் காரணமாகும். மிக லாவகமாக தும்பிக்கையைக் கொண்டு பலுவானவற்றை இவைகளினால் தூக்க முடிகின்றது.

யானைகள் உடல் வெப்பம் அதிகம் ஆகும் போதெல்லாம் காதை அசைத்து உடல் வெப்பத்தை வெளியேற்றும் .யானையின் புத்திக் கூர்மையை அளவிட்டு கணக்கிடுவதில் திட்டவட்டமான வரையறையை அறிவியலார்கள் இதுவரை அடையாததால் இவற்றின் புத்திக் கூர்மையை அளவிடும் விஷயத்திலும் திட்டவட்டமான முடிவுக்கு இதுவரை வர முடியவில்லை. இருப்பினும் இவை புத்திசாலி விலங்கினம் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. மனிதர்களின் மூளையைக் காட்டிலும் மிகப் பெரிய மூளை யானையுடையதாகும். மூளையின் அளவிற்கும் அறிவுத் திறனுக்கும் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகளினால் கருதப்படுகின்றது. அதிகப்படியாக இவற்றின் மூளையில் காணப்படும் செரிப்ரல் கார்டக்ஸ் என்னும் இரசாயணப் பொருள் அறிவுத்திறனை அளவிடும் பொருளாக கணித்திருக்கின்றார்கள். மேலும் இவற்றின் புத்திக் கூர்மையான செயல் பாடுகளினாலும் இதன் புரிந்துக் கொள்ளும் திறனின் அடிப்படையினால்தான் சர்க்கஸ் போன்ற கேளிக்கைகளில் இவற்றைக் கொண்டு வியக்கத் தக்க செயல்பாடுகளை செய்ய முடிகின்றது.

 

யானையின் மற்றுமொரு முக்கிய வித்தியாசமான அம்சம் தொலைத்தொடர்பு கொள்ளும் முறையாகும். இவைகள் தங்கள் தும்பிக்கையைக் கொண்டு ஒன்றை ஒன்று தொடுவதன் மூலமும் சத்தத்தை வெளிப்படுத்துவதன் மூலமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்கின்கின்றன. 1980 ம் ஆண்டுதான் முதன் முதலாக யானையின் தும்பிக்கையினால் மனிதர்களின் செவிப்புலனினால் கேட்க முடியாத குறைந்த அலை வரிசையைக் கொண்ட சப்தத்தை எழுப்புவதைக் கண்டறிந்தார்கள். இதைக் கொண்டு தொலைத்தொடர்பு கொள்வதாகவும் அறியப்பட்டுள்ளது.

 

யானைகள் சராசரியாக 60 வருடம் வாழக்கூடியது. பூமியில் வாழும் உயிரினங்களிலேயே அதிக கர்ப்ப காலம் யானையுடையதாகும். 20 முதல் 22 மாத கர்ப்ப காலத்தில் ஒருக் குட்டியை ஈன்றெடுக்கின்றன. 4 ஆண்டு இடைவெளியில் தனது 60 ஆண்டுகள் வரை குட்டிகளை போடும் தன்மையைப் பெற்றுள்ளன. குட்டிப் பிறக்கும் போது 120 கிலோ எடையும் ஒரு மீட்டர் உயரமும் உடையதாக இருக்கும். பிறந்த ஓரிரு மணி நேரத்தில் எழுந்து தன் தாயின் முன் கால்களுக்கு இடையே அமைந்த பால் சுரப்பிகளில் பால் குடிக்க ஆரம்பிக்கின்றது. யானையின் பால் சுரப்பி இரண்டு காம்புகளை உடையதாகும்.

 

தங்கள் உணவிற்காக நீண்ட தூரம் பயணிக்கும் தரைவாழ் உயிரினம் யானை ஆகும். தரையில் வாழக்கூடிய விலங்கினங்களில் மிகப் பெரியதும் நன்கு வளர்ந்த ஒரு யானைக்கு இயற்கையில் மனிதனைத் தவிர வேறு எதிரி இல்லை என்ற சொல்லுமளவிற்கு பலம் வாய்ந்ததும். 60 வருட கால நீண்ட வாழ்நாளைக் கொண்டதும், நல்ல புத்திக் கூர்மையும் உடைய இந்த பிரம்மாண்டமான உயிரினம் ஒரு தாவர உண்ணியாகும். இந்த உயிரினம் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை உண்டு கழிப்பதிலேயே செலவழிக்கின்றன. 80 வகையான வித்தியாசமான தாவரங்களிலிருந்து இலை, பட்டை, வேர்கள், கிழங்கு வகைகள், காய், கனி, மொட்டு, போன்றவற்றை தங்களின் உணவாக உட்கொள்கின்றன. நன்கு வளர்ந்த ஒரு யானை ஒரு நாளைக்கு 100 முதல் 300 கிலோ வரை உணவை உட்கொள்கின்றன. எனவே இவைகளுக்கு குடிக்க தண்ணீரும் அதிகம் தேவைப்படுகின்றது. ஓரு நாளைக்கு 200 லிட்டர் தண்ணீர் வரை குடிக்கின்றன.

 

யானைகள் புதியதாக பிறந்த குட்டிகளுக்காக மகிழ்ச்சி அடைகின்றன. மேலும் இறந்த தங்கள் குழுவை சேர்ந்த யானைகளுக்காக கண்ணீர் விட்டும் அழுகின்றன.யானையின் உணர்ச்சி மயமான வாழ்க்கையைப் பற்றி எழுத சில பக்கங்கள் அவசியமாகும். யானைகள் குழுக்களாக இணைந்து வாழக்கூடியது என்று முன்பு கண்டோம். இவற்றில் உறவு முறைகளுடன் அமைந்த 2 முதல் 29 வயது வரை பலத்தரப்பட்ட வயதுடைய யானைகள் வரை இருக்கும். இவை இறுதி வரை கட்டுக் கோப்புடன் வாழ்கின்றன. எண்ணிக்கை அதிகமாகி விட்டாலோ அதிலிருந்து சில பிரிந்து சென்றுப் புதியக் குழுக்களை அமைத்துக் கொள்கின்றன. ஒரு குழுக்களைச் சேர்ந்த யானைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ளும் விதமாக 50 மீட்டர் இடைவெளியிலேயே தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுகின்றன. ஒரு குழுவிற்கு அந்த குழுவில் வயது முதிர்ந்த பெண் யானை வழிக்காட்டியாகவும் தலைவியாகவும் செயல்படுகின்றது. அது இறந்த பின்னர் அடுத்த வயதில் முதிர்ந்த பெண் யானை தலைமையை அடைகின்றது.

 

ஆராய்சியாளர்கள் சமீப காலங்களில் யானையின் நடவடிக்கைகளை ஆராய்ந்து சில அதிசயமான விசயங்களைக் கண்டறிந்தனர். யானைகள் புதிதாக பிறந்த குட்டிகளுக்காக தங்கள் சந்தோசத்தையும், இறந்த தங்கள் குடும்பத்தை சேர்ந்தவற்றிற்காக கண்ணீர் விட்டு அழுவதையும் கண்டறிந்துள்ளனர். மேலும் சில நாட்களோ அல்லது சில மணி நேரங்களோ பிரிந்து திரும்பிய தங்கள் கூட்டத்தைச் சேர்ந்த யானையின் வருகைக்காக விரிவான முறையிலே வரவேற்பை அளிக்கின்றன. வரவேற்கும் விதமாக வித்தியாசமான சத்தத்துடனும் ஒன்றை ஒன்று உரசியும், தலையோடு தலையை இடித்தும், முன் பின்னுமாக நடந்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன.

25-ஆம் வயதில் இவற்றைக் கொண்டு தொழிலில் பயன்படுத்தி பொருளாதாரத்தை ஈட்டும் யானையின் மேய்பாளனாகிய பாகன் தன் வாழ்நாள் முழுதும் அதனுடனே கழிக்கின்றான். யானையின் வயது ஏற ஏற பாகனுடைய வயதும் ஏறிக் கொண்டுச் செல்வதனால் தனது 50 வது வயதில் ஓய்வு பெறும் வயதை அடையும் போது யானையும் தன் வலுவை இழந்து ஓய்வு பெறும் நிலையை எட்டிவிடுகின்றது. இந்நிலையில் இவ்விருவருக்குமிடையே ஏற்படும் அன்யோன்யமான உறவு பிரிக்க முடியாத வார்த்தைகளினால் விளக்க இயலாத ஒரு உறவாக மாறிவிடுகின்றது. இருவருக்குள் ஆழமான அன்பு ஏற்பட்டு விடுகின்றது. பாகனின் சொல்லுக்கு யானை உடன் கட்டுப்பட்டு நடப்பதையும் மற்றவர்களின் கூப்பாட்டை ஒரு பொருட்டாகவே கருதாமல் இருப்பதையும் கொண்டு நாம் இதை விளங்கிக்கொள்ள முடியும்.

 

1900 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் போது 10 மில்லியன் வரை இருந்த யானையின் எண்ணிக்கை 1979ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் போது 1.3 மில்லியன் எண்ணிக்கை மாத்திரமே இருந்ததாக கணக்கிட்டு உள்ளார்கள். மிக மிக வேகமாக குறைந்து வரும் இந்த சதவிகிதத்தினால் விரைவில் இந்த இனம் முற்றிலும் அழிந்து விடுமோ என்று அஞ்சப்படுகின்றது. பல நாடுகளில் மிருக காட்சி சாலைகளில் மாத்திரமே யானையை காணக் கூடிய நிலை இருக்கின்றது. இதை காக்கும் விதமாக இதன் அழிவிற்கு முக்கிய காரணமாக விளங்கி வரும் யானைத் தந்தத்தினால் செய்யப்படும் பொருட்களை முற்றிலுமாக இறக்குமதி செய்யவும் விற்கவும் தடை செய்து 120 நாடுகள் சட்டமேற்றியுள்ளன. இதன் மூலம் ஓரளவிற்கு சட்ட விரோதமாக வேட்டையாடப்படும் எண்ணிக்கை குறைந்திருப்பினும் கூட அழிவுனுடைய எல்லையில் இந்த இனம் இருப்பதை மறுக்க இயலாது.

இயற்கையான வன சூழ்நிலையில் இவைகளின் இனப்பெருக்கத்தினால் ஏற்படும் எண்ணிக்கை பெருக்கம் அவற்றை தொழிலில் ஈடுபடுத்தும் போது சாத்தியக் கூறுகள் குறைவாகவே இருக்கின்றது. நாம் முன் கண்டவாறு யானைகள் ஒரு குழுக்களாக இணைந்து கட்டுப்பாட்டுடன் ஒரு தலைமையின் கீழ் வாழ்ந்து வருவதனால் சில சமயங்களில் சட்ட விரோதமாக வேட்டையாடக் கூடியவர்களின் இலக்கிற்கு தலைமையை வகிக்கும் யானை பலியாகிவிடுவதனால் அந்த கூட்டத்திற்கு சரியான வழிக்காட்டுதலும் பாதுகாப்பும் இல்லாமல் சிறியத் தலைமுறை யானைகள் கூட்டு சிதைந்து விரைவில் பலியாகும் அபாயமும் நிகழுகின்றது. இதே நிலையில் சென்றால் இன்னும் ஓரிரண்டு தலைமுறைகளுக்கு பின்னர் இந்த உயிரினம் அறவே இல்லாத நிலையை எட்டி யானையின் படங்களை மட்டும் பிள்ளைகளுக்கு காட்டக் கூடிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.,,,,,,,

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10610511_847189938655115_553818004868338

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10616384_482512781891741_105313852300215

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேசி பயனில்லை எனும் போது மௌனம் சிறந்தது..

பேசுவதே பயனில்லை எனும் போது பிரிவும் சிறந்ததே....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவனியுங்கள்...

உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள்அவைகளே வார்த்தைகளாக வருகின்றன.

உங்கள் வார்த்தைகளை கவனியுங்கள்அவைகளே செயல்களாக ஆகின்றன.

உங்கள் செயல்களைக் கவனியுங்கள்அவைகளே பழக்கமாகின்றன.

உங்கள் பழக்கங்களைக் கவனியுங்கள்அவைகளே உங்கள் நடத்தையாகின்றன.

உங்கள் நடத்தையைக் கவனியுங்கள்அவைகளே

உங்களுடய எதிர்காலத்தை நிச்சயிக்கின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீணையடி நீ எனக்கு பாரதியார் பாடல்

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கம் !!!!! புரட்டாதி 3ம் சனிக்கிழமை.

 

 

1376569_727757330591418_2107826159_n.jpg

 

 

1236716_640531849313967_550957906_n.jpg?

 

1150345_620013508032468_532058225_n.jpg?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10472949_728407373863006_189472095608198

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.