Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

36626_449858528421439_1223635582_n.jpg?o

  • Replies 3.9k
  • Views 330.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10408894_912697622094524_558674781136402

யாழ் குடாநாட்டின் வலிகாமம் பகுதி நிலத்தடி நீரில் எண்ணெய்கழிவுகள் கலப்பதால் மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்கான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த நாட்களில் சுன்னாகம் உள்ளிட்ட வலிகாமம் பகுதி கிணறுகளில் எண்ணெய்கழிவுகளின் கலப்பினை வெளிப்படையாக கண்டுகொள்ள முடிகின்றது.

இந்த நிலையில், பெருமளவான மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் சிக்கலை எதிர்நோக்குகின்றனர். மக்களின் குடிநீருக்கான உரிமையைப் பாதுகாப்பதோடு, எண்ணெய்கழிவுகள் கலந்துள்ள நிலத்தடி நீரைச் சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தினை கொழும்பிலும் நடத்துவதற்கு இளைஞர்கள் திட்டமிட்டுள்ளோம்.

குடிநீருக்கான அச்சுறுத்தலை தீவகம், கரவெட்டி உள்ளிட்ட யாழ் மாவட்டத்தின் பல பகுதிகள் ஏற்கனவே எதிர்கொண்டிருக்கின்ற நிலையில், அசாதாரண முறையிலான எண்ணெய்கழிவுகள் கலப்பு என்பது யாழ் குடாநாட்டின் நிலத்தடி நீர் வளத்தினை ஒட்டுமொத்தமாக நஞ்சாக்கும் முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது. ஆகவே, “குடிநீருக்கான எமது உரிமையைப் பாதுகாக்க வேண்டியது” எமது தலையாய கடமையாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக ரோஜா தினம் பிப்ரவரி 7

அனைவரும் விரும்பும் ஒரு மலர் ரோஜா

 

ரோஜாக்கள் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டது.ஃப்ரான்ஸ் நாட்டின் தேசிய மலர் ரோஜா.

ரோஜா.ஆண்டு முழுவதும் விளையக்கூடியது.இதில் வண்ண மலர்களும் உண்டு. இவற்றின் அழகு மற்றும் நறுமணத்திற்காக பரவலாக வளர்க்கப்படுகின்றன.

பழங்கால கிரேக்கர்களும் ரோமானியர்களும் ரோஜாவை தமது காதல் தேவதைகள் என்று சொல்லப்படுகிற ஆபிரோடைட் மற்றும் வீனஸ் இன் அடையாளம் என்று

 

கருதினார்கள். ரோம் நகரத்தில் ரகசிய அல்லது அந்தரங்கமான விஷயங்களின் விவாதம் நடக்கும் அறையின் வாசலில் ஒரு காட்டு ரோஜா வைக்கப்படும்.

ரோசா இதன் பொருள் ஒரு ரகசியத்தை பாதுகாப்பாக வைத்திருத்தல் இந்தப் பழங்கால ரோமானிய பழக்கத்திலிருந்தே உண்டானது.

 

ஆரம்ப காலக் கிருத்துவர்கள் ரோஜாவின் ஐந்து இதழ்களை கிறிஸ்துவின் ஐந்து காயங்கள் என்று கருதினார்கள்.சிவப்பு ரோஜா கிருத்துவ உயிர்த்தியாகிகளின் ரத்தத்தின் குறியீடு என்பதாக இறுதியாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.பிறகு கன்னி மேரியுடனும் ரோஜாக்கள் சம்பந்தப் படுத்தப் பட்டன.

 

1800 களில் ஐரோப்பாவில் சீனாவிலிருந்து தொடர்ந்து பூக்கும் ரோஜாக்கள் அறிமுகத்துடன் ரோஜா வேளாண்மை தானாகவே ஆரம்பமானது.

 

ரோஜாவின் இத்தர் எனப்படும் ரோஜா மலர்களிலிருந்து நீராவி முறையில் பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் பல நூற்றாண்டுகளாக நறுமணப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரோஜா எண்ணையிலிருந்து தயாரிக்கப்படும் ரோஜா நீர் ஆசிய, மத்திய கிழக்கு நாடுகளின் சமையல் முறையில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ரோஜா இதழ்களின் சாறிலிருந்து தயாரிக்கப்படும் ரோஜா பானகம் பிரெஞ்சு மக்களிடையே மிகவும் உபயோகப்படுத்தக் கூடியது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில், ரோஜா ஸ்கோன் எனப்படும் கேக் தயாரிக்க இந்த பிரென்ச் ரோஜா பானகம் பயன்படுத்தப்படுகிறது.

 

ரோஜா பூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரக்கூடியது. இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும். பெண்களுக்கு கர்பப்பையினுள் ஏற்படும் பிரச்சனைகளை நிறுத்தும். மலமிளக்கியாக செயல்படும்.

222801_205295099504313_3241442_n.jpg?oh=

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இழந்த இடத்தை மீண்டும் பிடித்துக்

கொள்ளலாம் !!!

ஆனால் இழந்த

காலத்தை ஒருபோதும் மீட்டுக்

கொண்டு வர முடியாது!!!....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கம்..

 

404933_429226507152236_1749521901_n.jpg?

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் உள்ள பாடசாலை மாணவன் ஒருவன் வினோத உடை போட்டியில் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட ஆவியாக வந்து இன அழிப்பின் சாட்சியம் அளிக்கும் விதமாக தன் சாட்சியப் பிரசுரங்களை விநியோகித்தான். இந்த வேடத்தை அந்த மாணவன் ஏன் தேர்ந்தெடுத்தான்? முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை ஈழ குழந்தைகளை கடுமையாக பதித்திருக்கிறது. தலைமுறை கடந்தும் பாதிக்கும் கொடூரம். எத்தனை தலைமுறை கடந்தாலும் மாபெரும் இனப்படுகாெலைக்கான நீதியை இந்த நிலம் கேட்கும்.

‪#‎இனப்படுகொலையின்_சாட்சியம்‬!

 

 

10980729_10152796876853801_1330085970808  10953952_10152796876928801_4125281680804

 

 

தீபச்செல்வன் பிரதீபனின் பக்கத்திலிருந்து......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1501313_800565726684977_7160000237070544

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10609629_1605611779673307_76421802584907

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் மட்டும் சிரிக்க என்று கேட்டது பூக்களின் இதயம் மறுநாள் அந்தச் செடியில் அந்த மலர் வாடிய பொழுது.......

10574348_803674663040750_465672311441662

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை கும்பாபிஷேகப் பெரு விழாக் காண்கிறார்கள் கோணநாதர் உடனுறை மாதுமையாள்..

 

10426341_830899193615965_919203028827767

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10450150_742599709168894_498404217274860

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்..!

ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும்.

சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.

இவைகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் தான் நமக்கு பாதிப்புகள் வராது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ நம்மை தொடுகின்ற குழந்தைகளுக்கோ நிச்சயம் பாதிப்பு வரும். அதனால் தான் சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்றார்கள்.

இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இறந்தவர் நமக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம். நம் அன்பிற்கு பாத்திரமானவர்களாகவும் இருக்கலாம்.அவர்களின் நிரந்தர பிரிவு நம் மனதை வாட்டி வதைக்கும். மனம் வாடும் போது உடலும் சோர்ந்து விடும். அந்த நேரத்தில் குளிர்ச்சையான நீர் உடலை தொடுவதினால் சிறிது மலர்ச்சி ஏற்பட்டு மனதிற்கு ஓரளவு தெம்பும், தைரியமும் கிடைக்கும்.

இந்த உண்மைகளை எல்லாம் நமது ஜனங்களிடம் வெட்ட வெளிச்சமாக சொன்னால் அசட்டை செய்து விடுவார்கள் என்று கருதி நமது முன்னோர்கள் ஆவிகளின் பெயரை சொல்லி குளிக்க வைத்தார்கள். நல்லதிற்காக பொய் சொன்னால் தப்பில்லை என்பது அவர்கள் கொள்கை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10313334_736842316411300_288140941242991

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடல்குச்சி...அரியவகை புகைப்படம்

10898087_736840019744863_669378449266358

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10269407_734026383359560_640024390616540

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

good morning..

11421_867164553342336_824703476497737411

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிப்ரவரி 11: கண்டுபிடிப்பு நாயகன் தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தின சிறப்பு பகிர்வு...

 

1604870_871869426205182_8256003420769726

 

 

 

 

தாமஸ் ஆல்வா எடிசன் இளம் வயதில் பள்ளிக்கு வெகு சில நாட்களே போனார். ஒரு நாள் வகுப்பை விட்டு வரும் பொழுது அவரின் பாக்கெட்டில் ஒரு துண்டு சீட்டு இணைக்கப்பட்டு இருந்தது. அதை அவரின் அன்னை எடுத்து பார்த்தார். கண்களில் நீர் முட்டிக்கொண்டது. "டாமி படிக்க லாயக்கில்லை ! வீட்டிலேயே வைத்துக்கொள்ளவும் !" என்று அந்த கடிதம் சொன்னது.

 

வீட்டில் அன்னையே எடிசனுக்கு ஆசிரியை ஆனார். டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டு பள்ளியில் படிக்க லாயக்கில்லை என துரத்தப்பட்ட எடிசன் அன்னையின் அரவணைப்பில் கல்வி கற்றார்.

 

உள்நாட்டு போர் நடந்த பொழுது சுடசுட செய்திகளை தொடர்வண்டியிலேயே அச்சிட்டு விற்றார் .ரயிலில் ஆய்வு செய்து கொண்டிருந்த பொழுது ஒரு பெட்டியில் தீ பற்றிக்கொண்டதற்காக ரயில்வே மாஸ்டரிடம் அறை வாங்கி ஒரு பக்கம் கேட்கும் திறனை இழந்த எடிசன் தன் ஓயாத உழைப்பால் பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கினார்.

 

ஊமைப்படங்களை பேச வைக்கும் போனோக்ராஃபை ஆய்வகம் தீப்பிடித்து எரிந்த ஒரு வாரத்தில் உருவாக்கி காட்டினார். குண்டு பல்பின் இழைக்காக மலேசியா வரை ஆளை அனுப்பி பொருட்களை தேடிப்பார்த்தார். பத்தாயிரம் முறை தேடியும்பொருள் சிக்கவில்லை ,"நான் பத்தாயிரம் முறை தோல்வியடைந்தேன் என சொல்ல மாட்டேன் ;பத்தாயிரம் பொருட்களில் இருந்து பல்பை ஒளிர வைக்க முடியாது !என கற்றுக்கொண்டேன் என்றார்.எடிசன் இறுதியாக பல்பை டங்ஸ்டனை கொண்டு ஒளிர வைத்தார் .

அதை சாதித்த பொழுது நள்ளிரவு .மனைவியிடம் ஆர்வமாக காண்பித்த பொழுது ,"நடுராத்திரியில் தூக்கத்தை கெடுத்துக்கிட்டு ;கண்ணு கூசுது விளக்கை அணையுங்க !" என்றார் .அவர் எப்படி மற்ற கண்டுபிடிப்பாளர்களில் இருந்து தனித்து நிற்கிறார் என்றால் தான் கண்டுபிடித்ததை வெற்றிகரமாக அவர் சந்தைப்படுத்தினார்.

 

காய்கறி விற்பனை,செய்தித்தாள் விற்றல் ,பள்ளியை விட்டு மூன்றே மாதத்தில் வெளியேற்றம் என விரக்தியான வாழ்வில் 1,093 காப்புரிமைகளை பெற்று இருந்தார் என்பதற்கு பின் எத்தகு உழைப்பு இருக்கும் என உணர வேண்டும் . வாழ்க்கையில் வலிகள் மிகுந்திருந்த பொழுது ஓயாத உழைப்பை கொட்டிய அவர் வெற்றியை ஓயாத உழைப்பே தீர்மானிக்கிறது என அடித்து சொன்னவர் .

 

ஒன்றுக்கும் உதவாத எடிசன் எனப்பட்டவர் மறைந்தார்;அமெரிக்காவில் விளக்குகள் சிலநிமிடம் அணைந்தன .ரேடியோ கரகரத்தது,"எடிசன் வருவதற்கு முன் உலகம் இப்படித்தான் இருந்தது !" மீண்டும் விளக்குகள் ஒளிர்ந்து ஊரே மின்னியது ரேடியோ சன்னமாக சொன்னது ,"எடிசன் பிறந்ததற்கு பின் உலகம் இப்படித்தான் இருந்தது !".அவரின் அம்மா எனும் ஆசிரியரால் வார்க்கப்பட்ட அந்த வெளிச்ச நாயகன் போராட்ட இருட்டில் மூழ்கி இருக்கும் எல்லாருக்கும் தன்னம்பிக்கை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏமாற்றும் நிழல்களைவிட சுடுகின்ற தழல் மேலானது!!!

விட்டுப்போகும் உறவுகளைவிட தொட்டுச்செல்லும் தென்றலின் சிநேகம் மேலானது...............

தனிமை இனிமையே அது கிடைக்கபெறும் தருணங்களைபொறுத்ததே!...

 

கவிதாயினி நிலாபாரதியின் வரிகளிலிருந்து......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1005310_149722395222757_1387099371_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பனித்துளி பார்த்து அதனோடு பேசியிருக்கோமா ? இல்லை அதைத் தாங்கி நிற்கும் செடியைத்தான் நலம் விசாரித்திருக்கிறோமா? உதிர்ந்து கிடக்கும் புறா இறகை எடுத்து கண்ணாடிப் பெட்டியில் வைத்து அழகு பார்த்தோமா/ காட்டுக்குயில் பாட்டை சமீபத்தில் கேட்டவர்கள் நம்மில் யார் யார் ? அநேகம் நாம் இந்த உலகத்தில் இருந்துகொண்டே உலகத்திற்கு வெளியே இருக்கிறோம் போல ...வேட்டைக்குப் போன அந்த மனிதனோடு காடும் கூடப் போனது.....நாம் வளர்க்கும் நாய்கூட இப்போது நடந்து வரத் தயங்குகிறது நம்மோடு .......கார் என்றால் தாவி ஏறுகிறது.... ..அதையும் கெடுத்து விட்டோம் போல நாம் ..... மரப் பொம்மையோடு பேசி விளையாடும் ஒரு சிறுமியைக் காட்டுங்கள் இப்போது --.......பொம்மை என்பது வெறும் பொம்மை அல்ல.. சக மனிதர் மீது இன்னொரு உயிர் அன்பு பாராட்டக் கற்றுக்கொடுத்தது அதுதான்.... ..மரப் பொம்மையோடு போய்விட்டது மானுட நேயம்....

 

கவிஞர் ஜெயதேவன்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லுாா் கந்தனின் 1900ம் ஆம் ஆண்டு தோற்றம் இது.

 

 

10443970_894290820591651_501866052499141

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருக்கோணேஸ்வரம் மகா கும்பாபிஷேசகப் படங்கள்..

 

IMG_8697.JPG

 

IMG_8699.JPG

 

IMG_8703.JPG

 

IMG_8705.JPG

 

IMG_8725.JPG

 

IMG_8728.JPG

 

IMG_8738.JPG

 

IMG_8742.JPG

 

IMG_8750.JPG

 

IMG_8755.JPG

 

 

http://www.battinews.com/2015/02/trincomalee.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கம்..

 

10978702_1600151166869589_23110856286880

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ்லாந்தில் ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித அவையின் முன்றலில் முன்பாக 2009 மாசி 12ம் தேதி அன்று இரவு தமிழின அழிப்பிலிருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பற்றக்கோரி 'ஏழு பக்கங்களுக்கு’ உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்’ என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தமிழீழத்தின் விடியளுக்காக தன்னைத் தானே தீயிட்டு ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட ஈகப்பேரொளி வர்ணகுலசிங்கம் முருகதாசன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

உலகத் தமிழ் மக்களிடையே குறிப்பாக புலத் தேசங்களில் வாழும் இளையோர்களிடையே பெரும் தாக்கத்தையும், வீரத்தையும், போராட்ட குணத்தையும் வித்திட்டுச் சென்றார் ஈகப்பேரொளி முருகதாசன்.

 

 

10995825_791504347608983_369301490721578

 

 

 

10934060_814155738622178_102356950792652

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.